ஆன்லைன் ஷாப்பிங் - 4 - பிரபல தளங்கள்!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நூற்றுக்கணக்கான ஆன்லைன் ஷாப்புகள் இயங்கி வருகின்றன! ஒரு சின்ன பத்துக்கு பத்தடி அறையில் (அல்லது வீட்டிலேயே இருந்து கூட!), ஒரு இ-காமர்ஸ் டொமைன் அல்லது ebay போன்ற தளத்தில் விற்பனையாளர் கணக்கு, ஒரு இன்டர்நெட் கனெக்ஷன், ஒரு போன், ஒரு இ-மெயில் முகவரி இவை இருந்தாலே யார் வேண்டுமானாலும் ஒரு ஆன்லைன் ஷாப் துவங்கி விடலாம் என்பதால் இன்டர்நெட்டில் தடுக்கி விழுந்த இடமெல்லாம் ஆன்லைன் ஷாப்புகள்தான்! எனவே புதிதாக ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்கள் நலனிற்காக ஒரு சிறிய(!) அறிமுக பட்டியலை இந்தப் பதிவில் காணலாம்.

ஒரு முக்கிய அறிவிப்பு!:
இது ஒரு மேலோட்டமான பரிந்துரை மட்டுமே! இவற்றில் சில தளங்கள் சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம் (அவர்களின் சொந்த ஷாப்பிங் அனுபவம் காரணமாக) அதே போல இந்த லிஸ்டில் இல்லாத வேறு பல சிறந்த தளங்களும் இருக்கலாம்! எனவே, இதை ஒரு சாம்பிள் லிஸ்டாகவே கருதுங்கள்! - எவ்வகையிலும் இது முழுமையானதும், நம்பகமானதும் அல்ல! ;) அதே போல லிஸ்டில் உள்ள ஆன்லைன் ஷாப்புகளில் இருந்து எனக்கு எந்த வித கமிஷனும் கிடைக்கவில்லை! :) லிஸ்டில் உள்ள எல்லா தளங்களிலும் நான் ஆர்டர் செய்து பார்த்ததில்லை! இவற்றில் எந்த தளத்திலாவது நீங்கள் ஆர்டர் செய்து, ஏதாவது குளறுபடி ஆகும் பட்சத்தில் அதற்கு நான் எவ்விதத்திலும் பொறுப்பேற்க முடியாது! உங்களுக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லாத தளங்களில், COD முறை இருந்தால் அதை பயன் படுத்தி ஆர்டர் செய்யுங்கள்! வந்தா மலை, வரலேன்னா லாஸ் இல்லை! :)

அப்பாடா, இப்ப நான் தப்பிச்சேன் - எப்படி எல்லாம் diplomatic-கா எழுத வேண்டி இருக்கு! :) :) :)

Ebay India:
இது ஒரு B2C மற்றும் C2C தளமாகும்! அதாவது முறையான வர்த்தக நிறுவனங்களும் பொருட்களை விற்கலாம்! நம்மை போன்ற பொது ஜனமும் பொருட்களை விற்கலாம் / வாங்கலாம்! புதிய பொருள்தான் என்று மட்டுமன்றி, பழைய பொருட்களையும் வாங்கலாம் / விற்கலாம்! எனவே இந்த தளத்தில் பொருட்கள் வாங்கும் போது கூடுதல் எச்சரிக்கை அவசியம்! பொருட்கள் பற்றிய விவரப் பக்கத்தில் அதை விற்கும் விற்பனையாளர் (Seller) பற்றி மற்ற பயனர்களின் (Buyers) மதிப்பீடு இருக்கும். 90%-க்கும் மேலான Positive Feedback இருந்தால் நம்பி வாங்கலாம்! அதே நேரம் நிறைய பேர் feedback அளித்திருக்கிறார்களா என்று  கவனிப்பதும் அவசியம்! இந்த தளத்தில் ஒரே பொருளை, பல்வேறு விற்பனையாளர்கள் வெவ்வேறு விலைக்கு விற்பதை பார்க்கலாம்! எனவே எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாமல் மிகவும் ஆராய்ச்சி செய்து வாங்க பொருட்களை வாங்க வேண்டும்!

Flipkart:
2007-இல் புத்தகங்களை மட்டும் விற்பனை செய்யும் தளமாக ஆரம்பிக்கப்பட்ட இது இன்று மிகப்பெரும் அளவில் வளர்ந்து நிற்கிறது - இந்தியாவிலேயே மிகச் சிறந்த B2C தளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது! புத்தகங்கள், திரைப்படங்கள் / பாடல் CD/DVD-கள், மொபைல்கள், எலெக்ட்ரானிக் சாதனங்கள், வீட்டுக்கு தேவையான எலெக்ட்ரிகல் உபகரணங்கள், கிஃப்ட் ஐட்டம்கள் என பல்வேறு விதமான பொருட்களை இங்கே வாங்கலாம்! மற்ற தளங்களை விட விலை சற்று கூடுதல் ஆனால் மிகவும் நம்பிக்கைக்குரிய தளம் இது!

ஒவ்வொரு ஷாப்புக்கும் பத்தி பத்தியாக கட்டுரை எழுதிக் கொண்டிருந்தால், நீங்கள் பெங்களூர் வந்து என்னை மொத்தி விடுவீர்கள் என்பதால் மற்ற ஆன்லைன் ஷாப்புகளின் முகவரிகளை மட்டும் இங்கே தருகிறேன்! அந்தந்த தளங்களுக்கு சென்று கூடுதல் விவரங்களை நீங்களே அறிந்து கொள்ளுங்கள்! :) :) :)

பல்பொருள் ஆன்லைன் ஷாப்கள்!
பல்பொருள்னா டூத் பிரஷ் & பேஸ்டு மட்டும் கிடைக்குமான்னு கேக்காதீங்க! ;) கிட்டத்தட்ட Flipkart / Ebay போல, பல்வேறு பொருட்களை விற்கும் வேறு சில தளங்கள் இவை :)

http://www.amazon.in/
http://www.paytm.com/
http://www.infibeam.com/
http://www.snapdeal.com/

எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் மற்றும் மொபைல்கள்:
கீழேயிருக்கும் லிஸ்டில் உள்ள ஒரு சில தளங்கள் மிக பிரபலம் ஆகாதவைதான்! எனினும் நான் ஒரு gadget பிரியன் என்பதால் இவற்றை அடிக்கடி மேய்ந்து கொண்டே இருப்பேன்! இவற்றில் சில தளங்கள் மூலம் ஆர்டர் செய்தும் இருக்கிறேன் (எந்த பிரச்சினையும் இன்றி!)

http://www.theitdepot.com/
http://www.primeabgb.com/


புத்தகங்கள்:

மேலே உள்ள பல்பொருள் ஷாப்கள் பட்டியலில் உள்ள பெரும்பாலான தளங்களில் புத்தகங்கள் கிடைக்கும் என்றாலும் குறிப்பாக சில தளங்கள் இதோ,
http://www.flipkart.com/books/
http://www.nhm.in/http://www.udumalai.com/
http://www.crossword.in/
http://www.bookadda.com/
http://www.discoverybookpalace.com/

பேஷன் மற்றும் லைஃப் ஸ்டைல் ஷாப்கள்:
http://www.myntra.com/http://www.yebhi.com/
http://www.jabong.com/

குழந்தைகள் மற்றும் சிறுவர்க்கான ஷாப்கள்:
http://www.firstcry.com/http://www.babyoye.com/

இரயில் மற்றும் பஸ் புக்கிங் தளங்கள்:
http://www.irctc.co.in/
http://www.ksrtc.in/
http://www.kpntravels.in/
http://www.abtxtravels.com/
http://www.redbus.in/

ட்ராவல் மற்றும் டூர் புக்கிங் தளங்கள்:
http://www.makemytrip.com/
http://www.yatra.com/
http://www.expedia.co.in/
http://www.tripadvisor.com/
http://www.cleartrip.com/
http://www.goibibo.com/

ஃபிளைட் புக்கிங்:
http://book.goindigo.in/
http://www.airindia.in/
http://www.jetkonnect.com/
http://www.goair.in/http://www.spicejet.com/
http://www.jetairways.com/

திரைப்பட டிக்கெட்கள்:
bookmyshow / kyazoonga மூலம் கலை / விளையாட்டு நிகழ்ச்சி டிக்கெட்கள் கூட புக் செய்யலாம்!
http://in.bookmyshow.com/
http://www.inoxmovies.com/http://www.pvrcinemas.com/
http://sathyam.spicinemas.in/
http://www.famecinemas.com/
http://www.bigcinemas.com/in/

திரைப்பட DVD வாடகை:
http://www.bigflix.com/

போட்டோ பிரிண்ட் / போட்டோ கிஃப்ட்ஸ்:
http://www.zoomin.com/
http://www.snapfish.in/
http://www.picsquare.com/

பின்குறிப்பு!:
விரைவில, மேலும் சில தளங்கள், புதிய category-களின் கீழ் இணைக்கப்படும்! நேரம் கிடைக்கும் போதெல்லாம் மேலேயுள்ள ஒரு சில தளங்களுக்கு சென்று மேய்ந்து கொண்டிருங்கள்! நாட்டில் விலைவாசி எப்படி இருக்கிறது என்று ஒரு ஐடியா கிடைக்கும், பொழுதும் நன்றாக போகும்! :) சரி இப்படி நூற்றுக்கணக்கில் ஷாப்பிங் சைட்கள் இருக்கின்றனவே! இவற்றை பயன் படுத்துவது எப்படி? அடுத்து வரும் பதிவுகளில் பார்ப்போம்!

முந்தைய பகுதிகளை படித்து விட்டீர்களா?:

கருத்துகள்

  1. www.dealsinchennai.com also a valuable online shopping site

    பதிலளிநீக்கு
  2. i like flipkart.com.
    i buy books mobile and all gadgets here.

    Most reliable and Faster Delivery.
    I love it.

    Thanks for the info.

    பதிலளிநீக்கு
  3. @Anony: thanks for the info!

    @IravukKalugu: Yeap, I like Flipkart too - but a bit expensive!

    பதிலளிநீக்கு
  4. இதுவரை ஆன்லைனில் எந்த பொருளும் வாங்கியதில்லை.

    தமிழ் புத்தகங்கள் வாங்க இன்னொரு தளம் http://discoverybookpalace.com

    பதிலளிநீக்கு
  5. நான் டெலிபோன் லைன் பார்த்திருக்கேன்., எலெக்ட்ரிசிட்டி லைன் பார்த்திருக்கேன் இந்த ஆன்லைன் மட்டும் எப்புடி இருக்கும்ன்னு பார்த்ததில்லை ..அது எப்புடி இருக்கும் தல..? வட்டமா உருண்டையா இருக்குமா இல்லை எப்புடி இருக்கும் .., கொஞ்சம் விளக்கமா சொன்னீங்கன்ன நல்லா இருக்கும் .. :D

    பதிலளிநீக்கு
  6. அருமையான முயற்சி.., பதிவில் கடுமையான உழைப்பு தென்படுகிறது.., வாழ்த்துக்கள் உழைப்பிற்கு .., நன்றிகள் பகிர்வுக்கு ...! :)

    பதிலளிநீக்கு
  7. @வரலாற்று சுவடுகள்:
    //வட்டமா உருண்டையா இருக்குமா இல்லை எப்புடி இருக்கும் .., கொஞ்சம் விளக்கமா சொன்னீங்கன்ன நல்லா இருக்கும்//
    கரெக்டா சொன்னீங்க! அதாவது ஆன்லைன்ங்கிறது, மூணு குட்டி குட்டி வட்டமா ஒரு முக்கோண ஷேப்ல இருக்கும்! அதுல மேல இருக்குற வட்டம் மட்டும் கொஞ்சம் பெருசா! கீழே இருக்குற ரெண்டு வட்டம் ஒரே சைஸ்ல, பக்கத்து பக்கத்துல இருக்கும். இந்த மூணு வட்டத்துக்கு ரைட்ல இருக்குற சுவிட்ச்ச போட்டுட்டு கீழே இருக்குற ரெண்டு வட்டத்துல, ரெண்டு விரலை விட்டீங்கன்ன அதுதான் ஆன்லைன் - புரிதா? :D வரலாறுல உங்க பெரும் உடனே வந்துரும்! :)

    //அருமையான முயற்சி.., பதிவில் கடுமையான உழைப்பு தென்படுகிறது//
    உண்மைய சொன்ன இந்த லாஸ்ட் மூணு பதிவை விட இந்த பதிவு ரொம்ப ஈஸி! லிங்க் கொடுத்தே ரெண்டு பக்கம் எழுதியாச்சு! :) :) ;)

    பதிலளிநீக்கு
  8. @Abdul: தகவலுக்கு நன்றி நண்பா! அதையும் லிஸ்ட்ல சேத்துர்றேன்! :)

    பதிலளிநீக்கு
  9. நண்பா அனைத்து தளங்களையும் அருமையாய் பிரித்து காட்டி உள்ளீர்கள்...FLIPKART மிகவும் நம்பகமான தளம்...EBAYல் சிலர் பழைய பொருளுக்கு புதிய படத்தினை போட்டு விற்பதால் ஜாக்கிரதை தேவை இரண்டு முறை EBAY வாங்கியதில் ஒருமுறை DAMAGE ஆனதை தந்துவிட்டனர் பின்னர் அவர்களிடம் கொடுத்து மாற்றிவிட்டேன்...அதன் பின்னர் இப்போது FLIPKARTதான் எப்போதும்...நண்பா எந்த ஒரு(குறிப்பா கிராம) பகுதியில் டெலிவரி செயும் தளம் உள்ளதா..

    பதிலளிநீக்கு
  10. @Chinna malai: குறிப்பாக தெரியவில்லை நண்பரே - இருப்பினும் கிராம பகுதிகளில் டெலிவரி இல்லை என யாரும் மறுக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன்! எதற்கும் ஆர்டர் பிளேஸ் செய்யும் முன் போன் செய்து உறுதி செய்து கொள்ளுங்கள்!

    @Soundar: thanks!

    பதிலளிநீக்கு
  11. பயனுள்ள தளங்களை தொகுத்து வழங்கி உள்ளீர்கள் நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  12. Flipkart நம்பகமான மற்றும் பாதுகாப்பான தளம்...

    பதிலளிநீக்கு
  13. Online shopping is growing day by day. Ezmaal.com is also online shopping site which deals in electronics and lifestyle products.

    பதிலளிநீக்கு
  14. எனக்குத் தெரிஞ்சவரை indiaplaza.in அளவுக்கு டிஸ்கவுண்ட் வேற எந்த வலைத்தளத்திலும் பார்க்கவில்லை. சில டைம் கொஞ்சம் சொதப்புவாங்க.. பொறுத்துக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  15. உங்கள் ஆன்லைன் கேமரா ஷாப்பிங் இங்கு வாருங்கள் http://www.arihantdigi.com மற்றும் பாட்டரி ஷோப்பிங் rechargeable battery


    பதிலளிநீக்கு
  16. Thanks for sharing a best collections of website to shop online. When i shop sports item online then i used http://www.vinexshop.com

    பதிலளிநீக்கு
  17. Thank for sharing a wonderful and useful information in getting traffic to the website.
    Nice post....!



    http://lsxs114.com/

    பதிலளிநீக்கு
  18. Thanks for sharing this article. Check out the RK Cart website an online store for educational toys for kids that includes jigsaw puzzles, map puzzles, personalized puzzles etc for different age group.For more details, click the link below: https://goo.gl/s2P9Cc

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia