ப்ளேட்பீடியா - உருண்டோடிய ஒரு வருடம்!

இந்த ஒரு வருட வலைப்பூ அனுபவம் எனக்கு கற்றுத் தந்தது ஏராளம், நிறைய நண்பர்களையும் எனக்கு அளித்திருக்கிறது!
ஒரு வருடத்திற்கு முன், ஒரு வருடம் கழித்து, ஒரு வருடம் முடிந்ததிற்கெல்லாம் இப்படி ஒரு தனிப்பதிவு போடுவேன் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை. :) சில வரிகள் மட்டுமே கொண்ட அந்த முதல் பதிவைப் போடவே கிட்டத்தட்ட அரை மணிநேரம் ஆனது! உண்மையில், அதை ஒரு பதிவாகவே கணக்கில் கொள்ள முடியாது. நியாயமாகப் பார்த்தால் இரண்டாம் பதிவை எழுதிய மார்ச் 27ம் தேதியைத்தான், பதிவிடத் துவங்கிய முதல் நாளாக நான் கணக்கில் கொள்ள வேண்டும்! ஏனெனில் அன்று முதல்தான் ஏதோ சொல்லிக்கொள்ளும்படி சில பத்திகளில் பதிவிட ஆரம்பித்தேன்! எது எப்படியோ, இன்று வரையில் 91 பதிவுகள், ~2500 பின்னூட்டங்கள், 112 பின்தொடர்வாளர்கள், ~1,03,200 பார்வைகள், ரேங்க் தமிழ்மணத்தில் 50 & அலெக்ஸாவில் (இந்தியா) ஒரு லட்சம்; என ஓரளவு வண்டி ஓடியிருக்கிறது! இதை சாத்தியமாக்கிய உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி! :)

இந்த ஒரு வருட வலைப்பூ அனுபவம் எனக்கு கற்றுத் தந்தது ஏராளம்! தமிழ் மீது தீராத தாகத்தையும், எழுத்தில் ஓரளவு பக்குவத்தையும், நடப்புகளை உன்னிப்பாய் கவனிக்கும் மனப்பாங்கையும், எழுதும் விஷயங்களில் தெளிந்த சிந்தனையையும், எவருடனும் அஞ்சாது வாதிடும் தைரியத்தையும், சரியெனில் தலைவணங்கா குணத்தையும், ஓரளவு பொறுமையையும்; எல்லாவற்றிகும் மேலாக நிறைய நண்பர்களையும் எனக்கு இது அளித்திருக்கிறது! கொசுறாக, வீட்டில் மனைவியின் கோபத்தையும் கொஞ்சம் சம்பாதித்துத் தந்திருக்கிறது! :)

ஒரு வருடத்தில் 91 பதிவுகள் என்பது குறைவா, அதிகமா என்பது தெரியவில்லை. சில சமயங்களில், ஏதாவது பதிவிட வேண்டுமே என்று கடமைக்கு யோசித்து யோசித்து எழுதி இருக்கிறேன். ஆனால், சில சமயம் எழுத அமர்ந்தால் பிரவாகமாக பதிவு மலரும்! ஒரு தருணத்தில் முழுதாய் ஒரு மாதம் பதிவே எழுதாமலும் இருந்திருக்கிறேன்! உண்மையில் கடமைக்கு எழுதாமல் ரசித்து எழுதுவதே எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது! உங்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற பதிவுகள் பல அவ்வாறு எழுதியவையே!

என்னதான் 'காமிக்ஸ் பதிவர்' என்ற முத்திரை என் மீது அழுத்தமாய் பதிந்திருந்தாலும், நான் இதுவரை எழுதிய மொத்தப் பதிவுகளில் கிட்டத்தட்ட 40% மட்டுமே காமிக்ஸ் பதிவுகள். மீதம் 60% பதிவுகள் - சினிமா, நகைச்சுவை, புத்தகங்கள், அனுபவம், தொழில்நுட்பம் என கலந்துகட்டி எழுதியவை! அரசியல் & மதம் - இவற்றை இதுவரை தொட்டதில்லை (TOI குறித்த பதிவு நீங்கலாக). சர்ச்சைக்குரிய இந்த இரண்டு களங்களிலும் எனக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை என்பதே காரணம். எனினும், ப்ளேட்பீடியாவின் இரண்டாம் வருடத்தில் மேலும் பல சுவாரசியமான (காமிக்ஸ் அல்லாத) மாறுபட்ட பதிவுகளை எதிர்பார்க்கலாம் என்ற இந்த அறிவிப்போடு பொதுவான வாசகர்கள் நடையைக் கட்டலாம்! :) காமிக்ஸ் பிரியர்கள் மட்டும் மேற்கொண்டு தொடரலாம் - மற்றுமொரு முக்கிய அறிவிப்பைக் காண!

ப்ளேட்பீடியாவை துவங்கிய போதே ஒரு விடயத்தில் தீர்மானமாக இருந்தேன், காமிக்ஸ் பற்றி எழுதுவதோடு நின்றிடாமல் வெரைட்டியாக எழுத வேண்டும் என்று! அப்படி எழுதினால், காமிக்ஸ் பற்றிய அறிமுகம் இல்லாதவர்கள், என்னுடைய வேறு பதிவுகளை படித்த கையோடு ஓரிரண்டு காமிக்ஸ் பதிவுகளையும் நிச்சயம் படிப்பார்களே என்ற யோசனைதான் காரணம்! இந்த யோசனை படு பிரமாதமாக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது என்பதற்கு, ஒவ்வொரு காமிக்ஸ் பதிவிற்கும் அதிகரித்து வரும் ஹிட்ஸ் எண்ணிக்கையே சாட்சி! ஆறு, ஏழு மாதங்களுக்கு முன்னர் என்னுடைய இதர பதிவுகள் ஒவ்வொன்றும் ஓரிரு நாட்களில் 500 ஹிட்ஸ்களை எளிதில் தாண்டிக்கொண்டிருக்க, காமிக்ஸ் பதிவுகள் மட்டும் 200-லேயே நொண்டி அடித்துக் கொண்டிருக்கும்! இப்போது நிலைமையே வேறு! காமிக்ஸ் பதிவுகளும் இப்போது எளிதாக 1000 ஹிட்ஸ்களை தாண்ட ஆரம்பித்துள்ளன!

என் காமிக்ஸ் பதிவுகளை படிக்கும் ஒவ்வொருவரும் காமிக்ஸ் வாங்கி விடப் போவதில்லை. அவ்வளவு ஏன், பலர் 'காமிக்ஸ்' என்ற சொல்லைப் பார்த்தாலே எகிறிக் குதித்து ஓடி விடுவார்கள்! :) ஆனால், "தமிழ் காமிக்ஸ்" என்ற சொல் அவர்கள் மனதின் ஏதோ ஒரு மூலையில் நிச்சயம் பதியும் அல்லது குறைந்தபட்சம் நினைவுறுத்தப்படும்!!!
தமிழிலும் தரமான காமிக்ஸ்கள் வெளிவருகின்றன - அவற்றை வெறித்தனமாய் வாசிக்கவும்; தலையில் வைத்து கொண்டாடவும்; பிரித்துப் போட்டு விமர்சிக்கவும் - ஒரு தீவிர வாசகர் வட்டம் இருக்கிறது!
என்ற தகவலை லட்சக்கணக்கில் இல்லா விட்டாலும், ஆயிரக்கணக்கானவருக்கு ப்ளேட்பீடியா மூலம் எடுத்துச் செல்ல முடிந்திருப்பதை நான் ஒரு பெருமையாகவே எண்ணுகிறேன்! சிறு வயதில் இருந்து என்னை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் தமிழ் காமிக்ஸிற்கு, என்னாலான ஒரு சிறிய நன்றிக்கடன்! :)

துவக்கத்திலிருந்தே என்னுடைய காமிக்ஸ் பதிவுகள் மற்றும் எடிட்டர் வலைப்பூவில் நான் இடும் பின்னூட்டங்கள் - இவை நிறைகளை மட்டுமன்றி குறைகளையும் நியாயமான முறையில் சுட்டிக்காட்டி வந்திருக்கின்றன என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். மற்ற காமிக்ஸ் வலைப்பூக்களில் இருந்து ப்ளேட்பீடியாவை வேறுபடுத்திக் காட்டியதும் இந்த ஒரு அம்சம்தான் என்பது மறுக்கவியலா உண்மை! இது வேண்டுமென்றே செய்த ஒரு விஷயம் அல்ல, குறைகள் சுட்டிக் காட்டப்பட்டால் அவை திருத்தப்படும் என்ற நம்பிக்கையில் செய்ததே! அந்த நம்பிக்கை பொய்க்காதவாறு சில நல்ல மாற்றங்களும் நிகழ்ந்திருக்கின்றன! நான் 'இந்த இந்த குறைகளை' சுட்டிக்காட்டியதால், 'இந்த இந்த மாற்றங்கள்' நிகழ்ந்தன என்றெல்லாம் பட்டியலிட்டு மார் தட்டுவது என் நோக்கமல்ல! நான் ஒருவன் சொன்னதால் மட்டுமே அத்தகைய ஒரு சில மாற்றங்கள் நிகழ்ந்தன என நம்பிட நான் ஒன்றும் முட்டாளும் அல்ல!

பொதுவாகப் பார்த்தால், முன்பெல்லாம் காமிக்ஸ் குறித்து பேசுவதென்றால் ஒரு சில வலைப்பூக்களிலும் அவற்றின் பின்னூட்டப் பகுதியிலும் எடுத்ததிற்கெல்லாம் ஆஹா ஓஹோ என்று புகழ்வது, தனிப்பட்ட நபர்களை முகஸ்துதி செய்வது; குறைகளைப் பற்றி பேசுவதென்றால் தனியே ஒரு முகநூல் / நண்பர்கள் குழுமத்தில் ஒன்று கூடி டெர்ரர் கும்மி அடிப்பது - என்பதாக மட்டுமே இருந்தது! தற்போது இந்நிலை மாறி எடிட்டர் வலைப்பூ உட்பட மற்ற தளங்களிலும் பாரபட்சமின்ற ப்ளஸ் மைனஸ்களை அலசும் பாணியை பலரும் கடைபிடித்து வருகிறார்கள்! விதிவிலக்குகள் எங்கும் எப்போதும் இருக்கவே செய்யும்! இருப்பினும், சுய சிந்தனையும், எண்ணத்தில் முதிர்ச்சியும் கொண்ட வாசகர்களின் இந்த விழிப்புணர்ச்சியே பழமையை தகர்த்து புதிய மாற்றங்களை கொண்டு வருகிறது!

லயன் & முத்துவின் ஒவ்வொரு புதிய வெளியீட்டிற்கும் கடமையாக உட்கார்ந்து ஒரு தனிப் பதிவு எழுதுவதென்பது ரொம்பவே அலுத்து விட்டது! தவிர - லயன், முத்து, CC என வருடத்திற்கு கிட்டத்தட்ட 20 அல்லது 30 காமிக்ஸ் புத்தகங்கள் வரவிருக்கும் இந்நிலையில் அனைவற்றிக்கும் தனிப்பதிவு இடுவது சாத்தியமற்ற செயல், அது தேவையும் அல்ல! என்னதான் மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று திரைப்படங்கள் பார்த்தாலும் அனைவற்றைப் பற்றியும் நான் பதிவிடுவதில்லை. மனதிற்கு பிடித்த அல்லது வித்தியாசமான படங்கள் பற்றி மட்டுமே எழுதி வருகிறேன் (சில விதிவிலக்குகளைத் தவிர!). இவ்வாறு தேர்ந்தெடுத்த படங்களுக்கு மட்டும் விமர்சனம் எழுதும் இதே பாணியை ,காமிக்ஸ் இதழ்களுக்கும் இனி பின்பற்ற எண்ணியுள்ளேன்.

தமிழ் காமிக்ஸ் பற்றி மட்டுமே எழுதி வந்ததிற்கு, நான் ஆங்கில காமிக்ஸ் படிப்பதில்லை என்பதைத் தவிர வேறு ஒன்றும் பெரிதாய் காரணம் இல்லை. சிறு வயதில் எனது வாசிப்பு ஆர்வத்திற்கு ராணி, முத்து, லயன், பூந்தளிர் போன்ற இதழ்கள் அடிக்கல் நாட்டிய பிறகு, காமிக்ஸோடு நில்லாமல் கண்டதையும் படிக்கும் பழக்கம் இருந்தது! வேலையில் சேர்ந்த பிறகு, 16 வருடங்களாக சொல்லிக் கொள்ளும்படி எந்த புத்தகங்களையும் வாசித்ததில்லை. கடந்த சில வருடங்களாக எனது வாசிப்புப் பழக்கம் தட்டுத் தடுமாறி மீண்டும் எழத் தொடங்கியதற்கு லயன் / முத்து காமிக்ஸ்தான் பெரும் காரணம்! இனி காமிக்ஸ் என்ற இந்த குறுகிய வட்டத்தில் மட்டும் நில்லாமல், வாசிப்பு எல்லையை மீண்டும் விரிவுபடுத்துவதே சரியென எனக்குப் படுகிறது! இந்த மாற்றம் சட்டென நிகழ்வது சாத்தியமா எனத் தெரியவில்லை, முதலில் சுவாரசியமான புத்தகங்களை தேடுவதில் இந்தப் பயணம் துவங்கும்! :)
ப்ளேட்பீடியா இனி புதிய பாதையில்! :)

81 comments:

 1. வாழ்த்துக்கள்! உங்கள் சேவை தொடரட்டும் :)

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள்! உங்கள் அறுவை(சேவை) தொடரட்டும்

  ReplyDelete
  Replies
  1. அரு(மை/வை)யான வாழ்த்துகளுக்கு நன்றி பெரியார்! :)

   Delete
 3. வாழ்த்துக்கள் நண்பரே.. வாழ்த்துக்கள்.. நகைச்சுவை மொழிக்கு சொந்தகாரர், இந்த வருடம் பெரிய ரவுண்ட் வர வாழ்த்துக்கள்.. அப்படியே வரிசையில் பலருக்கு முதல் பிறந்த நாள் வருகிறது என்று நினைக்கிறேன்.. மறுபடியும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி, நன்றி!!! அடுத்தது யாருக்கு?! :)

   Delete
  2. அண்ணேன் மறைமுகமா தம்பிக்கு தான்னே விளம்பரம் பண்ணேன்

   Delete
  3. அட!!! அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ஹாரி! :)

   Delete
 4. Congrats for the first anniversary... Oops... sorry... 1st birthday!

  :) :) :)


  Responsive blogger template.... Good!

  ReplyDelete
  Replies
  1. Thank you buddy!!! :)

   //Responsive blogger template.... Good!//
   you are the only one who noticed the template change (as expected)!!! :D

   Delete
  2. :) :) :)

   Last few months i am searching for responsive blogger template for my blog. At that time i saw this template too... :)

   Delete
  3. So any luck with your template hunt? There seem to be more choices for Wordpress than blogger :(

   I bought this for $20 at Themeforest. Bit expensive, but I like its clean interface :)

   Delete
  4. Unlucky...

   Lot of Wordpress templates available for free.

   20$ is higher price for me.. :D :D :D

   Delete
  5. Tried that, but 'post title' does not get rendered properly - I don't see Tamil fonts :( However the post body is visible. Any idea why this happens?

   I've re-enabled the mobile template it for the time being.

   Delete
  6. @Abdul: Now the template is responsive on mobile devices! I've also fixed the font and enabled comments section. Pl. Check :-)

   Delete
 5. வாழ்த்துக்கள்.ஒரு ஆண்டுக்கு 300 க்கு மேல் பதிவுகள் எழுதி அடுத்த ஆண்டே காணாமல் போவதை விட நீங்கள் எழுதும முறையே தாமான பதிவுகள் படைத்து நீண்ட நாட்கள் நிலைத்திருக்க முடியும். தொடர்க!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி முரளிதரன்!!! :)

   Delete
 6. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. உங்களை மகிழ்வித்த காமிக்ஸூக்கு உங்களால் இயன்ற நன்றிக்கடனை செவ்வனே செய்திருக்கிறீர்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை, கார்திக்!
  நன்றிக்கடனில் இதுவரை செலுத்தியிருப்பது வட்டி மட்டுமே; எனவே தொடருங்கள் உங்கள் காமிக்ஸ் பதிவுகளை! :)

  வாழ்த்துக்கள்!

  சீக்கிரமே நூறாவது பதிவு கண்டிடவும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்! :)

  ReplyDelete
  Replies
  1. வட்டிக்கே கண்ணை கட்டி விட்டது! இதில் முதல் வேறா? மறுபடியும் முதல்லே இருந்தா?! ;) :D

   Delete
 8. வாழ்த்துக்கள் கார்த்திக்.

  ReplyDelete
 9. நண்பரே,காமிக்ஸ் படிக்காத பிறரின் மனதிலும்,பதிய செய்ததால் சிலர் கூட வந்து விசாரித்ததும் தங்கள் வலை தளத்தில் நடந்ததே இந்த வெற்றியை சொல்லும்!ஒருவரை கொண்டு வந்தாலும் வெற்றியே !பிரம்மாண்ட வெற்றியே !தங்களது வலைதள வெற்றி ( ரேங்க் தமிழ்மணத்தில் 50 & அலெக்ஸாவில் (இந்தியா) ஒரு லட்சம்),மேலும் முன்னேறி,இன்று போல என்றும் தொடர எனது மனமார்ந்த பாராட்டுகளும்,வாழ்த்துக்களும் !

  ReplyDelete
  Replies
  1. @ ஸ்டீல்

   சும்மா வாழ்த்துக்களோடு நிறுத்திட்டா எப்படி? கார்த்திக்கைப் பாராட்டும் விதத்தில் அவரை உங்க பைக்கில் உட்காரவைத்து ஒரு ரவுண்டு கூட்டிப் போய்வரலாமே?! :)

   Delete
  2. @ஸ்டீல் க்ளா:
   மிக்க நன்றி நண்பரே!! ஆம், காமிக்ஸ் என்ற சொல் மனதில் பதிய ஆரம்பித்தாலே போதுமானது! மற்றவை தன்னால் நடந்தேறும்! :)

   @விஜய்:
   இதுக்கெல்லாம் பயப்பட மாட்டேன்! :D "கோவையில் ஒரு பைக் ரேஸ்" அப்படின்னு சிறப்புப் பதிவு போட்ருவேன்! ;)

   Delete
 10. Replies
  1. வாழ்த்துக்கள் கார்த்திக்.
   உங்களுடைய இந்த பதிவு எனக்கும் பல உண்மைகளை உணர்த்தியது.

   //தமிழ் மீது தீராத தாகத்தையும், எழுத்தில் ஓரளவு பக்குவத்தையும்//
   நானும் பதிவு எழுதும் காலம்தொட்டு உணர்ந்தவை .

   //தலைவணங்கா குணம்,அஞ்சாது வாதிடும் தைரியம்//
   இதெல்லாம் கார்த்திக்கே உரியவை.

   உங்கள் வலைபூ மூலம் தமிழ் காமிக்ஸின் presence ஓர் அளவேனும் பலரிடம்கொண்டு சேர்த்தது நிச்சயம் பாராடுதல்குரிய விஷயம்.

   மேலும் பல புதுமைகளோடு வரும் வருடங்களில் மேலும் வளருவீர்கள் என்பதில் சந்தேகம் கிடையாது.

   மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்.

   Delete
  2. மிக்க நன்றி கிருஷ்ணா! ஆம், தமிழ் எழுத்துக்களின் மீதான ஆர்வம் 'கூடியதிற்கு' நிச்சயம் இந்த வலைப்பூவும் ஒரு காரணம்!

   Delete
 11. NBS in mulu vimersanathai ungal varuda aaramba padivel edirparthen .:_(
  irunthalum VALTHUGAL nanbaray.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றி பரணி! :)

   NBS-க்கு விரிவான விமர்சனம் எழுதுவதென்றால் குறைந்தது 4, 5 பதிவுகள் இட வேண்டியிருக்கும்!!! :)

   Delete
 12. அறுந்தவால் சீ, பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்த்திக். ஆனாலும் உங்கள் முதல் பதிவு செம காமடி பாஸ். சாக்ரேடீஸ் தான் அந்த (அ) பாக்கியவானா?

  //பொதுவாகப் பார்த்தால், முன்பெல்லாம் காமிக்ஸ் குறித்து பேசுவதென்றால் ஒரு சில வலைப்பூக்களிலும் அவற்றின் பின்னூட்டப் பகுதியிலும் எடுத்ததிற்கெல்லாம் ஆஹா ஓஹோ என்று புகழ்வது, தனிப்பட்ட நபர்களை முகஸ்துதி செய்வது; குறைகளைப் பற்றி பேசுவதென்றால் தனியே ஒரு முகநூல் / நண்பர்கள் குழுமத்தில் ஒன்று கூடி டெர்ரர் கும்மி அடிப்பது - என்பதாக மட்டுமே இருந்தது!//


  ஆஹா !! உள்குத்து உள்குத்து :D

  //லயன் & முத்துவின் ஒவ்வொரு புதிய வெளியீட்டிற்கும் கடமையாக உட்கார்ந்து ஒரு தனிப் பதிவு எழுதுவதென்பது ரொம்பவே அலுத்து விட்டது! தவிர - லயன், முத்து, CC என வருடத்திற்கு கிட்டத்தட்ட 20 அல்லது 30 காமிக்ஸ் புத்தகங்கள் வரவிருக்கும் இந்நிலையில் அனைவற்றிக்கும் தனிப்பதிவு இடுவது சாத்தியமற்ற செயல், அது தேவையும் அல்ல! என்னதான் மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று திரைப்படங்கள் பார்த்தாலும் அனைவற்றைப் பற்றியும் நான் பதிவிடுவதில்லை. மனதிற்கு பிடித்த அல்லது வித்தியாசமான படங்கள் பற்றி மட்டுமே எழுதி வருகிறேன் (சில விதிவிலக்குகளைத் தவிர!). இவ்வாறு தேர்ந்தெடுத்த படங்களுக்கு மட்டும் விமர்சனம் எழுதும் இதே பாணியை ,காமிக்ஸ் இதழ்களுக்கும் இனி பின்பற்ற எண்ணியுள்ளேன்.//

  சினிமாவுக்கு ஓகே. காமிக்ஸுக்கு நீங்கள் எழுதுவதை கொஞ்சம் பரிசீலிக்கலாம் (Consider க்கு என்னப்பா தமிழ் வார்த்தை ?)

  டெம்ப்ளட் சுமாராக இருப்பது மாதிரி பீலிங். எப்பா எனக்கு மட்டும்தானா? அது என்ன ரெஸ்பான்சிவ் டெம்ப்ளட் ?

  ReplyDelete
  Replies
  1. //ஆஹா !! உள்குத்து உள்குத்து :D//
   பரவாயில்லையே?! கரெக்டா கண்டு புடிச்சிட்டீங்களே! ;)

   //காமிக்ஸுக்கு நீங்கள் எழுதுவதை கொஞ்சம் பரிசீலிக்கலாம்//
   சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ஒரே ஸ்டைலில் காமிக்ஸ் பதிவுகள் எழுதி கொஞ்சம் போரடித்து விட்டது! :) ஒரு சின்ன ப்ரேக்! ;)

   //டெம்ப்ளட் சுமாராக இருப்பது மாதிரி பீலிங்//
   ஒத்துக்கொள்ள முடியாது, காசு கொடுத்து வாங்கிய டெம்ப்ளேட்! ;) இன்னமும் முழுதாய் டிசைன் செய்து முடிக்கவில்லை.

   Home Page சற்று சுமாராக இருப்பினும் கீழ் கண்ட Features உள்ளன:
   1. முகப்பில், படங்களின் Thumbnail சரியாக ஜெனரேட் ஆகும்!
   2. வேகமாக லோட் ஆகும்!
   3. எழுத்துக்கள் சற்று தெளிவாக, பெரிதாக தெரியும்!
   4. Content Area-வின் அகலம் சற்று அதிகம்!
   5. டெக்னிகல் சப்போர்ட் கிடைக்கும்! :)

   //அது என்ன ரெஸ்பான்சிவ் டெம்ப்ளட் ?//
   திரைகளின் (மானிடர் / மொபைல் ஸ்க்ரீன்) அளவுக்கேற்ப தானாக resize செய்து கொள்ளும்! :)

   Delete
 13. vazhathukkal Karthi... I like all your posts particularly for your comedy flavor. Keep continuing… touch comics also occasionally. Comics – kalayaipu postkalai athikam ethirpakkuren.

  //அரசியல் & மதம் - இவற்றை இதுவரை தொட்டதில்லை//

  In my opinion, Religion no need. But no harm in touching politics..

  ReplyDelete
  Replies
  1. Thank you Siv! It is just that I don't really like the idea of religiously reviewing each and every new issue of Muthu / Lion. Comics posts will continue, but in a different style! :)

   //In my opinion, Religion no need. But no harm in touching politics..//
   We don't really have the freedom to discuss these things openly in India, do we?! :) :D

   Delete
 14. வாழ்த்துக்கள் கார்த்திக்.

  ReplyDelete
 15. வாழ்த்துகள் பாஸ் :-))

  ReplyDelete
 16. வாழ்த்துகள் கார்த்திக்

  ReplyDelete
  Replies
  1. பிரபல பதிவர் ஒருவரிடமிருந்து இப்படி ஒரு சர்ப்ரைஸ் வாழ்த்தை நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை!!! வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி யுவா!!! :)

   Delete
 17. வந்தோம்ல நாப்பதாவது

  ReplyDelete
 18. பிளேடு ஆக்ஸா பிளேடாக வளர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. ப்ளேட்பீடியா ப்ளேட்சிகரெட்டாக வளரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஏன், இன்னும் கொஞ்சம் குண்டா ப்ளேட் சுருட்டா வளரக் கூடாதா?! ;)

   Delete
 20. டெம்ப்ளேட் நன்றாக உள்ளது.homepage எனக்கு பிடித்துள்ளது. ஹெட் மெனுவின் கலர் மட்டும் டல்லாக உள்ளது

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்! எனக்கும் அந்த 'மஞ்சள் பட்டி மர்மம்' பிடிக்கவில்லை! :) விரைவில் மாற்றுகிறேன்!

   Delete
 21. வாழ்த்துக்கள் , உங்களது சேவை எங்களுக்கு தேவை

  (புதிய formateல் மற்ற பதிவர்களின் list இல்லையே ?)

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி! விரைவில் இணைப்பேன்! இந்த டெம்ப்ளேட்டின் அடிப்பகுதி மற்றும் மேலே Tab-களில் சில மாற்றங்கள் வரும் - அங்கே பதிவர் லிஸ்டும் வெளியாகும்!

   Delete
 22. யோவ் காசு குடுத்து வாங்குநீங்களா....இருபது டாலரா சொல்லிருந்தா நான் கொஞ்சம் ட்ரை பண்ணிருப்பென்ல

  ReplyDelete
  Replies
  1. ஏன்? 20 டாலரை நீங்க குடுத்து இருப்பீங்களா?! ;)

   Delete
 23. இதே போல் டெம்ப்ளேட் பிரீயாவே கிடைக்குதே...அதே எடுத்து modify பண்ணி இருக்கலாம்

  ReplyDelete
  Replies
  1. இதுவரைக்கும் ஃ ப்ரீ டெம்ப்ளேட்தான் யூஸ் பண்ணிட்டு இருந்தேன்! ஆனா ஒரு ஃப்ரொபெஷனல் லுக் கெடைக்கல! :) நெறைய தேடித் பார்த்தேன் ஒண்ணும் திருப்தியா இல்ல! இது என்னமோ ரொம்ப புடிச்சிருந்தது! :) அதான் மனசை தேத்திகிட்டு செலவு பண்ணிட்டேன்! :D

   Delete
 24. ஒரு வருடம் ஒரு வலைப்பதிவேடை நடத்துவது என்பதை விட, கிட்டதட்ட மாதத்திற்கு 8 பதிவுகள் என்ற ரேஞ்சில் பின்னி பெடலெடுப்பது அசாத்தியமான செயல். உங்கள் அயராத உழைப்பை பறைசாற்றுகிறது.

  புதிய களங்களில் தேடுதலை தொடங்க இருக்கும், புதிய வருடத்திற்கு வாழ்ததுகள் கார்த்திக்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரஃபிக்! முன்பு அளவுக்கு வேகம் இல்லை என்றாலும், தரத்திற்கே இனி அதிக முக்கியத்துவம்! ;) :)

   Delete
 25. உங்களது புதியபாதையில் நீங்கள் காணும் கற்பனை உலகின் சந்தோஷ தருணங்களை எங்களுக்கு பழகிய தங்களின் எளிய, நகைச்சுவை ததும்பும் பதிவுகளாக தரபோவதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு தமிழ்வாசகனின் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 26. // .. இனி காமிக்ஸ் என்ற இந்த குறுகிய வட்டத்தில் மட்டும் நில்லாமல், வாசிப்பு எல்லையை மீண்டும் விரிவுபடுத்துவதே சரியென எனக்குப் படுகிறது ... //

  Sounds good. Glad to know that you are going to extend your trade-mark நையாண்டி writings about other subjects as well.

  ReplyDelete
 27. கார்த்திக், ஒரு வருடம் கடந்ததற்கும் ஒரு லட்சம் பதிவுகள் தாண்டியமைக்கும் வாழ்த்துக்கள்.

  உங்களின் நடுநிலை தவறா கருத்துக்களுக்கும் நேர்மையான விமர்சனங்களுக்கும் நான் விசிறி. தொடரட்டும் உங்கள் முயற்சி...!

  ReplyDelete
  Replies
  1. ஒரு லட்சம் பார்வைகள் .. சாரி! பதிவுகளும் மெல்லத் தாண்டட்டும் ...வாழ்த்துகள்.

   Delete
  2. மிக்க நன்றி ராகவன்! பதிவுகள் ஒரு லட்சத்தை தாண்டுவது சத்தியமாக சாத்தியப்படாது!!! :D

   Delete
 28. //காமிக்ஸ் என்ற சொல் மனதில் பதிய ஆரம்பித்தாலே போதுமானது!//

  ஏன்? சித்திரக்கதை என்ற அருமையான தமிழ் வார்த்தை இருக்கும்போது, காமிக்ஸ் என்ற ஆங்கில வார்த்தையை மக்கள் மனதில் பதியவைக்க முயற்சி செய்யும் உங்கள் தமிழ் பற்றுக்கு ......

  ReplyDelete
  Replies
  1. அது என்னவோ அப்படியே பழக்கமாகி விட்டது பிரபு! :) என்னதான் தமிழ் மேல் பற்று இருந்தாலும் இப்போதைக்கு முழுக்க முழுக்க தூய தமிழைப் பயன்படுத்துவது என்பது எனக்கு சற்று கடினம்தான்! :) நீங்கள் எப்படியோ?! ;)

   Delete
  2. Happy birthday Bladepedia!! Congratulations Karthik!

   //முதலில் சுவாரசியமான புத்தகங்களை தேடுவதில் இந்தப் பயணம் துவங்கும்! :)//

   Good decision. From tiny pebbles to boundary less galaxy, there are so many fascinating things to learn..to know...to understand...to think...and think...and to think different...and to challenge existing theories and to arrive at new conclusions...well i hope you understand! Don't waste your precious knowledge, thinking power and time in just blogging about media and entertainment.

   Expecting some big changes...

   Delete
  3. @விஸ்கி-சுஸ்கி:

   Thank you Buddy! You are right! There are just too many things to explore - let me get to them one at a time! :)

   Delete
 29. பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே :))

  // நிறைகளை மட்டுமன்றி குறைகளையும் நியாயமான முறையில் சுட்டிக்காட்டி வந்திருக்கின்றன //

  அங்கன தான் நிக்குறீங்க/கலக்குறீங்க நண்பரே ;-)
  .

  ReplyDelete
 30. // லயன், முத்து, CC என வருடத்திற்கு கிட்டத்தட்ட 20 அல்லது 30 காமிக்ஸ் புத்தகங்கள் வரவிருக்கும் இந்நிலையில் //

  உங்கள் வாக்கு பலிக்கட்டும் நண்பரே :))
  .

  ReplyDelete
 31. // முதலில் சுவாரசியமான புத்தகங்களை தேடுவதில் இந்தப் பயணம் துவங்கும்! :) //

  ALL THE BEST BUDDY :))

  இங்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் தாங்கள் ஏன் ஒரு ஆன்மீக பயணம் மேற்கொள்ள கூடாது

  நித்தி யானந்தா அவர்கள் பெங்களூரில் தான் இருப்பதாக தகவல்

  மேலதிக விவரங்களுக்கு அவர்களை தொடர்பு கொள்ளலாமே /கொல்லலாமே ;-)

  ஏதோ என்னால முடிஞ்சது :))
  .

  ReplyDelete
  Replies
  1. அதாவது அவருடன் இணைந்து ஆன்மீக ஆராய்ச்சியில் ஈடுபடலாம் என்கிறீர்கள்?! அப்படித்தானே?! :D ;)

   Delete
  2. முதலில் எல்லோருமே ஆன்மிக ஆராய்ச்சின்னுதான் ஆரம்பிக்குறாங்க போக போகத்தான் தெரியும் ;-)

   என்ன நான் சொன்னது சரி தானே நண்பரே :))
   .

   Delete
 32. நண்பர் கார்த்திக்

  வாழ்த்துக்கள் !!!!

  குடும்ப விசேசம் ஒன்றில் இருப்பதால் ஒரு வாரமாக தலை காட்ட முடியவில்லை

  லேட் வாழ்த்துகளுக்கு மன்னிக்கவும்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நாகராஜன்! :)

   Delete
 33. This comment has been removed by the author.

  ReplyDelete
 34. Congratulations . But once a week post has become once a month post . Looking forward to regular posts from you. I am seeing you on other blogs 😄

  ReplyDelete

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia