தடையறத் தாக்க - தடயமறத் தாக்கவில்லை!

♫ தில்ரூபா தில்ரூபா ♫ - அருண் விஜயகுமார் நடித்து, நான் படித்த காலத்தில் வந்த பிரியம் படத்தின் ஹிட் பாடல் - படம் வந்த ஆண்டு 1996, பதினாறு வருடத்திற்கு அப்புறமும் தோற்றத்தில் மனிதர் அவ்வளவாக மாறவில்லை - தில்ரூபனாகவே இருக்கிறார் - ஆனால் ஒரு சீரியல் ஆக்டர் லுக்! நல்லவேளையாக நடிப்பில் நல்ல முன்னேற்றம் - அதாவது அடக்கி வாசித்திருக்கிறார்! நம் தமிழ் பட ஹீரோக்கள் இந்த சின்ன ட்ரிக்கை பின்பற்றினாலே போதும், விமர்சகர்களிடம் நல்ல பெயர் வாங்கிவிடலாம்! இவர்  நடித்த படங்கள் ஒரு சில டிவியில் பார்த்திருக்கிறேன். மீடியாவில் இந்த படத்திற்கு பாசிடிவ் ரெஸ்பான்ஸ் (நல்ல ஆக்ஷன் படம்) - எனவே முதல் முறையாக அருணின் படத்தை தியேட்டர் சென்று பார்த்தேன்! :)

வழக்கம் போல முதல் பாதியில் அதிகமாய் எதுவும் இல்லை! ஆரம்ப காட்சியில் சகோதர வில்லன்களின் (அண்ணன் மகா, தம்பி குமார்) அறிமுகம், அவர்களுக்கான ஒரு கொடூர பிளாஷ்பேக் (அம்மியில் ஒட்டிய ரத்தம் தோய்ந்த தலைமுடிகள்), நாயகன் நாயகி அறிமுகம் (ரொம்பவே இயல்பாக), ஒரு குத்து பாட்டு (வேஸ்ட்), ஒரு மெலடி பாட்டு (ஓகே), ஹீரோ மற்றும் வில்லன்கள் - முதல் உரசல் என படு ஸ்லோவாக பயணிக்கிறது! நிமிர வைக்கும் இடங்கள் ஆரம்ப காட்சி, வில்லனின் வலக்கையான இன்னொரு வில்லனை அருண் சந்திப்பது, பிறகு முகத்தை மறைத்துக்கொண்டு அவரை தடித்த இரும்புக் கம்பியால் தர்ம அடி போடுவது (போட்ட பின் அந்த கம்பியை அங்கே போட்டு  செல்வது இடறல்) - இவை மட்டும்தான்! பாடல்களில் கோட்டை விட்ட தமன் பின்னணி இசை மூலம் படத்திற்கு வலு சேர்க்கிறார்!

மம்தா அழகாக இருக்கிறார், கொஞ்சம் மெச்சூர்ட் லுக்! ஐந்தாவது வரை மட்டும் படித்த அருணை இவர் ஏன் காதலிக்கிறார் என்பது புரியவில்லை. நல்ல வேளையாக தனி காமெடி ட்ராக் இல்லை - படத்துடன் இணைந்த லேசான காமெடி மட்டும், உதாரணம்: அருண் நண்பர்களிடம்: 'Sorry-க்கு ஸ்பெல்லிங் சொல்லுங்கடா? - நண்பர்கள் முழித்து விட்டு 'ஸாரிடா மச்சான்!' :) அருணுக்கு இங்கிலீஷ் தெரியாது என்ற இந்த காட்சியை படத்தின் பிற்பாதியில் ஒரு சீரியஸ் காட்சியின் போது இயக்குனர் உபயோகித்திருப்பது ரசிக்க வைக்கிறது (Urgent என்பதற்கு பதிலாக Arjant என டைப் செய்யுமிடம்)!

மெயின் வில்லன்கள் மூவரும் செம சாய்ஸ், மிரட்டுகிறார்கள்! மகா யாரிடமோ தலையில் பலமாக அடி வாங்கி கோமாவில் கிடக்க, அடிக்க உபயோகித்த கிரிக்கெட் பேட் அருணின் காரில் கிடக்க, சந்தேகம் அருண் மேல் திருப்புகிறது. இப்படியாக பட இடைவேளையும் வந்து விட்டது, இருந்தாலும் அருண் இப்படியா தாக்கும் இடங்களில் எல்லாம் தடயங்கள் விட்டுச் செல்வார் (அப்பாடா, பதிவோட தலைப்பு வந்தாச்சு!) என பார்வையாளர்கள் குழப்பமாக பாப்கார்ன் வாங்க கிளம்பினார்கள்! அப்புறம், தியேட்டரில் பில்லா II ட்ரைலர் போட்டார்கள்! ப்ளேட்பீடியாவில் அந்த ரேஞ்சுக்கு இல்லாவிட்டாலும், இந்த மொக்கை ட்ரைலரை கொஞ்சம் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்களேன்! ;)

விரைவில் வெளியாகிறது: ப்ளேடியோ - Blade+Video=Bladeo! ;)

இடைவேளைக்கு பிறகு படம் ஒரே இரவில் நடப்பது போல் காட்டப்படுகிறது - வில்லன்கள் மற்றும் அருணுக்கிடையேயான டாம் அண்ட் ஜெர்ரி விளையாட்டு! கிளைமாக்ஸ் வரை யார் மகாவை அடித்தது என்ற யூகிக்க முடியாத சஸ்பென்சை பேணிய இயக்குனர் மகிழ் திருமேனிக்கு பாராட்டுகள்! அருண் மற்றும் மம்தா பயணிக்கும் அந்த ஆட்டோ திடீரென நடுத்தெருவில் நிறுத்தப்பட்டு, ஆட்டோ டிரைவரும், உடன் வந்தவரும் தலைதெறிக்க இவர்களை தனியே விட்டு ஓடும் அந்த டாப் ஆங்கிள் காட்சி செம பரபரப்பு! ஆனால், ஒரே ஆளாக அருண் வில்லனின் அடியாள்களை ஒற்றை அரிவாளோடு எதிர்கொள்வது சரியான பூச்சுற்றல்.

அருணின் ஓரிரண்டு நண்பர்கள் மட்டும் வில்லன்களிடம் மாட்டிக்கொள்ள மற்றவர்கள் சுதந்திரமாக நடமாடுவது செம காமெடி! அதே போல இன்னொரு நண்பர் வில்லன்களின் அடியாட்களில் ஒருவராக இருந்தும் அவரை யாரும் கேள்வி கேட்பதில்லை - அவரும் அருணுக்கு அடிக்கடி போன் போட்டு ஸ்டேட்டஸ் அப்டேட் தருகிறார்! இதற்கும் மேல் போலீஸ் ரோந்து ஜீப் ஏதோ வில்லன்களின் பாதுகாப்பு படை ரேஞ்சுக்கு தெருக்களில் சுற்றுவது செம்ம (ம்மை கவனிக்க) காமெடி :) கிளைமாக்ஸ்ஸில் அருண் வில்லன்களை வசமாக சிக்கவைத்து அழிப்பது நம்பமுடியவில்லை என்றாலும் விறுவிறுப்பாக இருக்கிறது! அங்கேயும் மனிதர் ஒரு தடயத்தை விட்டு விடுகிறார்! அதை போலிசும் கண்டு கொள்வதில்லை. வில்லன்களால் பாதிக்கப்பட்ட MLA-தான் அருணுக்கு உதவுகிறாரா என்பதை தெளிவாக சொல்லாத தவறியதில் ரசிகர்கள்(!) இன்டர்வெல்லை விட அதிகமான குழப்பத்துடன் கேட் நோக்கி நகர்ந்தனர்!

டிவியில் காணாமல் போனவர்கள் பற்றிய செய்தி வரும் போது இயல்பாக சேனல் மாற்றும் நம்மை ஒரு கணம் இப்படம் யோசிக்க செய்கிறது! அதன் பின்னால் ஒரு கந்து வட்டி துயரமோ, பாலியல் பலாத்காரமோ தடயமில்லாமல் இருக்கக்கூடும் - அந்த வகையில் இதுவும் ஒரு மெசேஜ் சொல்லும் படம்தான்! பாலாஜி சக்திவேல் கையிலோ வசந்தபாலன் கையிலோ இப்படம் சிக்கியிருந்தால் நிறைய விமர்சகர்கள் உலகப்படம், உலகப்படம் என இந்நேரம் மாய்ந்து தள்ளியிருப்பார்கள் ;) படம் ரெண்டே கால் மணிநேரம்தான் என்றாலும் ஏதோ பெரிய படம் பார்த்தது போன்ற ஒரு அயர்ச்சி ஏற்படுவது இந்த படத்தின் மைனஸ்! இருந்தாலும் ஓரளவுக்கு இயல்பாக நகர்த்தி சென்று விறுவிறுப்பான செகண்ட் ஹாஃப் வைத்திருப்பதால், 'ஆக்ஷன் ரசிகர்கள்' தயங்காமல் பார்க்கலாம்!

தடையற தாக்க / 2.5* / (கொஞ்சம்) சிக்கென்ற கிரைம் த்ரில்லர்!

Update - Karbonn Smart Tab 1 - Full review has been posted @ YouTube:

கருத்துகள்

  1. Karbonn Tab ட்ரைலர் செம... படம் எப்போ ரிலீஸ்? :) :) :)

    பதிலளிநீக்கு
  2. @Abdul: :) :) :) ஏதோ நம்மால முடிஞ்சா ஒரு மொக்கை ;) படம் எடுக்கறது எவ்ளோ கஷ்டம்னு இப்பத்தான் புரியுது! குளிர் ஜுரம் வந்த மாதிரி கையும் குரலும் நடுங்குது! நடுக்கம் நின்ன பிறகு ரெகார்ட் பண்ணி ரிலீஸ் பண்ணிட வேண்டியதுதான்! :D

    பதிலளிநீக்கு
  3. boss how to change the url from blog spot to some www.com.i know u have changed.can u share that with us.i have already have a domain name purchased at godaddy.com.how to link that with this blog spot.com

    பதிலளிநீக்கு
  4. இந்தமாதிரி தலைவலி படமெல்லாம் பார்த்து தன்னை மொக்கையாக்கி எங்களை காப்பாத்தும் BPK வாழ்க !!!
    உங்களின் வீடியோ பதிவும் படு அமர்களமாக அமைய வாழ்த்துக்கள் நண்பரே ! . விரைவில் எதிர் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. @Stalin: படம் அவ்வளவாக மோசமில்லை :)

    வீடியோ வெளி வந்து விட்டது! :)
    http://www.youtube.com/watch?v=jS-BLPpTd2U

    பதிலளிநீக்கு
  6. அட இப்படி தூங்காம இருந்தா கை விரல் வலிக்காதா ?
    படம் பாத்துட்டு மறுபடியும் வர்றேன் ....

    பதிலளிநீக்கு
  7. // அட இப்படி தூங்காம இருந்தா கை விரல் வலிக்காதா ?//
    எனக்கு கண்தான் வலிக்கும்! ;) ஆனா, என்னோட வீடியோவை இப்போ பாத்தீங்கன்னா உங்களுக்கு தலையும் வலிக்கும் ;) :)

    பதிலளிநீக்கு
  8. படம் பார்த்தாச்சு ...
    ரிசல்ட் : "நீங்க பெரிய இயக்குனரா வரும்போது எங்களையெல்லாம் மறந்துரமாட்டீங்கள்ள..."
    (நடுவில் ஓடும் எழுத்துகளை கீழே போடுங்க ... )
    சீக்கிரமா வாசிங்க் மிசினபத்தி போடுங்கப்பா... வீட்டுல தொவைக்க நம்மாள முடியல ....

    பதிலளிநீக்கு
  9. //"நீங்க பெரிய இயக்குனரா வரும்போது எங்களையெல்லாம் மறந்துரமாட்டீங்கள்ள..."//
    கலாய்ச்சுட்டாராம்! ;)

    //வாசிங்க் மிசினபத்தி போடுங்கப்பா//
    Check this :) not my blog thought - just happened to see on Tamilmanam!

    http://veeduthirumbal.blogspot.in/2012/06/blog-post.html

    பதிலளிநீக்கு
  10. நீங்க இப்போ எல்லோரையும் தடையற தாக்க ஆரம்பிச்சுட்டீங்க போல இருக்கிறதே
    நடத்துங்கள் நடத்துங்கள் ;-)
    .

    பதிலளிநீக்கு
  11. @Cibi: ச்சே, ச்சே - அப்படியெல்லாம் இல்லை நண்பா! :)

    பதிலளிநீக்கு
  12. hi, its very good article..and also video review..keep it up..





    ---------Maakkaan

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia