மொஸாட் - இஸ்ரேலிய உளவு துறை

என். சொக்கன் - இந்த பெயர் எனக்கு ஏற்கனவே பரிச்சயமானதுதான்! பெங்களூரில் இருந்து காரில் மதுரை பயணிக்கும்போது, தர்மபுரி மீனாக்சி பவனில் காலை டிபனுக்கு நிற்பது வழக்கம் (பல வருடங்களுக்கு முன்பு, இப்போது அந்த உணவகம் இல்லை என்று கேள்வி). அங்கே கவுன்ட்டர் அருகில் உள்ள புத்தக ஸ்டாண்டில் இவரது சில புத்தகங்களை கண்டு இருக்கிறேன் - பெரும்பாலும் வாழ்கை வரலாறு, மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்கள்தான்! உண்மையை சொல்லப் போனால் - அவை என்னை ஈர்த்ததில்லை, எனவே அட்டைகளை பார்த்ததோடு சரி.

மொஸாட் - இஸ்ரேலிய உளவு துறை - என். சொக்கன்


சில மாதங்களுக்கு முன்பு திருப்பூர் புத்தக கண்காட்சிக்கு செல்ல நேர்ந்த பொது கண்ணை பறிக்கும் இந்த அட்டை போட்ட புத்தகம் வெகுவாய் என்னை கவர்ந்தது. உளவுத்துறை சம்பந்தப்பட்டது என்றால் விஜயகாந்த் படத்தையும் விடாமல் பார்த்த அனுபவம் இருந்ததால் உடனே எடுத்து புரட்டி பார்க்கலானேன்!

அன்று கண்காட்சியில் ஆளை புரட்டும் கூட்டமிருந்ததால் அதிகம் புரட்டாமல் அந்த புத்தகத்தை வாங்கினேன். அடுத்த நாள் பெங்களூர் திரும்ப காலை நேர இரயிலில் முன்பதிவு செய்திருந்தது (பக்கவாட்டு கீழிருக்கை) ரொம்பவே வசதியாக போனது! சேலம் வரை எதிர் இருக்கையில் யாரும் வராதது இன்னுமே சௌகரியாமாக போனது! எடுத்த கையுடன் படித்து முடித்தேன்! சுருங்க சொன்னால், இந்த புத்தகம் ஒரு பரபரப்பான துப்பறியும் புதினத்தை போல சுவாரசியமாக இருந்தது!

விரிவான அறிமுகம் என்று முன்னட்டையில் குறிப்பிட்டதை போலவே, இஸ்ரேலிய உளவுத்துறை "மொஸாட்" பற்றி ஆதி முதல் இன்று வரை மேலோட்டமாக, ஆனால் சுவாரசியமான இலகுவான நகைச்சுவை நடையில் சீராக தம்முடன் நம்மை பயணிக்க செய்கிறார்!

தூய தமிழும், பேச்சு வழக்கும் கை கோர்த்த ஒரு சிறந்த நூலாக இது அமைந்துள்ளது. திரைப்பட வசனங்களை ஆங்காங்கே பயன் படுத்தியிருப்பது நம்மை இந்த புத்தகத்துடன் ஒன்ற வைக்க வழி செய்கிறது. ஆனாலும் அதுவே சில நேரம் சலிப்படைய வைத்து விடுகிறது!

இப்புத்தகத்தில் குறிப்பிடப்படும் "Munich" படத்தை நான் இன்னும் பார்த்ததில்லை - ப்ளிப்கார்டில் அநியாய விலைக்கு விற்கப்படும் காரணத்தால் அந்த யோசனையை தற்காலிகமாக கை விட்டுள்ளேன்! ஒரு கனத்த தலைப்பில் ஜாலியாக புத்தகம் எழுதிய வகையில் சொக்கன் மிகுந்த பாராட்டுக்குரியவர்! இந்த புத்தகம் உடுமலை டாட் காமில் கிடைக்கிறது!

8 comments:

 1. காமிக்ஸ் நண்பர்கள் மற்றவர்களிடம் இருந்து மாறுபட்ட சிந்தனையாளர்கள் என்பதை நிறுபித்து விட்டீர்கள் . எனக்கு கழுத்து அறுபட்டு தொங்கவில்லை

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு நன்றி நண்பரே!

   Delete
 2. உங்கள் விமர்சனத்துக்கு மிக்க நன்றி கார்த்திக்

  - என். சொக்கன்,
  பெங்களூரு.

  ReplyDelete
  Replies
  1. வருகை தந்ததிற்கு நன்றி! முழு நீள விமர்சனம் எழுத வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் இப்போதுதான் தமிழ் ட்ரான்ஸ்லிடரேஷன் பழகி கொண்டிருப்பதால் நுனிப்புல் மட்டுமே மேய்ந்துள்ளேன் :)

   Delete
 3. கண்டிப்பாக Munich படத்தைப் பாருங்கள். தவறவிடக்கூடாத படம்.

  ReplyDelete
  Replies
  1. சீக்கிரமே பார்த்து விடுகிறேன்!

   Delete
 4. வணக்கம்,

  என் பெயர் உதயகுமார். திருப்பூரில் பிறந்து வளர்ந்து இப்போது பெங்களுர் மாநகரில் வேலையில் உள்ளேன். உங்கள் ரசனை பிரமிக்க வைக்கிறது. அருமையாக எழுதுகிறீர்கள்.

  munich திரைபடம் என்னிடம் உள்ளது. தொடர்பு கொண்டால் தருகிறேன்.
  நானும் அப்பப்ப கொஞ்சம் கிறுக்குவேன். டைம் இருந்தா பாருங்க.

  http://tamiludhayan.blogspot.com

  entprca@yahoo.com

  நன்றி

  உதயகுமார்

  ReplyDelete
 5. @உதயகுமார்: நன்றி நண்பரே! இந்த படத்தின் dvd ஏற்கனவே இன்னொரு நண்பர் மூலமாக கிடைத்து விட்டது! உங்கள் ப்ளாக்கை நிச்சயம் பார்க்கிறேன்!

  ReplyDelete

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia