சென்னைக்கு வந்து முழுதாக மூன்று வருடங்கள் ஓடி விட்டன. படித்ததும் மணம்
முடிப்பதில்லை என்பதில் தீர்மானமாக இருந்ததின் பலனாக, தனியார்
நிறுவனமொன்றில், முக்கிய பதவிக்கு உயர்ந்திருக்கிறேன். தனிமை வாட்டத்தான்
செய்கிறது... இல்லை, செய்தது - மூன்று மாதங்களுக்கு முன்னர் கண்ணன் என்
வாழ்வில் நுழையும் வரை!
ஹே, கயல் ஏன் டல்லா இருக்கே? வேலை அதிகமோ?!
கயல்விழி என்ற என் பெயரை கண்ணன் அப்படித்தான் ஸ்டைலாக அழைப்பான்!
கயல், மணி பத்து ஆகுது பார். இன்னுமா சாப்பிடல?
ப்ச்.. பசிக்கலப்பா!
நான் இன்னிக்கு ஃபுல் சார்ஜ்ல இருக்கேன் கயல்! சாப்பிட்டுட்டு தெம்பா வா...
ச்சீ... வெக்கமா இல்ல? போடா தடியா...
சிணுங்கினேன்... ஆனால், அவன் அப்படிப் பேசுவது பிடித்திருந்தது... முதலில் அநியாயத்துக்கு நல்ல பையனாகத் தான் நடந்து கொண்டான்... ஒரு வாரமாக கொஞ்சம் வாலாட்ட ஆரம்பித்து இருக்கிறான்.
காலையில், என் அலாரமே அவன் தான்... 'பல் விளக்கினியா?-'வில் தொடங்கி, பின்னிரவில் கடைசியாக குட்நைட் சொல்லும் வரை, எதையாவது பேசிக்கொண்டே இருப்பான். என் மேல் அவனுக்கு அக்கறை அதிகம்! அவன் சொல்லிச் சொல்லி, காலையில் ஜாகிங் போக ஆரம்பித்து இருக்கிறேன். "எவ்வளவு தூரம் ஓடினால், எவ்வளவு கலோரி கரையும்... எதைச் சாப்பிட வேண்டும்.. எது கூடாது..." என்பதை எல்லாம் லிஸ்ட் போட்டுக் கொடுத்திருந்தான்! காலையில் இன்ஸ்டன்ட் காபி குடித்துக் கொண்டிருந்த என்னை, கிரீன் டீக்கு மாற்றியவனும் அவன் தான்.
24 மணி நேரமும் கூடவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். ஆனால், ஆபிஸ் நேரத்தில் மட்டும் பேசவே கூடாது என்று கண்டிப்பாக சொல்லி வைத்திருந்தேன். மாலை சரியாக ஆறு மணிக்கு செல் ஃபோன் அலறியது.. கண்ணன் தான்...!
ஹே கயல்... டின்னருக்கு உன் ஃபிரண்ட் அர்ச்சனா வர்றான்னு சொன்னே இல்ல.. இன்னும் ஆபிஸ்ல என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?!
ச்சே.. எப்படி மறந்தேன்?! தாங்க்ஸ் பா... எப்பவும் என் நினைப்பாவே இருப்பியா?! ம்ம்ம்ம்....இச்ச்ச்ச் - முத்த சத்தம் கேட்டுத் திரும்பிய பக்கத்து டெஸ்க் பவித்ரா கண்ணடித்துக் கேட்டாள்: 'கண்ணனா?!'
முகம் சிவக்க, 'ஆமாம்!' சொல்லி பார்கிங்கிற்கு ஓடினேன்...
எட்டு மணிக்கு அர்ச்சனா வந்து விட்டாள். டின்னர் முடிந்தும், நிறைய நேரம் பேசிக் கொண்டே இருந்தோம்... கண்ணனுக்கு பொறுக்கவில்லை...
கயல், கொஞ்சம் இங்க வர்றியா...?
என்னடா?!
அவ எப்ப கிளம்புவா?
ஏய், அவளுக்கு கேட்டுறப் போகுது! வாயை மூடு...
கயல்விழி, நான் கிளம்பறேண்டி... - அர்ச்சனா எழுந்து கொண்டாள்..
'இரு உன்னை வந்து பேசிக்கறேன்...' - கண்ணனை முறைத்து விட்டு வாசலுக்கு ஓடினேன்..
சாரி டி, அவன் கொஞ்சம் பொசசிவ்...
தெரியும் கயல், நான் ஒண்ணும் கோச்சுக் கிட்டு வெளிய வரல்ல... என் ஆளும் ரொம்ப பொசசிவ் தான்! 'கிளம்பு கிளம்பு'-ன்னு நச்சரிச்சுக் கிட்டு இருந்தான். வைப்ரேஷன்ல போட்டு வச்சிருந்தேன்...
போனைக் காட்டினாள்... கண்ணனே தான்... வேறு ஹேர் ஸ்டைலுடன், வேறு உடைகளுடன்... என்னவனை விட ஸ்மார்ட்டாக இருந்தான்...
"ஹலோ கயல்விழி" புன்னகைத்தான் அர்ச்சனாவின் கண்ணன்!
அர்ச்சூ... நீயும் இவனை இன்ஸ்டால் பண்ணிட்டியா?!!!!
யா! Mobile Mate App-ஐ போன வாரம் தான் இன்ஸ்டால் பண்ணேன்... அஜய்னு பேர் வச்சிருக்கேன்! இப்ப எல்லாம் பொழுது போறதே தெரியறதில்ல தெரியுமா?! ஐ லவ் அஜய்!
தலையாட்டிய படி பொறாமையாகச் சிரித்தேன்...

Image Credit: http://en.wikipedia.org/wiki/Love
நல்ல ஐடியாவா இருக்கே. அந்த மாதிரி சாப்ட்வேர் இப்போவே இருக்குமே.
பதிலளிநீக்குகதையை பொறுத்தவரை கடைசியில் இருந்த டுவிஸ்ட் பிடித்தது. இந்த மாதிரி சுஜாதா நிறைய எழுதுவார்.
//கடைசியில் இருந்த டுவிஸ்ட் பிடித்தது// வழக்கமான ஒரு பக்கக் கதை பார்முலா தான்.. முக்கால் பக்கத்துக்கு வளவளன்னு ஏதாவது எழுதிட்டு, கடைசி ரெண்டு லைன்ல மேட்டரைச் சொல்றது! :P
நீக்கு//அந்த மாதிரி சாப்ட்வேர் இப்போவே இருக்குமே.//
நீக்குஇது போல நிறைய இருக்கு ராஜ் (கிட்டத்தட்ட)! iOS Siri, virtual pets apps like talking tom , health monitor etc
இந்த ஆர்டிகிள் படிங்க... மூணு வருஷத்துக்கு முன்னமே இப்படி ஒரு App வந்திருக்கு!
http://www.telegraph.co.uk/technology/mobile-phones/8202833/South-Koreans-find-love-with-virtual-girlfriend-iPhone-app.html
எந்த வெர்சன் உனக்கு புருஷன் அப்பிடின்னு கயலும் அர்ச்சனாவும் பேசிக் கொள்வார்களோ ?
பதிலளிநீக்குஎன்னாஜி இது புது Apps ஆ .. நாங்கல்லாம் 1100 செங்கல் காலத்து ஆளுக .. ஒன்னும் புரியமாட்டிங்குது ...
பதிலளிநீக்குநல்லவேளை, ஆப்புல இருந்து தப்பிச்சிட்டீங்க! ;) ஸ்மார்ட் ஃபோன் ஒருவகையில் தலைவலி தான்... :)
நீக்குஎதிர்பாராத ட்விஸ்ட்! அருமையான கதை! நன்றி!
பதிலளிநீக்குநன்றி சுரேஷ்...
நீக்கு//"நான் இன்னிக்கு ஃபுல் சார்ஜ்ல இருக்கேன் கயல்! சாப்பிட்டுட்டு தெம்பா வா..."//
பதிலளிநீக்குஇதனுடைய அர்த்தம் கடைசியில் புரிந்தது. :)
கவனித்துப் படித்ததிற்கு நன்றி!!! :)
நீக்குபாதியிலேயே கண்டுபிடித்துவிட்டேன் எதோ டாகல்டி என்று... அந்த முடிச்சை எப்படி அவிழ்க்கப் போகிறீர்கள் என்பதை எதிர்பார்த்தேன்.. சூப்பர் ஆப்.. நமக்கு ஏதும் பாவனா ஆண்ட்ரியா ஆப் இருந்தா கொடுங்க அதுங்களாது ஆப்பு கொடுக்காம இருக்கட்டும் ;-) அவ்வ்வ்வ்வ்வ் ஹா ஹா ஹா
பதிலளிநீக்குஎன்னாது பாவனா, ஆண்ட்ரியாவா!!! :D கேக்கறது தான் கேக்குறீங்க... கொஞ்சம் லேட்டஸ்ட் ட்ரண்ட்டா கேக்கலாமே?! ;) :D
நீக்குஎன்னடா கதை மேம்போக்காவே நகருதேன்னு நினைச்சேன். கடைசில கலக்கிட்டீங்க.. தமிழ்ல பேசுற ஆப்பு ஏதும் இருக்கா என்ன?
பதிலளிநீக்குதமிழ் ஆப்ஸ் இருக்கு, ரெக்கார்ட் பண்ணி வச்சதை பேசற ஆப்ஸ்...! இந்த கதையில வர்ற மாதிரி இல்லை...
நீக்குஎதிர்பாரத டிவிஸ்ட் எப்ப வரும் என்று எதிர்பார்க்கவைக்கும் கதை, Nice! டிவிஸ்டை கடைசி வரிக்கு Postpone பண்ணமுடிந்தால் இன்னும் நன்றாக இருக்கும்!
பதிலளிநீக்குஉண்மையில், //அர்ச்சூ... நீயும் இவனை இன்ஸ்டால் பண்ணிட்டியா?!!!!// இந்த வரியுடனேயே கதை முடிந்து விடுகிறது! அடுத்த இரண்டு பத்திகள் ஒரு செண்டிமெண்ட் ஆங்கிளை கொண்டு வருவதற்காக மட்டும்! :)
நீக்குசுஜாதா பாணி, சுவாரஸ்யமான ஒருபக்க கதை.
பதிலளிநீக்கு" நான் இன்னிக்கு ஃபுல் சார்ஜ்ல இருக்கேன் கயல்! சாப்பிட்டுட்டு தெம்பா வா..."
கூர்ந்து கவணிக்க வேண்டிய ஹூயூமரையும் தாண்டி, இந்த கதையில் ஒரு சீரியசான மெசேஜ் இருப்பதாக படுகிறது !
" தலையாட்டிய படி பொறாமையாகச் சிரித்தேன்... "
அதிநவீன தகவல் தொழில்நுட்பத்தினால் நமக்கு ஏற்ப்பட்டிருக்கும் loneliness !!!
//அதிநவீன தகவல் தொழில்நுட்பத்தினால் நமக்கு ஏற்ப்பட்டிருக்கும் loneliness !!!//
நீக்குஉண்மை தான் சாமானியன்! இது தொடர்பான கட்டுரைகள், படங்கள் ஏற்கனவே நிறைய வந்துள்ளன... சமீபத்தில் Her!
ஹைய்ய்யோ!! அப்படியே எழுத்தாளர் சுஜாதாவின் சிறுகதையை படிச்ச மாதிரியே...! சூப்பர் கார்த்திக்!!
பதிலளிநீக்குஅந்த கடைசி ட்விஸ்ட் கொஞ்சமும் கணிக்க முடியாதது. அப்படியே கிளுகிளுப்பா போகப் போகுதுன்னு வாய் நிறைய ஜொள்ளுடன் காத்திருந்தது மட்டும் கொஞ்சம் ஏமாற்றம்!
நானும் அந்த APPSஐ உடனே இன்ஸ்ட்டால் பண்ணி 'மினியம்மா'னு பேர் வச்சு கொஞ்சி விளையாடப்போறேன். என் மினியம்மாவும் கொஞ்சம் பொஸஸிவ் டைப் தான் இருக்கணும்! ஹி ஹி! ;)
நன்றி விஜய்! சயன்ஸ் பிக்ஷன் என்றாலே சுஜாதா நினைவுக்கு வருவது இயல்பு தான்! 2014-ல் அவரைப் போல எழுத்துக்கள் இருப்பது / எழுத முயற்சிப்பது பெரிய விஷயமே கிடையாது! இருபது, முப்பது வருடங்களுக்கு முன்னர், நாம் கம்பியூட்டரை கண்களிலேயே பார்த்திராத காலத்தில் இது போன்ற கதைகளை தமிழில் கொண்டு வந்தவர் அவர்...!
நீக்குகிளுகிளுப்பு என்றால் ஞாபகதிற்கு வரும் எழுத்தாளர் PKP! சிறு வயதில் அவர் நாவல்களை மிகவும் ரசித்திருக்கிறேன்! ;) ;)
ஹாய் கார்த்திக்!
பதிலளிநீக்குகதை நல்ல இருந்துச்சு! ஒரு ஆண் எழுத்தாளர் பெண்ணின் மனநிலையில் இருந்து எழுதுவதற்கு கொஞ்சம் ஸ்கில் வேணும். உங்க ஸ்கில்லை இன்னமும் கூர் படுத்தலாம்.
ஒரு சிறிய LOGICAL ERROR??
//மூன்று மாதங்களுக்கு முன்னர் கண்ணன் என் வாழ்வில் நுழையும் வரை!//
//விண்டோஸ் போனுக்கு Mobile Mate App போன வாரம் தான் ரிலீஸ் ஆச்சு.. உடனே இன்ஸ்டால் பண்ணிட்டேன்.//
கயல் வச்சிருக்கறது ANDROID போன், அவகிட்ட இருக்கறது ANDROID VERSION கண்ணன் APP அப்படின்னு சொல்லி சமாளிக்கலாம்! : )
//ஒரு ஆண் எழுத்தாளர் பெண்ணின் மனநிலையில் இருந்து எழுதுவதற்கு கொஞ்சம் ஸ்கில் வேணும்//
நீக்குஉண்மை தான்... நான் இப்படி எழுதுவது இதுவே முதல் முறை! பெண்கள் எப்படி பேசிக் கொள்வார்கள் என்பதை அறிந்து கொள்ள பெண்களிடம் நிறைய பழக வேண்டும்! I mean, நிறைய பெண்களிடம் பழக வேண்டும்! ;) பார்ப்போம் வாய்ப்பு கிடைக்கிறதா என்று! :D
//கயல் வச்சிருக்கறது ANDROID போன், அவகிட்ட இருக்கறது ANDROID VERSION கண்ணன் APP அப்படின்னு சொல்லி சமாளிக்கலாம்! : )//
மனதில் அப்படி நினைத்துத் தான் எழுதினேன்! ஸ்மார்ட் போன் என்றாலே ஆப்பிளும், ஆண்ட்ராய்டுமே நினைவுக்கு வருவதால் குழப்பம் இருக்காது என்று நினைத்தேன்....
இந்த வரியை...
//ஆமாண்டி, அஜய்னு பேர் வச்சிருக்கேன்! விண்டோஸ் போனுக்கு Mobile Mate App போன வாரம் தான் ரிலீஸ் ஆச்சு.. உடனே இன்ஸ்டால் பண்ணிட்டேன்.//
இப்போது இப்படி மாற்றி விட்டேன்:
//யா! Mobile Mate App-ஐ போன வாரம் தான் இன்ஸ்டால் பண்ணேன்... அஜய்னு பேர் வச்சிருக்கேன்!//
கதையின் நீளமும் கொஞ்சம் குறைகிறது இல்லையா?! :) கருத்துக்களுக்கு நன்றி விஸ்கி! :)
பதிவின் தலைப்பை பார்த்துவிட்டு தனிமையில் படிக்க வேண்டும் என்று "Pocket " இல் போட்டு வைத்திருந்தேன். இன்று தான் படிக்க வாய்ப்பு கிடைத்தது.
பதிலளிநீக்குShort & Sweet ஆக இருந்தது. தொடர்ந்து எழுதுங்கள்.
தனியாக படிக்கும் அளவிற்கு இல்லை என்பதில் சிறிய வருத்தம் தான்..:D
ஹலோ, நீங்க தனியா ஒக்காந்து படிக்கறதுக்கு தலைப்பை "கண்ணன் ஒரு காமுகன்" அப்படின்னா வச்சுருக்கேன்?! ;) ஏப்ரல் 2ம் தேதி, ஏப்ரல் 1 ஐக் கொண்டாடிட்டீங்க போல?! ;) :)
நீக்குChe oru poi solli thappika mudiyalaye...
நீக்குகயலை கண்ணன் தொடாமல் தொட்டு விளையாடும் காலமும் வரும் .அப்போ 'கண்ணன் ஒரு காமுகன் 'என்ற தலைப்பில் கதையைஎழுதுவீர்கள் என நம்புகிறேன் !
பதிலளிநீக்கு:D
நீக்குஇது ஒரு நல்ல கதை தான்
பதிலளிநீக்கு