இரவல் நினைவகம்!

சுரேஷ் - தி ட்ரபிள் ஷூட்டர்ஸ் நிறுவனத்தின் முன்னணி கன்சல்டன்ட்! கிட்டத்தட்ட பனிரெண்டு வருடங்களுக்கு முன்னர் கூகிள் போன்ற தேடு தளங்கள் அவ்வளவு பிரபலமாக இல்லாத காலத்தில், சுரேஷும் பிரபலம் கிடையாது! ஆனால், திறமையானவன்; இணையத்தில் தேடத் துவங்கிய நாள், முதல் மிகத் திறமையானவனாக மாறியிருந்தான்!

ப்ரைன்சாஃப்ட்-ல இருந்து P1 ரிக்வஸ்ட்! நீங்க போனா பெட்டரா இருக்கும் சுரேஷ்!

சுரேஷின் காலைப் பொழுதுகள், பெரும்பாலும் இப்படித் தான் துவங்கும்! நீங்களும் நானும் தேடினால் கிடைக்காத தகவல்களை எல்லாம், இணையத்தில் இருந்து சலித்து எடுத்து விடுவான்! தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள் மட்டுமல்ல, யாராவது ஒருவரின் பெயரைச் சொன்னால், அவரின் ஜாதகத்தையே அலசியெடுத்துக் கொடுப்பான்!

அங்கே, ஐடி ஹெட் திவாகரை மீட் பண்ணுங்க!

ஓகே...!

கூகிளை மட்டும் நம்பி இராமல், பல்வேறு டெக்னிகல்  ஃபோரம்களிலும் உறுப்பினராக இருந்தான் சுரேஷ்! அங்கே கேள்விகளை கேட்பதோடு, மற்றவர்களுக்கு தீர்வு சொல்லியும் உதவுவான் - அந்தத் தீர்வுகளையும் இணையத்தில் இருந்து தான் தேடி எடுப்பான் என்பது வேறு விஷயம்!

மிஸ்டர் திவாகர்? ஐயம் சுரேஷ் ஃப்ரம் TTS!

"ஹலோ சுரேஷ்!" - கைகுலுக்கிய படி எழுந்த திவாகர், பேசிக் கொண்டே டேட்டா சென்டர் நோக்கி நடந்தார்!

நெட்வொர்க் கம்ப்ளீட்டா டவுன்! Router-ல ப்ராப்ளம் இருக்கும் போல!

பாக்கறேன் சார்...

லாப்டாப்பை, ரௌட்டரின்  கன்சோல் போர்ட்டில் இணைத்த சுரேஷ், சிஸ்டம் Log-ல் தெரிந்த error code-களை, 'டேட்டா கார்ட்' உதவியுடன் கூகிளில் தேடிப் பார்த்து விட்டு மெலிதாக தோளைக் குலுக்கினான்...

Known இஸ்யூ தான்... போன மாசம் வேறொரு இடத்தில கூட இதை ஃபிக்ஸ் பண்ணியிருக்கேன்! இப்ப நினைவுக்கு வருது...

திவாகர் ஆர்வமாக லாப்டாப் திரையை நோக்கிக் குனிந்த போது, சுரேஷின் ஃபோனில் ரிமைன்டர் ஒலித்தது!

நாளைக்கு வெட்டிங் டே! ச்சே... எப்படி மறந்தேன்?!

மெலிதாக முணுமுணுத்தபடி Snooze-ஐ அழுத்தி விட்டு, லாப்டாப் பக்கம் திரும்பினான்! Notes எடுக்கும் அப்ளிகேஷனில், 'நெட்வொர்க்' என்ற தலைப்பின் கீழ் ஏற்கனவே சேகரித்து வைத்திருந்த command-களில் சிலவற்றை, ரௌட்டர் டெர்மினலில் ஒன்றன் பின் ஒன்றாக வெட்டி ஒட்டி, சற்றே எடிட் செய்து ஓட்டினான்...

டன்! இப்ப எல்லா Links-ம் ஆன்லைன்ல இருக்கு!

எப்படி ஃபிக்ஸ் பண்ணீங்க?


லாப்டாப்பை பார்த்து விளக்குவதற்காக குனிந்த சுரேஷிடம், அவன் ரன் செய்த கமாண்ட்களை பட்டியலிட ஆரம்பித்தார் திவாகர்!

சரி தானா?

எப்... எப்படி சார்?!
 

ரிலாக்ஸ் சுரேஷ்! குத்திக் காட்டறதுக்காக இதைச் செய்யல! முக்கியமான விஷயங்களையும், அனுபவங்களையும் முடிஞ்ச வரை என்னோட மெமரில பதிச்சு வச்சுப்பேன் - அது பெர்சனல் மேட்டரா இருந்தாலும் சரி, வொர்க் ரிலேட்டடா இருந்தாலும் சரி!

சங்கடமாக சிரித்த சுரேஷைப் பார்த்து, சற்று நிறுத்தித் தொடர்ந்தார் திவாகர்!

நீங்க ஏதோ ஒரு கேட்ஜட்டோட மெமரில ஸ்டோர் பண்ணி, Cloud-ல sync பண்ணி வச்சுக்கறீங்க! அதை retrieve பண்ண உங்களுக்கு ஏதாவது ஒரு gadget அவசியப் படுது... எனக்கு அது தேவைப் படாது! அவ்வளவு தான் வித்தியாசம்...

வொர்க் லோட் அதிகம், தினம் ஏகப்பட்ட பிரச்சினைகளை ஹேண்டில் பண்றேன்... எல்லாத்தையும் ஞாபகம் வச்சுக்க முடியறதில்ல! எந்தப் பிரச்சினையையும் நெட்ல தேடி சால்வ் பண்ணிட முடியுங்கறதால அதிகம் அலட்டிக்கறதும் இல்ல!


எதை வேண்டுமானாலும் அவுட் சோர்ஸ் பண்ணலாம்! ஆனா, உங்க மூளை மற்றும் ஞாபக சக்தி - இந்த ரெண்டை மட்டும் முழுசா அவுட் சோர்ஸ் பண்ணிப் பழக்கி விட்றாதீங்க! இல்லைனா நீங்க முழுக்க முழுக்க 'காப்பி பேஸ்ட்' என்ஜினியரா மாறிடுவீங்க!

சுரேஷ் அதற்கு பதில் சொல்ல முற்பட்ட போது,  திவாகரின் செல்ஃபோன் அலறியது; எதிர் திசையில், திவாகரின் மனைவி அலறியது அவனுக்கு மிகத் தெளிவாகக் கேட்டது...

நானும் ரெண்டு நாளா சொல்லிட்டு இருக்கேன், இன்னிக்காவது தட்கல்ல டிக்கட் புக் பண்ணீங்களா, இல்லியா?! 
***
பின்குறிப்பு: மழுங்கிப் போய் வரும் (என்) ஞாபக சக்தி பற்றி ஒரு கட்டுரை எழுத நினைத்து, அது ஒரு (கற்பனைக்) கதையில் வந்து முடிந்திருக்கிறது! நேரம் கிடைக்கும் போது கட்டுரையும் எழுத வேண்டும்... எதற்கும் ஒரு ரிமைண்டர் போட்டு வைக்கிறேன்! :)

Image Credit: engagedlearning.co.uk

15 comments:

 1. Super ji...always a twist in the end.

  But when we became Dependant on the technology it happens.

  Please continue these stress busters.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கிருஷ்ணா! எழுதி முடித்த பிறகு, ஏதோ நீதிக் கதை ரேஞ்சில் இருக்கிறதே என்று தோன்றியதால் அந்த மசாலா ட்விஸ்ட்டை நுழைத்தேன்! ;) தவிர, 'இது தவறு, இது சரி' என்று திவாகர் மூலமாக தீர்ப்பு எழுதாமல், நிஜ வாழ்க்கையில் யாராலும் முழுக்க முழுக்க சொந்த மூளையை / ஞாபகத் திறனை நம்பி மட்டும் காலம் தள்ள முடியாது என்பதை வலியுறுத்தியது போலவும் இருக்கும் என்று தோன்றியது! :)

   Delete
 2. இனி வருங்காலத்தில் அனைவருமே இரவல் மூளையோடுதான்(கூகிள்) வாழப் போகிறோம்... ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு என்பதற்குக் கூட கால்குலேட்டரை தேடும் தலைமுறை உருவாக்கி விட்டது... கட்,காப்பி,பேஸ்ட் என்ற மூன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் போதும்... அதை உங்கள் கதையில் தெளிவாக சொல்லி விட்டீர்கள்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் வேல்! இது காலத்தின் கட்(பேஸ்)ட்டாயம்! :D

   Delete
 3. Replies
  1. @சுரேஷ்:
   கிர்ர்.... கற்பனைக் கதை என்றதை literal ஆக எடுத்துக் கொள்ளக் கூடாது! ;) மையக் கருத்து கற்பனை அல்ல கதாநாயகரே!! :D

   Delete
 4. ஷார்ட் அண்ட் ஸ்வீட் ... debuggers அண்ட் troubleshooters இப்படித்தான் மாறி வருகிறோம் :-D

  டெக்னிகல் சமாச்சாரங்களுக்கு இல்லை என்றாலும், நான் நெருங்கி பழகும் மனிதர்களின் விவரங்கள் மற்றும் அவ்வனுபவங்கள் எல்லாம் என் நினைவுகளில் இறுத்திக் கொண்டுவிட முடிகிறது என்னால்!

  ReplyDelete
  Replies
  1. //நான் நெருங்கி பழகும் மனிதர்களின் விவரங்கள் மற்றும் அவ்வனுபவங்கள் எல்லாம் என் நினைவுகளில் இறுத்திக் கொண்டுவிட முடிகிறது என்னால்!//
   ஹ்ம்ம்... ஆனால், சில சமயங்களில் நினைவுகளும் சுமைகள் தான்! :)

   Delete
 5. அட்டகாசம் கார்த்திக்! எனக்குப் பிடித்த ஒரு பெரிய எழுத்தாளரின் ஆவி உங்ககிட்டேதான் சுத்திக்கிட்டிருக்குன்னு உறுதியா நம்பரேன். :)

  இந்தக் கதையை கொஞ்சம் நிதானமா யோசிச்சதுல, சுரேஷின் ஃபோன் ரிமைன்டர் செய்தி 'தட்கல் புக்கிங்' பற்றியதாகவும், திவாகரின் மனைவியிடமிருந்து வரும் ஃபோன் கால் 'அன்று அவர்களுடைய வெட்டிங்-டே' பற்றியதாகவும் இருந்திருந்தால் அந்த இறுதி ட்விஸ்ட் இன்னும் ரசிக்கும்படியாக இருந்திருக்குமென்று தோன்றுகிறது.

  நான் சரியாத்தான் பேசிக்கிட்டிருக்கேனா? ;)

  ReplyDelete
  Replies
  1. //நான் சரியாத்தான் பேசிக்கிட்டிருக்கேனா? ;)//
   சூப்பர் ஐடியா விஜய்!!! :) ஆனால், லாஜிக் கொஞ்சம் உதைக்க வாய்ப்பு இருக்கிறது! தட்கல் டிக்கட் பற்றி காலை பத்து மணிக்கு மேல் தான் விசாரிக்க முடியும் என்பதால் அது பொருத்தமாக இருப்பதாகத் தோன்றுகிறது! வெட்டிங் டேவை மறந்து விட்டு திவாகரால் ஆபிஸ் வந்து சேர்ந்திருக்க முடியுமா என்ன?! கிளம்புவதற்கு முன்னரே அவரின் மனைவி போட்டுத் தாளித்து இருக்க மாட்டாரா?! :D

   Delete
  2. ஆனால், அவரின் மனைவி விட்டுப் பிடிக்கும் (தாளிக்கும்) டைப்பாக இருந்தால் சாத்தியமே! ;)

   Delete
 6. என் உண்மை அனுபவம் தான். மனைவியின் பிறந்த நாளை ரிமைன்டரில் போட்டு வைத்து விட்டு ஆபீஸ் வந்து பார்த்து போன் பண்ணி திட்டு வாங்கி, ரிமைன்டரில் போட்டு வைத்திருந்த உண்மையையும் சொல்லி இன்னமும் "ஏன் உங்க ரிமைன்டர் சொல்லலியா?" ன்னு கொமட்டில் குத்து வாங்கிகிட்டு இருக்கேன். மீ பாவம் :D

  ReplyDelete
  Replies
  1. ரிமைண்டருக்கு ரிமைண்டர் போட மறந்துட்டேன்னு சொல்லி, நாலு குத்து கூடுதலா வாங்கிக்குங்க! :-D

   Delete
 7. வருங்காலத்தில், நமக்கு தேவைப்படுமானால் இரவல் மூளையையும் பயன்படுத்திகொள்வதில் தவறில்லை. அதுகாலத்தின் தேவைக்கான விஞ்ஞான வளர்ச்சி. ஆனால் விஞ்ஞான வளர்ச்சியினால் மனிதாபிமானத்தை மறந்தோமானால், அங்குதான் ஆரம்பிக்கும் மனிதனின் வீழ்ச்சி !

  ReplyDelete
  Replies
  1. மனிதாபிமானத்திற்கு தனியே ஒரு App-ஐ இன்ஸ்டால் செய்து விடலாம்! just kidding :)

   உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே...!

   Delete

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia