Muthu-Lion-Subscription-Info-2014


This is a archived post! For latest subscription information click here!

கடந்த ஆண்டு வெளியான இப்பதிவில், கூடுதல் விவரங்களை தற்போது இணைத்திருக்கிறேன்!

முன்குறிப்பு 1:
லயன் காமிக்ஸ் துவங்கி முப்பது ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக, "லயன் மேக்னம் ஸ்பெஷல்" (LMS - Lion Magnum Special) என்ற மெகா சிறப்பிதழ், र550 ருபாய் விலையில், 02 Aug 2014 அன்று, ஈரோடு புத்தகக் கண்காட்சியில் வெளியானது! "900 பக்கங்கள் - 9 கதைகள்" அடங்கிய இந்த சிறப்பிதழைப் பற்றிய அறிமுகப் பதிவை இங்கே காணலாம்: லயன் மேக்னம் ஸ்பெஷல் - சத்தமில்லாமல் ஒரு சரித்திரம்!

தமிழ் காமிக்ஸ் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்த சிறப்பிதழ், மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே வெளியாகி இருப்பதால், உங்கள் பிரதியைப் பெற, பதிப்பாளர்களை உடனே அணுகுங்கள். புத்தகத்தை பெறுவதற்கான தொகையை,
- தமிழகத்துக்கு உள்ளே: र625 (ST கூரியர்) / र665 (Professional கூரியர்)
- தமிழகத்துக்கு வெளியே: र665 (ST கூரியர்) / र815 (Professional கூரியர்)
- பதிவுத் தபாலில் பெற: र640 (அனைத்து மாநிலங்களுக்கும்)

...மூன்று வழிமுறைகளில் செலுத்தலாம்:
1. நேரடியாக, ஆன்லைனில் வாங்குவதற்கு: http://lioncomics.worldmart.in/index.php?categoryID=36

2. வங்கிப் பரிமாற்றம்: கீழ்காணும் வங்கிக் கணக்குக்கு பணம் செலுத்திய பிறகு; உங்கள் பெயர், முகவரி மற்றும் இதர விவரங்களை, பதிப்பாளருக்கு மின்னஞ்சல் வழியே தெரிவியுங்கள்!
Name of Account : PRAKASH PUBLISHERS
Bank : Tamilnad Mercantile Bank Ltd., Sivakasi Branch.
Account Number : 003150050421782
Account Type: Current
IFSC Code : TMBL0000003

3. Cheque / DD: "PRAKASH PUBLISHERS" என்ற பெயரில் Cheque / DD எடுத்து, உங்கள் விவரங்களை எழுதி அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:PRAKASH PUBLISHERS
8D-5, Chairman PKSAA Road, Ammankoilpatti, Sivakasi, PIN 626 189, Tamilnadu.
தொலைபேசி: (04562) 272649 & 320993

முன்குறிப்பு 2  - "மின்னும் மரணம் - The Complete Saga":
பிரகாஷ் பப்ளிஷர்ஸ்க்கு, குண்டு புத்தகங்கள் மீதிருக்கும் தீராக் காதலின் நீட்சியாக, 500+ பக்கங்கள் கொண்ட மற்றுமொரு மெகா சிறப்பிதழ், ஜனவரி 2015-ல் வெளியாக இருக்கிறது. ஆனால், LMS போல பல கதைகளின் தொகுப்பாக இல்லாமல், ஒரு முழு நீள வெஸ்டர்ன் (Cow-boy?!) காவியமாக அமையவிருக்கும் இவ்விதழ், முன்பதிவுகளின் பேரில் குறைந்த அளவு மட்டுமே அச்சேற உள்ளது - இதன் விலை (र900) உங்கள் புருவங்களை உயர்த்தினால் அதற்கான காரணமும் இது தான்! :)

முன்குறிப்பு 3:
பிரகாஷ் பப்ளிஷர்ஸின் விற்பனை மற்றும் சந்தா முறை மிகவும் சிக்கலான ஒன்று! மாத இதழ்களுக்கான ஆண்டு சந்தா தவிர்த்து; இடையிடையே, கூடுதல் இதழ்களுக்கான புதிய சந்தாக்கள், ஸ்பெஷல் இதழ்கள் என வரிசையாக அறிவிப்பது அவர்களின் பாணி! அவ்வாறு சமீப காலத்தில் அறிவிக்கப் பட்ட புதிய இதழ்களின் விவரங்களையும், விற்பனை முறை மாற்றங்களையும் இப்பதிவில் தற்போது இணைத்துள்ளேன்!

இனி பதிவுக்குள் செல்லலாம்...

முத்து & லயன் காமிக்ஸ் - அறிமுகம்:
அனைத்து வயதினரும் படிக்க ஏற்ற, பல வகையான அயல்நாட்டு காமிக்ஸ் மற்றும் கிராபிக் நாவல்களை, சிவகாசியைச் சேர்ந்த 'பிரகாஷ் பப்ளிஷர்ஸ்' என்ற பதிப்பகம், தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறது. கடந்த 41 வருடங்களாக முத்து / லயன் மற்றும் வேறு சில பெயர்களின் கீழ் காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட்டு வரும் இந்நிறுவனம், 2012 முதல் புத்தகங்களின் தயாரிப்புத் தரத்தையும் வெகுவாக மேம்படுத்தி உள்ளது. இந்த இதழ்களைப் பற்றிய விரிவான தகவல்களை இந்தப் பதிவில் காணலாம்.

எச்சரிக்கை:
கீழ்க்கண்ட தகவல்கள் புதிதாய் காமிக்ஸ் வாங்க விரும்புவர்களின் வசதிக்காக, ஒரு காமிக்ஸ் விசிறி என்ற முறையில் நான் தொகுத்தவையே! இவை எவ்விதத்திலும் முழுமையானவையோ, அதிகாரபூர்வமானவையோ அல்ல! சரியான தகவல்கள் பெற, பிரகாஷ் பப்ளிஷர்ஸை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள்.


பிரகாஷ் பப்ளிஷர்ஸ்


மேலதிகத் தகவல்கள்

2014 ஆண்டுச் சந்தா

தமிழ்நாடு:
  • ST கூரியர்: र2300
  • Professional கூரியர்: ~ र2400
  • பதிவுத் தபால்: र2400

இதர மாநிலங்கள்:
  • ST கூரியர்: र2500
  • Professional கூரியர்: ~ र2600
2014 சூப்பர் சிக்ஸ் சந்தா

தமிழ்நாடு:
  • ST கூரியர்: र1320

இதர மாநிலங்கள்:
  • Professional கூரியர்: ~ र1420
  • பதிவுத் தபால்: र1420
  • அயல் நாடுகளுக்கு: र3200

  • முக்கியக் குறிப்பு: இவை தோராயமான சந்தாத் தொகைகள் மட்டுமே! கூரியர் கட்டணங்கள் சமீபத்தில் உயர்ந்திருப்பதால்,   சரியான விவரங்களை அறிய பதிப்பாளரை நேரடியாக அணுகவும்!
  • உங்கள் நகரத்தில் சிறப்பான சேவை தரும் கூரியர் நிறுவனம் எது என்று அறிந்து அதைத் தேர்ந்தெடுங்கள்.
  • 'சன்ஷைன் கிராபிக் நாவல்ஸ்' இதழில், சற்றே மாறுபட்ட கதையம்சம் கொண்ட படைப்புக்கள் வெளியாகின்றன (உதாரணம்: ஒரு சிப்பாயின் சுவடுகளில்...!). இவற்றை வாங்க விருப்பம் இல்லையெனில், சந்தா தொகையில் र400-ஐ கழித்துக் கொள்ளுங்கள்!
  • 'சன்ஷைன் லைப்ரரி' இதழில், பழைய கதைகள் மறுபதிப்பு செய்யப்படுகின்றன! 2014-ல் மொத்தம், 6 மறுபதிப்புகள் வெளியாக இருக்கின்றன!
  • சமயங்களில், ஒரு சில ஸ்பெஷல் இதழ்கள் வழக்கமான சந்தாவில் இடம் பெறாமல் தனியே முன்பதிவுகளின் பேரில் விற்பனை செய்யப் படும்!


2014-ல் வெளியாகும் கதைகள்

  • 2014 ஆண்டுக்கான Preview-வை, PDF Format-ல், இங்கே தரவிறக்கம் செய்யலாம்! சுருக்கமாகச் சொல்வதானால்:
    • 34+ கதைகள்! (22 புதிய வெளியீடுகள், 6 மறுபதிப்புகள் & 6 கிராபிக் நாவல்கள்)
    • 20+ நாயகர்கள்
    • 1750+ பக்கங்கள்!


  • இவை தவிர, Super Six ஸ்பெஷல் இதழ்களின் வாயிலாக, மேலும் பல புதிய கதைகள் வெளியாகவிருக்கின்றன!

தற்போது வெளியாகும் காமிக்ஸ் இதழ்கள்

  • முத்து காமிக்ஸ்
  • லயன் காமிக்ஸ்
  • சன்ஷைன் லைப்ரரி
  • சன்ஷைன் கிராபிக் நாவல்ஸ்

  • மாதந்தோறும் குறைந்த பட்சம் ஒரு புதிய காமிக்ஸ் வெளியாகிறது.
  • சந்தாதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, கூரியர் மூலம் புத்தகங்கள் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படுகின்றன
  • கீழ்கண்ட காமிக்ஸ் இதழ்கள் தற்போது வெளியாவதில்லை:
    • காமிக்ஸ் க்ளாசிக்ஸ்
    • திகில் காமிக்ஸ்
    • ஜூனியர் / மினி லயன்
    • திகில் லைப்ரரி
    • முத்து காமிக்ஸ் வாரமலர்
    • முத்து மினி காமிக்ஸ்


பதிப்பாசிரியர் / எடிட்டர்:

  • திரு. S. விஜயன் 
    • இவரே பெரும்பாலான கதைகளை மொழிபெயர்ப்பும் செய்கிறார்!
    • லயன் அலுவலக மின்னஞ்சல் முகவரியில் பதிப்பாசிரியரை தொடர்பு கொள்ளலாம்: lioncomics@yahoo.com


  • புது இதழ்கள் பற்றிய விவரங்களை உடனுக்குடன் அறிய, ஆசிரியரின் வலைப்பூவைத் தொடருங்கள்: http://lion-muthucomics.blogspot.com
  • பதிப்பாசிரியருடன் கருத்துக்களை நேரடியாக பரிமாற எண்ணினால், வலைப்பூவில் பின்னூட்டம் இடுவதே சிறந்த வழிமுறை!

பிரகாஷ் பப்ளிஷர்ஸ் - பதிப்பக விவரங்கள்


முகவரி:
PRAKASH PUBLISHERS
8D-5, Chairman PKSAA Road, Ammankoilpatti, Sivakasi, PIN 626 189, Tamilnadu.

தொலைபேசி:
  • (Tel) 04562 - 272649
  • (Tel) 04562 - 320993
  • (Fax) 04562 - 275159



சந்தா கட்டும் முறை (இந்தியா)



1. ஆன்லைன் ட்ரான்ஸ்பஃர்:
Name of Account : PRAKASH PUBLISHERS
Bank : Tamilnad Mercantile Bank Ltd., Sivakasi Branch.
Account Number : 003150050421782
Account Type: Current
IFSC Code : TMBL0000003

(அல்லது)

2. Cheque / DD:
Draw Cheque / DD in favor of:
PRAKASH PUBLISHERS


  • ஆன்லைனில் பணம் செலுத்தினால் உங்கள் பெயர், முகவரி மற்றும் இதர விவரங்களை மின்னஞ்சல் மூலம் தெரிவியுங்கள்!
  • Cheque / DD மூலம் பணம் அனுப்பினால் உங்கள் விவரங்களை அதனுடன் எழுதி அனுப்புங்கள்.
  • 2014-க்கான சந்தா தொகையை அட்வான்ஸ் ஆக இப்போதே அனுப்பி வைக்கலாம்! ஜனவரி (2014) மாத இதழ்கள் குறித்த நேரத்தில் கிடைக்க வேண்டும் என்றால், டிசம்பர் (2013) மூன்றாம் வாரத்திற்குள் சந்தா பணத்தை அனுப்பி வைப்பது நலம்.


அயல் நாட்டு சந்தா

  • தோராயமாக  र4500
  • பிற நாடுகளில் வசிக்கும் வாசகர்கள், சரியான சந்தா / ஷிப்பிங் விவரங்களை அறிய லயன் / முத்து அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள்!



  • இலங்கைக்கான சந்தா, பல விதிகளுக்கு உட்பட்டது; மேலதிக விவரங்கள் அறிய, பதிப்பகத்தை நேரடியாக அணுகவும்.
  • இலங்கை வாசகர்களால் நடத்தப்படும் முகநூல் பக்கத்தில் (அதிகாரபூர்வமற்ற) விவரங்களைப் பெறலாம் (Unofficial Fan Page): https://www.facebook.com/groups/412480238797291

சந்தா தொடர்பான கேள்விகளுக்கு

  • லயன் அலுவலகத்தை  தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலமாக அணுகவும்!


  • லயன் வலைப்பூவில் பின்னூட்டம்  இடுவதன் மூலமும் தெளிவு பெறலாம்.

Dispatch தொடர்பான கேள்விகளுக்கு

  • திரு. ராதாகிருஷ்ணன் (அ) திருமதி. ஸ்டெல்லா மேரி

  • புத்தகம் வருவது தாமதமானால் இவர்களை அணுகலாம்!

ஸ்பெஷல் இதழ்கள்

  • அவ்வப்போது, அதிக விலையில் ஸ்பெஷல் இதழ்கள் வெளியாகும். இவை வழக்கமான ஆண்டு சந்தாவில் அடங்காது!

  • 2014-ல் வெளியாகவிருக்கும் ஸ்பெஷல் இதழ்கள் (சூப்பர் சிக்ஸ்): 
    • லயன் காமிக்ஸ் 30-வது ஆண்டு மலர் - மேக்னம் ஸ்பெஷல்!
    • இது தவிர மற்றும் ஐந்து ஸ்பெஷல் இதழ்கள்!

நேரடி விற்பனை

  • காமிக்ஸ்  குறித்த விழிப்புணர்வோ, ஆர்வமோ பரவலாக இல்லாததால், பிரகாஷ் பதிப்பகத்தார் நேரடி விற்பனையில் அதிகம் கவனம் செலுத்தாமல், சந்தா முறையை ஊக்குவிக்கின்றர்!

  • இவ்விதழ்கள் புத்தக கடைகளில் கிடைப்பது மிகவும் அரிதே! சந்தா கட்டிப் பெறுவதே சிறந்த வழி!
  • சென்னையில் லாண்ட்மார்க், டிஸ்கவரி புக் பேலஸ் போன்ற சில புத்தக நிலையங்களில் கிடைக்கின்றன.
  • மற்ற நகரங்களில் ஒரு சில முக்கிய புத்தகக் கடைகளில் கிடைக்கலாம்! உங்கள் நகரத்திற்கான முகவர் யார் என்று அறிய லயன் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள்.
  • ஈரோடு மற்றும் சென்னை புத்தகக் கண்காட்சிகளில், முத்து / லயன் காமிக்ஸ் ஸ்டால் பெரும்பாலும் இடம்பெறும்.

ஆன்லைன் விற்பனை



பழைய இதழ்கள்

  • சமீப ஆண்டுகளில் வெளியான இதழ்களில் சில, இன்னமும் பதிப்பகத்தாரிடம் கிடைக்கின்றன. அவற்றை வாங்க விரும்பினால், அவர்களை நேரடியாக அணுகவும்.

  • பழைய புத்தக கடைகளில் முயற்சிக்கலாம்; ஆனால், கிடைப்பது மிகவும் அரிது!
  • மற்ற காமிக்ஸ் வாசகர்களிடம் அல்லது சேகரிப்பாளர்களிடம் விலைக்கோ அல்லது புத்தக மாற்றுக்கோ வாங்கலாம்.
  • பொதுவாக பழைய காமிக்ஸ்கள், மிக அதிக விலைக்கு விற்கப் படுகின்றன.
  •  பழைய சந்தா விவரங்களை இங்கே காணலாம்! வரலாறு முக்கியம்  அல்லவா?! :)

தற்போதைய புத்தக வடிவமைப்பு

  • 1) 7.25" x 9.5" ஆர்ட் பேப்பர், 52 பக்க, முழு வண்ண காமிக்ஸ் - விலை र60
  • 2) 7.25" x 9.5" ஆர்ட் பேப்பர், 104 பக்க, முழு வண்ண காமிக்ஸ் - விலை र120
  • 3) 5.5" x 8.5" சுமாரான வெள்ளைத் தாள், 224 பக்க, கருப்பு வெள்ளை காமிக்ஸ் - விலை र60
  • 4) ஸ்பெஷல் இதழ்கள்: र250, र500 என வெவ்வேறு விலைகளில், அதிக பக்கங்களுடன் வெளியாகும்.

  • விளம்பரங்கள் ஏதும் இல்லை என்பதை கணக்கில் கொண்டால், இவை மிகவும் குறைந்த விலை தான்!
  • குறிப்பு: இதே அளவிலான ஆங்கில காமிக்ஸ்கள் பல மடங்கு அதிக விலையில் விற்கப் படுகின்றன. ஆனால், அவற்றுடன் நேரடி விலை ஒப்பீடுகள் செய்வது சரியாக இராது. ஏனெனில்:
    • அவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
    • ஆங்கிலத்திற்கான ராயல்டி கட்டணங்கள் அதிகம்.
    • அவற்றின் தயாரிப்பு மற்றும் சந்தைப் படுத்தும் செலவுகள் மிக மிக அதிகம்.
    • இது பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்தப் பதிவைப் படியுங்கள்.


நிறைகள்:

  • தமிழில் காமிக்ஸ் வெளியிடும் ஒரே நிறுவனம்
  • குறைவான விலை
  • அனைத்து வயதினரும் படிக்கக் கூடிய வகையில் வெளியாகும் பல வகையான கதைகள்
  • வண்ண இதழ்களில் உபயோகிக்கப்படும் உயர்ரக ஆர்ட் பேப்பர்



குறைகள்:

  • வண்ண இதழ்களில் அடிக்கடி நேரும் அச்சுக் குளறுபடிகள் (Dull prints, Color spots and mixing issues).
  • B&W இதழ்களில் உபயோகிக்கப்படும் சுமாரான தாளின் தரம்.
  • பிரெஞ்சில் இருந்து நேரடியாக தமிழாக்கம் செய்யப்படும் கதைகளில் காணப்படும் மொழிமாற்றப் பிழைகள்.
  • சமீபத்திய 20% விலையேற்றத்தோடு, 10% பக்கங்களும் குறைக்கப்பட்டுள்ளன :(

அன்றும் இன்றும்:
1970-களின் ஆரம்பத்தில் திரு.சௌந்தரபாண்டியன் அவர்கள், முத்து காமிக்ஸை துவக்கினார். ரிப் கிர்பி, பஸ் சாயர், ஜானி நீரோ, பான்டம் என பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட கதைத் தொடர்களே முத்துவில் வெளியாகின. குறிப்பாக "ஸ்டீல் க்ளா (இரும்புக்கை மாயாவி)" என்ற பிரிட்டிஷ் காமிக்ஸ் நாயகர் தமிழ்நாட்டில் அழியா புகழ் பெற்றதற்கு முத்து காமிக்ஸே காரணம்!

எண்பதுகளின் மத்தியில் திரு.சௌந்தரபாண்டியன் அவர்களின் புதல்வர் திரு.S.விஜயன் அவர்கள் - லயன், ஜூனியர், மினி லயன் & திகில் என்ற பெயர்களில் மேலும் பல புதிய காமிக்ஸ் இதழ்களைத் துவக்கினார். காலப்போக்கில் முத்து உள்ளிட்ட அனைத்து இதழ்களுக்கும் எடிட்டராக பொறுப்பேற்ற அவர், புகழ்பெற்ற பல ஃபிரான்கோ-பெல்ஜிய மற்றும் இத்தாலிய காமிக்ஸ் கதைகளை தமிழில் அறிமுகம் செய்த பெருமைக்குரியவர்! உதாரணத்திற்கு XIII, டெக்ஸ் வில்லர், பேட்மேன், ப்ளூபெர்ரி, லக்கி லூக், லார்கோ வின்ச் போன்ற சர்வதேசப் புகழ் பெற்ற நாயகர்கள் பலரை தமிழில் அறிமுகப்படுத்தியுள்ளார்!

தொண்ணூறுகளின் பிற்பாதியில் மக்களிடையே குறைந்த வாசிக்கும் ஆர்வம், காமிக்ஸ் துறையையும் விட்டுவைக்கவில்லை. நடுவில் சில வருடங்கள் தமிழில் எந்தவொரு காமிக்ஸ் இதழ்களும் வெளிவராத நிலையும் இருந்தது! தொலைந்து போன அந்த ஆர்வத்தை மீட்டெடுக்கும் வகையில், ஜனவரி 2012 முதல், முத்து மற்றும் லயன் காமிக்ஸ் இதழ்களை மாதம் தவறாமல், திரு.S.விஜயன் வெளியிட்டு வருகிறார்.

காமிக்ஸ் குறித்த விழிப்புணர்ச்சி பெரிதும் இல்லாததால், பெரிய அளவிலான நேரடி விற்பனை முயற்சிகளை பிரகாஷ் பப்ளிஷர்ஸ் தற்போது மேற்கொள்ளவில்லை. எனினும் பெருநகரங்களில், லாண்ட்மார்க் உள்ளிட்ட சில புத்தகக் கடைகளில், இவர்களின் வெளியீடுகள் கிடைக்கின்றன. நேரடியாக கடைகளில் வாங்க வாய்ப்பு இல்லாதவர்கள், ஆண்டுச் சந்தா கட்டுவதே சிறந்த வழி. தற்போது காமிக்ஸ் இதழ்களுக்கு பெருகி வரும் வரவேற்பு,  இந்நிலையை விரைவில் மாற்றி விடும் என்று நம்பலாம்!

மட்டமான தாள்களில் முன்பு வெளியாகிக் கொண்டிருந்த இந்த இதழ்கள், தற்போது உயர்ரக ஆர்ட் பேப்பரில், முழு வண்ணத்தில், மேம்பட்ட தரத்தில் வெளியாகின்றன என்பது குறிப்பிடத் தக்கது! என்றாலும், வண்ண இதழ்களில் அடிக்கடி நேரும் அச்சுக் குளறுபடிகளும், கருப்பு வெள்ளைக் கதைகளில் சுமாரான தாள்கள் உபயோகிக்கப் படுவதும், விரைவில் சரி செய்யப் பட வேண்டும் என்பதே நெடுநாளைய வாசகர்களின் விருப்பமாக உள்ளது!

2014 சந்தா விபரங்கள் (ஆண்டு சந்தா & சூப்பர் சிக்ஸ் சந்தா):


2014-ல் வெளியாகும் கதைகள்:
கீழ்க்கண்ட Preview-வை PDF Format-ல், இங்கே டவுன்லோட் செய்யலாம் (மாத இதழ்கள் + சூப்பர் சிக்ஸ் இதழ்கள் + மேக்னம் ஸ்பெஷல்!)

சூப்பர் சிக்ஸில் வெளியாகும் கதைகள்:


.
சமீபத்தில் (ஜூலை 9, 2014), ப்ளேட்பீடியா வலைப்பூ மொத்தம் 3,00,000 பார்வைகளை எட்டிப் பிடித்திருக்கிறது! இதை சாத்தியமாக்கிய இணைய வாசகர்களுக்கும்; தமிழ்மணம் / தமிழ்10 போன்ற திரட்டிகளுக்கும்; வலைப்பூ, ஃபேஸ்புக் மற்றும் காமிக்ஸ் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
.
( தமிழ் காமிக்ஸ்  | லயன் காமிக்ஸ் | முத்து காமிக்ஸ் )

கருத்துகள்