திக்குத் தெரியாத தெற்கில்!

"பெங்களூர்-மதுரை-பெங்களூர் - வழி: திருப்பூர், மதுரை, சிவகாசி அல்லது ராஜபாளையம்" இப்படி குழப்பமான ஒரு போர்டு மாட்டிய வண்டியில் துணிந்து ஏறுவீர்களா?! மதுரையில் இருந்து பெங்களூர் வருவதற்கு, "1) KSRTC: மதுரை டு பெங்களூர்", "2) KPN: சிவகாசி டு பெங்களூர்", "3) KPN: ராஜபாளையம் டு பெங்களூர்" என ஒன்றுக்கு மூன்று மார்கங்களில் (நடுவில் 'ப' சேர்த்து தவறாகப் படிக்க வேண்டாம்!) டிக்கெட் எடுப்பீர்களா?! நான் சென்ற வார இறுதியில் இப்படித்தான் திக்குத் தெரியாமல் திரிந்து கொண்டிருந்தேன்! :)

எச்சரிக்கை: இலக்கின்றி பயணிக்கும் இந்த பதிவைப் படிக்க நிறைய நேரமும், அதைவிட அதிக அளவில் பொறுமையும், கொஞ்சமாய் நகைச்சுவை உணர்ச்சியும் அவசியப்படும்! :)

மதுரையில் 29ம் தேதியன்று இன்னும் ஒரு விசேஷம் இருக்கிறது என்ற விஷயமே சில வாரங்கள் முன்புதான் தெரிய வந்தது! தசரா விடுமுறைக்காக முன்பதிவு செய்திருந்த 'பெங்களூர் டு திருப்பூர்' ரயிலில் திருப்பூர் சென்று, இரண்டு வாரத்திற்கான பெட்டி படுக்கைகளை அங்கேயே கடாசி விட்டு, பிறகு ஒரு பஸ் பிடித்து நேராக(?) மதுரை போய் விடலாம் என்ற பளிச் ஐடியா என் மனைவிக்கு உதித்தது! மதுரையில் விசேஷம் முடிந்த கையோடு நான் பெங்களூர் திரும்பி விட்டால், அவர் குழந்தையோடு திருப்பூர் சென்று மீத விடுமுறையை ஜாலியாக கழிக்கலாம் என்பது தான் திட்டம்!

அவர் பக்க விசேஷம் என்பதால் இது போன்ற பிரம்மாதமான ஐடியாக்கள் அவருக்கு தோன்றியதில் எனக்கு வியப்பு ஏதும் ஏற்படவில்லை! ;) மாறாக, "பெங்களூர் டு திருப்பூர், அப்புறம் அன்னிக்கே திருப்பூர் டு மதுரை, மறுநாள் மதுரை டு பெங்களூரா?! ச்சே... பயங்கர கடுப்பா இருக்கு" என்று திருவாய் மலர்ந்தருளினேன்!

அத்தோடு சும்மா இருக்காமல், திடீரென்று அந்த திட்டத்தில் ஒரு ட்விஸ்ட் வேறு வைத்தேன்! :) உண்மையில், வியாழன் காலை வரை சிவகாசி செல்வதான ஒரு ப்ளான் துளியும் இருக்கவில்லை! இது பற்றி பேச, அன்று மாலை சௌந்தரை அழைத்தால் மனிதர் வழக்கம் போல போனை எடுக்கவே இல்லை! அடுத்த நாள் காலை வரை அவர் என்னை தொடர்பு கொள்ளாததால் மதுரையிலிருந்து நேரடியாக பெங்களூர் திரும்பி விடலாம் என்ற முடிவில், KSRTC-க்கு, 700 ரூபாய் தண்டம் அழுத அடுத்த சில நிமிடங்களிலேயே சௌந்தர் என்னை தொடர்பினார்!

ஞாயிறு மதியம் சிவகாசிக்கு கிளம்பி வரலாம்னு இருந்தேன் சௌந்தர்! உங்களை பார்த்து பேசிட்டு, அங்க இருந்தே நைட்டு பெங்களூர் கிளம்பிடலாம்னு நெனச்சேன்! அடுத்த முறை இப்படி ஒரு சான்ஸ் கிடைக்கறது கஷ்டம் தான்!

தாராளமா வாங்களேன்! சனிக்கிழமையே வந்தா லயன் ஆபிஸுக்கும் போயிட்டு வரலாம்!

ப்ச்.. சான்ஸ் இல்ல சௌந்தர், மதுரைக்கே சனிக்கிழமை சாயந்திரம்தான் வருவேன்! ஞாயிறு மதியம் மேலதான் ஃப்ரீ! முடிஞ்சா சரவணா & தினா வையும் மீட் பண்ணனும்...

ஓகே, நோ ப்ராப்ளம்! அவசியம் வாங்க!

அந்த சிறு சம்பாஷணையைத் தொடர்ந்து, சிவகாசி டு பெங்களூர் ஞாயிறு எட்டு மணி KPN பஸ்ஸில் டிக்கெட் புக் செய்து விட்டு; பேஸ்புக் உள்டப்பி (Chat Box!) மூலமாக நான் வரவிருக்கும் விவரத்தை சரவணா மற்றும் தினாவிடம் தெரிவித்தேன்! உண்மையில் அவர்களை வரச் சொல்லவே சங்கடமாகத்தான் இருந்தது! சரவணா இருப்பது திருநெல்வேலியில்; தினா இருப்பதோ நத்தத்தில் - அவரவர் ஊர்களில் இருந்து சிவகாசி வந்து செல்வது மட்டுமே அரை நாளை விழுங்கும் சங்கதி என்பதால், "சிரமப்பட வேண்டாம், முடிந்தால் மட்டுமே வாருங்கள்" என்றேன்! இருந்தாலும் இருவரும் வருவதாக உறுதி அளித்தார்கள்! சில காரணங்களால் நண்பர் சாக்ரடிஸை மட்டும் தொடர்பு கொள்ள முடியவில்லை, நெல்லை சென்றால் சந்திக்க வேண்டும்!

சனிக்கிழமை மதியம் திருப்பூரில் இருந்து மதுரை செல்லும் வழியில் சௌந்தருக்கு போன் செய்து, "ஹலோ, மைக் டெஸ்டிங்.. 1. 2.. 3... ஓவர்!" எனவும் அவர் பதிலுக்கு, "சிவகாசி மீட்டிங் கேன்சல், ராஜபாளையம் மீட்டிங் ஆன்.. ஓவர்!" என்று ட்விஸ்டுக்கே ஒரு ட்விஸ்ட் வைத்தார்! சரவணா மற்றும் தினாவிற்கு ராஜபாளையத்தில் சந்திப்பது வசதியாக இருக்கும் என்பதாலும், ராஜபாளையத்தில் இருந்து சிவகாசி KPN வரை டிராப் செய்வதாக சௌந்தர் உறுதி அளித்ததாலும் மண்டையை பலமாக ஆட்டிக் கொண்டே ஃபோனை கட் செய்தேன்! பஸ் ஓவராக குலுங்கியதில் என் பின் மண்டை, என் மனைவியின் முன் மண்டையை பலமாக இடித்து விட, அவர் கோபத்துடன்:

யாருங்க போன்ல?

சௌந்தர்தான், நாளைக்கு ராஜபாளையத்துல மீட் பண்ணப் போறோம்!

அப்ப சிவகாசில பஸ் எப்படி ஏறுவீங்க?

ராஜபாளையத்துல இருந்து சிவகாசிக்கு பஸ்ல போய் பஸ் ஏறுவேன்!

எனக்காக திருப்பூர்ல இருந்து மதுரை போறது உங்களுக்கு சலிப்பா தெரியும்! ஆனா உங்களோட வெட்டி 'காமிக்ஸ் மீட்டிங்குக்காக' ஏழு கடல், ஏழு மலையைக் கூட அசால்ட்டா தாண்டுவீங்க, அப்படித்தானே?

என்று அவர் மரண அடி கொடுத்தும், அவமானத்தில் தொங்கிய தலையை மறைக்கும் விதமாய் அசடு வழிந்தேன்! கச்சிதமாக பாய்ண்டை கவ்வுவதில் கல்யாணமான பெண்கள் கில்லாடிகள்! :)

மாலையில் சரவணாவுக்கு போன் போட்டு, "ஏங்க ராஜபாளையத்துல இருந்து பெங்களூருக்கு டைரக்ட் பஸ் கிடைக்குமா?" என்று அப்பாவியாக கேட்டேன்! 'சௌந்தரிடம் கேட்டுச் சொல்றேன்' என்று அவர் சொன்ன சற்று நேரத்தில் சௌந்தர் எனக்கு போன் செய்து "கார்த்திக், நீங்களே பெங்களூர் பஸ் இருக்கான்னு செக் பண்ணி, டிக்கெட் புக் பண்ணிக்க முடியுமா?!" என்று பரிதாபமாகக் கேட்டார்! எனக்கு லைட்டாக தலை சுற்ற ஆரம்பித்தது!

பிரௌசிங் சென்டரில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்களை உபயோகிக்கும் ரிஸ்க்கை நான் ஒருபோதும் எடுத்த(ப)தில்லை என்பதால், என் வாழ்க்கையிலேயே முதன் முறையாக மொபைல் மூலமாகவே KPN-ல் டிக்கெட் புக் செய்தேன்! (தாங்க்ஸ் டு மைக்ரோசாஃப்ட் லூமியா 620, ஹி ஹி ஹி - ஒரு விளம்பரம்!). பிறகு, 'மதுரை டு பெங்களூர்' மற்றும் 'சிவகாசி டு பெங்களூர்' இரண்டு டிக்கட்டுகளையும் 25% செய்கூலி, சேதாரத்தோடு கேன்சல் செய்து விட்டு என் மனைவியிடம், "ராஜபாளையத்துல இருந்து டைரக்ட் பெங்களூர் பஸ் புக் பண்ணிட்டேன்" என்று பம்மிக் கொண்டே சொல்ல, அவர் தலையில் அடித்துக் கொண்டு "கர்மம், கர்மம்.. எக்கேடோ கெட்டுப் போங்க" என்று அன்புடன் வாழ்த்தினார்! :)

இப்படியாக என் 'ப்ளான்ல ஒரு டபுள் ட்விஸ்ட் அட்வென்ச்சர் பயணம்', மதிய விருந்து உண்ட உப்பலான வயிற்றோடு, சரியாக ஒரு மணிக்குத் துவங்கியது! நான் வில்லாபுரத்தில் இருந்து கிளம்புவதால், பெரியார் பஸ் ஸ்டாண்ட்  சென்று திருமங்கலம் பஸ் பிடித்து, அங்கிருந்து ராஜபாளையம் பஸ் மாறி வருமாறு சௌந்தர் ஏற்கனவே சொல்லியிருந்தார்! திருமங்கலத்தில் இறங்கியவுடன் அரை லிட்டர் பவண்டோ பாட்டிலை வாங்கி, தொண்டைக்குள் கால் லிட்டரை சரித்து தாகசாந்தி செய்தேன்! ராஜபாளையம் புறப்பட தயாராக இருந்த '2 மணி' பஸ்சின், பின்வாசல் ஜன்னல் சீட்டில் என்னை சொருகிக் கொண்டு, வண்டி நகர்வதற்குள் மீதமிருந்த கால் லிட்டரையும் சரித்திருந்தேன்!

பஸ் ஏறிட்டேன் சௌந்தர்! இரண்டு மணி நேரமாகுமா?!

...1:30 மணி நேரம் கழித்து...

ஹலோ? எங்கே, பழைய பஸ் ஸ்டாண்ட்ல வெயிட் பண்றீங்களா?! சரி அங்கேயே இறங்கிடறேன்!
...
அடடா, தவறுதலா புது பஸ் ஸ்டாண்ட்டுக்கே வந்துட்டேன் சௌந்தர்! இங்கே வந்துடறீங்களா, ப்ளீஸ்?!

*** காத்திருந்த சமயத்தில் ப்ளாகர் நண்பர் அப்துல் பாஸித் அழைத்தார்!

நான் துபாய் கிளம்பறேன் பாஸ்! உங்களைத்தான் சந்திக்க முடியல!

அடுத்த முறை கண்டிப்பா மீட் பண்ணலாம், முடிஞ்சா துபாய்ல! ஹா ஹா...

இங்கே வாங்கின காமிக்ஸ் எல்லாம் கையோடு கொண்டு போறேன்! டயபாலிக் ரொம்ப நல்லா இருந்தது!

குட், குட்! என்ஜாய் ரீடிங்! :) விஷ் யூ ஹேப்பி ஜர்னி பாஸித்!

நன்றி!! :) பை பை..

டொக்...

வாங்க... லே!
போனை டொக்கிய சில நொடிகளில், "ஹலோ கார்த்தி" என்றவாறு ஒரு மொட்டை பாஸ் என் இடப்பக்கமிருந்து அழைக்க, அவரைத் தொடர்ந்து தினாவும்,  சௌந்தரும் ஹலோ சொல்லிக் கொண்டு வரவும் - முன்னவர் சரவணாவாகத்தான் இருக்க வேண்டும் என்பது உறுதியாக புலப்பட்டது! அவர்களை நான் பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து, புதிய பஸ் ஸ்டாண்டுக்கு அலைய விட்ட கடுப்பை முகத்தில் காட்டிக் கொள்ளாமல், நேசத்துடன் புன்னகைத்தார்கள்! 'என்னை சிவகாசி, ராஜபாளையம்-னு அலைய விட்டீங்கல்ல.. இப்ப எப்படி இருக்கு?!' என்ற மைன்ட் வாய்ஸ் பொதிந்த புன்னகையை பதிலாக அளித்தேன்:)

பசிக்குதுப்பா!!
ஆட்டோவில் ஏறி சௌந்தரின் வீடு அடையும் வரை தினா எதுவும் பேசாமல் கூச்சத்தோடே வந்து கொண்டிருந்தார்! புன்னகையுடன் வரவேற்ற திருமதி.சௌந்தர், சற்று நேரத்திலேயே சாப்பிடலாமா என்று கேட்டதும்தான், தினாவுக்கு இருந்தது பசி மயக்கம் என்ற உண்மை எனக்கு உறைத்தது! சௌந்தரிடம் லஞ்ச் முடித்துவிட்டுத்தான் வருவேன் என்று சொல்லியிருந்தும், மாலை நாலு மணி வரை எனக்காக சாப்பிடாமல் காத்திருந்த இந்த மூன்று நண்பர்களின் அன்பை என்னவென்பது?! மதுரையில் உண்ட விருந்து +  திருமங்கலத்தில் அடித்த அரை லிட்டர் பவண்டோ என என் வயிறு நிரம்பி வழிந்து கொண்டிருந்தாலும், பசித்திருந்த நண்பர்களுக்காக அதிகம் பிகு செய்யாமல் தம் கட்டி சாப்பிட உட்கார்ந்தேன்! மீன் குழம்பு, மீன் வறுவல், ஆம்லேட் என்று அமர்களப் படுத்தி இருந்தார் திருமதி.சௌந்தர்! இந்தக் களேபரத்தில் உணவு அருமையாக இருந்தது என்று அவரிடம் பாராட்டுக்கள் தெரிவிக்க கூட மறந்து விட்டேன் என்பது இந்தப் பதிவை எழுதும் போதுதான் உறைக்கிறது! :(

சோறு உள்ள போனதும் சிரிப்பு!
'வயிற்றுக்கு உணவளித்த பிறகு சிறிது செவிக்கும் ஈயப்படும்' என்ற வள்ளுவர் சொல்லாத வாக்குப்படி பேச அமர்ந்தோம்! :) அப்படி ஒன்றும் வரலாற்று முக்கியத்துவமான விஷயங்களை பேசிடவில்லை! :) 'செப்டம்பர் மாத புத்தகங்களின் எடை குறைவாக இருக்கிறது' என்ற ரீதியில் சௌந்தர் லயன் ப்ளாகில் இட்ட கமெண்டை வைத்து, அவரை ஏற்கனவே ஃபேஸ்புக்கில் கலாய்த்ததன் தொடர்ச்சியாக, சரவணா அவரை வம்புக்கு இழுக்கவும் - டென்ஷன் ஆன சௌந்தர் 'என் பெயர் லார்கோ' இதழை சரேலென்று உருவி அதன் அட்டையை வளைத்துப் பார்க்கச் சொன்னார்! உண்மைதான், கடந்த வருட இதழ்களை ஒப்பிடும் போது தற்போதைய அட்டையின் தரம் மகா மட்டமாகத்தான் இருக்கிறது! :(

எவன்டா டைகர் பத்தி தப்பா பேசுனது?
சௌந்தர் ஒரு டைகர் பிரியர் என்பதால் அவரிடம் இருந்த டைகர் புத்தகங்கள் சிலவற்றை காட்டிக் கொண்டு இருந்தார்! அவற்றில், Moebius கையொப்பமிட்ட லிமிடட் எடிஷன் ஆங்கில புத்தகம் ஒன்றும் அடக்கம்! அந்த ஒரிஜினல் புத்தகத்திலும், பல பிரிண்டிங் மிஸ்டேக்கள் எனது கண்களுக்கு தென்பட்டது என்பது உபரித் தகவல்! :) டைகரை நக்கல் அடித்தால் ஏகத்துக்கும் கடுப்பாகிறார் சௌந்தர் என்பது 'ஊ'பரித் தகவல்! :D

மேலை நாடுகளில் Underground Comics என்ற பதத்திற்கு முற்றிலும் மாறுபட்ட அர்த்தம் உண்டு! சென்சார் பற்றிய எந்த கவலையும் இன்றி (வன்முறை+உறவின் முறை, ஆபாசம்+பாயாசம், சம்பிரதாயம்+சாம்பார் சாதம் etc. etc.), கதைக்களங்கள் படு பயங்கரமாக இருக்குமாம்! தமிழ்நாட்டின் அண்டர்-கிரௌண்ட் காமிக்ஸ்களோ முற்றிலும் வேறு ரகம்! லயன் & முத்துவில் ஹிட் அடித்த கதைகள் - லைசென்ஸ் இன்றி சைலண்டாக, வண்ணக் கலரில், லிமிடட் எடிஷன்களாக பிரிண்ட் செய்யப்பட்டு, அன்லிமிடட் அநியாய விலைக்கு விற்கப்படும் (கள்ளக்) காமிக்ஸ்கள் அவை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்!

அப்படி வெளியான ப்ளூபெர்ரியின் 'தங்கக் கல்லறை' அண்டர்-கிரௌண்ட் காமிக்ஸ் ஒன்றை, சௌந்தர் காட்டினார்! பார்த்தவுடன் சிரிப்புதான் வந்தது! 100 பக்க கதையை, 500 பக்கங்களுக்கு நிகரான பருமனில் பிரிண்ட் செய்து இருந்தார்கள்! அந்த புத்தகத்தில் பேப்பரே கிடையாது - முழுக்க முழுக்க கெட்டியான அட்டைகள் தான்! ஏதோ குழந்தைகளுக்கான Picture Board Books போல, பார்க்கவே படு காமெடியாக இருந்தது! விலை எட்டாயிரமாம்! இதற்கு $50 கொடுத்து Moebius கையொப்பமிட்ட ஒரிஜினல் ஆங்கிலப் பிரதி-யையே வாங்கி விடலாம்! இவற்றை வெளியிடுவது யார், விற்பனை செய்வது யார், சந்தா கட்டி வாங்குவது யார் யார் போன்ற அடி மட்ட அரசியல் விவகாரங்களில் எனக்கு துளியும் ஆர்வம் இல்லை என்பதால், நமக்கேன் வம்பு என்று அந்த கள்ள காமிக்ஸ்க்கு ஒரு பெரிய கும்பிடு போட்டு வைத்தேன்! :) கூட்டத்தோடு கும்பிடு போட விருப்பமுள்ளவர்கள், சௌந்தரின் 100-வது பதிவில் - பாதி கிணற்றைத் தாண்டினால் அந்த 'தங்கத் தலையணை'-யை தரிசிக்கலாம்! ;)

கடிச்சே புடுவேன்!
டீ குடிக்க வெளியே செல்லலாம் என்ற முடிவில் கீழே இறங்கினோம்! உலகப் புகழ் பெற்ற ராஜபாளையம் நாய்களில் ஒன்றையாவது சந்தித்து(!) விட வேண்டும் என்ற ஆசையில் என் கண்கள் அலைபாய்ந்தன! ஆனால், வழியில் ஒரு தெருநாய் கூட தென்படவில்லை! எனவே இணையத்தில் சுட்ட ஒரு நாய்ப்படம் உங்கள் பார்வைக்கு இதோ! :P

டீக்கடை படு பிஸியாக இருந்தது! அது என்னவோ, திருப்பூர் சந்திப்பின் போதும் டீக்கடையில்தான் போட்டோ எடுத்துக் கொண்டோம்; இங்கும் அப்படியே! டீக்கடை என்றாலும் நாங்கள் குடித்ததென்னவோ காப்பி தான்! சௌந்தர் மட்டும் அவர் சட்டை கலருக்கு மேட்சாக பால் குடித்தார்! டீக்கடை என்பதால் அவரை யாரும் சந்தேகிக்கவில்லை, பனை மரத்தடியை தவிர்ப்பது நலம்! ;)

காப்பி வித் கார்த்தி! & பால் வித் சௌந்தர்!
பிறகு சௌந்தரின் வீடு திரும்பி நேரே மொட்டை மாடிக்கு சென்று பேச்சைத் தொடர்ந்தோம்! திருமதி.சௌந்தர் தட்டு நிறைய தின்பண்டங்களை வைத்து விட்டு நகர்ந்தார்! எல்லா ஊர்களிலும் மாலை மங்கும் நேரம் மட்டும் ரம்யமாகவே இருக்கிறது! எங்கிருந்தோ வந்த தென்றல் எங்களை இதமாக வருடிச் செல்ல, எங்கள் உரையாடலும் அதைப் போலவே காமிக்ஸ், தமிழ் சினிமா, ஷெர்லாக் ஹோல்ம்ஸ், வேலை, சம்பளம் மற்றும் பல்வேறு அனுபவங்கள் என இலக்கின்றி பயணித்துக் கொண்டிருந்தது! ஏற்கனவே பதிவு படு நீளமாக பயணித்து விட்டதால், இத்துடன் முடித்துக் கொள்வதே உத்தமம் என்று நினைக்கிறேன்! :)

நாங்க அப்பவே அப்படி!
சௌந்தர் சில காமிக்ஸ்களை பரிசாக அளித்தார் (கள்ள அல்ல, நல்ல!). தினா, சுஜாதாவின் நில்லுங்கள் ராஜாவேவை கையில் திணித்தார்! சரவணா பழைய முத்து காமிக்ஸ் இதழான 'மரணத்தின் முகம்'-ஐ அன்பாக கொடுத்தார்! அதன் வாசகர் கடிதம் பகுதியில், என் கடிதமும் இடம் பெற்றிருக்கிறது என்பதுதான் ஸ்பெஷல்! அந்த காலத்திலேயே, 'கதை சூப்பர், ஆனா சுமார்' என்று ஆசிரியர் விஜயன் அவர்களை கலாய்திருக்கிறேன்! :P அவருக்கு புரிய வேண்டுமே என்பதற்காக மேஜர் சுந்தர்ராஜன் ஸ்டைலில், 'Science Fiction என்றால் விண்வெளி பற்றிய கதைகள்' என்றும், 'Jurassic Park என்பது கொடூரமான King Kong குரங்குகள் வசிக்கும் காடு' என்றும், 'இது போன்ற மொக்கைக் கதைகளை வெளியிட்டு - முத்துவுக்கு மூடு விழா நடத்தலாமே' என்றும் மொக்கை போட்டிருந்த அந்தக் கடிதத்தை வலப்பக்கம் கண்டு மகிழலாம்! :)

இந்த அல்வா போதாதென்று, திருநெல்வேலி இருட்டுக் கடையில் (சாந்தி ஸ்வீட்ஸ்), இரண்டு மணி நேரம் கியூவில் நின்று வாங்கிய, இரண்டு அரைக் கிலோ கோதுமை அல்வா பாகெட்டுகளை என்னிடம் கொடுத்தார் சரவணா! சுருக்கமாக சொல்வதானால், டபுள் அல்வா கொடுத்தார்! ;) பெங்களூர் திரும்பியதும் அரைக்கிலோவை திருப்பூருக்கு அனுப்பி விடலாம் என்ற முடிவில் DTDC சென்றேன். புக்கிங் கவுன்டரில் இருந்த பெண், "உள்ள என்ன இருக்கு" என்று கேட்க, "அரைக் கிலோ அல்வா" என்றேன்! ஏதோ அணுகுண்டையே அனுப்பப் போகிறேன் என்பது போல பதறிய அவர், 'உள்ளே இருப்பது அல்வா தான்' என்று Declaration கடிதம் எல்லாம் வாங்கிய பின்னர்தான் பார்சலையே கையில் வாங்கினார்! இது அல்வாவுக்கே அல்வா, அல்லவா?! சும்மா சொல்லக் கூடாது, சூப்பரான சுவை! நன்றி சரவணா! :) ஒரே நாளில் ஓவராக உள்ளே தள்ளியதில், மறுநாளே அல்வா வழுவழுவென்று வெளியேறியது! பீறிட்டுக் கிளம்பும் மதுரை மைசூர் பாக் போலன்றி, படு ஜென்டிலாக வேலை செய்கிறது நெல்லை அல்வா! சூப்பர்! சூப்பர்! :D

பல்ப் தலை மாயாவி!
பிறகு சௌந்தர் வீட்டில் இருந்து விடை பெற்று, KPN பஸ் டெப்போவில் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்! நான்கு பேரும் சேர்ந்து ஒரு போட்டோ கூட எடுத்துக் கொள்ளவில்லையே என்பது நினைவுக்கு வர, அருகில் நின்றவர் உதவியுடன் இருட்டில் எடுத்துக் கொண்ட போட்டோவை கீழே பார்க்கலாம்! இரவு நேரமாகி விட்டதால் சரவணாவையும், தினாவையும் அவரவர் ஊர்களுக்கு வழியனுப்பி வைத்து விட்டு, என்னை பஸ்ஸில் ஏற்றும் வரை கூடவே இருந்து பேசிக் கொண்டிருந்தார் சௌந்தர்!
மூணு பேரும் குதிகால்ல நின்னாலும் சரவணாவை தொட முடியலியே!!!
ராஜபாளையம் போன்ற IT-க்கு சற்றும் தொடர்பில்லா ஊர்களில் உள்ள சிறு சிறு IT கம்பெனிக்கள் செயல்படும் விதத்தைப் பற்றி அவர் சொல்லக் கேட்டு என் நெஞ்சு கொதித்தது! ஆனாலும், அவருக்கு அதிக பட்சம் மதுரையைத் தாண்டி வேறெங்கும் செல்லவதில் விருப்பமில்லையாம்! புஷ்டியான சம்பாத்தியத்தை விட, சொந்த மண் தரும் சௌபாக்கியத்தை விரும்பும் மனிதர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்! நண்பர்களை சந்தித்த மகிழ்ச்சியை மனம் நிறைய தேக்கிக் கொண்டு, எனக்கு கை நிறைய சம்பளத்தையும், அதை மீறிய கடனையும் தந்த ஊரை நோக்கி கையசைத்துக் கிளம்பினேன்!

ஈரோடு புத்தக விழாவில் சந்தித்த ஈரோடு நண்பர்கள், திருப்பூரில் சந்தித்த திருப்பூர் நண்பர்கள், ராஜபாளையத்தில் சந்தித்த தென்தமிழக நண்பர்கள் என்று தமிழ்நாட்டை ஏறத்தாழ அரைவட்டம் அடித்தாயிற்று! அடுத்ததாக சேலம், பாண்டிச்சேரி மற்றும் சென்னையில் வசிக்கும் பெருந்தலைகளையும் சந்தித்து விட்டால், தமிழ் காமிக்ஸ் உலகத்தையே வலம் வந்த புண்ணியம் எனக்கு கிடைத்து விடும்!!! :)

பி.கு: நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் மீண்டும் ஒருமுறை என்னை மன்னிப்பாராக! :(


Image Credits: The Hindu

கருத்துகள்

 1. அருமையான பதிவு போட்டோ மட்டும் தெளிவாக இல்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ரஞ்சித்! மொபைல் மூலம் எடுத்தது! :) ஆனாலும் ஓரளவுக்கு தெளிவாகத் தானே இருக்கிறது? கம்பியூட்டரில் பார்த்தாலும்?!

   நீக்கு
 2. இப்டியே ஊர் ஊரா சூறாவளி சுற்றுப்பயணம் செஞ்சு எல்லா தலைகளையும் மீட் பண்ணி ஒரு கழகம் ஆரம்பிச்சு கொ ப சே ஆயிடுங்க :-p இன்னும் 'மரமண்டை' மட்டும் தான் பாக்கி போல இருக்கே :-)

  காமெடி வழக்கம் போல super ...! இந்த மீட்டிங்குக்கு கூட ஒரு போஸ்டர் தயார் செய்திருக்கலாமே :-D

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //காமெடி வழக்கம் போல super ...!//
   நன்றி ராகவன்!

   //இந்த மீட்டிங்குக்கு கூட ஒரு போஸ்டர் தயார் செய்திருக்கலாமே :-D //
   சென்னை மீட்டிங்கிற்கு தயாரித்து விடலாம்! ஆனால், ஊர் முழுக்க நீங்கள் தான் ஓட்ட வேண்டும்?! ;)

   நீக்கு
 3. நேரில் பார்க்க முடியாத நண்பர்கள் பலரை உங்கள் பயண குறிப்பு மூலம் கண்டுகொள்ள முடிகிறது... தொடரட்டும் காமிக்ஸ் எக்ஸ்பிரஸ் :P

  பதிலளிநீக்கு
 4. //காமிக்ஸ் எக்ஸ்பிரஸ்//
  காமிக்ஸ் பயணக் கட்டுரைகளுக்கு அருமையான ஒரு தலைப்பு வைத்ததிற்கு நன்றி ரஃபிக்! :) எக்ஸ்பிரஸ் விரைவில் உங்கள் ஊரிலும் நிற்கும்!!! ;)

  பதிலளிநீக்கு
 5. அடுத்த சென்னை பயணம் எப்பொழுது? கோவை பயணம் உள்ளதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல ஐடியா! திருப்பூர் அருகில் என்பதால் கோவை செல்வதும் ஈஸி! நீங்கள் அங்கே வருவதுண்டா?! சென்னைக்கு அநேகமாக நவம்பர் அல்லது டிசம்பர் விடுமுறையின் போது! :)

   நீக்கு
  2. கோவைக்கு போய் நம்ம ஸ்டீல் கிளாரின் பைக்கில் கார்த்திக்கை உட்கார வச்சு ஒரு சவாரி விட்டாத்தான் சரிப்பட்டுவருவார்போலிருக்கு! நெல்லை அல்வா சாப்பிடாமலேயே வயிறு படு ஜென்டிலா வேலை செய்யும்! :)

   நீக்கு
 6. # கச்சிதமாக பாய்ண்டை கவ்வுவதில் கல்யாணமான பெண்கள் கில்லாடிகள்! #

  இராஜபாளையம் பாதிப்போ..? வூட்டுக்காரம்மா இதெல்லாம் படிக்கறதில்லைன்னு நினைக்கிறேன்..! அதான் தப்பிச்சுக்கிட்டிருக்கீங்க..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானே கூப்பிட்டு படிக்க வைக்க முயற்சித்தாலும், 'ஆளை விடுங்க, உங்க மொக்கையை யார் படிக்கறது'-ன்னு எஸ்கேப் ஆயிருவார்! :D

   நீக்கு
 7. உங்க பதிவும் சூப்பரா சுமாரா இருக்குது. நீங்க மட்டும்தானா ?
  டைகரப் பத்தி தப்பா பேசுனீங்க கொன்னு கொன்னு. டைகரின் தளபதி சிவகாசியில் இருந்தால், இளையதளபதி (ஹி ஹி ) நான் சென்னையில் இருக்கிறேன்.நினைவில் இருக்கட்டும்.

  சென்னை வரும்போது கூப்பிடுங்க. சென்னை காமிக்ஸ் மீடிங்கில் அப்படியே பெங்களூரில் இருந்து சென்னை வந்து மதுரை வழியாக திருப்பூர் போக முடியாதா ? :D

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //சென்னை காமிக்ஸ் மீடிங்கில் அப்படியே பெங்களூரில் இருந்து சென்னை வந்து மதுரை வழியாக திருப்பூர் போக முடியாதா ?//
   இது நல்ல அகிடியாவா இருக்கே!! :D

   நீக்கு
 8. //நானே கூப்பிட்டு படிக்க வைக்க முயற்சித்தாலும், 'ஆளை விடுங்க, உங்க மொக்கையை யார் படிக்கறது'-ன்னு எஸ்கேப் ஆயிருவார்! :D//

  என் தஞ்சாவூர் பயண பதிவை படிக்க சொன்னேன். சிரிப்பு இப்போ வந்துரும் அப்போ வந்துர்ம்ம்னு பாத்துக்கிட்டே இருக்கேன், முழுசும் படிச்சுட்டு அந்த +1 நீங்கதானா ? ன்னு கேட்டுட்டு நடைக் கட்டுச்சு எங்க ஊட்டு அம்மிணி.

  இதற்குத்தானா ஆசைப் பட்டாய் ராஜ குமரா, :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா, சப்புன்னு ஆயிட்டுதா?! ;) நமக்கு இதெல்லாம் பழகிருச்சு! :D

   நீக்கு
 9. அதுவே பழகிரும் ன்னு கும்கி வசனம் நியாபகம் வருகிறது :D

  பதிலளிநீக்கு
 10. //எனக்காக திருப்பூர்ல இருந்து மதுரை போறது உங்களுக்கு சலிப்பா தெரியும்! ஆனா உங்களோட வெட்டி 'காமிக்ஸ் மீட்டிங்குக்காக' ஏழு கடல், ஏழு மலையைக் கூட அசால்ட்டா தாண்டுவீங்க, அப்படித்தானே?//


  இதனை படித்தபொழுது ஒவ்வொரு முறையும் சௌந்தரின் அழைப்பு வரும்பொழுதும் நிகழும் எனது மனைவியின் குரல் கேட்டது.

  டிக்கெட் பதிவு படலம் ஜானியின் இடியாப்ப சிக்கலை மிஞ்சிவிட்டது.

  திருப்தியான பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கிருஷ்ணா! அது என்னவோ தெரியவில்லை, மனைவியுடன் மும்முரமாக ஏதாவது வாழ்க்கைப் பிரச்சினையைப் பற்றி அலசிக் கொண்டிருக்கும் போதுதான், சொல்லி வைத்தது போல யாராவது நண்பர்கள் நமக்கு போன் செய்து திட்டு வாங்கிக் கொடுப்பார்கள்! :) :)

   நீக்கு
 11. கார்த்திக்,
  மைசூர் பாகையும், திருநெல்வேலி அல்வாவையும் இதற்கு முன் பலர் ஒப்பீடு செய்திருக்கலாம்தான்; ஆனால் அந்த இனிப்புகளின ஜீரணமான பின் ஏற்படுத்தும் விளைவை //பீறிட்டு கிளம்பும்// //படு ஜென்ட்டிலாக// ரசித்து ஒப்பீடு செய்ததது உலகிலேயே நீங்கள் ஒருவராகத்தான் இருந்திருக்கும்! :D என்ன ஒரு இரசணை!! :)

  எந்த ஊருக்கு போனாலும் அங்குள்ள காமிக்ஸ் நண்பர்களையும் சந்தித்துவிட்டு வரும் பழக்கம் பாராட்டுக்குறியது! 'டோராவின் பயணங்கள்' மாதிரியே கார்த்திக்கின் பயணங்களுக்காக சீக்கிரமே ஒரு ப்ளாக் ஆரம்பிக்க வாழ்த்துக்கள்!
  மீண்டுமொரு காமெடிப் பதிவுக்கு நன்றி! ( நாங்களும் வாழ்த்து, நன்றி எல்லாம் சொல்லி முடிக்கும் சம்பிரதாயத்தை கடைபிடிப்போமில்ல?) ;)
  FBயில் எழுத்துக்களாக அறிந்திட்ட நண்பர்களை உங்கள் பதிவில் பார்த்ததும் மகிழ்ச்சியளிக்கிறது! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கார்த்திக்,

   ம்... அது வந்து.... உங்களை ஒரு 'பிற்போக்கு' சிந்தனைவாதி-ன்னு சொல்லலாமா? :D

   நீக்கு
  2. @Erode VIJAY:
   //ஜீரணமான பின் ஏற்படுத்தும் விளைவை ரசித்து ஒப்பீடு செய்ததது உலகிலேயே நீங்கள் ஒருவராகத்தான் இருந்திருக்கும்//
   மேலே (வாய்) போகும் எதுவும், கீழே (ஆசன வாய்) வந்தாக வேண்டும் என்பது நியூட்டனின் விதி அன்றோ?! ;)

   //உங்களை ஒரு 'பிற்போக்கு' சிந்தனைவாதி-ன்னு சொல்லலாமா?//
   கழிவறையும் ஒரு சீரிய சிந்தனைக் கூடம் தான்!. அங்கே 'பிற்போக்கு' வெளியேறும் சமயம், பல முற்போக்கு சிந்தனைகளும் உதிப்பதுண்டு! ;)

   //கார்த்திக்கின் பயணங்களுக்காக சீக்கிரமே ஒரு ப்ளாக் ஆரம்பிக்க வாழ்த்துக்கள்!//
   ஃபர்ஸ்ட்டு நீங்க ஒரு ப்ளாக் ஆரம்பிங்க விஜய்!!!

   //நாங்களும் வாழ்த்து, நன்றி எல்லாம் சொல்லி முடிக்கும் சம்பிரதாயத்தை கடைபிடிப்போமில்ல?//
   சம்பிரதாயத்தை தொடர்வதிற்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும்! ;)

   //FBயில் எழுத்துக்களாக அறிந்திட்ட நண்பர்களை உங்கள் பதிவில் பார்த்ததும் மகிழ்ச்சியளிக்கிறது! :)//
   இப்படி அநியாயமா பொய் பேச எப்ப கத்துக்கிட்டீங்க? இந்த நண்பர்களின் உலகப் புகழ் பெற்ற புகைப் படங்களை இன்னொரு ப்ளாகில் பார்க்கவே இல்லையா நீங்கள்?! ;)

   //கோவைக்கு போய் நம்ம ஸ்டீல் கிளாரின் பைக்கில் கார்த்திக்கை உட்கார வச்சு ஒரு சவாரி விட்டாத்தான் சரிப்பட்டுவருவார்போலிருக்கு!//
   அந்த பைக், ஸ்டாலின் பைக் போல நல்ல 'கண்டிஷனில்' இருக்குமா?! :P

   நீக்கு
 12. காமிக்ஸ் எக்ஸ்பிரஸ் கார்த்திக்,

  என்னதான் சென்னையில் இருந்தாலும் இங்குள்ள அனைத்து காமிக்ஸ் நண்பர்களையும் சந்திக்க முடிவதில்லை .. சீக்கிரம் உங்களது எக்ஸ்ப்ரஸில் சென்னைக்கு ஒரு பயணம் மேற்கொள்ள முடிவு செய்யுங்கள்.

  //அது என்னவோ, திருப்பூர் சந்திப்பின் போதும் டீக்கடையில்தான் போட்டோ எடுத்துக் கொண்டோம்; இங்கும் அப்படியே! டீக்கடை //

  அப்படி ஒரு ராசியின்னு நினைக்கறேன் :) நம்ம 'சரக்கு' அங்க கிடச்சதா ?

  //சேலம், பாண்டிச்சேரி மற்றும் சென்னையில்//

  வெல்கம் Mr.காமிக்ஸ் எக்ஸ்பிரஸ் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @ ப்ளூ

   இன்னும் கங்காருகளோடதான்விளையாடிட்டிருக்கீங்களா? உங்க பயண கட்டுரை எப்போது?

   நீக்கு
  2. @ விஜய்

   பழைய புத்தக கடையில் பத்து ரூபாய்க்கு வாங்கிய புத்தகத்தை எங்கே வைத்து உள்ளீர்கள் என கேட்டால் பதிலே சொல்ல வில்லையே? அவ்வளவு கஷ்டமான கேள்வியா அது :)

   அந்த புத்தகம் மட்டும்தான் கிடைத்ததா இல்லை இன்னும் நிறைய கிடைத்தா நண்பரே :)

   நீக்கு
  3. @திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன்:

   //என்னதான் சென்னையில் இருந்தாலும் இங்குள்ள அனைத்து காமிக்ஸ் நண்பர்களையும் சந்திக்க முடிவதில்லை//
   பெங்களூரிலும் அதே கதைதான்! :)

   //சென்னைக்கு ஒரு பயணம் மேற்கொள்ள முடிவு செய்யுங்கள்//
   விரைவில்! ;)

   //நம்ம 'சரக்கு' அங்க கிடச்சதா ?//
   லெமன் டீ தானே? ஊஹீம்!!!

   நீக்கு
 13. படிக்க சுவையான பதிவு நண்பா!

  நண்பர்கள் கூட்டணி கலக்கல்! தீனாவும் சரவணாவும் நம்ம லைன் ப்ளோக்ல வர்றாங்களா ??


  //(தாங்க்ஸ் டு மைக்ரோசாஃப்ட் லூமியா 620,//

  புகைப்படங்கள் ரொம்பவே சுமார இருக்கே?? லுமியா 620 கேமரா புகைப்படங்கள் இத விட ஷார்ப்பா இருக்குமே ??

  டிக்கெட் புக் பண்ண ரெட் பஸ் அப் use பண்றீங்களா??? ரொம்ப சுலபமான fluid interface! PC இல புக் பண்றதை காட்டிலும் ரொம்ப ரொம்ப ஈசி! : )

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி விசு! :)

   //தீனாவும் சரவணாவும் நம்ம லைன் ப்ளோக்ல வர்றாங்களா ?? //
   தீனா ஒரு சில முறை வந்திருக்கிறார்! இறுதியாக வந்த சமயம், விஜயன் சாரை அங்கிள் என அழைத்து வயித்தெரிச்சலை கட்டி கொண்டார்! :D சரவணா இது வரை எந்த ஒரு வலைப்பூவிலும் கருத்து இட்டதில்லை! உண்மையில் பல FB நண்பர்கள் வலைப்பூக்களில் கருத்து இடாததிற்கு முக்கிய காரணம் மொபைலில் தமிழ் சப்போர்ட் இல்லாதது, மற்றும் வலைப்பூ கமெண்டுகள் வேகமாக லோட் ஆக மறுப்பது இவையே!! இப்போதெல்லாம், மொபைல் கம்பெனிகள் Basic போன்களில் Facebook அப்ளிகேஷன் கொடுக்கிறார்கள் ஆனால் வலைப்பூவிற்கென எந்த ஒரு அப்ளிகேஷனும் இல்லை!

   //புகைப்படங்கள் ரொம்பவே சுமார இருக்கே?? லுமியா 620 கேமரா புகைப்படங்கள் இத விட ஷார்ப்பா இருக்குமே ??//
   ஒரிஜினல் பைல்களை படு பயங்கர Low Resolution-ல் மாற்றியதால் வந்த கதி! தவிர, ஒளி பாயும் திசைக்கு எதிர் திசையில் இருந்து எடுத்ததால் பல படங்கள் சொதப்பி விட்டன! டீக்கடையில் எடுத்த படத்தில் இந்த பிரச்சினை இருக்காது!

   //டிக்கெட் புக் பண்ண ரெட் பஸ் அப் use பண்றீங்களா??? ரொம்ப சுலபமான fluid interface! PC இல புக் பண்றதை காட்டிலும் ரொம்ப ரொம்ப ஈசி! : )//
   ஏனோ, ரெட் பஸ் இதுவரை உபயோகித்ததில்லை! KSRTC & KPN இவற்றிற்கு அந்தந்த site-லேயே லாகின் வைத்துள்ளேன்!! அடுத்த முறை முயற்சித்துப் பார்க்கிறேன்!!

   நீக்கு
 14. அட, எங்க ஊர்ல பதிவர் சந்திப்பா... ரொம்ப நீஈஈஈஈஈளமாக இருந்தாலும் சுவாரஸ்யம்... குமரன் ஸ்வீட்ஸ் அல்வா வாங்கினீங்களா? எப்போ சென்னை வர்றீங்க?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஸ்கூல் பையன்!!! இல்லை, நான் அல்வா வாங்கவில்லை - ஆனால், எனக்கு கொடுக்கப்பட்ட அல்வாவை வாங்கிக் கொண்டேன்! :D

   /எப்போ சென்னை வர்றீங்க?/
   சில மாதங்களுக்கு பிறகு! :)

   நீக்கு
 15. அல்வா போட்டோ கண்ணுலய நிக்குது போங்க (நீங்க என்ன தீனி பண்டாரம்னு நினைச்சாலும் பரவால்லை). இந்த திருநெல்வேலி (அசல்) அல்வா பற்றி கேள்வி பட்டதோட சரி. சாப்பிட வாய்ப்பு கிடைக்கவில்லை. அல்வா வாங்க ரெண்டு மணி நேரம் queueல நிக்கனுமா???

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா, ஆமா கார்த்தி! செம டிமாண்டாம்! ஊருக்கு வாங்க உங்களுக்கும் கொடுத்துருவோம்! ;) இப்போதைக்கு இதை படிச்சு மனசை தேத்திக்குங்க!! :)
   http://www.thehindu.com/features/magazine/in-search-of-tirunelveli-halwa/article4418778.ece

   நீக்கு
 16. உங்கள் நீண்ண்ண்ட பயணத்தில் நானும் இடம்பெற்றதில் மகிழ்ச்சி நண்பரே! :)

  பதிலளிநீக்கு
 17. விரைவில் சேலம் வரும் நண்பருக்காக காத்திருகிறேன் .
  (ஆன்னால் பத்து நாளைக்கு முன்னாடி என்னிடம் "அப்பாய் மெண்ட் "வாங்கி கொள்ளவும் . :-)

  வேறு வழி இல்லை நண்பரே .. :-)

  அழகான "காமெடி "நடை .வாழ்த்துகள் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @பரணி:
   அப்பாய்ன்ட்மென்ட் தானே? வாங்கிட்டா போச்சு! :) ஒரு தமிழ் காமிக்ஸ் போராளியை சந்திப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை என்ற உண்மை நான் அறியாதது அல்லவே?! :P

   நீக்கு
 18. ஆகா ....இங்கயுமா ...?

  நான் நாலு நாளைக்கு லீவு .....

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia