கார்ப்
பாடகன்!

சிறு வயதில் இருந்தே, பப்ளிக்காக பாடுவது என்றால் எனக்கு ஏகத்துக்கும் கூச்சம். "மேடையில பாடுறதுக்கு வெக்கப் படுவான் போல" என்று கற்பனையை ஓட விட வேண்டாம். அங்கெல்லாம் எட்டிப் பார்த்ததோடு சரி; வீட்டிலேயே, பிறர் முன்னிலையில் பாடக் கூச்சப்படும் அப்பாவி டைப் நான். பாத்ரூமுக்குள் சைலன்ட்டாக முனகுவதோடு (பாடலை, பாடலை) என் சங்கீத தாகம் அடங்கி விடும்! தமிழ் சினிமா பாடல்கள் மட்டும் தான் பாடுவேன், மற்றது எல்லாம் மருந்துக்கும் வராது - முயற்சிப்பதாகவும் இல்லை.

வெட்கத்தை விட்டு பாடும் வாய்ப்பு, கார் வாங்கிய பிறகு தான் கிடைத்தது. காரில் கரோக்கே பாடுவது தனி சுகம். தனியே போகும் போது, கார் ஜன்னல்களை ஏற்றி, பிடித்த பாடல்களை காரின் மியூசிக் சிஸ்டத்தில் அலற விட்டு, கூடவே சேர்ந்து அலறும் போது கிடைக்கும் சுகம் அலாதியானது. என்ன தான் அலறினாலும், கடந்து போகும் ஓட்டுனர்களும், நடந்து போகும் பாதசாரிகளும் நம்மை நின்று கவனிப்பதற்குள் நாம் அவர்களைக் கடந்து வெகு தூரம் போயிருப்போம் என்பதால் வெட்கம் எட்டிக் கூட பார்க்காது! சிக்னலில் நிற்க நேரும் போது மட்டும், சுதி குறைந்து விடும். இல்லையென்றால் அருகில் நிற்பவர்கள் கேவலமாக முறைப்பார்கள் (என்பதான மனப்பிரம்மை எனக்கு).

"கார் ஓட்டும் போது பாட்டு கேட்பதும், பாடுவதும் (பிறர்) உயிருக்கு ஆபத்தானது" - என்று எனது கார் டேஷ் போர்டில் எச்சரிக்கை வரி ஓடும் அளவுக்கு, சில சமயம் பாடல்களும், சேர்ந்து பாடுவதும் தலைக்கு மேல் போதையேற்றி விட்டு விடும். அப்போதைய மூடுக்கு தகுந்த மாதிரி பாடல்கள் ஸ்பீக்கர்களில் கசிந்து கொண்டிருக்க - சோகப் பாடல்களுக்கு கூடவே கசிந்து உருகியும்; வேகமான பாடல்கள் என்றால், வெறித்தனமாக ஆக்ஸ்லரேட்டரை அமுக்கி, ஆவேசத்துடனும்; இளையராஜா இசையில் தேர்ந்தெடுத்த பாடல்கள் ஒலிக்கும் போது, பின்னால் வருபவர்கள் கடுப்பாகும் அளவுக்கு மிக மெதுவாகவும் (பாடிக் கொண்டே) கார் ஓட்டுவது வழக்கம்.

ரோடு காலியாக இருக்கும் சமயங்களில், பாடல் வரிகளின் வேகத்திற்கு ஏற்ப ஓட்டுவதும் உண்டு...
பூவே... 30kmph
இளைய பூவே... 35kmph
வரம் தரும்... 40kmph... வசந்தமே... 45kmph
மடி மீது தேங்கும் தேனேஏஏஏ... 55kmph
எனக்குத் தானேஏஏஏஏஏஏஏஏஏ... 70kmph


அடுத்த "எனக்குத் தானேஏஏஏஏஏஏஏஏஏ"-வில் வண்டி 90-ஐத் தாண்டியிருக்கும்.

டிக்கி நிறைய கவலைகளோடு கிளம்பி இருந்தாலும், சாலையோடு பாடல்கள், டயர் கோர்க்கும் போது மனம் ஓரிரு பாடல்களில் லேசாகி விடும்.

தோளின் மேலே, பாரம் இல்லே..
கேள்வி கேட்க யாரும் இல்
லே...
ஆ.. மாமா மாமா மா... மாமா மியா..
.
என்று எட்டுக் கட்டையில் பாடினாலும் எவனும் கண்டு கொள்ள மாட்டான். அளவுக்கு மீறும் போது, பின்விளைவாக தொண்டையில் கிச் கிச் ஆகி, கீச்சுக் குரலில் பாட வேண்டி வரலாம் என்பது வேறு விஷயம்.

தனியே காரில் செல்லும் வாய்ப்பு, பெரும்பாலும் அலுவலகம் போகும் போது மட்டுமே வாய்க்கும்; சென்று வர ஆகும் 55km தொலைவு, எனது பழைய Fiat Petra-வின் மிகக் குறைந்த மைலேஜ், பெட்ரோல் விலை, பார்க்கிங் பிரச்சினை - இவற்றை எல்லாம் எண்ணிப் பார்த்து, எனது அரதப் பழைய Suzuki Fiero-வை கடுப்புடன் உதைத்த சமயங்கள் தான் அதிகம். முழு ஹெல்மட் மாட்டும் பொழுது, பைக் பாடகனாகவும் அவதாரம் எடுப்பதுண்டு.

முன்னே செல்லும் கார்களில், அவ்வப்போது என்னைப் போன்ற காரிசை (கார்+இசை) ரசிகர்களை கவனித்து இருக்கிறேன். தலையை பேய்த்தனமாக ஆட்டிக் கொண்டே பாட்டு கேட்பார்கள். தலை ஒரு பக்கமாக சுளுக்கிக் கொண்டால் என்னாவது என்று பயமாக இருக்கும். சிலர் அண்டா சைஸ் ஸ்பீக்கர் மாட்டிக் கொண்டு "டும் ச்சிக், டும் ச்சிக், டும் ச்சிக்" என்று கடந்து போவார்கள் - சில நொடி கேட்ட நமக்கே இதயத் துடிப்பு நார்மலுக்கு வர நான்கைந்து நிமிடங்கள் ஆகும், ஒருவேளை காதுகளில் பஞ்சை அடைத்துக் கொண்டு கார் ஓட்டுவார்களோ?

எது எப்படியோ, பாடல்களை அதிர வைத்துக் கொண்டே வேகமாக கடந்து போகும் கார்களை, இனி சற்று கனிவுடன் பாருங்கள். அவற்றினுள்ளும் ஒரு சூப்பர் சிங்கர் ஒளிந்திருக்கக் கூடும். அவர் தலையாட்டிப் பாடகராக இல்லாத வரை, உங்கள் உயிருக்கும் சேதாரம் இல்லை.

9 comments:

 1. காரில் போகும் போது ,எங்கே செல்லும் இந்த பாதை என்ற பாடலை மட்டும் போட்டு கேட்காதீங்க ,பிளிஸ்:)

  ReplyDelete
  Replies
  1. Nice Article Bro Also You can see This Top 25 Tamil Movies Download Website

   Super Article Bro இதுவும் உங்களுக்கு உதவியாக இறுக்கும் நீங்கள் வளர வாழ்த்துக்க்கள் தமிழ் படங்களை பார்க்க 25 website Tamil Movies Website

   Delete
 2. //பாடலை, பாடலை)// ஹா ஹா ஹா

  //டிக்கி நிறைய கவலைகளோடு கிளம்பி இருந்தாலும், சாலையோடு பாடல்கள், டயர் கோர்க்கும் போது மனம் ஓரிரு பாடல்களில் லேசாகி விடும்.
  /செம..

  ஓ.எம் ஆரில் தனியே வாகனம் ஓட்டும் போது எனக்குள் இருந்து வெளிப்படும் எஸ்.பி.பி.யையும் ஹரிஹரனையும் விஜய் ஜேசுதாசையும் கேட்கும் போது தமிழகம் எதையோ பெரிதாக இழந்துவிட்டதோ என நினைக்கத் தோன்றுகிறது

  ReplyDelete
 3. அடடே! பல யுகங்களுக்குப் பின்னே ஒரு பதிவா? ?!

  ///பூவே... 30kmph
  இளைய பூவே... 35kmph
  வரம் தரும்... 40kmph... வசந்தமே... 45kmph
  மடி மீது தேங்கும் தேனேஏஏஏ... 55kmph
  எனக்குத் தானேஏஏஏஏஏஏஏஏஏ... 70kmph ///

  ஹாஹாஹா! :))))

  ReplyDelete
 4. Nice Article Bro Also You can see This Top 25 Tamil Movies Download Website

  Super Article Bro இதுவும் உங்களுக்கு உதவியாக இறுக்கும் நீங்கள் வளர வாழ்த்துக்க்கள் தமிழ் படங்களை பார்க்க 25 website Tamil Movies Website

  ReplyDelete

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia