பத்தாவது அல்லது பனிரெண்டாவது வகுப்புகளில் சரியாக மதிப்பெண்கள் வாங்காமல்
(இருந்திருந்தால்) அடுத்து என்ன செய்வது, என்ன படிப்பது, எங்கு படிப்பது
என்ற ஒரு தீர்மானம் இல்லாது இருக்கும் வேளையில் ஒரு இனம்புரியாத சஞ்சலமும்,
மனச்சோர்வும் நம்மைப் பிடித்து ஆட்டுவிக்குமே, அதைவிட குழப்பமானதொரு
மனநிலையில் நான் இப்போது இருக்கிறேன்! குழப்பத்திற்கு காரணம் அடுத்த வருடம்
என் மகனை Kindergarten-இல் சேர்க்க வேண்டும்! இதைக்குறித்த பல பத்திரிக்கை
ஜோக்குகளை / அனுபவங்களை கேள்விப்பட்டிருந்தாலும் நேரடியாக களத்தில்
இறங்கும்போதுதான், இதை எப்படி எதிர்கொள்வது என்ற கவலையும், எங்கே இருந்து
துவக்குவது என்ற குழப்பமும் என்னை மேலும் சோர்வாக்குகிறது!
CBSE போர்டின் கீழ்வரும் ஏதாவது ஒரு பள்ளியில்தான் சேர்ப்பது என்ற அளவில் மட்டுமே ஒரு தெளிவு இருக்கிறது! ஆனால், ஒவ்வொரு CBSE பள்ளியும் ஒவ்வொரு விதமான சேர்க்கை விதிமுறைகளைப் பின்பற்றுகிறது. அது மட்டுமன்றி கர்நாடகாவில் உள்ள CBSE பள்ளிகளின் விதிமுறைகள் குறிப்பாக LKG குறைந்தபட்ச சேர்க்கை வயது குறித்த விதி, தமிழ்நாட்டு CBSE பள்ளிகளைப் போலன்றி பெரிதும் மாறுபடுகின்றன. பெங்களூர் பள்ளிகளில் LKG சேர - குழந்தைக்கு, அந்தக் கல்வியாண்டின் ஜூன் 1-ஆம் தேதி குறைந்தது 3 வருடங்களும் 10 மாதங்களும் நிறைவு பெற்றிருக்க வேண்டும்! சில பள்ளிகளில் குழந்தைக்கு நான்கு வயதாகியிருந்தால்தான் LKG-இல் சேர்த்துக் கொள்வார்கள்! ஆனால் சென்னையிலோ, பெரும்பாலான CBSE பள்ளிகளில் - கல்வியாண்டின் ஜூன் 1-ஆம் தேதியன்று குழந்தைக்கு மூன்றரை வருடங்கள் நிறைவு பெற்றிருந்தாலே LKG-இல் சேர்த்துக் கொள்கிறார்கள். மேலும் சில சென்னை பள்ளிகள் குழந்தைக்கு மூன்று வருடங்களும் நான்கு மாதங்களும் நிறைவுற்றிருந்தாலே போதும் என்கின்றன!
குழப்பம் இத்தோடு நிற்பதில்லை! பல பள்ளிகள் Pre-KG முதலே குழந்தைகளைச் சேர்த்தால் மட்டுமே LKG-இல் அட்மிஷன் தருகின்றன! பெங்களூரில் Pre-KG என்பதை ஒவ்வொரு பள்ளியும் ஒவ்வொரு வகையில் வரையறுத்து, ஒவ்வொரு பெயரில் அழைத்து பெற்றோரின் தலையில் எஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச முடியையும் பிய்க்க வைக்கின்றன! நான் அறிந்து கொண்ட வரையில், புரிந்து கொண்ட அளவில் ஒன்றாம் வகுப்புக்கு போகும் முன், குட்டீஸ் படிக்கும் மேல்படிப்பை(!) கீழ்க்கண்டவாறு வரையறுக்கலாம் என நினைக்கிறேன்:
எங்கள் மகன் பிறந்தது 2010 - ஜனவரி மாத இறுதியில்! இப்போது பெங்களூரில்
எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ளதொரு ப்ளேஸ்கூலில் விளையாடிக்
கொண்டிருக்கிறான். அடுத்த ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதியன்று அவனுக்கு மூன்று
வருடங்கள் மற்றும் நான்கு மாதங்கள் மட்டுமே நிறைவுற்றிருக்கும்! அதன்படிப்
பார்த்தால் பெங்களூரில் அவன் நிச்சயமாக LKG-இல் சேர இயலாது - 2014 வரை
காத்திருக்க வேண்டும்! கோவையில் இருக்கும் என் மனைவியின் அண்ணன் மகனின்
வயது, என் மகனை விட நான்கு மாதங்கள்தான் அதிகம் - ஆனால் அவன் இந்த வருடம்
நர்சரியில் படிக்கிறான், அடுத்த வருடம் பயல் LKG போய் விடுவான்!
கிட்டத்தட்ட ஒரே வயதுடைய என் மச்சானின் மகன், கொஞ்சம் பெரிதானதும் "டேய்,
நான் உன்னை விட ஒரு வருஷம் சீனியர்" என்று என் மகனை அதட்டப் போகும்
காட்சி
இப்போதே என் கண்முன் விரிகிறது!!! :D இனிமேல் குழந்தை பெற்றுக்கொண்டால் கூட
ப்ளான் செய்து நவம்பர் இறுதியில்தான் பெற்றுக்கொள்ள வேண்டும் போல ;)
அப்போதுதான் LKG சேர்க்கும் சமயம் ஜூன் மாதம் மிகச் சரியாக மூன்றரை
வருடங்கள் நிறைவுற்றிருக்கும்! பெங்களூரில் வசிக்கும் எண்ணம் இருந்தால்
ஜூலை இறுதிக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும்! :D
சென்னையிலும் என் மகனுக்கு LKG-இல் அட்மிஷன் கிடைக்கும் வாய்ப்புக்கள் மிகச்சொற்பமே - ஏனெனில் அங்கு ஒரு சில பள்ளிகளே 3.4 வயதில் சேர்த்துக்கொள்கின்றன (மேலே உள்ள அட்டவணையைப் பார்க்க!). இதைத் தவிர்த்த ஒரு சில காரணங்களுக்காக, சென்னைக்கு மாற்றலாகிச் செல்ல வேண்டும் என்ன என்ற ஒரு எண்ணம் கடந்த ஒரு வருடமாய் இருக்கிறது. ஆனால், மகனின் LKG அட்மிஷனைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்ததும் அடுத்த வருடத்திற்குள் மாற்றலாகிச் செல்ல வேண்டும் இல்லையேல் பெங்களூரில்தான் இருக்க வேண்டி வரும் என்றதொரு கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது - இந்தப் பதிவில் முன்னரே குறிப்பிட்டதைப் போல பல பள்ளிகள் Pre-KG முதலே குழந்தைகளைச் சேர்த்தால் மட்டுமே LKG-இல் அட்மிஷன் தருகின்றன! ஒரே சமயத்தில் பெங்களூர், சென்னை இப்படி இரண்டு இடத்திலேயுமே நர்சரி அல்லது LKG அட்மிஷனுக்கு முயற்சி செய்ய வேண்டியதொரு இக்கட்டில் நான்!
சரி சொந்தக்கதையை விடுங்கள்! அடுத்த கல்வியாண்டுக்கான (2013-2014) Nursery அல்லது LKG சேர்க்கைக்கு ஒவ்வொரு CBSE பள்ளியும் இந்த வருடம் முதலே விண்ணப்பங்களை கொடுக்கத் துவங்கி விடும்! அனைத்து பள்ளிகளும் ஒரே மாதத்தில், ஒரே நாளில் கொடுப்பதில்லை. சில பள்ளிகள் அக்டோபரிலும், சில நவம்பரிலும், சில டிசம்பரிலும், மேலும் சில அடுத்த வருடம் ஜனவரியிலும் விண்ணப்பங்களை அளிக்கும் - தலை சுற்றுகிறதா?! பெற்றோரின் மாத வருமானம் முதற்கொண்டு அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து அளித்த பின்னர் ஒரு சில வாரங்களில், நேர்முகத் தேர்வு, 'அது', 'இது' என்று அழைப்பு வருமாம்! இறுதியில் அவர்களுக்கு நம்மைப் பிடித்திருந்தால், அட்மிஷன் லெட்டர் கொடுப்பார்களாம். 'கட்ட வேண்டியதை' ஒரு சில நாட்களில் கட்டா விட்டால் அட்மிஷன் கை நழுவிப் போய் விடுமாம்!
இப்படி ஒவ்வொரு பள்ளியும் ஒவ்வொரு சமயத்தில் விண்ணப்பங்கள் கொடுத்தால், எதில் விண்ணப்பிப்பது, எதை விடுவது?! ஒரு உதாரணத்திற்கு, பிரபலமான ஒரு பள்ளியில் ஜனவரி மாதம்தான் விண்ணப்பம் கொடுப்பார்கள் என வைத்துக் கொள்வோம் - அதில் அட்மிஷன் கிடைக்குமா, கிடைக்காதா என்ற உறுதியற்ற நிலையில், ஜனவரிக்கு முன் விண்ணப்பங்கள் அளிக்கும் பள்ளிகளில் முயற்சி செய்யாமலிருக்க முடியுமா? அப்படி முயற்சித்து ஏதாவது ஒன்றில் அட்மிஷன் கிடைத்து விட்டால், ஜனவரிக்கும் முன்னரே பணம் கட்டி, அட்மிஷனை உறுதி செய்யவேண்டி வருமே? பிறகு வேறு பள்ளிகளில் எப்படி விண்ணப்பிக்க முடியும்?! CBSE என்ற ஒரே போர்டின் கீழ் வரும் பள்ளிகளிலேயே இத்தனைக் குழப்பங்கள், ICSE போன்ற இதர போர்டுகளின் விதிமுறைகளுக்கு மேலும் சில பதிவுகள் தேவைப்படும்!
இவை எல்லாம், நான் விசாரித்த வரையில் சேகரித்த தகவல்களே! உங்களுக்கு இதில் நேரடி அனுபவம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன், ப்ளீஸ்?! தவிர, சென்னையில் உங்களுக்குத் தெரிந்த தரமான CBSE பள்ளிகளின் பெயர்களை பரிந்துரையுங்கள் (பள்ளி அமைந்திருக்கும் ஏரியா ஒரு பொருட்டல்ல)! பெங்களூர் பள்ளிகளைப் பற்றி தெரிந்திருந்தாலும் தெரியப்படுத்துங்கள்! :) இப்போதைக்கு ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால்தான் என்னுடைய நிலைமை - எது ஆறு, எது சேறு என்று கேட்கக் கூடாது - ஒரு ரைமிங்குக்காக சொன்னது! ;)
CBSE போர்டின் கீழ்வரும் ஏதாவது ஒரு பள்ளியில்தான் சேர்ப்பது என்ற அளவில் மட்டுமே ஒரு தெளிவு இருக்கிறது! ஆனால், ஒவ்வொரு CBSE பள்ளியும் ஒவ்வொரு விதமான சேர்க்கை விதிமுறைகளைப் பின்பற்றுகிறது. அது மட்டுமன்றி கர்நாடகாவில் உள்ள CBSE பள்ளிகளின் விதிமுறைகள் குறிப்பாக LKG குறைந்தபட்ச சேர்க்கை வயது குறித்த விதி, தமிழ்நாட்டு CBSE பள்ளிகளைப் போலன்றி பெரிதும் மாறுபடுகின்றன. பெங்களூர் பள்ளிகளில் LKG சேர - குழந்தைக்கு, அந்தக் கல்வியாண்டின் ஜூன் 1-ஆம் தேதி குறைந்தது 3 வருடங்களும் 10 மாதங்களும் நிறைவு பெற்றிருக்க வேண்டும்! சில பள்ளிகளில் குழந்தைக்கு நான்கு வயதாகியிருந்தால்தான் LKG-இல் சேர்த்துக் கொள்வார்கள்! ஆனால் சென்னையிலோ, பெரும்பாலான CBSE பள்ளிகளில் - கல்வியாண்டின் ஜூன் 1-ஆம் தேதியன்று குழந்தைக்கு மூன்றரை வருடங்கள் நிறைவு பெற்றிருந்தாலே LKG-இல் சேர்த்துக் கொள்கிறார்கள். மேலும் சில சென்னை பள்ளிகள் குழந்தைக்கு மூன்று வருடங்களும் நான்கு மாதங்களும் நிறைவுற்றிருந்தாலே போதும் என்கின்றன!
குழப்பம் இத்தோடு நிற்பதில்லை! பல பள்ளிகள் Pre-KG முதலே குழந்தைகளைச் சேர்த்தால் மட்டுமே LKG-இல் அட்மிஷன் தருகின்றன! பெங்களூரில் Pre-KG என்பதை ஒவ்வொரு பள்ளியும் ஒவ்வொரு வகையில் வரையறுத்து, ஒவ்வொரு பெயரில் அழைத்து பெற்றோரின் தலையில் எஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச முடியையும் பிய்க்க வைக்கின்றன! நான் அறிந்து கொண்ட வரையில், புரிந்து கொண்ட அளவில் ஒன்றாம் வகுப்புக்கு போகும் முன், குட்டீஸ் படிக்கும் மேல்படிப்பை(!) கீழ்க்கண்டவாறு வரையறுக்கலாம் என நினைக்கிறேன்:
Pre-Primary Courses
|
Age requirement
|
Duration
|
1. Playschool (or) Preschool
|
||
1.1.
Playgroup (or) Pre-Nursery
|
LKG
Age requirement minus 2 years (and below)
|
1
or more years depending on the age at which the child is admitted
|
1.2.
Nursery (or) Pre-KG
|
LKG
Age requirement minus 1 year
|
1
Year
|
2.
Kindergarten
|
||
2.1.
LKG - Lower Kindergarten
|
Bangalore
- 3 years & 10 months as on June 1st (some schools require 4 years to be
completed!)
Chennai
- 3 years & 6 months as on June 1st (some schools are OK with 3 years and
4 months!)
|
1
Year
|
2.2.
UKG - Upper Kindergarten
|
Promoted
from LKG
|
1
Year
|
சென்னையிலும் என் மகனுக்கு LKG-இல் அட்மிஷன் கிடைக்கும் வாய்ப்புக்கள் மிகச்சொற்பமே - ஏனெனில் அங்கு ஒரு சில பள்ளிகளே 3.4 வயதில் சேர்த்துக்கொள்கின்றன (மேலே உள்ள அட்டவணையைப் பார்க்க!). இதைத் தவிர்த்த ஒரு சில காரணங்களுக்காக, சென்னைக்கு மாற்றலாகிச் செல்ல வேண்டும் என்ன என்ற ஒரு எண்ணம் கடந்த ஒரு வருடமாய் இருக்கிறது. ஆனால், மகனின் LKG அட்மிஷனைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்ததும் அடுத்த வருடத்திற்குள் மாற்றலாகிச் செல்ல வேண்டும் இல்லையேல் பெங்களூரில்தான் இருக்க வேண்டி வரும் என்றதொரு கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது - இந்தப் பதிவில் முன்னரே குறிப்பிட்டதைப் போல பல பள்ளிகள் Pre-KG முதலே குழந்தைகளைச் சேர்த்தால் மட்டுமே LKG-இல் அட்மிஷன் தருகின்றன! ஒரே சமயத்தில் பெங்களூர், சென்னை இப்படி இரண்டு இடத்திலேயுமே நர்சரி அல்லது LKG அட்மிஷனுக்கு முயற்சி செய்ய வேண்டியதொரு இக்கட்டில் நான்!
சரி சொந்தக்கதையை விடுங்கள்! அடுத்த கல்வியாண்டுக்கான (2013-2014) Nursery அல்லது LKG சேர்க்கைக்கு ஒவ்வொரு CBSE பள்ளியும் இந்த வருடம் முதலே விண்ணப்பங்களை கொடுக்கத் துவங்கி விடும்! அனைத்து பள்ளிகளும் ஒரே மாதத்தில், ஒரே நாளில் கொடுப்பதில்லை. சில பள்ளிகள் அக்டோபரிலும், சில நவம்பரிலும், சில டிசம்பரிலும், மேலும் சில அடுத்த வருடம் ஜனவரியிலும் விண்ணப்பங்களை அளிக்கும் - தலை சுற்றுகிறதா?! பெற்றோரின் மாத வருமானம் முதற்கொண்டு அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து அளித்த பின்னர் ஒரு சில வாரங்களில், நேர்முகத் தேர்வு, 'அது', 'இது' என்று அழைப்பு வருமாம்! இறுதியில் அவர்களுக்கு நம்மைப் பிடித்திருந்தால், அட்மிஷன் லெட்டர் கொடுப்பார்களாம். 'கட்ட வேண்டியதை' ஒரு சில நாட்களில் கட்டா விட்டால் அட்மிஷன் கை நழுவிப் போய் விடுமாம்!
இப்படி ஒவ்வொரு பள்ளியும் ஒவ்வொரு சமயத்தில் விண்ணப்பங்கள் கொடுத்தால், எதில் விண்ணப்பிப்பது, எதை விடுவது?! ஒரு உதாரணத்திற்கு, பிரபலமான ஒரு பள்ளியில் ஜனவரி மாதம்தான் விண்ணப்பம் கொடுப்பார்கள் என வைத்துக் கொள்வோம் - அதில் அட்மிஷன் கிடைக்குமா, கிடைக்காதா என்ற உறுதியற்ற நிலையில், ஜனவரிக்கு முன் விண்ணப்பங்கள் அளிக்கும் பள்ளிகளில் முயற்சி செய்யாமலிருக்க முடியுமா? அப்படி முயற்சித்து ஏதாவது ஒன்றில் அட்மிஷன் கிடைத்து விட்டால், ஜனவரிக்கும் முன்னரே பணம் கட்டி, அட்மிஷனை உறுதி செய்யவேண்டி வருமே? பிறகு வேறு பள்ளிகளில் எப்படி விண்ணப்பிக்க முடியும்?! CBSE என்ற ஒரே போர்டின் கீழ் வரும் பள்ளிகளிலேயே இத்தனைக் குழப்பங்கள், ICSE போன்ற இதர போர்டுகளின் விதிமுறைகளுக்கு மேலும் சில பதிவுகள் தேவைப்படும்!
இவை எல்லாம், நான் விசாரித்த வரையில் சேகரித்த தகவல்களே! உங்களுக்கு இதில் நேரடி அனுபவம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன், ப்ளீஸ்?! தவிர, சென்னையில் உங்களுக்குத் தெரிந்த தரமான CBSE பள்ளிகளின் பெயர்களை பரிந்துரையுங்கள் (பள்ளி அமைந்திருக்கும் ஏரியா ஒரு பொருட்டல்ல)! பெங்களூர் பள்ளிகளைப் பற்றி தெரிந்திருந்தாலும் தெரியப்படுத்துங்கள்! :) இப்போதைக்கு ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால்தான் என்னுடைய நிலைமை - எது ஆறு, எது சேறு என்று கேட்கக் கூடாது - ஒரு ரைமிங்குக்காக சொன்னது! ;)
>>>குழந்தை பெற்றுக்கொண்டால் கூட ப்ளான் செய்து நவம்பர் இறுதியில்தான் பெற்றுக்கொள்ள வேண்டும் போல<<<
பதிலளிநீக்குஹா ஹா ஹா... நம்ம தலீவரு தான் சொல்லியிருக்காருல்ல 'எதை பன்னுறதா இருந்தாலும் பிளான் பண்ணி' பண்ணனும்னு...பிளான் பண்ணாம பண்ணுனா இப்பிடித்தான் ஹி ஹி ஹி!
BTW, எங்களுக்கெல்லாம் இன்னும் கல்யாணம் ஆகலை அதுக்கு முன்னமே (பே)பீதியாகுது! :) :)
அமுதா அவர்கள் பின்னூட்டத்தை பார்த்தீங்களா? நீங்களாவது என்னை மாதிரி லேட் பண்ணாம, கல்யாணத்துக்கு முன்னாடியே LKG சீட்டை புக் பண்ணி புரட்சி பண்ணுங்க பாஸூ! ;)
நீக்குகுரோம்பேட்டையில் இருக்கும் ஸ்ரீமதி சுந்தரவல்லி மெமோரியல் வரும் வருடம் ஜனவரியில் அப்ளிகேஷன் கொடுத்து பிப்ரவரியில் இண்டர்வியூ முடித்து முதல் தவணை ஃபீஸும் வாங்கி விடுவார்கள்.CBSE முறை.மூன்றாம் வகுப்பு வரை நோ யூனிஃபார்ம்,நோ வீட்டு பாடம்.மாண்டிசேரி முறையில் குழ்ந்தைகள் ஸ்கூல் போகவே விரும்பி போகிறார்கள்.இந்த ஏரியாவில் இருக்கும் மற்ற பள்ளிகளை காட்டிலும் ட்ரான்ஸ்போர்ட்,இரண்டு வேளை சாப்பாடு எல்லாம் சேர்த்தும் அவர்கள் வாங்கும் ஃபீஸ் ஓகே தான். இந்த வருடம் முதல் LKG மட்டுமே அட்மிஷன். என் தம்பி மகன் ஒண்ணாப்பில் இங்கே சேர்ந்து சார் இப்போ இரண்டாப்பு படிக்கிறான்.2 ஆம் வகுப்பு வரை அவர்களின் பெருங்களத்தூர் ப்ராஞ்சில் தான் படிக்கணும். 3 லிருந்து குரோம்பேட்டை விருப்பபட்டால் மாறிக்கலாம். இந்து முறைப்படி ஸ்லோகங்கள் நிறைய சொல்லி தருகிறார்கள்.
பதிலளிநீக்குகீழ்கட்டளையில் ரவீந்திர பாரதி ஃபீஸ் மிக அதிகம். சில பள்ளிகள் தமிழக அரசின் சமச்சீர் கொள்கையினால் அவசரமாக c.b.s.Eகளாக மாறிக் கொண்டு இருக்கின்றன. போன வருடம் அப்படி சில பள்ளிகள் புதியதாக c.b.s.e கிளைகளை அவர்களின் அதே கேம்பசில் பணத்திற்காக ஆரம்பித்தும் விட்டன.
தகவல்களுக்கு மிகவும் நன்றி! இந்தப் பள்ளிகளைப் பற்றிய மேலதிக தகவல்களை இணையத்தில் தேடிப் பார்க்கிறேன்! இவர்கள் எத்தனை வயதில் LKG சேர்த்துக் கொள்வார்கள்?!
நீக்குஉங்க குழந்தையினை வரும் வருடம் ஜூனில் தொடங்கும் எல்.கே.ஜிக்கு அட்மிஷன் செய்யலாம். 3 வயது முடிந்து இருக்கணும்.
நீக்குநன்றி :)
நீக்குஅவசியம் பதிவை படிச்சிட்டு தான் கம்மென்ட் போடனுமா?
பதிலளிநீக்கு:( :( :(
அதான், படிக்காமலேயே கமெண்டு போட்டாச்சே!! :D
நீக்கு>>>அவசியம் பதிவை படிச்சிட்டு தான் கம்மென்ட் போடனுமா<<<
நீக்குஇதுவும் இலக்கணம் மற்றும் இலக்கியத்தின் கீழ் கூறப்பட்ட கமெண்ட்தாக்கத்தான் இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்! சென்ற முறை அவரது இலக்கண புதிரை இலகுவாக அவிழ்த்துவிட்டதால் இம்முறை சற்று கடினத்தை புகித்திவிட்டார் என்று கருதுகிறேன் இம்முறை புதிர்க்கான விடை என் சிருமூளைக்கு எட்டாததால்..பெருமூளையை தோண்டி பார்த்து ஏதாவது விஷயம் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்! :D
//அவசியம் பதிவை படிச்சிட்டு தான் கம்மென்ட் போடனுமா?//
நீக்குவிளக்கவுரை:
//அவசியம் பதிவை// - அவசியமான பதிவு!
//படிச்சிட்டு// - படித்து விட்டேன் (மன்னிச்சு ஸ்டைலில்!)
//தான் கம்மென்ட் போடனுமா?// - இது நான் சொல்லித்தான் தெரியணுமா?! ;)
:) :)
நீக்குபொங்கி வரும் சிரிப்பை வாயை பொத்திக் கொண்டு அடக்குவது எப்படிப்பட்ட வேதனை என்று தெரியாமல் நீங்கள் இருவரும் கம்மென்ட் போடுறீங்க....
நீக்கு:( :( :(
:) :) :)
நீக்கு>>>
நீக்கு//அவசியம் பதிவை படிச்சிட்டு தான் கம்மென்ட் போடனுமா?//
விளக்கவுரை:
//அவசியம் பதிவை// - அவசியமான பதிவு!
//படிச்சிட்டு// - படித்து விட்டேன் (மன்னிச்சு ஸ்டைலில்!)
//தான் கம்மென்ட் போடனுமா?// - இது நான் சொல்லித்தான் தெரியணுமா?! ;)
<<<
கோனார் தமிழ் உரையில் கூட இப்படிப்பட்ட விளக்கத்தை கான இயலாது...இவ்வருடத்திய ஆக்கச்சிறந்த விளக்க உரை...மனப்பாடம் செய்துகொண்டேன்..நன்றி! :D
>>>பொங்கி வரும் சிரிப்பை வாயை பொத்திக் கொண்டு அடக்குவது எப்படிப்பட்ட வேதனை என்று தெரியாமல் நீங்கள் இருவரும் கம்மென்ட் போடுறீங்க<<<
நீக்குஇக்கருத்துக்கான புதிரை என்னால் அவிழ்க்க முடிந்தது.. இக்கருத்துரையில் 'உயர்வு நவிற்சி அணி' புகுத்தப்பட்டிருப்பதை உணர்க!
உயர்வு நவிற்சி அணி என்பது ஒன்றைப் பற்றி மிகவும் உயர்த்தி, அளவுக்கு மேல் மிகுத்துக் கூறுவது. அதாவது இரசனையுடன் உயர்த்திக் கூறுவது!
#வரலாறு இங்கே அதிகமாய் உரிமை எடுத்துக்கொண்டு ஓவராய் கும்மியடிப்பதாக இருந்தால் அதனை கண்டிக்க ப்ளேட்பீடியா ஓனருக்கு உரிமை உண்டு! :)
கும்மிக்கு தடையில்லை, கண்டிக்கவெல்லாம் மாட்டேன்! :D ஆனால், இதற்கு தண்டனையாக சென்னையில் உள்ள ஒவ்வொரு CBSE பள்ளியிலும் LKG-க்கான விண்ணப்பங்களை வரிசையில் நின்று பெற்றுத் தர வேண்டும்! ;)
நீக்கு>>>சென்னையில் உள்ள ஒவ்வொரு CBSE பள்ளியிலும் LKG-க்கான விண்ணப்பங்களை வரிசையில் நின்று பெற்றுத் தர வேண்டும்<<<
நீக்குஒரு பள்ளியில் விண்ணப்பம் வாங்கவே ஒரு வாரம் குளிக்காமலும் பல்துலக்காமலும் வரிசையில் நிற்க வேண்டுமா...என்றால் சென்னையிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் விண்ணப்பம் வாங்க வேண்டுமென்றால் ஆயுசுக்கும் நிற்க வேண்டுமே? ஒரே ஒரு நாள் லைட்டா கும்மியடித்ததற்க்கு இவ்வளவு பெரிய தண்டனையா? :D :D
தண்டனை இல்லை - ஒரு பயிற்சியாக எடுத்துக் கொள்ளுங்கள்! ;) எப்படியும் கல்யாணம் ஆகி குழந்தை குட்டி ஆகத்தானே போகிறது! ;)
நீக்கு:) :) :)
நீக்கு>>>
நீக்குதண்டனை இல்லை - ஒரு பயிற்சியாக எடுத்துக் கொள்ளுங்கள்! ;) எப்படியும் கல்யாணம் ஆகி குழந்தை குட்டி ஆகத்தானே போகிறது ;)
<<<
ஹி ஹி..அதுவும் சரிதான்!
அடையார் சிஷ்யாவில் குழந்தை வயற்றில் இருக்கும் போதே அட்மிஷன் கொடுத்து விடுகிறார்கள். என் சொந்தக்கார பெண் அவரின் மகளுக்கு 2015க்கு இப்போதே LKG அட்மிஷன் வாங்கிட்டாராம்!!! நீங்க எல்லாம் டூடூடூ லேட்.
பதிலளிநீக்கு// 2015க்கு இப்போதே LKG அட்மிஷன் வாங்கிட்டாராம்//
நீக்குஇதெல்லாம் ஒரு ஜோக்குக்குத்தான் சொல்லறாங்கன்னு நெனச்சேன்! :( :( :(
ரொம்ப டெரர்ரா இருக்கே :( :(
நீக்குஉண்மை எனது நண்பரும் குழந்தை பிறந்த உடனேயே அப்பள்ளியில் apply செய்துள்ளார்.
நீக்குஅப்பொழுது அவர் மிகவும் வருத்தப்பட்டார்.தான் மிகவும் தாமதமாக முயற்சி செய்ததற்காக.
நீக்குகொடுமை! :(
நீக்குஉண்மை.. உண்மை... நானும் முதலில் நம்பவில்லை. என் ஆபீஸில் ஒருவர் சீட் வாங்கியிருப்பதை கண்டு உணர்ந்தபிறகே இதை உண்மை என உணர்ந்தேன்..
நீக்குஇன்றைக்கு மிகச் சிறந்த தொழில் இது தான்... காலத்தின் கொடுமை...
பதிலளிநீக்கு/// குழந்தை வயற்றில் இருக்கும் போதே அட்மிஷன் கொடுத்து விடுகிறார்கள். - அமுதா கிருஷ்ணா ///
பல ஊர்களிலும் இப்படி ஆகிக் கொண்டே வருகிறது...
வேறு வழியில்லை போல :)
நீக்குஅட கடவுளே ....
பதிலளிநீக்குதொழிற்களம் உதவி ஆசிரியர் பணி (உங்கள் நபர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் சகோ)
In SSM, they are not taking the student directly to LKG. The student will be admitted to JM1 (Pre-kg). Otherwise, we can admit the kid to Class I.
பதிலளிநீக்குThanks for the info Prarthana! I hear (from parentree.com) that the admissions are already closed in SSM?
நீக்குjust noticed சிவா G also pointed out the same!!!
நீக்குIn SSM I heard that the admission for the next academic year has been closed already.
பதிலளிநீக்குhmmm... too bad!
நீக்குHi Karthik,
பதிலளிநீக்குIf I remember correctly from our last meet, you are put up in RT Nagar,
The best school in CBSE would be Kendriy vidyalaya but they take admission only from 1st standard.
All Pre KG, LKG, UKG, (Mont 1, 2, 3) do not come under CBSE Board.
I am not sure but I was told CBSE dont have a standard sylabus untill 8th standard, they only give a frame work for the schools and every school can have there own books until 8th standard.
So the best option would be for you to check in the Kendriay vidyala although it is very difficult to get as first preference is for service men and then Central govt emplyees, then state govt then General public :)
Regards
Suresh
Yes, you're right - I live near RT Nagar.
நீக்குDoes Kendriya Vidyalayas have Nursery & Kindergarten?!
நானும் ஜோக்குகள் படித்துவிட்டு, உண்மையில் அப்படி இருக்காது என்று நினைத்திருந்தேன். ஆனால், உண்மை நிலைமை அதை விட மோசம்.
பதிலளிநீக்குநம் சிறு வயதில் பள்ளியில் சேர்க்கும் போது, நம் அப்பாக்கள் சொன்ன தேதியே பிறந்த தேதியாகிவிடும். அப்படி ஜூன், ஜீலையில் பிறந்தவர்கள் நம் நாட்டில் ரொம்ப அதிகம்.
பின்குறிப்பு: என் மகன் பிறந்த நாள் : நவம்பர்
//அப்படி ஜூன், ஜீலையில் பிறந்தவர்கள் நம் நாட்டில் ரொம்ப அதிகம்.//
நீக்குநச்சென்று சொல்லியிருக்கிறீர்கள்!!!
//பின்குறிப்பு: என் மகன் பிறந்த நாள் : நவம்பர்//
lucky lucky! :)
Payankarama irukkuhu saami.appadiye fees vivaramum sollunka.inke (rajashthan) lkg kku varusa fees 15,000.books,dress,transport charges thani.anke eppadi?
பதிலளிநீக்கு//varusa fees 15,000//
நீக்குஅட! ரொம்ப கம்மியா இருக்கே!!! :D இங்க எல்லாம் அது ஒரு டெர்முக்கு கூட பத்தாது! ;)
school பெயர் central academy இங்கே ஜோத்பூரில் உள்ள பள்ளிகளில் இதுவும் குறிப்பிட தக்க ஒன்று. மதியம் வரை மட்டுதான் ஸ்கூல்.நம்ம ஊரில்தான் சாயங்காலம் வரை பிள்ளைகளை வதைக்கிறோம்.உங்க வார்த்தை படி பார்த்தா அங்க நானெல்லாம் வாழவே முடியாது போல....நீங்க அங்கேயே நல்லா இருங்க நான் இங்கேயே இப்படி கியா மியா ஹிந்தியோடு மல்லுகட்டிகிறேன்.
பதிலளிநீக்குபதிவோடு நிற்காம தீயா வேலை பார்க்கணும்.....ஆமா! விடா முயற்சி விஸ்வரூப வெற்றி !!!!!
//விடா முயற்சி விஸ்வரூப வெற்றி !!!!!//
நீக்கு:) :) :)
Went through the same last year for my daughter. I'm in Bangalore, but towards Marathahalli. Don't know about schools in the RT Nagar area (except Vidya Shilp/Sagar that's supposed to be very good and very hard to get into).
பதிலளிநீக்குI used this site extensively to get information on schools: http://www.parentree.in/info/Bangalore.html
You'd probably have found this already, but just in case.
If there's a National Public School in your area, I'd think that'd be the first choice. Fee is reasonable, standards are very good.
I think there's a Delhi Public School franchise in the north somewhere. Not sure about them, but I found DPS Whitefield to be over-crowded and disorganized. Heard this from friends as well about DPS Sarjapur Road.
BTW, have been reading your blog for a while now. Especially liked your Salem posts. I was living in Erode around the same time and have done the same comic-hunting rounds there. My father was in PWD and we used to shift every few years too.
Thanks a lot for your detailed response! Yeah, I do use Parentree. However I find it little difficult to find information there due to their outdated forum design.
நீக்குI am not sure if NPS is here - let me check their website. Yes I have heard of Vidyashilp but are they not ICSE?
And a big thanks for following my blog :) I do miss those Salem days dearly :( who knows we might have even crossed each other @ some old book stall... lol
தமிழை ஒரு பாடமாக பெங்களூரில் படிக்க வைக்க முடியுமா? இல்லை கன்னடம் தான் படிக்க வேண்டுமா?
பதிலளிநீக்குஒரு சில பள்ளிகளில் மட்டுமே அந்த வசதி இருக்கிறது - நான் சென்னை செல்ல விரும்புவதற்கு இதுவும் ஒரு காரணம்!
நீக்குஉங்களின் காமிக்ஸ் பதிவிற்கு பின் தான் கமெண்ட்ஸ் இடலாம் என்றால் வேலைக்கு ஆகவில்லை.: (
பதிலளிநீக்குமற்ற பதிவுகளுக்கும் கருத்திடலாம் - ஏதும் தடையில்லை! :) ஆனாலும், நீங்கள் சில மணி நேரங்கள் பொறுத்திருந்திருக்கலாம் ;) புதிய காமிக்ஸ் பதிவு இப்போது வெளியாகியிருக்கிறது!!!
நீக்குதமிழ் நாட்டு கல்வி விதிகளின்படி பொருத்தவரை உங்கள் குழந்தையை ஜூன் 2013 இல் தாராளமாக எல்.கே.ஜி.சேர்க்கலாம்.அதாவது முதல் வகுப்பில் சேர்க்கப் படும்போது july 31 அன்றுள்ளபடி ஐந்து வயது முடிந்திருக்க வேண்டும்.
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி! இருப்பினும் இது ஒவ்வொரு பள்ளியிலும் வேறுபடுகிறது! :(
நீக்குபேசாமல் நீங்களே ஒரு ஸ்கூல் ஆரம்பித்து விடலாமே!சீக்கிரம் சென்னைக்கு வாங்க சார்.
பதிலளிநீக்கு