தி சிக்கன் ஸ்டோரி!

அப்பா, KFC போலாமா?!

நேத்துதான போனோம்?!

எனக்கு இப்ப சிக்கன் ஷாட்ஸ் வேணும்...

சரி, கத்தாத... அம்மா எங்க?

அவ, சிக்கன்ல இருக்கா...

கிச்சன்லயா? ஒனக்கு எந்நேரமும் சிக்கன் நெனப்புதான்...! போய் அவளைக் கூப்பிடு...

அவன் கத்துனத நானும் கேட்டேன்... இருங்க, தோசை சாப்ட்டுட்டு கெளம்பலாம்...

அம்மா... எனக்கு தோசை வேணாம்... சிக்கன் ஷாட்ஸ்தான் வேணும். க்கொல்... க்கொல்லு...

நீ ஒண்ணும் சாப்ட வேண்டாம். நாங்க சாப்ட்டுட்டு வர்றோம் இரு...

ரெண்டு நாளா இருமிட்டு இருக்கான், நைட்டு டாக்டர்கிட்ட போகணும்னு சொன்னியே?

மொத டாக்டர்ட்ட காட்டிட்டு அப்புறம் KFC போயிறலாம்...

அம்மா.. எனக்கு ஊசி வேணாம். டாக்டர் ஆன்டிகிட்ட அந்த பிங்க் சிரப் தரச் சொல்லு, அது ரொம்ப டேஸ்டி!

மருந்தை கேட்டு வாங்கிக் குடிக்கறது இந்த ஒலகத்துலேயே நீ ஒருத்தன்தான்டா!

இப்பவே எட்டு மணி ஆயிடுச்சே?

சும்மா நை நைன்னுட்டு.. நான் நைனுக்குள்ள வீட்டுக்கு வந்து சீரியல் பாக்கணும். சீக்கிரம் சாப்பிடுங்க.
...
...
ஏங்க, கிளினிக்ல இவ்ளோ கூட்டம் இருக்கும்னு நினைக்கலைங்க.. இப்பவே மணி 9 ஆயிடுச்சே? KFC போயிட்டு வீடு திரும்புறதுக்கு 10 மணி ஆயிடும் போல இருக்கே? இருமிட்டு வேற இருக்கான், ஏதாவது சாப்பிட வச்சு மருந்து கொடுக்கணுங்க. KFC பத்தி மறந்துட்டான், அப்படியே நைஸா வீட்டுக்கு போயிடலாங்க. நாளைக்கு வேணா அங்க கூட்டிட்டுப் போலாம். சரியா?

சரி, அந்த ஹெல்மட்டை எடு...

இந்த நேரத்துலேயும் எவ்ளோ ட்ராஃபிக்? இல்லியாடா?

நான் ஹார்ன் அடிக்கட்டாப்பா? பாம்... பாம்; பாம்... பாம்..

வீட்டுக்கு போனதும் உங்கம்மா இவன்கிட்ட அதை சாப்ட்டியான்னு கேக்காம இருந்தா சரி... பேசாம போன் பண்ணி அது பத்தி கேக்க வேணாம்னு சொல்லி வச்சுருங்க...

எதைப் பத்தி?

சுத்தம்! அதாங்க... அது பத்தி..! பேரை சொன்னா மறுபடி புடிச்சுப்பான்...

அப்பா, KFCcccc... வண்டியைத் திருப்பு...

அது....வா?! போச்சுடா! இன்னிக்கு வேணாம்டா, ரொம்ப லேட் ஆயிடுச்சு. நாம வீட்டுக்கு போய் சாப்டுட்டு பிங்க் சிரப் குடிக்கலாம் சரியா?

வீடு வேணாம், சிக்கன் ஷாட்ஸ் வேணும்... ம்..ஹூ.. ம்..ஹூ..

வம்பு பண்ணாதடா, உனக்கு வழியில சாக்லேட் வாங்கித் தர்றேன்...

சாக்லேட் வேணாம், Kinder Joy வேணும்....

சரி வாங்கித் தர்றேன்...

ஏங்க, இதுக்கு KFC-யே போயிருக்கலாம். சிக்கன் ஷாட்ஸ் 25 ரூபாதான்! Kinder Joy முப்பது! :(

வாயை மூடு, நீதானே வேணாம்னு சொன்னே? உனக்கு சீரியல் பாக்குற அவசரம்... டேய், Kinder Joy வாங்கிட்டு மறுபடி KFC போகணும்னு சொல்லக் கூடாது! KFC நாளைக்கு போலாம்.. சரியா?

சரி... :(
...
...
டிங்.. டாங்...

என்ன அதுக்குள்ள வந்துட்டீங்க?

பாட்டி... இங்க பாரு Kinder Joy!

இருமல் இருக்கறப்ப சாக்லேட் ஏன் கண்ணு வாங்கின? ஏம்பா, டாக்டர் என்ன சொல்றார்?

வழக்கமா இந்த க்ளைமேட்ல வர்ற அலெர்ஜிதான்மா, மருந்து கொடுத்திருக்கார்.

ஓ... சரி! சிக்கன் சாப்ட்டியா குட்டிக் கண்ணு?

நீங்க பேசிட்டு இருங்க, நான் தோசை சுட்டுட்டு வர்றேன்...

அம்மா... எனக்கு தோசை வேணாம்... சிக்கன் ஷாட்ஸ்தான் வேணும். க்கொல்... க்கொல்லு..

மறுபடியும் மொதல்ல இருந்தா?!

இந்த மூணு பேர் கிட்டேயும் சிக்கிக்கிட்டு நான் படுற பாடு... டொங்.. டங்... டங்.. டொய்ங்..

கிச்சன்ல என்னம்மா சத்தம்?

ஒண்ணும் இல்ல அத்தை, பாத்திரம் கை தவறி விழுந்திடுச்சு!

அம்மா, வாயை வச்சுட்டு சும்மா இருக்க மாட்டீங்களா?

உன் பொண்டாட்டியை நான் ஒரு வார்த்தை கேட்டுரக் கூடாதே?!

அய்யோ.. நான் அதைச் சொல்லலைம்மா. இவன் கிட்ட ஏம்மா அது பத்தி கேட்டீங்க?

எதைப் பத்தி?!

அதான் பாட்டி.... KFC பத்தி! அப்பா, வா KFC போலாம்....

டொங்.. டங்... டங்.. டொய்ங்.. டங்... டகாங்...

--- (என்) கதை முடிந்தது! ---

25 comments:

 1. யார் யாரோடு பேசுகிறார்கள், எப்படி பேசுகிறார்கள் என்றெல்லாம் எந்த ஒரு விளக்கமும் கொடுக்காமல் இந்த (சொந்தக்) கதையை எழுதி இருக்கிறேன்! இந்த பாணி எளிதாக புரிந்ததா அல்லது குழப்பமாக இருந்ததா நண்பர்களே?! :)

  ReplyDelete
 2. அப்பப்போ எழுத உங்களுக்கு ஏதாவது கிடைக்குது :-)

  அப்புறம் கபக் படலம் நடந்திச்சா இல்லியா? [கபக்கென்றால் என்ன என்று கண்டுபிடியிங்களேன், நான் யூரொப்பு ஒரு தபா போயிட்டு வந்திடறேன் :-)]

  ReplyDelete
  Replies
  1. அழுகையோடு தோசையை 'லபக்'கும் படலம் மட்டுமே நடந்தது!

   Delete
 3. // (என்) கதை முடிந்தது! // ஹா ஹா ஹா அதான் அம்புட்டுத்தான் முடிஞ்சது முடிஞ்சே போச்சு..

  இந்தப் பாணி மிக எளிதாக புரிந்தது... தொவில்லாமல் நகரும் கதைகளில் இந்தப் பாணி உரையாடலை மிக எளிதாக நகர்த்தும்.. சுஜாதா கதைகளில் பெரும்பாலும் கவனிக்கலாம்

  ReplyDelete
  Replies
  1. நன்றி சீனு!!!

   //அதான் அம்புட்டுத்தான் முடிஞ்சது முடிஞ்சே போச்சு..//
   சிக்கனுக்கு ஒரு பக்கம்தான் ஷாட், நமக்கு திரும்புன பக்கம் எல்லாம் ஷாட்ஸ் தான்! :)

   Delete
 4. கிச்சன்ல என்னம்மா சத்தம்?
  ஒண்ணும் இல்ல அத்தை,
  பாத்திரம்
  கை தவறி விழுந்திடுச்சு! அங்கே என்னமா சத்தம் ஒன்னுமில்லை மாமா சும்மா பேசிக்னு இருந்தோம்

  ReplyDelete
  Replies
  1. அவங்க பாத்திரத்தை உருட்டுறப்போ கிச்சன் பக்கம் போவ மாட்டோம்ல ;)

   Delete
 5. கார்த்திக் இது அதுதானே ரொம்ப நாள் கழித்து மிக அருமையான பதிவு

  ReplyDelete
 6. Replies
  1. நன்றி சக்தி முருகேசன்!!

   Delete
 7. என் கதையும் இதே தான், என் மகனிடமும் சொல்லிவிட்டேன், உனக்கு போட்டியாக, இன்னொருத்தரும் இருக்கிறாருனு.

  ReplyDelete
  Replies
  1. :) பாப்கார்ன் மாதிரி இருக்கறதால இவங்களுக்கு ரொம்ப பிடிக்குதுன்னு நினைக்கறேன்!

   Delete
 8. ஹா ஹா ஹா! அட்டகாசம் கார்த்திக்! எழுத்தாளர் சுஜாதாவின் ஒரு சிறுகதையைப் படித்த திருப்தி எனக்கு! 'என் கதை முடிந்தது' என்ற அந்த கடைசிவரி மட்டும் இல்லாதிருந்தால் சுஜாதாவே... தான்! ;)

  ReplyDelete
  Replies
  1. நன்றி விஜய்! இந்த பதிவில் சுஜாதா அவர்களைப் பற்றிய இரண்டாவது கமெண்ட் இது! நீங்கள் அன்பளித்த 'ஆ'வை படிக்க வேண்டுமென்ற ஆவல் அதிகரிக்கிறது! :)

   Delete
 9. செமையா இருந்துச்சி தல ... எளிதில் புரியும் படி இருக்கிறது ... செமையா சிக்கிய உங்களுக்கு என் ஆழ்ந்த சிரிப்புகள் ...

  ReplyDelete
 10. கலக்கல் கார்த்திக்.

  ReplyDelete
 11. எளிதில் புரியும் படி உள்ளது கார்த்திக் .

  ReplyDelete
 12. இந்த KFC ஒரு அமெரிக்கன் கம்பெனி. ஆனால் இப்ப அமெரிக்காவை விட இந்தியாவில்தான் ஜாஸ்தி பிசினஸ் செய்றான்

  ReplyDelete
  Replies
  1. ஆம்! Pizza Hut-ம் அப்படியே! KFC பற்றி கேள்விப்படும் தகவல்கள் பயமூட்டுகின்றன! ஆனால் அவற்றில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை!!

   Delete
  2. அடுத்த தலைமுறைக்கு KFC, McDonalds, Pizza Hut தவிர்த்து மற்ற ஆரோக்கிய உணவு வகைகள் பற்றி புரிய வைப்பது ஒவ்வொரு பெற்றோருக்கும் ஒரு கடினமான வேலைதான் போங்க!

   Delete
  3. Pizza & Burger சாப்பிட பழக்கவில்லை! :) ஆனால், அப்படி எல்லாம் ரொம்ப நாளைக்கு தப்பித்து விட முடியாது என்பதுதான் உண்மை!

   Delete

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia