அறுவை அப்டேட்! (ப்ளேட்பீடியா - ஜூலை 2012)

இந்த அப்டேட்டில் ரொம்ப ப்ளேடு போடப் போவதில்லை, ஏன் என்றால் என் வாய்க்குள் பல் டாக்டர் ப்ளேடு (ரம்பம்) போட்டு விட்டார்! இது எனது வளர்ச்சியைத் தடுக்க பதிவுலகம் செய்த சதி என்றே நினைக்கிறேன்! இந்த தடங்கலையும் மீறி - ஒரு முக்கிய கிலோமீட்டர் கல்லான 50-வது பதிவைத் தாண்டி, ப்ளேட்பீடியா தடதடவென ஓடியிருக்கிறது! பெரிதாக ஹிட்டடித்தவை சினிமா விமர்சனப் பதிவுகள்தான்! 1000 ஹிட்சை அசால்டாகத் தாண்டுகின்றன! ஒரு ப்ளாக்கை பிரபலப்படுத்த மிக எளிதான வழி திரைப்பட விமர்சனம் செய்வதுதான் என யார் தலை மேல் அடித்து வேண்டுமானாலும் சத்தியம் செய்ய தயார்! :) இதில் ஒரு பிரச்சினை, என்னைப் போன்ற இளம்(!) பதிவர்கள் படம் வெளியான நாளன்றே விமர்சித்தால் மட்டுமே அதிக ஹிட்ஸ் கிடைக்கும்! இல்லை என்றால், எல்லா ஹிட்ஸையும் முதிய ;) பதிவர்கள் (லேட்டாக விமர்சனம் போட்டாலும்) அள்ளி விடுவார்கள் - அப்புறம் நம் விமர்சனத்தை ஒரு பயலும் படிக்க மாட்டார்கள்! என்னுடைய டார்க் நைட் விமர்சனம் இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு!

ஆனால் முதல் நாள் விமர்சனம் செய்வது லேசுப்பட்ட காரியமா என்ன? ஆஃபிஸ்க்கு கட் அடிக்க வேண்டும், இல்லையேல் வெள்ளிக்கிழமை ஈவ்னிங் ஷோவாவது பார்க்கவேண்டும்! பின்வரிசையில் டிக்கெட் வேண்டுமானால் ஓரிரு நாட்களுக்கு முன்னரே டிக்கெட் புக் செய்ய வேண்டும், பெங்களூரில் அனைத்து தமிழ் மற்றும் ஆங்கிலப் படங்களும் சிங்கிள் ஸ்க்ரீனில் திரையிடப்படுவதில்லை! எனவே மல்டிப்ளெக்ஸ்தான் கதி! செலவு குறைந்த பட்சம் முன்னூறு, நானூறை தாண்டி விடும்! அதே போல எதிர்ப்பார்த்துப் போகும் படங்கள் சொதப்பிவிட்டால் அதை விமர்சனம் செய்யவும் மனம் வந்து தொலைய மாட்டேன் என்கிறது! உதாரணம் - பில்லா! ஆனால் பாருங்கள், இருப்பதிலேயே அதிக ஹிட்ஸ் அள்ளியதும் அந்தப் பதிவுதான்! அந்த விமர்சனத்தின் இடையிடையே காமிக்ஸ் பற்றிய தகவல்களை அள்ளித் தெளித்ததில் ஒரு சிலருக்காவது தமிழில் தரமான காமிக்ஸ் வெளிவருவது குறித்த விழிப்புணர்ச்சி ஏற்ப்பட்டிருக்கும் என்றே நம்புகிறேன்!

அப்புறம் வலைச்சரம் ப்ளாகில் வாசக நண்பர்கள் ப்ளேட்பீடியாவை அடிக்கடி அறிமுகம் செய்து வருகிறார்கள்! முதலில் அப்துல் அறிமுகம் செய்தார், பிறகு ஹாரி, பிரபு, வரலாற்றுச் சுவடுகள் என்று வரிசையாக என்னை அறிமுகம் செய்தார்கள்! அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! அதே போல, வேறு சில பிரபல பதிவர்களும் எனது ஒரு சில பதிவுகளுக்கான இணைப்புக்களை அவர்கள் பதிவில் / தளமுகப்பில் அளித்து, அதிகம் பேர் வாசிக்க வழிவகுத்தனர்! நன்றி கிரி (IRCTC பதிவு), நன்றி ஃபிலாசபி பிரபாகரன் (சலூன் பதிவு)! இவை யாவும் என் தூண்டுதலின்றி அவர்களாகவே பிரசுரித்தவை! இப்படி, நான் கேட்டுக் கொள்ளாமலேயே அனைவரும் ப்ளேட்பீடியாவை பிரபலப்படுத்தும் முயற்சியில் இறங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்!

சமீபத்தில் பதிவுலக நண்பர்கள் கூட்டாக ஒரு ரிலே தொடர்கதையை ஆரம்பித்துள்ளார்கள். கதைமாந்தர்களின் பெயர்கள் பிரபல திரைப்பட நட்சத்திரங்களை கொண்டுள்ளது எனக்கு குழப்பத்தை தருவதால், முழு மனதில்லாத முயற்சியில் இறங்கி சொதப்ப விரும்பவில்லை! நண்பர்களின் கூட்டுமுயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்! அந்த தொடர்கதையைப் (பற்றி) படிக்க இங்கே கிளிக்கவும்.

இரண்டு முக்கிய நிகழ்வுகள்: முதலாவதாக பிரகாஷ் பப்ளிஷர்ஸின் தமிழ் காமிக்ஸ் ஸ்டால், பெங்களூரில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் Comic Con Express 2012 கண்காட்சியில் இடம்பெறப்போகிறது! அது குறித்த மேலதிக தகவல்களை எடிட்டர் விஜயனின் பிளாகில் படிக்கலாம்! காமிக் கானுக்காக வடிவமைக்கப்பட்ட போஸ்டரில் ரோபோ ரஜினியின் கார்ட்டூன் இடம் பெற்றிருப்பது இரசிகர்களிடையே பெருத்த எதிர்பார்ர்ப்பை ஏற்றியுள்ளது! (அப்பாடா, தமிழ்மணத்தில் இந்த பதிவிற்கு வைத்த ரஜினி தலைப்பை ஜஸ்டிஃபை செய்தாயிற்று!).

அதே போல தற்போது நடைபெற்று வரும் ஈரோடு புத்தக கண்காட்சியிலும் தமிழ் காமிக்ஸ் இதழ்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன, விபரங்களுக்கு நண்பர் ஸ்டாலினின் பதிவைப் பாருங்கள்! - அங்கு செல்ல நேரும் - காமிக்ஸ்க்கு அறிமுகம் இல்லாத நண்பர்கள், கீழ் கண்ட இதழ்களை வாங்கப் பரிந்துரைக்கிறேன் (சுட்டிகளை அமுக்கி புத்தக விமர்சனங்களை படியுங்கள்):

அப்புறம் வழக்கமான ப்ளேட்பீடியா ப்ரொகிரஸ் ரிப்போர்டை பார்க்கும் முன்னர் ஒரு சின்ன கம்மர்கட்டு பிரேக்:

ப்ளேட்பீடியாவில் நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய (ஜூலை மாத) பதிவுகள்:

  • தமிழ்மணத்தில் 226-வது இடத்திற்கு முன்னேறியதும், கடந்த இரு வாரங்களுக்கு முன் அவர்களின் டாப் 3 லிஸ்டில் இடம் பெற்றதும் மகிழ்ச்சி அளிக்கிறது!
  • அலெக்ஸா இந்திய வலைதள தரவரிசையில் 50000-குள் இடத்தை பெற்று விட்டது!
  • காமிக்ஸ் என்றால் என்ன என்றே தெரியாமல் ஒரு கும்பல் தமிழ் நாட்டில் சுற்றுவதை எண்ணி கவலையாக இருக்கிறது! (வலது பக்கம் பார்க்க!)






  • காமிக்ஸ் பற்றிய பதிவுகள் இப்போது நிறைய பேரைப் போய்ச் சேருவது மகிழ்ச்சியளிக்கிறது!
  • ஏற்கனவே சொன்னதைப் போல IRCTC பதிவும், சினிமா பதிவுகளும் சக்கை போடு போடுகின்றன!
  • முதன் முறையாக நான் இட்ட TOI குறித்த சமூக விழிப்புணர்ச்சிப்(!) பதிவிற்கு நல்ல வரவேற்பு!


சரி, ரொம்ப கடுப்பில் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன், அடுத்த மாதம் பார்ப்போம்!







Bangalore Comic Con Express 2012 / Lion Comics / Muthu Comics / Thigil Comics / Tamil Comics / Rajinikanth / © www.bladepedia.com

கருத்துகள்

  1. உங்கள் தளத்தை பற்றிய நல்லதொரு தொகுப்பு...
    வாழ்த்துக்கள்...

    (த.ம. 2)

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு தொகுப்பாளன் நண்பா நீ..

    பெரியளவில் எனது பதிவுலக நண்பர்கள் முன்னேறி வருவது மிக்க மகிழ்ச்சி நண்பா.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஸ்டைல கலக்கிறீங்க வாழ்த்துக்கள்..

    //இப்படி, நான் கேட்டுக் கொள்ளாமலேயே அனைவரும் ப்ளேட்பீடியாவை பிரபலப்படுத்தும் முயற்சியில் இறங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்//

    யோவ் இந்த குசும்புக்கும் மட்டும் உனக்கு குறைச்சல் இல்லையா....

    பதிலளிநீக்கு
  3. அலேக்சாவில் சீக்கிரத்தில் லட்சத்துக்கு கீழ் வந்து லட்சியத்தை அடைய வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. சரி சரி ... அப்டேட் ஆகிட்டோம். :)

    அசுர வளர்ச்சி நண்பா ... இன்னும் வளர்ந்து முழு தமிழ் பதிவுலகத்தையும் அறுக்க வாழ்த்துக்கள். நமக்கெல்லாம் போனமாசம் 2500கூட தாண்டல. அவ்வ்வ் ... பட் ஐ டோண்ட் கேர். :) :)

    பதிலளிநீக்கு
  5. நல்ல தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  6. கருத்து சொன்ன அனைவருக்கும் ஒட்டு மொத்தமாய் ஒரு கும்புடு! :D

    பதிலளிநீக்கு
  7. //வாசக நண்பர்கள் ப்ளேட்பீடியாவை அடிக்கடி அறிமுகம் செய்து வருகிறார்கள்!//

    எல்லாம் "யாம் பெற்ற அறுவை பெருக இவ்வையகம்" என்ற உயரிய நோக்கம் தான்.

    //இப்படி, நான் கேட்டுக் கொள்ளாமலேயே அனைவரும் ப்ளேட்பீடியாவை பிரபலப்படுத்தும் முயற்சியில் இறங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்! //

    அதான் பிரபலம் ஆகிட்டீங்களே! இதுக்கு மேல செஞ்சா ப்ராப்ளம் ஆகிடும். (ச்சும்மா... ரைமிங்..)

    அலெக்சாவில் இன்னும் முன்னேறி நம்பர் ஒன் அடைய என் வாழ்த்துக்கள்!!!

    :D :D :D

    பதிலளிநீக்கு
  8. //ஏன் என்றால் என் வாய்க்குள் பல் டாக்டர் ப்ளேடு (ரம்பம்) போட்டு விட்டார்! இது எனது வளர்ச்சியைத் தடுக்க பதிவுலகம் செய்த சதி என்றே நினைக்கிறேன்!//

    எத்தனை பேருக்கு பிளேட் போட்டு இருக்கீங்க...
    ஒருத்தர் பிளேட் போட்டதைத் தாங்க முடியலையா? :D

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia