பல நண்பர்களின் கூட்டு முயற்சியின் பலனாக கடந்த வார இந்தியா டுடேவில் தமிழ் காமிக்ஸ்
வலைபதிவர்கள் பற்றிய ஒரு கட்டுரை வெளியானது! கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு முன்னர் காமிக்ஸ் நண்பர் விஸ்வா அவர்கள், இந்தியா டுடே
நிருபர் திரு.இரா.நரசிம்மன் அவர்களிடம் இந்தக் கட்டுரைக்காக மற்ற சில
பதிவர்களின் பெயர்களோடு எனது பெயரையும், வலைப்பூ முகவரியையும்
பரிந்துரைத்திருப்பதாக கூறினார். அது தொடர்பாக கடந்த 8-ம் தேதியன்று, நரசிம்மன்
அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு, காமிக்ஸ் வலைப்பூக்கள் குறித்தான எனது
பார்வைகளை பகிர்ந்திருந்தேன். அதிலிருந்து ஓரிரு வரிகள் இந்தியா டுடேவில் அச்சேறி இருக்கின்றன! இந்த
கட்டுரைக்காக நான்கு வாரங்களுக்கு முன்னரே பேட்டி அளித்து முடித்து
விட்ட வேறு சில காமிக்ஸ் பதிவுலக நண்பர்கள், அதைப் பற்றி வெளியில் மூச்சு கூட விடவில்லை என்பது தேவையில்லாத உபரி தகவல்! ;)
கட்டுரை நான் எதிர்ப்பார்த்த கோணத்தில் இல்லை என்றாலும், காமிக்ஸ் வலைப்பதிவர்கள் பற்றிய பிரத்தியேகத் தகவல்கள், தேசியப் பத்திரிக்கை ஒன்றில் வெளியாகி இருப்பது மகிழ்ச்சி தருகிறது! நிருபர் நரசிம்மன் அவர்களுக்கும், அவரிடம் எனது பெயரையும் பரிந்துரைத்த விஸ்வாவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இது எனக்கு மகிழ்ச்சி தருகிறது என்பது ஒருபுறம் இருந்தாலும், சில சிந்தனைகளைத் கிளறி விடவும் தவறவில்லை!
'இந்தியா டுடே' கட்டுரையின் உள்ளடக்கத்தையோ, ஆங்காங்கே காணப்படும் எடிட்டிங் & அச்சுப் பிழைகளையோ பட்டியல் போட்டு விரிவாக அலசுவது என் நோக்கம் அல்ல! பதிவர்களிடம் சிரமேற்கொண்டு பேட்டி கண்ட நிருபர் மீதும் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. மாறாக, தமிழ் காமிக்ஸ் பற்றி பத்திரிக்கைகளில் வெளிவரும் கட்டுரைகள் மீதான ஒரு 'பொது விமர்சனப் பார்வை' என்றும் கொள்ளலாம்!

காமிக்ஸ்
என்றாலே அது குழந்தைகளுக்கானது என்ற ஒரு பொதுப்புத்தி மக்களிடையே
இருக்கிறது! வெகுஜன பத்திரிக்கைகளில் வெளியாகும் 'மேலோட்டமான' காமிக்ஸ்
கட்டுரைகள், அத்தகைய பொதுப்புத்திக்கு மேலும் வலுச் சேர்க்கும் விதமாகவும்,
படிப்பவர்களுக்கு ஆர்வம் தூண்டாத தகவல் தொகுப்புகளாகவும் அமைந்திருப்பதை
காண முடிகிறது! இதுவரை பத்திரிக்கைகளில் வெளியான தமிழ் காமிக்ஸ் குறித்த
பெரும்பாலான கட்டுரைகள், இந்த வகைக்குள்ளேயே அடங்குகின்றன! இதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள், நடைமுறை சிக்கல்கள் இருக்கலாம்! ஆனால், இது மாற வேண்டும் என்பது என் விருப்பம்!
தமிழ் காமிக்ஸ் பற்றிய ஒரு கட்டுரை எழுதுவது என்பது மிகவும் சுலபமான காரியம்! கீழ் கண்ட டெம்ப்ளேட் வரிகளை அடிப்படையாக வைத்து சில பத்திகள் எழுதி, அவற்றை ஒன்றாகக் கோர்த்தால் கட்டுரை ரெடி! ஆங்காங்கே அரதப் பழைய காமிக்ஸ் இதழ்களின் முன்னட்டைகள் கொண்டு அலங்கரிப்பது மிக அவசியம்!

- 90-களோடு காமிக்ஸ் பொற்காலம் முடிந்து விட்டது.
- இன்றைய சிறுவர்கள் காமிக்ஸ் படிப்பதில்லை! முப்பதைத் தாண்டியவர்கள் மட்டுமே படிக்கிறார்கள்!
- பொதுவாக மக்களிடையே வாசிப்புப் பழக்கம் குறைந்து விட்டது!
- காமிக்ஸின் இடத்தை டிவி, இன்டர்நெட், வீடியோ கேம்ஸ், இத்யாதி இத்யாதி பிடித்துக் கொண்டு விட்டன!
- காமிக்ஸ் என்பது சிறுவர்களுக்கானது மட்டும் அல்ல - பெரியவர்களும் படிக்கலாம்.
- ராணி, மேத்தா, இந்திரஜால் போன்ற பல காமிக்ஸ் இதழ்கள் இப்போது வருவது இல்லை, லயன் & முத்து மட்டும் வருகின்றன!
- இடைப்பட்ட காலத்தில் பல வலைப்பதிவர்கள், காமிக்ஸ் பற்றி தொடர்ந்து எழுதி, காமிக்ஸ் ஆர்வத்தை உயிர்ப்புடன் வைத்திருந்தனர்!
- இரும்புக்கை மாயாவி என்ற பெயர் உங்கள் நினைவுகளில் மின்சாரத்தை பாய்ச்சுகிறதா? அவர் இன்னமும் தமிழில் வந்து கொண்டுதான் இருக்கிறார், படித்துப் பயனடையுங்கள்!
- காமிக்ஸ் வாசகர்கள் பலர் படித்த பிறகு அவற்றை சேகரிக்கவும் செய்கிறார்கள்.
- பழைய காமிக்ஸ் இதழ்களை சேகரிப்பது என்பது ஒரு காஸ்ட்லி ஹாபி!
- சித்திரக் கதைகள் சிறு வயது நினைவுகளை மீட்டெடுக்கின்றன.
- தமிழில், மொழியாக்கம் செய்த சித்திரக்கதைகள் மட்டுமே வெளியாகின்றன!
2012-ல் இருந்து மறுமலர்ச்சி கண்டு வரும் தமிழ் காமிக்ஸிற்கு, இவை போன்ற வரலாற்றுத் தகவல்கள் முக்கியம்தான் என்றாலும், புதிய காமிக்ஸ் ரசனைகளைப் பற்றி அதிகம் பேசுவதே இந்த மறுமலர்ச்சிக்கு அதிகம் பயனுள்ளதாய் அமையும் என நினைக்கிறேன்!
காமிக்ஸ் எடிட்டர் விஜயன் அவர்கள் அளிக்கும் சில பேட்டிகளும் இது போன்ற டெம்ப்ளேட் தகவல்களின் அடிப்படையிலேயே அமைந்து இருக்கின்றன! NBS வெளியீடு தொடர்பாக அனிமேஷன் எக்ஸ்பிரஸ் மற்றும் டெக்கான் குரோனிக்கிள் - இவற்றிற்காக அளித்த பேட்டிகளில் சற்றே மாறுதலாக, தற்போதைய வாசகர்களின் எதிர்பார்ப்பு பற்றியும், ஐரோப்பிய காமிக்ஸ்களை மொழிபெயர்ப்பதில் இருக்கும் சிரமங்கள் பற்றியும் பேசி இருக்கிறார்! ஊடகங்களிடம் பேசும் போது, கடந்து சென்ற காமிக்ஸ் பொற்காலத்தைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டிராமல், புதிய நாயகர்களின் வருகை பற்றியும், கிராபிக் நாவல்கள் பற்றியும், மாறி வரும் காமிக்ஸ் ரசனைகள் குறித்தும் அவர் அதிகம் பேசவேண்டும் என்பது என் விருப்பம்! ஆனால், குறிப்பாக சில புத்தக வெளியீடுகளைப் பற்றி மட்டும் அவர் பேசினாரென்றால், அது ஒரு விளம்பரமாக தோற்றமளித்து, பேட்டி காணும் பத்திரிக்கையால் நிராகரிக்கப்படக் கூடும் என்ற சங்கடத்தையும் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது!
தமிழில் தற்போது காமிக்ஸ் வெளியிடும் ஒரே நிறுவனம் பிரகாஷ் பப்ளிஷர்ஸ் என்பதால், லயன் & முத்துவின் பெயர்களை குறிப்பிடாமல் புதிய தமிழ் காமிக்ஸ்கள் பற்றி பேசுவது என்பது இயலாத காரியமாகி விட்டது. வேறொரு பதிப்பகத்தின் பெயரை பிரதானப்படுத்தி எழுதப்படும் காமிக்ஸ் கட்டுரைகளை வெளியிட எத்தனை பத்திரிக்கைகள் முன்வரும் என்பதும் சந்தேகமே! எனவே, காமிக்ஸ் பற்றி ஊடகங்களிடம் பேச வாய்ப்பு கிடைத்தால் லயன், முத்துவோடு நில்லாமல் சற்று பொதுப்படையாகவும் பேசுவது நல்லது!
'காமிக்ஸ் என்பது குழந்தைகளுக்கானது மட்டும் அல்ல' என்ற தேய்ந்து போன ரெக்கார்டை மீண்டும் மீண்டும் ஓட விடுவதை விட, அதை செயலில் காட்டுவது அதிக பயன் தரும்! உதாரணத்திற்கு:

- சமீபத்தில் படித்த ஏதாவது ஒரு ஆங்கில கிராபிக் நாவல் / காமிக்ஸ் பற்றி சுருக்கமாக விமர்சிக்கலாம்.
- தமிழில் நீங்கள் படிக்க விரும்பும் புகழ்பெற்ற காமிக்ஸ் படைப்புகளை பட்டியலிடலாம்.
- தமிழில் இதுவரை வெளிவராத காமிக்ஸ் Genre-கள் எவை என்பதை அலசலாம்.
- பெரியவர்களுக்கு ஏற்ற காமிக்ஸ்கள் / கிராபிக் நாவல்கள் சிலவற்றின் பெயர்களை பகிரலாம் (அவை எந்த மொழியில் இருந்தாலும்!)
- காமிக்ஸை தழுவி எடுக்கப்பட்ட ஏதாவது ஒரு திரைப்படத்தைப் பற்றி ஆராயலாம்.
- காமிக்ஸ் நண்பர்களிடையே இணைய வெளியில் நடக்கும் அனல் பறக்கும் விவாதங்கள் பற்றி விவரிக்கலாம்.
- லயன் / முத்துவில் உங்களை மிகவும் கவர்ந்த சமீபத்திய வெளியீடு அல்லது நாயகர்கள் பற்றி பேசலாம்.
- தமிழ் காமிக்ஸ் வாசகர்களின் மாறி வரும் ரசனை பற்றி அலசலாம்!
- உங்களை சுற்றி இருப்பவர்களிடம் காமிக்ஸ் ஆர்வம் மலர நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றி பேசலாம்.
- உங்கள் குழந்தைகளுக்கு எந்த மாதிரியான காமிக்ஸ்களை தேர்ந்தெடுத்து படிக்க கொடுக்கிறீர்கள் என்பதைச் சொல்லலாம்.
- தமிழில் தரமான காமிக்ஸ் வெளியிட பிரபல பதிப்பகங்கள் முன்வர வேண்டும் என்ற உங்கள் ஆவலை வலியுறுத்தலாம்.
- ஆங்கிலத்தில் குறைந்த விலையில் காமிக்ஸ் கிடைப்பதில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தலாம். இவற்றின் இந்தியப் பதிப்புகளை வெளியிட, உள்நாட்டுப் பதிப்பகங்கள் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையையும் வைக்கலாம்.
- முழுவதுமாக இந்தியாவில் உருவாக்கப்பட்டு வெளியாகும் தரமான ஆங்கில கிராபிக் நாவல்களை அறிமுகப் படுத்தலாம். இது போன்ற முயற்சிகள் தமிழில் இல்லை என்று அங்கலாய்க்கலாம்!
- வளர்ந்து வரும் டிஜிட்டல் (Licensed) காமிக்ஸ் டிரெண்ட் பற்றி பேசலாம்.
இப்படிப்பட்ட மாறுதலான யோசனைகள் வேறு ஏதேனும் இருந்தால் இங்கே பகிரலாமே?!
காமிக்ஸ் பற்றிய ஆவலைத் தூண்டும் ஒரு பயனுள்ள 'செய்தித் துணுக்கு' என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு கீழே உள்ள தினகரன் கட்டுரை ஒரு உதாரணம். சினிமா பிரபலங்கள் தங்களின் பேட்டிகளின் இடையே 'இரும்புக்கை மாயாவி' பற்றி ஓரிரு வரிகள் பேசிச் செல்வதை விட, இது போன்ற நறுக்கென்ற காமிக்ஸ் செய்தி தாங்கி வரும் சினிமா கட்டுரைகள் பன்மடங்கு பயன் தரும் என்பது என் கருத்து!

இரத்தப் படலம் குறித்து வெளியான செய்திகள் / கட்டுரைகள், இதுவரை
காமிக்ஸ் படிக்காத வாசகர்களையும் காமிக்ஸ் படிக்கத் தூண்டும் வகையில்
அமைந்துள்ளன. மற்றொரு உதாரணம்:
XIII பற்றிய இன்னொரு செய்தி! ஆனால், இது ஏதோ குழந்தைகளுக்கான காமிக்ஸ் என்ற ரீதியில் அரசு எழுதி இருப்பார்!
(நன்றி: கட்டுரை இணைப்புகள் நண்பர் விஸ்வாவின் TCU Comics Cuts-ல் இருந்து பெறப்பட்டுள்ளன!)
'காமிக்ஸ் பற்றி ஊடங்களில் கட்டுரை / பேட்டி வருவதே பெரிய விஷயம், அதிலும் குறை காண்பதா?' என்ற உங்களின் மனக்குரல் எனக்குள்ளும் எதிரொலித்திடத் தவறவில்லை! இவற்றின் பின்னணியில் இருக்கும் யதார்த்தங்கள், பத்திரிக்கை ஆசிரியரால் வெகுஜன ரசனையை கருத்தில் கொண்டு செய்யப்படும் மாற்றங்கள், நிருபர்களுக்கு என இருக்கும் சில கட்டுப்பாடுகள் இவற்றையும் உணர முடிகிறது! ஆனால், காமிக்ஸ் பற்றிய பத்திரிக்கை கட்டுரைகள் / தொலைக்காட்சி பேட்டிகள் வெளிவர காரணமாக இருக்கும் ஊடகம் சார்ந்த நண்பர்கள், மேற்கண்ட கருத்துக்களை கவனத்தில் கொண்டு கட்டுரைகளை / பேட்டிகளை வடிவமைக்க முயற்சிகள் மேற்கொண்டால், பொது மக்களிடையே காமிக்ஸ் மீதான ஆர்வம் அதிகரிக்க உதவியாக இருக்கும் என்பது என் எண்ணம்.

இறுதியாக, நான் இந்தியா டுடேவுக்கு அனுப்பி இருந்த மின்னஞ்சலை கீழே பகிர்ந்துள்ளேன். காமிக்ஸ் பதிவர்கள், சித்திரக்கதை விமர்சனங்கள், ஃபேஸ்புக் குழுமங்கள், தீவிர வாசகர்கள், ஐரோப்பிய காமிக்ஸ், மாறி வரும் ரசனை, சென்சார் மற்றும் பண்பாடு பற்றிய சூடான இணைய விவாதங்கள் என்று சற்றே மாறுதலான கோணத்தில் நான் எழுதி இருந்தாலும், வழக்கமான 'டெம்ப்ளேட் தகவல்களையும்' அவற்றுடன் இணைத்து, நீட்டி முழக்கி 'வள வள' என்று எழுதி இருந்தததால், சொல்ல வந்த முக்கியமான கருத்துக்கள் வெளியாகாமல் அடிபட்டுப் போய் விட்டன என்ற ஆதங்கம் மட்டுமே மிச்சமிருக்கிறது! :(
Dear Mr.Narasimhan,
We praise and glorify good comics and at the same time many of us are not hesitant to talk about the shortfalls of the publishing house. At times we go overboard and criticize each and every miniscule aspect of the comics. If you happen to read a comic blog, don't be surprised if its author goes on complaining about how badly the front cover of a particular comic book is designed or how haphazardly the Tamil fonts are aligned in the dialogue boxes!!! :) Some even post lengthy comparisons on the quality of Tamil translation with its original!
There is also another angle to this, being very critical about Tamil comics (read Lion or Muthu Comics) or a particular comic hero; or for that matter on the publishing house (Prakash Publishers) or even its editor Mr.S.Vijayan - can sure land you in big trouble - the die hard fans will make your life miserable with hate posts! But then that is the part and parcel of the job, and we learn to ignore such provoking! :)
Comics are not just for
kids! When someone hears the word 'comics', immediately the images of
'American super heroes' or 'Amar Chitra Kathaas' flashes in their mind!
But it is much more than that! These days there are comic books which
are specifically targeted for the older folks; there are Graphic Novels
which cater to the niche audience!; there is also a fine range of
European comics - and we are fortunate enough to read some of these in
Tamil! But, different comics genres bring their own set of troubles to
the desk. You will often find fans having heated exchanges over the
Tamil moralities and comics censorship in several forums.
These kind of positive / negative reviews and debates,
irrespective of their nature, certainly help raise the interest levels
of general audience who are not yet exposed to this wonderful
entertainment medium! They begin to realize just how vast the comics art
form is! These days I often get queries on how to subscribe to and buy
the Tamil comic books; so much so that I even created a information page dedicated for this! :)
Blogging about Tamil comics is no easy job but a time
consuming affair; we need to scan some sample pages from the book to be
reviewed, watch out for the finer details, thoroughly understand the
story line and put all these together as a interesting review! We hardly
get noticed outside of a small fan base - and in order to reach out to a
wider audience we often rely on blog aggregator websites like
Tamilmanam or social forums like facebook! And in some cases other
popular Tamil bloggers help us by giving links to our posts bringing in
more readership.
At the end of the day, I continue blogging about Tamil Comics just for a simple fact that I love reading comics in Tamil and I get a sense of satisfaction doing my bit to spread the awareness! By doing this, I also would like to make a point that Comics are not just for kids!
Here is a recent article I posted in my blog on 2013
comics releases - if you manage to read till the end, you will get a
gist of the present Tamil comics scenario!
I think the following sentence will describe all this madness:
Tamil Comics - it is a cult, a religion!
I think the following sentence will describe all this madness:
Tamil Comics - it is a cult, a religion!
And here are some random posts (with summary) from my blog:
1. ஹெராயினும், சென்சாரில் சிக்கிய ஹீரோயின்களும், பின்னே ஞானும்! (Apr 6, 2013):
//அழுத்தமான கதையம்சம் கொண்ட ஒரு கனத்த புதினத்தை படித்திடும் திருப்தியை தந்திட லார்கோவின் கதைகள் ஒருபோதும் தவறுவதில்லை! எக்கச்சக்கமான பாத்திரங்கள், கிளைக்கதைகள், பக்கம் பக்கமாய் வசனங்கள் & விவரிப்புகள் - போன்ற அம்சங்கள் நிறைந்திருந்தாலும், அயற்சியூட்டாமல் கதை பயணிக்கிறது! இதற்கு ஆசிரியரின் அபாரமான தமிழாக்கமும் பெருமளவு உதவியிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை! சில ஆயிரம் டாலர்கள் மட்டுமே மதிப்பு கொண்ட மூலப் பொருள்களில் இருந்து, பல மில்லியன் பெறுமானமுள்ள ஹெராயின் எப்படி தயாராகிறது; பிறகு அது எப்படி சந்தைப்படுத்தப்படுகிறது என்பது குறித்த விரிவான தகவல்கள் வியப்பை அளிக்கின்றன!//
2. காமெடி கௌபாய், கில்லாடி கௌபாய்! (Apr 4, 2013):
//இந்த டெக்ஸ் வில்லர் இதழின் வடிவமைப்பு, டெக்ஸ் காமிக்ஸை 'உருவாக்கும்' இத்தாலிய பதிப்பகத்திற்கு மிகவும் பிடித்துப் போனதால்; இதை மிலன் நகரிலுள்ள காமிக்ஸ் மியூசியத்தில் பார்வைக்கு வைக்கப் போகிறார்களாம்! இந்தியாவிலிருந்து வெளியாகும் ஒரு காமிக்ஸ் இதழுக்கு (அதுவும் தமிழில்!) இந்த கௌரவம் கிடைத்திருப்பது பெருமை சேர்க்கும் சங்கதிதானே?//
3. வன்மேற்கின் வஞ்ச நெஞ்சங்கள் - வெஸ்ட்டர்ன் - ஒரு மாறுபட்ட கிராபிக் நாவல்! (Sep 23, 2012):
//கதைநாயகன் நாதன் சிஸ்லிமின் 14 வயது இளம்பிராயப் பார்வையில் விரிவதாய் அமையும் இந்தக் கதை Spaghetti வெஸ்டர்ன் படங்களின் ஆரம்பக் காட்சிகளுக்கு சற்றும் சளைத்ததில்லை! வறண்ட, பரந்த பாலைப் பரப்பில் ஊர்ந்து வந்து வ்யோமிங்கில் உள்ளதொரு சிறு நகரில் நிலை கொள்ளும் அந்தப் புகை வண்டி நம்மை ஒரு கனத்த கதைக்குள் இட்டுச் செல்கிறது!//
4. லார்கோ வின்ச்: தமிழ் காமிக்ஸ் உலகின் புதிய சூப்பர் ஸ்டார்! (May 16, 2012):
//துப்பாக்கியை உபயோகிக்காமல் வெறும் உடல் பலத்தையும், கத்தி வீசும் திறனையும் காட்டுவது "Casino Royale" ஜேம்ஸ்பாண்டை நினைவுபடுத்துகிறது! லார்கோவின் ப்ளேபாய் காட்சிகள் நமது ஓவியர்களால் மூடி மறைக்கப்பட்டுள்ளன - இருந்தாலும் வசனங்கள் கொஞ்சம் தாராளம்! கதை நெடுக நிகழ்காலத்தையும், கடந்தகாலத்தையும் பின்னிப்பிணைத்த விதம் அட்டகாசம்!//
Thank you for patiently reading through!
Karthik Somalinga
What about email reply?
பதிலளிநீக்குI got an acknowledgement from the reporter and part of my views were published in that article! :)
நீக்கு//part of my views were published in that article!//
நீக்குஅது தான் அப்பவே தெரியுமே? :)
;)
நீக்குஉங்களது பார்வையில் விரிவாக எழுதப்பட்ட அழகான கட்டுரை.
பதிலளிநீக்குபுரிதலுக்கு நன்றி
மிக்க நன்றி விஸ்வா!!!
நீக்குWELL SAID!
பதிலளிநீக்குthank you buddy!
நீக்குமாதம் 2,3 பதிவுகள் தானா...?
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி தனபாலன் சார்! பதிவுகளின் மொத்த எண்ணிக்கையை விட, உருப்படியான பதிவுகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் காரணம்! :)
நீக்குநீங்கள் குறிப்பட்ட படி காமிக்ஸ் பற்றிய கட்டுரைகள் வந்தால் சந்தோஷம்தான் . . .
பதிலளிநீக்குவந்தால் நன்றாக இருக்கும் தினா!
நீக்குஅருமையாய் கூறி உள்ளீர்கள் கார்த்திக்.
பதிலளிநீக்குஆனால் தற்போதைய நிலை தெரியாத நரசிம்மன் அவர்களுக்கு உங்களது கடிதத்தின் கருத்துக்கள் முழுவதும் புரிந்திருக்குமா எனபது சந்தேகம் தான்.
தெரியாத பொழுது அதனை எடிட் செய்திருப்பார்.
அப்படியே அக்கட்டுரையில் லார்கோ பற்றிய ஒரு சிறு குறிப்புடன் அது திரைப்படமாக வந்ததையும் மற்றும் அக்கதையில் தான் இளைய தளபதி தமிழில் நடிப்பதாக இருந்தது என்ற உப செய்தியையும் சேர்த்து இருந்தால் காமிக்ஸில் இருக்கும் பல வகைகள் பற்றி தெரிந்து இருக்கும்.
இப்படி எதாவது வித்தியாசமாக செய்தால் தான் கவனத்தை ஈர்க்க முடியும் என்ன செய்வது.
நன்றி கிருஷ்ணா!
நீக்கு//வித்தியாசமாக செய்தால் தான் கவனத்தை ஈர்க்க முடியும் என்ன செய்வது.//
உண்மைதான்!
//வளர்ந்து வரும் டிஜிட்டல் (Licensed) காமிக்ஸ் டிரெண்ட் பற்றி பேசலாம்.//
பதிலளிநீக்குநான் கூட சில நாட்களுக்கு முன்பு இதுபற்றி PC, SmartPhones & Tabletஸ் ஆகியவற்றில் படிக்கும்படியான டிஜிட்டல் காமிக்ஸில் தமிழ் காமிக்ஸ் (அதாவது லயன் காமிக்ஸை) வெளியிடுவது பற்றி நினைத்தேன். ஆங்கிலத்தில் அது பெரிய வியாபாரம்.
ஆனால் புத்தகத்தில் படிக்கக் கூடிய அந்த ஈர்ப்பு டிஜிட்டலில் படிப்பதில் ஏற்படுவதில்லை.
ஆமாம் பாஸித்! எனக்கும் ஆன்லைனில் அல்லது CBR மூலம் கணினியில் படிப்பது பிடிப்பதில்லை!
நீக்குமேலும் நீண்ட இடைவெளிக்குபின் காமிக்ஸ் படிக்கப் போகும் ஒரு வாசகனாய் சில கருத்துக்கள்....
பதிலளிநீக்குபல வருடங்கள் கழித்து காமிக்ஸ் வாங்க முடிவெடுத்த எனக்கு க்ரீன் மேனர் காமிக்ஸ் வருத்தமே! அதனால் பழைய கதைகளை வாங்க முடிவெடுத்துள்ளேன்.
தற்போதுள்ள காமிக்ஸ் ரசிகர்கள் அநேகம் பேருக்கு கவ்பாய் கதைகள் பிடித்துள்ளதாலோ என்னவோ ஒரே கவ்பாய் கதைகளே வந்துக் கொண்டிருக்கிறது. வேறு Genre கதைகள் வந்தால் நன்றாக இருக்கும்.
பழைய காமிக்ஸ் ரசிகனான எனக்கு மாயாவி, மாண்டிரெக், திகில் கதைகள் இல்லாததில் வருத்தமே!
Can't wait to see what future (comics) holds for me! :)
//பல வருடங்கள் கழித்து காமிக்ஸ் வாங்க முடிவெடுத்த எனக்கு க்ரீன் மேனர் காமிக்ஸ் வருத்தமே! அதனால் பழைய கதைகளை வாங்க முடிவெடுத்துள்ளேன்.//
நீக்குநல்ல முடிவு! க்ரீன் மேனர், பிரளயத்தின் பிள்ளைகள் இவை சற்றே மாறுபட்ட காமிக்ஸ்கள் - எதற்கும் படித்துப் பார்த்து விட்டு முடிவெடுங்கள்! சமீபத்தில் வெளியான லார்கோ வின்ச், வேய்ன் ஷெல்டன், லக்கி லூக், சிக் பில், டயபாலிக் இதழ்களை படித்துப் பாருங்கள்!
//பழைய காமிக்ஸ் ரசிகனான எனக்கு மாயாவி, மாண்டிரெக், திகில் கதைகள் இல்லாததில் வருத்தமே!//
பழைய காமிக்ஸ்களை இப்போது நீங்கள் படித்தீர்களானால் சிறு வயதில் இருந்த அளவுக்கு அந்த கதைகள் மீது ஈர்ப்பு இருக்குமா என்பது சந்தேகமே!
//ஒரே கவ்பாய் கதைகளே வந்துக் கொண்டிருக்கிறது//
உண்மைதான்! :) நம்ம பாய்ஸ்க்கு, கவ்பாய்ஸ் என்றாலே தனி பிரியம்தான்! ;)
"CLAP! CLAP! CLAP!"
பதிலளிநீக்குEXCELLENT WORK FRIEND!
thank you விஸ்கி-சுஸ்கி!
நீக்கு//புதிய காமிக்ஸ் ரசனைகளைப் பற்றி அதிகம் பேசுவதே இந்த மறுமலர்ச்சிக்கு அதிகம் பயனுள்ளதாய் அமையும் என நினைக்கிறேன்!//
பதிலளிநீக்குஹலோ மாயாவி க்ளப்பில் இருந்து ஆட்டோ வருது உங்க வீட்டுக்கு.
உங்களுடைய யோசனைகள் சூப்பர். ஆனால் அவற்றை செயல் படுத்த தேவையான ஊடகமாக ப்ளாக் மட்டுமே உள்ளது. காமிக்ஸ் பற்றி ஒரு கட்டுரை வெகுஜன பத்திரிக்கையில் வருவது குறிஞ்சி பூ பூத்தார்ப்போல் தான். புத்தக விமர்சனம் போடும் சில பத்திரிகைகளுக்கு நாம் படித்த கிராபிக் நாவலைப் பற்றி எழுதிப் போடலாம் என்றால், லயனில் தனியாக ஒரு கதை வருவதே அபூர்வமாக இருக்கிறது."ஆல் நியூ ஸ்பெஷல்" புத்தகத்தில் வரும் ஒரு கதை பிரளயதின் பிள்ளைகள் என்று ஆரம்பிக்க வேண்டி இருக்கிறது. இதுவே தனியாக வந்தால் நன்றாக இருக்கும். இப்போது உள்ள காக்டெயில் ஸ்டைலில் எந்த மாற்றமும் இப்போதைக்கு எதிர் பார்க்க முடியாது. பார்ப்போம்.
//அவற்றை செயல் படுத்த தேவையான ஊடகமாக ப்ளாக் மட்டுமே உள்ளது//
நீக்குஇப்போதைக்கு அதுதான் உண்மை! ஆனால் வலைபூக்களிலும், பேஸ்புக்கிலும் கூட பெரும்பாலோர் பழைய காமிக்ஸ் பற்றிதான் பேசுகின்றனர்!!! (நான் உட்பட!)
//"ஆல் நியூ ஸ்பெஷல்" புத்தகத்தில் வரும் ஒரு கதை பிரளயதின் பிள்ளைகள் என்று ஆரம்பிக்க வேண்டி இருக்கிறது//
ஆமா ராஜ்! இப்படி பல விதமான கதைகள் சேர்ந்து வருவது ரொம்ப எரிச்சலாக இருக்கிறது! :(
நண்பர் கார்த்திக்,
பதிலளிநீக்குஉங்களுடை எண்ணங்கள் மிக அழகாக வெளிப்படுத்தி உள்ளீர்கள்.
//I also would like to make a point that Comics are not just for kids!//
இந்த நிலை கூடிய விரைவில் வரும் நண்பரே! வயது பாரபட்சம் இல்லாமல் நமது காமிக்ஸ் அனைவரது கைகளிலும் தவழும் நாள் வரத்தான் போகிறது.
(அதில் உங்களை போன்ற வலைபதிவர்களின் பங்களிப்பு அதிகம் உண்டு)
ஊர் கூடி தேர் இழுப்போம் :) நகராமலா போய்விடும் :)
திருப்பூர் ப்ளுபெர்ரி (எ) நாகராஜன்
:) நன்றி நாகராஜன்!
நீக்குகாமிக்ஸ் மீதான காதலை உயிர்ப்புடன் வைத்துள்ளீர்கள் கார்த்திக் .உங்களைப்போன்றவர்களின் அறிமுகம் கிடைப்பதற்கு முன்புவரை ஏதோ நான் மட்டுமே காமிக்ஸ் பைத்தியம் என்ற எண்ணத்தில் இருந்தேன் ...உங்களைப்பார்த்து பிரமிக்கின்றேன் ..வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே! நமது காமிக்ஸ் வட்டத்தில் யாரும் யாருக்கும் குறைந்தவர் இல்லை! நீங்கள் லயன் ப்ளாகில் நண்பர்களுக்கு உற்சாகமூட்டி இடும் கருத்துக்களே உங்கள் காமிக்ஸ் காதலுக்கு சாட்சி!
நீக்குதாமதமான
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நண்பரே :))
.
நன்றி சிபி!!! :)
நீக்கு