வெள்ளிக்கிழமை
இரவுகளில் டிவியில் படம் பார்த்து லேட்டாக படுத்தே பழகி விட்டது,
சனிக்கிழமை காலையில் எட்டு, ஒன்பது மணிக்கு கீழ் எழுந்ததில்லை! அதிலும்
நேற்றிரவு ரொம்ப நேரம் நண்பர் ஒருவரிடம் சாட் செய்து பிறகு இணையத்தை
மேய்ந்து விட்டு தூங்கச் சென்றபோது கிட்டத்தட்ட அதிகாலை மூன்று மணி!
தூக்கம் வராமல் கடைசியாக நேரம் பார்த்த போது நாலு கோழிகள் ஒரு சேர கூவின!
:) அடுத்த ஓரிரு மணி நேரங்களில் எழுந்து(!) தயாராகி, சோம்பலான சனிக்கிழமை
காலையில் மெதுவாக வண்டி ஓட்டிச் சென்றது ரொம்பவே வித்தியாசமான அனுபவம் -
சனிக்கிழமை ஷிஃப்டில் வேலை செய்யும் சில பரிதாப ஜீவன்களை தவிர RT நகர்
ஏறக்குறைய வெறிச்சோடித்தான் கிடக்கிறது! கோரமங்களா கிட்டத்தட்ட 15KM தூரம்
என்றாலும் காமிக்ஸ் கண்காட்சிக்குப் போகிறோம் என்ற நினைப்பே என் வண்டியை
வேகமாய் உந்தித் தள்ளத் தொடங்கியது!
அசரீரீ: "அடங்குடா, மேட்டருக்கு வா..."
காலை மணி 10:30
கோரமங்களா உள்ளாடை அரங்கம், மன்னிக்கவும் - உள்ளரங்கம். அதன் வெளியில் நின்று கொண்டு நான் எடுத்த போட்டோ இதோ :)
உள்ளே நுழையும் போதே முதலில் சிங்கத்தின் சிறு குகைக்குள் செல்ல கால்கள் பரபரத்தன! வழியில் எடுத்த சில போட்டோக்கள் இதோ:
நுழைந்தவுடன் வரவேற்ற சூப்பர் ஹீரோக்கள்... இடப்பக்கம் ஹாலிவுட் முகமூடி! :)
பதினோரு மணி ஆகும் முன்னரே ஓரளவுக்கு நல்ல கூட்டம், காமிக்ஸ் கண்காட்சிக்கு இத்தனை பேர் ஆர்வத்துடன் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது!
சும்மா சொல்லக் கூடாது, அட்டகாசமான ஏற்பாடுகள்தான்! எங்கு பார்த்தாலும் காமிக்ஸ் ஸ்டால்கள்!
நமது பிரகாஷ் பப்ளிஷர்சின் சிறிய ஸ்டால் இதுதான், அதாவது சிங்கத்தின் சிறு குகை! :)
விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள Wild West மற்றும் இதர ஸ்பெஷல் இதழ்கள்:
பழமையும், புதுமையும் கைகோர்க்கும் இடம் - நடுவில் ஸ்பைடரும், ஆர்ச்சியும்!
குகையில் ஒரு சிங்கம் :) அருகே திரு.விஜயனின் புதல்வர்!
ஸ்டால் அருகே எடிட்டருடன் உரையாடும் தமிழ் காமிக்ஸ் வாசக நண்பர்கள்!
இப்போதைக்கு இவ்வளவுதான் நண்பர்களே! இன்னும் சில மணி நேரங்களில் அடுத்தப் படப் பதிவை ப்ளேட்பீடியாவில் எதிர்பாருங்கள்! :)
Update: காமிக் கான் பற்றிய முழு பதிவுத் தொகுப்பை இங்கு காணலாம்!
Comic Con Express 2012 @ Bangalore

அபாரம் நண்பா..................ஸ்பைடர் ,இரும்பு கையாரை மறந்து விட்டீர்களா என ஒரு நண்பரின் கேள்விக்கு பதில் இங்கே கிடைத்து விட்டது .ஆர்ச்சி ,ஸ்பைடர் கலக்குகிறார்கள்,ஆசிரியர் மற்றும் அவர் புதல்வர் ,நண்பர்களை காட்டியமைக்கு நன்றிகள் ...............உங்களை காணோமே ..................தங்க கல்லறை போஸ்டர் அற்புதம்.ஏதேனும் போஸ்டர்கள் ஆட்டை போட்டீர்களா ..................
பதிலளிநீக்கு//ஏதேனும் போஸ்டர்கள் ஆட்டை போட்டீர்களா //
நீக்குகூச்சமாக இருந்ததால் கேட்காமல் விட்டு விட்டேன்! :)
நீங்க யாருன்னு அறிமுகப்படுத்திக் கொண்டீர்களா ?. அப்படியானால் குடுத்திருப்பார்களே ... ஐ மீன்.. போஸ்டர் குடுத்திருப்பார்களே :)
நீக்குதங்கக் கல்லறை அட்டைப்படத்தை கவனிக்கவில்லை. நன்றி ஸ்டீல் க்ளா.. அட்டைப்படம் பிரம்மாதம்.. இன்னும் க்ளோசப் போட்டோ வைத்திருப்பார் கார்த்திக்.. அதை அடுத்த பதிவில் வெளிவிடுவார் என நினைக்கிறேன்..
நீக்கு//குடுத்திருப்பார்களே//
நீக்குநிறைய கொடுத்தார்கள், வாங்கிக்கொண்டேன்! ;)
//இன்னும் க்ளோசப் போட்டோ வைத்திருப்பார் கார்த்திக்//
sure!
அவைகளை பற்றி எங்களுடனும் கலந்து கொண்டு எங்களை உற்ச்சாக படுத்தலாமே ....................காமெடியா இருக்குமே .............
நீக்குடிஸ்ப்ளே அபாரம்.............
பதிலளிநீக்குஆம், ஸ்டால் நம் இதழ்களால் அழகாக இருந்தது! :)
நீக்குபடங்கள் அருமை. நன்றி.
பதிலளிநீக்குநன்றி! :)
நீக்குஓஹோ.. சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷலின் அட்டைப்படம் தயாராகிவிட்டது போலிருக்கிறது....
பதிலளிநீக்குபுகைப்படங்கள் அங்கு சென்ற உணர்வை ஏற்படுத்துக்கிறது (டெம்ளேட் கமெண்ட் :) )
12 வருடங்களுக்கு முன் நானும் RT நகர் அருகிலிருக்கும் மட்டஹள்ளியில் (ஒரு தியேட்டர் அருகில்) தான் இரண்டு வருடங்கள் இருந்தேன்.
//டெம்ளேட் கமெண்ட்//
நீக்குபின்னூட்டத்திற்கு நன்றி! ;) டெம்ப்ளேட் பதில்! :)
//12 வருடங்களுக்கு முன்//
Oh, good! But RT nagar has changed a lot... :)
super...plz continue. we are waiting for ur next special post.
பதிலளிநீக்குyeah! sure... will try to post one more tonight...
நீக்குஉங்கள் பாணியில் க்ளோஸ் அப் பேஸ்ட் விளம்பரத்தை போட்டு விடாதீர்கள்.இன்று இரவின் அடுத்த பதிவில் க்ளோஸ் அப் விளம்பரங்களையும் ,தங்களையும் காட்டினால் மகிழ்வோமே...............
நீக்குpaste பற்றிய ஒரு post என்று சொல்லும் அபாயம் இருக்கிறது ஸ்டீல் க்ளா.. நியாபகப்படுத்தியதற்கு நன்றி :)
நீக்குWaiting eagerly for the post. I hope he is typing the new post ( kaalaila 3 manikku thoongi comic con poittu oru pathivu pottathukku appuram night 1 manikku aduttha pathivu ketka kashtamaathan irukku :) )
நீக்கு@கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா
நீக்குஹா ஹா ஹா, மன்னிக்கவும் இன்று மதியம் அல்லது மாலைதான் அடுத்த பதிவு :) க்ளோஸ் அப் போஸ்டர்கள் நிச்சயம்!
@RAMG75
:) Sorry for letting you guys down, sleep over powered me - this morning planning to go to the exhibition again!
Just kidding Karthik take rest
நீக்குBlog will be there but we need to take care our health and family commitments
ComicCOn - பற்றி நேற்று எழுதி விட்டதால் இன்னைக்கு அதிகம் எழுத வில்லையா ? WW ஸ்பெஷல் பதிவு என்னாச்சு ?
பதிலளிநீக்குபிட்டு பிட்டாக எழுதுவேன்! ;)
நீக்கு//WW ஸ்பெஷல் பதிவு என்னாச்சு ?// லேட் ஆகும்!
வரமுடியாத குறையை தீர்த்து விட்டீர்கள்.. நன்றி...
பதிலளிநீக்குArumaiyana photos kalakkunka..!
பதிலளிநீக்குS.Vijayan avarkalin photo super..!
பதிலளிநீக்குAvar maganin peyar enna ?
Super hero specil
பதிலளிநீக்குThanga kallarai
atdai padankal arumai.....
Nexst post ku kathirukkiren..!
பதிலளிநீக்கு[ nerathukku
thoongi udambai parthukunka... ]
மிக்க நன்றி! :)
நீக்குநன்றி கார்த்திக் , கண்காட்சியை கண்முன்னே கொண்டு வந்து உள்ளீர்கள் .விஜயன் சார் உடன் நடை பெற்ற உரையாடலை ,வீடியோ பதிவாக வெளியிட்டால் நலம் .இல்லை என்றால்,தங்கள் மயக்கும் எழுத்தில் உரையாடலாக எழுதினாலும் நலமே .கடைசி படத்தில் விஜயன் சார் உடன் உரையாடும் கண்ணாடி போட்ட, கட்டம் போட்ட சர்ட் நீங்கள்தானே கார்த்திக் ?
பதிலளிநீக்குகருத்துக்களுக்கு மிக்க நன்றி சுந்தர்!:) வீடியோ பதிவு விரைவில்! இல்லை, அது நான் இல்லை - அவர் திரு. பிரசன்னா!
நீக்குநன்றி கார்த்திக்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கு நன்றி! Animation Xpress ஸ்டால் காலியாக இருந்தது - கேன்சல் செய்து விட்டார்களோ?!
நீக்கு