காமிக் கான் எக்ஸ்பிரஸ் 2012 கண்காட்சி, பெங்களூர் - ஒரு அறிமுகம்!

Comic Con India Express 2012 மாநாடு - பெங்களூரில் நாளை (8, Sep 2012) காலை பதினோரு மணி அளவில் கோரமங்களா உள்ளரங்கத்தில் தொடங்குகிறது! Comic Con India (The Indian Comics Convention) என்பது ஒரு தனியார் அமைப்பாகும்! இந்த அமைப்பின் முக்கிய நோக்கம், காமிக்ஸ், கிராபிக் நாவல், அனிமேஷன் படங்கள் போன்ற சித்திர வடிவிலான ஊடங்கங்களை பிரபலப்படுத்துவதாகும்! இத்துறை சார்ந்த படைப்பாளிகளை ஊக்குவிக்கும் நோக்கிலும் இவ்வமைப்பு செயல்படுகிறது! அதற்காக, இது ஒரு லாப நோக்கமற்ற அமைப்பு என தவறாக எண்ணிவிட வேண்டாம்! இந்திய அளவில், சித்திரத்துறை விற்பன்னர்களை ஒரு குடையின் கீழ் ஆண்டுக்கு ஓரிரு தடவையாவது ஒருங்கிணைக்கும் பாராட்டுக்குரிய, வணிகரீதியிலான முயற்சியே இது!

இதனை செயல்படுத்தும் விதத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லியில் ஒரு கண்காட்சி (மாநாடு என்று சொல்வதை விட  இது பொருத்தமாக இருக்கிறது!) இவ்வமைப்பினரால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது! அது பற்றிய ரஃபிக்கின் ஆங்கிலப் பதிவை இங்கே காணலாம்! அமர் சித்திர கதா, விமானிகா, டைமண்ட் காமிக்ஸ், லெவல் 10 போன்ற 'இந்தி'ய அளவில் பெயரெடுத்த படா படா பதிப்பகங்கள் இந்நிகழ்வில் பங்கேற்றன! அதன் வெற்றியைத் தொடர்ந்து இவ்வருடமும் பிப்ரவரி மாதம் 2வது Comic Con கண்காட்சி டெல்லியில் அட்டகாசமாக நடைபெற்றது! அடுத்த வருடமும் அதே பிப்ரவரியில், அதே டெல்லியில் நடைபெறும்!

"ஏதோ நேர்ல போய் பார்த்தா மாதிரியே கதை உடறியே, அந்த விக்கி பேஜை மூடிட்டு பதிவெழுத உனக்கு தில்லு இருக்கா?!"

என்றெல்லாம் யாரும் என்னை கேள்வி கேட்டு விடக் கூடாது என்று எண்ணிய Comic Con அமைப்பினர், டில்லியில் நடைபெற்ற கண்காட்சிகளின் வெற்றியின் எதிரொலியாக "Comic Con Express" என்ற மினி கண்காட்சியை பெங்களூரில் நாளை தொடங்குகின்றனர்! அவர்களுக்கு என் நெஞ்சு கசிந்த நன்றிகள்! :D Express கண்காட்சிகள் இனி வருடா வருடம் டெல்லி தவிர்த்த முக்கிய இந்திய நகரங்கள் ஏதாவது ஒன்றில் நடைபெறும் - அடுத்தது சென்னையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

இதில் தமிழனாக நாம் பெருமைப்படக் கூடிய சங்கதி என்னவென்றால், முதன் முறையாக தமிழ் காமிக்ஸ் பதிப்பகம் ஒன்று (இருப்பதே ஒன்றுதானே?!) இவ்விழாவில் கலந்து கொள்கிறது! ப்ளேட்பீடியாவை தொடர்ந்து வாசிப்பவராய் இருந்தால் சரியாக கணித்திருப்பீர்கள் - அது எடிட்டர் திரு.விஜயன் அவர்களின் பிரகாஷ் பப்ளிஷர்ஸேதான்! :) அது மட்டுமல்ல, தமிழில் நான் அறிந்த வரையில் முதன் முறையாக ஒரு (வண்ண) கிராபிக் நாவலை திரு. விஜயன் அவர்கள் நாளை வெளியிடுகிறார்! Wild West Special என பிரபல அரசியல் பதிவர் ஒருவரால் நாமகரணம் சூட்டப்பட்ட இந்த இதழ் இன்று முதல் விற்பனைக்கு கிடைக்கும் - விலை நூறு ரூபாய் மட்டுமே!. பெங்களூரில் இருப்பவர்கள் ஸ்டால் எண் B-17 இல் வாங்கலாம்! பெங்களூர் வர இயலாதவர்கள், Ebay மூலம் வாங்கிக் கொள்ளலாம்!

Stall B17 Location Map

Hands Up, Books Down!

இவ்விதழில் மேற்சொன்ன கௌபாய் கிராபிக் நாவலை தவிர்த்து, லெஃப்டினன்ட் ஸ்ட்ராபெர்ரியின் கதையும் இணைந்து வருகிறது! தமிழ் கூறும் நல்லுலகில் 'கேப்டன் டைகர்' என்று அன்பொழுக அழைக்கப்படும் இவரின் காமிக்ஸைப் படிக்க 'தேதிமுகா' வெறியர்கள் (தேறாத, திருந்தாத, முழுநேர காமிக்ஸ் வெறியர்கள்) கொலைவெறியோடு கோரமங்களா உள்ளரங்கில் இன்றிலிருந்தே உலவுவதாக பட்சிகள் சொல்கின்றன! இதைத் தவிர பல பிரபல வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு காமிக்ஸ் படைப்புகள் இங்கே விற்பனைக்கு கிடைக்கும்! அதிக அளவில் ஆங்கில காமிக்ஸ் மட்டுமே கிடைக்கும் என நினைக்கிறேன்! :)

நீங்கள் பெங்களூரில் அல்லது அதற்கு அருகாமையில் வசிப்பவராய் இருக்கும் பட்சத்தில் இக்கண்காட்சியை தவறவிடாதீர்கள்! குட்டீஸ்களுக்கும் ரொம்ப பிடிக்கும், பெரியவர்களும் குட்டீஸ்களை ரசிக்கலாம் (உங்கள் கற்பனை தறி கெட்டு ஓடினால் நான் பொறுப்பல்ல!). உண்மையில், இக்கண்காட்சியில் அடல்ட்ஸ்க்கான காமிக்ஸூகளும் கிடைக்கும். எனவே வழக்கம் போல, காமிக்ஸ் என்றாலே குட்டீஸ் சமாசாரம் என்று தவறாக முடிவெடுத்து வராமலிருக்க வேண்டாம்! தவிர, வீடியோ கேம்ஸ் மற்றும் திரைத்துறை சார்ந்த ஸ்டால்களும் இருக்கும் எனத் தெரிகிறது! அப்புறம் அட்டகாசமான சில மெர்ச்சன்டைஸ்களும் இங்கு மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்! உதாரணத்திற்கு இடது பக்கத்தில் உள்ள 'அண்ணா' டி-ஷர்ட்!

இரண்டு நாட்கள் நடைபெறவிருக்கும் இக்கண்காட்சியில் நாளை நிச்சயம் கலந்து கொள்வேன்! ஞாயிறு அன்று செல்ல முடியுமா எனத் தெரியவில்லை! இரண்டரை வயது வாண்டையும், மனைவியையும் வீட்டில் தனியே விட்டு வார இறுதி முழுதும் ஊர் சுற்றினால் புரட்சிதான் வெடிக்கும்! :) முடிந்த வரை Comic Con கண்காட்சி குறித்த விவரங்களை, படங்களோடு பதிவிடுவேன்! என்னை விட மூத்த மற்றும் முதிய பதிவர்களும் நாளை விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப் படுவதால், நாளை பதிவுகள் களை கட்டும் என நினைக்கிறேன்! விஜயன் அவர்களும் ஒரு பதிவர்தான் என்பதை நாம் இங்கே நினைவு கூற வேண்டும்! ;)

ஒரு எக்ஸ்க்ளூசிவ் வதந்தி - தற்போது விருப்ப ஓய்வில் இருக்கும் ஒரு பழம் பெரும் பதிவர், தனது வலைத்தளத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளதாக பேஸ்புக் வட்டாரங்கள் அலறுகின்றன! அன்னார் (அண்ணா அல்ல!) தமிழில் எழுதினால் தமிழ்நாட்டில் பலரையும் சென்றடையலாம் என்பது என் கருத்து!

அப்புறம் முகம் தெரியாத பல காமிக்ஸ் வாசகர்களையும், பதிவர்களையும் நாளை சந்திக்கும் வாய்ப்பு இருக்கும் என நினைக்கிறேன் - என்னிடம் பழைய காமிக்ஸூகள் ஏதும் விற்பனைக்கோ, மாற்றுக்கோ இல்லை என்பதை அவர்களுக்கு அட்வான்சாக தெரிவித்துக் கொள்கிறேன்! ;) இருந்தாலும் யாராவது பழைய காமிக்ஸ் விற்க நினைக்கும் பட்சத்தில் இரு கரம் நீட்டி குறைந்த விலையில் வாங்க சித்தமாகவே இருக்கிறேன்! :D

திரு. விஜயன் அவர்களையும் சந்திக்க விருப்பம் இருக்கிறது - நான் அவர் வலைப்பூவில் இப்போது செய்யும் விமர்சன அலப்பரையிலும், முன்னொரு காலத்தில் என் தளத்திற்கு கண்ணிவெடி லின்க்குகள் வைத்து வெறுப்பேற்றியதிலும் - என் மேல் லைட்டாக(!) கடுப்புடன் இருப்பார் என்பதை நினைத்தால்தான் அடிவயிறு கலங்குகிறது! ;) இந்த அழகில் சில குசும்பு பிடித்த வாசகர்கள் அவரை வீடியோ பேட்டி வேறு எடுக்க சொல்கிறார்கள்!!! :) :) :) சரி ஓவராய் மொக்கை போட்டாகி விட்டது, இன்று போய் நாளை வாருங்கள்!


காமிக் கான் பற்றிய முழு பதிவுத் தொகுப்பை இங்கு காணலாம்:
Comic Con Express 2012 @ Bangalore

கருத்துகள்

  1. விருப்ப ஓய்வில் இருந்து வேளே வருபவர் ரபிக் கா?

    பதிலளிநீக்கு
  2. //என்னிடம் பழைய காமிக்ஸூகள் ஏதும் விற்பனைக்கோ, மாற்றுக்கோ இல்லை என்பதை அவர்களுக்கு அட்வான்சாக தெரிவித்துக் கொள்கிறேன்! ;) //

    கார்த்திக் சொமலிங்காவா? யாருப்பா அது கேட்ட பேரா இருக்கே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்ட பெயர் இல்லை! வம்பு பண்ணா ரொம்ப கெட்ட பெயர்! ;)

      சொ இல்லை சோ! :D

      நீக்கு
    2. //சொ இல்லை சோ! :D//

      சாரி typo error

      நீக்கு
  3. PADITHU VITTEN KANNI VEDI (KANDIPPA KAVANIPPU IRUKKU), MUTHIYA PATHUVAR (?), ANNAA MATTER SUPER

    பதிலளிநீக்கு
  4. //Nalai
    WILD WEST
    vimarsanam
    ethir parkkalama...

    //

    நாங்க உசுப்பேத்தி விட்டதுக்காக ரூ 100 செலவு செய்யப் போகும் பிரபல (?) பதிவர் :D

    பதிலளிநீக்கு
  5. //Nalai
    WILD WEST
    vimarsanam
    ethir parkkalama...

    //

    இது என்ன கேள்வி நிச்சயமா எதிர்பார்க்கலாம் . அவரே கடைசி வரியில் "இன்று போய் நாளை வாருங்கள்! " என்று சொல்லி இருக்கிறாரே

    பதிலளிநீக்கு
  6. தள(ல) ஓனர் சும்மா இருக்கும் போது நீ ஆடதடா ராஜ் குமார் அடங்கு

    பதிலளிநீக்கு
  7. //லெஃப்டினன்ட் ஸ்ட்ராபெர்ரியின் கதையும் இணைந்து வருகிறது//

    ஸ்ட்ராபெர்ரியா ப்ளூபெர்ரியா?

    கண்ணதாசா எசுதாசா? பாவாம் பாசே கன்பிஸ் ஆயிட்டாரு

    பதிலளிநீக்கு
  8. முன்னோட்டமே இந்த போடு போடுதே ................................விழா பற்றிய உங்கள் நீண்ட தொகுப்புக்காக ஆவலாய் காத்திருக்கிறேன்...................ஆசிரியரை சந்திக்க வாழ்த்துக்கள் ,ஆல் தி பெஸ்ட் ..........அற்புதமான அந்த பதிவரை எதிர் பார்க்கிறேன் நானும் ...............யாரு ? எனக்கு மட்டும் ரகசியமாய் சொல்லுங்களேன் ..............

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியே லைட்டா காதைக் கொடுங்க! ..... அவர்தான், புரியுதா?! :D

      நீக்கு
    2. என்னையும் மதிச்சு சொன்னதுக்கு நன்றி நண்பரே ,ஆனா யாரு கிட்டேயும் சொல்ல மாட்டேன்.............நன்றி

      நீக்கு
  9. கண்டிப்பா அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோ போடுங்க ஜி

    பதிலளிநீக்கு
  10. முன்னோட்டம் நன்றாக உள்ளது.
    அது என்னுடைய ஆசை மட்டும் அல்ல காமிக்ஸ் விரும்பிகள் அனைவரின் ஆசை நண்பரே.
    கண்டிப்பாக உங்களது புகைப்பட பதிவே சுவாரசியமாக தான் இருக்கும்.
    ஆவலுடன் எதிர்பார்க்கும்....
    தொண்டர்களில் ஒருவன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! உங்களை சும்மா கலாய்த்தேன், தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம் கிருஷ்ணா! நாம் தொண்டர்கள் அல்ல, வாசகர்கள்! :)

      நீக்கு
    2. தலைவரே நாங்கள் உங்களை தொடரும் தொண்டர்கள் என்று கூறினேன்.

      நீக்கு
    3. இது இன்னமும் ரொம்ப மோசம் போங்க!!! நாம் பதிவுலக காமிக்ஸ் வாசக நண்பர்கள் அவ்வளவே!!! நீங்களும் வந்திருக்கலாமே, சென்னை பக்கம்தானே?

      நீக்கு
    4. வந்திருக்கலாம் நண்பரே.
      ஆனால் இந்த வாரம் week end shift வந்துவிட்டது.
      சப்போர்ட் இல் இருந்தால் இப்படி தான் என்ன செய்வது.

      நீக்கு
    5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    6. மற்றும் ஒரு தகவல் வேறு திரைப்படமே இல்லாமல் இன்று இரவு முகமூடி போகிறேன்.
      பார்த்துவிட்டு கருத்து கூறுகிறேன்.

      நீக்கு
    7. //சப்போர்ட் இல் இருந்தால் இப்படி தான் என்ன செய்வது.//
      ஹ்ம்ம்! புரிகிறது!

      //முகமூடி போகிறேன்//
      உங்கள் விமர்சனத்தை எதிர் பார்க்கிறேன்! :)

      நீக்கு
  11. பதிவு போட்டு 20 நிமிஷத்துல 31 கமெண்ட்டு... அனைத்து வலையுலக நண்பர்களும் இங்குதான் இருக்கிறார்கள் போல..

    கேப்டன் ஸ்ட்ராபெர்ரி என்று கிண்டல் செய்யப்பட்ட கேப்டன் டைகரின் பரம ரசிக மன்றத்தின் ஒரு உறுப்பினர் என்றவகையில் என் எதிர்ப்பைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் F5 key மேல் ஒரு பெரிய புத்தகத்தையும் அழுத்திவைத்து இந்த ப்ளாக்கை யாரும் படிக்காத வண்ணம் பெரும் போராட்டம் நடத்தப்படும் என உளமார உறுதியாக கூறுகிறேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட நீங்க வேற - அதுல பாதிக்கு மேல என் கமெண்டுதான்! :)

      வேணும்னா கடலைப் பொரின்னு மாத்திருவோம் ;) மொத எடிட்டர்கிட்ட ஒரிஜினல் பெயருக்கு மாற்ற சொல்லி போராட்டம் பண்ணுங்க! ;)

      நீக்கு
  12. லயன் கம்பேக் ஸ்பெஷல் வெளியீடை என் e71 வீடியோ எடுத்தேன். எடுத்தபடத்தையும் என் ப்ளாகில் பதிவிட்டேன். அதனால் நாளை எடிட்டர் போட்டோ இல்லாமல் பதிவிட்டால்.. மற்றுமொரு F5 போராட்டம் நடத்தப்படும் என்று எச்சி... சீ.. எச்சரிக்கிறேன்....

    பதிலளிநீக்கு
  13. டிஸ்கவுண்டில் புத்தகங்கள் விற்கப்படுகிறதா (ஆங்கிலக் காமிக்ஸ்கள்) என்ற தகவலையும் நாளை பதிவில் எழுதுங்கள்

    (இதப் போடுங்க.. அதப் போடுங்கன்னு நச்சரிக்கிறத்துக்கு பேசாம நாளை பெண்களூர் வந்துவிட்டு போய்டலாம் இல்ல என்று மனதில் நீங்கள் நினைப்பது டெலிபதியின் மூலம் தெரிகிறது)

    பதிலளிநீக்கு
  14. //இருந்தாலும் யாராவது பழைய காமிக்ஸ் விற்க நினைக்கும் பட்சத்தில் இரு கரம் நீட்டி குறைந்த விலையில் வாங்க சித்தமாகவே இருக்கிறேன்! :D//
    என்ன பெருந்தன்மை......
    பதிவுல நல்லா கலக்குறீங்க....




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) நடுநிசியில் பின்னூட்டம் இட்டதிற்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்! :)

      நீக்கு
    2. நமக்கு இப்பத்தானே விடிஞ்சிருக்கு.....

      நீக்கு
  15. கண்கொள்ளாக்காட்சியாக அமையட்டும்.......... (தூங்கிடாதீங்க விடிய்ம் வரை அப்படியே முழிச்சிருங்க...அப்புறமா இரவுவரை தூங்கிடலாம்)

    பதிலளிநீக்கு
  16. அவ்வ்வ்வ்வ்வ் எவ்வளோ பின்னால வந்துட்டேன்! :)

    இருந்தாலும் கருத்து போடாம இருக்க முடியுமா.. போட்டுட்டேன் ஹி ஹி! :)

    பதிலளிநீக்கு
  17. நண்பரே நமது COMICON அனுபவம் பற்றிய உங்கள் கருத்துக்கள் மற்றும் புகை படங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் :))
    .

    பதிலளிநீக்கு
  18. தாமதமானால் நமது கோவை ஸ்டீல் கிளாவை அனுப்பவேண்டி இருக்கும் ( ஷாக் கொடுக்கத்தான் ) ;-)
    .

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia