குட்டி ப்ளேடு டாட் காம்!

நண்பர்களே, வணக்கம்! என் பெயர் கார்த்திக் (அதான் தெரியுமே!). புதிதாக http://www.kuttiblade.com/ என்ற வலைப்பூவில் எழுதத் தொடங்கி இருக்கிறேன்! 'ஏற்கனவே இந்த ப்ளேட்பீடியாவில் எழுதுறியே, ஏன் இந்த வெட்டி வேலை?!' என்று நீங்கள் கேட்கலாம்! ப்ளேட்பீடியாவிற்கு என்று ஒரு இமேஜ் உள்ளது (அப்படியா?)! ஓரளவு உபயோகமுள்ள(!) பதிவுகளாக இதில் எழுதி வருகிறேன்! சரி, முறைக்காதீர்கள்! டீல் இதுதான் - பக்கம் பக்கமாய் எழுதினால் அது ப்ளேட்பீடியாவிலும், பத்தி பத்தியாய் எழுதினால் அது குட்டிப்ளேடிலும் வெளிவரும்! :) எழுத நிறைய விஷயங்கள் இருக்கிறது, ஆனால் அவற்றை எல்லாம் ப்ளேட்பீடியாவில் எழுதி மொக்கை போட விரும்பவில்லை! எழுத வேண்டும் என்று நினைப்பதை, அதிகம் அலட்டிகொள்ளாமல் ஒரு போஸ்ட் கார்டில் எழுதுவதைப் போல, சட்டென்று casual ஆக எழுதத்தான் இந்த புதிய வலைப்பூ!

இதையே ட்விட்டரிலோ, ஃபேஸ்புக்கிலோ, கூகிள் பிளஸ்ஸிலோ செய்யலாம்தான்! ஆனால் அப்படி எழுதினால் தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் வந்து தொலைக்காதே! ;) அதுவுமன்றி, அந்தத் தளங்களில் எனது நண்பர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவே! இந்த தளத்திற்கு என்ன பெயர் வைப்பது என்பதே பெரிய குழப்பமாகத்தான் இருந்தது! நான் பரிசீலித்த பெயர்களில் சில:
| குட்டிப்ளேடு! | குறும்பதிவு! | குறும்பதிவன்! | போஸ்ட் கார்டு பதிவுகள்! |

எனது அதி தீவிரவாதி வாசகர் திண்டுக்கல் சரவணன், வலைப்பூ பெயரில் ஒரு ப்ளேடு டச் இருக்க வேண்டும் என விரும்பியதால் குட்டிப்ளேடு தேர்வாகியது! குட்டியின் சுட்டி இதோ, தட்டிக் கொடுத்து விட்டு வாங்களேன் ப்ளீஸ்! :)

கருத்துகள்

  1. ஒன்னுக்கு ரெண்டா தொடங்குனாத்தான் ஒருத்தரும் மிஸ் ஆகமாட்டாங்கன்னு ஒரு முடிவோடதான் இருக்கீங்கன்னு தெரியுது!

    சும்மா வளைச்சு வளைச்சு பிளேடு போடுங்க, ஒருத்தரும் தப்பக்கூடது! :D

    பதிலளிநீக்கு
  2. "கத்திபீடியா" என்று பேர் வச்சிருக்கலாமே? சூப்பர் டச்சா இருக்கும்.

    :D :D :D

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ளேடு பிராண்ட் அதில இல்லையே! ;)

      நீக்கு
    2. சின்ன ப்ளேட் மூலம் பெரிய அறுவை...

      பெரிய கத்தி மூலம் சின்ன அறுவை...

      இப்படி யோசித்தேன்...

      நீக்கு
  3. "அரைபக்கத்தில் 'அறு'சுவை!

    புதிய தளத்திற்கு வாழ்த்துக்கள் சகோ.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரை பக்கத்தில் அறுவை! ;)

      //புதிய தளத்திற்கு வாழ்த்துக்கள் சகோ.!//
      நன்றி! :)

      நீக்கு
  4. தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி... (TM 3)

    பதிலளிநீக்கு
  5. பெரிய ப்ளேடையே பார்த்துட்டோம் குட்டி ப்ளேடு எல்லாம் ஜுஜூபி :-))))

    பதிலளிநீக்கு
  6. ரொம்ப நாட்களுக்கு பின்னர் ஒரு கருத்து உங்களுக்கு இடுகிறேன்....சின்ன blade வச்சி சிக்கிரம் அறுக்க முடியாவிட்டாலும் ரொம்ப வேதனையை தரும் அப்படி இருக்கும்மா....வணக்கம்! என் பெயர் கார்த்திக் (நம்புங்க ப்ளீஸ்) நம்பிட்டோம்...எப்படி இருக்கிங்க கார்த்திக்...குட்டி ப்ளேடிலும் சாதனை அறுவை புரிய வாழ்த்துக்கள்...உங்க மெயில் id கிடைக்கும்மா ஒன்னும் விஷயம் எல்லாம் இல்லை சும்மா தான் கேட்கிறேன்...chinnamalai7@gmail.com இது என்னுடையது...

    பதிலளிநீக்கு
  7. வாங்க வாங்க 'தல போல வருமா'! :) ஆமா, குட்டி ப்ளேடு மூலம் அறுத்தா கழுத்து அறுபடாது ஆனா ரொம்ப வலிக்கும்! ;)

    I've sent u a mail :)

    பதிலளிநீக்கு
  8. நாம ஊர்ல இல்லாத நேரம் பார்த்து பயபுள்ளைங்க எல்லாம் கிளம்புதுங்க நடத்துங்க வார்ரம்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia