நண்பர்களே, பிட்டு பிட்டாக பதிவிடுவதற்கு மன்னிக்க வேண்டும்! நிச்சயமாக இது
ஹிட்ஸை அதிகரிப்பதற்காக செய்யும் செயல் அல்ல! போட்டோக்களை தேர்ந்தெடுத்து,
அவற்றின் அளவைக் குறைத்து, பிறகு விழாவை விவரித்து ஏதாவது வளவளவென
எழுதுவதற்கு நிறைய நேரம் பிடிக்கிறது! அதுவுமின்றி எந்நேரமும் ப்ளாக்கை
கட்டிக்கொண்டு அழுதால் கட்டிக்கொண்ட மனைவியிடம் திட்டு வாங்க
வேண்டியுள்ளது! :D சரி, விஷயத்திற்கு வருகிறேன்!
பெங்களூர் காமிக் கான் கண்காட்சியில் நேற்று காலை நமது பிரகாஷ் பப்ளிஷர்சின் "Wild West ஸ்பெஷல்" தமிழ் காமிக்ஸ் இதழ் வெகு சிறப்பாக வெளியிடப்பட்டது! பிரகாஷ் பப்ளிஷர்சின் அமெரிக்கக் கிளையின் தலைவர் திரு. ஸ்பைடார்ச்சி க்ளா (Spidarchie Claw) அவர்கள் இந்த இதழை பார்வையாளர்களின் பலத்த கரகோஷத்தின் இடையே வெளியிட்டார்! முன் வரிசையில் திரு. விஜயன் அவர்கள் அமர்ந்துள்ளதைக் காணலாம் (இடது)! அரங்கில் உள்ள இருக்கையில் என்னை அமருமாறு கூறினார்கள் - எனக்கு பப்ளிசிட்டி பிடிக்காது(!) என்பதால் சிறு புன்னகையுடன் தவிர்த்து விட்டேன்!
அதைத் தொடர்ந்து பேசிய பெங்களூர் வாசக சகோதரி திருமதி. சுனிதா ப்ளைசி அவர்கள் ஸ்பைடர், ஆர்ச்சி மற்றும் இரும்புக்கை மாயாவி போன்ற முக்கிய முதிய சூப்பர் ஹீரோக்களை 90% வாசகர்கள் புறக்கணித்து வருவது தனக்கு மிகுந்த வருத்தத்தை தருவதாகவும், இந்த நிலை நீடித்தால் காமிக்ஸ் வாங்குவதையே நிறுத்தப் போவதாகவும் உருக்கத்துடன் பேசினார். இதைக் கண்டு கண்ணீர் வடித்த திரு. விஜயன் அவர்கள், அடுத்த வருடம் முதல் காமிக்ஸ் கிளாசிக்ஸ் தொடர்ந்து வெளிவரும் என்று உறுதி அளித்தார் - அச்சமயம் பழைய காமிக்ஸ் ரசிகர்களின் கரகோஷம் கூரையை பிய்த்ததால் கலவரமடைந்த பார்வையாளர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினார்கள்! அவர்கள் ஓடியது இந்த அறிவிப்பைக் கேட்டதால் கூட இருக்கலாம் என்பது என் கணிப்பு. :) பாதுகாப்பு கருதி சகோதரியின் முகம் மறைக்கப்பட்டுள்ளது! திரையில் 'சூப்பர் தாத்தாக்கள்' படத்தைக் காணலாம்!
"எதிர்காலத்தில, இதை எல்லாம் நம்ம தலையில கட்டிருவாங்களோ?" ஆழ்ந்த யோசனையில் திரு. மினி லயன்!
"மறுபடியும் கொடுமை பண்ணறதுக்கு வந்துட்டோம்ல!" சூப்பர் தாத்தாக்களின் கஷ்டகாசமான போஸ்! (துருப்பிடித்த) இரும்புச் சட்டித் தலையன் ஆர்ச்சியின் முகமாவது பரவாயில்லை, தொங்கு மூஞ்சி ஸ்பைடருக்கு ரொம்பவே கிழடு தட்டி விட்டது! ;) ஸ்பைடரின் மார்பில் உள்ள ஆயுதம் தாங்கிய கச்சையை விவரம் புரியாத பார்வையாளர்கள் வேறென்னவோ என்று எண்ணி கெட்டப் பார்வை பார்த்தார்கள்! இது வரை வந்த ஸ்பெஷல் இதழ்களிலேயே மிகவும் மோசமான அட்டை வடிவமைப்பு! புத்தம் புதிய சாகசங்கள் என்ற நக்கலான tagline தூள்! ;)
"பாசக்கார பயலுவ, தாத்தாவ மறக்க மாட்டேங்கறாங்க!" போஸ்டரில் இடம் பெற்ற மகிழ்ச்சியில் மறைந்த ஹிந்தி நடிகரும், வகுப்புத் தோழருமான திரு.தேவானந்த் அவர்களைப் போல போஸ் கொடுக்கும் ஓல்டு ரூட்டுத் தல இரும்புக்கை மாயாவி!
"தங்கக் கல்லறை - மறுபதிப்பு" - குறை சொல்ல முடியாத முன்/பின் அட்டை - அருமை! :) இத இத, இதத்தான் எதிர் பார்க்கிறோம் - லைட்டாக டிங்கரிங் செய்யப்பட ஒரிஜினல் அட்டை!
நமது காமிக்ஸ் கதாநாயர்கள் பற்றிய அருமையான சிறு அறிமுகக் குறிப்புகளுடன், கண்ணைக் கவரும் போஸ்டர்கள் - அருமையான யோசனை! :) ஆங்கிலத்தில் இருந்ததால் பல பேர் ஆர்வமுடன் படித்துச் சென்றனர்!
மேற்கண்ட போஸ்டர்களின் நோட்டிஸ் வடிவம் - நானும் சிலவற்றை கைப்பற்றினேன்! தேவைப்பட்டால் நீங்கள் பிரிண்ட் செய்து கொள்ள வசதியாக, கொஞ்சம் பெரிய அளவு ஸ்கேன்கள்! ;)
திரு.ராதாகிருஷ்ணன்
அவர்களுடன் பிரபல பதிவர்கள்! திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் மண்ணின்
மைந்தராய் வேட்டியில் வந்திருந்தார், விஜயனுக்கு உறுதுணையாக இருக்க இந்தத்
சிங்கிள் தமிழ் மணம் போதும்!
"சேல்ஸ் சும்மா அடி பின்னுதில்ல! ஆனா அந்த இரத்தப் படலத்தை மட்டும் விலைக்கு கேக்காதீங்க!" லயன் அலுவலர்கள் மகிழ்ச்சியுடன் வேலை செய்யும் காட்சி! :)
"எங்களை யாரவது வாங்குங்களேன் ப்ளீஸ்! ஸ்பெஷல் இதழ் எல்லாம் டேபிள்ல கிடக்கு, எங்களுக்கு தரைதானா?!" - பழைய வெளியீடுகளின் பரிதாபக் குரல்!
பின்குறிப்பு: இந்தப் பதிவின் முதலில் உள்ள இரண்டு படங்களும் அவற்றிக்கான விளக்கமும் முழுக்க முழுக்க கற்பனையே! ஆனால், சொன்ன விஷயங்களில் கொஞ்சம் உண்மை இல்லாமல் இல்லை! யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் இது எழுதப் படவில்லை - ச்ச்ச்சும்மா..... ஜஸ்ட் ஃபார் ஜாலி! :)
அடுத்த பதிவில் விஜயன் அவர்களின் வீடியோ பேட்டி வெளியாகும்! அது வரை விரல்களை கோணலாக வைத்திருங்கள்! ;)
காமிக் கான் பற்றிய முழு பதிவுத் தொகுப்பை இங்கு காணலாம்!:
Comic Con Express 2012 @ Bangalore

ஹாய் கார்த்திக் ,சண்டே fulla ப்ளாக் க்கு, என்று ஒதுக்கி வைத்து விட்டீர்களா ?,அடி பின்னறீங்க
பதிலளிநீக்குஆமா, வீட்டில அடி பின்னப் போறாங்க! ;)
நீக்கு- ஃபர்ஸ்ட் ரெண்டு படம் + விளக்கம் படிச்சுட்டு கன்பீஸ் ஆகிட்டேன் :-) நல்ல வேளை கடைசியில் விளக்கம் கொடுத்தீர்கள். இல்லையென்றால் பின்னூட்ட புயல் தாக்கியிருக்கும்.
பதிலளிநீக்கு- காமிக்ஸ் நண்பர்களின் கோரிக்கையை ஏற்று க்ளோசப் அட்டை பட ஸ்கேன் போட்ட, கார்த்திக்கு ஒரு ஓ !!
- அட ஆமாங்க.. ஸ்பைடர் இதழ் வெளிவரும் போது எங்க வீட்டுல தப்பா நினைச்சுக்கப் போறாங்க அட்டைப் படத்தைப் பார்த்து. வந்த உடனே.. ஒரு கவர் போட்டுடணும் :).
- தங்கக் கல்லறை அட்டைப் படம் சூசூப்பர்... கலக்கலா இருக்கு...
மொத்த கவரேஜீக்கும்.. பதிவுகளுக்காக உங்களின் வார இறுதியை செலவு செய்ததிற்கும்.. அனைவர் சார்பாக நன்றிகள் பல....
:) அப்ப அடி வாங்க நீங்க வர மாட்டிங்களா?!
நீக்குஎதிர்காலத்தில, இதை எல்லாம் நம்ம தலையில கட்டிருவாங்களோ?" ஆழ்ந்த யோசனையில் திரு. மினி லயன்!
பதிலளிநீக்குஎப்படி கார்த்தி ,இப்படி எல்லாம் யோசிக்கறீங்க
செமயான கமெண்ட்.. :).. கேள்விப்பட்ட வரை மினிலயன் அவர்களும் காமிக்ஸ் ஆர்வம் கொண்டவர் என்றே நினைக்கிறேன்.
நீக்குஆம், அவரிடம் கேட்ட போது அப்படிதான் சொன்னார்! :)
நீக்குகுட்டி சிங்கம் நமது அடுத்த கட்ட மொக்கைகளை சமாளிக்க தயாராகவே இருக்கார் நண்பா!
நீக்குஆசிரியர் அவர் தந்தையோடு பாய்ந்தார்,இப்போது குட்டி சிங்கம் ..................தந்தை எட்டடி பாய்ந்தால் .................மகன் .................அப்போ பேரன் ............
நீக்குஅற்புதமான வரவுகளுக்கு காத்திருப்போம் ..........
Arumaiyana pathivu...
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குநண்பரே அந்த கதைகளுக்கு அப்போது நண்பர்கள் வட்டாரத்தில் இருந்த பர பரப்பு இப்போதைய லார்கோ மற்றும் டைகருக்கு சற்றும் சளைத்ததல்ல.அந்த பெண்மணியின் கூற்றே அதனை உணர்த்தும்,அஷ்ட கோணலான முகம் என வலை மன்னனின் கவர்ச்சியே தனிதான் .அழகால் அல்ல சாகசங்களால் இடம் பிடித்தவர்கள்தான் அவர்கள்,அது ஒரு தனி வசீகரம் ,பழைய நினைப்புடா பேராண்டி என்பார்களே அது போல ........சொன்னால் வயதை ஏற்றி விடுவீர்கள்,இந்த அட்டை படம் போதும் ,அப்போதைய ஸ்டைலிலே நிறைவாய் இருக்கிறது..............தங்களது பதிவிற்கு நன்றிகள் பல ...................
பதிலளிநீக்குஅந்த வட்டாரத்தில் இருந்தவன்தான் நானும்! இப்போது ரிடையர் ஆகி விட்டேன்! :D
நீக்குசூப்பர் தாத்தாக்களை கலாய்க்கும் உரிமை இந்த பேராண்டிக்கு இல்லையா?! ;)
சுனிதா அக்காவை இருட்டடிப்பு செய்த ப்ளேடை வன்மையாக கண்டிக்கிறோம் - வ வா சங்கம்
பதிலளிநீக்குபடங்கள் விளக்கங்கள் மிக நன்று.
பதிலளிநீக்கு"காமிக் கானுக்கு " என்னை போன்று நேரடியாக வர முடியாத வாசகர்களின் குறையை நாங்கள் அருகில் இருந்து பார்த்தது போன்ற உணர்வை உண்டாக்கி விட்டீர்கள் .நன்றியுடன் ......
பதிலளிநீக்குநன்றி! :)
நீக்குஉங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் .
பதிலளிநீக்குபுல்லரிக்க வைக்கும் நிகழ்வுகளை கண்முன்னே கொண்டு வைத்துவிட்டீர்கள் .....
பதிலளிநீக்குஅருமையான கவரேஜ் நண்பரே. இங்கு சென்னையில் சும்மா தூங்கி தூங்கி ஏழுந்து வார இறுதியை கழித்தற்கு பெங்களூர் போய் வந்திருக்கலாம் போல..
பதிலளிநீக்குசூஹீஸ் அட்டை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. 'குத்து' நடனம் போடும் ஆர்ச்சியை ரசித்தேன். போஸ்டர்களெல்லாம் அருமை.
மற்ற ஸ்டால்களை பற்றியும் எழுதுவீர்கள் தானே?
//மற்ற ஸ்டால்களை பற்றியும் எழுதுவீர்கள் தானே? //
நீக்குவரும் பதிவுகளில்! :)
பதிவுகளுக்கு நன்றி.பகிர்தலுக்கு நன்றி.
பதிலளிநீக்குபல முகம் தெரியாத பிரபல பதிவர்களின் முகங்களை வெளிச்சம் போட்டு காண்பித்தர்க்கு நன்றி.
எங்களால் வர இயலாவிட்டாலும் உங்களது புகைப்படங்கள் சிறிது திருப்தி அளித்தன.
உங்களது முக்கியத்துவம் வாய்ந்த வீடியோ பேட்டியை காண ஆர்வமுடன் உள்ளேன்.
வீட்டில் உள்ள BSNL இன்டர்நெட் இரண்டு நாட்கள் வேலை செய்யவில்லை ஆகையால் இந்த தாமதமான பின்னுட்டம்.
நன்றி கிருஷ்ணா, வீடியோ இன்று வெளியாகும்!
நீக்குஇனி வரக்கூடிய புத்தகங்களில் அட்டை படத்தை, நமது ஆசிரியர் அவரது வலைத்தளத்தில் வெளியிடும் முன்பு நீங்கள் வெளியிட்டு,
பதிலளிநீக்கு"பின் வரும் புத்தகத்தின் முன், பின் அட்டைகளை முன்பே வெளியிட்ட கார்த்தி" என எல்லோராலும் இதன் பின் அழைக்கப்படுவீர்.
:)
அட, இப்படி ஒரு அவப்பெயர் வேறு எனக்கு வந்துவிட்டதா?! :)
நீக்குஎந்த வயதினருக்கும்காமிக் புத்தகங்கள் சுவாரஸ்யம்தான்!
பதிலளிநீக்குஉண்மைதான் குட்டன்! பலருக்கு அது புரிவதில்லை! :)
நீக்கு