ஆகஸ்ட் மாதம் 'ஆ, வொர்ஸ்ட்!' மாதம் ஆக இருந்தது, அலுவலகத்தில் வேலைப்பளு கூடியதன் எதிரொலி! :) ரொம்பவே குறைவான பதிவுகள், குட்டிப்ளேடு டாட் காம் என்று ஒரு வெட்டி முயற்சி என (அ)சுவாரசியமாக இருந்தது! kuttiblade.com தொடர்வது பற்றிய என்னுடைய முடிவு, அது தமிழ்மணத்தில் இணைக்கப்படுவதை சார்ந்து இருக்கிறது! ;) படிக்க ஆள் இல்லாமல் பாடம் நடத்த விருப்பம் இல்லை! :D
தமிழ்மணம் என்றதும் இன்னொரு முக்கியமான சங்கதி ஞாபகத்திற்கு வருகிறது! இந்த தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. காத்திருப்பு பட்டியல் வெகு நீளமாக இருக்கிறது! அதுவுமின்றி காமிக்ஸ் பதிவர்களை தமிழ்மணம் ஏன் நிராகரிக்கின்றது என்பது புரியவில்லை! சமீபத்தில் ஒரு சில காமிக்ஸ் பதிவர்கள் தங்கள் வலைப்பூக்களை தமிழ்மணத்தில் இணைக்க முயற்சித்து தோல்வியையே சந்தித்துள்ளனர்! வலைப்பூவை நிராகரித்து மெயில் அனுப்பும் போது அதற்கான காரணத்தையும் விளக்கினால் நன்றாக இருக்கும்!
அப்புறம், தமிழ்மணம் டாப் 50 வலைப்பூக்கள் வரிசையில் சில நாட்களுக்கு முன் நுழைந்தாயிற்று, இன்றைய நிலவரப்படி 42வது ரேங்க்! கடந்த வாரம் ஒரு பதிவில் சொன்னதை இங்கே ரிபீட் செய்ய விரும்புகிறேன்! "நான்கு மாதங்களுக்கு முன் ப்ளேட்பீடியாவை தமிழ்மணத்தில் இணைத்த போது கிட்டத்தட்ட 2000-ஆவது ரேங்க்! ஒருவழியாக இன்று தமிழ்மணத்தின் டாப் 101 லிஸ்டில் நுழைந்தாயிற்று ;) எந்த ஒரு தில்லுமுல்லும் செய்யாமல், கள்ள ஓட்டுக்கள் போடாமல் / வாங்காமல் - இந்த இடத்தை அடைந்தது மிக்க மகிழ்ச்சியை தருகிறது! :)"
பெங்களூரில் இம்மாதம் 7 மற்றும் 8 ஆம் தேதி (சனி, ஞாயிறு) - Comic Con Express 2012 கண்காட்சி நடைபெறவிருக்கிறது! காமிக்ஸ் இரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்! மற்றவர்களும் கலந்து கொள்ளலாம், அனுமதி இலவசம்! மதிய உணவை அருகில் உள்ள ஓட்டல்களில் சொந்த செலவில் சாப்பிட்டுக் கொள்ளலாம்! காமிக்ஸ் தவிர்த்து வீடியோ கேம்கள், அனிமேஷன் மற்றும் சினிமா சார்ந்த ஸ்டால்களும் இருக்கும் என தெரிகிறது! மேலதிகத் தகவல்களுக்கு இங்கே செல்லவும்! தமிழ்நாட்டில் இப்போதைக்கு ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று காமிக்ஸ் வெளியிட்டுக் கொண்டிருக்கும் பிரகாஷ் பப்ளிஷர்ஸின் ஸ்டாலும் இவ்விழாவில் இடம் பெறப் போகிறது! லயன் காமிக்ஸின் அடுத்த வெளியீடான Wild West ஸ்பெஷல் இவ்விழாவில் வெளியிடப்படுகிறது என்பது கூடுதல் தகவல் - கௌபாய் (காமிக்ஸ் / சினிமா) இரசிகர்கள் கவனத்திற்கு!
இது குறித்த எடிட்டர் விஜயனின் சிறப்புப் பதிவை இங்கே பார்க்கலாம்!
மேற்கே ஒரு பயணம்!
கடந்த மாதத்தில் என்னுடைய பேவரைட் பதிவுகள் சில (அடப்பாவி, நீ போட்டதே சில பதிவுகள்தானே!):
- அது ஒரு இசை, இது ஒரு இசை, இதுவும் ஒரு இசை!
- லயன் காமிக்ஸ் Double-Thrill ஸ்பெஷல் - ஒரு காவியப் பார்வை
- மழுங்கிய மனிதர்கள் - 3 - ஹலோ, ராங் நம்பர் ஹியர்!
|
|
|
|
அசுர வளர்ச்சி .. :) அடுத்த அப்டேட்டிற்குள் டாப் 10-க்குள் நுழைய இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் நண்பா!
பதிலளிநீக்குசாரி வாழ்த்துக்கள் நண்பரே! :)
நீக்குRank 41 , Rank 42 இலும் இருக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்..
நீக்குசூப்பர் போட்டி மச்சி பார்க்க ஜாலியா இருக்கு..
நம்ம பாசித், பிரபு (சீனியரிலும் சீனியர் பதிவர்கள்) உங்களுக்காக வெயிட் பண்றாங்க (15 , 18 ) சீக்கிரம் நால்முனை போட்டியை பார்க்க ஆவலாய் இருக்கிறேன்.. நடத்துங்க
//வாழ்த்துக்கள் நண்பா!//
நீக்கு&
//சாரி வாழ்த்துக்கள் நண்பரே! :)//
ரெண்டுத்துலேயும் வாழ்த்துக்கள்தானே சொல்லி இருக்கீங்க? வாத்துக்கள் இல்லையே! ;)
@ஹாரி பாட்டர்
நீக்குநீங்களும் ரொம்ப பக்கத்துலதான் இருக்கீங்க! ;) தன்னடக்கத்தோட அதை வெளில சொல்லலியோ? ;)
///ரெண்டுத்துலேயும் வாழ்த்துக்கள்தானே சொல்லி இருக்கீங்க? வாத்துக்கள் இல்லையே! ;)///
நீக்குசம வயதுள்ளவரை நண்பா என்றழைக்கலாம், வயதில் மூத்தவரை நண்பரே என்று அழைப்பது தானே மரியாதை! :)
அய்! ;) வாழ்த்த வயதில்லாமல் வணங்குகிறீர்களாக்கும்! :D "நண்பா" என்று அழைக்க வயது பொருட்டு இல்லை! எடுத்த உடனேயே ஏக வசனத்தில் ஆரம்பிப்பவர்களை கண்டால்தான் கொஞ்சம் அலெர்ஜி! இதெல்லாம் ஓகே! :)
நீக்குஆமா உங்க வயசு என்ன? தெரிஞ்சா கால்ல விழுந்து கும்பிடலாம்! வரலாற்று ஆசிரியர்னா கொஞ்சம் அதிகமாதானே இருக்கும்? ;)
வரும் மே மதம் ஒன்றாம் தேதி வந்தால் வரலாறுக்கு 2013 ஆகிறது! :) :)
நீக்கு//வரும் மே மதம் ஒன்றாம் தேதி வந்தால் வரலாறுக்கு 2013 ஆகிறது! //
நீக்கு2013-ல் 01 என்ற தேதியை எடுத்தால், 23. இதான் உங்க வயதா?
:D :D :D
பிரபலம் ஆனாலே ஆட்சியில நடக்கிற தப்புகளை தட்டி கேட்க்கிற வழக்கம் தானே.. (பிளேட் டு தமிழ்மணம்) நீங்க கேளுங்க நண்பா.. நானும் தோளுக்கு தோள் கொடுக்கிறேன்.. ஏன்னா பயபுள்ளங்க நம்ம பிளாக்கையும் பெண்டிங்ல தான் வைச்சு இருக்காங்க..
பதிலளிநீக்குநல்ல ஓட்டு 3
//நல்ல ஓட்டு 3//
நீக்கு:) :) :)
மேன்மேலும் சிறக்க நல்வாழ்த்துக்கள் நண்பரே...
பதிலளிநீக்குமிக்க நன்றி தனபாலன்!
நீக்குகார்த்திக், எடிட்டர் விஜயனின் பதிவையும் உடனே அப்டேட் பண்ணிட்டிங்களே. உங்க வேகம் தொடரட்டும்.
பதிலளிநீக்குஅப்படியே பெங்களுரு COMIC CON செய்திகளையும், நம்ம லயன் காமிக்ஸ் ஸ்டால் எண் B -17 செய்திகளையும் உடனுக்குடன் எதிர்பார்க்கிறோம். கலக்குங்க.
என்னால் முடிந்த அளவு முயற்சி செய்கிறேன் கார்த்தி! :) இரண்டரை வருட குழந்தையை வைத்துக்கொண்டு weekend-இல் தனியாக வெளியே சுற்றினால் வீட்டில் புரட்சி வெடித்து விடும்! :D
நீக்குகாத்திருக்கும் மற்றும் நிராகரித்தவர்கள் பட்டியலில் நானும் உள்ளேன் நண்பரே.
பதிலளிநீக்குமுடிந்தளவு காமிக் கான் பற்றிய அப்டேட் களை கொடுங்கள் நண்பரே.
ஆவலாக உள்ளோம்.
முடிந்தால் நம்ம ஆசிரியரை பேட்டி எடுத்து வீடியோ போடுங்கள்.
//நிராகரித்தவர்கள் பட்டியலில் நானும் உள்ளேன்//
நீக்குadmin@thamizmanam.com-க்கு மெயில் அனுப்பி காரணம் கேளுங்கள்! :)
//முடிந்தளவு காமிக் கான் பற்றிய அப்டேட் களை கொடுங்கள் நண்பரே. ஆவலாக உள்ளோம்.//
மேலே கார்த்திகேயனுக்கு கொடுத்த பதிலை படிக்கவும்! :)
//முடிந்தால் நம்ம ஆசிரியரை பேட்டி எடுத்து வீடியோ போடுங்கள்.//
அதுக்கு அவர் ஒத்துக்கணுமே?! ;) அதுவும் இல்லாம நான் சன் டிவி நிருபர் இல்லையே :D
உங்களின் சேவை நாட்டிற்குத் தேவை.... (சில அடிகள் வாங்கினாலும் வரலாறு நாளை உங்களைப் பற்றிப் பேசும் ... இப்படித்தான் உசுப்பேத்தணும் :) )
நீக்கு//சில அடிகள் வாங்கினாலும்//
நீக்கு:)
வாழ்த்துக்கள் நண்பா!
பதிலளிநீக்குஇன்று என் தளத்தில்
வாஸ்து பிரச்சனையில் வடிவேலு!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6.html
//வாஸ்து பிரச்சனையில் வடிவேலு!//
நீக்குபதிவின் தலைப்பு அருமை! :D
comic con பற்றிய பதிவுகளை ஆஆஆஆஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.....
பதிலளிநீக்குComic con il editarudan
பதிலளிநீக்குphoto eduthu poduveerkala...
அபார வளர்ச்சி!
பதிலளிநீக்குப்ளேட்பீடியா பேஸ்புக் தளத்தை 'Dis'Like செய்துவிட்டேன்.
:D :D :D
வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு