சமீபத்தில் லயன் காமிக்ஸ் பதிப்பகத்தினர் நடத்திய KBT மொழிபெயர்ப்பு போட்டியில் தேர்வான ஸ்க்ரிப்ட்களில் என்னுடையதும் ஒன்று! Iznogoud தோன்றும் The Invisible Menace என்ற அந்த காமிக்ஸின் வரிவடிவத்தை இப்பக்கத்தில் காணலாம்! இதை முழுதாய்
ரசித்திட ஒரு சிறிய விளக்கம் உதவியாய் இருந்திடும் என நான் கருதுவதால் ஒரு
குட்டி முகவுரை:
இக்கதையை மொழிபெயர்க்க அமர்ந்த போது ஒரு விடயத்தில் தீர்மானமாக இருந்தேன். இயன்ற வரையில் இந்த பிரெஞ்சுக் கதையின் - ஆங்கில மொழிபெயர்ப்பை அப்படியே அடியொற்றி எடுப்பதென்று! எனவே நாம் படித்து / பார்த்துப் பழகிய நகைச்சுவை பன்ச் வசனங்களை பெரும்பாலும் தவிர்த்துள்ளேன் (ஓரிரு இடங்களைத் தவிர).
மற்றுமொரு அம்சம்: Iznogoud (மதியில்லா மந்திரி) - தொடரில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் ஆங்கில சொற்றொடர்களின் மருவிய வடிவம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் - பெயர்களே சிரிப்பை தூண்டுவதாக இருக்கும். (உதாரணம்: Iznogoud = He's no good!). இந்த அம்சத்தை தமிழில் கொண்டு வர முயற்சித்துள்ளேன்! எனினும் குழப்பத்தை தவிர்க்க, ஏற்கனவே நமக்கு அறிமுகமான முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்களை மாற்றவில்லை!
சொல்லுக்குச் சொல் நேரடியாக மொழிபெயர்க்கும் பாணி அனைத்து அயல்நாட்டு நகைச்சுவை கதைகளிலும் சாத்தியப்படுமா என்பது மிகப்பெரும் கேள்விக்குறியே என்றாலும் இக்கதையில் பொருந்தி இருக்கிறதா என்பதை உங்கள் மூலம் கேட்டு அறிய ஆவலுடன் இருக்கிறேன்!
பி.கு.1: கதையின் தலைப்பிலும், நடுவே ஒரு இடத்திலும் நம் அபிமான இரும்புக்கை மாயாவிக்கு tribute செய்திட தவறவில்லை! :)
பி.கு.2: கூகிள் டாக்ஸ் மூலம் படிக்க இங்கே அமுக்கவும்!
இக்கதையை மொழிபெயர்க்க அமர்ந்த போது ஒரு விடயத்தில் தீர்மானமாக இருந்தேன். இயன்ற வரையில் இந்த பிரெஞ்சுக் கதையின் - ஆங்கில மொழிபெயர்ப்பை அப்படியே அடியொற்றி எடுப்பதென்று! எனவே நாம் படித்து / பார்த்துப் பழகிய நகைச்சுவை பன்ச் வசனங்களை பெரும்பாலும் தவிர்த்துள்ளேன் (ஓரிரு இடங்களைத் தவிர).
மற்றுமொரு அம்சம்: Iznogoud (மதியில்லா மந்திரி) - தொடரில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் ஆங்கில சொற்றொடர்களின் மருவிய வடிவம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் - பெயர்களே சிரிப்பை தூண்டுவதாக இருக்கும். (உதாரணம்: Iznogoud = He's no good!). இந்த அம்சத்தை தமிழில் கொண்டு வர முயற்சித்துள்ளேன்! எனினும் குழப்பத்தை தவிர்க்க, ஏற்கனவே நமக்கு அறிமுகமான முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்களை மாற்றவில்லை!
சொல்லுக்குச் சொல் நேரடியாக மொழிபெயர்க்கும் பாணி அனைத்து அயல்நாட்டு நகைச்சுவை கதைகளிலும் சாத்தியப்படுமா என்பது மிகப்பெரும் கேள்விக்குறியே என்றாலும் இக்கதையில் பொருந்தி இருக்கிறதா என்பதை உங்கள் மூலம் கேட்டு அறிய ஆவலுடன் இருக்கிறேன்!
பி.கு.1: கதையின் தலைப்பிலும், நடுவே ஒரு இடத்திலும் நம் அபிமான இரும்புக்கை மாயாவிக்கு tribute செய்திட தவறவில்லை! :)
பி.கு.2: கூகிள் டாக்ஸ் மூலம் படிக்க இங்கே அமுக்கவும்!
பி.கு.3: சில மொபைல் சாதனங்களில் Google Docs / Tamil UTF-8 Text Encoding சரியாக வேலை செய்யாது என்பது தெரிய வந்தது! மொபைல் மூலம் வாசிக்கும் நண்பர்களின் வசதிக்காக ஸ்க்ரிப்ட்டை எனது வலைப்பூவில் ஒரு தனிப்பக்கமாக அளித்துள்ளேன்! லயன் ப்ளாகில் அதிகாரபூர்வமாக வெளியாகி விட்டதால், இது ஒரு பிரச்சினையாக இருக்காது என்றே நம்புகிறேன்! ஏதேனும் ஆட்சேபணை இருக்கும் பட்சத்தில் இப்பக்கத்தை நீக்க தயாராக இருக்கிறேன்! :)
-----------
மதியில்லா
மாயாவி!
-----------
-----------
பக்கம்
-
1
கீழைத்தேச இளம்பாடகர் குத்துபாயின் (குத்து+Boy!) இனிமையான பாடல்களை கேட்டவாறு மாலைப்பொழுதுகளை அமைதியாக கழிப்பது சுல்தான் ஹரூன் அல் குண்டுவின் வாடிக்கை!
அய்யோ அய்யய்யோ... ஏ... அய்யோ அய்யய்யோ..!
பாசறையில் விஷமக்கார மதி மந்திரி நா'மோடி மஸ்தான் மனதிலோ, ஓயாத ஒரு பாழ் எண்ணம்!
குண்டுபாய்க்கு பதிலா, நான் சுல்தானா ஆகணும்!
இதைக் கேட்டு பீதியானான், மந்திரியின் நம்பிக்கைக்குரிய ஜால்ரா பாய்! பலசாலி ஆனால் படு அப்பாவி!
என்னால சுல்தான் ஆக முடியாதுன்னா, இனி நான் அந்த சுல்தானை பார்க்கவே விரும்பல!
சொல்லத் தயக்கமாதான் இருக்கு! ஆனா, இனி நீங்க சுல்தானை பார்க்காம இருக்க ஒரு வழி இருக்குன்னு நெனைக்கிறேன்!
ஊர்ல ஒமர் குந்திகினுசிந்திப்பவன்னு ஒரு மந்திரவாதி வந்துருக்கார்! அவரால எதையும் மாயமா மறைய வைக்க முடியும்னு பேசிக்கறாங்க!
இதை ஏன் முதல்லையே சொல்லலே?! நான் அவரை உடனே பார்க்கணுமே?!
அதாகப்பட்டது... ம்கும்.. நாம இப்படி ஏதாவது பண்ணப் போக விளைவு ரொம்ப மோசமா...
அதுவும் உங்க முந்தைய முயற்சிகளோட விளைவுகளை நெனைச்சா வயிறு கலங்குது...
வாய மூடு! ஓமர் வீட்டுக்கு கூட்டிப் போ!
ஹெஹ்.. ஹெ! சுல்தானை யாரும் பார்க்க முடியலன்னா, சுல்தானே இல்லாத மாதிரிதான்! அப்புறம் நான் சுளுவா சுல்தான் ஆயிறலாம்!
இங்கதான் மாஸ்டர்!
கதவு திறந்தே இருக்கு! என்னே ஒரு உபச்சார குணம்! நீ இங்கேயே இரு. நான் உள்ளார போறேன்..
த.....ட்ட்
பக்கம்
-
2
உள்ளே வா!
!?!
ஓ... ஓ... கண்ணா என்னை மன்னிச்சுக்கோப்பா! இந்த கனத்த தேக்குக் கதவு மத்தவங்க கண்ணுக்கு தெரியாதுங்கறது அடிக்கடி மறந்துருது!
கரம், சிரம், புறம் நீட்டாதப்பா! இங்க நெறைய சாமான் இறைஞ்சி கிடக்கு! அடுக்கி வெக்க இன்னும் நேரம் கிடைக்கல! கவனம்... அங்க ஸ்டூல் இருக்கு...
அதனால என்ன! கட்ட பிரம்மச்சாரி வீடு எப்டி இருக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும்!
அந்த மூங்கில் நாற்காலில ஒக்காருப்பா!
???
சரி, இப்ப சொல்லு... யாருப்பா நீ?!
நான் அவன் இல்ல...
நான் எங்கயோ அங்க இருந்து வர்றேன்...
ஏய், பார்த்து...
நாசூக்கு தெரியாதவனே...
!?!?
சூப்பரான நீல நிற போர்சலின் ஜாடி - கீழ தள்ளி சுக்கு நூறாக்கிட்டியே!
??!!
எதையும் மாயமா மறைய வைக்கற சூட்சுமம் உங்களுக்கு தெரியும்னு பேசிக்கறாங்களே? உண்மையா?!
அதான் எல்லாருக்குமே தெரியுமே?
அந்த ரகசியத்தை எனக்கு சொல்லுங்க!
பொறு கண்ணா! அதுக்கு கன்னா பின்னான்னு செலவாகுமே?!
- எவ்ளோ?
லட்சம் திராம்!
- முடியாது...
அம்பதாயிரம்
- அநியாயம்
கடைசியா நாப்பதாயிரம்
- கட்டுப்படியாகாது, பத்தாயிரம்தான் தருவேன்!
சரி, ஆனாலும் இது பகல் கொள்ளை!
பக்கம்
-
3
சரி ரகசியத்தை சொல்லுங்க!
பொதுவா இந்த மறைய வைக்கிற இரகசியத்தை தெரிஞ்சிகிட்டதும், பணம் கொடுக்காம உடனே மறைஞ்சிடுறாங்க! அதனால, மொத பணத்தை இந்த வார்னிஷ் செஞ்ச பெட்டகத்தில போடு!
சரி, இதோ உங்க பணம்!
கவனமா போடு! என்னோட பிங்க் நிற சீன ஜாடி அது மேல இருக்கு!
எதையாவது, இல்லைனா யாரையாவது மறைய வைக்கணும்னா, அவங்க முன்னாடி நின்னு, கைகளால கண்களை மூடிட்டு "அப்ராகாடாப்ரா, நான் உங்களை பார்க்க விரும்பல, நான் உங்களை பார்க்க விரும்பல, நான் உங்களை பார்க்க விரும்பல!" அப்படின்னு சொல்லணும்!
அவ்ளோதானா?
அவ்வளவேதான்! ஆனா நீ இதை சொல்லறப்போ, மறைய வைக்க நினைக்கிற பொருள் இல்லைனா ஆள் - ஆடாம அசையாம இருக்க வேண்டியது அவசியம்!
நம்ப முடியலியே! இப்பவே சோதிச்சு பாத்துர்றேன்! ஜால்ரா பாய், வா இங்க!
தோ, வந்துட்டேன்...
தடால்....
கதவை தொறந்துட்டு உள்ள வாடா மரமண்டை!
அசையாதே... அப்ராகாடாப்ரா, நான் உங்களை பார்க்க விரும்பல, நான் உங்களை பார்க்க விரும்பல, நான் உங்களை பார்க்க விரும்பல!
ஹ்ம்ம்?
ஆஹா, ஆஹா, பார்க்கப் பரவசமான நிகழ்வு!
தோ, நான் சொல்லல? பார்க்க முடியாதுன்னு?!
?
ஜால்ரா கண்ணா, வா போலாம்!
நீங்க என்னை பார்க்கணும்னு கூப்பிட்டது, என்னை பார்க்க விரும்பலேன்னு சொல்லத்தானா?!
பார்த்து...!!
அந்த பூப்போட்ட சீன மேஜை மேல ஏன்தான் எல்லோரும் போய் மோதறீங்களோ? பார்த்து போக முடியாதா?
இங்க நடக்கறது எல்லாமே படு தமாஷா இருக்கு மாஸ்டர்!
பக்கம்
-
4
சரி, சீக்கிரமா அரண்மனைக்கு திரும்பணும்!
மாஸ்டர்! இங்க பாருங்களேன்!
என்னாச்சி?!
நான் அரூபமாயிட்டேன், பார்த்தீங்களா?
பார்த்தேன், அதுக்கென்ன இப்போ?!
அதுக்கென்னவா? எப்படித்தான் ஷேவ் பண்ணிக்கப் போறேனோ?!
நான் வர்ற வரைக்கும் இங்கேயே இரு!
நிச்சயமா நகர மாட்டேன், மந்திரியாரே!
அவர் உன்னைச் சொல்லல!
தளபதியாரே! காப்பாத்துங்க!
இவன் ஏன் இரும்புக்கை மாயாவியை பார்த்தா மாதிரி பயந்து ஓடுறான்?!
அருமை மந்திரியாரே! ரொம்ப நாளாச்சுப்பா உன்னை பார்த்து!
ஆடாம, அசையாம நான் சொல்றதை கேளுங்க!
அப்ராகாடாப்ரா, நான் உங்களை பார்க்க விரும்பல, நான் உங்களை...
தப்பு, தப்பு! இப்படியெல்லாமா பேசறது?!
?
சும்மா ஒரு வெளையாட்டுக்குதான்! அசையாம இருங்க, சட்டுன்னு ஜோலி முடிஞ்சிறும்!
இந்த வெளையாட்டு சுத்தமா புடிக்கல!
ஒரு தபா, ஒரே ஒரு தபா! நான் சொல்றாப்பல நடங்க ப்ளீஸ்!!!
பக்கம்
-
5
சரி, எமோஷன் ஆகாதே! இப்ப என்ன? நான் மோஷன் இல்லாம இருக்கணும், அதானே?
நீங்க இதை சீரியஸாவே எடுத்துக்க மாட்டேங்கறீங்க!
அப்ராகாடாப்ரா, நான் உங்களை பார்க்க விரும்பல, நான் உங்களை பார்க்க விரும்பல, நான் உங்களை பார்க்க விரும்பல!
ம... மறைஞ்சுட்டாறு!
ஹய்யா... சுல்தானை மறைய வச்சுட்டேன்!
மந்திரியாரே...
?!?
ஒரு கப் காப்பி குடிக்கறியாப்பா?
நகரக் கூடாதுன்னு சொன்னேன்ல!! புரியல?!
காப்பி குடிக்கத்தானே போனேன்? அதோட...
இப்ப நீ இடத்தை காலி பண்ணு! விளையாட்டு என்னவோ நல்லாதான் இருந்துச்சு! ஆனா, எனக்கு தூக்கம் தூக்கமா வருது!
நம்பினோரின் நாயகரே, சித்த பொறுங்களேன்!
நாளைக்கு பார்க்கலாம்... ஹாவ்...
பார்த்தீங்களா மாஸ்டர், நான் இன்னும் இங்கதான் இருக்கேன்...
வட போச்சே! இப்ப என்ன பண்ணறது?
என்னை சுயரூபத்துக்கு கொண்டு வாங்க மாஸ்டர்!
ஒரு ஐடியா!
ஏன்னாக்கா, மொச்.. க்ளக்... எனக்கு உடம்பு சரியா இருக்கா இல்லையான்னு பாத்துக்க முடியாது! அது தெரியாம டாக்டரைப் பாக்க போக முடியாது!
பக்கம்
-
6
சுல்தான் தூங்கிட்டு இருக்கும் போது நைஸா வேலையை காட்டிற வேண்டியதுதான்! அவர் எந்திரிச்சு பார்க்கும் போது, அவரே இருக்க மாட்டார்!
அப்படியே, டாக்டர்ட்ட போனாலும் அவர் என்னோட நாக்கை இழுத்துப் பாத்து செக் பண்ண முடியாது!
வா...
கருவாட்டுக்கு மட்டும் ஏன் தோல் உறிக்காம விடுறாங்களோ?
(*குறிப்பு* மேற்கண்ட வசனம் சற்று அன்னியமாகப் பட்டாலும் அடுத்த வசனம் அதை சரி கட்டிவிடும்!)
யாரும் உன்னை பார்த்துடாம வா! பார்த்தா தோலை உறிச்சிடுவாங்க!
நானே எதிர்ல போய் நின்னு பாருன்னு சொன்னாக் கூட யாராலேயும் பார்க்க முடியாது!
ஒரே இருட்டா இருக்கு...
நான் வெளிச்சத்தை மறைச்சுட்டு நிக்குறேனோ?
அசையாதே... அப்ராகாடாப்ரா, நான் உங்களை பார்க்க விரும்பல, நான் உங்களை பார்க்க விரும்பல, நான் உங்களை பார்க்க விரும்பல!
இந்த தபா ஜோலியை கச்சிதமா முடிச்சிட்டேன்னு நெனைக்கிறேன்!
அருமை மந்திரியாரே! அர்த்தராத்திரியில் இங்க என்னப்பா பண்ணிட்டு இருக்க?
!?!
என் பின்னாடி ஒளிஞ்சுக்கங்க மாஸ்டர்!
நீங்க.. நீங்க தூங்கிட்டு இருக்கலியா?
தூக்கம் பிடிக்கலைன்னு, பொடிநடை போட்டுக்கிட்டு இருந்தேன்! நீ சொன்னது சரிதான், நான் காப்பி குடிச்சிருக்கக் கூடாது! சரி, நீ இங்க என்ன பண்ற?
அது... அது வந்து... நான் இந்த வழியா வந்துட்டு இருந்தேனா...
மாஸ்டர் ஒடுங்க! இது சரியா படல...
என் கட்டில்.. என் கட்டிலை காணோம்! யாரோ ஆட்டைய போட்டுட்டாங்க!
பக்கம்
-
7
ஏதாவது ஒரு வழி இருக்கணும்...
இருந்தே ஆகணும்!
ஆவ்...
நாளைக்கு காலையில மறுபடி முயற்சிப்பேன்...
என் கை... பார்த்தீங்களா மாஸ்டர்? சிராய்ப்பு ஏற்பட்டிருக்கு!
மறுநாள் காலையில்....
அருமை மந்திரியாரே, வந்துட்டியாப்பா?
ஜல்தி, அசையாதீங்க!
அப்ராகாடாப்ரா, நான் உங்களை பார்க்க விரும்பல, நான் உங்களை பார்க்க விரும்பல, நான் உங்களை...
சித்தே இங்க பாருப்பா!
எவ்ளோ காமெடியா இருக்கு பார்த்தேல்ல?!
!!!
இதை சொல்லத்தான் இப்படி ஓடோடி வந்தியா?
!!!
கண்ணாடி முன்னாடியா சொல்லிட்டிருந்தேன்? நல்லவேளை, முழுசா சொல்லல! இந்நேரம் நானே மறைஞ்சிருப்பேன்!
கல்தா கொடுத்துட்டாரே சுல்தான்! வேற மார்க்கமே இல்லையா?
ஆங்...! இருக்கு! எனக்கு ஏன் இது முதல்லையே தோணல?
ஜால்ரா பாய், எங்க இருக்கே?
பக்கம்
-
8
தடால்....
இங்கதான் மாஸ்டர்!
சுல்தானை உன்னால மறைய வைக்க முடியும்! நீ அவர் கண்ணுக்கு தெரிய மாட்டேங்கறதுனால உன்மேல சந்தேகம் வராது! ரிஸ்கே இல்லாத வேலை!
என்ன பண்ணனும் மாஸ்டர்?
ரொம்ப ஈஸி! சுல்தான் முன்னாடி நின்னு...
அப்ராகாடாப்ரா, நான் உங்களை பார்க்க விரும்பல, நான் உங்களை பார்க்க விரும்பல, நான் உங்களை பார்க்க விரும்பலன்னு சொல்லணும்...
புரிஞ்சதா?
இருங்க சொல்லிப் பார்த்துக்கறேன்...
அப்ராகாடாப்ரா, நான் உங்களை பார்க்க விரும்பல, நான் உங்களை பார்க்க விரும்பல, நான் உங்களை...
பார்க்க விரும்பல! கரெக்ட்டா?
கச்சிதம் போ!
மாஸ்டர் எங்க போனீங்க? ஹய்யா...
எ.. என்னது?
சற்று நேரம் கழித்து...
ஆமா, சுல்தாதி சுல்தான் அவர்களே! ஆணி அறைஞ்சு கதவை இறுக்க மூடிட்டோம்! உள்ள பேய்கள் நடமாடுதுன்னு நெனைக்கறேன்! ஜாடி, கூஜா எல்லாம் காத்துல தானா பறந்துட்டு இருக்கு!
நல்லதொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான்! மந்திரியார் அருகில் இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும். மந்திரிக்கு மந்திரம் தெரியுங்கறதினால ஏதாவது செஞ்சிருப்பார்!
ஜலீர்.. க்ளான்க்... க்ராஷ்......
குத்துமதிப்பா எறியாதீங்க மாஸ்டர்! என்னை பார்க்க முடியாதுங்கறதை பார்க்கறீங்கதானே?!
---சுபம்---
மதியில்லா
மாயாவி!
மொழிப்பெயர்ப்பு:
கார்த்திக்
சோமலிங்கா
கருத்துகள்
கருத்துரையிடுக
ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia