இனவெறியைத் தூண்டுகிறதா டைம்ஸ் ஆஃப் இந்தியா?

TOI எனக்கு மிகவும் பிடித்தமான பேப்பர் (ஆக இருந்தது!). சரியான விகிதத்தில் அரசியல், இதர செய்திகள், பொழுதுபோக்கு அம்சங்கள் இதில் இருக்கும்! அதன் ஆங்கிலமும் அதிகம் கஷ்டப்படுத்தாது! ஆனால் வர வர அவர்களின் போக்கு எரிச்சலடைய வைக்கிறது! தமிழரையும், தமிழ்நாட்டையும் குறி வைக்கத் தூண்டும் ஹெட்லைன்ஸ் கொண்ட செய்திகள் அவர்களது இணைய பதிப்பிலும், தினசரிகளிலும் அவ்வப்போது வெளியாகின்றன!

குறிப்பாக அவர்கள் இணையதளத்தில் "Comment Moderation" மிகுந்த பாரபட்சத்துடன் செயல்படுவதால் - இது போன்ற வெறுப்பை தூண்டும் தலைப்புகள் கொண்ட செய்திகள் வெளியாகும்போது, நச்சை கக்கும் நூற்றுக்கணக்கான இனவெறிப் பின்னூட்டங்கள் தமிழர் மீதான வெறுப்பை உமிழ்கின்றன! அதை படித்து எரிச்சலாகும் தமிழர்களும் பதிலுக்கு வெறுப்பேற்றும் கருத்திடுகிறார்கள் (அவற்றில் பெரும்பாலானவை நீக்கப்படுகின்றன!)!

இந்த வம்பு வளர்க்கும் வேலையை வடநாட்டினருக்கும் - தமிழர்க்கும் இடையே மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் மற்ற தென்மாநிலங்களுக்கும் - தமிழ்நாட்டுக்கும் இடையேயும் வெற்றிகரமாக TOI செயல்படுத்தி வருவதாகவே எண்ணத் தோன்றுகிறது - குறிப்பாக கேரளாவுடன்! இந்த ஒரு காரணத்திற்காகவே TOI-யில் தமிழ்நாடு சார்ந்த செய்திகள் படிப்பதை பெரும்பாலும் தற்போது தவிர்க்கிறேன் - முக்கியமாக பின்னூட்டங்களை! பிற மாநிலங்கள் பற்றிய செய்திகளை நான் கூர்ந்து படிப்பதில்லை - ஒருவேளை அங்கேயும் இப்படித்தானோ?

இல்லை, இது எல்லாம் வீண் கற்பனை என்று TOI சொல்லுமேயானால் - வெறுப்பைத் தூண்டும் Sensational தலைப்புகள் வைக்கப்படுவது ஏன்? பின்னூட்டங்கள் Moderation-னுக்கு உட்படுத்தப்படாதது ஏன்? பதில் சொல்லுமா TOI?

நேற்றைய ஸ்பெஷல்!:
குழந்தைகள் படு கொலையில் முதலாவதாக இருப்பதாக சொல்லப்படும் மகராஷ்டிராவை தலைப்பில் போடாமல், மூன்றாவதாக இருப்பதாக சொல்லப்படும் தமிழ்நாட்டை தலைப்பில் TOI போடுவது ஏன் (நேற்றைய தினம் இது TOI தள முன்பக்கத்தில் இருந்தது)?!

மேலும் சில பழைய தலைப்பு செய்திகள்!:
மட்டறுக்கப்படாத பின்னூட்டங்களை பார்க்கத் தவறாதீர்கள்!
மேற்கண்டவை ஒரு சிறு உதாரணம் மட்டுமே! மேலும் சில பழைய இணைப்புகள் - இப்போது தேடும்போது கிடைக்கவில்லை! ஆனால் TOI-ஐ தொடர்ந்து வாசிப்பவர்கள் இதை கவனித்திருப்பார்கள் என நினைக்கிறேன்! TOI குறைந்தது Comment Moderation-ஐ பாரபட்சமில்லாமல் உபயோகித்து இனவெறியைத் தூண்டும் கருத்துக்களை (அது எந்த இனத்துக்கு எதிரானதாக இருந்தாலும்!) உடனே நீக்கவேண்டும்! செய்யுமா TOI?

கருத்துகள்

  1. Nalla note panirukeenga.
    Karuthu solla yenakku theriya la.
    But may if you have chance to glance the headlines of the otherstate issues we could have a clear picture.try to do that if possible.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. yes, will try to check that! but whatever may be the case - they should follow proper comment moderation and remove any offensive comments!

      நீக்கு
  2. தமிழன் மேல் அப்படி என்ன இவங்களுக்கு வெறி என தெரியவில்லை...வடநாட்டினர் மட்டும் அப்படி செய்யவில்லை நமக்கு அருகில் உள்ள கேரளா நம்மை என்னவெல்லாம் கேவலமா நடத்துகின்றனர்...அவனுக எல்லாம் பாரின் ரேன்ஞ்ல் வாழ்வதாய் மனதில் நினைப்பு அவனுகளை கண்டபடி திட்ட வேண்டும் என இருக்கு அவனுகளை போல நாமும் நடந்து கொள்ள கூடாது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. TOI போன்ற பெரிய பத்திரிக்கைகள் வெறுப்பை தூண்டும் ஊடகமாய் துணை போகக்கூடாது!

      நீக்கு
    2. முல்லைப் பெரியார் பிரச்சினை பெரிதாக இருந்த போது ஒருவர் இட்ட பின்னூட்டம்
      “தமிழர்கள் குளிக்கவே மாட்டார்கள். மிகவும் அழுக்கானவர்கள்.. கறுப்பாக இருப்பார்கள்”

      இந்த அளவுக்கு அவர்களுக்கு என்ன கோபம் என்று புரியவில்லை :(

      நீக்கு
  3. டைம்ஸ் ஆப் இந்தியா தளத்தை திறந்தாலே ஆபாச விளம்பரங்களும், செய்திகளும் தான் நிறைந்துக் கிடைக்கின்றன. வியாபரத்திற்காக கீழ்த்தரமாக நடக்கும் இவர்கள் சமுதாயத்தை பற்றி பேசுவது வேடிக்கையானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், உண்மைதான் நண்பரே! இருப்பினும் இதர பல சுவாரசிய செய்திகள் மற்றும் சினிமா சார்ந்த அலசல்கள் இருப்பதாலேயே அங்கு அடிக்கடி போய்த் தொலைக்க வேண்டியிருக்கிறது!

      நீக்கு
  4. எங்கள் ரூமிலயும் TOI தான் வாங்குகிறோம். தினமலர் போல இருக்கிறது. தமிழர்கள் மீது மட்டும் பாரபட்சம் காட்டுவதாக தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  5. வியாபார நோக்கில் சில பத்திரிக்கைகள் இவ்வாறு செயல்படும்! அந்தவரிசையில் இதுவும் சேர்ந்துவிட்டது என்று நினைக்க வேண்டியதுதான்!

    பதிலளிநீக்கு
  6. தினமணி ,தினமலர் ,தினத்தந்தி இப்ப இவங்க கூட இந்த மாறி ஆரம்பிச்சுட்டாங்க .

    பதிலளிநீக்கு
  7. nalla thagaval nanba...going to open we hate times of india page...nd going to put the info u complied...i hope u ll accept for me to do..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த பதிவே Hate-ஐ encourage செய்யக்கூடாது என்பதால்தான்! :) தவிரவும் "I hate TOI" என்றும் என்னால் முழு மனதாய் கூறிட முடியாது! ஒரு சில விஷயங்கள் தவிர்த்த அவர்கள் coverage எனக்கு பிடிக்கும்! இந்த பதிவை முழு அடிப்படையாக வைக்காமல் நீங்கள் உங்கள் விருப்பபடி, உங்களுக்கு தோன்றும் விஷயங்களை தாராளமாக எழுதலாம் நண்பரே! :) தவிரவும் முழுக்க முழுக்க நான் ஒருவன் சொல்வதை வைத்து முடிவெடுப்பதை விட இது சரிதானா என்று நீங்களும் ஒருமுறை சரிபார்த்து விடுங்கள்! :) நன்றி!

      நீக்கு
    2. தாங்கள் சொன்ன விஷயம் சரியாக பட்டதால் தான் நானும் வழிமொழிந்தேன். முன்னரே தமிழை கண்மூடித்தனமாக எதிர்போரை எனக்கு பிடிக்காது. ஏனோ தமிழ் பற்று தமிழை பேசுவதாலும் தமிழின் பெருமையை சிறிது உணர்திருப்பதாலும் எனக்கு உருவாயிற்று போலும்.தங்கள் பதிவை படித்த பிறகு toi ஒரு பத்திரிகையாக இருந்து கொண்டு இதை செய்கிறதா என்று கோவம் கூட வந்து விட்டது.ஒருவனை பிடிக்கவில்லை என்றால் முழுதாய் விட்டுவிடுவது நல்லது தானே :) நான் fb page ஐ உருவாக்கி விட்டேன் நண்பரே.பெயர் மாற்றம் மட்டுமே.டைம்ஸ் ஒப் இந்தியா வை எதிர்க்கிறோம் என்று. தங்களுக்கு நன்றி. உங்கள் பதிவை மட்டுமே copy paste செய்துள்ளேன்.இது ஆரம்பம் மட்டுமே. வெகு நாட்களாகவே தமிழை காரணமே இல்லாமல் எதிர்போரை பிடிக்காமல் வந்தது.நான் இணையத்தில் இனி காணும் தங்களை போன்றோர் தமிழுக்கு ஆதரவாக எழுதுவதை நிச்சயமாக அதில் பதிவேன். நன்றி நண்பரே.

      நீக்கு
    3. மிக்க நன்றி நண்பரே! உங்கள் கருத்துக்களை தொடர்ந்து பதியுங்கள்! ஆம், கண்மூடித்தனமான எதிர்ப்பு எரிச்சலூட்டும் விஷயம்! TOI-யில் சில பின்னூட்டங்களை பார்த்தால் கோபம் தலைக்கேறும்!

      நீக்கு
    4. கண்டிப்பாக என் கருத்துகளை பதிவேன் அன்பரே.மிக்க நன்றி நண்பரே.

      நீக்கு
  8. இங்குள்ள வேலையில் சூத்திரன் அமராதவரை இப்படிதான் இருக்கும்; அவர்களுக்கு தமிழ் முதல் எதிரி; இதில் சூத்திரன் அம்ரந்தாலும் அவனுக்கு அவாளுடன் ஈஷிக்கொண்டு இருப்பதில் தான் சுகம்! அவனும் தமிழனுக்கு எதிரி. தமிழனுக்கு தமிழ் சூத்திரனே எதிரி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேலைக்கு யார் அமர்ந்தாலும் குடுத்த வேலையை மட்டும் ஒழுங்காய் பார்த்தாலே நாடு உருப்பட்டு விடும்!

      நீக்கு
  9. It happens in many discussion boards, and becomes a general identity through out India that Tamil people cannot mingle with others. B'coz we never compromise and our ethics and values are strong.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. northern states certainly do have several misconceptions about TN & South in general... all that comes to their mind is kaappi and ayyo - thanks to stupid bollywood films!

      நீக்கு
  10. உங்கள் அவதானிப்பு சரியானதுதான். இரண்டாவது சுட்டியில் உள்ள செய்திக்கு நான் போட்ட பின்னூட்டம் வெளியிடப்படவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹ்ம்ம்! இவை பழைய articles என்பது மட்டுமே இதற்கு காரணமாய் இருந்திட முடியாது! Moderation-இல் ஏதோ கோளாறு!

      நீக்கு
  11. The reason was already discussed in Tamil blogs. The so called educated Tamilians wants to keep their Indian identity. But educated Mallus stands in their lingual identity. Most of journalists in India are Mallus. The Hindu's head office at Chennai and owned by Tamil Nadu Brahmins. But most of the journalists working there is Mallus. Same situation in any English media.

    பதிலளிநீக்கு
  12. நீங்கள் சொல்வது சரிதான்.மிகவும் அருவருப்பான பின்னூட்டங்கள்.நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், அவைகளை படித்தால் வெறுப்பும் எரிச்சலுமே மிஞ்சும்!

      த.ம. ஓட்டுக்கு நன்றி ஐயா! :)

      நீக்கு
  13. உண்மையை சொன்னா நான் தமிழ் நியூஸ் பேப்பர் கூட வாசிக்கிரதில்லை :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்புறம் எப்படி நாட்டு நடப்பு எல்லாம் பிங்கர் டிப்ல வச்சுருக்கீங்க?! ;) ஒரு வேளை Chinese, Spanish பேப்பர் எல்லாம் படிப்பீங்களோ? :D

      நீக்கு
  14. நானும் கவனித்திருக்கிறேன். ஆனால் உங்கள் அளவுக்கு ஆழமாக அல்ல. கேரளத்தை சேர்ந்த அதிகம் பேர் வேலை செய்கிறார்கள் என்று எங்கோ படித்த நினைவு.

    பதிலளிநீக்கு
  15. TOI ஐ ஓசியில் படிப்பதோடு சரி.
    இது சம்பந்தமான சில தொடுப்புகள்
    http://www.theweekendleader.com/Causes/853/the-m-factor.html
    http://savukku.net/home1/1412-2011-12-16-09-24-41.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணைப்புகளுக்கு நன்றி நண்பரே! மலையாளிகளின் ஆதிக்கம் சென்னை நாளேடுகளில் (பதிப்புகளில்) இருப்பது எனக்கு புதிய தகவல், பல நண்பர்கள் பின்னூட்டங்களில் இதையே தெரிவித்துள்ளார்கள்!

      நீக்கு
  16. good article...more about TOI..
    1. http://www.vinavu.com/2012/05/23/reaping-gold-through-cotton-and-newsprint/

    you can find more about TOI's standard in this site in many articles, so search...
    ----------
    Maakkaan

    பதிலளிநீக்கு
  17. டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் இந்த இரட்டை வேடம் நன்கறிந்ததே. முதலில் அவர்கள் க்றிஸ்துவ வெளிநாட்டு சக்திகளால் நடத்தப் பெறுப்வர்கள். இரண்டாவது அதில் உயர்பதவியில் இருப்பவர்கள் தமிழர்களை (பெரும்பாலும்) வெறுக்கும் கேரளர்கள். சென்னை அலுவலகத்திலேயே அவர்கள் அட்டகாசம் தாங்க முடியாது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். பொதுவாக அவர்களிடம் காணப்பெறும், நம்மிடையே இல்லாத ஒரு குணம் இது: எங்கே தங்கி யார் சோத்தை சாப்பிடுகிறார்களோ அவர்களை மட்டம் தட்டுவது, கேரளாவில் ஒன்றும் புடுங்க முடியாது தங்களால் என்றும் தாங்கள் நாடோடிகள் என்பதை அறிந்த பின்னரும் காட்ஸ் ஓன் கண்ட்ரி என்று நீட்டி முழக்குவார்கள். சபரிமலைக்கு கூட்டம் கூடாது, ஆனா தமிழ் பக்தர்களால் வரும் காசு மட்டும் வேண்டும். இத்தகைய கூட்டம் தான் இது (மீண்டும், பெரும்பாலான மலையாளிகளின் போக்கு இது).

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia