அச்சுத் தமிழ் - ஆங்கில மற்றும் தமிழ் எழுத்துருக்கள் ஒரு ஒப்பீடு!

ஒரு முன்(னெச்சரிக்கைக்) குறிப்பு:
இப்பதிவின் தலைப்புக்கும் ஜெ.மோ. அவர்களின் கட்டுரைக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது; இந்தப் பதிவு, தமிழை ஆங்கில எழுத்துக்களில் (Letters) எழுதுவது பற்றியதல்ல! மாறாக, இக்கட்டுரையின் நோக்கம் - "குறைந்த இடத்தில் அதிக தமிழ் எழுத்துக்களை அச்சேற்க உதவும் வகையிலான, புதிய வகைத் தமிழ் எழுத்துருக்களை (Fonts) வடிவமைப்பதற்கான எனது பரிந்துரைகளைப் பகிர்வது" மட்டுமே ஆகும்!

நீண்ட காலமாகவே என்னை உறுத்தி வரும் ஒரு விஷயம், "பொதுவாக ஆங்கிலத்தில் எந்த ஒரு வாக்கியத்தையும் குறைவான எழுத்துக்களில் அமைக்கவும்; குறைவான இடத்தில் அதிக சொற்களை அச்சடிக்கவும் முடியும் போது - தமிழில் மட்டும் ஏன் வாக்கியங்களும், அச்சுக் கோர்ப்பும் பெரிதாய் நீள்கிறது?" என்பது! ஆங்கிலம் என்றல்ல, பொதுவாகவே அந்நிய மொழிகளில் இருந்து மொழியாக்கம் செய்யப் படும் அனைத்து படைப்புகளுக்கும் இது ஓரளவுக்குப் பொருந்தக் கூடும்! சில மொழிகளைப் பொறுத்த வரையில், தமிழுடனான இந்த மொழியாக்க விகிதங்கள் தலைகீழாகவும் அமையலாம்!

வெறும் எழுத்து வடிவிலான படைப்புக்களில் - தமிழ் மொழியின் இந்த நீள அகல வேறுபாடுகள் அதிக பாதிப்பைத் தருவதில்லை; தமிழாக்கம் கூடுதலாக சில பக்கங்களை விழுங்கினாலும், அது வாசிப்பு அனுபவத்தை பெரிதாக பாதிக்கப் போவதில்லை! தமிழாக்கம் செய்யும் போது, சில மொழிபெயர்ப்பாளர்கள் தமிழை அள்ளி ஊற்றுகிறேன் பேர்வழி என்று, கூடுதல் வர்ணிப்புகளைச் சேர்த்து வசனங்களை நீட்டி முழக்குவார்கள் - அது வேண்டுமானால் வாசிப்பவர்களுக்கு அயற்சியைத் தரலாம்!

ஆனால், காமிக்ஸ் என்று வரும்பொழுது - ஏற்கனவே, "பிரெஞ்சு" அல்லது "ஆங்கில" மொழி வசனங்களுக்காகக்காக உருவாக்கப் பட்ட வசனப் பெட்டிகளில் (Speech balloon), தமிழ் மொழிபெயர்ப்பினை அடைக்க முற்படும் போது அது, ஷேர் ஆட்டோவில் திணிக்கப்பட்ட பயணிகளைப் போல, பெரும்பாலும் பலூன்களை விட்டு வெளியே துருத்திக் கொண்டு தான் தெரியும்!

சில வசனங்களை ஆங்கிலத்தை விட தமிழில் சுருக்கமாக எழுதலாம் / அச்சேற்றலாம் என்றாலும், நான் பெரும்பான்மையைப் பற்றி மட்டுமே பேசுகிறேன்! மொழியாக்கம் செய்யப் பட்ட வசனங்களின் கச்சிதத் தன்மையும், சுருக்கத் தன்மையும் மொழிபெயர்ப்பாளரைச் சார்ந்தே இருக்கிறது என்றாலும்; தமிழ் வாசகர்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக தரப்படும் கூடுதல் விளக்கங்கள், ஸ்பீச் பலூனின் அளவு, அதைச் சுற்றியுள்ள சித்திரங்கள், பலூனை ஊதிப் பெரிதாக்குவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் லெட்டரிங் ஆர்டிஸ்ட் & மொழிபெயர்ப்பாளர் - இவர்களிடையே தேவைப்படும் கூட்டு முயற்சி போன்ற இன்ன பல சங்கதிகளையும் சார்ந்து அமைகிறது!

இதைப் பற்றிய எண்ணங்கள், அபிப்ராயங்கள் 2012 முதலே இருந்து வந்தாலும்; காமிக்ஸ் சிறுகதைகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பது மற்றும் தமிழ் காமிக்ஸ் இதழ் ஒன்றிற்கான Logo-வை வடிவமைப்பது - இவ்விரண்டு வாய்ப்புகளும் கடந்த ஆண்டு கிடைத்த போது தான், இப்பிரச்சினையின் முழுவீச்சையும், அதற்கான அடிப்படைக் காரணங்களையும் முழுவதுமாகப் புரிந்து கொள்ள முடிந்தது! முதலில் இதற்கான காரணங்களைப் பார்ப்போம்; பிறகு இந்த பிரச்சினையைத் தவிர்க்கும் வழிமுறைகளைப் பற்றி அலசலாம்!

ஆங்கிலத்தில் சிறிய மற்றும் பெரிய எழுத்துக்கள் என்று இருவகை எழுத்துக்கள் இருக்கின்றன அல்லவா (Small & Capital letters). காமிக்ஸ்களில் முழுக்க முழுக்க கேபிடல் லெட்டர்களை மட்டும் தான் உபயோகப் படுத்துவார்கள்! அதற்கு முக்கிய காரணம், ஒவ்வொரு எழுத்துக்களின் அகலங்களும் சற்று முன்னே பின்னே இருந்தாலும், அவற்றின் உயரங்கள் ஒரே அளவில் தான் இருக்கும் - எனவே குறைந்த இடத்தில் அதிக எழுத்துக்களை அச்சேற்றலாம்; மற்றும் வாசிப்பதற்கு தெளிவாக / எளிதாக இருக்கும்! இதைப் பற்றி சரியாக புரிந்து கொள்ள ஆங்கில பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களை அருகருகே எழுதிப் பார்ப்போம்!
'g' கீழே உள்ள கோட்டைத் தாண்டி தொங்குவதை கவனியுங்கள்!
சற்று நெருக்கமாக பார்த்தால், சிறிய எழுத்துக்களின் ஒட்டுமொத்த உயரம் பெரிய எழுத்துக்களின் உயரத்தை விட அதிகம் என்பதையும் (h மற்றும் g எழுத்துக்களின் கூட்டு உயரத்தை கவனிக்க!); ஒவ்வொரு பெரிய எழுத்தின் அகலமும், அதனதுடைய சிறிய எழுத்தின் அகலத்தை விட அதிகம் என்பதையும் கவனிக்கலாம்! முதல் பார்வையில், பெரிய எழுத்துக்கள் தான் அதிக இடத்தை எடுத்துக் கொள்வதாகத் தோன்றலாம் - அது ஓரளவுக்கு உண்மையும் கூட!

Spacing!
ஆனால், சிறிய எழுத்துக்களை விட ஒட்டு மொத்த உயரம் குறைவு என்பதால் (பெரிய எழுத்துக்கள் கீழே தொங்குவது இல்லை!), இரண்டு வரிகளுக்கிடையே இடைவெளி விடும்போது, குறைவான இடைவெளி விட்டாலே போதுமானது! எனவே கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, இருவகை எழுத்துக்களுமே கிட்டத்தட்ட ஒரே அளவு அச்சு இடத்தைத் தான் எடுத்துக் கொள்ளும்! வெறும் எழுத்திலான படைப்புக்களில், முழுக்க முழுக்க பெரிய எழுத்துக்களை உபயோகப் படுத்துவதோ அல்லது இடப்பற்றாக்குறையைப் பற்றி அதிகம் கவலைப்படுவதோ இல்லை என்பதால் - இரண்டு வரிகளுக்கிடையேயான இடைவெளியை (Leading Space) அங்கு குறைப்பதில்லை! (ஆனால், Spacing & Kerning உத்திகளை உபயோகிப்பதுண்டு!)

ஏற்கனவே சொல்லியது போல, காமிக்ஸ்களில் முழுக்க முழுக்க பெரிய எழுத்துக்கள் மட்டுமே பயன்படுத்தப் படுவதாலும், எழுத்துகளுக்கான இடப்பற்றாக்குறை இருப்பதாலும் - வரிகளுக்கிடையேயான இடைவெளி இங்கு மிக அதிக முக்கியத்துவம் பெறுகிறது! படத்தில் (வலது) உள்ள ஸ்பீச் பலூனைப் பாருங்கள் - ஒவ்வொரு வரியும் எவ்வளவு நெருக்கமாக கோர்க்கப் பட்டிருக்கிறது என்பதைக் கவனியுங்கள்! அதே போல எழுத்துகளுக்கு இடையேயான இடைவெளியும் (Tracking Space) மிக மிகக் குறைவாக வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்!

அதே அளவு எழுத்து, குறைந்த இடத்தில்!
Kerning என்ற மற்றொரு உத்தியின் மூலம், குறிப்பிட்ட இரண்டு எழுத்துகளுக்கு இடையேயான இடைவெளியைக் கணிசமாகக் குறைக்கலாம்! உதாரணத்திற்கு, 'A', 'V', 'W' போன்ற சாய்வாக இருக்கும் எழுத்துக்களின் கீழ் அல்லது மேல் பகுதியில் மற்ற எழுத்துக்களை நெருக்கமாக கோர்த்திட முடியும்!

இதர வடிவமைப்பு சார்ந்த உத்திகளும் உள்ளன - உதாரணத்திற்கு, கேபிடல் "ɪ"-ஐ எழுதும் போது அதன் மேலே மற்றும் கீழே உள்ள கோடுகளை அகற்றி அகலம் குறைவாக, "I" என்று எழுதுவார்கள். அதுமட்டுமன்றி, குறைந்த இடத்தை எடுத்துக்கொள்ளும் வகையிலான பல தரப்பட்ட எழுத்துருக்களையும் (Fonts), கையால் எழுதப் பட்டது போன்ற நெருக்கமான எழுத்துருக்களையும் ஆங்கிலத்தில் வடிவமைத்திருக்கிறார்கள்! குறிப்பாக, ஒவ்வொரு காமிக்ஸ் நிறுவனமும் தங்கள் இதழ்களில் உபயோகப் படுத்துவதற்கு என பிரத்தியேகமான சில எழுத்துருக்களை வடிவமைத்து வைத்திருப்பார்கள்!

மிகக் குறைந்த இடத்தில், அதிக அளவு லத்தீன் எழுத்துக்களை அச்சேற்ற முடிவதற்கு, மேற்சொன்ன அனைத்துமே மிக முக்கியமான காரணங்கள் ஆகும்!

உதாரணத்திற்கு கீழ்காணும் ஒப்பீட்டைப் பாருங்கள்! லார்கோ வின்ச் ஃகிராபிக் நாவல் ஒன்றின், ஃபிரெஞ்சு மூலம் (Dupuis) மற்றும் அதனுடைய ஆங்கில மொழிபெயர்ப்பின் (Cinebook) வடிவத்தின் மாதிரிப் பக்கங்கள் இவை! பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழிகள் இரண்டுமே, இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் இருந்து கிளை பிரிந்தவை என்பதால், சொல்வளத்தில் ஓரளவுக்கு ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையவை (கிட்டத்தட்ட 27% ஒற்றுமை)! தவிர, இவ்விரு மொழிகளுமே லத்தீன் எழுத்துக்களில் தான் எழுதப்படுகின்றன என்பதும் - பரஸ்பர மொழியாக்கங்களை எளிமைப் படுத்தி விடுகிறது!
French to English!
French to Tamil!
ஆனால், (காமிக்ஸ்) படைப்புக்களை பிரெஞ்சு அல்லது ஆங்கிலத்தில் இருந்து தமிழாக்கம் செய்யும் போது பிரச்சினைகளும், அதற்கேற்ப ஸ்பீச் பலூன்களும் விரிவடையத் துவங்குகின்றன! லே-அவுட் / லெட்டரிங் ஆர்டிஸ்ட்டால் (எழுத்துக்களை பலூன்களில் அடைப்பவர்), அப்படி விரிவாக்கப் படும் பலூன்கள் சித்திரங்களை மறைப்பதாகவோ, இடத்தை அடைப்பதாகவோ இருக்குமானால், அது அந்தப் பக்கத்தின் அழகையே பாழ்படுத்தி, எழுத்துக்களுக்கிடையே சித்திரங்களைத் தேடும் அவல நிலையை ஏற்படுத்தி விடும்! அதற்காக எழுத்துருக்களின் அளவைக் (Font size) குறைத்தாலோ, வாசிப்பவர்களுக்கு கண்வலி தான் ஏற்படும்!

உதாரணத்திற்கு, மேற்சொன்ன கதையின் தமிழ் மொழிபெயர்ப்பில் (முத்து காமிக்ஸ்), பக்கம் முழுக்க வசனங்களால் நிறைந்திருப்பதைக் காணலாம் (வலதில் உள்ள படம்!); ஸ்பீச் பலூன்கள் பெரிதாக்கப்பட்டு, அவை சித்திரங்களை மறைத்திருப்பதையும் காணலாம் (அம்புக்குறியிட்ட இடங்கள்)!

குறிப்பு 1: மேற்கண்ட உதாரணப் பக்கத்தை, பிரிண்ட் செய்து பார்க்க விரும்பினால், இதன் High Resolution Image-ஐ இங்கே தரவிறக்கலாம்!

குறிப்பு 2: "வசனங்கள் அதிகமாக இருக்கும் காமிக்ஸ்கள் தான், கிராஃபிக் நாவல்கள்" என்று தவறாக நினைத்து விட வேண்டாம்! ;)

இங்கே தான், மொழிபெயர்ப்பாளர் மற்றும் லெட்டரிங் ஆர்டிஸ்ட் - இவ்விருவரும் இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது! எங்கெல்லாம் லெட்டரிங் ஆர்டிஸ்ட்டால், வசனங்களை பலூன்களுக்குள் அடைக்க முடியவில்லையோ - அங்கெல்லாம் மொழிபெயர்ப்பாளர் வசனங்களின் நீளத்தை குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளலாம்! உதாரணத்திற்கு கீழே உள்ள ஒரு சிறிய பகுதியைப் பாருங்கள்...:
நீளமான மொழிபெயர்ப்பு!
ஆங்கிலத்தோடு ஒப்பிடும் போது, தமிழில் வசனங்கள் நீட்டி முழக்கப் பட்டிருப்பதைக் காணலாம்! நகைச்சுவைக்காக அப்படி எழுதப் பட்டிருந்தாலும் - சிலசமயங்களில் தேவையற்ற நீண்ட வசனங்கள் / வர்ணனைகள், கதையின் விறுவிறுப்பைக் குறைக்கக் கூடும்! தவிர, பலூனில் இடம் போதாது என்பதால், டிசைனர் / லெட்டரிங் ஆர்டிஸ்ட் - ஒவ்வொரு பேனலிலும் அதிக நேரம் செலவழிக்க வேண்டியிருக்கும்!

மாறாக, கீழ்க்கண்டவாறு சுருக்கமாக மொழிபெயர்த்தால், எவ்வித பிரச்சினையும் இன்றி ஒரிஜினல் பலூன்களிலேயே தமிழை அடைத்து விடலாம்! புதிய வாக்கியங்களின் நீளம் (சிவப்பு & பச்சை), கிட்டத்தட்ட ஆங்கில வாக்கியங்களின் நீளத்திலேயே இருப்பதைக் கவனியுங்கள்:
- நீச்சல் படிடா கண்ணா! என்று அம்மா சொன்னதை காதிலேயே வாங்கலை நான்! (முத்து காமிக்ஸ்)
- MOTHER ALWAYS SAID I SHOULD LEARN TO SWIM
- நீச்சல் கத்துக்கோன்னு அம்மா சொல்லிட்டே இருப்பா!
- 'நீச்சல் கத்துக்கடா'-ன்னு அம்மா கதறியும் கேட்காதது தப்பு தான்!

- சரி சப்பை மூக்கன்களிடம் சிக்கி செத்தான் என்பதை விட கடப்பாறை நீச்சலடிக்க முயன்று சைமன் மண்டையைப் போட்டான் என்று வரலாறு சொல்லட்டும்! (முத்து காமிக்ஸ்)
- OH, WELL, DEAD EITHER WAY. I'D RATHER...
- இவர்கள் கையால் சாவதை விட, ஜலசமாதியே மேல்!
- இவங்ககிட்ட சிக்குனா நிலசமாதி, தப்பிச்சா ஜலசமாதி!

குறிப்பு: இவை ஒரு உதாரணத்திற்கு மட்டுமே, இதை விட சிறப்பாகவும் செய்யலாம்! லயன் / முத்து காமிக்ஸ் மொழிபெயர்ப்புடன், ஆங்கில மற்றும் என்னுடைய மொழிபெயர்ப்புகளை ஒப்பிடுவது என் நோக்கமல்ல - இந்த கட்டுரைக்கு இந்த உதாரணங்கள் அவசியம் என்பதாலேயே இவற்றைக் கொடுத்திருக்கிறேன்!

ஆனால், வசனக் குறைப்பு அனைத்து சமயங்களிலும் சாத்தியமாவதில்லை; அதற்கு இரண்டு காரணங்கள்.
1. அளவுக்கதிகமான (அ) தவறான டயலாக் எடிட்டிங், வாசிப்பவர்களுக்கு குழப்பத்தை அளித்து, கதையின் போக்கையே மாற்றி விடும்! இதற்கு தொண்ணூறுகளில் வெளியான ராணி காமிக்ஸ்கள் சிறந்த உதாரணம் (பார்க்க வலதில் உள்ள படம் - அம்புக்குறியிட்ட இடத்தில் தமிழாக்கத்தின் அர்த்தம், தலைகீழாக மாறியிருக்கிறது!)

2. கலாச்சாரம் / வரலாறு சார்ந்த வசனங்கள் தமிழ் வாசகர்களுக்கு புரிய வாய்ப்பில்லை என்பதால், அச்சமயங்களில் கூடுதல் விளக்கங்கள் / வசனங்கள் தேவைப் படலாம்!

எனவே தான், ஆங்கிலத்தில் இருப்பதைப் போன்ற Space Optimize செய்யப்பட்ட எழுத்துருக்கள் தமிழிலும் தேவைப் படுகின்றன! நான் அறிந்த வரையில் அத்தகைய Font-கள் கிடைப்பது மிகவும் அரிது! அதற்கு காரணம் இல்லாமல் இல்லை! ஆங்கிலத்தோடு ஒப்பிடும் போது, தமிழ் மொழி எழுத்துக்களின் சிறப்பு என்னவென்றால் அவை, "மேலும் கீழுமாய், நெளிந்தும், சுழிந்தும், வளைந்தும், நிமிர்ந்தும் தோற்றம் தரும் ஒரு அழகிய பெண்ணைப் போல - பொட்டிட்டு, கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும்!" ;) சரி சரி, தலையில் அடித்துக் கொள்ளாதீர்கள் - விஷயத்திற்கு வருகிறேன்! :)

சில தமிழ் எழுத்துக்கள் இயல்பாகவே அதிக உயரம் (த, ற...), அதிக அகலம் (ஊ, ஔ...) மற்றும் அதிக நெளிவு சுளிவுகளைக் (இ, ஓ...) கொண்டவை; உதாரணத்திற்கு, "க" மற்றும் "த" ஆகிய எழுத்துக்களை அருகருகே எழுதிப் பார்த்தால்: "கக்தத்" - கீழே நீளும் கோடு காரணமாக, த-வின் உயரம் சற்றே அதிகமாக இருப்பதை கவனிக்கலாம்; மேலே புள்ளி இருப்பதால் மெய்யெழுத்துக்கள் அனைத்துமே சற்று உயரமானவையே! (க் & த்)! அதே போல சில எழுத்துக்கள், இயல்பாகவே அதிக அகலம் கொண்டவை (உம்: ஊ / ஔ / ண). கீழே சிவப்பில் எழுதப் பட்டுள்ள எழுத்துக்கள் யாவும் அதிக உயரம் கொண்டவை:

உயிரெழுத்துக்கள்: அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ
மெய்யெழுத்துக்கள்: க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்
ஆய்த எழுத்து: ஃ
கிரந்த எழுத்துக்கள்: ஜ்ஷ்ஸ்ஹ்க்ஷ்ஸ்ரீ

பெரும்பாலான தமிழ் எழுத்துக்கள், தத்தம் இயல்பான வடிவம் தவிர்த்து, குறைந்த பட்சம் ஓரிரு மாறுதல்களுக்காவது உட்படுகின்றன! உயிரும் மெய்யும் இணைந்து, உயிர்மெய்யெழுத்துகளாக (குறியீட்டு எழுத்துக்கள்) மாறும் பொழுது அவற்றின் உயர அகலங்கள் மென்மேலும் அதிகரித்து விடுகின்றன (படத்தில் பார்க்க!):
தமிழ் எழுத்துக்களின் உயர அகல வேறுபாடுகள்!
"உ" முதல் "ஔ" வரையிலான உயிரெழுத்துகளுடன் இணையும் அனைத்து மெய்யெழுத்துகளின் அகலங்களும் கூடுகின்றன! (உம்: க - கௌ)

"அ", "ஆ" & "ஐ" - இவற்றைத் தவிர்த்து மற்ற உயிரெழுத்துகளுடன் இணையும் அனைத்து மெய்யெழுத்துகளின் உயரங்களும் கூடி விடுகின்றன! சில எழுத்துக்களின் உயரம் கீழ் பகுதியில் கூடும் (ய - யூ); சிலவற்றின் உயரம் மேற்பகுதியில் கூடும் (க - கீ)! இன்னும் சிலவற்றின் உயரமோ, இருபுறமும் கூடும் (ட - டூ). இந்த மாற்றங்கள் உயிர் எழுத்துக்களோடு இணையும் கிரந்த எழுத்துக்களுக்கும் பொருந்தும்!

உயிர் + கிரந்த எழுத்துக்கள்:
உதாரணம் 1 : ஜீ ஷீ ஸீ ஹீ க்ஷீ
உதாரணம் 2: ஜௌ ஷௌ ஸௌ ஹௌ க்ஷெள
பட உதவி: thamizham.net
பொள்ளாச்சி நசன் என்னும் தமிழார்வலர், இத்தகைய குறியீடுகளை எளிய தமிழில் வகைப் படுத்தியிருக்கிறார்! கீழ்காணும் 12 வகைப்பாடுகள், வெவ்வேறு தமிழார்வலர்களால் வெவ்வேறு பெயர்களில் வழங்கப் படுகின்றன என்பதால் - இப்பெயர்கள் உங்களுக்கு அந்நியமாகத் தோன்றினால் குழப்பமடைய வேண்டாம்!

1. கீழ் விலங்கு, 2. மேல் விலங்கு, 3. சுழிமேல் விலங்கு, 4. இறங்கு கீற்று, 5. மடக்கேறு, 6. மடக்கேறு கீற்றுக்கால், 7. கொம்பு, 8. கொம்பு சுழி, 9. இரட்டைக் கொம்பு, 10. கொம்பு பின்கால், 11. கொம்பு சுழி பின்கால் & 12. கொம்புக் கால்!

இவற்றில் கீழ் விலங்கு (உ.ம்.: சூ), மேல் விலங்கு (உ.ம்.: தி), சுழிமேல் விலங்கு (உ.ம்.: தீ), இறங்கு கீற்று (பு) ஆகிய குறியீடுகள் எழுத்துக்களின் உயரத்தை அதிகரிக்க வைக்கின்றன! எஞ்சியவை யாவும் அகலத்தை அதிகரிக்க வைக்கின்றன!

எழுத்துக்களின் உயரங்கள் பற்றியும், அகலங்கள் பற்றியும் விரிவாகப் பார்த்தோம்! காமிக்ஸ் ஸ்பீச் பலூன்களைப் பொறுத்தவரை, எழுத்துக்களின் அகலத்தை விட, உயரம் தான் அதிக பாதிப்பு தருகிறது! மேலே அல்லது கீழே நீளும் குறியீடுகள், ஒன்றின் மேல் ஒன்று படக் கூடாது என்பதால், ஒவ்வொரு வரிகளுக்கும் இடையே அதிக இடைவெளி விட வேண்டியது அவசியமாகிறது! பெரிய எழுத்தில் உள்ள ஆங்கில வரிகளுக்கு இடையே விடப் படும் இடைவெளியை விட, அதிக அளவு இடைவெளி தமிழ் எழுத்துகளுக்கு தேவைப் படுவதன் காரணம் இது தான்!

இதற்கு ஒரு எளிய தற்காலிகத் தீர்வு உண்டு! வரிகளுக்கு இடையேயான இடைவெளியை (Default Leading Space) 5% முதல் 10% வரை குறைப்பது! உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தைப் பாருங்கள்! முத்து காமிக்ஸ் நிறுவனத்தார் எந்த வகை Font-ஐ உபயோகிக்கிறார்கள் என்பது தெரியாத காரணத்தால், பொதுவாகக் காணக் கிடைக்கும் எழுத்துருவான "லதா"-வை உபயோகித்து, வரிகளுக்கு இடையே இருக்கும் Default Leading Space-ஐ 10% குறைத்து உள்ளேன்! முத்து காமிக்ஸ் எழுத்துக்களை விட, பெரிய எழுத்துக்கள் அதே அளவு இடத்தில் அடைக்கப் பட்டுள்ளதை காணலாம்! குறிப்பிட்ட அந்த ஸ்பீச் பலூனின் அகலம் ~1.1/8 inches (~2.9cm) ஆகும்! இந்தப் படத்தை 100% விரிவாக்கிப் பார்த்தால், நடுவில் உள்ள பகுதியை முத்து காமிக்ஸ் பலூன் அளவில் (2.9cm) பார்க்கலாம் - இதற்கு உங்கள் Monitor-ன் resolution 1920x1080 ஆக இருப்பது அவசியம்!. உங்கள் திரையில் சரியாகத் தெரியாத பட்சத்தில் பிரிண்ட் செய்து பார்க்கவும்!
ஆனால், Leading Space-ஐ மிகவும் கவனமாக கையாள வேண்டும் - மிகவும் நெருக்கமாக வரிகளைப் அமைத்தால் படிப்பவர்களுக்கு குழப்பம் நேரலாம்! As a rule of thumb, நான் கவனித்த வரையில் 5% வரை இதைக் குறைப்பது Readability-ல் எந்த பாதிப்பையும் தருவதில்லை. அதிக வரிகள் இருக்கும் பலூன்களில் இது நல்ல பலன் தரும்! Font மற்றும் வரிகளின் தன்மையைப் பொருத்து (குறியீட்டு எழுத்துக்கள் குறைவான வரிகள்), இதை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்!

மேலே காட்டப் பட்டதைப் போன்ற குறைவான Leading Space (90% of default leading) வைத்தால் - பல சமயங்களில் எழுத்துக்களின் மேல் மற்றும் கீழ் பகுதிகள், ஒன்றின் மேல் ஒன்று ஒட்டிக் கொண்டு, வாசிப்பை சிக்கலாக்கி விடும்! மேலே இருக்கும் படத்தில், ஸ்பீச் பலூனில் உள்ள வசனங்களை (எழுத்துக்களை) மட்டும் மாற்றி விட்டு, வெவ்வேறு அளவிலான வரி இடைவெளிகளில், எழுத்துக்களின் visibility எவ்வாறு பாதிக்கப் படுகின்றது என்பதை இந்தப் படத்தில் பார்க்கலாம் (வலது)! முன்பே சொன்னது போல,"லதா" எழுத்துருவின் இரு வரிகளுக்கு இடையேயான முன் நிர்ணயிக்கப்பட்ட (Default) இடைவெளியை, 5% வரை குறைப்பதால் எந்த பாதிப்பும் தெரிவதில்லை; அதையே 10% வரை  குறைக்கும் போது, எழுத்துக்களின் தன்மையைப் பொருத்து  பாதிப்புகள் தெரியத் துவங்குகின்றன!

 குறிப்பு: முத்து காமிக்ஸ் பிரிண்ட் அளவில் (சிறிய அளவு) பார்ப்பதற்கு இங்கே அமுக்கவும்!

கவனிக்க: Leading space-ஐ படிக்கத் தக்க வகையில் குறைக்கும் - பொருத்தமான சதவிகித அளவு, ஒவ்வொரு எழுத்துருக்களுக்கு இடையேயும் வேறுபடலாம் - லதாவைப் பொறுத்த வரை இது 5% ஆக இருக்கிறது என்பது என் அவதானிப்பு!

எழுத்துக்களின் Readability / Legibility எவ்வளவுக்கு எவ்வளவு முக்கியமோ, அதே போல சித்திரங்களின் Visibility, ஸ்பீச் பலூன்களின் Uniformity, முழுப்பக்கத்தின் ஒட்டுமொத்த Look & Feel - ஆகிய வேறு டிஸைனிங் சார்ந்த அம்சங்களும் மிகவும் அத்தியாவசியமே!

இதற்கு, அனைத்து சூழ்நிலைகளுக்கும் பொருந்தக் கூடிய, ஒன்றை ஒன்று பாதிக்காத, செயல்படுத்துவதற்கு எளிதான தீர்வு என்று எதுவுமே கிடையாது! ஏதாவது ஒரு அம்சத்தில் (அல்லது சில அம்சங்களில்) சமரசம் செய்து கொள்ளத் தான் வேண்டியிருக்கும்!

எளிய தீர்வாக இருக்கிறது என்ற ஒரே காரணத்தால், பெரும்பாலான சமயங்களில் - பலூனில் அளவை அதிகரித்து, அதன் காரணமாக சித்திரங்களை மட்டுமே சமரசம் செய்து கொள்வதை விட / பாதிப்பதை விட - வெவ்வேறு space saving technique-களை கூட்டாக முயற்சித்து, அந்த பாதிப்பானது மற்ற அனைத்து அம்சங்களிலும் ஓரளவுக்கு சமமாக பகிர்ந்து கொள்ளப் பட வேண்டும் (a moderate compromise on all the fronts!).

அப்படிப்பட்ட ஒரு பன்முகத் தீர்வுக்கு கீழ்க்கண்ட யாவும் அவசியம் (Conditions apply!):
1. முடிந்த வரை சுருக்கமான / கச்சிதமான மொழிபெயர்ப்பு!
2. மொழிபெயர்ப்பில் கூடுதல் விளக்கங்கள் தேவைப்படும் இடத்தில், ஒரு நட்சத்திரக் குறி இட்டு, அந்த விளக்கத்தை அந்தப் பேனலின் (அ) பக்கத்தின் கீழே அளிப்பது!
3. வெவ்வேறு வகை Font-களை முயற்சித்துப் பார்ப்பது!
4. Font-களின் Size-ஐ தேவைக்கேற்ப குறைப்பது அல்லது அதிகரிப்பது!
5. Line, Word & Character Spacing-ஐ தேவைக்கேற்ப குறைப்பது அல்லது அதிகரிப்பது!
6. தேவைப்பட்டால் பலூன்களின் அளவை அதிகரிப்பது!
7. பெரிதாக்கப் படும் பலூன்கள் (முடிந்தவரை) முக்கியமான சித்திரங்களை மறைக்காமல் பார்த்துக் கொள்வது!
8. உயரம் குறைவான அல்லது ஓரளவுக்கு சீரான உயரம் கொண்ட தமிழ் எழுத்துருக்களை வடிவமைப்பது!

இனி பதிவின் முக்கியமான கட்டத்திற்கு வருவோம்!

உயரம் குறைவான அல்லது ஓரளவுக்கு சீரான உயரம் கொண்ட தமிழ் எழுத்துருக்களை வடிவமைத்தல்:
மேலே கொடுக்கப்பட்ட விளக்கங்கள் மற்றும் எடுத்துக்காட்டுகளின் மூலம் - "இரண்டு வரிகளுக்கு இடையேயான இடைவெளியை குறைப்பதற்கு பெரும் தடையாக இருப்பது, குறிப்பிட்ட சில உயரமான எழுத்துக்கள் மற்றும் அவற்றின் இட அமைப்பு ஆகிய இரண்டு காரணிகள் மட்டுமே!" என்பதை நாம் மிகத் தெளிவாக உணரலாம்! அத்தகைய எழுத்துக்களின் உயரத்தை, இயன்ற அளவு குறைப்பதன் மூலம், குறைந்த இடத்தில் அதிக வரிகளை பொருத்துவது (Leading Space-ஐக் குறைப்பது) சாத்தியமாகி விடும்!

ஆனால், ஆங்கில பெரிய எழுத்துக்களைப் போல, நெருக்கமான / ஒரே அளவிலான எழுத்துருக்களை வடிவமைப்பது தமிழைப் பொறுத்தவரை மிகவும் கடினமான ஒன்று! எழுத்து(ரு)க்களின் வடிவத்தை மாற்றினால் யாருக்கும் புரியாது - அது ஏற்றுக் கொள்ளத் தக்கதும் அல்ல!

மாறாக, ஒரே உயரத்தில் அனைத்து எழுத்துக்களையும் வடிவமைத்தாலோ - எழுத்துக்கள் பெரிதும் சிறிதுமாய் தோன்றி வாசிப்பில் சிரமம் / குழப்பம் ஏற்படுத்தும் - பார்ப்பதற்கும் அழகாகவும், சீராகவும் இராது! உதாரணத்திற்கு, நண்பர் புதுவை செந்தில் தன் கைப்பட எழுதி அனுப்பிய எழுத்துக்களைப் பாருங்கள் (அவரின் ஆர்வத்திற்கும், முயற்சிக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!). என் பெயர் எழுதப் பட்டுள்ள மூன்றாவது வரியில், எழுத்துக்கள் சிறிதும் பெரிதுமாய் ஒழுங்கற்றுத் தெரிவதைப் பார்க்கலாம் (கீழே)!
எனவே, எழுத்துக்களை ஒரே உயரத்தில் அமைக்க முயற்சிப்பதை விட, அவற்றின் உயரத்தை கூடுமான வரை குறைக்க முயற்சிப்பது சிறந்த வழிமுறையாக இருக்கும் என்பது என் கருத்து! உயரமான எழுத்துக்களின் தலை மற்றும் கால் பகுதிகளில் இருக்கும் வளைவு நெளிவுகளை கட்டுக்குள் வைப்பதன் மூலமும் (இயன்றால் முற்றிலும் தவிர்ப்பது); உடல் பகுதியின் உயரத்தை சற்றே குறைப்பதன் மூலமும் இதை செயல்படுத்தலாம்! உடல் பகுதி தவிர்த்து, தலை மற்றும் கால் பகுதிகளில் உயரம் குறைவாக (உ.ம்: த்) இருக்கும் ஏதாவது ஒரு எழுத்தை மாதிரியாகக் கொண்டு - மற்ற அனைத்து எழுத்துக்களின் உயரமும், இந்த மாதிரி எழுத்தின் உயரத்திலேயோ அல்லது அதை விட குறைவாகவோ இருப்பது போல வடிவமைக்க முயற்சிக்கலாம்!

மேற்சொன்ன விதிகளைப் பின்பற்றி, FontForge, Fontographer போன்ற Font Editor Software-களின் துணையுடன், எந்த ஒரு எழுத்துருவையும் நம் தேவைக்கேற்ப மாற்றி அமைத்திட முடியும்! இதைச் செய்திட, எனக்குத் தெரிந்து மூன்று வழிமுறைகள் உள்ளன: 

வழிமுறை 1 - Create new Fonts (Hand written / Digitally designed):
Font Editor-களைக் உபயோகித்து, முற்றிலும் புதிய எழுத்துருக்களை உருவாக்க முடியும்! கையால் எழுதப் பட்ட எழுத்துக்களை ஸ்கேன் செய்தோ, அல்லது முழுக்க முழுக்க டிஜிட்டலில் எழுத்துக்களை வடிவமைத்தோ - புதிய எழுத்துருக்களை உருவாக்கலாம்! Typography துறையில் தேர்ச்சி பெற்றவர்களால் மட்டுமே இதை சரியாகச் செய்ய இயலும்

வழிமுறை 2 - Edit images of existing Fonts and convert them back to TTF:
ஏதாவது ஒரு தமிழ் எழுத்துருவில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்களையும், Image Files ஆக convert செய்து, பிறகு அவற்றின் உயரத்தைக் குறைக்கலாம்! உதாரணத்திற்கு, போட்டோஷாப் துணையுடன் நான் மாற்றி அமைத்த "லதா" மெய்யெழுத்துக்களை இங்கே காணலாம்! இந்த விளக்கப் படம், எழுத்துக்களின் உயரங்களை எவ்வாறு குறைக்கலாம் என்பதைக் காட்ட உதவும் உதாரணப் படம் (Sample Image) மட்டுமே - எழுத்துரு (Font) அல்ல! இவ்வாறு, Edit செய்யப்பட்ட எழுத்துக்களை (Image Files) ஒன்றிணைத்து, மீண்டும் ஒரு எழுத்துருவாக மாற்றுவது சாத்தியம் (using font editors like FontForge) - ஆனால் இது சற்றே தலைவலி பிடித்த வேலை!
  
வழிமுறை 3 - Modify outlines of existing Fonts / Glyphs by directly editing TTF files:
Font Editor-கள் மூலம் எழுத்துருக்களை, நேரடியாக எடிட் செய்யலாம் - இருப்பவற்றிலேயே மிகவும் எளிதான வழிமுறையும் இது தான்! உதாரணத்திற்கு, FontForge என்ற இலவச மென்பொருளின் மூலம் Glyph-களின் உயர அகலங்களை, வேண்டியபடி மாற்றிக் கொள்ளலாம்! "Scale the selection" என்ற option-ஐ உபயோகித்து, உயர அகலங்கள் - Proportionate ஆக இருக்குமாறு சிறிதாக்கலாம்! Manual ஆக இழுத்து, வளைத்து எடிட் செய்வது சாத்தியம் என்றாலும், அவ்வாறு மாற்றப் படும் எழுத்துக்களின் வடிவங்கள் Proportionate ஆகவும், வளைவுகள் சீராகவும் இருக்காது! Scaling மூலம் செய்ய முடியாத மாற்றங்களை மட்டும் manual ஆக எடிட் செய்து மாற்றிக் கொள்ளலாம்! Manual & Scale ஆப்ஷன்கள் மூலம் மாற்றப்பட்ட மாதிரி எழுத்துக்களை இங்கே காணலாம் (வலது)!

குறிப்பு: இந்த மூன்று வழிமுறைகளிலும் சிக்கலான பகுதி எதுவெனில் - புள்ளி, கொம்பு, சுழி போன்ற குறியீடுகள் - 'க ங ச' எனத் தொடங்கும் முதல் வரிசை உயிர்மெய்யெழுத்துகளோடு சரியாக பொருந்துமாறு - ஒவ்வொரு எழுத்தும் / குறியீடும் மிகச் சரியான உயரத்தில் Align செய்யப் பட வேண்டும். எனவே, மெய்யெழுத்துக்களின் baseline-ஐ மாற்றுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்! ஏனெனில், பெரும்பாலான உயிர்மெய்யெழுத்துக்கள், இரண்டு Unicode Tamil Character-களை ஒன்றிணைத்தே உருவாக்கப் படுகின்றன - Alignment சற்று பிசகினாலும் தொல்லை தான்!

எழுத்துரு பற்றிய எளிய பரிசோதனைகளின் முடிவில்....

மூன்றாவது வழிமுறையைப் பின்பற்றி, FontForge-ன் உதவியுடன், "Latha" எழுத்துருவை (TrueType Font file) நேரடியாக Edit செய்து (Scale down the font size, adjust the baselines and few other manual glyph adjustments) செய்து, உயரம் சீராக்கப்பட்ட எழுத்துருக்களை உருவாக்கி உள்ளேன்! இதற்கு மிகக் குறைந்த வரி இடைவெளியே போதும் என்பதால், எழுத்துக்கள் இடிக்காமல், பலூன்களில் கூடுதல் வரிகளை அடைக்கலாம்! உதாரணத்திற்கு, கீழே உள்ள படத்தைப் பார்க்கவும் - பலூனின் அளவை அதிகரிக்காமலேயே, கூடுதல் வரியை இணைக்க முடிந்திருப்பதைக் காணலாம்!
மாற்றப் பட்ட எழுத்துருக்கள் - ஒரு Panel உதாரணம்!
குறிப்பு: மேற்கண்ட உதாரணப் படத்தை, பிரிண்ட் செய்து பார்க்க விரும்பினால், இதன் High Resolution Image-ஐ இங்கே தரவிறக்கலாம்!

கீழ்காணும் முழுப் பக்க உதாரணத்தில்,
  • முத்து காமிக்ஸ் மூலத்தில் உள்ள அதே வசனங்கள் கிட்டத்தட்ட அதே அளவிலான எழுத்துக்களுடன் - பலூன்களில் அடைக்கப் பட்டிருப்பதையும்;
  • பலூன்களின் வடிவம் (design) மாறாமலும், சித்திரங்கள் கூடிய வரை மறைக்கப் படாமலும் - வேண்டிய இடங்களில் மட்டும் பலூன்கள் லேசாக பெரிதாக்கப் பட்டுள்ளதையும்;
  • லதா & மாற்றி அமைக்கப் பட்ட லதா - இவ்விரு எழுத்துருக்களும் தேவைக்கேற்ப உபயோகப்படுத்தப் பட்டிருப்பதையும்;
  • ஒரே அளவிலான எழுத்துருக்கள் (Font size) உபயோகப் படுத்தப் பட்டிருப்பதையும்;
  • முத்து காமிக்ஸ் மூலத்தோடு ஒப்பிடுகையில், எழுத்துக்களைக் காட்டிலும் சித்திரங்கள் தூக்கலாகத் தெரிவதையும் காணலாம்!
மாற்றப் பட்ட எழுத்துருக்கள் - முழுப் பக்க உதாரணம்!
குறிப்பு: மேற்கண்ட உதாரணப் பக்கத்தை, பிரிண்ட் செய்து பார்க்க விரும்பினால், இதன் High Resolution Image-ஐ இங்கே தரவிறக்கலாம்!

இதன் மூலம், தமிழ் எழுத்துருக்களை சற்றே மாற்றி அமைப்பதன் மூலம், குறைந்த அச்சு இடத்தில் (print space) கூடுதல் எழுத்துக்களை / வரிகளை இணைக்கலாம் என்பது நிரூபணமாகிறது!

சில முக்கியமான குறிப்புக்கள்:
  • இது "லதா" எழுத்துருவின் மாற்றியமைக்கப் பட்ட வடிவம் மட்டுமே - முற்றிலும் புதிதாக உருவாக்கப் பட்ட எழுத்துரு அல்ல!
  • இதை Proof of concept-க்காக மட்டும் செய்துள்ளதால், (மிக) அதிக நேரத்தை செலவழிக்காமல் - ஓரளவுக்குத் தான் எடிட் செய்துள்ளேன்! ஆகவே, இது முழுமையானதோ, குறைகள் அற்றதோ அல்லது உடனடி பயன்பாட்டுக்கு ஏற்றதோ அல்ல!
  • இந்த எழுத்துருவைக் கொண்டு எழுதப்படும் எழுத்துக்கள் சற்றே வித்தியாசமானதாகத் தோன்றலாம் - எழுத்துக்களின் ஒட்டுமொத்த உயரத்தைக் குறைப்பதற்காக, அவற்றின் இட அமைப்பு (from baseline) மற்றும் பல எழுத்துக்களின் தலை, உடல் மற்றும் கால் பகுதிகளின் உயரம் - இவை அனைத்தும் வெகுவாக மாற்றப்பட்டுள்ளதன் விளைவு தான் இது! நிபுணர்களால் மேலும் சிறப்பாக உயரத்தைக் குறைக்க முடியும்!
  • "லதா" எழுத்துரு Microsoft நிறுவனத்துக்கு சொந்தமானது என்பதால், இதன் மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தை - பொதுப் பயன்பாட்டுக்கு பகிர்வதில், Copyright சிக்கல்கள் இருக்கலாம் - எனவே, இதை ஒரு Proof of concept-க்கான பரிசோதனையாக மட்டுமே பார்க்கவும்!
Leading பற்றிய ஒரு பிழை திருத்தம்:
இதற்கு முன்னர் அளித்திருந்த உதாரணங்களில், Font-ன் அளவு 8pt என்றால், அதன் Default Leading 9.5pt என்று சற்றே தவறாக எழுதி இருந்தேன் - ஆனால், 9.6pt (8Pt * 1.2 = 9.6Pt) என்பதே சரியாகும் (120% of the Font Size is set as the default leading value in Adobe products like Photoshop, InDesign & Illustrator). எனவே, நேரம் கிடைக்கும் போது, முந்தைய உதாரணப் படங்களில் - Default Leading-ஐ மாற்றியும் (every point counts!), மேலதிக விளக்கங்கள் / எச்சரிக்கை வாசகங்கள் சேர்த்தும் (தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்க) வெளியிடுவேன்!

இறுதியாக...

பிற மொழிகளில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்படும் காமிக்ஸ்களில், தமிழ் எழுத்துக்களின் ஒட்டுமொத்த உயரம் ஏற்படுத்தும் (ஸ்பீச் பலூன் சார்ந்த) இடப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்றவாறு முற்றிலும் புதிய எழுத்துருக்களை உருவாக்கும் முயற்சிகளில் துறை சார்ந்த வல்லுனர்கள் ஈடுபட வேண்டும் என்பதே என் ஆசை!

இப்பதிவில் சொல்லப் பட்டுள்ளது போல, குறைவான / ஓரளவுக்கு சீரான உயரம் என்பதை அடிப்படையாகக் கொண்டு அத்தகைய எழுத்துக்களை வடிவமைக்கலாம் - தேவைப்பட்டால் சில எழுத்துக்களின் அகலத்தையும் குறைத்துக் கொள்ளலாம்! அல்லது, இதை விட சிறப்பான மாற்று வழிமுறைகளைக் கண்டறியலாம்!

'குறிப்பிட்ட ஒரு தமிழ் காமிக்ஸ் பதிப்பகத்தின் நன்மைக்காக' என்ற குறுகிய பார்வையைத் தாண்டி, காமிக்ஸ் ஆர்வலர்கள் / டிஸைனர்கள் / ஆர்டிஸ்ட்கள் அனைவரும் இணைந்து, Space optimize செய்யப் பட்ட எழுத்துருக்களை வடிவமைக்கும் முயற்சிகளில் இறங்க வேண்டும்! தற்போது இருக்கும் தமிழ் காமிக்ஸ் பதிப்பகங்களிற்கும் (Lion/Muthu, ACK and other small players) மற்றும் எதிர்காலத்தில் வரவிருக்கும் காமிக்ஸ் பதிப்பகங்களுக்கும் அத்தகைய முயற்சிகள் உதவியாக இருக்கக் கூடும்!

Digital Designing-ல் தொழில் ரீதியான அனுபவம், Photoshop-ல் முறையான பயிற்சி மற்றும் Typography-ல் முன்னனுபவம் இவை ஏதும் இல்லாமலேயே - Adobe Photoshop Elements & FontForge இவற்றின் துணையுடன், உதாரண எழுத்து வடிவங்கள் மற்றும் மாற்றியமைக்கப் பட்ட எழுத்துருக்களை என்னால் உருவாக்க முடிகிறது என்றால்; இத்துறையில் அனுபவம் உள்ள திறமைசாலிகளால், தொழில்முறை பயன்பாட்டிற்கு ஏற்ற முற்றிலும் புதிய அழகான எழுத்துருக்களை நிச்சயம் உருவாக்க முடியும் - அந்த நம்பிக்கை எனக்கு பலமாக இருக்கிறது!

நன்றி: இந்தக் கட்டுரையின் நீளம் மிக மிக அதிகம் என்றாலும், தமிழ் எழுத்துருக்கள் / மொழிபெயர்ப்பு காமிக்ஸ்கள் பற்றிய விரிவான தகவல்களும், ஆய்வு அறிக்கைகளும் - ஒரே இடத்தில் / இணையப் பக்கத்தில் தொகுக்கப் பட வேண்டியது அவசியம் என்று கருதினேன்! அதனாலேயே, இதைத் தனித்தனி பதிவுகளாக பிரிக்காமல், ஒரே பதிவாக (தவணை முறையில்) வெளியிட்டேன்! தேவைப்படும் போது, சிறு சிறு திருத்தங்களை இக்கட்டுரையில் செய்து கொண்டே இருப்பேன்! நேரம் கிடைக்கும் போது, இக்கட்டுரையை மின்புத்தகமாக வெளியிடும் எண்ணமும் உள்ளது! இப்போதைக்கு உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன் - மிகவும் பொறுமையுடன், தொடர்ந்து வாசித்ததிற்கு மிக்க நன்றி நண்பர்களே!

( முடிந்தது! )

கூடுதல் தகவல்கள்:

FontForge - An Outline Font Editor - அறிமுகம்:
Font-களை வடிவமைக்க / மாற்றியமைக்க பல்வேறு மென்பொருள்கள் கிடைக்கின்றன! உதாரணத்திற்கு, Fontlab என்ற நிறுவனத்தின் FontLab Studio 5 & Fontographer ஆகிய மென்பொருள்கள் மிகவும் பிரபலம் - அவற்றின் விலையும் மிக அதிகம் தான்!

நான் அறிந்த வரையில், இலவசமாக கிடைக்கும் மென்பொருள்களில் தரமானது FontForge மட்டுமே! ஆனால், இதைப் பயன்படுத்த ரொம்பவே பொறுமை அவசியம்! User Interface எளிமையாக இருக்காது என்பதோடு, இதன் விண்டோஸ் பதிப்பு அடிக்கடி Crash ஆகி விடும் - எனவே Font-களை edit செய்யும் சமயம், அடிக்கடி save செய்வது நலம் - இல்லை என்றால் அதுவரை செய்த மாற்றங்கள் அனைத்தும் வீணாகி விடும்!

பொறுமையும், நேரமும் இருந்தால் தமிழ் எழுத்துக்களை, FontForge-ன் துண்டையுடன் முறுக்கு பிழிவது போல பிழிந்தும், இடியாப்பத்தை சிக்கல் எடுப்பது போல இழுத்தும் விளையாடலாம்! :) உதாரணத்திற்கு, "இ"-யின் உயரத்தை எப்படி குறைத்துள்ளேன் என்பதை கீழே படத்தில் காணலாம் (இ, ஐ, ஜ, தூ, டூ, ழ - போன்ற பல எழுத்துக்கள் பொறுமையை ரொம்பவே சோதித்து விட்டன!)

சரண்யா செல்வராஜ் எனும் பதிவர், FontForge-ஐ உபயோகித்து புதிய தமிழ் எழுத்துருக்களை உருவாக்குவது எப்படி என்பது பற்றி அழகாக விளக்கி உள்ளார்! நேரம் கிடைத்தால் முயற்சித்துப் பாருங்களேன்: Creating Tamil Fonts

[ English Vs Tamil Fonts A comparative Study And Recommendations For Creating Print and Space Efficient Tamil Fonts / The importance of Height optimized Tamil Fonts in Comic Books! ]
Image Credits: Wikipedia & fonts.com

கருத்துகள்

  1. //அது, ஷேர் ஆட்டோவில் திணிக்கப்பட்ட பயணிகளைப் போல, // ஹா ஹா ஹா

    துரை எதோ புத்சா சொல்லிகொடுக்கப் போகுது.. அடுத்த பாகத்திற்கு வருகிறேன்

    பதிலளிநீக்கு
  2. என்னய்யா இது அநியாயமா இருக்குது? எழுதி முடிச்சாச்சினா போடுறதுக்கென்ன? என்னா பில்டப்பு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹி ஹி... எல்லாம் லயன் வலைப்பூ பார்த்து கத்துக்கிட்டது தான்! ;) இப்படித் தான் பிட்டு பிட்டா பதிவைப் போட்டு டென்ஷன் பண்ணுவோம்! :D

      நீக்கு
  3. தமிழுக்கும் பெரிய எழுத்து(ரு)க்களை வடிவமைத்து விட்டீர்களா...? முயற்சி வெற்றி பெறவும், இப்போதைய தள வடிவமைப்பிற்கும் வாழ்த்துக்கள்...!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தனபாலன்! அப்படிப் பட்ட எழுத்துருக்களை (Fonts) வடிமைப்பதற்கான பரிந்துரைகள் மற்றும் உதாரண வடிவங்களை மனதில் வைத்துள்ளேன். (எடுத்துக்காட்டு) எழுத்துரு வடிவாக்கம் இன்னமும் முழுமை பெறவில்லை - இந்தப் பதிவினை துண்டு துண்டாக பிரித்துப் போடுவதற்கு அதுவும் ஒரு காரணம் (போட்டோஷாப் / டிஸைனிங் வேலைகள் மீதமுள்ளன!). தவிர, எழுத்துரு என்பது ஒரு Style மட்டுமே என்பதால் அதை யாரும், தாங்கள் விரும்பிய வண்ணம் வடிவமைத்துக் கொள்ள முடியும். எனவே, இந்தப் பதிவின் நோக்கம் பலதரப்பட்ட எழுத்துருக்களை வழங்குவது அல்ல; மாறாக அச்சில் இடம் சேமிக்கக் கூடிய வகை எழுத்துருக்களுக்கு ஒரு வடிவமைப்பு வழிகாட்டியாக இருப்பது!

      நீக்கு
  4. ==லெட்டரிங் ஆர்டிஸ்ட் & மொழிபெயர்ப்பாளர் - இவர்களிடையே தேவைப்படும் கூட்டு முயற்சி==

    இதுதான் முக்கியமானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை! ஒரு திரைப்பாடலின் வெற்றிக்கு இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் இணைந்து செயலாற்றுவது எவ்வளவோ முக்கியமோ, அவ்வளவு முக்கியம்! :)

      நீக்கு
  5. வாழ்த்துகள் கார்த்தி, இந்த பதிவு ஒரு நல்ல முயற்சி! தமிழ் எழுத்துருக்களின் வரலாறு- மிக அறிய தகவல். கிட்டத்தட்ட ஒரு பதினைந்து நிமிடங்களுக்கு அந்த தகவல் படத்தில் இருந்து பார்வையை விளக்க முடியவில்லை. இதை referenceசாக வைத்து கல்வெட்டுக்களை எளிதில் decipher செய்து விடலாம். மொபைலில் ஏற்றிக்கொண்டேன். நன்றி.

    ஒரு காலத்தில் designer தமிழ் fontsசை உருவாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டிருன்தேன். பல காரணங்களால் அவற்றை முடிக்க முடியவில்லை. இந்த முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  6. // ஒரு முன்(னெச்சரிக்கைக்) குறிப்பு: இந்தப் பதிவின் தலைப்புக்கும் ஜெ.மோ. அவர்களின் கட்டுரைக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது; //
    உங்களால அவரோட பதிவை நான் படிக்கவேண்டியதா போச்சு! :D

    // ஷேர் ஆட்டோ //
    Great Example!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உங்களால அவரோட பதிவை நான் படிக்கவேண்டியதா போச்சு! :D//
      Avarin andhap pathivaip patri neengal enna ninaikkireergal?! :D

      நீக்கு
  7. ஆஹா... தமிழுக்கும் பெரிய எழுத்துரு...வா?
    புதுமைதான்... உடனே அடுத்த பாகம் ப்ளீஸ்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த பாகத்தையும் இதே பதிவில் இணைத்துள்ளேன் நிஜாம் சார்! Refresh செய்து படியுங்கள் ப்ளீஸ்! :)

      நீக்கு
  8. Very nice article. I didn't think much about this before..... I used to choose Elango font as it is looking good and clear when we used in comics. Waiting for your suggestions in solving the space crunch issue....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீனி! மூன்றாம் பாகம் தற்போது இணைக்கப் பட்டுள்ளது! (தொடரும்!) :)

      நீக்கு
  9. பதில்கள்
    1. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி விட்டே, என் உடம்பை ரணகளம் ஆக்கிடுவீங்களே! ;)

      நீக்கு
  10. தமிழில் காமிக்ஸ் என்பது அரிதாகி போய் வருவதற்கு, இந்த எழுத்துருவு பிரச்சனையும் ஒன்று என்பது உண்மையான சமாச்சாரம். அதுவும் கதை கரு அதிகம் விரியும் கிராபிக் நாவல் விஷயத்தில் இது பள் இளித்து விடுகிறது. இந்த பிரச்சனைகளை சரிகட்டதான் ஆரம்ப கால அமர் சித்திர கதை, மற்றும் பூந்தளிர் இதழ்களில் கைகளில் ஒரே கோர்வையில் நெருக்கமாக எழுத்துருகளை தமிழில் வடிதிருப்பார்கள் போல...

    அவற்றை சாம்பிளாக கொண்டு, காமிக்ஸுக்காக ஒரு எழுத்துருவை யாரேனும் வடிவமைத்தால் நன்றாக இருக்கும். லயன் முத்து என்று ஒன்றுக்கு இரண்டு இதழ்கள் வெளியிடும் நிறுவனமே இதை முன்வந்து செய்தால் ஒழிய நடவாத காரியம் போல தெரிகிறது.

    சிறந்த ஆராய்வு பதிவு கார்த்தி. தமிழ் எழுத்துருகளின் அந்த பரிணாம வளர்ச்சியை சமீபத்தில் தான் Dakshin Chitra வில் பார்க்கும் வாய்ப்பு கிட்டிட்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்த பிரச்சனைகளை சரிகட்டதான் ஆரம்ப கால அமர் சித்திர கதை, மற்றும் பூந்தளிர் இதழ்களில் கைகளில் ஒரே கோர்வையில் நெருக்கமாக எழுத்துருகளை தமிழில் வடிதிருப்பார்கள் போல... அவற்றை சாம்பிளாக கொண்டு, காமிக்ஸுக்காக ஒரு எழுத்துருவை யாரேனும் வடிவமைத்தால் நன்றாக இருக்கும். //

      கையால் எழுதும்போது சாத்தியமாகும் ஒரு விஷயம், அதே கையெழுத்தை Font ஆக மாற்றும்போது செய்ய இயலாமல் போகிறது. அது, ஒவ்வொரு line-க்கும் இடையிலுள்ள space-ஐ சிக்கனப்படுத்துவது. மேலே உள்ள வரியில் ஒரு எழுத்தின் கீழ்பகுதியில் கொக்கி வரும்பட்சத்தில் (Ex: யூ, மு, ணு), அதன் நேர்கீழே அடுத்த வரியில் வரும் எழுத்தின் மேலே கொக்கி இருப்பின் (Ex: கி, இ ஷூ) கையால் எழுதுபவர், கொஞ்சம் adjust செய்து ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் எழுத இயலும். மிகக்குறைவான Line space-உடன் வாசிப்போருக்கு உறுத்தல் இல்லாமல் இதை செய்ய இயலும் (உதாரணம் 80's ல் பூந்தளிர்).

      ஆனால் ஒரு font ஆக அந்தக்கையெழுத்தை மாற்றும்போது, line space-ஐ அந்தளவுக்குக் குறைப்பது சாத்தியமில்லை - காரணம், மேலே குறிப்பிட்ட Manual adjustments இன்றி permanent ஆக எல்லா எழுத்துக்கும் மேலேயும் + கீழேயும் கொக்கி இருப்பதாக assume பண்ணி எழுத்துக்களின் உயரத்தை நிர்ணயிப்பதுதான். Line space-ஐ குறைப்பது ஓரளவுக்குமேல் சாத்தியமில்லாமல் போவதால் நாம் எவ்வளவுதான் முயற்சித்தாலும், ஒரு 10% அளவுகூட Spaceஐ சிக்கனப்படுத்த இயலாது horizontally & vertically (without compromising readability).

      எப்படிப்பார்த்தாலும் Readability compromise ஆவதால், நமது வழக்கமான Fonts-ஐயே 15அல்லது 20% சிறிதாக்கிப் பயன்படுத்திவிடலாம். ஆங்கில Original-களிலலேயே நெருக்கியடித்து, வாசிப்பதற்குக்கடினமான முறையில் lettering அமைந்திருப்பதைக்காண முடிகிறது.

      // லயன் முத்து என்று ஒன்றுக்கு இரண்டு இதழ்கள் வெளியிடும் நிறுவனமே இதை முன்வந்து செய்தால் ஒழிய நடவாத காரியம் போல தெரிகிறது. //
      சாத்தியமில்லை, அவ்வாறு எதிர்பார்பப்பதும் நியாயமில்லை. ஏனெனில் Font தயாரிப்பதையே பிரதானப் பணியாக செய்யும் நிறுவனங்கள்கூட இம்முயற்சிகளில் ஈடுபட்டு ஒரு Result தந்ததாகத்தெரியவில்லை, அல்லது ஓரளவுக்காவது optimize செய்யப்பட்ட அரிய fonts நம்மை reach ஆகவில்லை.

      நீக்கு
    2. கருத்துக்களுக்கும், தொடர் வாசிப்புக்கும் நன்றி ஃரபிக் & ரமேஷ்! அடுத்த வாரத்திற்குள்ளாவது கட்டுரையை முடிக்க முயற்சிக்கிறேன்! :D

      @ரமேஷ்:
      //Line space-ஐ குறைப்பது ஓரளவுக்குமேல் சாத்தியமில்லாமல் போவதால் நாம் எவ்வளவுதான் முயற்சித்தாலும், ஒரு 10% அளவுகூட Spaceஐ சிக்கனப்படுத்த இயலாது//
      சில சமயங்களில் 10% to 20% வரை spacing-ஐ குறைக்க முடியும் ரமேஷ்! வரும் பகுதிகளில் உதாரணங்களைப் பகிர்கிறேன்...

      நீக்கு
    3. @Karthik , I mean reducing overall occupied space by 10% by adjusting line space and size/style of கொக்கிகள்.

      Curious to see your examples though but in practical, when 3+ lines of balloon being considered (which means 2 lines outside and one or more lines in the middle), the line space reduction will impact readability.

      நீக்கு
  11. இப்போது தான் முழுமையாய் படித்தேன் - எனக்கு தெரிந்து அச்சிடும் புத்தகங்களில் ஒரு சமச்சீர் நிலை கொணர, பல பிரபல பதிப்பகங்கள் தங்களது சுயமான fontகள் வைத்துள்ளன - டிசைன் செய்யப்பட்டவைதான்! இவர்களது எல்லா புத்தகங்களும் இதனால் ஒரே போல் இருக்கும்.

    காமிக்ஸ்க்கு இருக்கும் ஒரே பிரபல பதிப்பகம் இவர்கள் தான் என்பதால் .. சரி இங்க வேணாம் ... :-)

    வரம் வாங்கிய பேனாக்களும், கீ-போர்ட்களும் ... ஹ்ம்ம் .. நான் வரல இந்த விளையாட்டுக்கு .. உள் டப்பியிலே பேசலாம் :-p

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // காமிக்ஸ்க்கு இருக்கும் ஒரே பிரபல பதிப்பகம் இவர்கள் தான் என்பதால் .. சரி இங்க வேணாம் ... :-)

      வரம் வாங்கிய பேனாக்களும், கீ-போர்ட்களும் ... ஹ்ம்ம் .. நான் வரல இந்த விளையாட்டுக்கு .. உள் டப்பியிலே பேசலாம் :-p //

      சைக்கிள் கேப் கிடைத்தாலும் உள்ளை ரயிலை விட Try பண்ணுவது அடுக்குமா? நியாயமா? :D

      நீக்கு
    2. //சைக்கிள் கேப் கிடைத்தாலும் உள்ளை ரயிலை விட Try பண்ணுவது அடுக்குமா? நியாயமா? :D//
      ராகவன் எப்பவுமே அப்படித் தான் ரமேஷ்! :D விட்டால் சமச்சீர் கல்வி முறையைக் கூட பிரகாஷ் பப்ளிஷர்ஸ் தான் நடைமுறைப் படுத்த வேண்டும் என்பார்! ;)

      பதிப்பகத்தார் புதிதாக Font-களை டெவலப் செய்கிறார்களோ இல்லையோ, குறைந்த பட்சம் வெவ்வேறு வகை Font-களையாவது முயற்சித்துப் பார்க்கலாம் - ஆனால் Experiment செய்வதில் அவர்களுக்கு (லயன் / முத்து) அவ்வளவாக ஆர்வம் இல்லை போலும்!

      நீக்கு
    3. // ஆனால் Experiment செய்வதில் அவர்களுக்கு (லயன் / முத்து) அவ்வளவாக ஆர்வம் இல்லை போலும்! //

      நமக்குத் தெரியாதே. ஒரு 50 பக்க முழுப்புத்தகத்தின் அளவுக்கு வேலை செய்து Print-ல் எப்படி உள்ளதெனப் பார்க்கும்போது வாசிப்பதற்குக் கடினமாக இருந்திருக்கலாம். அதனால்கூட தற்போதைய Standard Fonts-ல் அவர்கள் Settle ஆகியிருக்கலாம்.

      By the way coming to main topic, when it comes to making new fonts, the final tweaks and adjustments will take tremendous amount of time, to test with print, finding and fixing odd pieces etc repeatedly ;)

      நீக்கு
    4. //நமக்குத் தெரியாதே. ஒரு 50 பக்க முழுப்புத்தகத்தின் அளவுக்கு வேலை செய்து Print-ல் எப்படி உள்ளதெனப் பார்க்கும்போது வாசிப்பதற்குக் கடினமாக இருந்திருக்கலாம். அதனால்கூட தற்போதைய Standard Fonts-ல் அவர்கள் Settle ஆகியிருக்கலாம்.//
      ஓகே, நீங்கள் வழக்கம் போல defensive mood-க்குப் போய் விட்டதால், நான் மேற்கொண்டு அது பற்றி விவாதிக்க விரும்பவில்லை! ;) :D

      //By the way coming to main topic, when it comes to making new fonts, the final tweaks and adjustments will take tremendous amount of time, to test with print, finding and fixing odd pieces etc repeatedly ;)//
      ஒத்துக் கொள்கிறேன்! ஏற்கனவே சொன்னது போல, இந்தக் கட்டுரையின் நோக்கம், எழுத்துருக்களை வடிவமைத்து தமிழ் காமிக்ஸ் பதிப்பாளர்களுக்கு readymade ஆகத் தருவதல்ல! ;) மாறாக, இது போன்ற எழுத்துருக்களை வடிவமைக்க சில யோசனைகளைப் பகிர்வது! ஆர்வம் இருப்பவர்கள் உபயோகித்துக் கொள்ளலாம்! ;)

      என்னைப் பொறுத்த வரையில், நானும் அத்தகைய ஒரு எழுத்துருவை வடிவமைக்க முயற்சி செய்து வருகிறேன், அது வெற்றி பெற்றால் எனக்கு மகிழ்ச்சியே! :)

      நீக்கு
    5. ஆஹா .. மறுபடியும் LIC :-) நடுவுல என்ன வெச்சு ஒரு மோனோ ரயில் வேற .. ஹ்ம்ம் :-D

      நீக்கு
    6. ம்ஹீம்... இந்த முறை நான் ரமேஷ்கிட்ட ஏமாற மாட்டேன் ராகவன்! ;) கொஞ்சம் அசந்தாலும் அவரோட சேர்ந்து LIC பில்டிங் கட்ட வேண்டியிருக்கும், அப்புறம் இந்தக் கட்டுரையை முடிக்க முடியாது! :D

      நீக்கு
    7. // ஓகே, நீங்கள் வழக்கம் போல defensive mood-க்கு //

      தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். Public-க்காக ஒரு நல்ல Suggestion-ஐ வைக்கும்போது அது சம்பந்தப்பட்டோரின் தோளில் கைபோடுவது வரை செல்லலாம். உள்ளே பணியன் போடவில்லையா என்ற கேள்விகளுக்கு செல்வது நியாயமில்லை.

      "Experiment செய்வதில் அவர்களுக்கு (லயன் / முத்து) அவ்வளவாக ஆர்வம் இல்லை போலும்! " - என்கிற ரீதியிலான கைநீட்டல்கள் இம்மாதிரி Suggestion-களை தர்மசங்கடத்தில் நிறுத்திவிடும். Stay within topic, then expect the same from comments.

      Sorry for my interference - just keep going within main topic, as the main topic itself has several branches to explore.

      நீக்கு
    8. //"Experiment செய்வதில் அவர்களுக்கு (லயன் / முத்து) அவ்வளவாக ஆர்வம் இல்லை போலும்! " - என்கிற ரீதியிலான கைநீட்டல்கள்//
      பதிவில் அப்படி எதுவும் இல்லையே ரமேஷ்?!

      //Stay within topic, then expect the same from comments.//
      that was part of a light mannered response to one of your / Raghavan's comment

      //just keep going within main topic, as the main topic itself has several branches to explore.//
      எனக்கும் தெரியும்! ஆனால், தேவைப்படும் போது சில உதாரணங்கள் அளிப்பதை என்னால் தவிர்க்க முடியாது! You are welcome to comment / fume on them! ;) But I am in no mood to argue with you! :D

      நீக்கு
    9. // பதிவில் அப்படி எதுவும் இல்லையே ரமேஷ்?! //

      Comment-ல் தான் இதைத் தெரிவிக்கிறீர்கள் Ok. ஆனால் இது உங்களுடைய பார்வையா அல்லது தகவலா என்பது தெரியாதவரையில் Unfair-ஆன விஷயம்தான். அவர்கள் வெவ்வேறு Fonts-உடன் Experimental-ஆக ஏற்கெனவே உழைத்திருக்கும் பட்சத்தில் (means without publishing but with print) நம்முடைய இந்த Comments misleading அல்லவா?

      Also would like to point one thing, I don't defend anyone. May be I am trying to defend logic.

      நீக்கு
    10. //நமக்குத் தெரியாதே. ஒரு 50 பக்க முழுப்புத்தகத்தின் அளவுக்கு வேலை செய்து Print-ல் எப்படி உள்ளதெனப் பார்க்கும்போது வாசிப்பதற்குக் கடினமாக இருந்திருக்கலாம். அதனால்கூட தற்போதைய Standard Fonts-ல் அவர்கள் Settle ஆகியிருக்கலாம்//
      உங்களுடைய இந்த பார்வை / யூகம் / தகவலைப் போன்றதே என்னுடைய அந்த கேஷுவல் கமெண்டும்! ரொம்ப குழப்பிக் கொண்டு, பின்னூட்ட ஸ்பீச் பலூன்களை ஊதிப் பெரிதாக்க வேண்டாமே ப்ளீஸ்! ;)

      //Also would like to point one thing, I don't defend anyone. May be I am trying to defend logic.//
      திங்களன்று காலையில் இந்தப் பதிவைத் துவக்கினேன்! அன்று மாலை ஜாலியான சிறு கமெண்டு ஒன்று போட்டிருந்தீர்கள்! அன்றில் இருந்து பதிவை தினமும் புதுப்பித்து வருகிறேன்! ஆனால், இன்று காலை வரை பதிவின் முக்கிய சாரத்தைப் பற்றியோ, வேறு லாஜிக்கள் பற்றியோ நீங்கள் ஏதும் கருத்திடவில்லை!

      ஆனால், ரஃபிக் மற்றும் ராகவன் - இவர்கள் இருவரும் லயனின் பெயரை குறிப்பிட்டு சில கருத்துக்களை வெளியிட்ட பிறகு தான், அவர்களுக்கு பதில் கூறும் விதமாக உங்கள் கருத்துக்களை பகிரத் தொடங்கி இருக்கிறீர்கள்! அப்படி இருக்கும் போது, நீங்கள் Defend செய்வதாகத் தான் வெளிப்பார்வைக்குத் தெரியும்! இதை சரி என்றோ தவறு என்றோ சொல்ல வரவில்லை - you are welcome to do what you feel is right! :)

      நீக்கு
    11. // ஆனால், ரஃபிக் மற்றும் ராகவன் - இவர்கள் இருவரும் லயனின் பெயரை குறிப்பிட்டு சில கருத்துக்களை வெளியிட்ட பிறகு தான், அவர்களுக்கு பதில் கூறும் விதமாக //

      நிறையதான் Observe பண்ணுகிறீர்கள் - Spacing-ஐத்தவிர.

      ரஃபிக்கின் Comment-க்கு நான் பதில்போட ஒரே காரணம், அது நான் ஏற்கெனவே பரிச்சயப்பட்ட விஷயத்தில் ஒன்றியிருந்ததுதான். Exact-ஆக அவர் குறிப்பிட்ட பூந்தளிர் வகை தட்டையான கையெழுத்தை Font-ஆக மாற்ற முயற்சிக்கும்போது கிடைத்த Observation-ஐயே பகிர்ந்தேன் (more of a test result/observation of that particular type face, he mentioned).

      ராகவன் அவர்களின் விஷயம். Sorry, I have no explanation for each and every random thing. You can assume anything. No problem.

      நீக்கு
    12. //நிறையதான் Observe பண்ணுகிறீர்கள் - Spacing-ஐத்தவிர.//
      நீங்களும் தான்! ;) Spacing பற்றிய உங்கள் கருத்துக்கு நான் பதில் அளித்ததும், அதற்கு நீங்கள் மறுமொழி அளித்ததும் உங்களுக்கு மறந்து போய் விட்டது போலும்! ;)

      //சில சமயங்களில் 10% to 20% வரை spacing-ஐ குறைக்க முடியும் ரமேஷ்! வரும் பகுதிகளில் உதாரணங்களைப் பகிர்கிறேன்...//

      //ராகவன் அவர்களின் விஷயம். Sorry, I have no explanation for each and every random thing. You can assume anything. No problem.//
      அதைத் தானே நானும் செய்தேன்! ஏற்கனவே சொன்னது போல, ராகவனின் வழக்கமான பாணி நக்கல் கமெண்டுக்கு, நீங்கள் ஜாலியாக ஒரு பதில் போட்டு இருந்தீர்கள்! அதற்கு நானும் கேஷுவலாக ஒரு பதிலைப் போட்டேன்! அதை நீங்கள் தோண்டித் துருவி பனியன், சட்டை என்று ஆராய்ச்சி செய்தால் நான் என்ன செய்வதாம்?! ;)

      நீக்கு
    13. ஒத்துக்கறேன். மன்னிச்சு!

      ஒரு Correction, சொல்லவந்தது, ஒரு வார்த்தையில் மாறிவிட்டது:

      தவறு: //நிறையதான் Observe பண்ணுகிறீர்கள் - Spacing-ஐத்தவிர.//
      சரி: //நிறையதான் Observe பண்ணுகிறீர்கள் - Readability-ஐத்தவிர.//

      ஏன் இதைக் குறிப்பிடுகிறேனென்றால், Print job-ன் Readability-ஐ நாம் Computer Screen உதாரணங்களுடன் உணரவே / பகிரவே இயலாது. It requires deep experiments on paper print from the start itself - with almost preferred "size" only. Size matters for minimalist fonts.

      Of course, we can suggest concepts on geometry, but it will only help making a new style/decoration and there is no guarantee for readability in such approach. To answer your other part of question, this is exactly why I didn't make any productive comment from the beginning.

      நீக்கு
    14. //Print job-ன் Readability-ஐ நாம் Computer Screen உதாரணங்களுடன் உணரவே / பகிரவே இயலாது//
      உண்மை ரமேஷ்! பிரிண்ட் செய்து பார்த்தால் தான் தெரியும் - அது போன்ற பரிசோதனைகளுக்கு வீட்டிலிருக்கும் இன்க்ஜெட் பிரிண்டரை உபயோகிக்கிறேன்! கம்பியூட்டர் ஸ்க்ரீனிலும் ஓரளவுக்கு விளக்க / பகிர முடியும் - பொறுமை ப்ளீஸ்! :)

      //this is exactly why I didn't make any productive comment from the beginning//
      அதாவது, "நீங்க புடுங்குறது எல்லாமே தேவை இல்லாத ஆணிதான்!" அப்படின்னு சொல்ல வர்றீங்க?! :D (இது சும்மா ஜாலி கமெண்டு தான் - விளக்கம் வேண்டாம்!) :)

      உண்மையில் எனக்கு Typography-யிலோ, Font உருவாக்குவதிலோ துளியும் அனுபவம் கிடையாது (இன்று வரை!)! ஒரு பொழுதுபோக்குக்காக எனக்கு பிடித்த காமிக்ஸ் துறையில் இது போன்ற சிறுசிறு Experiment-களை செய்து பார்க்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்! :) சிறு வயதில் வீட்டிலேயே சினிமா ஓட்டியதைப் போன்ற ஒரு ஆர்வக் கோளாறு முயற்சியாகவும் இந்த எழுத்துரு பரிசோதனைகளைப் பார்க்கலாம்! :)

      நீக்கு
    15. //this is exactly why I didn't make any productive comment from the beginning//
      அதாவது, "நீங்க புடுங்குறது எல்லாமே தேவை இல்லாத ஆணிதான்!" அப்படின்னு சொல்ல வர்றீங்க?! :D (இது சும்மா ஜாலி கமெண்டு தான் - விளக்கம் வேண்டாம்!) :)

      அதை Harsh-ஆக எடுத்துக்கொள்ள வேண்டாம் கார்த்திக். Experiments எதுவுமே மரியாதைக்குறியவைதான் - result doesn't matter.

      ஆனா... ஒரு Designer-ஆக இங்கே (I mean comics cirlces) எனக்கு எப்பவுமே ஒரு பயம், ஒரு சிறிய Possibility தெரிந்தாலும், அதன் முழு பரிமாணமும் தெரியாமல் குறிப்பிட்ட Publisher-ஐ "இதை ஏங்க செயல்படுத்தலை?" என்று கேள்வி கேட்டு தலையில் கொட்டு வைக்கும் நடைமுறைதான். I don't mean you but others. முன்னெச்சரிக்கையாக மூக்கை நீட்டிவிட்டேன், not to defend publisher but to share some insights on limitations :D

      நீக்கு
    16. //அதை Harsh-ஆக எடுத்துக்கொள்ள வேண்டாம் கார்த்திக்.//
      No offense taken! :)

      //Experiments எதுவுமே மரியாதைக்குறியவைதான் - result doesn't matter.//
      exactly! பிடித்தமான ஒன்றை செய்தோம் / செய்கிறோம் என்ற மகிழ்ச்சி 'போனஸ்' ஆகக் கிடைக்கும்! :) அத்தகைய செயல்கள் பெரும்பாலும் 'வீனஸ்' கிரகத்தில் இருந்து வந்தவர்களுக்குப் (Read: மனைவி) பிடிப்பதில்லை! ;)

      நீக்கு
    17. யாருப்பா அது நீங்க அடிச்சிக்கற கும்மிக்கி எம்பேரு நடுவால இஸ்த்து உடுறது :-D ஆக மொத்தம் பத்தி பத்தியா பாத்தி கட்டி நான் தமிழ் காமிக்ஸ சொன்னேன்னு சொல்லீட்டு போய்டுங்க ;-)

      நீக்கு
    18. @Raghavan, ஒத்துக்கறேன்! உங்களால இங்கே எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை! நீங்க ரொம்ப நல்லவர்! :D

      நீக்கு
    19. நாட்டாமை வாயால் 'நல்ல' ரிஷி பட்டம் :-D

      நீக்கு
  12. மின்னஞ்சல் சந்தா செலுத்திய நண்பர்களின் நன்மைக்காக:
    இத்தொடரின் நான்காம் பாகம், இதே பதிவில் தற்போது இணைக்கப் பட்டுள்ளது! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Sorry இது ஒரு Live Chat மாதிரி ஆகிறது, இருப்பினும் நடைமுறை சாத்தியங்கள் தவறாக புரிந்துகொள்ளப்படாமல் இருக்க இதை சுட்டிக்காட்டுவது அத்தியாவசியம்.

      தங்களுடைய இந்த உதாரணத்தில் Leading (line spacing) குறைந்து எழுத்துகள் overlap ஆகிறது. அந்த Particular Balloon எழுத்துகளில் overlap ஆகவில்லை (by chance), ஆனால் அதே leading value-உடன் நீங்கள் எல்லா இடங்களிலும் பயன்படுத்தினால் கொக்கிகளும் புள்ளிகளும் overlap ஆகும்.

      குறைந்தது ஒரு முழுப்பக்கத்துக்கு வெவ்வேறு அளவு பலூன் மற்றும் வரிகளின் எண்ணிக்கையுடன் உதாரணங்கள் காட்டப்படாதவரையில் Readability போதுமானதா என Examples உணர்த்தாது. அதே Leading-உடன் நீங்கள் அந்த லார்கோ கதை Page-ஐ வடிவமைத்துவிட்டு நோக்கினால் எவ்வளவுதூரம் இது Possible எனப்புலப்படும்.

      I am running out of time, so I would like to stop just with this point. ;)

      நீக்கு
    2. //நடைமுறை சாத்தியங்கள் தவறாக புரிந்துகொள்ளப்படாமல் இருக்க இதை சுட்டிக்காட்டுவது அத்தியாவசியம்.//

      நானும் அதைப் பற்றித் தான் பதிவில் மிகத் தெளிவாக சொல்லியுள்ளேனே ரமேஷ்!!! Leading Space-ஐ குறைப்பது அனைத்து சமயங்களிலும் அல்லது அனைத்து பலூன்களுக்கும் / வசனங்களுக்கும் இயலாத காரியம் - அதில் இருவேறு கருத்துக்கள் இல்லை! சில பலூன்களுக்கு செய்யலாம் - look at this as one of the space saving techniques and not a permanent solution! ;)

      //ஆனால், Leading Space-ஐ மிகவும் கவனமாக கையாள வேண்டும் வேண்டும் - மிகவும் நெருக்கமாக வரிகளைப் அமைத்தால் படிப்பவர்களுக்கு குழப்பம் நேரலாம்! As a rule of thumb, நான் கவனித்த வரையில் 5% வரை இதைக் குறைப்பது Readability-ல் எந்த பாதிப்பையும் தருவதில்லை. அதிக வரிகள் இருக்கும் பலூன்களில் இது நல்ல பலன் தரும்! Font மற்றும் வரிகளின் தன்மையைப் பொருத்து (குறியீட்டு எழுத்துக்கள் குறைவான வரிகள்), இதை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்!//

      நீக்கு
    3. //குறைந்தது ஒரு முழுப்பக்கத்துக்கு வெவ்வேறு அளவு பலூன் மற்றும் வரிகளின் எண்ணிக்கையுடன் உதாரணங்கள் காட்டப்படாதவரையில் Readability போதுமானதா என Examples உணர்த்தாது//

      அதிக வரிகளை நிரப்ப வேண்டியிருக்கும் ஸ்பீச் பலூன்களில் மட்டும் Font Size-ஐக் குறைப்பது, தமிழ் காமிக்ஸ்களில் நடைமுறையில் இருக்கும் ஒரு விஷயம் தான் - அதுவும் Readability-ஐ பாதிக்கக் கூடிய காரணிகளில் ஒன்று தான்! அச்சமயங்களில், Font Size-ஐக் குறைக்காமல் - Leading Space-ஐக் குறைப்பதன் மூலம், overlap ஆகாமல் கூடுதல் வரி(கள்) fit ஆகிறதா என்று முயற்சித்துப் பார்க்கலாம். (மேலே உள்ள ஆங்கில காமிக்ஸ் ஸ்பீச் பலூன்களில் கூட வெவ்வேறு அளவிலான Leading Space-ஐ உபயோகித்திருப்பதை காணலாம்)

      அது மட்டுமல்ல, தேவைப்பட்டால், இரு சொற்களுக்கிடையேயான இடைவெளியையும் குறைத்துப் பார்க்கலாம் - on a case to case basis! உதாரணத்திற்கு Font Size "10" என்றால், சொற்களுக்கு இடையேயான இடைவெளியின் (Space character) அளவை "8" ஆக வைக்கலாம்! (தலைவலி பிடித்த வேலை என்றாலும், சில பலூன்களில் இது பயன் தரலாம்)

      நீக்கு
    4. பைனல் இயர் கம்ப்யூட்டர் சயின்ஸ் ப்ராஜெக்ட் ரிப்போர்ட் கணக்கா ஆகிக்கிட்டிருக்கே :-p

      நீக்கு
    5. // அதிக வரிகளை நிரப்ப வேண்டியிருக்கும் ஸ்பீச் பலூன்களில் மட்டும் Font Size-ஐக் குறைப்பது, தமிழ் காமிக்ஸ்களில் நடைமுறையில் இருக்கும் ஒரு விஷயம் தான் - அதுவும் Readability-ஐ பாதிக்கக் கூடிய காரணிகளில் ஒன்று தான்! அச்சமயங்களில், Font Size-ஐக் குறைக்காமல் - Leading Space-ஐக் குறைப்பதன் மூலம், overlap ஆகாமல் கூடுதல் வரி(கள்) fit ஆகிறதா என்று முயற்சித்துப் பார்க்கலாம்...//

      கார்த்திக் நீங்கள் முன்வைப்பது பொதுவாக எளிய Font தயாரிப்புக்கான Suggestion ஆக இருப்பின் அது fine.

      ஆனால் இது Type Setting செய்யும்போது உள்ள Option-களின் list-ஆக மாறிவிடாமல் பார்த்துக்கொள்ளங்கள். (அவை ஏற்கெனவே அந்த Designer-களுக்கு தெரிந்து, ஒரு காரணமாகத்தான் உபயோகப்படுத்தாமல் உள்ளார்கள், Ex: Leading / Line space)

      Temporary adjustments like Font Size and Leading will help only on unavoidable occasions to fit text - with some compromise. But that's not helpful as a suggestion, as they already know / doing it. We need permanent solutions / rules for spacing. That's why I insist displaying examples as a whole page implementation rather than balloon to balloon comparison.

      நீக்கு
    6. //கார்த்திக் நீங்கள் முன்வைப்பது பொதுவாக எளிய Font தயாரிப்புக்கான Suggestion ஆக இருப்பின் அது fine.//
      பொறுமை ப்ளீஸ்! :)

      //ஆனால் இது Type Setting செய்யும்போது உள்ள Option-களின் list-ஆக மாறிவிடாமல் பார்த்துக்கொள்ளங்கள்//
      அனைத்து possibilities மற்றும் options-களையும் நிச்சயம் லிஸ்ட் செய்வேன்! :) அதில் தவறிருப்பதாக தெரியவில்லை! அதுவுமின்றி, இந்த உதாரணங்கள் காரணமில்லாமல் கொடுக்கப் படவில்லை!

      //Temporary adjustments like Font Size and Leading will help only on unavoidable occasions to fit text//
      நான் பதிவில் சொன்னதையே தான் நீங்கள் வேறு வேறு வார்த்தைகளில், மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்! :D

      //But that's not helpful as a suggestion, as they already know / doing it//
      Agree and disagree! உங்களுக்குத் தெரிந்திருக்கலாம், சிலருக்கு தெரியாமலும் இருக்கலாம்! சிலர் இந்த fine adjustments தலைவலி பிடித்த வேலை என்பதால் தவிர்த்துக் கொண்டும் இருக்கலாம்!

      எனக்குத் தெரிந்ததை நான் பகிர்கிறேன், வேண்டியவர்கள் வேண்டியதை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்! :) உங்கள் தொடர் கருத்துகளுக்கு நன்றி ரமேஷ்! :)

      நீக்கு
    7. // உங்களுக்குத் தெரிந்திருக்கலாம், சிலருக்கு தெரியாமலும் இருக்கலாம்! சிலர் இந்த fine adjustments தலைவலி பிடித்த வேலை என்பதால் தவிர்த்துக் கொண்டும் இருக்கலாம்! //

      இல்லாத Possibilities-ஐ இருப்பதுபோல காட்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள்பாட்டுக்கு Leading-ஐயும் Adjust பண்ணலாம், இதோ அதற்கு நல்ல உதாரணம், "பெரிய எழுத்து, குறைந்த leading" என்று ஒற்றை பலூனில் வேலையை முடித்துவிட்டு நகர்ந்துவிடலாம். That's not a problem - although it will not work all the panels on same page you showed as example.

      ஆனால் அதை வைத்துக்கொண்டு எடிட்டரை "இதை ஏன் permanent-ஆக Follow பண்ணக்கூடாது?" என்று Designer அல்லாத வாசகர்கள் கேட்டு, தொல்லை பண்ணும்பட்சத்தில், இந்த Article-ல் less than 0 Leading உதாரணத்தை காட்டிய நீங்களே முன்வந்து அவர்களை Convince பண்ணுவது உங்க கடமை :P

      Be responsible, that's all I want to say! :D

      நீக்கு
    8. //இல்லாத Possibilities-ஐ இருப்பதுபோல காட்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள்//
      இருக்கின்ற Possibilities-ஐத்தான் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்ற விளக்கங்களுடன் பகிர்ந்துள்ளேன். அத்தகைய வரையறைகளை, பொடி எழுத்துகளிலோ அல்லது நட்சத்திரக் குறியிட்டு வேறொரு பக்கத்திலோ ஒளித்து வைக்கவில்லை! அந்தந்த உதாரணங்களின் கீழேயே அதே அளவு எழுத்துக்களில் தெளிவாகக் கொடுத்துள்ளேன்! இந்த விஷயத்தை உங்களிடம் பலமுறை எளிய தமிழில் விளக்கியும் விட்டேன்! நீங்களானால் பழைய பல்லவியையே பாடிக் கொண்டு இருக்கிறீர்கள்! உங்களின் மிதமிஞ்சிய முன்னெச்சரிக்கைப் போக்கிற்கும், அர்த்தமற்ற யூகங்களுக்கும், தேவையற்ற பயங்களுக்கும் என் பதிவுகளை வெட்டிக் கூறு போட முடியாது!

      //ஆனால் அதை வைத்துக்கொண்டு எடிட்டரை "இதை ஏன் permanent-ஆக Follow பண்ணக்கூடாது?" என்று Designer அல்லாத வாசகர்கள் கேட்டு, தொல்லை பண்ணும்பட்சத்தில்//
      அவர்கள் பதிவை சரியாகப் படிக்கவில்லை அல்லது வேண்டுமென்றே செய்கிறார்கள் என்று தான் அர்த்தம்; மற்றவர்களின் பொறுப்பற்ற செயல்களுக்கு நான் பொறுபேற்க முடியாது!

      //Be responsible, that's all I want to say! :D//
      நான் பொறுப்புடன் தான் பதிவை எழுதி வருகிறேன்! ஆனால்,

      //இந்த Article-ல் less than 0 Leading உதாரணத்தை காட்டிய நீங்களே//
      இந்த கமெண்டைப் பார்த்தால் யார் பொறுப்பில்லாமல் நக்கல் அடிப்பது என்பது அனைவருக்கும் புரியும்! 0 Leading Space-ஐ யார் வைத்தார்களோ அவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி இது - இடம் மாறி வந்து விட்டீர்கள்!

      நீக்கு
    9. I meant less than 0 Line Space - you know the meaning. எனக்கு இன்னமும் ஒரு ஆச்சரியம் - எதற்கு அந்தளவுக்கு Line Space-ஐக்குறைத்து உதாரணமாகக் காட்டுகிறீர்கள்? அது Practical ஆக "யாருமே" உபயோகிக்காத அளவுக்கான Reduction. கைகளால் எழுதுபவர்கள் மட்டுமே இந்தளவுக்கு குறைப்பது சாத்தியம் - as it means manual adjustment on every "letter". That's not you are trying with this article right?

      அந்த Comparisionக்குக் கீழே நீங்கள் இவ்வாறு ஒரு Caption-ஐ போட்டிருந்தால் நான் இதில் தலையிட்டிருக்கப்போவதில்லை:

      "இந்தளவுக்குக்கூட Leading-ஐ குறைத்து எழுத்தை பெரிதாக்கலாம். ஆனால் எழுத்துக்கள் ஒன்றுடன் ஒன்று Touch ஆகும் (இந்த குறிப்பிட்ட பலூனில் by chance எழுத்துகள் touch ஆகவில்லை)"

      To save both of us's time, I have to stop this at this point.

      நீக்கு
    10. Kaun Banega F ... ont Designer pOtti vara vekkaama vida maattenga polirukkE :-)

      நீக்கு
  13. நன்றி கார்த்திக். ரொம்ப நுணுக்கமாக லார்கோ கதை ஓவியம் அடிவாங்கி உள்ளதை கவனித்து உள்ளீர்கள். என்னை பொறுத்தவரை, ஓவியத்தின் பங்கு நன்றாக இருக்கவேண்டும். வேண்டும் என்றால், பான்ட் அளவினை சுருக்கி கொள்ளலாம். உதர்ணதிக்கு, பான்ட் சைஸ் 10 என்று வைத்துகொள்வோம். இடம் பற்றவில்லை என்றால், 9 அல்லது 8 ஆக குறைத்துகொள்ளலாம். மேலும், வரிகளுக்கு இடையே உள்ள இடைவெளியையும் குறைத்து கொள்ளலாம். இதுவும் ஒத்துவரவில்லை என்றால், அதே சைஸ்சில் வைத்துகொண்டு character ஸ்பாஸ் குறைத்து கொள்ளலாம்.

    ஓவியம் அடிபடாமல், வார்த்தைகளையும் திணிக்கலாம். நான் professional இல்லை, ஆனால் ஓவியம் அடிபடுவதை முடிந்த அளவுக்கு தவிர்த்து உள்ளேன். ஒரு professional கண்டிப்பாக ஓவியம் அடிபடுவதை தவிர்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்நாடு அரசு தயாரிப்பான "Chemmozhi Paranar", எழுத்துருக்களுக்கு நன்றாக இருக்கும். இதை சரியான முறையில் பயன்படுத்தலாம். ஒவ்வொரு பிரிண்டிங் கம்பனியும் அவர்களின் சொந்த பான்ட் உபயோகப்படுத்துகின்றனர். உதரணம், தினமலர்.அவர்களுக்கு வசதியும், சொந்த designer உள்ளனர்.அதனால் அவர்களுக்கு சாத்தியமே. ஆனால் சிவகாசிக்கு? ஒரு பெண் வீட்டில் இருந்து செய்வதாக ஞாபகம். சிறு தொழில் செய்யும் யாரும் புதிய பாண்டிக்கு நேரத்தையும் பணத்தையும் செலவழிக்க முயல மாட்டார்கள். கிடைப்பதில் இருந்தே முடிக்க முயல்வர். நானும் சில வருடமாக என்னுடைய சொந்த பான்ட் கொண்டு வரவேண்டும் என்று நினைக்கின்றேன், முடியவில்லை.ஒரு சிறப்பான ஓவியர் அல்லது எழுத்தை கொடுப்பவர் கிடைத்தால், நாமே ஒரு பான்ட் தயாரிக்கலாம்.

      நீக்கு
    2. பிரச்சினையை சரியான கோணத்தில் புரிந்து கொண்டதிற்கு முதலில் என் மனமார்ந்த நன்றிகள் ரமேஷ் (சண்முகசுந்தரம்)! :)

      எழுத்துக்களின் Readability / Legibility எவ்வளவுக்கு எவ்வளவு முக்கியமோ, அதே போல சித்திரங்களின் Visibility, ஸ்பீச் பலூன்களின் Uniformity, முழுப்பக்கத்தின் ஒட்டுமொத்த Look & Feel - ஆகிய வேறு டிஸைனிங் சார்ந்த அம்சங்களும் மிகவும் அத்தியாவசியமே!

      இதற்கு, அனைத்து சூழ்நிலைகளுக்கும் பொருந்தக் கூடிய, ஒன்றை ஒன்று பாதிக்காத, செயல்படுத்துவதற்கு எளிதான தீர்வு என்று எதுவுமே கிடையாது! ஏதாவது ஒரு அம்சத்தில் (அல்லது சில அம்சங்களில்) சமரசம் செய்து கொள்ளத் தான் வேண்டியிருக்கும்!

      எளிய தீர்வாக இருக்கிறது என்ற ஒரே காரணத்தால், பெரும்பாலான சமயங்களில் - பலூனில் அளவை அதிகரித்து, அதன் காரணமாக சித்திரங்களை மட்டுமே சமரசம் செய்து கொள்வதை விட / பாதிப்பதை விட - வெவ்வேறு space saving technique-களை கூட்டாக முயற்சித்து, அந்த பாதிப்பானது மற்ற அனைத்து அம்சங்களிலும் ஓரளவுக்கு சமமாக பகிர்ந்து கொள்ளப் பட வேண்டும் (a moderate compromise on all the fronts!).

      அப்படிப்பட்ட ஒரு பன்முகத் தீர்வுக்கு கீழ்க்கண்ட யாவும் அவசியம் (Conditions apply!):
      1. முடிந்த வரை சுருக்கமான / கச்சிதமான மொழிபெயர்ப்பு!
      2. மொழிபெயர்ப்பில் கூடுதல் விளக்கங்கள் தேவைப்படும் இடத்தில், ஒரு நட்சத்திரக் குறி இட்டு, அந்த விளக்கத்தை அந்தப் பேனலின் (அ) பக்கத்தின் கீழே அளிப்பது!
      3. வெவ்வேறு வகை Font-களை முயற்சித்துப் பார்ப்பது!
      4. Font-களின் Size-ஐ தேவைக்கேற்ப குறைப்பது அல்லது அதிகரிப்பது!
      5. Line, Word & Character Spacing-ஐ தேவைக்கேற்ப குறைப்பது அல்லது அதிகரிப்பது!
      6. தேவைப்பட்டால் பலூன்களின் அளவை அதிகரிப்பது!
      7. பெரிதாக்கப் படும் பலூன்கள் (முடிந்தவரை) முக்கியமான சித்திரங்களை மறைக்காமல் பார்த்துக் கொள்வது!

      //சிறு தொழில் செய்யும் யாரும் புதிய பாண்டிக்கு நேரத்தையும் பணத்தையும் செலவழிக்க முயல மாட்டார்கள். கிடைப்பதில் இருந்தே முடிக்க முயல்வர்.//
      உண்மை ரமேஷ்! சிறிய பதிப்பகங்கள் அத்தகையை முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று நினைப்பது நியாயமும் அல்ல!

      குறிப்பிட்ட ஒரு பதிப்பகத்தின் நன்மைக்காக என்ற குறுகிய பார்வையைத் தாண்டி, காமிக்ஸ் ஆர்வலர்கள் / டிஸைனர்கள் / ஆர்டிஸ்ட்கள் - Space optimize செய்யப் பட்ட எழுத்துருக்களை வடிவமைக்கும் முயற்சிகளில் இறங்கலாம்! தற்போதைய மற்றும் எதிர்காலத்தில் வரவிருக்கும் காமிக்ஸ் பதிப்பகங்களுக்கு அத்தகைய முயற்சிகள் உதவியாக இருக்கக் கூடும்! நீங்களும் அத்தகைய முயற்சிகளை எடுத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது! முடிந்தால், உங்கள் அனுபவங்களை பகிருங்கள் ரமேஷ்! நன்றி!

      நீக்கு
    3. கார்த்தி .. கடைசி பத்தி சூப்பர் ... கீழ் கண்ட பாயிண்ட்கள் செயல்படுத்தப்படும் பட்சத்தில் காமிக்ஸ் தரம் சிறப்பாய் மிளிரும் என்பது உறுதி!

      உதாரணம்: அச்சடிக்கப்பட்ட ஒரு சமீப தமிழ் scanlation காமிக்ஸ் - அதைப் பார்த்தால் தான் அதன் தரம் உங்களுக்கு விளங்கும்! நேரில் வரும்போது எடுத்து வருகிறேன் !

      /****
      1. முடிந்த வரை சுருக்கமான / கச்சிதமான மொழிபெயர்ப்பு!
      2. மொழிபெயர்ப்பில் கூடுதல் விளக்கங்கள் தேவைப்படும் இடத்தில், ஒரு நட்சத்திரக் குறி இட்டு, அந்த விளக்கத்தை அந்தப் பேனலின் (அ) பக்கத்தின் கீழே அளிப்பது!
      3. வெவ்வேறு வகை Font-களை முயற்சித்துப் பார்ப்பது!
      4. Font-களின் Size-ஐ தேவைக்கேற்ப குறைப்பது அல்லது அதிகரிப்பது!
      5. Line, Word & Character Spacing-ஐ தேவைக்கேற்ப குறைப்பது அல்லது அதிகரிப்பது!
      6. தேவைப்பட்டால் பலூன்களின் அளவை அதிகரிப்பது!
      7. பெரிதாக்கப் படும் பலூன்கள் (முடிந்தவரை) முக்கியமான சித்திரங்களை மறைக்காமல் பார்த்துக் கொள்வது!
      ***/

      நீக்கு
    4. // 5. Line, Word & Character Spacing-ஐ தேவைக்கேற்ப குறைப்பது அல்லது அதிகரிப்பது! //

      மற்ற Point-கள் அனைத்துமே இயல்பாக அத்தியாவசிய தேவைகள்தான். ஆனால் Line spacing மற்றும் Letter Spacingஐ இடத்துக்கு இடம் மாற்றுவது வாசிப்பை Disturb செய்யும் Technique-ஆக கருதப்படுகிறது.

      ஒரு புத்தகம் முழுவதற்கும் அதை குறைப்பது நல்ல Approach (after some estimation), ஆனால் பலூனுக்கு பலூன் line/letter spacing adjust செய்வதை 100% தவிற்பதே நல்லது (ஏற்கெனவே Font Size-ஐயும் சில இடங்களில் குறைப்பதனால்)

      In short: Only two different font sizes for a whole book / balloons. None of the other properties to be changed - so that it will cover a whole book's spacing issues with maximum possible uniformity.

      @Raghavan:
      // அச்சடிக்கப்பட்ட ஒரு சமீப தமிழ் scanlation காமிக்ஸ் - அதைப் பார்த்தால் தான் அதன் தரம் உங்களுக்கு விளங்கும்! நேரில் வரும்போது எடுத்து வருகிறேன் ! //

      அதன் Scan-ஐப் பகிற இயலுமா? (I mean scanned - printed - scanned version!)
      அதன் பேப்பர் சைஸ் என்னவென்பது ஒரு முக்கியமான Factor :)

      நீக்கு
    5. @ராகவன்:
      தகவலுக்கு நன்றி!!!

      @ரமேஷ்:
      //ஒரு புத்தகம் முழுவதற்கும் அதை குறைப்பது நல்ல Approach (after some estimation)//
      for Latha font 4% to 5% reduction in line spacing works pretty well (see the fresh comparison images) - this percentage may differ with other fonts!

      நீக்கு
    6. // for Latha font 4% to 5% reduction in line spacing works pretty well (see the fresh comparison images) - this percentage may differ with other fonts! //

      அந்த 5% Leading குறைப்பு உதாரணம்கூட தமிழில் யாரும் உபயோகப்படுத்தாத அளவுக்கு Overlap ஆகிறது. சில இடங்களில் புள்ளிகள் மறைந்தேவிடும்!

      இந்த உதாரணத்தைப் பாருங்கள் நீங்கள் "works pretty well" எனக்குறிப்பிடும் உதாரணம் எழுத்துக்கள் overlap ஆகாதவரைதான் நடை முறையில் சாத்தியம். இதில் புள்ளிகள் மறையக்கூடிய அளவுக்கு Overlap ஏற்படுவதால் கூடுதல் Line Space தவிற்க இயலாது (அந்த particular Font-க்கு).

      அதனால்தான் நான் அடிக்கடி, எந்த Property-ஐ மாற்றினாலும், ஒரு பக்கம் முழுவதற்கும் அல்லது பல பலூன்களுக்கு Test செய்து பாருங்கள் / உதாரணம் காட்டுங்கள் என்கிறேன்.

      நீக்கு
    7. Default Leading-ஐ வைத்தால் கூட மேற்சொன்ன உங்களின் உதாரணங்கள் லேசாக ஒன்றோடு ஒன்று உரசத்தான் செய்யும் (லயன் பிரிண்ட் சைஸில்) - அதன் காரணம் கால்பகுதியில் உயரமான எழுத்தும், தலைப் பகுதியில் உயரமான எழுதும் ஒன்றின் கீழ் ஒன்று வருவது! எனவே தான், நான் இதை வலியுறுத்தி இருக்கிறேன்!

      //5. Line, Word & Character Spacing-ஐ தேவைக்கேற்ப குறைப்பது அல்லது அதிகரிப்பது!/ & //Font மற்றும் வரிகளின் தன்மையைப் பொருத்து (குறியீட்டு எழுத்துக்கள் குறைவான வரிகள்), இதை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்!//

      இடம் மாறி உள்ள எழுத்துக்களை கூட மனிதர்களால் எளிதில் படிக்க முடியும் (ஆங்கிலத்தைப் பொருத்தவரை)!! இதைப் படியுங்கள்:
      //I cdnuolt blveiee taht I cluod aulaclty uesdnatnrd waht I was rdanieg. The phaonmneal pweor of the hmuan mind! //

      அதே போல, ஒரு சில பலூன்களில் மட்டும், நெருக்கடியாக (அ) overlap ஆகியுள்ள - புள்ளிகளை / கொம்புகளை / எழுத்துக்களை / சொற்களை - படிப்பதில் பெரிய சிக்கல் இருக்காது (தமிழைப் பொருத்தவரை)! அந்த பலூனில் மட்டும் எழுத்துக்களை சிறிதாக மாற்றுவதால், கண்களுக்கு ஏற்படும் அழுத்தத்தை விட - இந்த வழிமுறை மேலானது எ.எ.க.! You may disagree, but opinions differ!

      ஏற்கனவே சொன்னது போல, Leading Space குறைப்பு நிரந்தர தீர்வு அல்ல - இட நெருக்கடி உள்ள பலூன்களில் மட்டும் தேவைக்கேற்ப இதைப் பயன்படுத்த முயற்சிக்கலாம் - this is just one of the techniques like reduction in font size!

      ஐந்தாம் பாகத்தில் எழுதி இருந்த இந்த வரிகளை மீண்டும் வலியுறுத்துகிறேன்:

      //உயரம் குறைவான தமிழ் எழுத்துருக்களை வடிவமைத்தல்:
      மேலே கொடுக்கப்பட்ட விளக்கங்கள் மற்றும் எடுத்துக்காட்டுகளின் மூலம் - "இரண்டு வரிகளுக்கு இடையேயான இடைவெளியை குறைப்பதற்கு பெரும் தடையாக இருப்பது, குறிப்பிட்ட சில உயரமான எழுத்துக்கள் மற்றும் அவற்றின் இட அமைப்பு ஆகிய இரண்டு காரணிகள் மட்டுமே!" என்பதை நாம் மிகத் தெளிவாக உணரலாம்! அத்தகைய எழுத்துக்களின் உயரத்தை, இயன்ற அளவு குறைப்பதன் மூலம், குறைந்த இடத்தில் அதிக வரிகளை பொருத்துவது (Leading Space-ஐக் குறைப்பது) சாத்தியமாகி விடும்!//

      நீக்கு
    8. @Karthik Somalinga

      கொஞ்சம் யோசியுங்கள். Default Leading எதுவாக இருப்பினும் அது Software settings-ஐ சார்ந்தது. தமிழைப் பொருத்தவரை, புள்ளி மறையக்கூடிய அளவுக்கு Line Spacing-ஐ நடைமுறைக்கு யாரும் Suggest செய்வதில்லை. இதில் யாருக்குமே மாற்றுக்கருத்து இருக்காது என்பதால்தான் உங்களிடம் திரும்பத்திரும்ப சுட்டிக்காட்டினேன்.

      Opinions differ என்ற அணுகுமுறை முழுக்க முழுக்க Objective-ஆன இடங்களில் பொருந்தாது. Opinions "shouldn't" differ when it comes to text overlapping!

      Anyway, I spent enough time here. Enough is enough!

      நீக்கு
    9. @Ramesh Kumar:
      //புள்ளி மறையக்கூடிய அளவுக்கு Line Spacing-ஐ நடைமுறைக்கு யாரும் Suggest செய்வதில்லை//

      பதில்:
      //இட நெருக்கடி உள்ள பலூன்களில் மட்டும் தேவைக்கேற்ப இதைப் பயன்படுத்த முயற்சிக்கலாம் - this is just one of the techniques like reduction in font size!//

      இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், Overlap ஆகவில்லை என்றால் பயன்படுத்தலாம்! This is just one of the techniques or workaround and not a solution! இதை ஒரு தீர்வாக நான் எங்கும் வலியுறுத்தவில்லை!

      நான் முன்வைக்கும் தீர்வு இது மட்டுமே:
      //உயரம் குறைவான தமிழ் எழுத்துருக்களை வடிவமைத்தல்:
      மேலே கொடுக்கப்பட்ட விளக்கங்கள் மற்றும் எடுத்துக்காட்டுகளின் மூலம் - "இரண்டு வரிகளுக்கு இடையேயான இடைவெளியை குறைப்பதற்கு பெரும் தடையாக இருப்பது, குறிப்பிட்ட சில உயரமான எழுத்துக்கள்> மற்றும் அவற்றின் இட அமைப்பு ஆகிய இரண்டு காரணிகள் மட்டுமே!" என்பதை நாம் மிகத் தெளிவாக உணரலாம்! அத்தகைய எழுத்துக்களின் உயரத்தை, இயன்ற அளவு குறைப்பதன் மூலம், குறைந்த இடத்தில் அதிக வரிகளை பொருத்துவது (Leading Space-ஐக் குறைப்பது) சாத்தியமாகி விடும்!//

      //Anyway, I spent enough time here. Enough is enough!//
      அது உங்கள் விருப்பம்! எளிய தமிழ் விளக்கங்கள் உங்களுக்கு விளங்கவில்லை என்றால் என்னால் செய்யக் கூடியது ஏதும் இல்லை!

      நீக்கு
    10. // இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், Overlap ஆகவில்லை என்றால் பயன்படுத்தலாம்! //

      இப்பதான் சரி. இதை ஏன் நேரடியாக Main Article-ல் வெளிப்படுத்துவதில்லை என்பதுதான் குறை. தங்களின் பட விளக்க உதாரணங்கள் இந்த வரம்புகளைப் படத்திலோ, எழுத்திலோ Address செய்யாமல் பொத்தம் பொதுவாக இருப்பது misleading for those who are not familiar with these issues related to Tamil letters.

      நீக்கு
    11. //இப்பதான் சரி. இதை ஏன் நேரடியாக Main Article-ல் வெளிப்படுத்துவதில்லை என்பதுதான் குறை//
      - நான் '1+2=3' என்கிறேன்; அதற்கு நீங்கள், "இல்லை, இல்லை '2+1=3' தான் சரி என்கிறீர்கள்!"

      //தங்களின் பட விளக்க உதாரணங்கள் இந்த வரம்புகளைப் படத்திலோ, எழுத்திலோ Address செய்யாமல் பொத்தம் பொதுவாக இருப்பது//
      - நான் படத்தை தனியேயும், Main பதிவில் நீண்ட விளக்கத்தையும் போட்டிருக்கிறேன்! நீங்கள், நீண்ட விளக்கமும் படத்திலேயே இருக்க வேண்டும் "அப்பதான் சரி" என்கிறீர்கள்!

      //misleading for those who are not familiar with these issues related to Tamil letters.//
      - நாளையே இன்னொருவர் வந்து, '1+1+1=3' தான் சரி என்றும்; நீண்ட விளக்கத்தை படம் மற்றும் பதிவு என என இரண்டு இடங்களிலும் போட வேண்டும் என்று அடம் பிடிப்பார்!

      நீங்கள் leading-ஐ குறைத்தால் "ஹே"-வும், "லீ"யும் இடிக்கின்றன என்கிறீர்கள்! நான், தற்காலிகத் தீர்வாக "லீ" இடம்பெறும் சொல்லின் position-ஐ (அல்லது அதற்கு மேலே "ஹே" இடம்பெறும் சொல்லின் position-ஐ) லேசாக அட்ஜஸ்ட் செய்து இந்தப் பிரச்சினையைத் தீர்க்கலாம் - ஒத்துவரவில்லை என்றால் leading-ஐ குறைக்க வேண்டாம் என்கிறேன்.

      மற்றும் நிரந்தரத் தீர்வாக "லீ"-யின் உயரம் குறைவாக இருக்குமாறு (லீ-யின் தலைப் பகுதியில் உள்ள சுழி) - எழுத்துருவை மாற்றி வடிவமைக்கலாம் என்கிறேன்!

      அதற்கு நீங்கள் மீண்டும், "இல்லை, இல்லை 2+1 தான் 3" என்று அடித்துச் சொல்கிறீர்கள்!!! ஹ்ம்ம்...!

      Leading பற்றி நான் mislead செய்யவில்லை! ஆனால், நாம் இருவரும் "நீயா நானா" ரேஞ்சுக்கு இப்படியே விவாதித்துக் கொண்டிருந்தால் - மற்றவர்களின் காதுகளில் Bleeding -தான் ஆகும்!!! Why blood?! Same blood!! :D

      நீக்கு
    12. // இப்பதான் சரி. இதை ஏன் நேரடியாக Main Article-ல் வெளிப்படுத்துவதில்லை என்பதுதான் குறை//
      நான் '1+2=3' என்கிறேன்; அதற்கு நீங்கள், "இல்லை, இல்லை '2+1=3' தான் சரி என்கிறீர்கள்!"//

      பசப்பாதீர்கள்.

      தமிழ் Line Space சம்பந்தமான விளக்கங்களில், Overlap ஆகும் "Particular" அளவு என்பது எது என்பதை கவனிக்காமலேயே, "5% Leading Pretty fine" என்பது மாதிரி தகவல்களை போடுவது நிச்சயம் - Misleading. Mis-interpreting the work behind type setters as well as font creators who already maintains certain Line space due to SOLID reasons.

      Line Spacing / Leading பற்றி ஏதோ மற்றவர்கள் (Publishers, Designer) கண்டுகொள்ளாததுபோல் நீங்கள் Article எழுதுவதுதான் Bleeding வரவைக்கும் விஷயம்.

      உங்களுடைய Blog வாசகர்கள் பெரும்பாலும் இதனை கவனிக்குமளவுக்கு இதில் பரிச்சயமோ அல்லது நேரமோ இல்லாமலிருப்பதால், எல்லாம் நல்லாதானே போயிட்டிருக்கு என நினைக்கிறீர்கள்.

      எனக்கு நீயா நானாவில் ஆர்வமில்லை (Please என்னை நம்பவேண்டாம் - கருத்தைப் பாருங்கள்). Logic உங்கள் பக்கமிருந்தால் காலில்கூட விழலாம் (depends on case). நூற்றுக்கணக்கானபேர் வாசிப்பதற்காக / புரிந்து கொள்வதற்காக எழுதப்படும் Article, நடைமுறைப் பயனை உதாசீனப்படுத்தும் விதத்தில் இருப்பதுதான் இந்த நீண்...ட உரையாடலுக்குக் காரணம். புரிந்துகொள்ளுங்கள்.

      நீக்கு
    13. //பசப்பாதீர்கள்.//
      யார்?

      // "5% Leading Pretty fine" என்பது மாதிரி தகவல்களை போடுவது நிச்சயம் - Misleading//
      "for Latha font 4% to 5% reduction in line spacing works pretty well" - ஆனால், எந்த மாதிரியான சூழ்நிலைகளில் என்றும் பதிவில் விளக்கி உள்ளேனே - அது எப்படி அதை படிக்காத மாதிரியே பசப்புகிறீர்கள்?!

      //Font மற்றும் வரிகளின் தன்மையைப் பொருத்து (குறியீட்டு எழுத்துக்கள் குறைவான வரிகள்), இதை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்!//

      this needs lots of fine adjustments - and in no way a guaranteed / recommended solution for all the pages / cases; அதனால் தான் தேவைப்படும் பலூன்களில் மட்டும் குறைத்துப் பார்க்கலாம் / முயற்சிக்கலாம் என்று சொல்கிறேன். புத்தகம் முழுமைக்கும் 4% அல்லது 5% வைக்கலாம் என்று எங்கேயாவது நான் சொல்லி இருக்கிறேனா? நீங்கள் தான் அந்த மாதிரி ஏதோ சொல்லி இருக்கிறீர்கள் (எவ்வளவு % என்று குறிப்பிடாமல்):

      //Line spacing மற்றும் Letter Spacingஐ இடத்துக்கு இடம் மாற்றுவது வாசிப்பை Disturb செய்யும் Technique-ஆக கருதப்படுகிறது. ஒரு புத்தகம் முழுவதற்கும் அதை குறைப்பது நல்ல Approach (after some estimation), ஆனால் பலூனுக்கு பலூன் line/letter spacing adjust செய்வதை 100% தவிற்பதே நல்லது (ஏற்கெனவே Font Size-ஐயும் சில இடங்களில் குறைப்பதனால்)//

      //Line Spacing / Leading பற்றி ஏதோ மற்றவர்கள் (Publishers, Designer) கண்டுகொள்ளாததுபோல் நீங்கள் Article எழுதுவதுதான் Bleeding வரவைக்கும் விஷயம்//
      By default ஆக அளவுக்கு அதிகமான Leading-ஐ Publishers மற்றும் Designers வைத்து விட்டார்கள் என்று நான் எங்கேயாவது குற்றம் சாட்டினேனா?! உங்கள் கற்பனைகளை, நான் சொன்னதாக திரித்துப் பேசாதீர்கள்!

      இடப் பிரச்சினை நேரும் பலூன்களில் - மொழிபெயர்ப்பின் நீளத்தைக் குறைப்பது (இது தான் மிகவும் முக்கியம்); Font / character / Leading size தேவைகேற்ப குறைப்பது; இறுதியாக பலூன் அளவை அதிகரிப்பது - ஆகிய பல வழிமுறைகளை கூட்டாக கையாளலாம் என்கிறேன்!

      Leading பற்றி, இத்தனை இத்தனை உதாரணங்களைக் கொடுத்தது - டிஸைனர்கள் அல்லது பதிப்பாளர்களின் மேல் வீண் பழியை தூக்கிப் போடுவதற்காக அல்ல! மாறாக, "தமிழ் எழுத்துகளுக்கு ஏன் இவ்வளவு வரி இடைவெளி தேவைப் படுகிறது - அதை ஓரளவுக்கு மேல் குறைத்தால் நேரும் பாதிப்புகள் என்னென்ன? - "அதை தவிர்ப்பதற்கான இறுதித் தீர்வு என்ன?" என்ற முக்கியப் பகுதிக்கு, இந்தக் கட்டுரையை நகர்த்திச் செல்வதே ஆகும்! இந்தப் பிரச்சினையின் பன்முகத் தன்மையை புரிய வைக்கும் உதாரணங்களில் அதுவும் ஒன்று!

      அதனால் தான் ஆங்கிலத்தில் ஆரம்பித்து, ஆங்கிலம்-பிரெஞ்சு இம்மொழிகளுக்கு இடையே இருக்கும் சொல் வள & எழுத்து ஒற்றுமை பற்றியும்; ஆங்கில பெரிய எழுத்துக்கள் மற்றும் தமிழ் எழுத்துகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் பற்றியும்; நீளமான தமிழ் மொழிபெயர்ப்பு கொண்டு வரும் சிக்கல்கள் பற்றியும் - அதே சமயம் நீளமான மொழிபெயர்ப்புகள் தேவைப்படும் சில இடங்களைப் பற்றியும்; தமிழ் எழுத்துக்களின் வெவ்வேறு உயரங்கள் பற்றியும் - இவ்வளவு விரிவாக எழுதி உள்ளேன்!

      நீங்கள் அவற்றை எல்லாம் விட்டு விட்டு, ஒரே ஒரு உதாரணத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, Misleading, Misleading என்று புலம்புகிறீர்கள்!!

      //எனக்கு நீயா நானாவில் ஆர்வமில்லை//
      எனக்கும் இல்லை! விஷயத்திற்கு வருவோம்.... (தொடரும்)

      நீக்கு
    14. //Please என்னை நம்பவேண்டாம் - கருத்தைப் பாருங்கள்//
      உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு தருவதினாலேயே இவ்வளவு பொறுமையாக பதில்களை அளித்து வருகிறேன்!

      //நூற்றுக்கணக்கானபேர் வாசிப்பதற்காக / புரிந்து கொள்வதற்காக எழுதப்படும் Article, நடைமுறைப் பயனை உதாசீனப்படுத்தும் விதத்தில் இருப்பதுதான் இந்த நீண்...ட உரையாடலுக்குக் காரணம். புரிந்துகொள்ளுங்கள். //
      புரிகிறது, உங்கள் நேரத்திற்கு நன்றி! இந்தத் தொடர் கட்டுரையை முழுவதும் முடித்ததும், மீண்டும் இதை ஒருமுறை எடிட் செய்து, தேவையற்ற வார்த்தைகளைக் குறைத்து Crisp ஆக வெளியிடும் எண்ணம் இருக்கிறது (eBook வடிவிலும்) - அச்சமயம் ஏற்கனவே கொடுக்கப்பட்ட மேலதிக விளக்கங்கள் பொருத்தமான இடங்களில் / படங்களின் அடியில் வெளியாகும் - கவலை வேண்டாம்!

      ஆனால், கட்டுரையில் workaround ஆக சொல்லப் பட்ட ஒரு விஷயத்தையும், அவற்றிற்கான உதாரணப் படங்களையும் - நீங்கள் தேவைக்கு அதிகமாக ஆராய்கிறீர்களோ என்பது தான் என் ஆதங்கம் - நீங்களும் புரிந்து கொள்ளுங்கள்!

      குறிப்பிட்ட சில எழுத்துக்களின் உயரத்தைக் குறைப்பது என்பது தான், நான் முன்னிறுத்தும் இறுதித் தீர்வு / நம்பகமான தீர்வு / Leading space பாதிப்பை கணிசமாகக் குறைக்க வல்ல தீர்வு - அதற்கான ஒரு உதாரணப் படத்தையும் நான் அளித்துள்ளேன் - உங்கள் ஆற்றலையும், தொழில்சார் அனுபவத்தையும் - இந்தத் தீர்வில் உள்ள சாதக பாதகங்களை அலசுவதில் செலவிட்டால் அது அனைவருக்குமே பயன் தருவதாக அமையும் என்பது என் கருத்து!

      அல்லது, நீங்கள் ஏதாவது மாற்றுத் தீர்வை யோசித்து வைத்திருந்தால், அதை இங்கோ அல்லது உங்களுடைய தளத்திலோ அல்லது வேறு ஒரு பொதுவான தளத்திலோ பகிருங்கள் - அது பற்றி விவாதிக்கலாம்!!!

      நீக்கு
    15. // உங்கள் ஆற்றலையும், தொழில்சார் அனுபவத்தையும் - இந்தத் தீர்வில் உள்ள சாதக பாதகங்களை அலசுவதில் செலவிட்டால் அது அனைவருக்குமே பயன் தருவதாக அமையும் என்பது என் கருத்து! //

      துறை சார்ந்த ஆர்வலர்களின் பங்கு இங்கு இருக்கும்பட்சத்தில் நிச்சயம் நான் பங்களிப்பேன். ஆனால் கொஞ்ச கொஞ்சமாக ஒரு Artcle-ஆக தாங்கள் Develop செய்யும் சுய பரிசோதனைகளுக்கு எந்த Suggstion-ம் Abnormal ஆகவே தெரியும்.

      ஆரம்பத்தில் ஒரு விஷயத்தை சுட்டிக்காட்டினேன். அது ஒரு பங்களிப்பு - நீங்கள் புரிந்துகொள்வது கடினம். நான் அத்துடனே நிறுத்திக்கொண்டிருக்க வேண்டும். இப்போது நிறுத்திக்கொள்கிறேன்.

      நீக்கு
    16. //ஆரம்பத்தில் ஒரு விஷயத்தை சுட்டிக்காட்டினேன். அது ஒரு பங்களிப்பு - நீங்கள் புரிந்துகொள்வது கடினம்//

      அதற்கான பதிலில் தான், நீங்கள் கூறியது சரி என்று ஆமோதித்து இருந்தேனே?!:
      //Leading Space-ஐ குறைப்பது அனைத்து சமயங்களிலும் அல்லது அனைத்து பலூன்களுக்கும் / வசனங்களுக்கும் இயலாத காரியம் - அதில் இருவேறு கருத்துக்கள் இல்லை!//

      //துறை சார்ந்த ஆர்வலர்களின் பங்கு இங்கு இருக்கும்பட்சத்தில் நிச்சயம் நான் பங்களிப்பேன்//
      நான் உங்களை (இங்கே தான்) பங்களிக்க வேண்டும் என்று நிச்சயம் வற்புறுத்தவில்லை - எந்த ஒரு வல்லுனரும், தங்கள் துறைசாராத நபர்களிடம் டெக்னிகலாக அளவளாவ பிரியப் பட மாட்டார்கள் என்பது புரிந்து கொள்ளக் கூடியதே - தவறில்லை!

      நீங்கள் workaround-ல் மட்டுமே அதீத ஆர்வம் காட்டியதால், "Leading Space பிரச்சினையை விட்டுத் தள்ளுங்கள் - நான் கூறும் யோசனை வேலைக்காகுமா?"என்று ஒரு ஆர்வத்தில் கேட்டேன்! அதற்கு ஆம், இல்லை என்று எளிய பதில் கூட தராமல், மீண்டும் இப்படிச் சொல்லுகிறீர்கள் (கீழே)!

      //ஆனால் கொஞ்ச கொஞ்சமாக ஒரு Artcle-ஆக தாங்கள் Develop செய்யும் சுய பரிசோதனைகளுக்கு எந்த Suggstion-ம் Abnormal ஆகவே தெரியும். //

      ஆனால், இதைப் பற்றி நாம் ஏற்கனவே விரிவாக பேசி விட்டோம் என்றே நினைக்கிறேன்!!!

      நீங்கள்:
      //this is exactly why I didn't make any productive comment from the beginning//

      நான்:
      //அதாவது, "நீங்க புடுங்குறது எல்லாமே தேவை இல்லாத ஆணிதான்!" அப்படின்னு சொல்ல வர்றீங்க?! :D (இது சும்மா ஜாலி கமெண்டு தான் - விளக்கம் வேண்டாம்!) :) உண்மையில் எனக்கு Typography-யிலோ, Font உருவாக்குவதிலோ துளியும் அனுபவம் கிடையாது (இன்று வரை!)! ஒரு பொழுதுபோக்குக்காக எனக்கு பிடித்த காமிக்ஸ் துறையில் இது போன்ற சிறுசிறு Experiment-களை செய்து பார்க்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்! :) சிறு வயதில் வீட்டிலேயே சினிமா ஓட்டியதைப் போன்ற ஒரு ஆர்வக் கோளாறு முயற்சியாகவும் இந்த எழுத்துரு பரிசோதனைகளைப் பார்க்கலாம்! :)//

      துறை அனுபவம் இல்லாமல், சுய(?!!!) பரிசோதனைகள் செய்து கொண்டிருக்கும் ஒரு ஆர்வக் கோளாறு ஆசாமியின் (குறிப்பிட்ட இந்தப்) பதிவில், தங்களின் நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை தான்!

      என் ஆர்வக் கோளாறு பரிசோதனைகளின் முடிவு இது தான் (ஒரு சில புதிய உதாரணங்களுடன்):
      =============================
      தலை மற்றும் கால் பகுதிகளில் உயரமாக இருக்கும் குறிப்பிட்ட சில (உதாரணம்: ஐ / ஓ / தூ, டூ, லீ and so on...) எழுத்துக்களின் உயரத்தை, கூடுமான வரை குறைத்து புதிய எழுத்துருக்களை வடிவமைக்க முயற்சிப்பது சிறந்த தீர்வாக இருக்கும் என்பது என் கருத்து!

      > அத்தகைய எழுத்துக்களின் தலை மற்றும் கால் பகுதிகளில் இருக்கும் வளைவு நெளிவுகளை கட்டுக்குள் வைப்பதன் மூலமும்...

      > இயன்றால் வளைவு நெளிவுகளை முற்றிலும் தவிர்ப்பதன் மூலமும்... (உதாரணம் "டூ"-வை மேலே வரை கொண்டு சென்று சுழிக்காமல் "ட" எழுத்தின் உயரத்திலேயே இடப் பக்கம் சுழிப்பது!)

      > உடல் பகுதியின் உயரத்தை சற்றே குறைப்பதன் மூலமும்.. (டூ - வில் இருக்கும் செங்குத்தான கோடு)

      > உடல் பகுதி தவிர்த்து, தலை மற்றும் கால் பகுதிகளில் comparatively உயரம் குறைவாக (உ.ம்: 'த்' உடைய கால் உயரம் 'தூ'-வை விட குறைவு (ததூ நநூ)!) இருக்கும் ஏதாவது ஒரு எழுத்தை மாதிரியாகக் கொண்டு - மற்ற அனைத்து எழுத்துக்களின் உயரமும், இந்த மாதிரி எழுத்தின் உயரத்திலேயோ அல்லது அதை விட குறைவாகவோ இருப்பது போல வடிவமைப்பதன் மூலமும்...

      ... இதைச் செயல்படுத்தலாம்! இப்படி செய்வதன் மூலம், வரிகளுக்கு இடையே தேவைப் படும் குறைந்த பட்ச இடைவெளியை கணிசமாகக் குறைக்கலாம்!
      =============================

      நீங்கள் Typography வல்லுனரா என்பது எனக்குத் தெரியாது; இருந்தாலும், நான் சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்று தான்... ஏற்கனவே சொன்னது தான் - சிறிய மாற்றங்களுடன்:

      நீங்கள் வேறு ஏதாவது மாற்றுத் தீர்வை (workaround அல்ல) வைத்திருந்தால், அதை உங்களுடைய தளத்திலோ அல்லது வேறு ஒரு பொதுவான தளத்திலோ அல்லது துறைசார் Forum-களிலோ பகிருங்கள் - படிக்க ஆவலுடன் இருக்கிறேன்!

      இது வற்புறுத்தல் அல்ல - உங்களிடம் வேறு தீர்வு / யோசனை இருக்கிறதா என்று அறிய விரும்பும் ஆர்வம் - அவ்வளவே!

      நீக்கு
    17. :)


      Me: //ஆரம்பத்தில் ஒரு விஷயத்தை சுட்டிக்காட்டினேன். அது ஒரு பங்களிப்பு - நீங்கள் புரிந்துகொள்வது கடினம்//

      Yourself: // அதற்கான பதிலில் தான், நீங்கள் கூறியது சரி என்று ஆமோதித்து இருந்தேனே?!: //

      By that, I meant the 3rd para on the same comment. It was a honest suggestion. That's an obvious step to explore before writing the article's "Line Space" section.If you do, you will never suggest Leading adjustments in the same way you did.

      Experiments are definitely respectable. But when it comes to sharing info / suggestions, it requires a "full set of" research to certain extent. There is a reason for NOT to suggest adjusting Line Space for temporary / fine adjustments - but adjust only for entire book with careful estimation. Estimation of what is another story - that alone has few odd aspects of Tamil letters.

      நீக்கு
    18. //By that, I meant the 3rd para on the same comment. It was a honest suggestion//

      இது தானே?:
      //குறைந்தது ஒரு முழுப்பக்கத்துக்கு வெவ்வேறு அளவு பலூன் மற்றும் வரிகளின் எண்ணிக்கையுடன் உதாரணங்கள் காட்டப்படாதவரையில் Readability போதுமானதா என Examples உணர்த்தாது. அதே Leading-உடன் நீங்கள் அந்த லார்கோ கதை Page-ஐ வடிவமைத்துவிட்டு நோக்கினால் எவ்வளவுதூரம் இது Possible எனப்புலப்படும்.//

      ஆரம்பம் முதலே Leading Space-ஐ புத்தகம் முழுமைக்கும் அல்லது பக்கம் முழுமைக்கும் குறைக்கும் நோக்கம் இல்லை என்பதை தெளிவு படுத்தி வந்திருக்கிறேன் (உங்கள் அந்த கமெண்டுக்குகான பதில்களிலும் இதை சொல்லி இருக்கிறேன்). இருந்தாலும், உங்கள் suggestion-ஐ ஓரளவுக்கு ஏற்று, இரண்டாவது உதாரணத்தில் வசனங்களை மாற்றினேன் - அதே பலூனில், வேறு வசனங்களுடன் - 10%-ல் கூட எழுத்துக்கள் இடிக்கின்றன என்பதை சிகப்பு எழுத்துக்களில் ஹைலைட் செய்திருந்தேன் (என்னுடைய முந்தைய உதாரணத்தில் 10%-ல் overlap ஆகவில்லை!). அது உங்களது ஹானஸ்ட் suggestion-க்கு நான் அளித்த மரியாதை!

      "தேவைப் பட்டால்" "சில பலூன்களுக்கு மட்டும்", LS குறைத்து, எழுத்துக்கள் இடிக்காத அளவுக்கு fine adjustments செய்வது one of the options / workaround to fit the text என்பது என் கருத்து (இப்போதும்)!

      உங்கள் கருத்து இதுவாக இருக்கிறது... Ok fine... அதில் எனக்கு பிரச்சினையில்லை!:
      //Temporary adjustments like Font Size and Leading will help only on unavoidable occasions to fit text - with some compromise. But that's not helpful as a suggestion, as they already know / doing it.//

      மேலும் இப்படிச் சொல்லி இருந்தீர்கள்!:
      //கார்த்திக் நீங்கள் முன்வைப்பது பொதுவாக எளிய Font தயாரிப்புக்கான Suggestion ஆக இருப்பின் அது fine. ஆனால் இது Type Setting செய்யும்போது உள்ள Option-களின் list-ஆக மாறிவிடாமல் பார்த்துக்கொள்ளங்கள்.//

      Leading பற்றி விவாதித்தது தமிழ் Font-களுக்கே உரித்தான சில பிரச்சினைகளை ஹைலைட் செய்வதற்கு அந்த உதாரணங்கள் தேவை என்பதால் மட்டுமே - அது ஒரு தீர்வு அல்ல என்பதை பலமுறை வலியுறுத்தி விட்டேன்!

      உத்தரவாதமான தீர்வுக்கு தடையாக இருப்பது வரிகளுக்கு இடையே அதிக இடைவெளி தேவைப்படுகிறது என்பதே - அந்த இடைவெளியை குறைக்கும் விதமாக Font-களை வடிவமைப்பது தான் இதற்கான தீர்வு - என்பது தான் அந்த உதாரணங்கள் மூலம் நான் சொல்ல வரும் கருத்து!

      எளிய Font தயாரிப்புக்கான எனது suggestion-களை / முன்வைக்கும் தீர்வை ஏற்கனவே பகிர்ந்து விட்டேன்! Option-களின் list-ஐயே தொடர்ந்து விவாதிப்பதா அல்லது தீர்வு பற்றி பேசுவதா அல்லது இந்தப் பதிவை கடந்து போவதா என்பது உங்கள் விருப்பம்!

      நீக்கு
  14. @நண்பர்களே:
    இத்தொடரின் ஐந்தாம் பாகம், இதே பதிவில் தற்போது இணைக்கப் பட்டுள்ளது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பி.கு: படத்தில் "லீடிங் ஸ்பேஸ்" என்று தவறாக குறிப்பிட்டு இருக்கிறேன்! இதன் சரியான உச்சரிப்பு "லெட்டிங் - Ledding" என்பதாகும்! :P

      //In typography, leading /ˈlɛdɪŋ/ refers to the distance between the baselines of successive lines of type. The term originated in the days of hand-typesetting, when thin strips of lead were inserted into the forms to increase the vertical distance between lines of type. The term is still used in modern page layout software such as QuarkXPress and Adobe InDesign. In consumer-oriented word processing software, this concept is usually referred to as "line spacing" or "interline spacing."// Source: Wikipedia

      நீக்கு
  15. அஞ்சாம் பாகமா .. உட்டா ஒரு ஜம்போ ஸ்பெஷல் வெளியிட்டு விழா எடுப்பீங்க போலிருக்கே :-D

    பதிலளிநீக்கு
  16. இது போன்ற ஐந்து பாக (இன்னும் வர இருப்பவைகளுடன் சேர்த்து) 'ப்ளேடின் நடு வயதில் ... ' என்று தொகுப்பாய் வெளிவர வேண்டும் என்று 'தாமரைத் தண்டு வடாம்' உண்ணும் போராட்டத்தை துவக்குகிறேன் :-)

    பதிலளிநீக்கு
  17. ஒரு உதாரணத்திற்கு நான் எழுதி அனுப்பியதையும் உங்கள் பதிவில் இணைத்துக்கொண்டமைக்கு மிக்க நன்றி கார்த்திக்! உங்களின் இந்தப்பதிவிற்கான தீர்வு கிடைக்கும்பட்சத்தில் சந்தோஷம் அடைபவர்களில் நானும் ஒருவன். முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  18. 'லெட்டிங் ஸ்பேஸ்' பற்றி நான் கருதும் ஒரு விஷயம்.

    தமிழில் மேலும் கீழுமாக எழுதப்பட்ட இரண்டு வாக்கியங்களில் முதல்வாக்கியத்தின் கீழ்-சுழி உள்ள ஒரு எழுத்துக்கும் கீழே இரண்டாம் வாக்கியத்தின் மேல்-சுழி உள்ள ஒரு எழுத்துக்கும் இடையே உள்ள உயர-இடைவெளி மிக குறைவாக இருந்தாலும் (இடைவெளியே இல்லை என்றாலும்) அது நமது வாசிப்பு அனுபவத்திற்கு தடையாக இருக்காது எ.எ.க!

    ஏனெனில் அந்த எழுத்துகளின் உயரம் - சீரான, உயரம் குறைந்த மற்ற எழுத்துகளின் இடையே போதுமான உயர இடைவெளியை தந்து விடும்.

    ஆங்கிலத்தில் இடம் மாறி உள்ள எழுத்துக்களை கூட மனிதர்களால் எளிதில் படிக்க முடிவதைப்போல, தமிழில் நெருக்கடியாக (அ) overlap ஆகியுள்ள - புள்ளிகளை / கொம்புகளை / எழுத்துக்களை / சொற்களை - படிப்பதில் பெரிய சிக்கல் இருக்காது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ...அது நமது வாசிப்பு அனுபவத்திற்கு தடையாக இருக்காது எ.எ.க! ஏனெனில் அந்த எழுத்துகளின் உயரம் - சீரான, உயரம் குறைந்த மற்ற எழுத்துகளின் இடையே போதுமான உயர இடைவெளியை தந்து விடும். //

      +1 தமிழைப்பொருத்தவரையில் இவ்வாறுதான் "Overall" இடைவெளியை அணுகமுடியும். "ட" மற்றும் கொம்பு/கொக்கி இல்லாத எளிய எழுத்துக்கள் தரக்கூடிய உள்-இடைவெளி தான் - மொத்தமாக அடைத்தது போன்ற உணர்வைக் குறைக்க உதவுகிறது. நிற்க, பிரதான பிரச்சனை அதுவல்ல.

      கொம்புகள் Overlap ஆவது ஒரு விஷயம். அதுகூடப் பரவாயில்லை, ஆனால் உயர-இடைவெளியை அமைக்கும்போது புள்ளிகளை காப்பாற்றுவது முக்கியம் - கடினம். (Should be done with prior "estimation" for a whole book as a permanent and / or temporary adjustment).

      உபயோகப்படுத்தும்எழுத்துருவின் வடிவம் + உயர இடைவெளியைப் பொருத்து, புள்ளிகள் அடிபடும் வாய்ப்பு/விகிதம் மாறுபடும். இந்த குழப்பம் நேருமிடங்களில் உயர இடைவெளியைக் குறைப்பதைவிட Font Size-ஐ குறைப்பது ஒன்றே சிறந்த வழி.

      கீழ்க்கண்ட அபாயகரமான எழுத்துகள் புள்ளிகளைக் கபளீகரம் செய்யக்கூடியவை: :D

      1. பெரும்பாலான உகர / ஊகார மெய்யெழுத்துக்கள்:
      குஙூசூடுணுதுநு...

      2. மற்றும் சில: ஞ ழ ஸ்ரீ...

      ஒரு Minimalist Font தயாரிப்பவர் தனது பரிசோதனைகளை ஆரம்பிப்பதற்கு நல்ல இடம், முதலில் இந்த எழுத்துக்களின் அபாயத்தன்மையை குறைக்கும்விதமாக Design செய்வதே - கடினம்தான்! பூந்தளிர் இதழின் Lettering Artist - கூட இந்த குறிப்பிட்ட பிரச்சனையை Solve பண்ண இயலவில்லை. அது கையெழுத்து வழிமுறை என்பதால் அவர்கள் - escaped from the problem! :D

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. //உயர-இடைவெளியை அமைக்கும்போது புள்ளிகளை காப்பாற்றுவது முக்கியம் - கடினம். (Should be done with prior "estimation" for a whole book as a permanent and / or temporary adjustment).//
      நம்மிடையே ஏற்பட்டிருக்கும் communication gap-ற்கு / கருத்து வேற்றுமைக்கு முக்கியமான காரணம், நீங்கள் மேலே சொல்லியுள்ள இந்த பாயின்ட் என்று நினைக்கிறேன்! மேலும் குழப்பங்களைத் தவிர்க்க இதை தெளிவு படுத்த விரும்புகின்றேன்:

      //Leading Space Adjustments //Should be done with prior "estimation" for a whole book as a permanent//
      Fully agreed - மாற்றுக் கருத்தே இல்லை! புள்ளிகளை மறைக்காத LS adjustments-ஐ கண்டறிந்து (பல சாம்பிள் பக்கங்களை பிரிண்ட் செய்து பார்ப்பதன் மூலம்!) - அதை புத்தகம் முழுமைக்கும் வைப்பது சரியான அப்ரோச்! ஏன் என்றால் தாளின் அளவைப் (Paper size) பொருத்து, புள்ளிகள் ovarlap ஆவது மாறுபடும்! A4 தாளுக்கு set ஆகும் ஒரு LS அளவு அதை விட சிறிய தாளாக இருந்தால், பிரிண்ட் செய்யும் போது நிச்சயமாக overlap ஆகித் தெரியும்! So prior estimation must be done based on the paper size considering the whole book - and not individual balloons!

      //and / or temporary adjustment//
      இங்கு தான் நாம் மாறுபடுகிறோம் என்று நினைக்கிறேன்! நீங்கள் மேலே சொன்னவாறு LS adjustment-ஐ புத்தகம் முழுமைக்கும் செய்த பின்னரும், சில பலூன்களில் எழுத்துக்களை அடைக்க முடியவில்லை என்றால், Font Size குறைப்பதைப் போன்று character / word / line spacing-ஐ குறைப்பது ஆகிய வழிமுறைகளையும் முயற்சித்துப் பார்க்கலாம் என்றேன் நான்! நீங்கள் கூடாது என்கிறீர்கள்!

      நீக்கு
  19. @கார்த்திக் & Ramesh Kumar

    //நீங்கள் வேறு ஏதாவது மாற்றுத் தீர்வை (workaround அல்ல) வைத்திருந்தால், அதை உங்களுடைய தளத்திலோ அல்லது வேறு ஒரு பொதுவான தளத்திலோ அல்லது துறைசார் Forum-களிலோ பகிருங்கள் - படிக்க ஆவலுடன் இருக்கிறேன்!

    இது வற்புறுத்தல் அல்ல - உங்களிடம் வேறு தீர்வு / யோசனை இருக்கிறதா என்று அறிய விரும்பும் ஆர்வம் - அவ்வளவே!//
    +1

    மேலும் நான் அறிந்துகொள்ள விரும்புவது - நம் தேவைக்கு ஏற்ப எழுத்துக்களை கையால் எழுதி அதை ஒரு font ஆக மாற்றும் சாத்தியம் உள்ளதா? ஏற்கனவே உள்ள ஒரு fontல் மாற்றங்கள் செய்வதை விட புதிதாக ஒரு fontஐ ஏன் உருவாக்க கூடாது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // மேலும் நான் அறிந்துகொள்ள விரும்புவது - நம் தேவைக்கு ஏற்ப எழுத்துக்களை கையால் எழுதி அதை ஒரு font ஆக மாற்றும் சாத்தியம் உள்ளதா? ஏற்கனவே உள்ள ஒரு fontல் மாற்றங்கள் செய்வதை விட புதிதாக ஒரு fontஐ ஏன் உருவாக்க கூடாது? //

      Yes, It is possible to design new fonts entirely based on a handwriting style. இந்த Article-ன் பிரதான முயற்சியே புதிய Font-க்கான ஆராய்ச்சிகள்தான்.

      ஏற்கெனவே இருக்கும் Font-களின் Settings-ஐ மாற்றிப் பார்த்து Space சிக்கனம் பற்றி ஆராய்வது ஒரு வழி. இன்னொன்று, ஏற்கெனவே இருக்கும் கையெழுத்தை Font-ஆக மாற்றும்போது எவ்வளவு தூரம் அது Space சிக்கனத்துக்கு உதவுமென ஆராய்வது. இரண்டையும் செய்துபார்த்தால் தான் பலன் கிடைக்...கலாம்! :D

      நீக்கு
    2. @புதுவை செந்தில்:
      //நம் தேவைக்கு ஏற்ப எழுத்துக்களை கையால் எழுதி அதை ஒரு font ஆக மாற்றும் சாத்தியம் உள்ளதா?//

      இதற்கு ரமேஷ் பதில் அளித்து விட்டார்..
      //Yes, It is possible to design new fonts entirely based on a handwriting style. இந்த Article-ன் பிரதான முயற்சியே புதிய Font-க்கான ஆராய்ச்சிகள்தான். //

      உண்மை! இந்த கட்டுரையின் பிரதான நோக்கமே, அத்தகைய Font-களை வடிவமைப்பதற்கான ஆராய்ச்சிகள் தான்!

      //ஏற்கனவே உள்ள ஒரு fontல் மாற்றங்கள் செய்வதை விட புதிதாக ஒரு fontஐ ஏன் உருவாக்க கூடாது?//
      என் கையெழுத்து அழகாக இருக்காது என்பது தான் காரணம்! :P Jokes apart, முற்றிலும் புதிய Font-ஐ தயாரிக்க - அந்தத் துறை அனுபவம், Typography Software-களில் பணி செய்த அனுபவம் ஆகிய சில அடிப்படைத் தேவைகள் அவசியம் - என்னிடம் அது இப்போதைக்கு கிடையாது! குறைந்த பட்சம், நெளிவு சுளிவுகளுடன் - அழகாக தமிழை எழுதத் தெரிந்த ஒரு ஆர்டிஸ்ட்டாக இருக்க வேண்டும்!

      எனவே தான், as a starting point, ஏற்கனவே இருக்கும் ஒரு Font-ஐ height optimize செய்ய முயன்று வருகிறேன் (font design for dummies!) :D அதன் மூலம் Font தயாரிக்க முடியுமோ இல்லையோ - அத்தகைய Font வடிவமைப்புக்கு சில யோசனைகளை / உதாரணங்களை பகிர முடியும்!

      பதிவில் சொன்னது போல, இத்துறையில் அனுபவம் உள்ளவர்கள், முற்றிலும் புதிய எழுத்துருக்களை உருவாக்கலாம்! அனுபவசாலிகளால் உரிய முறையில் (காமிக்ஸ் / தமிழ் எழுத்துக்கள் சார்ந்த சிக்கல்களை கருத்தில் கொண்டு!) உருவாக்கப்படும் போது - நமக்கு பலதரப்பட்ட ஸ்டைல்களில், புதிய Font-கள் கிடைக்கும்! :)

      நீக்கு
  20. தொழில்நுட்பம் சார்ந்த ஒரு கட்டுரையை மிக எளிதாக புரியும்படி சுவையாக விளக்கியிருக்கிறீர்கள். ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழி தமிழாக்காத்துக்கான உங்களின் யோசனைகளில்கூட மற்றவர் மனம் புண்பட்டுவிட கூடாது என்ற உணர்வு தெரிவது என்னை மிகவும் கவர்ந்தது.

    இந்த பதிப்பை படித்துகொண்டிருந்தபோது நான் சிறுவயதில் படித்த ஒரு காமிக்ஸின் ஞாபகம் வருகிறது...

    " அதிகமாய் காலை டிபன் சாப்பிட்டுவிட்டேன் "

    என்ற தொணியுடைய ஆங்கில வாக்கியத்தை

    " ஆறு அப்பம், இரண்டு வாழைப்பழம் தள்ளினேன் உள்ளே... சிம்மமாய் ஏப்பமிடவைக்கும் ! "

    என ஜூனூன் தமிழில் மொழிபெயர்த்திருந்தார்கள் ! அதனை நண்பர்களுக்குள் பேசி நீண்ட நாட்கள் சிரித்துகொண்டிருந்தோம். ( ஜூனூன் தமிழ் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்ள விரும்பும் அன்பர்கள் என், வலைப்பூவின் சமீபத்திய கட்டுரையை சகிப்புடன் படித்துமுடித்து பின்னூட்டமும் எழுதினால் அவர்களுக்கு ஜூனூன் தமிழ் பற்றிய விளக்கும் மின்னஞ்சலில் அனுப்பிவைக்கப்படும் !!! )

    உங்களின் முயற்சி வெற்றிபெற என் வாழ்த்துகள்.

    நேரம் கிடைக்கும்போது என் வலைப்பூவின் பதிப்புகளை படித்து பின்னூட்டமிட்டால் வலைப்பூவுக்கு புதியவனான எனக்கு உதவியாக இருக்கும், நன்றி.
    http://saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே!

      // " ஆறு அப்பம், இரண்டு வாழைப்பழம் தள்ளினேன் உள்ளே... சிம்மமாய் ஏப்பமிடவைக்கும் ! " //
      :) :) :)

      நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்த வசனத்தைப் பார்த்தால், நிச்சயம் இந்திரஜால் காமிக்ஸாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்! டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் வெளியீடாக இருந்தும், அருமையான வண்ணத்தில், அச்சுத் தரத்தில் (அன்றைய கால இதழ்களோடு ஒப்பிடுகையில்) வெளிவந்தும் - பேச்சு மற்றும் எழுத்து வழக்கில் இருக்கும் (இருந்த) தமிழைப் பின்பற்றாமல் அவர்களுக்கென ஒரு தனி பாணித் தமிழில் மொழிபெயர்த்ததால் - பெரும் வரவேற்பை அடையாமல் போனது பரிதாபம் - ஒரு வகையில் தமிழ் காமிக்ஸுக்கு அது நஷ்டம் தான்!

      //நேரம் கிடைக்கும்போது என் வலைப்பூவின் பதிப்புகளை படித்து பின்னூட்டமிட்டால்//
      உங்களுடைய மறைந்தும் மறையாத தமிழ் காமிக்ஸ் கலாச்சாரம்! பதிவை ரசித்து இருக்கிறேன்... மற்ற பதிவுகளையும் வாசிக்கிறேன். நீங்கள் ரசித்த காமிக்ஸ் இதழ்கள் பற்றி அடிக்கடி எழுதுங்களேன்?!

      நீக்கு
  21. ஆச்சரியம் ! அன்றைய காகட்டத்தின் காமிக்ஸ் பெயர்கள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருக்கிறீர்கள் ! உங்களின் பதிலை பார்த்ததும் தான் ஞாபகம் வருகிறது. ஆமாம் இந்திரஜால் காமிக்ஸ்தான் !

    நான் குறிப்பிடிருந்த வசனம் தாங்கிய கதையும் இரத்தபடலம் போல் தொடர்சித்திரக்கதைதான். இரு வேறு கிரகங்களை சார்ந்தவர்கள் பூமியில் மனித உருவில் சண்டையிடுவார்கள். அந்த கதையில் " எரிக் ப்ளம்ரோஸ் " என்ற கதாபாத்திரம் நன்றாக நினைவிலிருக்கிறது !

    இந்திரஜால் காமிக்ஸ் டைம்ஸ் ஆப் இந்தியாவின் வெளியீடு என இப்போதுதான் ( ஏறக்குறையை இருபது இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து ! ) தெரிந்துகொண்டேன். இந்திரஜால் காமிக்ஸின் ஒரே குறை... " வசனம் ஒவ்வொன்றையும் இருமுறை படிக்கவேண்டும், உடனே புரிந்துகொள்ள ! "

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில், இதில் ஆச்சரியப் பட ஏதும் இல்லை - எண்பதுகளில் சிறுவர்களாக இருந்த யாராலும், இந்திரஜாலை தவற விட்டிருக்க முடியாது! பழைய புத்தகக் கடைகளில் லயன் / முத்து / ராணி காமிக்ஸ்களை விட இந்திரஜால் காமிக்ஸ்கள் தான் கொட்டிக் கிடக்கும்! ஆனால், அன்றைய காலத்தில் நான் வாங்காமல் தவிர்த்த காமிக்ஸ் இதழ்களில் அவற்றிக்குத் தான் முதல் இடம்! :)

      //இந்திரஜால் காமிக்ஸின் ஒரே குறை... " வசனம் ஒவ்வொன்றையும் இருமுறை படிக்கவேண்டும், உடனே புரிந்துகொள்ள ! "//
      ஆம், குறைந்தது இருமுறை! :D

      //அந்த கதையில் " எரிக் ப்ளம்ரோஸ் " என்ற கதாபாத்திரம் நன்றாக நினைவிலிருக்கிறது !//
      தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் பற்றிய உங்கள் நினைவுகளை மீட்டெடுக்க, நண்பர் ஸ்டாலினின் கீழ்க்கண்ட பதிவை சென்று பாருங்களேன்! :)
      தமிழ் காமிக்ஸின் நகைச்சுவை தலைப்புக்கள் (part-1)

      நீக்கு
  22. கடந்த வாரத்தின் பெரும் பகுதியை, தவிர்க்க முடியாத சில காரணங்களால் - கம்பியூட்டரும், நெட்டும் இன்றி கழிக்க நேர்ந்ததால் இப்பதிவை புதுப்பிக்க தாமதமாகி விட்டது!

    தமிழ் காமிக்ஸ்களில் பயன்படுத்தவதற்கு ஏற்ற - உயரம் குறைவான எழுத்துருக்கள் உருவாக்குவது தொடர்பாக நான் மேற்கொண்ட 'எளிய பரிசோதனைகளில்', குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளேன் என்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நண்பர்களே!

    "Latha" எழுத்துருவை (TrueType Font file) மாற்றி அமைத்து, உயரம் சீராக்கப்பட்ட எழுத்துருக்களை உருவாக்கி உள்ளேன் (only as a proof of concept - testing purposes)! இந்த எழுத்துகளுக்கு, மிகவும் குறைவான வரி இடைவெளியை (Leading Space) விட்டாலே போதுமானது! உதாரணத்திற்கு, வழக்கமான லதா எழுத்துருவுடன் ஐந்து வரிகள் மட்டுமே அடங்கக் கூடிய ஒரு பலூனில், மாற்றியமைக்கப் பட்ட எழுத்துருவைக் கொண்டு, எழுத்துக்கள் இடிக்காமல் ஆறு வரிகள் வரை அடைக்கலாம்

    மேலும் விபரங்களுக்கு, பதிவில் இணைக்கப் பட்டுள்ள ஆறாம் பாகத்தைக் காணவும்! இது இப்பதிவின் நிறைவுப் பகுதியும் கூட என்பதில், கூடுதல் மகிழ்ச்சி அடைகிறேன்! ;)

    பதிலளிநீக்கு
  23. ஆனா ஆவன்னா கிளாஸ் முடிஞ்சாச்சு போலிருக்கே ;-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிஞ்சுருச்சுன்னு தான் நானும் நினைச்சேன்! ஆனா பாருங்க இன்னொரு சூப்பர் ஐடியா வந்து தொலைச்சிருச்சு! :D ஓரிரு தினங்களில் புதிய எழுத்துருவுடன் / புதிய எடுத்துக்காட்டு படங்களுடன்! ;) :D

      நீக்கு
    2. பேராசிரியர் நன்னன் இதை படிச்சா சந்தோஷப்படுவார் :-D

      "ஆங் .. அப்டிதான் .. கொஞ்சம் நீட்டம் குறைச்சு வட்டமா எழுதணும் ..." - அவர் சொல்லித்தர மாதிரியே எழுதப்போய் ஒரு மாதிரி ஆயிடிச்சு .. மன்னிச்சு :-)

      நீக்கு
  24. நல்ல ஆய்வுப் பதிவு. படிப்பதற்கு நேரமில்லாமல், கொஞ்சம் கவனத்துடன் படிக்க வேண்டிய பதிவு என்பதால் தள்ளிப் போட்டு தள்ளிப் போட்டு கடைசியாக இன்று அந்த வாய்ப்பு அமைந்தது. நல்ல முயற்சி கார்த்திக்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொறுமையாகப் படித்ததிற்கு மிக்க நன்றி ராஜ்!

      நீக்கு
  25. ஒரு commercial பதிவு பிரேக் விட்டு அப்புறம் தொடரவும் .. எனக்கு நிஜமாய் language processing பேப்பர் படிச்ச நினைவுகள் மீண்டது ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கே நேரம் கிடைக்க மாட்டேன் என்கிறது! விரைவில் ஒரே ஒரு அப்டேட் வரும், பொறுத்துக் கொள்ளுங்கள்! ;)

      நீக்கு
  26. மீண்டும் லதா! :)

    FontForge-ல் Scaling option இருப்பதைக் கவனித்து அதன் மூலம், எழுத்துக்களின் உயரங்களை குறைத்தேன் - results மிகவும் அருமையாக வந்துள்ளன! பழைய உதாரணங்கள் சிலவற்றை நீக்கி விட்டு புதியவற்றை இணைத்துள்ளேன் - பதிவையும் சற்று மாற்றி உள்ளேன். படிக்கப் பொறுமை இல்லாதவர்கள், கீழே உள்ள உதாரணங்களை மட்டும் பார்க்கலாம்!

    Sample panels / pages designed with the modified Latha font:

    1. Single Panel Example: High Res (1.5MB) & Low Res

    2. Full Page Example: High Res (5.5MB) & Low Res

    Compare the above with:
    Sample Page From Muthu Comics: High Res (10 MB) & Low Res

    என்னைப் பொறுத்த வரையில், ஓரளவுக்கு திருப்திகரமான results வந்திருப்பதால் இத்துடன் எனது எளிய பரிசோதனைகளை முடித்துக் கொள்கிறேன்! மேலும் விவரங்களுக்கு பதிவைப் பார்க்கவும்....

    பி.கு.: மீ த 100! :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia