Amazon நமது பாக்கெட்டிலே, Credit Card Bill பறக்கும் ராக்கெட்டிலே!

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆன்லைன் ஷாப்பிங் தொடரை தொடர்கிறேன்! :) அமெரிக்காவில் இருந்து திரும்பும் உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் - கேமரா, லாப்டாப் போன்ற எலெக்ட்ரானிக் சமாசாரங்களை வாங்கி வரச் சொல்லி 'படுத்தி எடுக்கும்' வழக்கம் நம்மில் பலருக்கு நிச்சயமாக இருக்கும். ஒருவேளை நாமே அமெரிக்கா சென்றாலும், நாடு திரும்பும் முன்னர் மற்றவர்களுக்காக வாங்கிச் செல்ல வேண்டிய பொருட்களின் பட்டியல் மிக மிக நீண்டதாகவே இருக்கும். எக்கச்சக்கமாக ஷாப்பிங் செய்து, ஏதாவது ஒரு இந்திய ஏர்போர்ட்டில் கஸ்டம்ஸ் கிளியரன்ஸிற்க்காக நீண்ட வரிசையில் கஷ்டமாக நிற்கும் போது, லக்கேஜில் இருக்கும் லாப்டாப்களின் எண்ணிக்கைக்கேற்ப நம் இதயத்தின் லப்டப்கள் கூடும் அனுபவமும் பலருக்கு இருக்கும்! :)

மேற்சொன்ன இரண்டு வகையினரில் நீங்கள் எந்த வகையைச் சேர்ந்தவராய் இருப்பினும், இனி இந்த தொல்லைகள் இல்லை (கிட்டத்தட்ட)! ஆம், அமெரிக்காவின் மிகப்பெரிய E-Commerce நிறுவனமான Amazon தனது வெளிநாட்டு சேவைகளை தற்போது மேம்படுத்தியுள்ளது. கடந்த சில வருடங்களாகவே இந்தியாவில் இருந்து கொண்டே அமேசான் மூலம் பொருட்களை தருவிக்கும் முறை நடைமுறையில் இருந்து வந்தாலும், தற்போது அவ்வகையில் வாங்கக்கூடிய பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் ஆர்டரின் மொத்த மதிப்பு $125-ஐத் தாண்டினால் ஷிப்பிங் (அதாகப்பட்டது குரியர்) சார்ஜஸ் கிடையாது  (பெரும்பாலான பொருட்களுக்கு)! கஸ்டம்ஸ் டியூட்டியை மட்டும் ஆர்டர் செய்யும் போதே சேர்த்துக் கட்டினால் போதும் - பொருட்கள் வீடு தேடி வந்து விடும்!!

கடந்த வாரம் இந்த முறையில் Synology DiskStation DS213 வாங்கினேன் (அதைப் பற்றிய விரிவான டெக்னிகல் பதிவு விரைவில்!) - ஆர்டர் செய்து மூன்றே நாட்களில் பெங்களூர் வந்து விட்டது! அமெரிக்காவில் இருந்து கொண்டு Amazon Free Super Saver Shipping முறையில் ஆர்டர் செய்திருந்தாலும் இவ்வளவு விரைவில் வந்திருக்குமா என்பது சந்தேகமே! கஸ்டம்ஸ் டியூட்டி சேர்த்து விலை 18300 மட்டுமே! இதையே இந்தியாவில் வாங்கியிருந்தால் கிட்டத்தட்ட 30000 ஆகியிருக்கும் (புதிய மாடலான இது, இங்கு எளிதில் கிடைப்பதில்லை என்பது வேறு விஷயம்!)!

சற்று பொறுங்கள், ஒரேடியாக கனவுலகில் மிதக்க வேண்டாம். ஏன் என்றால் அமேசானில் விற்கும்  அனைத்துப் பொருட்களையும் இப்படி எளிதில் வாங்கி விட முடியாது! :( முக்கியமாக பெரும்பாலான லாப்டாப்களுக்கு இன்டர்நேஷனல் ஷிப்பிங் வசதி கிடையாது. அதே போல எடை அதிகமான, விலை குறைவான பொருட்களை இந்த முறையில் வாங்கினால் நஷ்டமே மிஞ்சும்! ஏன் என்றால் அவர்கள் இலவச ஷிப்பிங் செய்வது பொருட்களைப் பொறுத்து மாறுபடும். எடை அல்லது பருமனளவு அதிகமாக இருந்தால் ஷிப்பிங்கை நம் தலையில் கட்டி விடுவார்கள்!

அதற்காக மனதை தளர விடவும் வேண்டாம்! :) நீங்கள் வாங்க விரும்பும் பொருட்களுக்கு இன்டர்நேஷனல் ஷிப்பிங் இல்லை என்றாலோ அல்லது Amazon தவிர்த்த வேறு ஒரு US ஆன்லைன் ஷாப்பில் பொருட்களை வாங்க விரும்பினாலோ, US-இல் இருந்து திரும்பும் நண்பர்களை தொல்லை செய்வதை தவிர்த்து வேறு சில வழிமுறைகளும் உள்ளன - அதைப் பற்றி அடுத்த பாகத்தில் காணலாம்! :)

கூடுதலாக சில டிப்ஸ்:
  • நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருட்களை வாங்க விரும்பினால் ஒரே ஆர்டராக கொடுத்து விடுங்கள் - கட்டணங்கள் குறையும்!
  • எடை / விலை குறைவான ஆனால் அதிக பருமனளவு கொண்ட பொருட்களை வாங்க வேண்டாம்! உதாரணம் - தலையணை! ;)
  • அதிக எடையுள்ள பொருட்கள் என்றால் ஷிப்பிங் கட்டணங்கள் தாறுமாறாக இருக்கும்!
  • அமேசான் மூலமாக பிற விற்பனையாளர்கள் விற்கும் பொருட்களை வாங்க இயலாது - அமேசான் நேரடியாக விற்பவற்றை மட்டுமே வாங்க முடியும்!
  • இந்த முறையில் எந்த பொருட்களை வாங்கலாம் என்பதை (ஓரளவுக்கு) அறிய இந்த இணைப்புகளை பாருங்கள்: Amazon International Shipping & Junglee
  • ஒரு குறிப்பிட்ட பொருளை இன்டர்நேஷனல் ஷிப் செய்ய இயலுமா என்பதை அறிய, "Add To Cart" செய்து உங்கள் இந்திய முகவரியை உள்ளிடுங்கள். அடுத்ததாக பேமென்ட் பகுதிக்கு செல்லும் போது அந்த பொருளை அமேசானால் இந்தியாவிற்கு அனுப்ப இயலுமா இல்லையா என்பதை அறிந்து கொள்ளலாம்!
  • பேமென்ட்டை உறுதி செய்யும் முன்னர், அனுப்பும் கட்டணம் மற்றும் சுங்க வரி எவ்வளவு என்பதை தெளிவாக சொல்லி விடுவார்கள். இந்திய கிரெடிட் கார்ட் மூலம் பணம் செலுத்துவதாக இருந்தால் USD - INR மாற்றம் செய்வதற்கு டாலருக்கு கிட்டத்தட்ட இரண்டு ரூபாய்கள் கூடுதலாக வசூலிப்பார்கள். இதை எல்லாம் பரிசீலித்து விட்டு, அந்த பொருளை US-இல் இருந்து வாங்குவது லாபகரமானதாகப் பட்டால் ஆர்டரை உறுதி செய்யலாம். இல்லை என்றால் யோசிக்காமல் Cancel பட்டனை அமுக்கி விடலாம்! :)
  • நீங்கள் ஆங்கில காமிக்ஸ் பிரியர் என்றால் புத்தகங்களை மொத்தமாக இந்த முறையில் வாங்கலாம் - இந்தியாவில் வாங்குவதை விட விலை குறைவு! :)

அமேசானில் ஆர்டர் செய்வது எப்படி? - Step by Step Guide!:
  1. http://www.amazon.com/ -இல் பயனராக பதிவு செய்து கொள்ளுங்கள்.
  2. ஷிப்பிங் மற்றும் பில்லிங் முகவரிகளாக உங்களது இந்திய முகவரியை உள்ளிடுங்கள்! (சிலருக்கு கிரெடிட் கார்ட் மற்றும் வீட்டு முகவரிகள் வெவ்வேறாக இருக்கலாம் என்பதால் இந்த ஏற்பாடு!)
  3. வாங்க வேண்டிய பொருட்களை Cart-இல் போட்டுக்கொள்ளுங்கள்! (Add to Cart)
  4. பிறகு 'Proceed to checkout' செய்து, உங்கள் இந்திய ஷிப்பிங் முகவரியை தேர்ந்தெடுங்கள். நீங்கள் வேறு ஒருவருக்கு பரிசாக அனுப்ப விரும்பினால் அவரின் முகவரியை உள்ளீடு செய்யுங்கள்!
  5. 'Choose a shipping speed' பகுதியில் 'FREE AmazonGlobal Saver (averages 9-14 days)' என்பதை தெரிவு செய்து  'Continue'-வை அமுக்குங்கள்! :)
  6. பிறகு கிரெடிட் கார்டு விவரங்களை உள்ளீடு செய்யுங்கள் - பேங்கில் எந்த முகவரி கொடுத்தீர்களோ அதை பில்லிங் அட்ரஸ் ஆக கொடுத்து Continue செய்யுங்கள்!
  7. இறுதியில் படத்தில் காட்டியவாறு ஸ்க்ரீனின் வலப்பக்கம் அனைத்து கட்டணங்களையும் சேர்த்து பொருளின் மொத்த விலை எவ்வளவு என்பது தெரியும், உங்களுக்கு இது சம்மதமானால் ஆர்டரை உறுதி செய்யலாம்.
  8. ஆர்டரை உறுதி செய்ததும் உங்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி அலறி அடித்துக்கொண்டு வந்துவிடும்! பிறகு பொழுது போகாத போதெலாம் 'Track Shipment' செய்து நீங்கள் ஆர்டர் செய்த பொருள் தற்போது எங்கே உள்ளது, எப்போது வந்து சேரும் போன்ற விவரங்களை உடனுக்குடன் கண்டு மகிழலாம்! :) :) :)
  9. உங்களுக்கு இந்த தகவல்கள் உபயோகமாக இருந்திருந்தால், இதை அமேசான் மூலம் வாங்கி என் முகவரிக்கு இலவசமாக அனுப்பி வையுங்களேன், ப்ளீஸ்! ;)

கருத்துகள்

  1. பயனுள்ள தகவல் கார்த்திக்.
    தேவை படும் பொழுது முயற்சி செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரீட்சார்த்த முறையில் இதை ஆர்டர் செய்து பாருங்களேன் (என்னுடைய முவவரிக்கு!) ;)
      http://www.amazon.com/Murder-High-Tide-Private-Detective/dp/1606994514/ref=sr_1_1?s=books&ie=UTF8&qid=1355885572&sr=1-1&keywords=gil+jourdan

      நீக்கு
  2. மிகவும் பயனுள்ள தகவல் கார்த்திக். முயன்று பார்த்துவிட்டு சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Sure, ஆனால் குறைந்த பட்சம் மூன்று, நான்கு புத்தகங்களை ஒரே சமயத்தில் ஆர்டர் செய்யுங்கள் - அப்போதுதான் ஷிப்பிங் சார்ஜ் குறையும்!

      நீக்கு
  3. கார்த்திக், நல்ல தகவல். roku smart mediaplayer பதில் micromax smart stick வாங்கலாமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களிடம் இருக்கிறதா?! Performance எப்படி? Micromax என்றாலே கொஞ்சம் உதறலாகத்தான் இருக்கிறது - விலை வேறு அதிகம் (Rs5000/-)

      நீக்கு
    2. cap tiger: இந்தக் கொடுமையை பார்த்தீர்களா?! இதன் விலை US-இல் ~Rs.2000/- மட்டுமே!!! :)

      http://www.amazon.com/gp/product/B008BFXOZE/ref=ox_sc_sfl_title_1?ie=UTF8&smid=A10EAPE4CAYC9P

      looks almost same as Micromax Smart Stick:
      http://www.themobileindian.com/news/8761_Hands-on-Micromax-Android-Smart-Stick

      நீக்கு
    3. And here is the recent and better model of the same platform:
      http://www.amazon.com/MK808-Android-Rockchip-RK3066-Cortex-A9/dp/B009OX22B4/ref=zg_bs_322215011_19

      நீக்கு
  4. அடபோங்கப்பா... ஏற்கனவே கடுப்புல இருக்கேன். போன மாசம் கவனிக்காம விட்டதால கிரிடிட் கார்டு Over Due. 300+350 தாளிச்சிட்டானுங்க. :(

    பதிலளிநீக்கு
  5. made in _______
    எந்த ஊர் மேனுபாக்சரிங் கிடைத்தது?

    http://www.concurrentmusingsofahumanbeing.blogspot.com/

    பதிலளிநீக்கு
  6. உபயோகமான பதிவு.

    நண்பரே எனக்கு முருகன் டாலர் மட்டும்தான் தெரியும். நான் என்ன பண்றது? :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதில் ஒரு சிவப்புக் கயிறைக் கோர்த்து உங்கள் கழுத்தில் மாட்டிக்கொள்ளுங்கள்! ;) முருகன் துணையிருப்பார்! :)

      நீக்கு
  7. அப்படியே Synology DiskStation DS213னா என்னான்னு சீக்கிரம் சொல்லுங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதன்முறையாக கருத்து சொல்லி இருக்கீங்க, நன்றி! :)

      DS213 - இது ஒரு Network Attached Storage! ரொம்ப சின்னதா இருக்கும், உள்ளார ரெண்டு ஹார்ட் டிஸ்க் மாட்டிக்கலாம்! அதுல டேட்டா ஸ்டோர் பண்ணினோம்னா - லாப்டாப், டெஸ்க்டாப், மொபைல், Wifi TV அப்படின்னு எங்க இருந்து வேணா access பண்ணிக்கலாம்! Centralized AC மாதிரி Centralized Storage - அவ்ளோதான்! :)

      நீக்கு
  8. ரொம்ப நாளா NAS Storage System ஒன்னு வாங்கலாம்னு ப்ளான் போட்டுகிட்டே வரேன். ஆனா, விலைகளை பார்த்து நடைமுறை படுத்த முடியல.... நீங்க வாங்கியிருக்கிறத பார்த்தா நிறைய ஆப்ஷன்ஸ் ட்ரை பண்ணியிருப்பீங்க போல... உங்க அனுபவம் நமக்கு தேவை.

    இமெயிலில் மேலும் கதாய்க்கிறேன். அதற்குள், உங்கள் புதிய டிவைஸ் மூலமான அனுபவங்களை பதிவாக போட்டு தாக்குங்கள். உள்ளே ஹார்ட் டிஸ்க் மாட்டி இருக்கிறதா ? இல்லை அது தனியா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் ரொம்ப நாளா வாங்கணும்னு ப்ளான் பண்ணி இப்பதான் முடிஞ்சது! Standalone NAS without RAID-னா விலை கம்மி. ஆனா இதுல Mirroring ஆப்ஷன் இருக்கு! வெறும் enclosure மட்டும்தான் - ஹார்ட் டிஸ்க் நாமதான் மாட்டணும்! Max 2*4TB டிஸ்க் மாட்டலாம்!! இப்போதைக்கு இந்த ப்ரைஸ் ரேஞ்சுல இதான் பெஸ்ட் ஆப்ஷன்! நாலு ஹார்ட் டிஸ்க் போடற மாதிரி இன்னொரு Synology மாடலும் இருக்கு! Will post the details in couple of weeks, yet to setup - not finding time! :)

      நீக்கு
    2. and in case you are looking for cheaper options

      2 bay - (a bit old model):
      http://www.amazon.com/Synology-DiskStation-Diskless-Network-Attached/dp/B005YW7OLM/ref=sr_1_1?ie=UTF8&qid=1355983995&sr=8-1&keywords=synology

      and for 4 bay enclosure (New model with some striped down features):
      http://www.amazon.com/Synology-Budget-Friendly-Server-Offices-DS413J/dp/B008U69LC4/ref=zg_bs_13436301_12

      நீக்கு
  9. இதன் பயன்பாடு என்னவென்று புரியவில்லை. அமேசான் பற்றிய தகவல்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இதன் பயன்பாடு என்னவென்று புரியவில்லை// DS213? Lucky Limat-க்கான பதிலைப் பாருங்கள் மீரான்!

      நீக்கு
  10. வழக்கம் போல பயனுள்ள தகவல்களை அள்ளி தந்திருக்கிறீர்கள் மிக்க நன்றி

    தொடருங்கள் உங்கள் சேவைகளை

    அப்படியே நமது லயன் முத்து பழைய புத்தகங்களையும்
    இதுபோல வாங்க வழி இருக்கிறதா என்று கண்டுபிடுத்து தாருங்களேன் உங்களுக்கு கோடி புண்ணியமாக போகும் நன்றி ;-)
    .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி! :)

      பழைய லயன் முத்துதானே?! Ebay-யில் வாங்கலாம்! ;)

      நீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia