இரத்தப் பாதை..!

எனது மனம் கவர்ந்த சித்திர நாயகர்களில் ஒருவர் ஜான் சில்வர்! நமது எடிட்டரிடம் பெயர் மாற்றத்துக்கு ஆளான பாக்கியசாலிகளில் ஒருவரான இவரது இயற்பெயர் - ஜான் ஹவோக்! (John Havoc).

இவர் தமிழில் மேத்தா காமிக்ஸில்தான் ஜான் என்ற பெயரில் முதலில் அறிமுகமானார்! சுய பச்சாதாபத்துடன் சுற்றும் அவரின் சோகம் கலந்த சாகசங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை! கதைகளின் இறுதியில் அவர் பணி ரீதியாக வெற்றி கண்டாலும், சொந்த பிரச்சினையில் தோல்வி கண்டு சோகத்துடன் தலையை தொங்க போட்டுக்கொண்டு நடையை கட்டுவார்!

அவரை பற்றிய அற்புதமான பதிவுகள் இதோ: ராஜாவின் பார்வையில் மற்றும் கவினின் சிறிய பதிவில்

மற்றும், புரியாத மொழியிலே புரிந்த படங்களுடன் சில தகவல்கள்!

சரி இந்த பதிவுக்கு வருவோம்!

வீரியமிக்க வெடி மருந்தோடு சுற்றி அலையும் ஒரு முன்னாள் "Q" ஏஜண்டான பிரிஸ்கோவிடம் இருந்து உதவி கேட்டு வந்த அழைப்பை தொடர்ந்து ஜான் சில்வர் தலைமையகத்திற்கு அழைக்கப்படுகிறார். வழக்கம் போல இதுதான் கடைசி பணி என்ற அல்வாவுடன் பிரிஸ்கோவை மீட்க கட்டாயப்படுத்தி அனுப்பி வைக்க படுகிறார் ஜான்! அவர்களிருவரும் எதிரிகளின் கண்களில் மண்ணை தூவி தப்பிக்க முயலும் ஒரு சாலை பயண சாகசம்தான் இந்த கதை! திருப்பங்களுக்கு பஞ்சமில்லாத கதை இது! முடிவில் உங்களையும் அறியாமல் பிரிஸ்கோவிற்காக வருத்தப்படுவீர்கள், அது இந்த கதையின் பாத்திர வார்புக்கான வெற்றி!

இவ்விதழின் அட்டகாசமான அட்டை படங்கள் உங்கள் பார்வைக்கு!

இரத்தப் பாதை..! (முத்து வெளியீடு எண்: 177 )

முன்னட்டை:

பின்னட்டை:

கருத்துகள்

  1. நாந்தான் முதலில் நண்பா வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே! இக்கதையை படித்துள்ளீர்களா?

      நீக்கு
    2. இல்லை என்றே நினைக்கிரேன் நண்பரே!
      இடையில் கொஞ்ச நாள் என்னை கடலூர் புனித ஜோசப் ஸ்கூல் அனுப்பி சதி பண்ணிட்டாங்க அந்த இடைவெளியில் வந்தது

      நீக்கு
  2. இரத்த பாதை நான் படிக்காத கதை என்று நினைக்கிறேன். கதை புதிதாக தோன்றுகிறது.. அட்டை அக்கால பாணியை நினைவுபடுத்துகிறது... பின் அட்டையில் அதிமேதை அப்பு வேறு டாலடிக்கிறார் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் படிக்கவில்லையா?! கேட்கவே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது :) பின்னே என்னவாம் உள்ளூர் காமிக்ஸ், உலக காமிக்ஸ் என்று நீங்களும் இன்னும் சில சதிகாரர்களும் பக்கம் பக்கமாய் பதிவிட்டதில் (சதி வலை பதிவுகள்), என் காதில் புகை வராத குறைதான் :D

      என்ன செய்ய! சோம்பேறித்தனத்தின் காரணமாக குறைந்த பட்சம் பின்னூட்டம் இட கூட திராணி இல்லாமல் இருந்தேன். ஆனா நாமளும் ஏதாவது பதிவை போட்டு மொக்கை போடலாம்னு இப்ப ஆரம்பிச்சுட்டேன் :)

      நீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia