முகமூடி - தமிழ் காமிக்ஸ் மறுமலர்ச்சிக்கு மிஷ்கின் செய்த பேருதவி!

முகமூடி நான் பார்க்க விரும்பிய படம்! மேலோட்டமாக விமர்சனங்களை மேய்ந்ததில் எனக்கு தெரிய வந்தது - இது ஒரு பார்க்கக் கூடாத படம்! அது தெரிந்தவுடன் அனைத்து விமர்சனங்களையும் வரி விடாமல் படித்தேன்! படித்ததும் இது பார்த்தே தீர வேண்டிய படம் என்ற முடிவுக்கு வந்தேன்! ஏன்? விஜய டி ராஜேந்தரின் வீராசாமி, விக்ரமின் கந்தசாமி போன்ற மரண மொக்கை படங்களை டிவியில் போடும்போதெல்லாம் ஒரு காமெடி எஃபெக்ட்டுக்காக கொஞ்ச நேரமாவது பார்ப்பதில்லையா? அதே காரணம்தான்! இவ்வாண்டில் வெளியான சூப்பர் unintentional காமெடிப் படம் இதுவாகத்தான் இருக்க முடியும். இது போதாது என்று உச்சகட்ட காமெடியாக, 'இது தமிழின் முதல் சூப்பர் ஹீரோ படம்' என்று வேறு சொல்லிக் கொள்கிறார்கள்! :) படத்தில் சில சண்டை காட்சிகளும், அவற்றிக்கான பின்னணி இசையும் அவ்வபோது ட்ராஜிக் ரிலீஃப் ஆக வருகின்றன, நிஜமாகவே பாராட்டுகள்!

மிக்க நன்றி மிஷ்கின் சார்! நீங்கள் பத்திரிக்கை பேட்டிகளில் சொல்லியிருந்ததைப் போல, தமிழ் காமிக்ஸ் இதழ்களின் பெயர்களையோ அல்லது அதில் தோன்றிய நாயகர்களின் பெயர்களையோ முகமூடி படத்தில் எந்த ஒரு கதாபாத்திரம் மூலமாகவும் சொல்ல வைக்கவில்லை! ஜீவா, நரேனிடம் 'இரும்புக்கை மாயாவி தெரியுமா?' என்று விறைப்பாக நின்று கொண்டு குரல் உயர்த்திக் கேட்கவில்லை! புத்தர் சிலைக்கு அடியில் முத்து காமிக்ஸ் இதழ்கள் சில சிதறிக் கிடப்பது போன்ற கவிதையான காட்சியை வயலினின் அழுகையினூடே செதுக்கவில்லை! முக்கியமாக, முகமூடி ஜீவா - டாஸ்மாக்கில் லயன் காமிக்ஸ் படிப்பது போன்றதொரு காட்சியையும் வைத்துத் தொலைக்கவில்லை! இதன் மூலம் சமீபத்தில் ஏற்பட்டிருக்கும் (தமிழ்) காமிக்ஸ் மறுமலர்ச்சிக்கு உங்களால் ஆன மிகப் பெரியதொரு உதவியை செய்திருக்கிறீர்கள்! இனி நீங்கள் கொடுக்கப்போகும் பேட்டிகளில் தமிழ் காமிக்ஸ்களில் வெளியான சூப்பர் ஹீரோ கதைகளுக்கும், முகமூடி படத்தில் 'இல்லாத' கதைக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்தி விட்டீர்களானால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

கிளைமாக்ஸ் காட்சிக்கு பொருத்தமான மாற்று வசனம் இதோ:
நரேன்: பேட்மேன், ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், அயன்மேன்...  ஏய் முகமூடி, ஒன் பேரு இன்னா மேன்?!
ஜீவா: ஐ'ம் மொக்கைமேன்!

மிஷ்கினின் பேட்டிகளில் இருந்து!
- குமுதம் - 25.4.2012
எதன் தாக்கத்தில் இந்தப் படத்தை எடுக்குறீங்க?
சொன்னால் சிரிப்பீங்க. என்னோட இளமைக் காலம் முழுதும் என்னை வழி நடத்தியது, ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் புத்தகங்கள்தான். சினிமாவிற்கு வந்த பிறகு இதை எப்படியாவது படமாக்கணும்னு காத்திருந்தேன். இப்பதான் டைம் வந்திருக்கு.

- ஆனந்த விகடன் - 25.4.2012
'முகமூடி' - என் சின்ன வயசுக் கனவு. 'அம்புலிமாமா', 'பாலமித்ரா', 'முத்து காமிக்ஸ்' படிச்சு வளர்ந்தவன் நான். இரும்புக்கை மாயாவி இப்பவும் என் கனவில் வர்றான்! 'முகமூடி' ஸ்க்ரிப்ட் முடிஞ்சதும் நான் நினைச்சது வந்ததை உணர்ந்தேன். இப்போதைய தமிழ் சினிமா சூழலில் சூப்பர் ஹீரோ படம் எடுப்பது கஷ்டம். கண்ணு முன்னாடி ஒரு கொடுமை நடந்துட்டு இருக்கு. அதை எதிர் கொள்ள நினைக்கிறவன் என்ன மாதிரி நடந்துக்குவான்னு யோசிச்சுப்பார்த்தேன்... ஒரு ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், இரும்புக்கை மாயாவி மாதிரி எதாச்சும் சாகசம் பண்ணாத்தான் உண்டு. அதுதான் இந்தப் படத்துக்கான விதை.

36 comments:

 1. படம் பார்த்த எல்லாருமே சண்டைக்காட்சி நல்ல அமைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள், நீங்களும் அவ்வாரே சொல்கிறீர்கள் (அப்படித்தானே?), இதற்காகவே ஒரு முறை பார்க்கலாம் என்றிருக்கிறேன்! :)

  ReplyDelete
  Replies
  1. பாருங்க, பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல... படம் பார்த்து தலைவலி வந்துடுச்சு, அதுவும் அந்த க்ளைமாக்ஸ், அய்யய்யோ... தாங்க முடியல...

   Delete
  2. //சண்டைக்காட்சி நல்ல அமைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்//
   ஆம், சில சண்டைக் காட்சிகள் நன்றாக இருந்தன! :)

   //பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல//
   ஆம், பொறுப்பேற்க முடியாது! :D

   Delete
 2. நானும் படம் முழுக்க தேடிட்டேன், சூப்பர் ஹீரோவைக் காணோம்...

  :D :D :D

  ReplyDelete
 3. நாளைக்கு தான் பார்க்கனும்.

  ReplyDelete
  Replies
  1. மல்டிப்ளெக்ஸ் போய் பாக்கற அளவுக்கு வொர்த் இல்ல. சிங்கிள் ஸ்க்ரீன்ல பார்த்தாலே போதும்! :D

   Delete
 4. "முகமூடி ஜீவா - டாஸ்மாக்கில் லயன் காமிக்ஸ் படிப்பது போன்றதொரு காட்சியையும் வைத்துத் தொலைக்கவில்லை!" ஹா ஹா ஹா நிஜமாவே உங்க ரசிப்பு எனக்கு பிடிச்சிருக்கு நண்பரே! ஜீவா ஏதாவது நல்ல சீன்ல படிக்குற புத்தகம் லயனாக இருந்திருக்கலாம் என்ற ஆதங்கம் எனக்கு. கம் பேக் புத்தகத்திற்கு அந்த வாய்ப்பு இருந்தது நண்பா!

  ReplyDelete
  Replies
  1. அப்படி எதுவும் வைக்காததும் ஒரு விதத்துல நல்லதுதான்! :) தமிழ் காமிக்ஸ் படிச்சதாலதான் இப்படி மட்டமா எடுத்திருக்காருன்னு ஆடியன்ஸ் தப்பா நினைச்சிருப்பாங்க! ;)

   Delete
  2. ஏங்க..இவரு கம்பேக் ஸ்பெஷல் ஃப்ரீயா குடுத்ததால வாங்கினார். மற்ற புத்தகங்கள் வாங்குங்கள் என்ற பொழுது அப்புறம் வாங்குகிறேன்னு எஸ்கேப் ஆனார் மிஸ்கின். பேட்டி தரும்போது நான் இந்த புத்தகக் கண்காட்சியில் ரூ 40,000 செலவு செய்தேன்னு சொல்லுவார்..

   Delete
 5. பார்த்து விட்டீர்களா...? உங்கள் பொறுமைக்கு பாராட்டுக்கள்...

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் ஒரு ஜாலிக்குதான்! :)

   Delete
 6. நான் மிகவும் எதிர் பார்த்திருந்த படம்.
  சொதபிவிட்டது.இன்னும் பார்கவில்லை.பார்க்க போவதும் இல்லை(தியேட்டரில்)

  ReplyDelete
  Replies
  1. நன்றாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்! :(

   Delete
  2. என்ன தலைவரே எனது வலை பூவில் உங்கள் தடம் பதிய வில்லை போல் உள்ளதே.
   உங்கள் பின்னுட்டத்தை காணவில்லையே.

   Delete
  3. பல நாட்களுக்கு முன்னரே படித்து விட்டேன்! ஆனால், மறுமொழி எழுத மறந்து விட்டேன், மன்னிக்கவும் கிருஷ்ணா! :)

   இப்போது சரிசெய்து விட்டேன்! :)

   Delete
  4. பின்னுடம் இடுவதெல்லாம் நமது சிறு வட்டத்தில் இருக்கும் நண்பர்கள் தான்.ஆகையால் யார் தவறினாலும் ஒரு சிறு வருத்தம் ஏற்படுகிறது.

   உடனடி நடவடிக்கைக்கு நன்றி நண்பரே.

   Delete
 7. Porumaiya Nalla eduthirukkalam hhum..,

  ReplyDelete
 8. வழக்கமான பாணியில் உங்கள் விமர்சனம் அருமை.

  //முகமூடி ஜீவா - டாஸ்மாக்கில்// படத்தில் அவர் அங்கு சென்றது மட்டுமே உங்கள் நினைவில் உள்ளது போல் தெரிகிறதே :)

  ReplyDelete
 9. As usual nice review. Nice Post.

  ReplyDelete
  Replies
  1. //வழக்கமான பாணியில் உங்கள் விமர்சனம் அருமை.//
   வழக்கமான பாணியில் உங்கள் இரண்டு பின்னூட்டங்களும் அருமை! ;)

   Delete
 10. நல்லாத்தான இருக்கு.....

  நீச்சல் உடையில்(??) நகரை கொள்ளை அடிக்கும் திருடர்கள்....

  எப்போதும் விரைப்பாக இருக்கும் டான்ஸ் மாஸ்டர் மற்றும் அவரிடம் தக்கமிக்கிதா 'டான்ஸ்' கற்றுகொள்ளும் ஹீரோ... (என்ன, அது டான்ஸ் இல்லை குங்ஃபூ வா.?. )

  உலகத்திலேயே முதன் முதலில் கானா பாட்டுக்கு குத்து டான்ஸ் போட்ட சூப்பர் ஹீரோ

  போர் அடிக்கும் போதெல்லாம் இன்னும் அடிக்க இடையிடையே வரும் ஷெர்லக் ஹோம்ஸ் தாத்தா

  இப்படி சொல்லிக்கிட்டே போலாம் :)

  ReplyDelete
  Replies
  1. ஆமா, சிறந்த காமெடி படம்! :)

   Delete
 11. எப்படியோ காமிக்ஸிக்கு உயிர் கொடுத்து உதவினதுக்கு முகமூடிக்கு நன்றி!

  இன்று என் தளத்தில்
  பழஞ்சோறு! அழகான கிழவி!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5.html

  ReplyDelete
  Replies
  1. மொத்தத்தில் நீங்கள் பதிவை படிக்கவில்லை என்பது மட்டும் தெள்ளத்தெளிவாக தெரிகிறது! ;)

   Delete
  2. சரியா சொன்னீங்க பாஸ்.. உங்க நேர்மை எனக்குப் புடிச்சுருக்கு கார்த்திக் :)

   Delete
 12. இவ்வன் எவ்வளவு அடிச்சாலும் .....
  ரொம்ப நல்லவன்பா

  ReplyDelete
 13. SIV:நீச்சல் உடையில் கொள்ளையர்கள் ,
  (ஆணா,பெண்ணா )ஹி ஹி

  ReplyDelete
 14. //நரேனிடம் 'இரும்புக்கை மாயாவி தெரியுமா?' என்று விறைப்பாக நின்று கொண்டு குரல் உயர்த்திக் கேட்கவில்லை! புத்தர் சிலைக்கு அடியில் முத்து காமிக்ஸ் இதழ்கள் சில சிதறிக் கிடப்பது போன்ற கவிதையான காட்சியை வயலினின் அழுகையினூடே செதுக்கவில்லை! முக்கியமாக, முகமூடி ஜீவா - டாஸ்மாக்கில் லயன் காமிக்ஸ் படிப்பது போன்றதொரு காட்சியையும் வைத்துத் தொலைக்கவில்லை!//
  பல காமிக்ஸ் காட்சிகளை மிஸ்கின் படத்தில் இணைப்பதற்கு பாடுபட்டதும் அது வெளிவராததற்கு அவர் காரணமில்லை எனவும் சினிமாவட்டார நண்பர் ஒருவர் கூறியதை நான் அறிந்து கொண்டது போல் மற்றவர்களும் அறிந்து கொள்ளும் பொழுது இதற்கான உண்மை நிலவரம் தெரியவரும்....

  ReplyDelete
  Replies
  1. :)

   தனக்கு பிடித்த ஆளுமைகளின் பெயர்களையும், உருவங்களையும் ஒவ்வொரு படத்திலும் (முகமூடியிலும்தான்) எந்த பிரச்சினையுமில்லாமல் நுழைக்க முடிந்த டைரக்டரால் தனக்கு பிடித்த தமிழ் காமிக்ஸை நுழைக்க முடியாமல் போனது விந்தையே! ஸ்பைடர்மேன், பேட்மேன் என காமெடியாக பட்டியலிட மட்டும் முடிந்திருக்கிறது! நல்ல வேளையாக பலரும் விரும்பாத இந்த சூப்பர் ஹீரோ(!) படத்தில் தமிழ் காமிக்ஸ் பெயர்களை இணைத்து, தமிழக மக்களிடையே எஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச காமிக்ஸ் ஆர்வத்தையும்(!) கெடுக்காமல் விட்டாரே என்ற அர்த்தத்தில் சொன்னேன்!

   பதிவின் முதல் பத்தியில் சொன்ன காரணத்தை தவிர்த்து, மிஷ்கின் இயக்கும் படங்கள் (அவை காப்பியா, டீயா என்பது வேறு விஷயம்) எனக்கு பிடிக்கும் என்பதால் பார்த்தேன் - அந்த வகையில் ஏமாற்றி விட்டார்! :)

   Delete
 15. நல்ல வேளை காமிக்ஸ்சை படத்தில் காட்டாமல் விட்டார். பேட்டிகளிலும் லயன் & முத்து காமிக்ஸ் பற்றி சொல்வதில்லை. தப்பித்தது லயன் & முத்து... :)

  ReplyDelete
 16. //தனக்கு பிடித்த ஆளுமைகளின் பெயர்களையும், உருவங்களையும் ஒவ்வொரு படத்திலும் (முகமூடியிலும்தான்) எந்த பிரச்சினையுமில்லாமல் நுழைக்க முடிந்த டைரக்டரால்//
  பெயர்களும் , உருவங்களும் யாரையும் அல்லது எதயும் விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் இருப்பதில்லை . ஆனால் தயாரிப்பாளர்கள் சில விஷயங்களை அந்த கோணத்தில் பார்க்கும் பொழுது, அதில் தனக்கு ஏதேனும் ஆதாயம் கிடைக்குமா என்று நினைக்கும் போது இயக்குனர்கள் அங்கு அமைதியாய் இருப்பது தவிர்க்கமுடியாமல் போய் விடுகின்றது .

  அதனையும் மீறி தனது ஆதரவை காண்பிக்கவே தனிப்பட்ட பேட்டிகளில் காமிக்ஸின் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் என நினைக்கிறேன்


  ReplyDelete
  Replies
  1. //எதயும் விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் இருப்பதில்லை//
   தவறு, மிஷ்கினின் தனிப்பட்ட விருப்பங்களை விளம்பரப்படுத்தும் செயல் இது! இதை தவறு என்று சொல்ல வரவில்லை - அவர் படம், அவர் விருப்பம்! ;)

   //ஆனால் தயாரிப்பாளர்கள் சில விஷயங்களை அந்த கோணத்தில் பார்க்கும் பொழுது, அதில் தனக்கு ஏதேனும் ஆதாயம் கிடைக்குமா என்று நினைக்கும் போது//
   அப்படியா?! :) அப்போது கிளைமேக்சில் மற்ற ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களின் பெயர்களை உச்சரித்தது மட்டும் தயாரிப்பளர்களை உறுத்தவில்லையாக்கும்! டைட்டிலே மார்வெல் காமிக்ஸ்க்கான ட்ரிபியூட்தானே! ;) மனது வைத்திருந்தால், ஓரமாக ஒரு தமிழ் காமிக்ஸையோ அல்லது தமிழில் வெளியான கதாபாத்திரத்தையோ நிச்சயம் காட்டியிருக்க நிச்சயம் அவரால் முடிந்திருக்கும்! உதாரணம்: கதாநாயகியுடன் இருக்கும் அந்தக் குழந்தைகள் காமிக்ஸ் படிப்பது போல ஒரு செகண்ட் காட்டியிருக்கலாம்!

   //அதனையும் மீறி தனது ஆதரவை காண்பிக்கவே தனிப்பட்ட பேட்டிகளில் காமிக்ஸின் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் என நினைக்கிறேன்//
   நல்லது, அவருக்கு எனது பாராட்டுக்கள்! ;)

   Delete
 17. உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

  ReplyDelete

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia