இரண்டாம் உலகப் போர் காலத்திய நாஜி (Nazi / நாட்ஸீ) ஜெர்மனி என்றாலே - அடால்ஃப் ஹிட்லரும்; 'கவிழ்த்த சட்டி - ஹெல்மட்' தலையுடன், வலது கையை உயரே நீட்டி "நாஜி சல்யூட்" அடிக்கும் ஜெர்மானிய வீரர்களும்; கேஸ் சேம்பர்களில் அரங்கேறிய யூத இன அழிப்பும் மனத்திரையில் விரியும்! ஜெர்மனி மட்டுமல்ல... WW2-வுக்கு முன்னரும் பின்னரும் - பல நாடுகள் பல விதமான போர்க்குற்றங்கள், எல்லை விரிவாக்கம், இன அழிப்பு ஆகிய செயல்களில் ஈடுபட்டிருக்கின்றன. பல்வேறு காரணங்களுக்காக, தத்தம் எதிரி நாடுகளின் மீதும், இனங்களின் மீதும் மிருகத்தனமான தாக்குதல்களை இன்று வரை நடத்தியும் வருகின்றன. ஆனால், ஹிட்லர் கொடூரமான முறையில் நிகழ்த்திய பெரும் இன அழிப்பானது, உலக வரலாற்றில் மிகவும் அழுத்தமாகவே பதிக்கப் பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, உலகப்போர் குறித்த பெரும்பாலான மேற்கத்தியப் படைப்புகளில் - ஒட்டுமொத்த (நாஜி) ஜெர்மானியர்களையும் இரக்கமற்ற கொலைகாரர்களாகவும்; அவர்களை எதிர்த்துப் போரிட்ட நேச நாட்டு வீரர்களை ( Allied Forces ) ஒப்பற்ற நாயகர்களாகவும் பொதுப் படுத்தி சித்தரிப்பது வழக்கம் - காமிக்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்