சிக்கலில் சிக்கிய பதிவர்!

எச்சரிக்கை: இது ஒரு (விரசமில்லாத) அடல்ட்ஸ் ஒன்லி பதிவு! நியூ இயரை, ஹாஸ்பிடல் படுக்கையில், படுத்துக்கொண்டே கொண்டாடும் பாக்கியம் அனைவருக்கும் வாய்த்து விடுவதில்லை; எனக்கு வாய்த்தது! :) எந்தப் பிரச்சினையில் வேண்டுமானாலும் சிக்கலாம், ஆனால் மலச்சிக்கலில் மட்டும் சிக்கி விடாதீர்கள்; நான் சிக்கினேன்!! :) :) ஒரு வருடத்திற்கும் மேலாக அவ்வப்போது வால் காட்டி வந்த இந்தப் பிரச்சினை கடந்த வருடத்தின் கடைசி நாள் ஒரேடியாக வாலாட்டி விட்டது!!! இதை எல்லாம் ஒரு பதிவாக எழுதுவதா என்று சங்கடமாக இருந்தாலும், நகைச்சுவை கலந்ததொரு விழிப்புணர்ச்சி பதிவு என்ற நோக்கில் மட்டும் இதை நோக்கவும்! :) கொஞ்சம் Taboo ரகப் பதிவு என்பதால்தான் இந்த 'A' சர்டிபிகேட்! :)

30ம் தேதி இரவு, இடுப்புக்கு கீழே, ஆசன வாய்க்கு சற்று மேலே, சின்னதாய் ஒரு கொப்புளம் தோன்ற, சரி... சூடு, சூ*து வரை ஏறி (இறங்கி?) விட்டது போல என பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை! ஆனால் காலையில் எழுந்த போது லேசாகத் தோன்றிய வலி, மாலையில் அதிகரிக்கத் தொடங்கியது! அன்று ஞாயிறு என்பதால் இனியும் தாமதிக்க வேண்டாம் என உடனே வண்டியைக் கிளப்பினேன். டிக்கெட்டை வாங்கிக் கொண்டு உள்ளே ஓடினால், நல்லவேளை CZ12 படம் இன்னமும் துவங்கியிருக்கவில்லை. :) :) :) ஜாக்கிசான் புண்ணியத்தில் ஓரளவு வலி தெரியாமல் சில மணி நேரங்கள் ஓடின!

31ம் தேதி காலையில், கொப்புள வலி தாளாமல், முந்தைய நாள் டாக்டரிடம் செல்லாமல் படத்திற்கு சென்ற என் சூ**க் கொழுப்பை நொந்து கொண்டு, காதல் பரத்தைப் போல ஒரு சைடாக அமர்ந்து, ஹாஸ்பிடல் இருக்கும் திசையில் பைக்கை விரட்டினேன்! நீண்ட காத்திருப்புக்குப் பின்னர், என் டோக்கன் நம்பரை அழைத்தார்கள். ஒரு மணி நேரம் ஒருக்களித்து உட்கார்ந்த கடுப்பில் உள்ளே நுழைந்தேன்.

'உட்காரும் இடத்தில் கட்டி' என்ற மேட்டரை டாக்டரிடம் பக்குவமாக எடுத்துச் சொன்னதும், திரும்பிப் படுக்கச் சொல்லி 'கழட்டு உன் ஜட்டி' என்றார்! :) பார்த்ததும் 'இது Perianal Abscess' என்றார்! 'மலச்சிக்கல் காரணமா?' என கேட்டதிற்கு;  'இருக்கலாம், இன்பெக்ஷன் ஆகி இருக்கிறது, மைனர் சர்ஜரி செய்துதான் அகற்ற வேண்டும்' என்றார்! முகப்பரு அளவில் இருக்கும் கொப்புளத்தை நசுக்க சர்ஜரியா என்று பதறினேன்! அவர், 'நானே கூட இதை கட் செய்து விடலாம், ஆனால் இந்த இன்பெக்ஷன் ஆசன வாய்க்கு - ஒரு கால்வாய் அமைத்துப் பரவினால் பிறகு காம்ப்ளிகேஷன் ஆகி விடும்! ஒரு சர்ஜன் மூலம் இதை அகற்றுவதுதான் சிறந்தது - உடனே அட்மிட் ஆகுங்கள்' என்றார்.

பிறந்த சமயத்தைத் தவிர்த்து, 34 வருடங்கள் நான் வாழ்ந்த(!) வாழ்க்கையில் இதுவரை ஹாஸ்பிடலில் ஒரு சமயம் கூட அட்மிட் ஆனதில்லை! அந்த பெருமையை எப்படி விட்டுத் தருவது என்ற வீராப்பிலும், கொசு சைஸ் கொப்புளத்திற்கு சர்ஜரியா என்ற சந்தேகத்திலும், அப்படியே எழுத்து போய் விடலாமா என்ற யோசனை ஓடிக்கொண்டிருந்த போது, என்னென்ன காம்ப்ளிகேஷன் ஆகலாம் என்பதை டாக்டர் விலாவரியாக விளக்கவும், முடிவை மாற்றிக் கொண்டு வீட்டில் சொல்லி விட்டு அட்மிட் ஆனேன்.

மனைவியும், மகனும் தற்சமயம் திருப்பூரில் இருப்பதால் அண்ணன் உடனிருந்தார். அந்த வசதியான ஹாஸ்பிடல் ரூமில் வந்து படுத்ததும் - ப்ளட் டெஸ்டுக்கு சாம்பிள் எடுத்துக்கொண்டு போனார்கள், ட்ரிப் ஏற்றுவதற்கு கையில் IV குத்தி வைத்தார்கள். அப்புறம் எதை எதையோ அதன் வாயிலாக ஏற்ற ஆரம்பிக்கவும் ஒரு நோயாளி கெட்டப் தானாக வந்து விட்டது! :) நல்லவேளையாக ரிப்போர்ட் ஓகே என வந்தது (தைராய்ட், ப்ளட் சுகர், யூரியா இத்யாதி இத்யாதி!).

ஐந்து மணிக்கு ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் சென்றபோது, 'கலக்குறே கார்த்தி, நேத்து சினிமா தியேட்டர், இன்னிக்கு ஆபரேஷன் தியேட்டர்!' என்று மனதில் பன்ச் அடித்தவாறே, அது வரை சினிமாவில் மட்டுமே பார்த்திருந்த ஆபரேஷன் தியேட்டரை முதன் முறையாக நேரில் பார்த்தேன்! சர்ஜனின் அசிஸ்டெண்டுகள் வேக வேகமாக என் முன்புறத் துணியை விலக்க எத்தனிக்க, கொப்புளத்தை நசுக்காமல், வேறு எதையாவது நசுக்கி விடுவார்களோ என்ற பயத்தில் - 'பின்னாடி, பின்னாடி' என்று பதறியவாறு திரும்பிப் படுத்தேன்!

பார்த்து விட்டு, ரொம்ப சின்னதுதான் என்று அவர்கள் கருத்து சொல்லவும் 'ஹப்பாடா' என்று இருந்தது! ஐந்து நிமிடங்கள் கழித்து வந்த சர்ஜன், லோக்கல் அனெஷ்தீஷியா கொடுத்து கொப்புளத்தின் அளவை விட சற்று பெரிதாக அறுத்து, சீழை வெளியேற்றப் போவதாகச் சொல்லிக் கொண்டே 'கொப்புளம் மீண்டும் வரலாம்' என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்! பகீரென திகிலடிக்க, 'மீண்டுமா?' என கவலையுடன் கேட்டேன்! 'வரலாம், வராமலும் போகலாம்' என்றார்! 'இதை இப்பவே அவசியமா சொல்லணுமா?!' என மனதில் திட்டியவாறு முறைத்தேன்!

'சின்ன இன்ஜெக்ஷன்தான் பொறுத்துக்கங்க' என்றவாறே சதக் என்று என் குதத்திற்கு அருகே குத்தினார். 'அம்' என்று ஆரம்பித்து 'ம்மா...ஆஆஆஆஆஆஆ' என்று அலறினேன். 'சின்னதா இன்னொன்னு' என்று இன்னொரு குதத்தையும் பதம் பார்த்தார் சர்ஜன்! கொப்புளத்தை கத்தியால் சின்னதாய் கீறி, ஏதோ ஒரு திரவத்தை ஊற்றி சுத்தப்படுத்தி விட்டு இரண்டே நிமிடங்களில் சர்ஜரி முடிந்தது என்று நிமிந்தார்! லோக்கல் அனெஷ்தீஷியா என்றுதான் பெயர்; ஆனால் வலியும், அரை மயக்கமும் என்னைச் சூழ்ந்தன!

மயக்கம் தெளிந்தபோது அட்மிட் ஆன ஹாஸ்பிடல் ரூமில் படுக்க வைக்கப்பட்டிருந்தேன், வலி பறந்திருந்தது! ரௌண்ட்ஸூக்கு வந்திருந்த டாக்டர், ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகலாம் எனக் கூறினார். 'கொப்புளம் மீண்டும் வருமா?' என்று கேட்டதிற்கு 'வராது, நீங்கள் தாமதமாக வந்திருந்தால்தான் காம்ப்ளிகேஷன் ஆகி மீண்டும் வர வாய்ப்புகள் அதிகரித்திருக்கும் என்றார். அறுபட்ட இடம் ஆறும் வரை அடிக்கடி SITZ Bath எடுங்கள் என்று சொல்லி (அதாவது வெதுநீரில் பின்புறத்தை சில நிமிடங்கள்  ஊறப் போடுவது!); பெயின் கில்லர், ஆன்டிபயாடிக் & மலமிளக்கி இவற்றை கேஸ் ஷீட்டில் எழுதி வைத்துவிட்டு 'அட்வான்ஸ் நியூ இயர் விஷஸ்' சொல்லி நகர்ந்தார்!

புத்தாண்டு எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஆஸ்பத்திரி படுக்கையில் ஆன்டிபயாடிக் ட்ரிப்ஸுடன் கழிந்தது! காலையில் என்னாச்சி? என்று நலம் விசாரித்த நண்பர்களிடம், 'ப்ளேடுக்கு சர்ஜரி ஆச்சு' என்று மொக்கை பன்ச் அடித்தேன் :) அந்த ரணகளத்திலும் மொபைல் மூலம் பல்வேறு பேஸ்புக் குழுமங்களில் லைட்டாக கும்மி அடித்தது ஒரு தனி அனுபவம் - தொட்டில் பழக்கம், ஹாஸ்பிடல் கட்டில் வரைக்கும்! :)

மறுநாள் இரவு வீடு திரும்பியதும், சில FB குழுமங்களிலும், வலைப்பூக்களிலும் கீழ்க்கண்ட ரீதியில் ஒரு மொக்கை ஸ்டேட்டஸ் போட்டேன்:

என்னாச்சி?!
ஓ, நியூ இயரா?!
வாழ்த்த மறந்துட்டேனா?!
நண்பர்களுக்கு தாமதமான ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! :) :) :)

பி.கு. 1: Perianal Abscess விக்கி இணைப்பு மற்றும் இதர மருத்துவ இணையத் தளங்களை ஆராய்ந்ததில், டாக்டர் சர்ஜரி செய்ய வேண்டும் என எடுத்த முடிவு மிகச் சரியான ஒன்று என்பதை அறிந்து ஆறுதல் அடைந்தேன்!!! :) இணையம் துணையிருக்கும் வரை நாமும் அரை(குறை) டாக்டர்தானே?! ;)

பி.கு. 2: நான் விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன்! ;)

கருத்துகள்

  1. கஷ்டபட்டதை "பின்"னனி தகவலுடன் ஜாலியா சொல்லியிருக்கிங்க. . . நலம் பெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா, 'பின்'னூட்டமே 'பின்'னுதே!!! ;) நன்றி ராஜா!

      நீக்கு
  2. சூ****ர் பதிவு கார்த்திக்.
    உங்களுடைய வலியிலும் எங்களுக்கு விழிப்புணர்ச்சிக்காக ஒரு நகைச்சுவை பதிவு அருமை
    இதற்காக உங்கள் சூ*து பணால ஆனது தான் வருத்தம்

    Get Well Soon.

    பதிலளிநீக்கு
  3. ஹை ஜாலி ஜாலி ! :)
    ஜாக்கி படத்துல ரோடெல்லாம் பின்னாடி தேச்சிகிட்டே வந்ததால உங்களுக்கும் அங்க சூடு அதிகமாயடுச்சா. :-D

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஹை ஜாலி ஜாலி ! :)//
      மவனே, கையில சிக்குனே.... :)

      நீக்கு
    2. அந்த பயம் இருக்கணும், ஆமா! :)

      நீக்கு
    3. உங்கள் பதிவு சில நாட்கள் காணாமல் போனதற்கு பின்னால் இப்படி ஒரு பின் விளைவுதான் காரணமாக இருந்ததா? மறுபடியும் பின்னால் வராமல் முன்னெச்சரிககையாக இருக்கவும். take care

      நீக்கு
    4. @Stalin:
      வந்த'பின்' காப்போன்! :)

      நீக்கு
  4. // பார்த்துவிட்டு, ரொம்பச் சின்னதுதான் என்று அவர்கள் கருத்துச் சொல்லவும்//

    அவர்கள் கருத்துச் சொன்னது கொப்புளத்தைப் பற்றித்தான் என்பதை இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்லியிருக்கலாம். :-D

    மற்றபடி, உயிர் நண்பர்களிடமே சொல்லத் தயங்கும் விஷயங்களை இன்டர்நெட்டில் ஏற்றுவதெற்கெல்லாம் அசாத்திய தைரியம் வேண்டும்.

    மலச்சிக்கல் வராமல் தடுக்க (உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்) சில டிப்ஸ் :

    * மாவுச்சத்துள்ள பொருட்களை கொஞ்சம் தவிர்த்துவிட்டு, நார்சத்து மிகுந்த (fibre) உணவுகளான பழவகைகள், ஓட்ஸ், கோதுமை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
    * கொய்யாப் பழம் ஒரு மிகச்சிறந்த மலமிழக்கி.
    * போதுமான அளவு தண்ணீர் அருந்துவது நல்லது
    * எண்ணெயில் பொறித்த ஐட்டங்களை முடிந்த அளவு குறைத்துக் கொள்வது நல்லது
    * அதிகம் தூக்கம் விழித்தல், Stress ஆகியவை பல/ மலச் சிக்கல்களுக்கு அழைப்பு விடுக்கும்.
    * நன்றாகப் பசித்துச் சாப்பிடுவதும், சாப்பிடுவதை நன்றாக மென்று திண்பதும் (உமிழ் நீரிலுள்ள என்சய்ம்ஸ் செரிமானத்திற்குப் பெரிதும் உதவுவதால்) ஆகிய இரு வழிமுறைகளை தவறாது கடைபிடித்தால் மேற்சொன்ன எந்த டிப்ஸும் தேவைப்படாது. :)


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அவர்கள் கருத்துச் சொன்னது கொப்புளத்தைப் பற்றித்தான் என்பதை இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்லியிருக்கலாம். :-D//
      அடப்பாவி, பேட் பாய்! :) அதற்கு முந்தைய வரியை தெளிவாய் படித்திருந்தால் உமக்கு இந்த குழப்பம் நேர்ந்திராது! ;)

      //உயிர் நண்பர்களிடமே சொல்லத் தயங்கும் விஷயங்களை//
      எழுத சங்கடமாகத்தான் இருந்தது! 'மலச்சிக்கல், நக்கல் அடித்து நகைக்கும் விஷயம் அல்ல உடனே கவனியுங்கள்!' என்ற சேதி சூ**ல் அடித்தாற் போல வாசகர்களை அடைய வேண்டும் என்பதே என் எண்ணம்! :) :) :)

      டிப்ஸுக்கு நன்றி, ஏற்கனவே தெரிந்து உதாசீனப்படுத்தியவைதான்! 'டிரிப்ஸ்' ஏற்றிய அனுபவம் இப்போது கிட்டியிருப்பதால், இனி சின்சியராக கடைபிடித்தே தீர வேண்டும்! :D

      நீக்கு
    2. கெட் வெல் சூ* கார்த்திக்! :)

      நீக்கு
    3. :)
      கனவில் தேவதைகள் வந்து சாமரம் வீச வசதியாக, குப்புறப் படுத்துத் தூங்குங்கள் கார்த்திக் :)

      நீக்கு
  5. // நான் விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன்! ;) //

    இதை நான் 'வலி'மொழிகிறேன் ...

    Take Care Karthi ...





    பதிலளிநீக்கு
  6. //சர்ஜனின் அசிஸ்டெண்டுகள் வேக வேகமாக என் முன்புறத் துணியை விலக்க எத்தனிக்க, கொப்புளத்தை நசுக்காமல், வேறு எதையாவது நசுக்கி விடுவார்களோ என்ற பயத்தில் - 'பின்னாடி, பின்னாடி' என்று பதறியவாறு திரும்பிப் படுத்தேன்! //

    கார்த்திக் இங்க நிக்கிறான்யா :D . உங்க ஸ்பெஷல் பஞ்ச் இதுதான். சிரிப்பை அடக்க முடியவில்லை.

    சிக்கலில் சிக்கினாலும் எங்களை சிரிக்க வைக்கும் சீரிய பண்பு சிறப்பு. சீனாவுக்கு சீனா :D

    //Anal abscesses, unfortunately, cannot be treated by a simple course of antibiotics or other medications. Even small abscesses will need the attention of a surgeon immediately. Treatment is possible in an emergency room under local anesthesia, but it is highly preferred to be formally admitted to a hospital and to have the surgery performed in an operating room under general anesthesia.//

    உங்கள் அட்மிட் ஆகலாமா வேணாமா என்ற குழப்பத்தை இந்த ஒரு பத்தியே தீர்த்திருக்கும்.





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்தனையோ நல்ல, கெட்ட விஷயங்கள் பதிவுல இருக்க உங்களுக்கும், விஜய்க்கும் இந்த வரிகள் மட்டும் ரொம்ப கவர்ந்திருக்கு போல! ;) நடக்கட்டும், நடக்கட்டும்! :D

      சர்ஜரி முடிந்த பின்தான் அந்த விக்கி லிங்க் எல்லாம் படித்துப் பார்த்தேன்!!!

      //சிக்கலில் சிக்கினாலும் எங்களை சிரிக்க வைக்கும் சீரிய பண்பு சிறப்பு. சீனாவுக்கு சீனா :D//
      தங்கக் கல்லறை எபெக்ட்டா?! விரைவில் லயன் மொழிபெயர்ப்பாளராக மிளிர வாழ்த்துக்கள்! :) :)

      நீக்கு
    2. எனக்கும் உங்களைபோல இந்த இடத்தில் படிக்கும் பொழுது வாய்விட்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை
      அங்க தான் நீங்க நிக்குறீங்க நண்பரே :))
      .

      நீக்கு
  7. சீக்கிரம் ஒழுங்காக உட்க்கார ஆண்டவனிடம் வேண்டுகிறேன்.

    ஈரோட் விஜய் சொன்ன டிப்ஸ் மாதிரியே ஒரு டிப்ஸ் : இரவில் ஒரு கவளம் வெந்தயத்தை தண்ணீருடன் சேர்த்து விழுங்கலாம். காலையில் மோருடன் சேர்த்து விழுங்கினால் சூடும், சிக்கலும் குறைவதை உணர்ந்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தக்கனூண்டு சர்ஜரி என்பதால் உட்காருவதில் சிரமம் ஏதும் இல்லை! :)

      வெந்தயத்தை நினைத்தாலே கசக்குதே!!!

      நீக்கு
  8. //அதிகம் தூக்கம் விழித்தல், Stress ஆகியவை பல/ மலச் சிக்கல்களுக்கு அழைப்பு விடுக்கும் //

    உண்மை நண்பரே ... நானும் இந்த விசயத்தில் சிறிது அலட்சியமாகத்தான் உள்ளேன் ... மாற்றி கொள்ள வேண்டும் :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தூக்கம் குறித்த இந்த அருமையான டிப்ஸை நள்ளிரவு எத்தனை மணிக்கு மனிதர் அடித்திருக்கிறார் என்பதை கவனித்தீர்களா?! ;)

      நீக்கு
    2. அலோ மிஸ்டர் பதிவர்ஸ்,
      'அறிவுரையெல்லாம் அடுத்தவர்க்கே'னு ஒளவையார் காலத்திலேர்ந்து சொல்லிட்டிருக்காங்களே, அதுகூடவா தெரியலை?!! :)

      நீக்கு
    3. அறிவுரை அடுத்தவர்க்கு, அறுவை சிகிச்சை எனக்கு என்கிறீர்களா?! ;)

      நீக்கு
    4. விதி அப்படித்தான் இருக்கும்னா எல்லோரும் ஒருநாள் குப்புறப் படுத்துதானே ஆகனும்! :)

      சரி, எதுக்கும் இப்பயிருந்தே 'காதல்' பட பரத் ஸ்டைலில் வண்டியோட்டியும், எங்கே உட்கார்ந்தாலும் ஒரு 'சைடா' பேலன்ஸ் பண்ணவும் ப்ராக்டீஸ் ஆரம்பிச்சுடுறேன்.

      ஹம்...  எதுக்கெல்லாம் ப்ராக்டீஸ் பண்ணவேண்டியிருக்கு பாருங்க!

      ஒரு நிமிடம்...  ஐயய்யோ 'அந்த' இடத்தில் லேசா ஒரு வலி ஆரம்பிக்குதே...

      நீக்கு
    5. ஆனால் ஒரு சந்தோசம் என்னவென்றால், நமக்கு சீனியர் இருக்காங்க என்பதே !!!!

      இப்போ பல் வலி வந்து பல் பிடுங்க போனால், ஒரு தடவை "பல் பிடுங்கிய பதிவர்" படித்தால் ஒரு சந்தோசம் வரும் !!! நமக்கு சீனியர் இருக்காங்க :)

      நீக்கு
    6. இனி உடம்பின் ஒவ்வொரு பார்ட் பழுதாகும் போதும் புதுப் புது பதிவுகள் வரும்! ;) சந்தோசமா இருங்க! ;)

      @Vijay:
      //ஹம்... எதுக்கெல்லாம் ப்ராக்டீஸ் பண்ணவேண்டியிருக்கு பாருங்க!//
      :) :)

      நீக்கு
    7. ப்ளுபெர்ரி:
      அவர் முன்னாலே போனா, நாம 'பின்'னாலே போலாங்கறீங்க!

      மக்களே, இரவுக் கழுகுகளே,

      இப்பவே எல்லோரும் ஒரு ஸைடா பேலன்ஸ் பண்ணி உட்காரக் கத்துக்கங்க. 'பின்'னொரு காலத்தில் சுளுவா இருக்கும்.

      (என்ன கொடுமைனா, நம்ம ஆளுங்கள்ல பலபேர் 'இரண்டிலும்' பேலன்ஸ் பண்ணி உட்கார்ந்தாலே தடுமாறிப்போய்டுவாங்க. ஒன்னை வச்சு எப்படிதான் சமாளிக்கப் போறாங்களோ! ) :-(

      நீக்கு
  9. அடடா தாமதமான வாழ்த்துக்கு இதுதான் காரணமா..,

    பிளேடையே கிழித்த அந்த டாக்குடரை நினைத்து பெருமையடைகிறேன்..,

    உங்கள் நிலை கண்டு (கேட்டு) வருந்துகிறேன்!

    பதிலளிநீக்கு
  10. மறுபடியும் இதுபோல் நிகழாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக :))
    .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் கெஞ்சிக் கூத்தாடி வேண்டிக் கொள்கிறேன்! :)

      நீக்கு
  11. பின்னொரு காலத்தில் இந்த பதிவை உங்கள் குழந்தை (அப்போது வளர்ந்திருக்கும்) படிக்க நேர்ந்தால் உங்களிடம் வந்து என்ன கேக்கும்?

    "முன்னாடி பின்னாடி என்ன இருந்துது"
    "முன்னாடி இருந்துது. இப்போ இல்ல. பின்னாடி"
    "பின்னாடி என்ன இருந்தது"
    "முன்னாடி இருந்தது"
    "முன்னாடி என்ன இருந்தது?"
    "முன்னாடி இப்போவும் இருக்கு"

    கெட் வெல் க்விக் மேட் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிபி & காமிக் லவர்:

      ஓ! நீங்க கார்த்திக்கை தேடரீங்களா? அவரு ஆபரேசன் முடிஞ்சு அப்பவே கிளம்பிட்டாரே!
      ஏதோ ஜாக்கிசான் படத்தைப் பற்றி விமர்சனம் எழுதனுமாம்; முனகிட்டே நொண்டி நொண்டி நடந்துபோனாரு.

      நீக்கு
    2. @Comic Lover:
      //முன்னாடி இப்போவும் இருக்கு//
      :) :) :)

      முதல் வருகையிலே கொஞ்சம் முன்னாடி பின்னாடி பேசி விட்டீர்கள்! ;)

      நீக்கு
    3. @Erode Vijay:
      //நொண்டி நொண்டி நடந்துபோனாரு//
      நக்கலு?! :) நீங்கள் மட்டும் என் கையில் சிக்கினால், நேரடியாக உங்களுக்கு கு.க. ஆபரேஷன்தான்! ;)
      ...
      ...
      ...
      கு.க. ஆபரேஷன்: குசும்பைக் கட்டுப்படுத்தும் ஆபரேஷன்' என்று அர்த்தம் கொள்ளவும்!

      நீக்கு
  12. //சூ**க் கொழுப்பை நொந்து கொண்டு// சூட்டுக் கொழுப்பை என்று படித்தால் என்னை நல்லவனாக அவதானிக்க வேண்டுகிறேன்....

    சீக்கிரம் நலம் பெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் சூட்டுக் கொழுப்புங்கற அர்த்தத்தில்தான் எழுதுனேன்! ;) நாம ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்க பாஸூ! ஆனா மத்தவங்க பின்னூட்டம் ஒவ்வொண்ணையும் பாருங்க, எல்லாம் கெட்ட பசங்க! :)

      //சீக்கிரம் நலம் பெற வாழ்த்துக்கள் //
      நன்றி!

      நீக்கு
  13. ரண களமா புத்தாண்ட கொண்டாடி இருக்கீங்க.. பாவம்..
    நானும் அந்த வேதனையை அனுபவித்தவன் என்ற வகையில் கஷ்ஷ்ஷ்டம் புரிந்தது :(.

    நான் சினிமா தியேட்டரை விட ஆப்பரேஷன் தியேட்டருக்கு அதிகம் போனவன்.

    - பைக்கில் சின்ன துண்டு மாதிரி எதாவது போட்டுக்கொள்ளுங்கள்.

    - மூன்று வேளை உணவுக்கு அடுத்து மூன்று பேரிட்சை பழம் மற்றும் தண்ணீர் குடியுங்கள். உலர்ந்த திராட்சையும் பெஸ்ட்

    - மலமிளக்கி (மில்க் ஆப் மெக்னீசியா..etc) நீண்ட நாட்கள் பயன்படுத்தாதீர்கள். அது குடல் இயக்கத்தை நாளடைவில் மெதுவாக மாற்றிவிடும்

    நானும் இந்த நியூ இயர் வாக்கில் நெஞ்சு வலி என்று எமர்ஜென்சி ரூம் போய் வந்தேன்.. கியாஸ் டிரபுள் என்ற உடன் வலி தீர்ந்தது :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலமிளக்கி - 5 நாட்களில் நிற்பாட்டியாயிற்று! :) இப்போது வாழைப்பழமே துணை! ;) Constipation, Gas Trouble etc. etc. எல்லாவற்றிக்கும் காரணம் நமது தவறான உணவு வழக்கம்தான், அப்படியே கொஞ்சம் உடற்பயிற்சி செய்தால் எல்லாம் சரியாகி விடும்! வாயில் சொல்லிப் பார்க்க வசதியாத்தான் இருக்கிறது! :)

      நீங்களும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்!!!

      நீக்கு
  14. //நான் விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன்//
    வாழ்த்து பலிச்சுடுச்சா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலிச்சுக்கிட்டே இருக்கு! :) இப்ப கொஞ்சம் பெட்டர்!

      நீக்கு
  15. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia