தலைப்பில் உள்ள வடிவேலு காமெடியை யாராலும் மறக்க முடியாது - ஆனால்
எரிச்சலூட்டும் ஓசைகளை இசை என்று சொல்ல முடியுமா? சில ஓசைகள் கேட்கவே காது
கூசும், சிலதோ நினைத்துப் பார்த்தாலே உடலை கூச வைக்கும்! உதாரணத்திற்கு
சுண்ணாம்புச் சுவற்றில் நகங்களால் கீறினால் ஒரு ஓசை எழுமே, அதை கொஞ்சம்
மனதுக்குள்ளேயே ஓடவிட்டுக் கேளுங்கள்... டக்கராக(!) இருக்கிறது அல்லவா?
அப்படிப்பட்ட சில ஓசைகளைத்தான் இந்தப் பதிவில் ஓசையில்லாமல் அலசப்
போகிறோம். அலெர்ஜியாக இருந்தால் அப்படியே காதை மூடிக்கொண்டு ஓடி விடுங்கள்!
:)
என்னுடையா ஆல்டைம் சவுண்ட் அலெர்ஜி பேவரைட், மேற்சொன்ன சுண்ணாம்பு + நகம் காம்பினேஷன்தான்! சின்ன வயதில் நாங்கள் குடியிருந்த சில வாடகை வீடுகளில் சுவற்றுக்கு டிஸ்டம்பர், எமல்ஷன் பெயிண்ட் எல்லாம் அடித்திருக்க மாட்டார்கள் - வெள்ளை சுண்ணாம்பு அல்லது கலர் கலந்த சுண்ணாம்புதான்! என்னை வெறுப்பேற்றுவதற்கென்றே என் அண்ணன் அடிக்கடி நகங்களால் சுவற்றைப் பிராண்டுவான்! ரொம்ப கடுப்பானால், பதிலுக்கு என் நகங்களால் அவன் கைகளைப் பிராண்டி இரத்தம் பார்ப்பது என் வாடிக்கையாக இருந்தது! ;) ஒரு சில வீடுகளில் கிணறுகளும் இருந்தன, அவற்றில் தண்ணீர் சேந்தும் போது அந்த துருப்பிடித்த கப்பிகள் ஒரு விதமான கிரீச், கிரீச் சப்தத்தை எழுப்பும். ஒவ்வொரு வேகத்தில் ஒவ்வொரு வகை கிரீச்சை வெளிப்படுத்தி காதுகளை ரணமாக்கும்! அப்புறம் ஸ்கூலில் வாத்திகள் வரக் வரக் என்று சாக்பீஸால் கரும்பலகையில் எழுதும்போது எழும்பும் அந்த ஒலியில் படித்ததெல்லாம் மறந்து விடும்!
சரி மலரும் நினைவுகளை (ஓசைகளை?) மூட்டை கட்டி வைத்து விட்டு, சில எரிச்சலூட்டும் ஓசைகளை பட்டியலிடுகிறேன். முதலில், 'நீங்களே வீட்டில் செய்து கேட்கலாம்' ரக ஓசைகள்!:
கீழே உள்ள ஓசைகள் பிறரால் அல்லது பிறவற்றால் எழுப்பப்படுவது! படு எரிச்சலாக்கும் ஓசைகள் இவை:
இவற்றைப்போல இன்னும் பற்பல இனிய ஓசைகள் நம்மை சுற்றி ஒலித்துக்கொண்டுதான் உள்ளன! அவற்றில், உங்களுக்கு பிடித்தவற்றை(?!) பின்னூட்டம் மூலம் பட்டியலிடுங்களேன்! :) இப்படிப்பட்ட ஓசைகளை கேட்டால் டென்ஷனாகி, வெறி தலைக்கேறி - சண்டைக்கு போவது, பொருட்களை போட்டு உடைப்பது, தலையை பிய்த்துக் கொள்வது - ஒரு வகை வியாதி - அதற்குப் பெயர் Misophonia! அது உங்களில் யாருக்காவது இருக்கிறதா என்றும் தெரியப்படுதுங்களேன்!

- சுண்ணாம்புச் சுவற்றில் நகங்களிற்கு பதிலாக ப்ளேடை வைத்து பிராண்டவும் - என்னை அல்ல
- இரண்டு நன்கு துருப்பிடித்த தகரங்களை ஒன்றின் மேல் ஒன்று வைத்து நன்கு உராயலாம் - விளைவுகள் நறநறவென இருக்கும்! இதையே இரண்டு செங்கற்கள் மூலமும் செய்து பார்க்கலாம்!
- பலூனை பெரிதாக ஊதிக் கட்டி விட்டு, அதன் மேற்பறப்பை கைகளால் மெதுவாக தேய்க்கலாம் - இது உங்கள் கைங்கர்யம் என்று தெரியாதவர்கள், அருகே இருப்பவரின் பின்புறத்தை சந்தேகப் பார்வை பார்க்கும் வாய்ப்புள்ளது!
- நல்ல
மொடமொடப்பான பிளாஸ்டிக் கவரை இரக்கமே இல்லாமல் கசக்கலாம் - உங்கள் மனைவி
டிவி சீரியலை பார்க்கும் போது இதை செய்தால் விளைவுகள் இன்னமும் பயங்கரமாக
இருக்கும்!
- கதவில் துருப்பிடித்த கீல்கள் இருக்கும் பட்சத்தில், கதவை மூடி மூடித் திறந்து - கேட்டு இரசிக்கலாம்! மெது.....வாக கதவை தள்ளிளால் ஒரு வித அழுகை ஓசை கேட்கும் - நள்ளிரவில் முயற்சிக்காதீர்கள்!
- இரவு இரண்டு மணிக்கு ஃபேனை ஆஃப் செய்து விட்டு சுவற்றுக் கடிகார முற்கள் எழுப்பும் டிக் டிக் ஓசையை பத்து நிமிடம் கேளுங்கள்! கூடுதல் எஃபெக்ட்டுக்கு பாத்ரூம் கதவைத் திறந்து காலியான வாளியில் சொட்டு சொட்டாக தண்ணீரை விழ வைக்கலாம்!
- ரொம்பவும் பழைய பேஃனாக இருந்தால் ரெகுலேட்டரை ஒன்றில் வையுங்கள், லொடக் லொடக் என்று இசை மண்டையை பிளக்கும்!
- கொசுவிரட்டியை அணைத்து விட்டு தூங்கிப்பாருங்கள் - கொசுக்கள் கொய்ங் என்று காதோரம் இன்னிசை ராஜாங்கமே நடத்தும்!
- அலாரத்தை
மூன்றரை மணிக்கு செட் செய்து, கைக்கெட்டாத தூரத்தில் வைத்து விட்டு
நிம்மதியாக தூங்குங்கள். அலாரம் அடிக்கும் போது பயந்து போய் நீங்கள் போடும்
அலறலில் மொத்த வீடும் விழித்துக்கொள்ளும்!
- குழந்தையின் கையில் இருக்கும் லாலிபாப்பை பிடுங்கி இரண்டு சப்பு
சப்புங்கள்! அப்புறம் அடுத்த அரைமணி நேரத்திற்கு இசை மழை நிச்சயம்! அது
பக்கத்து வீட்டுக் குழந்தையாக இருந்தால், அதன் அம்மா உங்கள்
கன்னத்தில் நாலு அப்பு அப்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
அதுவும் ஒரு இசை
- ஆஃபிசில் பழைய ரிவால்விங் சேர் இருந்தால், அதில் உட்கார்ந்து கொண்டு நன்றாக சுற்ற விடுங்கள் - அனைவர் கவனமும் உங்கள் மேல் திரும்புவது உறுதி!
- ஏதாவது சிக்னல் கிடைக்காத அலைவரிசையில் பழைய ரேடியோவை உரக்க வையுங்கள் - செமையாக இருக்கும்!
கீழே உள்ள ஓசைகள் பிறரால் அல்லது பிறவற்றால் எழுப்பப்படுவது! படு எரிச்சலாக்கும் ஓசைகள் இவை:
- ஹோட்டலில் வாஷ்பேசினுக்கு அருகில் இருக்கும் டேபிளில் அமர்ந்து சாப்பிடும் போது, யாரோ ஒரு தொப்பை அங்கிள் வாயை மட்டும் கழுவாமல், தொண்டை வரை தண்ணீரை ஊற்றிக்கொண்டு மேல்நோக்கிப் பார்த்து கொல கொலவென ஒரு வினோத சப்தம் எழுப்பியவாறு வாய் கொப்பளிக்கும் ஓசை!
- பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிடும் நபர், கையில் வழியும் பாயாசத்தை பாசமாக வாயால் நக்கி நக்கி குடிக்கும் ஓசை!
- டீக்கடையில் சிலர், ச்ஸ்ரூப், ச்ஸ்ரூப் என டீயை உறிஞ்சிக் குடிக்கும் இன்னிசை!
- ஹாலிவுட் படங்களில் ஏதாவது ஒரு ரெஸ்டாரண்டை காட்டும் போது பின்னணியில் ஒலிக்கும் கலவையானதொரு ஓசை - எல்லா படங்களிலும் இது கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும்!
- நள்ளிரவில் அசந்து தூங்கும் போது தூரத்தில் நாய்கள் குலைப்பது அல்லது பக்கத்தில் படுத்திருப்பவர் விடும் குறட்டை!
- சீக்கிரம் எழுந்து தொலைக்க வேண்டியிருக்கிறதே என்ற எரிச்சலில் யாரோ கிச்சனில் பாத்திரங்கள் உருட்டும் ஓசை!
- பக்கத்து வீட்டில் பத்து வருட பழைய மிக்சியில் தேங்காய் சட்னி அரைக்கும் சத்தம்!
- இரயில் நிலையத்தில், மெதுவாய் நிற்கும் இரயிலின் இறுதிக்கட்ட பிரேக் சத்தம்!
- கெரோசினில் ஓடும் ஆட்டோ, சைலன்சர் கழட்டிய யமஹா!
- கீச்சுக் குரலில் கத்திக் கத்தி பேசும் பெண்கள்!
இவற்றைப்போல இன்னும் பற்பல இனிய ஓசைகள் நம்மை சுற்றி ஒலித்துக்கொண்டுதான் உள்ளன! அவற்றில், உங்களுக்கு பிடித்தவற்றை(?!) பின்னூட்டம் மூலம் பட்டியலிடுங்களேன்! :) இப்படிப்பட்ட ஓசைகளை கேட்டால் டென்ஷனாகி, வெறி தலைக்கேறி - சண்டைக்கு போவது, பொருட்களை போட்டு உடைப்பது, தலையை பிய்த்துக் கொள்வது - ஒரு வகை வியாதி - அதற்குப் பெயர் Misophonia! அது உங்களில் யாருக்காவது இருக்கிறதா என்றும் தெரியப்படுதுங்களேன்!
//சுண்ணாம்புச் சுவற்றில் நகங்களால் கீறினால் ஒரு ஓசை எழுமே, //
பதிலளிநீக்கும்ம் நினைச்சாலே புல்லரிக்குது
ஒவ்வொன்றை படிக்கும் போதும் அதை நினைத்து பார்க்க வைத்து விடுவது உங்கள் சிறப்பு தொடருங்கள்
:) நினைத்தாலே இனிக்கும்! ;)
நீக்குஓசையின் பின்னணியை இசைக்கிறது மனது பல்வேறு சூழலில் விரும்பியும் விரும்பாமலும் மனதை அசைத்த ஓசைகள் ...அருமை
பதிலளிநீக்குஅழகாகச் சொன்னீர்கள்! :) நன்றி!
நீக்குநல்லாவே ரசித்து எழுதியிருக்கிறீர்கள். இந்த பதிவை படித்து யாரும் //டென்ஷனாகி, வெறி தலைக்கேறி - சண்டைக்கு போவது, பொருட்களை போட்டு உடைப்பது, தலையை பிய்த்துக் கொள்வது// போன்றவைகளை செய்யாமல் இருந்தால் சரிதான்!
பதிலளிநீக்கு:D :D :D
எனக்கொரு டவுட்டு,
மூனை தொட்டது யாரு?
:D :D :D
சத்தியமா நான் இல்லே! :D
நீக்கும்ம்ம்ஹீம்.. கஷ்டம் தான் blade ரொம்ப டெவலப்பாக வேண்டியதிருக்கு அவரு சொன்ன மூணு வேற :))
நீக்குதெரியும்! வடிவேலு காமெடியில் வர்ற இந்த 3 தானே?! :D
நீக்குஅதென்ன காமெடிங்க நான் பார்க்கலையே!
நீக்குஇப்போ நாலை (4) தொட்டது நானு :D
அடடடா அப்பபப்பா என்ன ஒரு தொகுப்பு.
பதிலளிநீக்குஇந்த மாதிரி விசயங்கள தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வசீங்கான
வருங்கால சந்ததியினர் பார்த்து படிச்சு அதன் படி செயல்படுவாங்க.
//கெரோசினில் ஓடும் ஆட்டோ, சைலன்சர் கழட்டிய யமஹா!//
அது மாறும் அல்ல நண்பரே புது ஆடோக்கள் கூட போடு சத்தங்கள் எனக்கு தலை வலி உண்டாகிவிடுகின்றன.
இதற்காகவே நான் சற்று வேகத்தை குறைத்து அது சென்றவுடன் செல்வேன்.
அது தயாரிப்பு பிரச்சனையா அல்லது இந்த வாகன ஓட்டிகள் செய்யும் தில்லுமுல்லா என்று தெரியவில்லை.
கல்வெட்டில் பொறித்துவைக்கலாம் என்றுதான் தஞ்சாவூர் சென்றேன்! கல்லின் மீது உளி படும் போது ஏற்படும் அந்த ஒலியை கேட்க சகிக்காமல் திரும்பிவிட்டேன்! ;)
நீக்குஆஹா... செய்தது ஒவ்வொன்றும் ஞாபகம் வந்தது...
பதிலளிநீக்குமிகவும் ரசித்துப் படித்தேன் நண்பரே...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி… (TM 3)
அப்படிச் சொல்லுங்க...! (இது என் தளத்தில் !)
நன்றி :)
நீக்குArumai..!
பதிலளிநீக்குNalla comedy.!
Nandri! :)
நீக்குவித்தியாசமான ஆராய்ச்சி! நானும் சுவற்றில் கீறி பார்த்திருக்கிறேன்! பூனை பிராண்டும் சத்தம் கேட்டு இருக்கிறீர்களா? வித்தியாசமாய் இருக்கும்!
பதிலளிநீக்குஇன்று என் தளத்தில் தயக்கம் ஏன் தோழா?
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_13.html
ஆம், பூனை கதவை பிராண்டும் ஒசைதானே? ;) நம் உடலை பிராண்டினால் அலறல்தான் வரும்! :D
நீக்கு//அடடடா அப்பபப்பா என்ன ஒரு தொகுப்பு.
பதிலளிநீக்குஇந்த மாதிரி விசயங்கள தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வசீங்கான
வருங்கால சந்ததியினர் பார்த்து படிச்சு அதன் படி செயல்படுவாங்க.// - Same Feeling :)
அக்மார்க் கார்த்திக் போஸ்ட் :)
நன்றி சௌந்தர்! இவ்விடம் கல்வெட்டுக்கள் பொறிக்கப்படமாட்டது! :D
நீக்குசிமெண்ட் தரையில, சிமெண்ட், மண் போட்டு கலவை கலப்பாங்க. அப்போ, மண்வெட்டி, சிமெண்ட் தரையில படும்போது ஒரு சத்தம் வரும் பாருங்க.. எனக்கு பல் எல்லாம் அரிக்கும் (எழுதும்போதே அரிக்குது :) )
பதிலளிநீக்குயப்பா! சூப்பரான சவுண்ட் அது! :D
நீக்குமூங்கில் குழலை பற்களால் பற்றி ஒருவித ஓசை எழுப்புவது “சுத்தமாக” எனக்கு பிடிக்காது.
பதிலளிநீக்குஅப்புறம் நெல் அலுமினியத்தட்டில் உரசும் போது எழும் சத்தம்
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/it.html) சென்று பார்க்கவும்...