இந்தியர்களுக்கு இராமாயண, மகாபாரதக் காவியங்கள் எப்படியோ; அப்படித்
தான், அமெரிக்கர்களுக்கு சூப்பர் ஹீரோ காமிக்ஸ்களும்! வித்தியாசமான ஆடை,
ஆற்றல், ஆயுதங்கள் மற்றும் அணுகுமுறைகளைக் கொண்டு; தீமையை ஒடுக்கி, நீதியை
நிலைநாட்ட 'சூப்பர் ஹீரோ' அவதாரம் எடுக்கும் எண்ணற்ற 'மகா நாயகர்'-களின்
கதைகளைப் படித்துத் தான், ஒவ்வொரு அமெரிக்கக்
குழந்தைகளும் வளர்கின்றன!
ஆனால், 'வாட்ச்மென்' வழக்கமான சூப்பர் ஹீரோ கதையல்ல; ஒவ்வொரு பக்கத்திலும் அதிரடியை எதிர்பார்த்தால், படு மோசமாக ஏமாந்து போவீர்கள்! 20ம் நூற்றாண்டு அமெரிக்காவின், முக்கியம் வாய்ந்த அரசியல் மற்றும் வரலாற்று நிகழ்வுகளின் ஊடே, கற்பனையாக சூப்பர் ஹீரோக்களைப் புகுத்துவதால் நேரும் விளைவுகளைச் சொல்கிறது வாட்ச்மென்!
384 பக்கங்கள் கொண்ட வாட்ச்மென் கிராஃபிக் நாவலின் முழு வீச்சையும் உணர, அதன் வசனங்களையும், சித்திரங்களையும் உள்வாங்கி, நிறுத்தி நிதானமாகப் படிக்க வேண்டியிருக்கும். இந்த இரு பாகப் பதிவின் மூலம், இதன் முழுக்கதையையும் விரிவாக எழுதுவது என் நோக்கம் கிடையாது! மாறாக, non-linear ஆக பயணிக்கும் இந்தப் புத்தகத்தை படிக்க எண்ணி இருப்பவர்களுக்கு, இப்பதிவு ஒரு துவக்கப் புள்ளியாக உதவ வேண்டும் என்ற நோக்கில், எளியதொரு அறிமுகத்தைத் தந்திருக்கிறேன்! முடிந்த வரை Spoiler-களைத் தவிர்த்துள்ளேன்; விருப்பமிருந்தால் தொடர்ந்து படியுங்கள்!
1987-ல் வெளியான இந்த கிராஃபிக் நாவல், மொத்தம் 12 பாகங்கள் (12x32 பக்கங்கள்) கொண்டது; கதை, 1985-ல் துவங்கி, முன்னும் பின்னுமாக நகர்கிறது!
1938 - ஆக்ஷன் காமிக்ஸ் நிறுவனம், அமெரிக்காவின் முதல் சூப்பர் ஹீரோவை அறிமுகப் படுத்துகிறது - சூப்பர் மேன்! நிஜ வாழ்விலோ, முகமூடி அணிந்த பல நீதிக் காவலர்கள் ஆங்காங்கே முளைத்து, சட்டத்தைக் கையில் எடுக்கின்றனர்! பத்திரிக்கைகள் அவர்களின் புகழைப் பரப்புகின்றன... மக்கள் ஆராதிக்கின்றனர்... சமூக விரோதிகள் அஞ்சிப் பதுங்குகின்றனர்! அமெரிக்க அரசு, அவர்களில் சிலரை - WW2, வியட்நாம் ஆகிய பல போர்க்களங்களுக்கு அனுப்பி வைக்கிறது!
கதையின் மையக் கதாபாத்திரங்கள் மொத்தம் ஆறு பேர் தான்; அவர்களில் ஒரே ஒருவனைத் தவிர ஏனையோருக்கு, அற்புத சக்திகள் ஏதும் கிடையாது; அந்த ஐவரை, சூப்பர் ஹீரோக்கள் என்று அழைப்பதை விட, "முகமூடிக் காவலாளிகள்" என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும்!
1. ரோர்ஷாக்: உலகில் உள்ள
அழுக்கை எல்லாம் ஒருசேர விழுங்கி
விட்டது போல, அவன் உடலில் எப்போதும் வீசும் ஒரு நாற்றம்; உள்ளுக்குள்
உறைந்திருக்கும் பால்ய கால அவமானத்தை, சுற்றியிருக்கும் சமுதாயத்தின்
சீரழிவை அவன் முக உணர்வுகள் வெறுப்புடன் பிரதிபலிக்க, அதை அழகான சமச்சீர் கருப்பு வெள்ளை சித்திரங்களாக உருமாற்றிக் காட்டும் அவனது அந்த முகமூடித் தோற்றம்! அற்பப் பொருட்களையும், ஆயுதங்களாக மாற்ற வல்ல ரோர்ஷாக், நிழலுகத்தின் எமன்!
2. காமெடியன்: போர்க்களங்களில் புகழ் ஈட்டிய, மனிதத்தன்மை அற்ற, முரட்டு முகமூடி நாயகன் - அமெரிக்க அரசின் கையாள்! சக மனிதர்களின் பாசாங்குத்தனத்தை அடியோடு வெறுக்கும் அவன், உலகம் விரைவில் அழியப் போகிறது என்ற நிதர்சனம் புரிந்தவன்; அதுவே அவன் செயல்களிலும் பிரதிபலிக்கிறது - பேரழிவு!
3. டாக்டர் மன்ஹாட்டன்: 1959-ல் நடக்கும் ஒரு விபத்தில், அவனது உடல் அணு அணுவாகப் பிளவுண்டு போகிறது! மீண்டும் ஒன்றிணைந்து, நீல நிறத்தில் மறு உருப்பெறும் அவனுக்கு, அணுக்களை ஆட்டிப் படைத்து, பேரழிவைத் தூண்டும் சக்தி கிடைக்கிறது! உருவத்திலும், குணத்திலும் மற்றவர்களிடம் இருந்து விலகி நிற்கும் அவன், அமெரிக்காவின் முதல் சூப்பர் ஹீரோவாக அறிவிக்கப் படுகிறான்! சர்வபலம் கொண்ட அவனது வருகை, மற்ற முகமூடி நாயகர்களை பின்னுக்குத் தள்ளுகிறது! சுருக்கமாகச் சொன்னால், மன்ஹாட்டன் ஒரு நடமாடும் ஹைட்ரஜன் குண்டு!
4. நைட் அவ்ல் 2: சட்டத்தைப் பேணும் பணியை, முந்தைய தலைமுறை நைட் அவ்லிடம் இருந்து இரவல் பெற்று, அதை காலத்திற்கேற்ற மாற்றங்களுடன் தொடரும் - இரண்டாம் தலைமுறை நாயகன்! ஆந்தையைப் போன்ற ஆடை, இருளிலும் பார்க்கும் கண்ணாடி, நவீன ஆயுதங்கள் பொருத்திய பறக்கும் வாகனம் - இவற்றின் துணையுடன் நீதி காப்பவன் இந்த இரவு ஆந்தை!
ஆனால், 'வாட்ச்மென்' வழக்கமான சூப்பர் ஹீரோ கதையல்ல; ஒவ்வொரு பக்கத்திலும் அதிரடியை எதிர்பார்த்தால், படு மோசமாக ஏமாந்து போவீர்கள்! 20ம் நூற்றாண்டு அமெரிக்காவின், முக்கியம் வாய்ந்த அரசியல் மற்றும் வரலாற்று நிகழ்வுகளின் ஊடே, கற்பனையாக சூப்பர் ஹீரோக்களைப் புகுத்துவதால் நேரும் விளைவுகளைச் சொல்கிறது வாட்ச்மென்!
384 பக்கங்கள் கொண்ட வாட்ச்மென் கிராஃபிக் நாவலின் முழு வீச்சையும் உணர, அதன் வசனங்களையும், சித்திரங்களையும் உள்வாங்கி, நிறுத்தி நிதானமாகப் படிக்க வேண்டியிருக்கும். இந்த இரு பாகப் பதிவின் மூலம், இதன் முழுக்கதையையும் விரிவாக எழுதுவது என் நோக்கம் கிடையாது! மாறாக, non-linear ஆக பயணிக்கும் இந்தப் புத்தகத்தை படிக்க எண்ணி இருப்பவர்களுக்கு, இப்பதிவு ஒரு துவக்கப் புள்ளியாக உதவ வேண்டும் என்ற நோக்கில், எளியதொரு அறிமுகத்தைத் தந்திருக்கிறேன்! முடிந்த வரை Spoiler-களைத் தவிர்த்துள்ளேன்; விருப்பமிருந்தால் தொடர்ந்து படியுங்கள்!
1987-ல் வெளியான இந்த கிராஃபிக் நாவல், மொத்தம் 12 பாகங்கள் (12x32 பக்கங்கள்) கொண்டது; கதை, 1985-ல் துவங்கி, முன்னும் பின்னுமாக நகர்கிறது!
1938 - ஆக்ஷன் காமிக்ஸ் நிறுவனம், அமெரிக்காவின் முதல் சூப்பர் ஹீரோவை அறிமுகப் படுத்துகிறது - சூப்பர் மேன்! நிஜ வாழ்விலோ, முகமூடி அணிந்த பல நீதிக் காவலர்கள் ஆங்காங்கே முளைத்து, சட்டத்தைக் கையில் எடுக்கின்றனர்! பத்திரிக்கைகள் அவர்களின் புகழைப் பரப்புகின்றன... மக்கள் ஆராதிக்கின்றனர்... சமூக விரோதிகள் அஞ்சிப் பதுங்குகின்றனர்! அமெரிக்க அரசு, அவர்களில் சிலரை - WW2, வியட்நாம் ஆகிய பல போர்க்களங்களுக்கு அனுப்பி வைக்கிறது!
கதையின் மையக் கதாபாத்திரங்கள் மொத்தம் ஆறு பேர் தான்; அவர்களில் ஒரே ஒருவனைத் தவிர ஏனையோருக்கு, அற்புத சக்திகள் ஏதும் கிடையாது; அந்த ஐவரை, சூப்பர் ஹீரோக்கள் என்று அழைப்பதை விட, "முகமூடிக் காவலாளிகள்" என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும்!
இடமிருந்து வலமாக: சில்க் ஸ்பெக்டர், டாக்டர் மன்ஹாட்டன், நைட் அவ்ல் 2, காமெடியன், ஓசிமண்டியஸ் & ரோர்ஷாக் |
2. காமெடியன்: போர்க்களங்களில் புகழ் ஈட்டிய, மனிதத்தன்மை அற்ற, முரட்டு முகமூடி நாயகன் - அமெரிக்க அரசின் கையாள்! சக மனிதர்களின் பாசாங்குத்தனத்தை அடியோடு வெறுக்கும் அவன், உலகம் விரைவில் அழியப் போகிறது என்ற நிதர்சனம் புரிந்தவன்; அதுவே அவன் செயல்களிலும் பிரதிபலிக்கிறது - பேரழிவு!
3. டாக்டர் மன்ஹாட்டன்: 1959-ல் நடக்கும் ஒரு விபத்தில், அவனது உடல் அணு அணுவாகப் பிளவுண்டு போகிறது! மீண்டும் ஒன்றிணைந்து, நீல நிறத்தில் மறு உருப்பெறும் அவனுக்கு, அணுக்களை ஆட்டிப் படைத்து, பேரழிவைத் தூண்டும் சக்தி கிடைக்கிறது! உருவத்திலும், குணத்திலும் மற்றவர்களிடம் இருந்து விலகி நிற்கும் அவன், அமெரிக்காவின் முதல் சூப்பர் ஹீரோவாக அறிவிக்கப் படுகிறான்! சர்வபலம் கொண்ட அவனது வருகை, மற்ற முகமூடி நாயகர்களை பின்னுக்குத் தள்ளுகிறது! சுருக்கமாகச் சொன்னால், மன்ஹாட்டன் ஒரு நடமாடும் ஹைட்ரஜன் குண்டு!
4. நைட் அவ்ல் 2: சட்டத்தைப் பேணும் பணியை, முந்தைய தலைமுறை நைட் அவ்லிடம் இருந்து இரவல் பெற்று, அதை காலத்திற்கேற்ற மாற்றங்களுடன் தொடரும் - இரண்டாம் தலைமுறை நாயகன்! ஆந்தையைப் போன்ற ஆடை, இருளிலும் பார்க்கும் கண்ணாடி, நவீன ஆயுதங்கள் பொருத்திய பறக்கும் வாகனம் - இவற்றின் துணையுடன் நீதி காப்பவன் இந்த இரவு ஆந்தை!
5. சில்க் ஸ்பெக்டர் 2: தனது தாய் விட்டுச் சென்ற, குற்ற அழிப்புப் பணியை அரை மனதோடு தொடரும் நாயகி! ஒரு காலத்தில் அவளது தாய், காமெடியனால் கற்பழிக்கப் பட்டது அவள் மனதில் ஆறாத ரணமாக பதிந்து விடுகிறது! இவள், டாக்டர் மன்ஹாட்டனின் காதலி!
6. ஓசிமண்டியஸ்: "உலகின் அதி புத்திசாலி மனிதன்" என்று பெயர் எடுத்த முகமூடி நாயகன், மிக அழகானவனும் கூட! ஒரு கட்டத்தில், முகமூடியைக் களைந்து தன் அடையாளத்தை வெளிப்படுத்தும் அவன், பெரும் தொழிலதிபராக வளர்ச்சி அடைகிறான்! புத்திக் கூர்மையும், சண்டையிடும் திறமையும் ஒருசேர இணைந்தவன் - ஆபத்தானவன்!
வருடங்கள் உருள்கின்றன...
1977 - 'தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்' ஆனது போல; முகமூடி அணிந்தவரெல்லாம், சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டிருந்தனர்! இந்தப் போக்கை எதிர்த்து, காவல்துறை வேலை நிறுத்தம் செய்கிறது! சமூகத்தைக் காக்க வேண்டிய முகமூடிக் காவலாளிகளில், பல காவாலிகளும் கலந்திருப்பது கண்டு கொதிப்படையும் மக்கள், "கண்காணிப்பவர்களை, கண்காணிக்கப் போவது யார்?!" என போர்க்கொடி தூக்குகின்றனர்!
வேறுவழியின்றி, டாக்டர் மன்ஹாட்டன் மற்றும் காமெடியன் ஆகிய அரசாங்கத்துக்கு சாதகமான இரு நாயகர்களைத் தவிர, மற்ற அனைவரின் கைகளையும் கட்டிப் போடுகிறது அரசு! அனைவரும் முகமூடி துறந்து, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகின்றனர், ஒரே ஒருவனைத் தவிர - சட்டத்தை சட்டை செய்யாமல், தன் பாணியில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டும் மாநாயகன் ரோர்ஷாக்!
( அடுத்த பாகத்தில் முடியும்! )
Perhaps you would want to also mention that this story happens in a parallel DC universe - Comedian helps American victory in Vietnam in this book - in reality the US was thumped !
பதிலளிநீக்குநன்றி ராகவன்! ஏற்கனவே அதைப் பற்றி மேலோட்டமாகக் குறிப்பிட்டு இருக்கிறேனே?:
நீக்கு//20ம் நூற்றாண்டு அமெரிக்காவின், முக்கியம் வாய்ந்த அரசியல் மற்றும் வரலாற்று நிகழ்வுகளின் ஊடே, கற்பனையாக சூப்பர் ஹீரோக்களைப் புகுத்துவதால் நேரும் விளைவுகளைச் சொல்கிறது வாட்ச்மென்!//
நீங்கள் தான் ரியல் ஜூனியர் எடிட்டர் :-D
நீக்குஅன்பு நண்பர் காலரா,
நீக்குஐ மீன், "கா"மிக் "ல"வர் "ரா"கவன்!!! உங்களின் இந்த ஊமைக் குசும்பு "என்" உடம்புக்கு ஆகாது! :-D
வாட்ச்மென் பார்த்த டாயார்டே இன்னும் தீரவில்லை இதில் கிராப்பிக் நாவலா படம் பார்க சற்று வித்தியாசமா இருந்தது ஆனால்JLA நீனைவு படுத்துவதை மட்டும் என்னால் தவிர்க்க இயலவில்லை
பதிலளிநீக்குஒரு நாவலை படமாக எடுக்கும் போது திரைக்காக பல மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியம்! வாட்ச்மென் கி.நாவலின் ஒவ்வொரு பேனலையும் ஈயடிச்சான் காப்பி அடித்ததன் விளைவாக, கி.நா. வெற்றி பெற்ற அளவு திரைப்படம் ரசிகர்களைக் கவரவில்லையாம் கணேஷ்! புத்தகத்தைப் படித்துப் பாருங்கள் - ஒருவேளை பிடிக்கலாம்!
நீக்குஇந்தியர்களுக்கு இராமாயண, மகாபாரதக் காவியங்கள் எப்படியோ; அப்படித் தான், அமெரிக்கர்களுக்கு சூப்பர் ஹீரோ காமிக்ஸ்களும்! "
பதிலளிநீக்குமிக அருமையான ஒப்பீடு. இந்த ஒப்பீட்டை வைத்தே உளவியல்ரீதியான பல கட்டுரைகள் எழுதலாம் !
வாட்ச்மேன் கதை படித்ததில்லை. ஆனால் படம் பார்த்தேன். மற்ற மார்வெல் சூப்பர் ஹீரோ படங்கள் அளவுக்கு அது என்னை ஈர்க்கவில்லை என்பதே உண்மை !
நன்றி நண்பரே!
நீக்கு/\/\/\/\/\/\/\/\/\/\/\
நண்பர்களே,
இத்தொடரின் அடுத்த பாகம் ரெடி!