குண்டடி பட்டு, உயிருக்கு போராடிய படி விழுந்து கிடக்கிறான் ஒருவன்;
அப்படி யாராவது சாலையோரம் கிடந்தால் நீங்களும், நானும் என்ன செய்வோமோ,
அதையே தான் அனைவரும் செய்கிறார்கள்! ஆனால், அவ்வழியே வரும் சந்துரு (ஸ்ரீ)
என்ற மருத்துவக் கல்லூரி மாணவன், அடிபட்ட நபரை ஹாஸ்பிடலில் சேர்க்க
முயற்ச்சிக்கிறான்! 'போலிஸ் கேஸ்' என்று அவர்கள் கையை விரித்து விடுவதால்,
வேறு வழியின்றி பார்மஸியில் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு, அவனை தனது
வீட்டிற்கு அழைத்து சென்று, தானே அறுவை சிகிச்சை செய்து பிழைக்கவும் வைத்து
விடுகிறான்! காலையில் எழுந்து பார்த்தால் அந்த நபர் காணாமல்
போயிருக்கிறான்; இரவுக்குள் அவன் வீட்டுக் கதவை போலிஸ் தட்டுகிறது! வுல்ஃப்
(மிஷ்கின்) என்ற சீரியல் கில்லர் போலீஸிடம் இருந்து தப்புவதற்கு உடந்தையாக
இருந்த குற்றத்திற்காக சந்துருவையும், சந்தேகத்தின் பேரில் அவன்
அண்ணனையும் கைது செய்கிறார்கள்; அண்ணி வீட்டுக் காவலில் வைக்கப் படுகிறார்!
மேலே சொன்ன காட்சிகள் யாவும் படம் துவங்கிய முதல் அரை அல்லது முக்கால் மணி நேரத்தில் திரையில் ஓடுகின்றன! சமீபத்தில் இந்த அளவுக்கு பரபரப்பான ஒரு துவக்க காட்சியை வேறு எந்தப் படத்திலும் கண்டதில்லை! முதல் முறையாக ஆபரேஷன் செய்யத் தயாராகும் சந்துரு, வுல்ஃபின் நெஞ்சைக் கத்தியால் கிழிக்க முயற்சித்து அது முடியாமல் பயந்து பின் வாங்கி, அறுவை சிகிச்சை குறித்த புத்தகங்களைப் வேகவேகமாக புரட்டுவது; உதவிக்கு தனது பேராசிரியரை அழைத்து அவர் மறுத்து விடவும், தைரியத்தை வரவழைத்துக் கொள்ள தனக்குத் தானே ட்ரக்ஸ் ஏற்றிக் கொள்ள முயற்சிப்பது; பிறகு மனம் மாறிய பேராசிரியரின் தொலைபேசி வழிநடத்தலுடன் அந்த அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடிப்பது என்று திரையில் விரியும் காட்சிகளின் பதற்றத்தை, பார்வையாளர்களிடமும் வெற்றிகரமாக கடத்துகிறார் மிஷ்கின்!
சில நாட்கள் கழித்து, சந்துரு விசாரணைக் கைதியாக இருப்பதை அறியாத வுல்ஃப், அன்றிரவு தன்னைச் சந்திக்க வருமாறு அவனை அழைக்கிறான்! 'வுல்ஃபை சந்திக்கும் போது, அவனை நீயே சுட்டுக் கொன்றால் தான் குற்றவாளிக்கு துணை புரிந்த குற்றத்திலிருந்து தப்ப முடியும்' என்று போலீசார் சந்துருவை மிரட்டுகிறார்கள்; அவனுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியையும் அளிக்கிறார்கள்! படத்தின் மற்றொரு தடத்தில், போலிஸ் காவலில் இருக்கும் ஒரு தாதா, தனக்கு சாதகமாக இருக்கும் ஒரு இன்ஸ்பெக்டர் மூலம் இந்தச் சந்திப்பு நடக்கவிருப்பதைப் பற்றி அறிந்து கொள்கிறான்! வுல்ஃபுடன் இருக்கும் தனிப்பட்ட பகையைத் தீர்த்துக் கொள்வதற்காக, தனது கூலிப் பட்டாளத்தை சந்திப்பு நடக்கும் இடத்திற்கு ஏவி விடுகிறான்!
வுல்ஃப் சொன்ன இடத்தில் காத்திருக்கும் சந்துருவுக்கு, அருகே இருக்கும் சிட்டி ரயில் நிலையத்திற்கு வரச் சொல்லி வுல்ஃபிடம் இருந்து அழைப்பு வருகிறது! எதிர்பாராவிதமாக, சந்துருவை இரயிலில் கடத்திச் சென்று, போலிஸ் மற்றும் தாதாவின் அடியாட்களிடம் இருந்து தப்பி விடுகிறான் வுல்ஃப்! முடிவின்றி நீளப் போகும் அந்த இரவில் - சந்துரு என்றொரு பலியாடு, வுல்ஃபைக் கொல்வதற்காக அவனை ஏவி விட்ட போலிஸ், அதே நோக்கத்துடன் அவனைப் பின்தொடரும் அந்த தாதாவின் அடியாட்கள் - இந்த மூவரின் இலக்காக ஒரேயொரு ஓநாய் என்று, சுவாரசியமானதொரு நான்முனை ஆடுபுலி ஆட்டம் துவங்குகிறது!
முதல் காட்சியில் இருந்தே படத்தை ஆரம்பிப்பதில் உள்ள ஒரு சிக்கல் இது தான், நடுவில் ஏதாவது ஒரு இடத்தில் வேகம் குறைந்தே தீரும்! இந்தப் படத்தில் உள்ள பிரச்சினை என்னவென்றால், படம் சரியாக க்ளைமேக்ஸ் பகுதியை நெருங்கும் வேளையில் வேகமிழந்து தொலைக்கிறது! முக்கால்வாசி படத்தை ஒரு திறமையான இயக்குனராக தனது தோள்களில் சுமக்கும் மிஷ்கின், நடிப்புக்கு வேலை வைக்கும் க்ளைமேக்ஸ் பகுதியில் அதுவரை சுமந்த பாரத்தை சட்டென்று இறக்கி வைத்து விடுகிறார்! அவர் ஒரு திறமையான இயக்குனர் மட்டுமே என்பது, 'வுல்ஃப் ஏன் இப்படி எல்லாம் நடந்து கொண்டான்' என்பதை விவரிக்கும் க்ளைக்மேக்ஸ் காட்சி நமக்கு நினைவூட்டுகிறது! இருந்தாலும் கூட, படம் முடிந்து வெளியில் வருகையில் - புத்திசாலித்தனமான காட்சிகள் நிறைந்த, நல்லதொரு க்ரைம் திரில்லரை பார்த்த திருப்தி எனக்கு!
//படம் முடிந்து வெளியில் வருகையில்// என்று சொல்வது எனக்கே கொஞ்சம் ஓவராகத் தான் தெரிகிறது! ஏனென்றால், உலகத் தொலைகாட்சிகளில் இரண்டாம் முறையாக, கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று விஜய் டிவியில் ஒளிபரப்பான போதுதான், வீட்டில் அமர்ந்தபடியே இந்தப் படத்தைப் பார்த்தேன்! :) எனவே படம் முடிந்ததும், ஹாலை விட்டு பெட்ரூமுக்குள் வந்தேன் என்பது தான் சரியாக இருக்கும்! :D இது போன்ற உருப்படியான படங்கள் பெங்களூருக்கு வராது, வந்தாலும் ஒரு வாரம் தாண்டி ஓடாது! அவ்வளவு ஏன் டிவிடி கூட நல்ல பிரிண்ட் கிடைத்துத் தொலைக்கவில்லை! :( இந்தப் படத்தை விரைவில் பார்க்க வேண்டும் என்ற ஆவலால், நல்ல பிரிண்ட் அல்லது ஒரிஜினல் டிவிடி கிடைக்கும் வரை காத்திருப்போம் என்ற என் கொள்கையை தளர்த்திக் கொண்டு, டிவியிலேயே பார்த்து விட்டேன்! பல காட்சிகளில் கத்திரியும், சில இடங்களில் வெறும் வாய்களும் அசைந்தன! :( இனிமேல், எனது கொள்கையில் தீவிரமாக இருப்பது என்று முடிவெடுத்து விட்டேன்!
இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது, மிஷ்கினின் டெம்ப்ளேட் காட்சிகள் படத்தில் நிறைந்திருக்கின்றன.... இத்யாதி இத்யாதியை உலகப் பதிவர்களில் ஒருவர் விடாமல் எழுதித் தீர்த்திருப்பார்கள் என்பதால், மேற்கொண்டு இந்தப் படத்தை நுண்ணாய்வு செய்யாமல், நான் சொல்ல வந்ததை நேரடியாக சொல்லி முடித்துக் கொள்கிறேன்! இது வரை இந்தப் படத்தைப் பார்க்கவில்லை என்றால், அடுத்த முறை டிவியில் போடும் போதாவது அவசியம் பார்த்து விடுங்கள் - உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்! அப்படி பிடித்தது என்றால், மிஷ்கினின் அடுத்த படத்தை தியேட்டரில் பாருங்கள்; தமிழில், சிறப்பான படங்களை எடுக்க முயற்சிக்கும் ஒரு திறமையான இயக்குனருக்கு, இதைத் தவிர வேறென்ன பெரிய ஊக்கத்தை நம்மால் தந்திட முடியும்?!

ஓ.ஆ.-இல் என்னைக் கவர்ந்த இன்னொரு அம்சம், இப்படத்தின் போஸ்டர்! இத்தாலிய, "டயபாலிக்" காமிக்ஸ் ஒன்றின் கவர் டிசைன் சட்டென நினைவுக்கு வந்ததை தவிர்க்க முடியவில்லை! |
Image Credits: http://www.creativecomics.it & http://nilavaithedi.com
சொல்ல வந்ததை சட்டென சொல்லிடுறேன் சுடச்சுட விமர்சனத்திற்கு நன்றி!!!! :P
பதிலளிநீக்குசுடச்சுட(!) விமர்சனத்திற்கு,சுடச்சுட ஒரு பின்னூட்டம்: நம்ம கடம உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லியா கார்த்தி?! :P
நீக்குசமீபத்தில் பார்த்து வியக்கமுடிந்த படங்களில் இதுவும் ஒன்று. மிஷ்கினுக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும்பட்சத்தில் இதைவிடவும் சிறப்பாக செய்(வார்-லாம்) என்று தெரிகிறது.
பதிலளிநீக்குலாம்-க்குக் காரணம் ஒரேவொரு விஷயத்தில் மிஷ்கினின் Perspective நமது மசாலா-டெம்ப்லேட் டைரக்டர்களுடன் ஒத்துப்போகிறது. அது சிறந்த படங்களை எடுக்கும் டைரக்டர்களை Audience கொண்டாடத் தவறுகிறார்கள் என்கிற ரீதியில் Audience-ஐ விமர்சிப்பது.
நம்மூரில் ஒரு வெல்டரோ பிளம்பரோ நல்ல படைப்புகளை செய்துவிட்டு எந்த Appreciation-ம் இல்லாவிட்டாலும் நிம்மதியாகத் தூங்கமுடியும்போது இவர்களுக்கு மட்டும் Star Value கிடைக்காதபட்சத்தில் திடீரென்று மசாலா படங்களை எடுக்கும் ஆர்வம் வந்துவிடுகிறது, அதற்குப் பழியும் Audience மீது விழுகிறது! :D
மக்கள் சிறந்த படைப்புக்களை மரியாதையுடன்தான் பார்க்கிறார்கள். Commercial Success என்று வரும்போது சமூகத்தில் எல்லா பணியாளர்களுக்கும் கிடைக்கும் அதே அளவுக்குதான் இவர்களுக்கும் கிடைக்கிறது. அதை இவர்கள் ஏற்றுக் கொள்ளும்பட்சத்தில் Industry Better ஆக இருக்கும்.
//மக்கள் சிறந்த படைப்புக்களை மரியாதையுடன்தான் பார்க்கிறார்கள்//
நீக்கு+1
முகமூடி வெளியாகும் முன்னர் விமர்சகர்களையும், வலைப்பதிவர்களையும் கூட போட்டுத் தாளித்தார் மிஷ்கின்! :D பக்கா கமர்சியலாக எடுக்கப் படும் மசாலா படங்கள் யாவும் வசூலை அள்ளிக் குவித்து விடுவதில்லை என்ற உண்மையை அவர் உணர வேண்டும்! முகமூடி கூட ஒருவகையில் கமர்சியல் படமே - அதைத் திட்டிய அத்தனை பதிவர்களும் இன்று ஓநாயைப் பாராட்டிக் கொண்டு இருக்கிறார்கள்!
மிஷ்கின் / செல்வராகவன் போன்ற திறமையான டைரக்டர்கள் - முகமூடி / இரண்டாம் உலகம் போன்ற மொக்கையான கமர்சியல் கலந்த படைப்புக்களைக் கொடுத்து தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் தேடித் தருவதை விட, தங்களது வழக்கமான ஸ்டைலில், சிறிய பட்ஜெட்டில், அதிக படங்களைக் கொடுக்கலாம்! பெருத்த கமர்சியல் சக்சஸ் கிடைக்காவிட்டாலும், நல்ல படைப்பாளி என்ற பெயராவது கிடைக்கும்!!!
கார்த்திக்,
நீக்குமுகமூடி ஒரு வித்யாசமான முயற்ச்சிதான் - ஸ்பீட் கொஞ்சம் கம்மி ஆகிவிட்டது அந்த படத்தில். அது இன்னும் கொஞ்சம் ஹிட் அடித்திருந்தால் ஒரு வித்யாசமான series கிடைத்திருக்கும். மற்றபடி மிஷ்கினின் படங்கள் (இது தவிர) டீ வீ -யில் போட்டவரை பார்த்திருக்கிறேன் (அதென்ன எல்லாரும் டிவி டிவி என்று கிவி மாதிரி எழுதறோம்?).
அவரது பேட்டிகளைவிட படங்கள் சிறந்தவை :-D
@Raghavan:
நீக்குநியாயமா பார்த்தா டெ.வி.-ன்னு தான் எழுதணும் - டெலிவிஷன்!! :)
மன்னா, தங்கள் கூற்றில் பிழை உள்ளது ... டீ வீ என்பது TV-யின் தமிழாக்கம் - அதனை ஆங்கிலத்தில் முழுப்பதமாக Television என்று கூறுவார்களே அன்றி T V என்ற குறில் தமிழினில் "டீ வீ"-யேவாம் :-p
நீக்கு[ஹ்ம்ம் !! லீவு போட்டா எப்புடியெல்லாம் பொழுத ஓட்ட வேண்டியிருக்கு ...!]
என் புத்தாண்டுத் தீர்மானங்களின் படி வீண் விவாதங்களில் ஈடுபடுவதில்லை என்று முடிவெடுத்து இருக்கிறேன்! :P இருந்தாலும் புத்தாண்டு துவங்க இரண்டு நாட்கள் இருப்பதால்...
நீக்குDVD-யை டிவிடி என்று அழைக்கும் போது, TV-யை டிவி என்று அழைக்கலாம் தவறில்லை! ;)
DVD எனப்படுவது டீ வீ டீ-யாம் என்று தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் :-)
நீக்குபுத்தண்டு தீர்மானம் என்பதில் ஒரு சிறு பிழை திருத்தம் செய்து பத்தாண்டு தீர்மானம் என்று மாற்றிவிடுங்களேன் ப்ளீஸ் :-D
//DVD எனப்படுவது டீ வீ டீ// தவறு ராக்ஸ்!
நீக்கு"திருட்டு விசிடி" என்ற சொற்றொடரே நாளடைவில் மருகி, "டிவிடி" என்று ஆனது! ;)
TV
நீக்குஆங்கலம் English-ல் type செய்யப்படும்போது சில சிக்கல்குறைகிறது... :D
உண்மை தான்! :) ஆங்கிலத்தை தமிழில் எழுதுவதிலேயே ஆயிரத்தெட்டு பிரச்சினை! இந்த அழகில் ஜெ.மோ., தமிழை - ஆங்கில எழுத்துக்களில் எழுதலாம் என்கிறார்! :D
நீக்குஏற்கனவே இரண்டு ப்ளாக்குகளில் இதன் விமர்சனத்தைப் பார்த்தபோது தோன்றிய அதே எண்ணம் எனக்கு இப்போதும் தோன்றுகிறது, இன்னும் சற்று வலுவாக!
பதிலளிநீக்குபல பல விளம்பர இடைவேளைகளுக்கு நடுவே டி.வியில் பார்ப்பது ரொம்பவே பொறுமையைச் சோதிக்கும் விசயமென்பதால், நானும் நல்லதொரு டிவிடிக்காக (எங்கள் ஊரில் எந்தத் தியேட்டரிலும் இந்தப் படம் ஓடாததால்) காத்திருக்கிறேன்....
ஓசியில் பார்த்ததென்றாலும் இது உருப்படியான விமர்ச்சனம்தான் கார்த்திக்! ;)
என்னது ஓசியில் பார்த்ததா?!!!! ஹல்லோ விஜய் - டிஷ் டிவி சர்விஸ்க்கு 250, மூணு மணிநேரம் டிவி ஒடுனதுக்கான கரண்ட் பில், நடுவுல கொறிச்ச உ.கி. சிப்ஸ் ஆக மொத்தம் 310 ரூபாவை எடுத்து வச்சுட்டு இப்படி பேசுங்க! ;)
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஅருமையான திரைப்படம், கிடைக்க வேண்டிய கமர்சியல் வெற்றி கிடைக்கவில்லை என்பது வருத்தமான விஷயம்.
பதிலளிநீக்குமிஷ்கின் மற்றும் செல்வராகவனை பற்றிய உங்களது கருத்துக்கள் மிக உண்மை.
தரமில்லாத திரைப்படங்கள் வரும் பொழுது அதனை குறை கூறியும் நல்ல திரைப்படங்கள் தரும்போளுதும் புகழ்ந்தும் கூறியுள்ளனர்.
நானும் DVD காக வைட்பன்ணலாம் என்று இருந்தேன் விஜய் டிவியில் போடவும் டிவி ரிப் இன்டர்நெட்டில் தரவிறக்கி பார்த்துவிட்டேன்.ஆகையால் விளம்பர தொந்தரவு இல்லாமல் .பார்த்துவிட்டேன்.
@கிருஷ்ணா:
நீக்குகமர்சியல் ஹிட்டோ இல்லையோ, நஷ்டம் இல்லை என்று கேள்விப் பட்டேன்! :)
எனது போன ஆண்டு ..இந்த ஆண்டு ...வரும் ஆண்டு அனைத்திலும் "காமிக்ஸ் பதிவை " தவிர எதற்கும் கமெண்ட்ஸ் இடுவதில்லை என்ற உறுதி இன்னும் நடை முறையில் உள்ளது என்பதை வருத்ததுடன் கூறி கொள்கிறேன்.
பதிலளிநீக்கு