சயன நேர சாகசக் கதைகள்!

'பெட் டைம் ஸ்டோரிஸ்' என்பதன் சுமாரான மொழிபெயர்ப்புதான் இப்பதிவின் தலைப்பாக இருப்பது! வேறு எதையாவது எதிர்பார்த்து படிக்க வந்தவர்களுக்கு என் ஆழ்ந்த apologies! :) என் மூன்றரை வயது மகன், பொதுவாக மொபைல் போனில் விளையாட ஆர்வம் காட்டுவானே தவிர கதை சொன்னால் கேட்கமாட்டான் (மொபைல் போன் பிரச்சினையைப் பற்றி பிறகு எழுதுகிறேன்!). ஆனால், சமீப காலமாகத்தான் கதை கேட்பதிலும் சற்று ஆர்வம் காட்டுகிறான்! சில நாட்களுக்கு முன்னர் எதற்காகவோ என் மனைவி அவனை கோபத்துடன் திட்டிவிட, அலறிக் கொண்டே என்னிடம் ஓடி வந்தான்.

அழாதடா...

அம்மா அடிக்கிறா! :( :( :(

அவ அடிக்க மாட்டாளே?! நீ என்ன பண்ணே?

நான் ஒண்ணும் பண்ணல..

சரி அழாத... லல்லுக்கு என்ன வேணும் சொல்லு?


ம்... ம்... எனக்கு பூனை ஸ்டோரி வேணும்...

ஒரு காட்டுல ஒரு பூனை இருந்துச்சாம்... கண்ணைத் தொடைச்சுக்கோ! என்ன கலர் பூனை வேணும் உனக்கு?

ம்ம்ம்... பிங்க் கலர்ர்ர்ர்....

சரி, ஒரு காட்டுல ஒரு பிங்க் கலர் பூனை இருந்துச்சாம்! அதுக்கு என்ன பேரு வைக்கலாம்?!

ம்ம்ம்... பப்பூபூபூ!

ஒரு நாள் பப்பு காட்டுக்குள்ள ரொம்ப தூரம் போயிடுச்சாம்! அப்ப ஒரு லயன் வந்துச்சாம்! என்ன வந்துச்சாம்?

லயன்ன்ன்..... ர்ர்ர்ர்ரோர்

ஆமா...! அந்த லயன் பப்புவைப் பார்த்து, '
ஏய் பப்பு... நான் உன்னை சாப்புடப் போறேன்'னு மிரட்டிச்சாம்! பப்பு ரொம்ப பயந்து போய் உடனே லல்லுவுக்கு போன் போட்டுச்சாம்:
லல்லு.. லல்லு... லயன்கிட்ட இருந்து என்னக் காப்பாத்து! ப்ளீஸ்.. சீக்கிரம் வா!

நீ எங்கே இருக்கே?

ஃபாரஸ்ட்ல!

இரு நான் ஒடனே என் போலிஸ் கார்ல வர்றேன்!

லல்லுவுக்கு என்ன கலர் பிடிக்கும்?

ம்ம்ம்... பிங்க் கலர்ர்ர்ர்....

யா...! பிங்க் கலர் போலிஸ் கார்ல, சைரன் ஆன் பண்ணிகிட்டு லல்லு பாரஸ்ட்டுக்குப் போனானாம்!


வொய்ங்... வொய்ங்... வொய்ங்...
விர்ர்ரர்ர்ர்ர்....
கிரீச்ச்ச்....

ஏய், லயன்ன்ன்.... ஹேண்ட்ஸ் அப்ப்ப்!

ஹீ... ஹீ....

ஏண்டா லல்லு சிரிக்கிறே?

லயனுக்கு ஹேண்ட்ஸ் இல்லையே? ஃபோர் லெக்ஸ் தான இருக்கும்?


ஏய், லயன்ன்ன்.... லெக்ஸ் அப்ப்ப்!

டேய்... லல்லு! இங்க வந்து வீணா பிரச்சினை பண்ணாதடா, ஓடிரு!

நோ, என் பப்புக்குட்டி பூனையை விட்டுரு!

மாட்டேன், உங்க ரெண்டு பேரையும் நான் சாப்பிடப் போறேன்...

உடனே, லல்லுவுக்கு கோபம் வந்து ஸ்டிக் எடுத்து, லயனோட பம்மிலேயே நாலு போடு போட்டானாம்!


அய்யோ, லல்லு! அடிக்காத விட்டுரு, விட்டுரு!

அப்போ ஓடிப் போ இங்க இருந்து.. ஓடு... ஓடு!

இதோ போறேன்! இதோ போறேன்!

மியாவ்... மொயாவ்... மொவ்...

அப்படின்னு பப்புப் பூனை, லல்லுவோட காலைச் ஹேப்பியா சுத்திச் சுத்தி வந்துச்சாம்!


லல்லு இஸ் மை ஹீரோ... லல்லு இஸ் மை ஹீரோ!

அப்படின்னு சொல்லி சொல்லி கத்திச்சாம்! அப்புறம் லல்லு, பப்புவை தூக்கி கார்ல வச்சுகிட்டு வேகமாக வீட்டுக்குப் போயிட்டானாம்!


வொய்ங்... வொய்ங்... வொய்ங்...

அவ்ளோதான், ஸ்டோரி ஓவர்! ஹூ இஸ் த ஹீரோ?!

லல்லூலூலூ!!!

ஹீரோன்னா என்னன்னு தெரியுமா?

லல்லுவுக்கு தெரியலிலேயே :(

லிட்டில் கிருஷ்ணா, அவன் பிரண்ட்ஸை காப்பாத்துனான் இல்ல அதனால லிட்டில் கிருஷ்ணா ஒரு ஹீரோ! ஸ்பைடர்மேன், ஸ்கூல் கிட்ஸை காப்பாத்துனார் இல்ல, அதனால அவர் ஒரு ஹீரோ! நீ பப்பு பூனையை காப்பாத்துனதால நீயும் ஒரு ஹீரோ! இப்ப சொல்லு யாரெல்லாம் ஹீரோ?!

லிட்டில் கிருஷ்ணா, ஸ்பைடர்மேன், பேட்மேன், அயர்ன்மேன், சூப்பர்மேன்...

என்னடா ஒரே மேன் மேனா சொல்றே?! :)

ஹி ஹி ஹி....

லல்லுவும் ஒரு ஹீரோதான் சரியா? நவ் டெல் மீ, ஹூ இஸ் த ஹீரோ?!

லல்லு இஸ் அ ஹீரோ, அப்பா இஸ் அ ஹீரோ!

ஏன்டா?!

நீ அம்மாகிட்ட இருந்து என்னை காப்பாத்துன இல்ல? அதனால தான்!!!

!!!
 

எக்ஸ்ட்ரா பிட் (கற்பனை): 
'ஒன்னை நான் காப்பாத்திட்டேன்; ஒன் அம்மாட்ட இருந்து என்னை யாருப்பா காப்பாத்தறதூ...ஊஊஊ...' என்று சிவாஜி ஸ்டைலில் கேட்க நினைத்து பிறகு தவிர்த்து விட்டேன்! :)
 
பின்குறிப்பு 1x1:
என்ன காரணமோ தெரியவில்லை, இந்த கால ஆண் குழந்தைகள் பலருக்கும் பெண்களுக்கு பிடித்தமான நிறம் என்று கருதப்படும் பிங்க் நிறமே பிடிக்கிறது! பொதுவாகவே என் மகன் ஒரு கார் பைத்தியம், அதிலும் சைரன் வைத்த வாகனங்கள் என்றால் மிகவும் பிடிக்கும்! சிங்கம்-II பார்த்ததில் இருந்து போலிஸ் என்றாலும் பிடிக்கிறது என்பது உபரித் தகவல்! :) அதே போல அவனுக்கு பூனைகள் மீதும் பிரியம் அதிகம்! தினம் இரவு, பூனைக் கதை கேட்டு தொல்லை பண்ணுகிறான்.

அப்பா ஸ்டோரி போடு!

என்ன ஸ்டோரி வேணும் லல்லுக்கு?

பூனை ஸ்டோரி!

ஒரு ஜங்கிள் ல ஒரு பிங்க் கலர் பூனை இருந்துச்சாம்!

எனக்கு ஜங்கிள் ஸ்டோரி வேணாம்...

சரி, ஒரு நாள் பூனை போட் எடுத்துகிட்டு கடலுக்குள்ள போச்சாம். அப்ப ஒரு ஷார்க் வந்து, பூனையைப் பார்த்து, '
ஏய்... நான் உன்னை சாப்புடப் போறேன்'னு மிரட்டிச்சாம்! பூனை உடனே லல்லுவுக்கு போன் போட்டு, 'லல்லு.. லல்லு... ஷார்க்கிட்ட இருந்து என்னக் காப்பாத்து! ப்ளீஸ்.. சீக்கிரம் வா'ன்னு சொல்லிச்சாம்! லல்லு உடனே போலிஸ் ஹெலிகாப்டர்ல பறந்து போனானாம்! 
...
டக... டக... டக... ரட்... ரட்... ரட்... 
...
ஏய், ஷார்க்... ஹேண்ட்ஸ் அப்ப்ப்!
...
...
அன்றிலிருந்து அவனை தூங்க வைக்க இதே மொக்கைக் கதையை நானும் லைட்டாக மாற்றி மாற்றி, கைகளை ஆட்டி ஆட்டி நாடக பாணியில் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன்! ஒவ்வொரு முறையும் ஏதோ புதிய கதையைக் கேட்பது போல என் மகனும் ஆர்வமாக கேட்டுக் கொண்டுதான் இருக்கிறான்! 'லல்லு இஸ் அ ஹீரோ' என்று முடிக்கும் போதெல்லாம் கண்கள் நிறைய கனவுகளுடன், சிரித்துக் கொண்டே தூங்கப் போகிறான்! தட்ஸ் ஆல் ஃபோல்க்ஸ்! :) 

பின்குறிப்பு 2x500:
இதுவரை சினிமா தவிர்த்த பதிவுகள், ஒரே நாளில் 1000 பார்வைகளைத் தாண்டியதில்லை! கடந்த பதிவான "மதுரை (அ)சம்பவம் - சில பயணக் குறிப்புகள்!" - அந்த மைல்கல்லை ஒரே நாளில் தொட்டிருக்கிறது! மிக்க நன்றி நண்பர்களே!!!
Image Credits: Pink Cat & Pink Jeep!

கருத்துகள்

  1. //நீ அம்மாகிட்ட இருந்து என்னை காப்பாத்துன இல்ல? அதனால தான்!!!// ஹா ஹா ஹா செம செம ... உங்க பையன் தான் ஹீரோ நீங்க எப்போதுமே காமெடியன் தான் :-)))))))))) அதான் காமெடி கும்மில இருக்கீங்க :-))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹீ ஹீ ஹீ! காமெடி கும்மில இருந்தும், இதுவரை என்னை யாரும் கும்மினது இல்லைங்கறதே ஒரு பெரிய காமெடி தான் இல்லியா?! உங்களைத்தான் போட்டு வறுத்து எடுத்துட்டாங்களே! ;)

      நீக்கு
  2. எப்படியோ ஒரு "கில்மா"-வான தலைப்பைக் கொடுத்து, இங்கே ஆர்வத்துடன் வரவழைத்து விட்டீர்கள் ;)

    கதை நல்லாவே இருக்கு...

    என் பெரிய பையனுக்கும் முதலில் pink வண்ணம் தான் பிடிக்கும், இப்போதுதான் கொஞ்சம் மாறி மஞ்சளுக்கு வந்திருக்கான் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னே, "குழந்தைக்கு சொன்ன பூனைக் கதை" அப்படின்னு பெயர் வச்சா எட்டியாவது பார்த்திருப்பீங்களா நீங்க எல்லாம்?! ;)

      //கதை நல்லாவே இருக்கு...//
      'கதை நல்லாவே இல்ல' அப்படின்னு கேள்விப் பட்டிருக்கேன்! அது என்ன நல்லாவே இருக்கு?! :D

      நான் பார்த்த வரைக்கும் என் பையனோட பிரண்ட்ஸ் எல்லாருக்கும் பிங்க் பிடிக்குது! கொஞ்சம் வளர்ந்தா மாறுமோ என்னமோ?! :)

      நீக்கு
  3. இது என்னய்யா தலைப்பு ... :-) பண்போட தலைப்பு வைங்கப்பா .. அப்புறம் சில பேரு சண்டைக்கி வருவாங்க :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'சயன நேர சபலக் கதைகள்'னு நினைச்சு உள்ள வந்துட்டீங்களாக்கும்! ;) என்ன பண்றது, இப்படி எல்லாம் தலைப்பு (காதுல பூ) வச்சாத்தானே பயபுள்ளைக படிக்கறாங்க! :D

      நீக்கு
    2. 'சயன நேர சபலக் கதைகள்' - இது இன்னும் better-ஆ இருக்கு ;)

      நீக்கு
    3. விட்டா 'சயன நேர சல்லாபக் கதைகள்'னு மஞ்சப் பத்திரிகை ரேஞ்சுக்கு இறக்கிடுவீங்க போல! குழந்தைங்க பதிவில ஏன் இப்படி எல்லாம்? பேட் பாய்ஸ்! :)

      நீக்கு
  4. // தினம் இரவு, பூனைக் கதை கேட்டு தொல்லை பண்ணுகிறான். //


    உண்மைதான் நண்பரே !!!

    எனது மகனும் இப்படிதான் :) அவனுக்கு பிடித்தது 'மான்' கதை. தினமும் தூங்க செல்லும்பொழுது நான் தான் அவனுக்கு கதை சொல்ல வேண்டும். (காக்க வடை தூக்கி சென்றதும், ஒரு மான் கதையும் அவசியம்.. )

    உங்கள் பதிவு படிக்கும் பொழுது, அக்டோபர் 12 உடனே வந்து விடாதா என உள்ளது (இந்தியா திரும்பிட) :(

    அருமையான பதிவு .. அனுபவ பதிவு ... நன்றிகள்

    திருப்பூர் ப்ளுபெர்ரி (எ) நாகராஜன்

    பதிலளிநீக்கு
  5. இந்த தலைப்பு எப்படி வைக்கரதுன்னு ரூம் போட்டு யோசிப்பிங்க போல

    பதிலளிநீக்கு
  6. நல்லது... வாழ்த்துக்கள்...

    அன்புடன் DD

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Desire-Greedy.html

    பதிலளிநீக்கு
  7. இது போல எனக்கும் அனுபவங்கள் பல பல! என் அண்ணன் மகனோட இது மாதிரி பல பல சாகச கதைகளை நான்-ஸ்டாப்பா சொல்லியிருக்கேன். அது என்னமோ தெரியல ஒரு கதைய ஆரம்பிச்சா அவ்வளவு ப்ளுயண்டா போயிட்டே இருக்கும். நாம சிறு வயதில் படிச்ச புத்தகங்களின் தாக்கமா இதுன்னு தெரியல.

    பொதுவா எங்க வெட்டு சுட்டிகளுக்கு பிடிச்ச ஹீரோ முன்னாடி "நூடி" யா இருந்துச்சு. அப்புறம் "அஸ்லான்" இப்போ "சோட்டா பீம்". நம்ம சுட்டிகளையும் இந்த சாகச கதைக்குள் புகுத்துறது ஒரு அருமையான டெக்னிக். உலகத்தயே மறந்து கதையில அவ்வளவு ஆர்வம் ஆயிடறாங்க!

    கலர் பத்தி எங்க சுட்டிக்கு அவ்வளவு சாய்ஸ் இல்லேன்னாலும் வின்ட்-மில், ராக்கெட், புல்டோசர், கார் போன்றவை நிச்சயம் கதைகளில் வரணும்!

    நான் பொதுவா தவிர்கறது வன்முறை துப்பாக்கி அடிதடி போன்ற விஷ்யங்களை, சேத்துக்கறது நல்ல habits, கூடுதல் நகைசுவை!

    இன்னமும் இரண்டு சுட்டிகள் கதை கேட்கும் வயசை நெருங்கிக்கிட்டு இருக்கறதால ரொம்ப ஹோம்வொர்க் பண்ண வேண்டியிருக்கு. இந்த விசயத்துல மட்டும் நாம நிகழ காலத்து ஹீரோக்கள அப்டேட் பண்ணலைன்ன அவங்கள CAPTIVATE பண்ண முடியாது! : )

    GOOD WORK KARTHIK !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு உபரி தகவல் :
      ஒரு கதையை NARRATE பண்ணும்போது வாய்ஸ் MODULATION ரொம்ப ரொம்ப அவசியம். ஹீரோவுக்கு, ஹீரோயினுக்கு, வில்லனுக்கு தனித்தனியே வாய்ஸ் MODULATION செய்ய முடித்தால் நம்ம கதைய கேக்கறதுல சுட்டிகள் அவ்வளவு ஆர்வம் காட்டுவாங்க. பிளட் வாய்ஸ்ல சொல்ற கதையை விட மொடுலேடேட் வாய்ஸ்ல சொல்ற கதை பெரிய தாக்கத்தை சுட்டிகளிடயே ஏற்படுத்தும். ஆனா சுத்தி இருக்கறவங்கள பத்தி கவலை படக்கூடாது ! : )

      LISTENING LIBRARY யின் JIM DALEலின் HARRY POTTER ஆடியோ புத்தகங்களை சான்ஸ் கிடச்சா கேட்டுப்பாருங்க! இந்த உலகத்தை மறக்க செய்யும் மந்திர குரலுக்கு சொந்தக்காரர். தனது NARRATIONனுக்காக கிராம்மி அவார்ட் வாங்கியவர் . HARRY POTTER ரின் கடைசி புத்தகமான " Harry Potter and the Deathly Hallows " சில் 146 விதமான வாய்ஸ் MODULATION செய்து பெரும் புகழ் ஈட்டியவர்.

      எனது அண்ணன் மகனுக்கு ஆடியோ புத்தகங்களை INTRODUCE செய்யும் முயற்சியில் தற்போது உள்ளேன்.

      நீக்கு
    2. மிக விரிவான கருத்துப் பகிர்வுக்கு நன்றி விசு (விஸ்கி-சுஸ்கியின் சுருக்கம்) :)

      //அது என்னமோ தெரியல ஒரு கதைய ஆரம்பிச்சா அவ்வளவு ப்ளுயண்டா போயிட்டே இருக்கும். நாம சிறு வயதில் படிச்ச புத்தகங்களின் தாக்கமா இதுன்னு தெரியல//
      உண்மை!!! நாம் படித்த காமிக்ஸ்களின் தாக்கம் என்றே நானும் நம்புகிறேன்!

      //நாம நிகழ காலத்து ஹீரோக்கள அப்டேட் பண்ணலைன்ன அவங்கள CAPTIVATE பண்ண முடியாது! : )//
      உண்மை!! இது மிகவும் கடினமான விஷயம்தான்! அவர்களை கூர்ந்து கவனித்து அவர்களுக்கு என்ன பிடிக்கிறது என்று தெரிந்து கொண்டு அதற்கேற்ப நம்மை அப்டேட் செய்ய வேண்டும்!!!

      //ஒரு கதையை NARRATE பண்ணும்போது வாய்ஸ் MODULATION ரொம்ப ரொம்ப அவசியம்//
      ஆமாம், நான் பல குரலில் பேசுவதைக் கேட்டு என் மனைவி கடுப்பானதுதான் மிச்சம்!! :) ஆனால், என் குட்டி ரொம்பவே ரசிக்கிறான்! :)

      //எனது அண்ணன் மகனுக்கு ஆடியோ புத்தகங்களை INTRODUCE செய்யும் முயற்சியில் தற்போது உள்ளேன்.//
      நானும் முயற்சிக்கிறேன்! பரிந்துரைகளுக்கு மிக்க நன்றி விசு!!!

      நீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia