CZ12 - தள்ளி உட்கார்ந்து பார்த்த படம்!

என் வாழ்நாளில் மறக்க முடியாத படமாக அமைந்து விட்டது CZ12! அவ்வளவு நல்ல படமா என வாயைப் பிளக்க வேண்டாம், ஏன் என்று பிறகு சொல்கிறேன்! ஏதோ ஒரு புதிய ரக பைக் மாடல் போன்ற பெயர் கொண்ட இந்த ஜாக்கியின் படத்திற்கு அதிகம் எதிபார்ப்பில்லாமல்தான் போனேன்! சீன கலாச்சாரப் பாதுகாவலராக ஜாக்கி காட்டப்படுவது ஒன்றும் புதிதல்ல! இதிலும் அதே கதைதான், என்ன ஒன்று... கெட்டவராக இருந்து இறுதியில் நல்லவராக மாறுகிறார்!

200 வருடங்களுக்கு முன் ஆங்கிலேயர்கள் சீனாவில் இருந்து களவாண்ட 12 ராசி முத்திரைத் தலைகளை (Chinese Zodiac 12!) தேடும் படலத்தில், ஒரு தகிடுதத்த அரும்பொருள் ஏல நிறுவனத்தின் சார்பில் கூலிக்கு களமிறங்குகிறார் ஜாக்கி!

மாண்டரினில் சப்-டைட்டில் கூட இல்லாமல், நடு நடுவில் ஏல எதிர்ப்பு டயலாக்குகள் அடிக்கும் ஒரு அரும்பொருள் ஆய்வாளினி, அப்புறம் அப்பொருட்களை களவாடிய கேப்டனின் எள்ளுப் பேத்தி இவர்களையும், இன்னும் சிலரையும் தள்ளிக்கொண்டு ஒரு பாழடைந்த(!) தீவில் கோமாளி வில்லன்களுடன், காமெடி சண்டை போட்டுக்கொண்டே புதையல் வேட்டை நடத்துகிறார்.

இறுதியில் ஒவ்வொரு நாடும், பிற நாடுகளில் இருந்து களவாண்ட அரும்பொருட்களை அந்தந்த நாடுகளுக்கே திருப்பித் தந்து விட வேண்டும் என்ற ரீதியில் கொடி தூக்கி நல்லவராகிறார்! இவ்ளோதான் சார், CZ12-இன் டோட்டல் ஸ்பெஸிபிஃகேஷன்!

ஜாக்கி அந்த ஊர் (விஜய) டி.ஆர். போல! கதை(!) எழுதி(!), இயக்கி(!), தயாரிக்கவும் செய்திருக்கிறார்!!! :) கொஞ்சம் அசந்திருந்தால் கமல் ஸ்டைலில் படம் முழுவதும் துணை நடிகர்கள் வேடங்களிலும் இவரே வந்திருப்பாரோ என நினைக்கத் தோன்றியது! கதையிலும், டைரக்ஷனிலும் சொதப்பியிருந்தாலும் ஆக்ஷன் காட்சிகளில் மனிதர் பின்னுகிறார்! முந்தைய அளவுக்கு இல்லையென்றாலும் அவருடைய வயதையும் நாம் இங்கு கணக்கில் கொண்டாகவேண்டும்!

நச்சென்று நாலைந்து காட்சிகள்; உதாரணத்திற்கு ஜாக்கி சான் - Roller Blade Suit உதவியுடன் தப்புவது; நாய்களுடன் பாராஷூட் 'பற பற' காமெடி; சோஃபா சண்டை; இறுதி ஸ்கைடைவிங் சண்டை; என அக்மார்க் ஜாக்கி ஆக்ஷன் :) மேற்சொன்ன Roller Blade Suit சங்கதி கிராபிக்ஸ் வித்தை என நினைத்திருந்த நான், அப்படி ஒரு வஸ்து நிஜத்தில் இருப்பது கண்டு (கீழே!) வியந்தேன்! ஜாக்கி இதில் முறையாக பயிற்சி பெற்றாராம்!
.
 
 .
கொஞ்சம் மொக்கை ரகம்தான் என்றாலும், ஜாக்கி ரசிகர்கள் தயங்காமல் இப்படத்தை பார்க்கலாம்! கடந்த 10 வருடங்களில் வெளியான ஜாக்கியின் மற்ற படங்களோடு ஒப்பிட்டால் இந்தப் படம் 12 மடங்கு தேவலாம் (கராத்தே கிட் நீங்கலாக)! அநேகமாக இதுவே ஜாக்கியின் கடைசி ஆக்ஷன் படமாக இருக்கக் கூடும் என்ற செய்தியும் இந்தப் படத்தை பார்க்கத் தூண்டியது என்றே சொல்ல வேண்டும்! ஜாக்கி பற்றிய என் இள வயது நினைவுகளை இங்கே காணலாம்: ஜாக்கி சான் - அதிரடி ஆசான்!

இந்த பட விமர்சனத்தை விட, எந்த நிலைமையில் நான் இந்தப் படத்தை பார்த்தேன் என்பது குறித்த 'அறுவை (சிகிச்சை) பதிவு' ஒருவேளை உங்களுக்கு சுவாரசியமானதாக இருக்கலாம்! நினைவில் நீங்கா படமாக CZ12 அமைந்ததிற்கு இதுவே காரணம்! :) தள்ளி உட்கார்ந்து பார்த்தது ஏன் என்பதற்கான விடையும் இந்தப் பதிவிலேயே இருக்கிறது! :) :)

ஐ.பொ.12:
நம்மூரிலும்தான் ஐம்பொன் சிலைகள் அடிக்கடி காணாமல் போகின்றன, இதை வைத்து யாராவது சீரியசாக படம் பண்ணினால் என்ன?! :)

கருத்துகள்

 1. இன்னும் ஆபரேசன் தியேட்டரிலிருந்தே நாங்க வெளியே வரல, அதற்குள் அடுத்த பதிவைப் போட்டா எப்படி?! :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆபரேஷன் தியேட்டருக்கு ஏற்கனவே பதிவு போட்டாச்சு! இது சினிமா தியேட்டருக்கான பதிவு! ;)

   நீக்கு
 2. நண்பர் சிபி முந்தி கொண்டார் :(

  இன்னும் படம் பார்க்கவில்லை. ஜாக்கியின் கடைசி 'ACTION' படம் என்பதால் இதை தியேட்டர் சென்று பார்க்கலாம் என உள்ளேன்.

  வீட்டில் பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு சென்று விட்டதால் (!) நாளை அல்லது நாளை மறுநாள் பார்த்து விடுவேன்.

  எப்படி இருந்தாலும் இது நண்பர் கார்த்திக்கு மறக்க (?) முடியாத படமாக இருக்கும் :)

  சிபி: வரும் சனி அல்லது ஞாயிறு நான் திருப்பூர் வருவேன். நீங்கள் ப்ரீ என்றால் உங்களை சந்திக்க முடியுமா ? கார்த்திக் நீங்களும் பொங்கலுக்கு உங்களது மகனின் தாத்தா ஊருக்கு வருகிறீர்களா ?


  திருப்பூர் ப்ளுபெர்ரி  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட கமெண்ட் டைப் அடிக்கிறதுக்குள்ள இளைய தளபதி முந்தி விட்டார் :)

   நீக்கு
  2. இந்த வாரம் தூக்கிவிடுவார்கள் என நினைக்கிறேன், சீக்கிரம் பார்த்து விடுங்கள்! :)

   நானும் ஞாயிறு அன்று அநேகமாக திருப்பூரில் இருப்பேன்! பொங்கலுக்கு இங்கே நோ லீவ்! :) ஞாயிறு இரவு பேக் டு பெங்களூர்! :)

   நீக்கு
  3. உள்ளேன் ஐயா ;-)

   தங்களை சந்திக்க ஆவலாக இருக்கின்றேன் நண்பர்களே

   எனது Mobile No.: 94425 24972

   Expecting your calls Buddys

   நீக்கு
  4. :) சனி அல்லது ஞாயிறு திருப்பூர் வந்ததும் தொடர்பு கொள்கிறேன்! நன்றி! உங்கள் அன்பை காமிக்ஸ் புத்தகங்களாகவும் பெற்றுக்கொள்ள தயாராகவே உள்ளேன்! ;)

   நீக்கு
  5. சிபி & கார்த்தி: நன்று! ஞாயிறு அன்று சந்திக்க முயற்சிப்போம்.


   நீக்கு
  6. சிபி, கார்த்திக் & ப்ளூபெர்ரி :

   சந்திப்பு இனிமையாக அமைய வாழ்த்துக்கள்! :)

   @ கார்த்திக்:
   முடிஞ்சா இந்த சந்திப்பையும் ஒரு பதிவாக்கிடுங்களேன்! 3 பேருமே படுஜாலியான ஆசாமிகள் என்பதால் கொண்டாட்டங்களுக்கு பஞ்சமே இராது. :)

   நீக்கு
  7. @Erode VIJAY: சந்தித்தால், விவரங்கள் காமிக்ஸ் சார்ந்த ஒரு பதிவில் இடம் பெறும்!!! :)

   நீக்கு
 3. நான் கோடா ஜாக்கி ரசிகன் தான்... நிச்சயம் படம் விடுகிறேன் எனது கணினியில். ஸ்பேசிபிகேசன் நீங்க சொல்லி விட்டதால் கொஞ்சம் குழம்பாமல் பார்ப்பேன் என்று நினைக்கிறன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜாக்கி படத்தில் குழம்பும் அளவுக்கு மேட்டர் இருக்காது! சும்மா ஜாலியா பாக்கலாம் நண்பா! :)

   நீக்கு
 4. அந்த அறுவை பதிவுக்கு என்னா ஒரு விளம்பரம்???

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹி ஹி :) ஒரு பயலையும் விடக்கூடாது, எல்லாரும் படிச்சே ஆவணும்! :)

   நீக்கு
  2. அல்லது படிச்சே சாவனும்! :)

   நீக்கு
  3. பயந்தே சாவணும்னா வீடியோ க்ளிப் போட்டிருக்கலாம். க்ளோஸ்-அப் பில். உங்க முகத்தைக் காட்டினாக்கூட போதும்! :-D

   நீக்கு
  4. விரைவில் ஒரு வீடியோ பதிவு! :)

   நீக்கு
  5. முன்னாடியா பின்னாடியா ;-)
   .

   நீக்கு
  6. மன்னிக்கவும் இப்படிக்கா படிக்கவும்

   முன்னாடிக்கா எடுத்ததா அல்லது பின்னாடிக்கா எடுத்ததா ;-)
   .

   நீக்கு
  7. நீங்க நினைக்கற மாதிரியான வீடியோ கெடையாது! ;) ஒரு டெக்னிகல் பதிவு அவ்வளவே!

   நீக்கு
 5. பதில்கள்
  1. இல்லை :) அநேகமாக மரணத்தின் நிசப்தம்!!! உங்கள் கமெண்ட் மட்டும் ஒவ்வொரு தடவையும் ஸ்பாமில் சென்று விடுகிறது! ஏன் என தெரியவில்லை!!!

   நீக்கு
 6. பரீட்சை முடிந்ததும் பார்க்க வேண்டும்! :-)

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia