மழுங்கிய மனிதர்கள் - 3 - ஹலோ, ராங் நம்பர் ஹியர்!

ரொம்ப நாள் கழித்து 'மழுங்கிய மனிதர்கள்' தொடரில் சந்திக்கிறோம்! :) முதலில் குட்டியாக ஒரு உண்மைக் கதை!
*****
அரைத் தூக்கத்தில் மொபைலில் நேரம் பார்த்தேன், காலை ஆறு மணி - போர்வைக்குள் சுருண்டு படுத்தேன்! இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கலாம் என்று மனதில் நினைத்தவாறு தூங்கிப் போவதுதான் எவ்வளவு சுகமானது?!

'டிடி டின்டின்... டிடி டின்டின்.. டின்ன்ன்' - மொபைல் கதறியது! தூக்கம் தடை பட்ட எரிச்சலில் பச்சை பட்டனை அழுத்தி காதில் வைத்தேன்... 

ஹலோ?!
'ஹலோ, யாரு பேசறது?!' - எதிர்முனையில் அதட்டலான குரல் - கன்னடத்தில்...
உங்களுக்கு எந்த நம்பர் வேணும்?!
டொக்...
நாசமாகப் போக... - போனை வைத்து விட்டான்! மறுபடியும் போர்வைக்குள் தலையை இழுத்துக்கொண்டேன். தூங்கிப் போனே......... 'ன்'-னை சொல்லி முடிப்பதற்குள் போன் அடித்தது!

டிடி டின்டின்... டிடி டின்டின்.. டின்ன்ன்
ஹலோ?!
'ஹலோ, யாரு பேசறது?!' - அதே குரல், அதே தொனி!
நீங்க யாரு பேசறதுன்னு மொத சொல்லுங்க! நீங்கதானே போன் பண்ணது?
ம்ம்ம்.. என்னா? நீ யாரு பேசறது?
அவன் மரியாதையை குறைத்ததில் எரிச்சலாகி சிவப்பு பட்டனை அழுத்தினேன், தூக்கம் தொலைந்து போயிருந்தது!
'யாருங்க' - மனைவி
யாரோ ஒரு *^%$#@..

மறுபடியும், 'டிடி டின்டின்...' - மனைவி, குழந்தையின் தூக்கம் கலையக்கூடாது என்பதால் ஹாலுக்கு நகர்ந்தேன். எடுப்பதற்குள் துண்டித்தான், எரிச்சல் எகிறியது! மறுபடியும் போன் அடித்... பச்சை பட்டனை அமுக்குவதற்குள் மறுபடி துண்டித்தான்!
'*^%$#@' - போனையே வெறித்து பச்சை பட்டன் மேல் விரல் வைத்து தயாராக இருந்... - 'டிடி..' - எடுத்தேன்...

ஹலோ, யாரு நீ? ஏன் மிஸ்ட் கால் உடறே?
'மகா, நீ யாரு? பெரிய ஆளா நீ?' - கன்னடத்தில் எகிறினான்!
அறிவிருக்கா, நீதானே போன் பண்ணே - எந்த நம்பர் வேணும் உனக்கு?
'டொக்...' - கட் செய்து விட்டான்!
மறுபடி மூன்று மின்னல் வேக மிஸ்ட் கால்கள் அவனிடமிருந்து வந்தன...

'ம்ம்ஹூம்ம், இதற்கு மேல் போனை எடுத்தால் நான்தான் *^%$#@' - நானாக அவனுக்கு போன் செய்து வம்பை விலைக்கு வாங்க மனமில்லாததால், போனை சைலன்சில் போட்டு விட்டு பல் விளக்கினேன், காப்பி போட்டேன், குடிக்க சோபாவில் அமர்ந்து போனைப் பார்த்தால் 23 மிஸ்ட் கால்கள்! 'வேலையத்த *^%$#@'. அப்படியே சைலன்சில் வைத்து விட்டு பேப்பர் மேய்ந்து, குளித்து, மெயில்களை பார்த்து விட்டு நிமிர்ந்தால் மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது - அன்று காலையில் 8:30 மணிக்கு மேனேஜர் அழைப்பதாக சொல்லியிருந்தார்! 'ஷிட்... மறந்தே போச்சே!' - போனை நோக்கிப் பாய்ந்தேன் - நான்கு மிஸ்ட் கால்கள், இந்த தடவை மேனேஜரிடம் இருந்து! போன் செய்து, அசடு வழிய மன்னிப்பு கேட்டேன்! இந்த நாள், இனிய நாளாக மலர்ந்ததிற்கு காரணமான மிஸ்ட் கால் பார்ட்டியை அர்ச்சித்தவாறு ஆஃபிஸ் கிளம்ப ஆயத்தமானேன். நல்லவேளையாக அவனும் அதற்குப் பிறகு போன் செய்யவில்லை!

இரண்டு நாள் கழித்து, இருளினூடே ஒரு மர்ம உருவம் அந்த பப்ளிக் டெலிபோன் பூத்துக்குள் நுழைந்தது! மிஸ்ட் கால் விடும் அந்த நபரின் நம்பரை டயல் செய்து, '*^%$#@' என்று மனமார வாழ்த்தி விட்டு, திருப்தியுடன் 'டொக்' என்று போனை வைத்தது! தினம் ஒரு தடவையாவது, வெவ்வேறு மொழிகளில் இப்படி வாழ்த்த வேண்டும் என்ற தீர்மானத்துடன், இருளில் அந்த உருவம் கலந்து மறைந்தது! :)
*****
 நம்புங்கள், கடைசி பத்தி மட்டும் - கதையில் ஒரு முடிவு இருக்க வேண்டும் என்று சுவாரசியத்திற்காக சேர்த்தது! ;) மேலே சொன்ன சம்பவம் நடந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இருக்கும்! ஆனால் இன்று வரை, இந்த மாதிரியான அழைப்புக்கள் அசந்தர்ப்பமான வேளைகளில் அவ்வப்போது வந்து தொல்லை படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன! ஒவ்வொருவர் ஒவ்வொரு வகையில் டார்ச்சர் செய்வார்கள்! சில உதாரணங்களைப் பாருங்களேன்!:

- ஏய், உன் பேரு கோபால்தானே? ஒத்துக்கோ! ஒத்துக்கோ..!
- ஹலோ, சின்ராசு? மாமா வந்துட்டாராப்பா? வந்தார்னா ஒடனே போன் பண்ண சொல்லு.. சரியா? வச்சுருட்டா? - (நான் பதில் சொல்வதற்குள், டொக்...!)
- ஹலோ? - (நீண்............ட மௌனம், அப்புறம் டொக்!)
- ஹலோ... ஹலோ? ஹலோ! ஹலோ... ஹலோ? ஹலோ! (டேய், பர்ஸ்ட்டு  ஹலோ சொல்லறத நிறுத்திட்டு என்ன பேச வுடுடா!)

தவறுதலாக நமது எண்ணை டயல் செய்தவர்களை மன்னித்து விடலாம்!  ஆனால், இன்னார்தான் எதிராளி என்று தாங்களாக கற்பனை செய்து கொண்டு போனில் விடாமல் பேசுபவர்களையும், 'அது நான் இல்லை, ராங் நம்பர்' என்று சொன்னாலும் வீம்பாக வம்புக்கு வருபவர்களையும், குத்துமதிப்பாக ஏதாவது ஒரு நம்பரை டயல் செய்து மொக்கை போடுபவர்களையும், நூற்றுக்கணக்கில் மிஸ்ட் கால் கொடுப்பவர்களையும் என்ன செய்வது?! இப்போதெல்லாம் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் இப்படி தொல்லை கொடுப்பவர்களின் நம்பர்களை 'Blocked Callers' லிஸ்டில் போட்டு விட்டு என் வேலையை பார்க்கிறேன்! ஸ்மார்ட் போனில் இது ஒரு வசதி!
*****
ப்ளேட் அப்டேட்!
நான்கு மாதங்களுக்கு முன் ப்ளேட்பீடியாவை தமிழ்மணத்தில் இணைத்த போது கிட்டத்தட்ட 2000-ஆவது ரேங்க்! ஒருவழியாக இன்று தமிழ்மணத்தின் டாப் 101 லிஸ்டில் நுழைந்தாயிற்று ;) எந்த ஒரு தில்லுமுல்லும் செய்யாமல், கள்ள ஓட்டுக்கள் போடாமல் / வாங்காமல் - இந்த இடத்தை அடைந்தது மிக்க மகிழ்ச்சியை தருகிறது! :)

பதிவரின் பெயர் : ப்ளேட்பீடியா - காமிக்ஸ், காரம், காமெடி with கார்த்திக்!
தமிழ்மணத்தில் இணைக்கப்பட்ட நாள் : 2012-04-22
 

கருத்துகள்

  1. சூப்பர் தல வாழ்த்துக்கள் !. மேமேலும் வளர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. உங்க போன் கூட காமிக்ஸ் பெயர் மாதிரி அடிக்குதே "டின் டின், டின் டின்" ன்னு ;-)

    எனக்கும் இந்த மாதிரி ரெண்டு மூணு தடவை ஒரே நபர் போன் பண்ணிய அனுபவம் உண்டு. என் நண்பருடைய அனுபவம் தனி. என் நண்பருக்கு சலிக்காமல் கால் வரும் அவரும் , அவர் வெளிய போயிருக்கிறார், சந்தைக்கு போய் இருக்கார், கடைக்கு போய் இருக்கார் என்று கதை விட்டு கொண்டு இருப்பார். அவரிடம் கேட்ட போது, surrendar பண்ணிய போன் நம்பர் ஐ டெலிகாம் கம்பனிகள் மீண்டும் யாருக்காவது கொடுத்து விடும், வாங்கியவன் பாடு திண்டாட்டம் தான். போன் பண்ணுபவர்களிடம் கேட்டால் கூட கரெக்டான நம்பரை சொல்வார்கள். ஆனால் நான் அவர் இல்லை என்றால் உண்டு இல்லை என்று பண்ணி விடுவார்கள். அதனால் தான் அண்ணன் அங்க போயிருக்கார் இங்க போயிருக்கார் என்று கதை விட்டு கொண்டிருக்கிறேன் என்றார்.

    நல்ல வேலை இதுக்கு முன் இந்த நம்பரை வைத்துக்கொண்டிருந்த நபர் யாரிடமும் கடன் வாங்கிவிட்டு கொடுக்காமல் விட்டு விடவில்லை என்றது தான் ஹை லைட்.

    Blocked List என்று போட்டு விட்டால் நமக்கு அவர்களிடம் இருந்து போன் வந்தாலும் ரிங் டோன் கேட்காதா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உங்க போன் கூட காமிக்ஸ் பெயர் மாதிரி அடிக்குதே "டின் டின், டின் டின்" ன்னு ;-)//
      அது நான் முன்ன வச்சுருந்த நோக்கியா போனோட ஸ்டாண்டர்ட் டியூன் :)

      //Blocked List என்று போட்டு விட்டால் நமக்கு அவர்களிடம் இருந்து போன் வந்தாலும் ரிங் டோன் கேட்காதா ?//
      ஆமா! அவனுங்க டயல் பண்ணி சாவானுங்க! ;) நம்மளுக்கு எந்த தொந்தரவும் இருக்காது - App Market-ல இந்த மாதிரி நிறைய applications கிடைக்குது! :)

      நீக்கு
  3. இன்று கைபேசி வைத்திருக்கும் அனைவரும் கண்டிப்பாக ஒரு நாள் இந்த தொல்லைக்கு ஆளாகிருபர்கள்.
    நானும் விதிவிலக்கல்ல.கதையின் முடிவு நிஜமோ கற்பனையோ நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  4. '*^%$#@' // இது என்னான்னு தெரியலையே :-))))

    டாப் 101 லிஸ்டில் நுழைந்தாயிற்று ;) // வாழ்த்துகள். நூறை வீழ்த்தி முதல் இடம் பெற.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // '*^%$#@' // இது என்னான்னு தெரியலையே :-))))//
      அது தமிழில் இருக்கும் சிறந்த சொற்களின் தொகுப்பு! ;)

      //நூறை வீழ்த்தி முதல் இடம் பெற.//
      மிக்க நன்றி! அது கொஞ்சம் சந்தேகமே! :) ஆனால், அந்த இடத்தை Mr.வரலாறு சீக்கிரம் தொட்டுவிடுவார் போல! ;)

      நீக்கு
  5. நல்ல கதை...

    தமிழ்மணத்தில் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... நன்றி... (TM 2)

    கிளம்புங்கைய்யா... கிளம்புங்க...!

    பதிலளிநீக்கு
  6. //இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கலாம் என்று மனதில் நினைத்தவாறு தூங்கிப் போவதுதான் எவ்வளவு சுகமானது?!// Same Feeling. நான் தினமும் அனுபவிக்கிறேன் நண்பா :)

    //*^%$#@// - லக்கி லூக் உங்களை ரொம்ப பாதித்திருப்பது புரிகிறது :)

    //ஒருவழியாக இன்று தமிழ்மணத்தின் டாப் 101 லிஸ்டில் நுழைந்தாயிற்று ;)// Vazhthukkal nanbaa

    பதிலளிநீக்கு
  7. //லக்கி லூக் உங்களை ரொம்ப பாதித்திருப்பது புரிகிறது :)//
    உண்மைதான் லக்கி லூக் காமிக்ஸ்களில் மட்டுமல்ல, அனேக கார்டூன்களில் இப்படிதான் திட்டுவார்கள்! :)

    பதிலளிநீக்கு
  8. Iniesta,Andres - Fuentealbilla, Spain24 ஆகஸ்ட், 2012 அன்று PM 5:18

    El que l'infern Karthik

    Ho sento per tu

    Continueu amb les seves experiències

    பதிலளிநீக்கு
  9. வந்தாச்சு double digit.. இனி அடுத்த இலக்கு single digit :)

    வாழ்த்துக்கள் நண்பா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நன்றி! ஆனால் உங்களை மிஞ்ச முடியாது! ;) :)

      நீக்கு
  10. //
    ஏய், உன் பேரு கோபால்தானே? ஒத்துக்கோ! ஒத்துக்கோ..!
    //

    அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீண்டுவரலையா ஹா ஹா ஹா!

    பதிலளிநீக்கு
  11. தொல்லைகளை தவிர்க்க contacts-ல இல்லாத எண்களில் இருந்து அழைப்பு வந்தா பெரும்பாலும் எடுக்குறதில்லை! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி எல்லாம் பண்ணக் கூடாது! ;) முக்கியமான கால் மிஸ் ஆகிறப் போவுது!!!

      நீக்கு
  12. அதிகாலை தூக்கமே சுகம்தான் !
    எனகென்னவோ உங்களை பிடிக்காத யாரோ ஒருவர்தான் போன் பண்ணி இருப்பாருன்னு தோணுது

    பதிலளிநீக்கு
  13. ooops! வார விடுமுறை அன்று இந்த பதிவு வந்திருப்பதால் மிஸ் செய்துவிட்டேன்.!

    //இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கலாம் என்று மனதில் நினைத்தவாறு தூங்கிப் போவதுதான் எவ்வளவு சுகமானது?!//

    உண்மை தான் சகோ.! அதுவும் போனில் Snooze வசதியை கண்டுபிடித்தவனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்....!!!!

    :D :D :D

    பதிலளிநீக்கு
  14. தமிழ் காமிக்ஸ்களுக்கு என்றே எக்ஸ்குளுசிவ் பாரம். இப்போது பீட்டா வில்

    http://tamilcomicsjunction.forumotion.in/

    பதிலளிநீக்கு
  15. // நான்கு மாதங்களுக்கு முன் ப்ளேட்பீடியாவை தமிழ்மணத்தில் இணைத்த போது கிட்டத்தட்ட 2000-ஆவது ரேங்க்! ஒருவழியாக இன்று தமிழ்மணத்தின் டாப் 101 லிஸ்டில் நுழைந்தாயிற்று ;) எந்த ஒரு தில்லுமுல்லும் செய்யாமல், கள்ள ஓட்டுக்கள் போடாமல் / வாங்காமல் - இந்த இடத்தை அடைந்தது மிக்க மகிழ்ச்சியை தருகிறது! :) //

    மிக்க மகிழ்ச்சி நண்பரே
    தொடருங்கள் உங்கள் சேவைகளை காத்திருக்கிறோம் நாங்கள்
    அடுத்து டாப் 50க்குள் வர எங்களது வாழ்த்துக்கள் :))
    .

    பதிலளிநீக்கு
  16. // 'டிடி டின்டின்... டிடி டின்டின்.. டின்ன்ன்' - மொபைல் கதறியது! தூக்கம் தடை பட்ட எரிச்சலில் பச்சை பட்டனை அழுத்தி காதில் வைத்தேன்... //

    Your Mobile No Please............... ;-)

    காமிக் கான் பதிவு தினமும் வரலன்னா கூப்பிடத்தான் ( நாங்க காலை மன்னிக்கவும் அதிகாலை நான்கு மணிக்குதான் கூப்பிடுவோம் ) ;-)
    .

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia