The Dark Knight Rises - 2012 - உணர்வுகளோடு விளையாடும் நோலன்!

கொலை வெறி பிடித்த இரசிகர்கள் எந்த ஹீரோவுக்கு அல்லது எந்த வில்லனுக்கு அதிகம் என்று கேட்டால் இரண்டுக்குமான பதில் பேட்மேன் கதைத் தொடரில்தான் அடங்கியிருக்கிறது! பேட்மேனின் (அல்லது நோலனின்?) வெறி பிடித்த இரசிகர்கள் போட்ட பெரும் கூச்சலையும், செய்த அலப்பறைகளையும் நேற்று தியேட்டரில் நேரில் பார்த்தேன்; பேட்மேனின் பரம வைரியான ஜோக்கரின்  வெறி  பிடித்த இரசிகன் (என்று சொல்லிக் கொண்டவன்) செய்த அட்டூழியத்தை செய்திகளில் பார்த்தேன்! நேற்று சுத்தமாய் விமர்சனம் எழுதும் மூட் இல்லாதாதால் இந்த லேட்டான விமர்சனம்! இந்நேரம் எல்லோரும் அடித்து, துவைத்து, வவ்வாலை மல்லாக்க தொங்க விட்டிருப்பார்கள் - எனது பங்கிற்கு நானும் அதை செய்யத்தான் போகிறேன்! ஆனால், முக்கியமான ஒன்றை முதலில் சொல்லியாக வேண்டும்!

இது ஒரு Epic மூவி ஆக இருக்கும், நான் பேட்மேன் வெறியன், நோலனின் பரம வெறியன் என்றெல்லாம் உணர்ச்சி வசப்படாமல், அமைதியாய், ஒரு சாதாரண ஆக்ஷன் பட இரசிகனாய் படம் பார்த்தால் நிச்சயம் பிடிக்கும்!  எனக்குப் பிடித்தது! படத்தில் இருந்த ஓட்டைகளை மீறி படம் ஒழுகாமல் இருந்ததிற்கு காரணம் - படம் உணர்ச்சிகரமாகவும், ஒரு பெரிய கதைக்களனுடனும் இருந்ததேயாகும்! பரபரப்பான அதிரடிக் காட்சிகளுக்கும் பஞ்சமே இல்லை, உதாரணத்திற்கு அந்த ஆரம்பக் காட்சி மற்றும் பேட்மேன் போலீஸிடம் இருந்து தப்பும் காட்சி!

படத்தில் subtitle போட்டது மிகவும் உதவியாக இருந்தது - குறிப்பாக Bane பேசும் காட்சிகளில்! பேன் ஆக டாம் ஹார்டி - ஆளவந்தான் கமல் போல மொத மொதவென்று இருக்கிறார் - அவ்வளவாக கவரவில்லை, கலக்கமூட்டும் விதத்திலும் இல்லை! கிறிஸ்டியன் பேல், பேட்மேன் உடைக்குள் நன்றாக நடித்துள்ளார். மைக்கேல் கெய்னின் உணர்சிகரமான நடிப்பு மேலை நாட்டவர்களுக்கு புதிதாக இருக்கலாம் - நமக்கோ காலம் காலமாய் பழக்கப்பட்ட சிவாஜி ரக, கண்கள் பனிக்க, நா தழுதழுக்கப் பேசும் நடிப்புதான் - ஆனாலும், தாத்தா அசத்தியிருக்கிறார்! எல்லோரையும் பற்றி எழுதிக் கொண்டிருந்தால் விமர்சனம் இப்படத்தை விட நீளமாகி விடும் - சுருக்கமாக சொன்னால், எல்லாரும் தங்கள் வழக்கமான ஹாலிவுட் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்!

இது ஸ்பாய்லர்கள் நிறைந்ததொரு விமர்சனம், விருப்பமிருந்தால் மேற்கொண்டு படிக்கலாம்!

கதையின் ஒரு வரி - பேன் கோதம் சிட்டியை சிறை பிடிக்கிறான், பேட்மேனை சிறையில் அடைக்கிறான், குண்டு வெடிக்க இரண்டே நிமிடங்கள் இருக்கும் போது - பேட்மேன் நகரை அழிவில் இருந்து காப்பாற்றுகிறார்! இதை விலாவாக, வரியாக கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் காட்டுகிறார்கள்! இருந்தாலும் ஓரிரு இடங்களைத் தவிர, படம் தொவில்லாமல் சுறுசுறுப்பாகத்தான் சென்றது!

ஒரு இரஷ்ய அணுசக்தி விஞ்ஞானியை பேனின் குழு நடுவானில் கடத்தும் அட்டகாசமான காட்சியுடன் படம் ஆரம்பிக்கிறது! கட், பேட்மேன் இல்லாத கோதம் சிட்டி! ஹார்வி டென்ட்டின் எட்டாவது நினைவஞ்சலி தினம், அனைவரும் ஹார்வி டென்ட்டின் புகழ் பாடி பேட்மேனை தூற்றுகிறார்கள்! உண்மை அதுவல்ல என தெரிந்திருந்தும், அதைப் பற்றிய ஒரு அறிக்கையை எழுதி கோட்டில் வைத்திருந்தும், அதை வெளியிட மனம் வராமல் தவிக்கிறார் கமிஷனர் கோர்டன்! மௌன சாட்சியாய் இந்த விழாவை மாடியிலிருந்து பார்க்கும், பேட்மேன் உடைகளை துறந்த ப்ரூஸ் வேய்ன் தன் மாளிகைக்குள் ஒரு உடைந்த மனிதராய் விருந்து உணவு அருந்த வருகிறார்! Cat Burglaar என அழைக்கப்படும் செலினா கெய்ல் (Anne Hathaway) ப்ரூசின் கைரேகைகளை திருடிச் செல்கிறார்! இதனூடே சாக்கடையில் ஒரு சடலம் - அந்த தள்ளாத வயதிலும் கமிஷனர் கோர்டன், அந்த பாதாள சாக்கடைக்குள் நுழைந்து பேனின் கூட்டம் அங்கே பதுங்கி இருப்பதை கண்டறிகிறார். எப்படியோ தப்பித்து, பேனை அழிக்க பேட்மேன் திரும்பி வரவேண்டும் என ப்ரூஸூக்கு கோரிக்கை விடுக்கிறார்! இந்த தருணத்தில் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் நுழையும் பேன் களவாடப்பட்ட ப்ரூஸின் கைரேகைகளுடன், எக்குத்தப்பாக ட்ரேட் செய்து அவர் நிறுவனத்தை திவாலாக்குகிறான்!

நான் முழுக்கதையையும் சொல்லப் போவதில்லை - மாறாக, மீதக் கதையை இந்த கேள்விகளால் அணுகுவோம்!

ஸ்டாக் மார்கெட்டில் இருந்து தப்பிக்கும் பேனின் கும்பல் எட்டு நிமிடங்களுக்குள் செல்லுலார் சிக்னலின் துணை மூலம் ட்ரேட் transaction-ஐ முடிப்பதாக காட்டுகிறார்கள். இது போலீஸுக்கு தெரிந்திருந்தும் சிக்னலை தடை செய்யாதது ஏன்?!

பேட்மேன் பேனுடன் மோதும் சமயம், அவன் இவ்வாறு பொருள்படும்படி கூறுகிறான் "நீ இருட்டுக்கு உன்னை பழக்கப்படுத்திக் கொண்டவன், ஆனால் நான் அதிலேயே பிறந்து வளர்ந்தவன், நான் இருட்டை விட்டு வெளியே வந்தபோது நான் பெரியவனாகி இருந்தேன்!". பிறகு பேனால் சிறை பிடிக்கப்பட்டு அந்த சிறையிலேயே பேட்மேன் அடைக்கப்படுகிறார்! சிறையில் இருப்பவர்கள் பேன் சிறுவனாய் இருந்தபோது கயிற்றின் உதவி கூட இல்லாமல் கிணற்றில் இருந்து தப்பித்தாய் கூறுகிறார்கள், அதை பேட்மேனும் நம்புகிறார்! இந்த இரண்டு கூற்றுகளும் முரண்படுகின்றனவே?!

பேட்மேனை சிறையில் அடைத்த பின்னர் பேன், "Wayne Enterprises"-இன் ஃபியூஷன் ரியாக்டரை, அடாமிக் பாம்ஃப்பாக மாற்றுகிறான், அது தானாகவே ஐந்து மாதத்தில் வெடிக்கும் என்றும் கூறுகிறான்! ஆனால், அதை உடனே வெடிக்க செய்யும் கண்ட்ரோலும் அவனிடம் / டாலியாவிடம் இருக்கிறது! பிறகு ஏன் ஐந்து மாதங்கள் காத்திருக்க வேண்டும்?! நம் தமிழ் படங்களில் வில்லனால் கை கால் உடைக்கப்பட்ட ஒரு போலிஸ் ஆஃபிசர் ஒரு சுயமுன்னேற்ற பாட்டினூடே உடற்பயிற்சி செய்து பூரண குணமடைந்து வருவதைப் போல பேட்மேனும் குணமடைந்து திரும்பி வரட்டும் என்றுதான் காத்திருக்கிறானா?!

தீவிரவாதிகளால சிறை பிடிக்கப்பட்ட கோதம் சிட்டி ஐந்து மாதங்களுக்கு அப்படியேவா இருக்கும்? இந்த கால கட்டம் சித்தரிக்கப்பட்ட விதம் திருப்திகரமாக இல்லை! மாதம் ஒன்று, மாதம் இரண்டு என்று படிப்படியாக நகரில் என்ன நாசம் விளைகிறது, மக்களின் (மன)நிலை என்ன போன்றவற்றை தெளிவாக காட்டியிருக்கலாம்! பாதாள சாக்கடையில் சிக்கிய போலீஸாரின் நிலையும் நம்பும்படி இல்லை!

அப்புறம் சிறையில் இருந்து தப்பித்த பேட்மேன் பிற கைதிகளை காப்பாற்றாமல் நடையைக் கட்டுவது ஏன்? "Ancient part of the world"-இல் இருக்கும் சிறையிலிருந்து "Advanced part of the world" ஆன கோதம் சிட்டிக்கு பேட்மேன் செல்வது எப்படி? கோதம் சிட்டியை விட்டு யார் வெளியேறினாலும் அல்லது உள்ளே வந்தாலும் ஃபியூஷன் பாம்ஃபை வெடிக்கச் செய்வேன் என்று பேன் சொல்லியிருக்க, பேட்மேன் தனது சக்தி வாய்ந்த பேட்சூட் கூட இல்லாமல் நகருக்குள் நுழைந்தது எப்படி?!

"Batpod" என அழைக்கப்படும் பேட்மேனின் பைக் "Bat Mobile (Tumbler)" என்ற பேட்மேன் உபயோகப்படுத்தும் வாகனத்தின் ஒரு அங்கமே! அப்படி இருக்க வில்லன்கள் ஓட்டும் பேட் மொபைல்கள் ஒரு சாதாரண துப்பாக்கி போன்றதொரு சொத்தை அமைப்பை மட்டுமே கொண்டுள்ளனவே, ஏன்?! நகரம் அழிவின் பிடியில் இருக்கும் போதும், பேட்மேன் தன்னுடைய ஆயுதங்களை உபயோகிக்காமல், பேனை வெறும் கையுடனேயே எதிர் கொள்வது ஏன்? ஈகோ தடுக்கிறதோ?!

படத்தின் இறுதிக்கட்டத்தில், பேட்மேன் தான் கோதம் மக்களுக்காக செய்யக்கூடிய தியாகம் ஒன்று பாக்கியிருக்கிறது என்று கூறிவிட்டு, அடாமிக் பாம்ஃபை தன் பறக்கும் வாகனம் மூலம், நகரத்தை தாண்டி வெகு தொலைவு கடற்பகுதிக்கு எடுத்து செல்கிறார் (Avengers படத்திலும் Ironman இதைப்போன்ற ஒரு செயலைத்தான் செய்வார்!)! பாம்ஃப் வெடிக்க ஓரிரு வினாடிகள் இருக்கும் போது அவரின் முகம் க்ளோசப்பில் காட்டப்படுகிறது! அந்த முகமூடிக்குப் பின் பொதிந்த இனம் புரியாத உணர்வுகள் அந்த சிறிய விழிகளினூடே பிரதிபலிக்கும் போது பார்வையாளர்கள் உறைந்துதான் போகிறார்கள்! தாங்கள் நேசிக்கும் ஒரு சூப்பர் ஹீரோ மடிவதை கனத்த இதயத்துடன் பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்ளும் காட்சி அது! அப்படிக் காட்டி விட்டு இறுதியில் ஆங்கிலத் தொடர் படங்களின் சம்பிரதாயத்தை மீறாமல் Bruce Wayne திரும்பிவருவதாக காட்டியது மிகுந்த ஏமாற்றத்தையே அளித்தது! ஒன்று பேட்மேனை இறப்பதை அவ்வளவு உணர்வு பூர்வமாக காட்டியிருக்கக் கூடாது இல்லையேல் திரும்பி வருவதாக காட்டியிருக்கக் கூடாது! ஆனால், இந்த இரண்டையுமே செய்ததால் - இரண்டாவது பாகமான "The Dark Knight" எட்டிய உயரத்தின் பாதியை கூட இப்படம் தொடவில்லை என்பதே உண்மை!

இன்னும் நிறைய கேள்விகள் இருக்கின்றன, இருந்தாலும் வளவளவென எழுதிக்கொண்டிருக்க இப்போதைக்கு என்னிடம் நேரமில்லை! இந்த குறைகளை எல்லாம் தாண்டி இந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹீரோ படங்களிலேயே டாப் எது என்று கேட்டால், அது இந்தப் படம்தான் என்று அடித்துச் சொல்லுவேன்! இதற்கு முன் வெளியான Avengers & The Amazing Spiderman - இந்த இரண்டு சூப்பர் ஹீரோ படங்களும் பேட்மேனுக்கு முன் சிறு பிள்ளை விளையாட்டாய் மட்டுமே தெரிகிறது!

பேட்மேன் முதலில் தமிழ் பேசியது  எப்போது? - மேலும் விவரங்களிற்கு இந்தப் பதிவை படிக்கவும்!

The Dark Knight Rises / **** / Batman is awfully Avenging and simply Amazing!!!

கருத்துகள்

  1. கார்த்தி

    மிக அருமையான விமர்சனம். இருந்தாலும் உங்களுடைய கேள்விகளை படிக்கும் பொழுது தாங்கள் விமர்சன பாதையை விட்டு சற்றே வெளியே சென்றது போல உள்ளது.

    தவறாக இருந்தால் மன்னிக்கவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கு நன்றி! விமர்சனத்தை லேட்டாக வெளியிட்டதால், வழக்கமான பாணியில் இல்லாது இவ்வாறு எழுதினேன்... மன்னிப்பு போன்ற பெரிய வார்த்தைகள் இங்கே அவசியம் இல்லை நண்பரே! :)

      நீக்கு
  2. //இது ஸ்பாய்லர்கள் நிறைந்ததொரு விமர்சனம், விருப்பமிருந்தால் மேற்கொண்டு படிக்கலாம்!//
    இந்த வரிக்கு மேல் படிக்கவில்லை. விமர்சனம் பண்ணுகிறேன் பேர்வழி என்று படத்தின் கதையையும் அதில் உள்ள திருப்பங்களையும் வெளிப்படையாக எழுதி படம் பார்க்கும் நோக்கத்தை கெடுப்பவர்களுக்கு நடுவில், Spoiler Alert கொடுத்த நீங்கள் ஒரு ஜெம்!

    பதிலளிநீக்கு
  3. Nice Karthik.

    I accept with most our ur questions.
    Just my thoughts on dew questions.

    //வில்லனால் கை கால் உடைக்கப்பட்ட ஒரு போலிஸ் ஆஃபிசர் ஒரு சுயமுன்னேற்ற பாட்டினூடே உடற்பயிற்சி செய்து பூரண குணமடைந்து வருவதைப் போல பேட்மேனும் குணமடைந்து திரும்பி வரட்டும் என்றுதான் காத்திருக்கிறானா?!//

    He will tell o batman that

    "I will give permision to die once gotham turns into ashes"
    And what i think is he wants to give pain to batman slowly thats why he gave that 5 omonths time Just a normal pshycic activity.

    //பேட்மேன் தன்னுடைய ஆயுதங்களை உபயோகிக்காமல், பேனை வெறும் கையுடனேயே எதிர் கொள்வது ஏன்? ஈகோ தடுக்கிறதோ?//

    During one of the sequences with Catwoman.Batman will tell no guns and killing.So he is like phantom he will not use guns to killing.

    These are just my thoughts may or may not be correct.

    Krishna.V.V

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //he wants to give pain to batman slowly//
      and he doesn't even monitor Batman for those 5 months to see what he is up to?! Looks like Bane has terribly underestimated his enemy!

      //he is like phantom he will not use guns to killing//
      he can at least stop Bane by using his hi-tech gadgetry!

      நீக்கு
  4. அப்புறம் சிறையில் இருந்து தப்பித்த பேட்மேன் பிற கைதிகளை காப்பாற்றாமல் நடையைக் கட்டுவது ஏன்?----

    வெயின் வெளியே வந்த வுடன் வெளியே தயாராய் இருக்கும் பெரிய கையிற்றை எடுத்து உள்ளே போட்டுவிட்டு செல்வார். கடைசி தடவையாக ஏறும்போது வெறும் கையில் பிடித்து ஏறுவார் என்பது நினைவிருக்கிறதா ?

    முடிஞ்சா எடுத்துக்கோங்கடான்னு வில்லன் விட்டுவிட்டு சென்றிருக்கலாம். :-)

    கோதம் சிட்டியை விட்டு யார் வெளியேறினாலும் அல்லது உள்ளே வந்தாலும் ஃபியூஷன் பாம்ஃபை வெடிக்கச் செய்வேன் என்று பேன் சொல்லியிருக்க, பேட்மேன் தனது சக்தி வாய்ந்த பேட்சூட் கூட இல்லாமல் நகருக்குள் நுழைந்தது எப்படி?!------

    இத நான் யோசிக்கவே இல்லை. :-)

    7 மணிக்கு தமிழில் பார்த்து விட்டு வந்து உங்களுக்கு பின்னுட்டமிடுகிறேன்.

    கருந்தேளின் பேட் man பில்ட் அப் பார்த்து டிக்கெட் எடுத்து வைத்து இருந்தேன். பார்த்து விட்டு அவர் அடித்த FB கமெண்டுகளை பார்த்து ஆகா ? நாமளா வலிய போய் மாட்டிடமோ ன்னு ஒரு நிமிஷம் பக்குன்னு ஆயிடுச்சு.

    ஆனா படம் பார்த்த பிறகு ஏமாற்றமடைய வில்லை என்றே சொல்ல வேண்டும்.

    இந்த படத்தில் ராபின் வருகிறார் கவனித்தீர்களா? ;-)

    ----Avengers & The Amazing Spiderman - இந்த இரண்டு சூப்பர் ஹீரோ படங்களும் பேட்மேனுக்கு முன் சிறு பிள்ளை விளையாட்டாய் மட்டுமே தெரிகிறது!-----

    அந்த ரெண்டு படத்தையும் இன்னும் பார்கவில்லை. ;-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமது கருதேளாரின் விமர்சனத்தை காரணமாக நான் நினைப்பது
      அவர் படம் வெளிவருவதற்கு முன்பே பிரான்க் மில்ளீர் இன் அனைத்து காமிக்ஸ் படித்து பதிவாக இட்டு விட்டார்.
      Bane தான் வில்லன் என தெரிந்த உடனே அவனை பற்றியும் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து விட்டார்..
      பின்பு அவர் சென்று படம் பார்த்த போது அவருக்கு ஏமாற்றமாக இருந்துள்ளது.இதற்கு யாரை குற்றம் சொல்வது.

      நீக்கு
    2. //வெயின் வெளியே வந்த வுடன் வெளியே தயாராய் இருக்கும் பெரிய கையிற்றை எடுத்து உள்ளே போட்டுவிட்டு செல்வார்//
      அப்படியா?!! இதை கவனிக்கவில்லை நண்பரே! :)

      //இந்த படத்தில் ராபின் வருகிறார் கவனித்தீர்களா? ;-)//
      இதை கவனித்தேன் நண்பரே! :D

      //ஆனா படம் பார்த்த பிறகு ஏமாற்றமடைய வில்லை என்றே சொல்ல வேண்டும்.//
      ஆம்! நன்றாகவே இருந்தது!

      நீக்கு
  5. டியர் friend ,,,,,,,,,,,, என்னக்கு திகில் இல் வந்த batman பிடித்த அளவுக்கு படம் பிடிக்காது ,,,,,,,,கார ணம் தெரியாது ,,,,,,,,,,,,,,,,,, நம் எடி ன் ப்ளாக் struk ஆகிவிட்டதா? கமெண்ட் pottalum your கமெண்ட் publish என்று வருகிறது ,,,,,,,,,,,,, கமெண்ட் யை காணோம் ,,,,,,,,,,,,,,,, மேலும் 3 நாட்களாக last கமெண்ட் உங்க ளின் ( கெட்டி அட்டை ) வரை மட்டுமே உள்ளது ,,,,,,,,,,,,,,, என் சிஸ்டம் தான் problem என்று நினைத்து ,,,,,,, பக்கத்தில் net centre கு ponnalum இதே கதைதான்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, எதாவது தெரியுமா ,,,,,,,,,,,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! என்னுடைய கமென்ட்டுகளே இறுதியானது என்று கூகிள் நினைத்து விட்டதோ! :D

      ஜோக்ஸ் அபார்ட், மற்ற நண்பர்கள் குறிப்பிட்டது போல் "Load More"-ஐ க்ளிக்கிப் பாருங்கள்!

      நீக்கு
  6. எடி யின் பிளாக்கை ஒரு வேளை ஜோக்கர்/பேன் கும்பல் struck செய்யமுயற்சி??! (ச்சும்மா ச்சும்மா) :)

    பதிலளிநீக்கு
  7. நீங்க கொஞ்ச கதையை தான் சொல்லிருகேங்க..முக்கியமான spolier பத்தி சொல்லல.... :)
    I would like to share my views on your review..hope u wont mind it... and dont mistake me.... :)
    ///சிறையில் இருப்பவர்கள் பேன் சிறுவனாய் இருந்தபோது கயிற்றின் உதவி கூட இல்லாமல் கிணற்றில் இருந்து தப்பித்தாய் கூறுகிறார்கள், அதை பேட்மேனும் நம்புகிறார்//
    சிறையில் இருபவங்க A Child என்று தான் சொல்லுவார்கள்...they never mentioned its Bane....
    //பேனை வெறும் கையுடனேயே எதிர் கொள்வது ஏன்? ஈகோ தடுக்கிறதோ?!//
    Batman never used weapons even in his earlier movies..and he doesnt want to kill anyone..thats the reason he never joined League of shadows...
    //"Ancient part of the world"-இல் இருக்கும் சிறையிலிருந்து "Advanced part of the world" ஆன கோதம் சிட்டிக்கு பேட்மேன் செல்வது எப்படி///
    i dont think its never mentioned that the Jail where Batman is held is outside Gotham or Inside Gotham... I assume its inside Gotham...I just took it without much questioning...
    As per me too much micro details will spoil the movie.....In Batman Begins.. Bruce will travel to Bhutan...we shouldnt question how did he get Visa to Bhutan... :)
    //Bruce Wayne திரும்பிவருவதாக காட்டியது மிகுந்த ஏமாற்றத்தையே அளித்தது////
    If the Super hero is killed then this movie would have gone in to Ashes.....
    Nolan did compromise himself for this ending......Nolan doesnt mind killing his Lead characters, he has done that before.....but here he has to compromise as the Movie is tooooo big, in the sense there was a huge Expectation..... and its a Super hero movie......No body can digest the death of super hero..... I think below are my reasons for this kind of ending...
    Bale has mentioned that this is the end of his Batman series he agreed to act in Batman series with the condition that there shouldnt be any Robin Character...... also Nolan doesnt want to drag this further.....I think Nolan gave a ending in such a way that Warner Bros can take this up with some other Director with Robin Character...
    //The Dark Knight" எட்டிய உயரத்தின் பாதியை கூட இப்படம் தொடவில்///
    Agreed...TDK had Jokar...thats the difference... :)

    If you find time just read my review @ http://hollywoodraj.blogspot.in/2012/07/the-dark-knight-rises-2012-mind-blowing.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //hope u wont mind it... and dont mistake me.... //
      :) never!

      //சிறையில் இருபவங்க A Child என்று தான் சொல்லுவார்கள்...they never mentioned its Bane....//
      Oh! but Batman somehow believes the Child is Bane, isn't it?

      //he doesnt want to kill anyone//
      like I mentioned above, he can at least try to stop Bane by using his hi-tech gadgetry!

      //As per me too much micro details will spoil the movie//
      agreed :)

      //Nolan did compromise himself for this ending.//
      yes, he did indeed!

      //TDK had Jokar...thats the difference... :)//
      not just the Joker, but the ultimate Sacrifice that Batman does at the end...

      //just read my review//
      sure, buddy - thanks!

      நீக்கு
  8. நீங்க எழுதுவதற்குள் எத்தனை பெயர் எழுதிவிட்டார்கள்...படம் செம்மையா போர் அடிக்காமல் போனது நோலன் அதிகபடியாய் ட்விஸ்ட் வைக்கலை அதிகமா வைத்து இருந்தால் பார்ப்பவரை கடுப்பு ஏற்றி இருக்கும்...ஹாலிவுட் ஹீரோ செத்தாலே யாரும் விரும்பமாட்டார்கள் அதிலும் சூப்பர்ஹீரோ சாக விரும்புவார்களா....இதற்கு முன் வந்த dark knight விட கம்மி தான்....

    பதிலளிநீக்கு
  9. 4* ok ! படம் பார்த்துடால் போச்சு ...
    பதிவிற்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 4* போடுவதா 3.5 * போடுவதா என்று ஒரே குழப்பம்! :D அரை * சிம்பல் கிடைக்காததால் 4* போட்டுவிட்டேன்! ;)

      நீக்கு
  10. //இது ஸ்பாய்லர்கள் நிறைந்ததொரு விமர்சனம், விருப்பமிருந்தால் மேற்கொண்டு படிக்கலாம்!// என்பதுவரையும், கடைசி பத்தியையும் முழுமையாக படித்துவிட்டேன்!

    விமர்சனம் படித்துவிட்டால் படம் போரடிக்கும். :D

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு இன்னொரு reboot பதிவு தயாராகிவிட்டது. அதை கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் சூப்பர் மனிதன்!!!

      நீக்கு
    2. பேட்மேன் காமிக்ஸ் மற்றும் திரைப்பட விமர்சனம் அடங்கிய reboot பதிவா? :D

      நீக்கு
    3. Reboot பதிவல்ல, Reboot பற்றிய பதிவு. அதற்கான க்ளூ முந்தைய கம்மெண்டில் உள்ளது. :D

      நீக்கு
    4. அடடா! சத்தியமாக தெரியவில்லை நண்பரே! நான் ஒரு சாதா மனிதன்தான் என்பது உறுதியாகி விட்டது! நீங்களே சொல்லுங்களே ப்ளீஸ்! :)

      நீக்கு
    5. Man of Steel 2013

      கூகிளில் தேடி பாருங்கள். :D

      நீக்கு
    6. அதே! அதே! ஆனால் ட்ரைலர் பார்த்த பிறகு படம் நல்ல இருக்காதோ என்று தோன்றுகிறது. :(

      நீக்கு
  11. நாங்கல்லாம் படத்துக்கு போறதே ரொம்ப கம்மி இதுல படத்துக்கு போயி படம் பாக்கறப்பவே இதனை கேள்வி கேட்டு அத பாக்கறதுன்னா
    படத்துக்கே போக மாட்டேன்னு நெனைக்கிறேன்

    ஹ்ம்ம்ம் எப்புடித்தான் இப்படியெல்லாம் யோசிக்கறாங்களோ பய புள்ளைக அய்யோ அய்யோ ......... ;-)
    .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி எல்லாம் கேள்வி கேட்டாதான் ஒரு பயம் இருக்கும் ;) ;) ;)

      நீக்கு
  12. விமர்சனம் டாப்பு! ரிசல்ட்-படம் பார்க்குற மூடு..அவுட் :D

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படம் பார்க்குற மூடு..அவுட்//
      :( படம் நன்றாகத்தான் உள்ளது நண்பரே!!!

      நீக்கு
    2. காசு கொடுத்து CD வாங்கி படம் பார்க்குற மூடு தான் போயிருச்சே தவிர நண்பன் கொண்டு வந்த ஓசி CD-ல படம் பார்க்குற மூடு கொஞ்சம் கூட குறையல :D

      ஆமா என்னாச்சு கொஞ்சநாள சத்தத்தை காணோம்! ஓ... மாச கடைசி ஆயிருச்ல.....

      ஆகா..,வருதுடா மந்த்லி ரிப்போர்ட்டு....ஒடிர்ரா கைப்புள்ள :D

      நீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia