ஜோனா ஹெக்ஸ் - வெகுமதி வேட்டையன்!

"சொர்க்கத்தில் தனக்கு இடமிருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்த மனிதன், சாத்தானுடன் சமரசம் செய்து கொள்வது புத்திசாலித்தனம்! நரகமே நிரம்பி வழியும் அளவுக்கு - பாவிகளையும், திருடர்களையும், கொலைகாரர்களையும் - ஜோனா ஹெக்ஸ், தொடர்ந்து மேலே அனுப்பி வைத்துக் கொண்டிருப்பது, அந்த காரணத்திற்காகத் தான்!" இது, "Face full of Violence" காமிக்ஸ் இதழில், ஜோனா ஹெக்ஸ் பற்றி தரப்பட்டிருக்கும் சிறு அறிமுகம்!

எனக்கு, 'The Good, the Bad and the Ugly' போன்ற, 'Spaghetti Western' படங்கள் மிகவும் பிடிக்கும்! இத்தாலியில் தயாரிக்கப் பட்ட இவ்வகைப் படங்கள் - 'பழி வாங்கல்', 'புதையல் தேடல்', 'இரயில் கொள்ளை' போன்ற எளிமையான சில கதைக்களங்களைக் கொண்டிருக்கும். சிறப்பான இசை, திரைக்கதை மற்றும் படமாக்கத்துடன் கூடிய அட்டகாசமான பொழுதுபோக்குப் படங்கள் அவை! ஆனால், அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட்ட வெஸ்டர்ன் படங்களை அதிகம் பார்த்ததில்லை!

காமிக்ஸ் விஷயத்திலும் அப்படியே! 'சிஸ்கோ கிட்'-ஐத் தாண்டி வேறு எந்த (பிரபல) அமெரிக்க வெஸ்டர்ன் காமிக்ஸையும் படித்ததாக நினைவில்லை. இத்தாலியப் படைப்பான டெக்ஸ் வில்லர் மற்றும் அதன் அருகாமை நாடுகளில் படைக்கப்பட்ட வெஸ்டர்ன்கள் (ப்ளூபெர்ரி, லக்கி லூக், சிக் பில் etc.) - இவற்றை மட்டுமே அதிக அளவில் படித்துள்ளேன்.

ஜோனா ஹெக்ஸ் - DC காமிக்ஸ் வெளியீடு, அமெரிக்கத் தயாரிப்பு; நமக்குப் பழக்கமான, ஐரோப்பிய வெஸ்டர்ன்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படைப்பு - Weird Western ரகம்! டெக்ஸின் கண்ணியத்தையோ, ப்ளூபெர்ரியின் மதியூகத்தையோ ஜோனாவிடம் எதிர்பார்க்கக் கூடாது; முகத்தின் வலது பக்கம் சிதைந்து, விகாரமாக தோற்றமளிக்கும் ஜோனா ஹெக்ஸ், ஒரு மிரட்டலான கதாபாத்திரம் (உருவத்தில் மட்டுமல்ல)! அபாச்சேக்களால் வளர்க்கப் பட்டு, தெற்கத்தியப் படையில் பணியாற்றி, பின்னர் வெகுமதி வேட்டையனாக (Bounty Hunter) மாறியவன்! அன்றைய மேற்கில், அது இழிதொழிலாக கருதப்பட்டது. இருப்பினும், தான் செய்யும் தொழிலுக்கு நேர்மையானவன், நல்லவர்களுக்கு மட்டும் நல்லவன்!

1972-ல் அறிமுகமான இத்தொடரில், பல கதாசிரியர்களும் ஓவியர்களும் பணியாற்றி இருக்கிறார்கள். 2006-ல் இருந்து முற்றிலும் புதிய கதைகளின் தொகுப்பு வெளிவந்து கொண்டிருக்கிறது! அவைகளில் ஒன்று தான், Face full of violence - ஆறு சிறு கதைகள் அடங்கிய தொகுப்பு! இவை, ஜோனாவைப் பற்றிய அறிமுகக் கதைகள் அல்ல; ஜோனாவின் முகம் சேதமடைந்தது எவ்விதம் போன்ற தகவல்களும் இத்தொகுப்பில் இல்லை! ஆனால், ஒன்றோடு ஒன்று தொடர்பற்ற தனிக் கதைகள் என்பதால், பின்புலம் தெரியாமலேயே இவற்றை ரசிக்க முடிகிறது!

அதிகபட்சம் 24 பக்கங்களுக்குள் முடியும் கதைகள், அளவான வசனங்கள், ஆயில் பெயின்டிங்கிற்கு நிகரான அழகிய சித்திரங்கள், கிளின்ட் ஈஸ்ட்வுட்டை நினைவுறுத்தும் ஜோனாவின் தோற்றம் (முகத்தின் சிதைவடையாத பகுதி!), மெலிதான நகைச்சுவை என, ரசிக்கக் கூடிய அம்சங்கள் இதில் ஏராளம்! ஆனால், அனைவரும் ரசிக்கக் கூடியதா என்பது தான் பில்லியன் டாலர் கேள்வி! காரணம், புத்தகத்தின் பெயரைப் போலவே, ஒவ்வொரு பக்கத்திலும், வன்முறை தனது கோர முகம் காட்டுகிறது!
ஜோனா ஹெக்ஸ் கதைத்தொடர், சிறுவர்களுக்கும், இளகிய மனம் படைத்தவர்களுக்கும் நிச்சயம் ஏற்றதல்ல! 'Face full of violence' தொகுப்பிலிருக்கும், முதல் கதையின் சுருக்கத்தை கீழே தந்துள்ளேன். கிட்டத்தட்ட, 'நான் கடவுள்' பாணியிலான இந்தக் கதையைப் படித்து விட்டு, உங்களுக்குப் பிடிக்குமா இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!

சிலுவைகள் இல்லாத கல்லறை:
செல்வந்தர் ஒருவர், காணாமல் போன தனது பத்து வயது மகனை தேடித் தரும் பணியை ஜோனா ஹெக்ஸிடம் ஒப்படைக்கிறார். வெறி பிடித்த நாய்களோடு, சிறுவர்களை சண்டையிட வைத்து, பணம் சம்பாதிக்கும் கொடூரமான ஒரு கும்பலைச் சந்திக்கிறான் ஜோனா. செல்வந்தர் கூறிய அங்க அடையாளங்கள் கொண்ட சிறுவன் அங்கே தென்படாததால் அங்கிருந்து விலகிச் செல்கிறான்!
அன்றிரவு, ஜோனாவை கொல்ல இருவர் வருகின்றனர். அவர்களில் ஒருவனின் காதை, துப்பாக்கி குண்டு மூலமாக சிதறடித்து, இதன் பின்னணியில் இருப்பது நாய்ச்சண்டை கும்பலின் தலைவன் தான் என்பதை அறிகிறான்! சிறுவனின் முடிக்கு சாயம் பூசி அடையாளத்தை மறைத்து வைத்திருப்பது தெரிய வருகிறது! தலைவனை வீழ்த்தி விட்டு சிறுவனை கவனிக்கிறான் ஜோனா - ரேபிஸ் நோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டு பரிதாபமாக முடங்கிக் கிடக்கிறான் அவன்.
சிறுவன் துன்பப் பட்டு இறப்பான் என்பதை அறியும் ஜோனா, 'நீ ஒரு வீரனாக மடிந்தாய் என்று உன் தந்தையிடம் சொல்வேன்!' எனக் கூறி கருணைக் கொலை செய்கிறான். கும்பலின் தலைவன் மீது வெறி நாய்களை ஏவி, பழி தீர்க்கிறான். பிறகு, சிறுவனின் சடலத்தை அவன் தந்தையிடம் ஒப்படைத்து விட்டு, கனத்த இதயத்துடன் அங்கிருந்து அகல்வதாக கதை முடிகிறது!

இறுதியாக...
இது ஒரு சிறிய சாம்பிள் மட்டுமே! ஜீரணிக்க கடினமாக இருந்தால், ஜோனாவுக்கு சொல்லுங்கள் நோ நோ! ஹெக்ஸ் இல்லை என்றால் என்ன? இருக்கவே இருக்கிறார் நமது டெக்ஸ்! :)

கருத்துகள்

 1. உங்களுக்கு இரசிப்பு இல்லை என தெளிவாக சொல்லிவிட்டீர்கள். மற்றவர்களுக்கு எப்படியோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படிச் சொல்லவில்லை நிஜாம் பாய்! :) எனக்குப் பொதுவாக வெஸ்டர்ன் கதைகள் மிகவும் பிடிக்கும் என்பதால், இதுவும் பிடித்திருந்தது! ஓரிரு இடங்களில் ரசிக்க முடியவில்லை & கலாச்சார அதிர்ச்சி ஏற்பட்டது என்பது வேறு விஷயம். உங்களுக்கு எப்படி என்று சொல்லவில்லையே நீங்கள்?! ;)

   நீக்கு
 2. நண்பரே,

  பல்வேறுபட்ட ரசணைகளுடன் பல புத்தகங்களை அறிமுகபடுத்தும் உங்களின் வலைப்பூவுக்கு வரவே பயமாக இருக்கிறது ! வாசிப்பு நல்லது என்றாலும் சில நேரங்களின் என் பர்ஸுக்கு மூச்சிறைக்கிறதே !!!

  " ஹெக்ஸ் இல்லை என்றால் என்ன? இருக்கவே இருக்கிறார் நமது டெக்ஸ்! :) " ... உங்கள் டிரேட்மார்க் ஹுயூமர் !

  மற்றபடி... வன்முறை... நம்ம தமிழ் படங்களைவிடவா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //மற்றபடி... வன்முறை... நம்ம தமிழ் படங்களைவிடவா ? //
   ஆம் நண்பரே, தமிழ் படங்களை விட வன்முறை இதில் குறைச்சல் தான்! :D

   நீக்கு
 3. திரை ப்படம் பார்த்துள்ளேன் ஓரளவு பிடித்திருந்தது ஆனால் படம் வெற்றி பெறவில்லை என நினைக்கிறேன் அதனால்தான் அதன் தெ ாடர்சி வரவில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Watchmen-ஐப் போலவே, திரைப்படத்தைப் பார்த்து அதன் ஒரிஜினல் காமிக்ஸ் பற்றிய ஒரு முடிவுக்கு வரக் கூடாது என்பதற்கு, Jonah Hex-ம் ஒரு உதாரணம் கிருஷ்ணா! காமிக்ஸில் படித்துப் பாருங்கள், அதிரடியாக இருக்கும்!

   நீக்கு
 4. "I TOLD YOU EVERYTHING MR.HEX"

  "BANG"

  "JEZ ZZZ! YOU SHOT MY EARS OFF"

  "I'LL EVEN IT OUT FOR YA UNLESS YOU START TALKIN"

  ஹா! ஹா! ஹா! , இது போன்ற வசன நடைகள் ஹீரோயிசத்தை கூட்டுவதுடன் நம்மை மேலும் கதையுடன் ஒன்றிப்போக வைக்கிறது. இதே கட்டத்தை மிகவும் dry ஆகவும் படைத்திருக்கலாம்.

  ஒரு ஹிட் கதை தொடருக்கும் flap தொடருக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் இது போன்ற spicy கட்டங்கள். படைப்பாளிக்கு உள்ள தனித்துவ திறமையல்லவா இது. ரசிகர்களை தமது பக்கம் ஈர்த்து வைக்கும்/தக்கவைத்துக்கொள்ளும் வல்லமையை இது தருகிறது.

  கோர்வையாக ஒரு கட்டுரை/பதிவு மூலம் ஒரு விஷயத்தை ரசிக்கும்படி வெளிப்படுத்துவதில், என்னை போல ஒரு சாதாரண பதிவருக்கும்(!) bladepedia கார்த்திக்குக்கும் உள்ள வித்தியாசம் போல.

  ஓவியங்கள் அட்டகாசம் ரகம் கார்த்திக். அதுக்காகவே புத்தகங்களை வாங்க வேண்டும் போல உள்ளது. அந்த sunset குதிரை சண்டை காட்சி ரசித்துக்கொண்டே இருக்கலாம் போல உள்ளது. தற்கால காமிக்ஸ் ஓவியர்கள் என்னவகை மென்பொருள்களை/technique களை உபயோகிக்கிறார்கள் என ஆராய்ந்து ஒரு பதிவை போடலாமே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் மிக ரசித்த வசனங்கள் அவை விசு! :) காட்சியின் வன்முறையை கொஞ்சம் மட்டுப் படுத்தும் வசனங்கள் அவை!! இதைப் போலவே ஆங்காங்கே இழையோடிய மெலிதான நகைச்சுவை, ரசிக்க வைத்தது! ஜோனா ஹெக்ஸ் - அவசியம் படித்துப் பாருங்கள்...

   //கோர்வையாக ஒரு கட்டுரை/பதிவு மூலம் ஒரு விஷயத்தை ரசிக்கும்படி வெளிப்படுத்துவதில்//
   தன்னடக்கம்?! ;) லயன் ப்ளாகில் எழுதும் சுவாரசியமாக எழுதும் உங்களைப் போன்ற பல நண்பர்கள், தத்தம் வலைப்பூக்களிலும் நிறைய எழுதினால் இன்னும் பலரை சென்றடையலாம் எ.எ.க.! :)

   // தற்கால காமிக்ஸ் ஓவியர்கள் என்னவகை மென்பொருள்களை/technique களை உபயோகிக்கிறார்கள் என ஆராய்ந்து ஒரு பதிவை போடலாமே. //
   அதில் எனக்கு விஷய ஞானம் இல்லை விசு! அதில் தேர்ச்சி பெற்றிருக்கும், அஜய் சாமி போன்ற காமிக்ஸ் காதலர்கள் கட்டுரை எழுதினால் சிறப்பாக இருக்கும்!

   நீக்கு
 5. நீங்கள் தீவிர காமிக்ஸ் ரசிகரோ, ஒரு காலத்தில் நானும் அப்படிதான் இருந்தேன், காலம் ஓட ஓட லயன் மற்றும் ராணி முத்து காமிக்ஸும் என்னிடம் இருந்து வெகு தூரம் சென்று விட்டன. பதிவுலகில் காமிக்ஸ் எழுதவும் ஒருவர் ஆச்சரியமாய் உள்ளது.

  காமிக்ஸ் ஓவியம், வசனம் எல்லாமே பிடிக்கும், சில நிமிடங்களில் வாசித்து விடலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நண்பரே! நான் மட்டுமல்ல, தமிழ் இணைய உலகில் பல காமிக்ஸ் பதிவர்கள் / ரசிகர்கள் உலவுகிறார்கள்!!

   //காமிக்ஸ் - சில நிமிடங்களில் வாசித்து விடலாம்.//
   இதில் மட்டும் சின்னதாய் ஒரு மாற்றுக் கருத்து எனக்கு... தற்போது வெளிவரும் காமிக்ஸ்களை ஒருமுறை வாசித்துப் பாருங்களேன்?! லயன் & முத்து காமிக்ஸ்கள் புதிய வடிவில், விலையில் இப்போது வெளிவருகின்றன. இணையம் மூலமாகவும் வாங்கலாம்!

   லயன் / முத்து காமிக்ஸ் ஆசிரியரின் வலைப்பூ!

   நீக்கு
 6. Your recent posts are great. Thanks for sharing. What about a separate posts about "INCAL" series ?. The final book of the series is coming this month end in English from Humanoids. Another recent good one humanoids is "Cape Horn". Chances of these books coming in Tamil is grim; since level of quality of Humanoids is at different level.

  There had been three books of Magic Wind had been released here US; did you get a chance on that ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thank you! I will certainly be doing separate posts on some of the Humanoids titles including Incal. Just read sample pages of Cape Horn, looks very interesting. Humanoids titles are not distributed in India and importing them works out to be ultra expensive. Will wait for better deals on Amazon - But yes, I always have an option to read the digital copies :)

   //There had been three books of Magic Wind had been released here US; did you get a chance on that ?//
   No, not yet. Were they good?

   Before I get a chance to read them in English they will get released in Tamil, I guess... :D

   நீக்கு
  2. I had completed the volume 01; it's a good read until the last pages. You can see some flavors of spaghetti western / wild west. I like way the book starts with a initial page of background info about the story in a poetic/historical term, and kicks off.

   yet to complete the Vol 02 (may not be at the same level of vol 1); I had to re-start it from the beginning.

   I hope there will be a future releases (Epicenter comics)......since all this hit stories from Europe are not well supported in the marketing side. The last two years of Humanoids releases are giving some hope for the Europe stuff or underground/Alternative comics. Previously Humanoids releases their title with DC comics/others.

   Dark Horse comics had released Hermann's Jeremiah series in Omnibus format in tie-up with SAF Comics. Each volume covers three episodes(original volumes); until now they had released 3 volumes( 9 episodes); but they are very limited edition and not even marketed properly.

   நீக்கு
  3. //The last two years of Humanoids releases are giving some hope for the Europe stuff//
   Right! Especially, I love the 'Bouncer'

   Archaia, a well known American publisher also has introduced some European comics in English including 'The Killer':
   http://www.archaia.com

   நீக்கு
  4. Archaia...I haven't heard of this before. Thanks for the info.

   Have you heard of the publisher Fantagraphics Books (http://www.fantagraphics.com/) ?. They had published lots of Europe works and was just starting stuff by M-Tillieux(Gil Jordan), Raymond Macherot (Sibyl-Anne), Jacques Tardi(Lots of great stuff). But sadly the main person (Kim Thompson) behind all this effort died suddenly of lung cancer last year. He was the translator, editor & co-owner of Fantagraphics. Kim was 55 years old; born in US & brought up in Europe.

   Now Fantagraphics is going to publish only the Jacques Tardi's work & other Europe works may be discontinued.

   Did you come across any book from Jacques Tardi ? .

   நீக்கு
  5. Knew about Fantagraphics but didn't know the background info you provided! It is sad to note that along with Kim all his plans also had to come to an end.

   //Did you come across any book from Jacques Tardi ?//
   No, not yet! And thanks for all those references and recommendations you made throughout this post. I'll try them when I get a chance.

   நீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia