லயன் காமிக்ஸ் & முத்து காமிக்ஸ் - ஒரு அறிமுகம் & சந்தா விபரங்கள்!

ஒரு அறிந்த முகத்தின் அறிமுகம்:
இரும்புக்கை மாயாவிக்கு தமிழ்நாட்டில் அறிமுகம் தேவையில்லை தான். ஆனால், அவரது கதைகளை மட்டுமல்ல - பல்வேறு அயல்நாட்டு காமிக்ஸ் மற்றும் கிராபிக் நாவல்களை, சிவகாசியைச் சேர்ந்த  'பிரகாஷ் பப்ளிஷர்ஸ்' என்ற பதிப்பகம், தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறது. 1971-ல் தொடங்கப் பட்டு, விரைவில் 50 வருடங்களை எட்டவிருக்கும் இந்நிறுவனம், தற்போது எடிட்டர் S.விஜயன் அவர்களின் பொறுப்பில் - முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் மற்றும் லயன் கிராஃபிக் நாவல் ஆகிய மூன்று பெயர்களில் காமிக்ஸ்களை வெளியிடுகிறது; 2012 முதல் புத்தகங்களின் தயாரிப்புத் தரத்தையும் வெகுவாக மேம்படுத்தி உள்ளது. இந்த இதழ்களைப் பற்றிய விரிவான தகவல்களை இந்தப் பதிவில் காணலாம்.

இவர்களின் விற்பனை முறை மிகவும் சிக்கலான ஒன்று! இப்புத்தகங்கள் பரவலாக கடைக்களில் கிடைப்பதில்லை என்பதோடு, சந்தா கட்டிப் பெறுவதிலும் ஏகப்பட்ட நுணுக்கங்கள் உண்டு! மாத இதழ்களுக்கான ஆண்டுச் சந்தா, அதனுள் நான்கு அல்லது ஐந்து உப பிரிவுகள், இடையிடையே முன்பதிவின் பேரில் Limited Edition இதழ்கள் என  வகைவகையாக குழப்புவது அவர்களின் பாணி! மேலோட்டமாகப் பார்த்ததால் குழப்பமாகத் தெரிந்தாலும், குறைந்த அச்சு எண்ணிக்கை அதேசமயம் பலதரப்பட்ட  வாசகர்களைக் கொண்டிருப்பதால் இப்படியானதொரு விற்பனை முறை தேவையாய் இருக்கிறது.

2018 ஆண்டிற்கான சந்தா விவரங்கள், சமீப காலத்தில் அறிவிக்கப் பட்ட ஸ்பெஷல் இதழ்கள் & சந்தா தவிர்த்த நேரடி விற்பனை முறைகள் பற்றி இப்பதிவில் விவரிக்கப் பட்டுள்ளது. இத்தகவல்கள், புதிதாய் காமிக்ஸ் வாங்க விரும்புவர்களின் வசதிக்காக தொகுக்கப் பட்டவை; இவை எவ்விதத்திலும் முழுமையானவையோ, அதிகாரபூர்வமானவையோ அல்ல! தகவல்களை சரிபார்க்க, பிரகாஷ் பப்ளிஷர்ஸை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள்.

2018 - சந்தா பிரிவுகள்:
இவ்வருடம் - A, B, C, D & F என  மொத்தம் 5 சந்தா பிரிவுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. இவற்றில், "F" பிரிவுக்கான தொகை இன்னமும் அறிவிக்கப் படவில்லை. A, B, C & D-ல் இருந்து, விருப்பமான சந்தா பிரிவுகளை மட்டும் தேர்ந்தெடுத்து வாங்க விரும்பினால், இங்கே கொடுக்கப் பட்டுள்ள அட்டவணையைப் பார்க்கவும்! இவை தவிர, முன்பதிவின் பேரில் சிறப்பிதழ்கள், அவ்வப்போது அறிவிக்கப் படலாம். புது இதழ்கள் பற்றிய விவரங்களை உடனுக்குடன் அறிய, ஆசிரியரின் வலைப்பூவைத் தொடருங்கள் (http://lion-muthucomics.blogspot.com). இவ்வலைப்பூவில், 2018-ல் வெளியாகவிருக்கும் இதழ்களைப் பற்றிய ஒரு முழுநீள சிறப்புப் பதிவை, எடிட்டர் கடந்த அக்டோபரில் வெளியிட்டு இருந்தார் (பார்க்க: உள்ளங்கையில் பிரபஞ்சம்...!!).

சந்தா பிரிவுகள் பற்றி:
 • சந்தா "A" (Action & Adventure): சாகசக் கதைகள், முழு வண்ணத்தில்
 • சந்தா "B" (Bonelli & Tex): டெக்ஸ் வில்லர் உள்ளிட்ட இத்தாலிய  நாயகர்களின் சாகசங்கள், கருப்பு வெள்ளையில்!
 • சந்தா "C" (Cartoon): சிரிப்புக் கதைகள், முழு வண்ணத்தில் - உதாரணத்திற்கு லக்கி லூக்!
 • சந்தா "D" (Classic Reprints): இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர், ஆர்ச்சி, ஜானி நீரோ, லாரன்ஸ் & டேவிட் போன்ற கிளாசிக் நாயகர்களின் கதைகள், மறுபதிப்பாக!
 • சந்தா "F" (கிராஃபிக் நாவல்கள்): சற்றே சீரியஸ் ரகக் கதைகள் - பெரியவர்களுக்கு மட்டும்!
ஆண்டுச் சந்தா தொகைகள் (A, B, C & D பிரிவுகள்):
 • தமிழ்நாடு:  र4725
 • பெங்களூர்:  र5125
 • இதர இந்திய நகரங்கள்: र4925
 • இலங்கை: र12500
 • இதர நாடுகள்: र17500
"F" சந்தா & சிறப்பிதழ்கள்:
 • XIII இரத்தப் படலம் - முழு வண்ணத் தொகுப்பு  : र2200 (கூரியர் கட்டணம் தனி)
 • The Five and Four சந்தா!: சந்தா தொகை அறிவிக்கப் படவில்லை.
 • ஜம்போ காமிக்ஸ்!र999 (தமிழ்நாடு) & र1199 (பெங்களூரு).
 • பழைய சந்தா விவரங்களை இங்கே காணலாம்: 2012 / 2013 / 2014
 • அயல்நாட்டுச் சந்தா, அரையாண்டுச் சந்தா, தவணை வசதி மற்றும் இதர கேள்விகளுக்கு தெளிவு பெற, லயன் அலுவலகத்தை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்.
சந்தா கட்டும் முறை (இந்தியா):
1. ஆன்லைன் ட்ரான்ஸ்பஃர்:
 • Name of Account : SUNSHINE LIBRARY
 • Bank : Tamilnad Mercantile Bank Ltd., Sivakasi Branch.
 • Account Number : 003150310875790
 • Account Type: Current
 • IFSC Code : TMBL0000003
 • ஆன்லைனில் பணம் செலுத்தினால் உங்கள் பெயர், முகவரி மற்றும் இதர விவரங்களை மின்னஞ்சல் மூலம் தெரிவியுங்கள்!
2. Cheque / DD / Money Order:
 • Draw Cheque / DD in favor of: "PRAKASH PUBLISHERS"
 • Cheque / DD உடன் உங்கள் விவரங்களை எழுதி, லயன் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும்!
பிரகாஷ் பப்ளிஷர்ஸ்: 
பதிப்பாசிரியர்:
 • திரு. S. விஜயன்
முகவரி:
 • Prakash Publishers, #89, Chairman PKSAA Road, Ammankoilpatti, Near Mariyamman temple, Sivakasi, PIN 626 189, Tamilnadu.
தொலைபேசி:
 • (Tel) 04562 - 272649
 • (Mob) 98423 19755 & 73737 19755
 • (Fax) 04562 - 275159
இணையம்:
 • எடிட்டரின் வலைப்பூ: http://lion-muthucomics.blogspot.com
 • இணையத் தளம்: www.lion-muthucomics.com
 • ஆன்லைன் விற்பனை: http://www.lioncomics.in
 • மின்னஞ்சல்: lioncomics@yahoo.com
 • முகநூல் பக்கம்: www.facebook.com/LionMuthuComicsSivakasi
நேரடி மற்றும் ஆன்லைன் விற்பனை:
காமிக்ஸ்  குறித்த விழிப்புணர்வோ, ஆர்வமோ பரவலாக இல்லாததால், பிரகாஷ் பதிப்பகத்தார் நேரடி விற்பனையில் அதிகம் கவனம் செலுத்தாமல், சந்தா முறையை ஊக்குவிக்கின்றர்! இவ்விதழ்கள் புத்தக கடைகளில் கிடைப்பது மிகவும் அரிது. சென்னையில் லாண்ட்மார்க், டிஸ்கவரி புக் பேலஸ் போன்ற சில புத்தக நிலையங்களில் கிடைக்கின்றன. மற்ற நகரங்களில் ஒரு சில முக்கிய புத்தகக் கடைகளில் கிடைக்கலாம்! உங்கள் நகரத்திற்கான முகவர் பற்றி அறிய லயன் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள்.

சென்னை மற்றும் ஈரோடு புத்தகக் கண்காட்சிகளில், இவர்களது ஸ்டால் பெரும்பாலும் இடம்பெறும். சமீப சில ஆண்டுகளில் வெளியான இதழ்களில் பல, இன்னமும் பதிப்பகத்தாரிடம் கிடைக்கின்றன. அவற்றை வாங்க விரும்பினால், அவர்களை நேரடியாக அணுகவும். ஆன்லைனில் வாங்க கீழ்க்கண்ட வலைதளங்களைப் பார்க்கவும்:
 • http://www.lioncomics.in (Official)
 • http://www.discoverybookpalace.com
(மிகப்) பழைய இதழ்கள்:
பொதுவாக பழைய காமிக்ஸ்கள், மிக அதிக விலைக்கு விற்கப் படுகின்றன. பழைய புத்தக கடைகளில் இவை கிடைப்பது மிகவும் அரிது! மற்ற காமிக்ஸ் வாசகர்களிடம் அல்லது சேகரிப்பாளர்களிடம் விலைக்கோ அல்லது புத்தக மாற்றுக்கோ வாங்க முயற்சி செய்யலாம்.

தற்போதைய புத்தக வடிவமைப்பு மற்றும் விலைகள்:
1) 7.25" x 9.5" ஆர்ட் பேப்பர், 52 பக்க, முழு வண்ண காமிக்ஸ் - விலை र75
2) 5.5" x 8.5" வெள்ளைத் தாள், 112 பக்க, கருப்பு வெள்ளை காமிக்ஸ் - விலை र60
3) 5.5" x 8.5" வெள்ளைத் தாள், 224 பக்க, கருப்பு வெள்ளை காமிக்ஸ் - விலை र125
4) Special இதழ்கள்: र250, र500,  र1000 என வெவ்வேறு விலை மற்றும் வடிவமைப்புகளில், அதிக பக்கங்களுடன் வெளியாகும்.

மாதந்தோறும் குறைந்த பட்சம் மூன்று அல்லது நான்கு புதிய காமிக்ஸ் இதழ்கள் வெளியாகின்றன. சந்தாதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, கூரியர் மூலம் புத்தகங்கள் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படுகின்றன. சற்றே விலை அதிகம் என்றாலும், விளம்பர வருமானம் இல்லாத, குறைந்த அளவில் அச்சிடப் படும் இதழ்கள் என்பதால் இந்த விலை விகிதம் தவிர்க்க முடியாதது! இதே அளவிலான ஆங்கில காமிக்ஸ்கள் பல மடங்கு அதிக விலையில் விற்கப் படுகின்றன. ஆனால், அவற்றுடன் நேரடி விலை ஒப்பீடுகள் செய்வது சரியாக இராது. ஏனெனில், ஆங்கிலத்திற்கான ராயல்டி கட்டணங்கள் அதிகம். மேலும் அவற்றின் தயாரிப்பு மற்றும் சந்தைப் படுத்தும் செலவுகள் மிக மிக அதிகம். தவிர, பெரும்பாலும்அவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதால் இறக்குமதி கட்டணமும் சேர்ந்து விடுகிறது. இது பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்தப் பதிவைப் படியுங்கள்.

தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் சில காமிக்ஸ் வரிசைகள்:
 • முத்து காமிக்ஸ்: இரும்புக்கை மாயாவி, கேப்டன் டைகர், லார்கோ வின்ச், தோர்கல், மர்ம மனிதன் மார்ட்டின், ரிப்போர்டர் ஜானி, ஸ்மர்ஃப்ஸ், ட்யூராங்கோ
 • லயன் காமிக்ஸ்: டெக்ஸ் வில்லர், ஸ்பைடர், லக்கி லூக், மாடஸ்டி ப்ளைசி, ரின் டின் கேன், XIII, வேய்ன் ஷெல்டன், கமான்ச்சே
 • லயன் கிராஃபிக் நாவல்: மாறுபட்ட கதையம்சம் கொண்ட படைப்புக்கள் மற்றும் கிராஃபிக் நாவல்கள் (உதாரணம்: ஒரு சிப்பாயின் சுவடுகளில்...! & பௌன்சர்)
நிறுத்தப் பட்ட காமிக்ஸ் வரிசைகள்:
 • சன்ஷைன் லைப்ரரி
 • காமிக்ஸ் க்ளாசிக்ஸ்
 • திகில் காமிக்ஸ்
 • ஜூனியர் / மினி லயன்
 • திகில் லைப்ரரி
 • முத்து காமிக்ஸ் வாரமலர்
 • முத்து மினி காமிக்ஸ்
நிறைகள்:
 • தமிழில் காமிக்ஸ் வெளியிடும் ஒரே நிறுவனம்
 • குழந்தைகள், பெரியோர்கள் மற்றும் பல்வேறு ரசனையாளர்களின் விருப்பத்திற்கேற்ப வெளியாகும் பல்வகைக் கதைகள்.
 • வண்ண இதழ்களில் உபயோகிக்கப்படும் உயர்ரக ஆர்ட் பேப்பர்
 • ஒரளவுக்கு குறைவான விலை
குறைகள்:
 • சமீபத்திய விலையேற்றம் & எட்டாயிரத்தை எட்டும் சந்தா தொகை (ஸ்பெஷல் இதழ்களைச் சேர்த்து!)
 • ஆங்காங்கே மொழிமாற்ற வேறுபாடுகள் & படங்களை மறைக்கும் வளவள வசனங்கள்.
 • வண்ண இதழ்களில் அவ்வப்போது நேரும் அச்சுக் குளறுபடிகள் (Dull prints, Color spots and mixing issues).
 • B&W இதழ்களில் உபயோகிக்கப்படும் சுமாரான தாளின் தரம்.
அன்றும் இன்றும்:
1970-களின் ஆரம்பத்தில் திரு.சௌந்தரபாண்டியன் அவர்கள், முத்து காமிக்ஸை துவக்கினார். ரிப் கிர்பி, பஸ் சாயர், ஜானி நீரோ, பான்டம் என பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட கதைத் தொடர்களே முத்துவில் வெளியாகின. குறிப்பாக "ஸ்டீல் க்ளா (இரும்புக்கை மாயாவி)" என்ற பிரிட்டிஷ் காமிக்ஸ் நாயகர் தமிழ்நாட்டில் அழியா புகழ் பெற்றதற்கு முத்து காமிக்ஸே காரணம்!

எண்பதுகளின் மத்தியில் திரு.சௌந்தரபாண்டியன் அவர்களின் புதல்வர் திரு.S.விஜயன் அவர்கள் - லயன், ஜூனியர், மினி லயன் & திகில் என்ற பெயர்களில் மேலும் பல புதிய காமிக்ஸ் இதழ்களைத் துவக்கினார். காலப்போக்கில் முத்து உள்ளிட்ட அனைத்து இதழ்களுக்கும் எடிட்டராக பொறுப்பேற்ற அவர், புகழ்பெற்ற பல ஃபிரான்கோ-பெல்ஜிய மற்றும் இத்தாலிய காமிக்ஸ் கதைகளை தமிழில் அறிமுகம் செய்த பெருமைக்குரியவர்! உதாரணத்திற்கு XIII, டெக்ஸ் வில்லர், பேட்மேன், ப்ளூபெர்ரி, லக்கி லூக், லார்கோ வின்ச் போன்ற சர்வதேசப் புகழ் பெற்ற நாயகர்கள் பலரை தமிழில் அறிமுகப்படுத்தியுள்ளார்!

தொண்ணூறுகளின் பிற்பாதியில் மக்களிடையே குறைந்த வாசிக்கும் ஆர்வம், காமிக்ஸ் துறையையும் விட்டுவைக்கவில்லை. நடுவில் சில வருடங்கள் தமிழில் எந்தவொரு காமிக்ஸ் இதழ்களும் வெளிவராத நிலையும் இருந்தது! தொலைந்து போன அந்த ஆர்வத்தை மீட்டெடுக்கும் வகையில், ஜனவரி 2012 முதல், முத்து மற்றும் லயன் காமிக்ஸ் இதழ்களை மாதம் தவறாமல், திரு.S.விஜயன் வெளியிட்டு வருகிறார்.

காமிக்ஸ் குறித்த விழிப்புணர்ச்சி பெரிதும் இல்லாததால், பெரிய அளவிலான நேரடி விற்பனை முயற்சிகளை பிரகாஷ் பப்ளிஷர்ஸ் தற்போது மேற்கொள்ளவில்லை. எனினும் பெருநகரங்களில், லாண்ட்மார்க் உள்ளிட்ட சில புத்தகக் கடைகளில், இவர்களின் வெளியீடுகள் கிடைக்கின்றன. நேரடியாக கடைகளில் வாங்க வாய்ப்பு இல்லாதவர்கள், ஆண்டுச் சந்தா கட்டுவதே சிறந்த வழி. தற்போது காமிக்ஸ் இதழ்களுக்கு பெருகி வரும் வரவேற்பு,  இந்நிலையை விரைவில் மாற்றி விடும் என்று நம்பலாம்!

மட்டமான தாள்களில் முன்பு வெளியாகிக் கொண்டிருந்த இந்த இதழ்கள், தற்போது உயர்ரக ஆர்ட் பேப்பரில், முழு வண்ணத்தில், மேம்பட்ட தரத்தில் வெளியாகின்றன என்பது குறிப்பிடத் தக்கது! என்றாலும், விலைகளையும், ஆண்டு சந்தாத் தொகையையும் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பது வாசகர்களின் பரவலான கருத்தாக உள்ளது!

.
( தமிழ் காமிக்ஸ்  | லயன் காமிக்ஸ் | முத்து காமிக்ஸ் )

58 comments:

 1. Thanks for the details!
  http://vallimalaigurunadha.blogspot.com

  ReplyDelete
 2. எனக்கே எனக்காக சொன்னதை போல உள்ளது...என்னை போல் தெரியாமல் தடுமாறுபவர்களுக்கு பயன்படும் நன்றி நண்பா எப்படியாவது சந்தா கட்டி விடுவேன்.....

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கே உங்களுக்காகத்தான் நண்பா! :) Google Plus-இல் நீங்கள் கேட்டிருந்தீர்கள் அல்லவா? :)

   Delete
 3. ---மேலே உள்ள லயனுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது! அது எடிட்டரின் ட்ரேட்மார்க் ஹாட்லைன் லோகோ மட்டுமே! ----


  பின்ன அது உங்க புகைப்படம்ன்னு நினைச்சுடுவோமா என்ன ? ரொம்ப ஆசைதான்

  ----•இவை மாத இதழ்கள் அல்ல! எது எப்போது வெளிவரும் என்று யாருக்கும் தெரியாது! --------


  உங்களுக்கு ரொம்ப குசும்பு தான் ? எடிட்டர் இந்த பதிவை படிப்பாரா? :-)

  ReplyDelete
  Replies
  1. //ரொம்ப ஆசைதான்//
   :) :) :)

   //எது எப்போது வெளிவரும் என்று யாருக்கும் தெரியாது//
   உண்மையைத்தானே சொன்னேன்! :) :) :)

   //எடிட்டர் இந்த பதிவை படிப்பாரா? :-)//
   அதை நீங்க எடிட்டர்கிட்டதான் கேட்கணும்! :D

   Delete
 4. ----•இவை மாத இதழ்கள் அல்ல! எது எப்போது வெளிவரும் என்று யாருக்கும் தெரியாது! --------

  எடிட்டருக்கவது தெரியுமா ? ;-)

  சொல்ல மறந்துட்டேன். நல்ல தொகுப்பு.

  ReplyDelete
 5. Great work Frd, valuable information also.

  //இவை மாத இதழ்கள் அல்ல! எது எப்போது வெளிவரும் என்று யாருக்கும் தெரியாது! ஆனால் வரவேண்டிய நேரத்தில் குரியர் மூலம் வந்து சேரும்! // Ithellam Romba Over (aanaal ithuthan Karthik Special i think)

  ReplyDelete
  Replies
  1. எனக்கு தெரிஞ்ச ஒரே ஸ்பெஷல் முத்து Never Before ஸ்பெஷல்! :D

   Delete
 6. வாவ்.. அருமையான தகவல்கள் மற்றும் அதனை மிக அழகான முறையில் அளித்திருக்கிறீர்கள்...

  ReplyDelete
 7. Hi Karthik,

  I am using ICICI bank and when i am regstering the payee, it is asking what type of account Savings or Current or Cash Credit. Which one i have to choose? Please clarify and update ur post also. Thanks

  ReplyDelete
  Replies
  1. I chose the account type as Savings, and it works! - will update the post accordingly!

   Delete
 8. Karthik machi, sema kalaysala athey samayathla super info kuduthirukinga...
  if you are free call me
  Shriram 9962541237

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே! பல் பிரச்சினையில்(புதிய பதிவைப் பாருங்கள்!) மாட்டியதால் சில நாட்களாய் போனில் அதிகம் பேசுவதில்லை. விரைவில், நிச்சயம் அழைக்கிறேன்! நீங்கள் "http://modestynwillie.blogspot.in" ஸ்ரீராமா?

   Delete
 9. மிக மிகப் பயனுள்ள தொகுப்பு! நிறையக் குறிப்புகளோடு, கொஞ்சம் குறும்புகளும் எட்டிப்பார்க்கிறது! :)

  ReplyDelete
 10. Great Job Karthik ...

  //நேரடியாக சிவகாசி சென்றும் வாங்கலாம்! ;)//

  Good :)

  ReplyDelete
 11. Hi Karthik,

  Any plan for Chennai Book Fair ?

  Hope to see all our friends on 11-Jan Evening :)

  Fingers Crossed :)
  ReplyDelete
 12. 12 ஜூலை 2012 அன்று முதன்முறையாக வெளியான இப்பதிவு, 2014 ஆண்டுக்கான சந்தா விவரங்களுடன் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது! ப்ளேட்பீடியா வரலாற்றிலேயே பலமுறை ரீமேக் செய்யப்பட பதிவு இதுவாகத்தான் இருக்கும்! ;)
  Rev.1: 07/12/2012 01:42:00 AM IST
  Rev.2: 12/17/2012 10:45:00 AM IST
  Rev.3: 11/06/2013 03:40:00 PM IST

  ReplyDelete
  Replies
  1. இரண்டு லட்சம் பார்வைகளை ப்ளேட்பீடியா எட்டியுள்ளது! இதை சாத்தியமாக்கிய இணைய வாசகர்கள் அனைவருக்கும், என் மனதார்ந்த நன்றிகள்!

   Delete
  2. லயன் & முத்து காமிக்ஸ் - ஒரு அறிமுகம் மற்றும் சந்தா விபரங்கள்!
   Rev.4: 07/16/2014 08:25:00 PM

   Delete
  3. சமீபத்தில் (ஜூலை 9, 2014), ப்ளேட்பீடியா வலைப்பூ மொத்தம் 3,00,000 பார்வைகளை எட்டிப் பிடித்திருக்கிறது! இதை சாத்தியமாக்கிய இணைய வாசகர்களுக்கும்; தமிழ்மணம் / தமிழ்10 போன்ற திரட்டிகளுக்கும்; வலைப்பூ, ஃபேஸ்புக் மற்றும் காமிக்ஸ் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! இந்தப் பதிவை கடந்த முறை அப்டேட் செய்த போது (11/06/2013), இரண்டு லட்சம் பார்வைகளை எட்டியது ஒரு சுவாரசியமான co-incidence!!! :)

   Delete
 13. Best wishes for 2 lakhs visits. An honest post on both plus and minus..whoever wishes to join has been warned...:) :p

  ReplyDelete
  Replies
  1. //whoever wishes to join has been warned//
   it is all about setting the right expectations ;)

   Delete
 14. I kind of wondered on your evolution as blogger..from the initial post abt Ur comics exp and adv in lion blogs and now as a matured blogger..grt job Karthik

  ReplyDelete
 15. Thanks for the detailed post. So now november 2013, to subscribe for the year 2014, when we have to make money (online) ? Either January 2014 or end of December 2013 itself. Please share this detail also. This is first time I am going to subscribe. Thanks.

  ReplyDelete
  Replies
  1. You are welcome! In fact you can send them the Subscription amount well in advance! I've updated the post. I suggest you send them the money before 2nd week of December so you get the 2014 January books on time.

   Delete
 16. மங்கல்யான் கிளம்பின நேரம்... ஒரு மங்களகரமான பதிவு கார்த்திக்! :) நிறையபேருக்கு உபயோகமான தகவல்கள் அழகா தொகுத்து இருக்கீங்க! வாழ்த்துக்கள்! சந்தா விவரம் நம் காமிக்ஸ் புக்ல படிச்சபோ எனக்கு புரிய கொஞ்சம் நேரம் ஆச்சு! இங்க படிச்சப்பதான் விளங்கிச்சு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா, நான் என்ன மஞ்சள் மகிமை பற்றிய பதிவையா போட்டிருக்கேன்?! :D

   //சந்தா விவரம் நம் காமிக்ஸ் புக்ல படிச்சபோ எனக்கு புரிய கொஞ்சம் நேரம் ஆச்சு!//
   எனக்கும்! மறுபடியும் எதையாவது மாத்தாம இருந்தா சரிதான்! :)

   Delete
 17. கார்த்திக்,

  முதலில் - இரண்டு லட்சம் பார்வைகளைக் கடந்ததற்கு வாழ்த்துகள் - ஒரு 1/5 மில்லியன் ஹிட் ஸ்பெஷல் பதிவுடன் தொடரவும் - உங்களது ட்ரேட்மார்க் (சுஜாதா brand) நகைச்சுவையுடன் - உதாரணம் : அந்த ஆஸ்பத்திரி பதிவு!

  வலையுலகினில் இந்த பொறுமை - இத்தனை ரெகுலராக பதிவிடுவது சிரமம்தான் - என்னை மாதிரி குறை சொல்லிகளுக்கு மத்தியில் அதுவும் :-) அதிலும் இந்த வருடம் இரண்டாவது வலைப்பூ தொடங்கியது ஸ்பெஷல்!

  இந்த மூன்று (மறு)பதிப்புக்களும் வரிக்கு வரி படித்தவர்களுள் அடியேனும் ஒருவன் - இதற்கு உங்கள் பதில் யூகிக்க முடிகிறது :-)

  மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் !


  ReplyDelete
  Replies
  1. நன்றி ராகவன்! 1/2 மில்லியன் பதிவு 3 வருடங்களுக்கு பிறகு வெளியாகும்! :)

   Delete
 18. ரொம்பவே பயனுள்ள தகவல்களை அள்ளித் தெளித்திருக்கிறீர்கள் கார்த்திக்!
  இரண்டு லட்சம் ஹிடஸ் என்ற மைல்கல்லை தாண்டியிருப்பதற்கு என் வாழ்த்துக்கள்! பயனுள்ள தகவல்களை சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையாகவும் சொல்லிடும் உங்கள் எழுத்து நடைக்கு கிடைத்த அங்கீகாரமாகவே இதை எண்ணுகிறேன். சீக்கிரமே 'மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல் பதிவு' போட்டுக் கலக்கவும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
  Replies
  1. மில்லியன் ஹிட்ஸ் பதிவு 2020-ல் வெளியாகும்! :P

   Delete
 19. இரண்டு லட்சம் ஹிட்ஸ் என்ற மைல்கல்லை தாண்டியிருப்பதற்கு என் வாழ்த்துக்கள்!

  அருமையான பதிவு!

  ReplyDelete
 20. லக்கி லூக்கின் பரம விசிரி நான் ..தகவலுக்கு நன்றி/..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி சக்தி முருகேசன்! அடுத்த வருடம் லக்கி லூக்கின் புதிய கதைகளும் வரவிருக்கின்றன!

   Delete
 21. நிறையபேருக்கு உபயோகமான தகவல்கள் அழகா தொகுத்து இருக்கீங்க! சந்தா விவரம் நன்றி! சிப்பாயின் சுவடுகள் பதிவு அருமை உள்ளது. வாழ்த்துக்கள் கார்த்திக் சார் !

  ReplyDelete
 22. வணக்கம்,

  www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்US திரட்டி.

  இத் திரட்டியின் மூலம் உங்கள் செய்திகள், பதிவுகள், கவிதைகள் உடனுக்குடன் பலரைச் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளமுடியும். இதனால் உங்கள் தளங்களிற்கான வருகையாளார்களின் எண்ணிக்கையையும் அதிகரிகத்துக் கொள்ளலாம்.

  அதேவேளை இத் திரட்டியில் உங்களின் பதிவைப் பகிர்ந்து இத்திரட்டிக்கான ஒத்துழைப்பை நல்குவதுடன், எமது பதிவுகள் மற்றவர்களைச் சென்றடைய facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களை மட்டுமே நம்பியிருக்கிற நிலைமையையும் மாற்றமுடியும் என நம்புகிறோம்.

  நன்றி..
  Tamil US
  www.tamilus.com

  ReplyDelete
 23. That's great,, I hope this can help them to be less intimidated about making comics. I love pointing to xkcd and Dinosaur Comics, just because the images are SO simple, and I've just posted here in the comments a comic by Gary Northfield that features a single leaf per panel. The kids could do something as simple as take a photograph of an apple and show the same exact photo in each panel, just giving it different speech bubbles. Maybe there are two flies on the apple talking to each other - they might just be little dots.
  Comics


  ReplyDelete


 24. Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
  Ayurveda
  Ayurveda Resorts
  Ayurveda Kovalam
  Ayurveda Trivandrum
  Ayurveda Kerala
  Ayurveda India

  ReplyDelete

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia