Book my Show-வில் இலவச சினிமா டிக்கெட் வாங்கும் வித்தை!

மல்டிப்ளெக்ஸில் நண்பர்களோடும், குடும்பத்தோடும் கும்பலாக போய் படம் பார்த்து ஓட்டாண்டி ஆனவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்! அந்த ஒட்டாண்டிகளின் நண்பர்கள் இந்த பதிவைப் படிக்காவிட்டாலும், உங்களுக்காக டிக்கெட் வாங்கும் அந்த பரிதாப ஜீவன்களுக்கு இந்தப் பதிவை அறிமுகப்படுத்துங்கள்! IRCTC-க்கு இணையான ஒரு மொக்கை முன்பதிவு இணையதளம் எது என்று கேட்டால் அது bookmyshow.com தான்! IRCTC போலவே காலை பத்து மணியிலிருந்து பதினொரு மணி வரை செம பிஸியாக இருக்கும் - குறிப்பாக வார இறுதி நாட்களில் அதாவது வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுகளில்!

புக்மைஷோ தளம் - சில கிரெடிட் கார்டு, வங்கி மற்றும் வணிக நிறுவனங்களின் கூட்டணியுடன் பல தள்ளுபடி சலுகைகளை தனது பயனர்களுக்கு வழங்கி வருகிறது! இவற்றில் மிகவும் பிரசித்தமான ஒரு ஆஃபர் "ஒரு டிக்கெட் வாங்கினால் இன்னொன்று ப்ரீ" என்பதாகும்! இதைப்பற்றி, சம்பந்தப்பட்ட கிரெடிட் கார்டு நிறுவனங்களும் புதிய கார்டை மார்க்கெட் செய்யும்போது பெரிதாக விளம்பரப்படுத்தும்! ஆனால், கீழே கண்ணுக்கு தெரியாத அளவில் - * Terms and conditions என்ற சுட்டி இருக்கும் - அதில் பக்கம் பக்கமாய் எழுதி இருப்பார்கள்! வங்கி / கார்டு நிறுவனத்திற்கேற்ப இந்த விதிமுறைகள் மாறுபடும்! உதாரணத்திற்கு, சில ICICI கார்டுகளில் ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் ஃப்ரீ! ஆனால் சில சிட்டி பேங்க் கார்டுகளில் குறைந்த பட்சம் மூன்று டிக்கெட் வாங்கினால் மட்டுமே ஒரு டிக்கெட் ஃப்ரீ! மேலும், 'ஒவ்வொரு நாளும் முதலில் புக் செய்யும் முன்னூறு பேருக்கே இந்த சலுகை' என்பது போல லிமிட் செய்வார்கள் - எனவே துரிதமாக காலையிலே புக் செய்ய வேண்டும்! பொதுவாக காலை பத்து மணிக்கு ஆஃபர் ஆரம்பிக்கும் - மேலே சொன்னதைப் போல சலுகை தரும் நிறுவனத்தைப் பொறுத்து ஆஃபர் கிடைக்கும் நாட்கள், நேரம் மற்றும் விதிமுறைகள் மாறலாம்!

FAmQ - அடிக்கடி கேட்கப்படும் மொக்கை கேள்விகள்:

'ICICI மூலம் நான்கு டிக்கெட், வாங்கினால் இரண்டு டிக்கெட் ப்ரீயா?' - ஒரு நாளைக்கு, ஒரு கார்டு மூலம், ஒரே ஒரு டிக்கெட்தான் ஃப்ரீ!

'அப்போ ரெண்டு கார்டு இருந்தா?!' - அந்த ரெண்டாவது கார்டுக்கு ஏதாவது ஆஃபர் இருந்தால் தாராளமாய் உபயோகப் படுத்தலாம் - ஆனால் இரண்டிரண்டாக டிக்கெட் புக் செய்ய வேண்டும், இடைப்பட்ட நேரத்தில் பக்கத்தில் இருக்கும் சீட் பறிபோகும் வாய்ப்பு உள்ளது!

'அய்யய்யோ, அந்த இரண்டாவது கார்டில் ஆஃபர் இல்லையே?!' - கவலையை விடுங்கள், உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் அல்லது நண்பர்களின் கார்டை அவர்கள் முன்னிலையில், உபயோகிக்க முடியுமா என்று பாருங்கள்!

'சரி, ரெண்டு மூணு கார்டு ரெடி - எங்களுக்கு பக்கத்துக்கு பக்கத்துக்கு சீட்டு வேணுமே!' - இப்படி ஒரு மொக்கை கேள்வி கேட்கிறீர்கள் என்றால், நீங்கள் எனது IRCTC பதிவை படிக்கவில்லை என்று அர்த்தம்! அதே லாஜிக் - ஒன்றுக்கும் மேற்பட்ட யூசர் அக்கௌன்ட்கள் மூலம், வேறு வேறு பிரௌசர்களில் லாகின் செய்து அதில் பாதி, இதில் பாதி என பக்கத்து, பக்கத்து சீட்களாக தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்யலாம்! நான்கு டிக்கெட் வேண்டுமானால், இரண்டு அக்கௌன்ட்! பத்து டிக்கெட்கள் வேண்டுமானால் - ஐந்து அக்கௌன்ட்

குறிப்பு: ஒரே அக்கௌன்ட் மூலம், பல பிரௌசர்களில் லாகின் செய்து டிக்கெட் புக் செய்யவும் முயற்சித்துப் பார்க்கலாம்! நான் செய்ததில்லை; IRCTC-இல் இது முடிவதில்லை, ஆனால் ஒரு வேலை புக்மைஷோவில் வேலை செய்யலாம்! (யாரவது ட்ரை பண்ணி சொல்லுங்களேன்!)

அப்புறம், மேற்சொன்னது ஒரு உதாரணம் மட்டுமே, இதைப்போல வேறு பல விதமான சலுகைகள் உள்ளன! சிலது வாரத்தில் எல்லா நாட்களிலும் கிடைக்கும், சிலது குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே கிடைக்கும்! சீட் செலக்ஷனைத் தாண்டி பேமென்ட் ஸ்க்ரீனில் இருக்கும் போது, உங்களுக்கு ஏற்ற சலுகையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்! அவற்றைப் பற்றி அறிய இங்கே கிளிக்குங்கள்! இதில் ஏதாவது நீங்கள் நினைத்தபடியோ அல்லது நான் சொன்னபடியோ வேலை செய்யவில்லைஎன்றால் கம்பெனி (ப்ளேட்பீடியா ) பொறுப்பேற்காது!
Karthik Somalinga

How to get free tickets and other discount offers on www.bookmyshow.com / © www.bladepedia.com

கருத்துகள்

 1. தேவைப்படுவோருக்கு பயன்படும்...

  (த.ம. 2)

  பதிலளிநீக்கு
 2. கார்த்திக் என்னை நியாபகம் இருக்கிறதா?
  நான்தான் கோபாலகிருஷ்ணன் உன்னால் மறக்க முடியாதவன்.உயிருடன் இருக்கிறேன். உன் கால் எதிர்பார்க்கிறேன் 9884092929

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மன்னிக்கவும், நீங்கள் யார் என்று தெரியவில்லை!

   நீக்கு
 3. Expected.. Please call me or give me a missed call.

  பதிலளிநீக்கு
 4. Can you post your photo????????????????

  If I am wrong.......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Very strange! Someone comes out of no where, calls himself Goplalakrishnan but does not even use a real Google profile - and claims that he knows me and when I deny it - he asks for a proof! It is NOT funny!!!

   The truth is, I don't know anyone by that name, sorry you got the wrong Karthik!

   நீக்கு
  2. Well, looks like you've just joined Bladepedia with seemingly a real profile and photo!
   http://www.blogger.com/profile/04951270384462875433

   From what I see on the photo, I can tell you for sure that I don't know you! I didn't even have any childhood buddy by that name! You've claimed to be comic lover and that is the only point I can relate with!

   Good luck with your hunt for the right Karthik!

   நீக்கு
  3. உங்கள் பதிவை போலவே ,இந்த விளையாட்டும் சுவாரஸ்யமாகவே உள்ளது நண்பரே,சிரித்து முடியவில்லை,உங்கள் சேட்டையை தொடருங்கள் ..............

   நீக்கு
  4. உண்மையாகவே மாட்டி கொண்டு முழிக்கிறீர்களா,அல்லது வழக்கம் போல உங்கள் குறும்புத்தனமா குழப்பமே..........................

   நீக்கு
  5. கஷ்டகாலம்!

   இங்கே ஒருவர் என்னடாவென்றால், 'நான் உயிரோடுதான் இருக்கிறேன் - நீதானே அந்த கார்த்திக்? ப்ஃரூப் வேணும்' என்று மிரட்டுகிறார்!

   நான் 'நான் அவனில்லை' என்று கதறிக் கொண்டிருக்கிறேன்!

   இந்த கண்றாவிக்கு சதீஷ் ஒரு டைட்டில் வேறு வைக்கிறார்! உங்களுக்கு சிரித்து மாளவில்லை!

   முடியல!

   நீக்கு
  6. :) அந்த கார்த்திக் நான் அல்லவே, யாராவது அந்த மனிதருக்கு புரிய வையுங்களேன், ப்ளீஸ்! Fingers crossed! ;)

   (நன்றி: எடி) :D

   நீக்கு
  7. வேறு யாரவதுடைய புகை பட்டத்தை போட்டு விடுங்களேன் ,அது நீங்களாக இருந்தாலும் தப்பித்து விடலாமே எளிதாக ,நான் அவனில்லை என்று கூறுவதை விட நான் அவனில்லை என்று காட்டுவது எளிதல்லவோ,ஃபேஷ் புக் ராணிகள் போல

   நீக்கு
  8. யார் என்றே தெரியாதவரிடம் எல்லாம் என்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை நண்பரே! :)

   நீக்கு
 5. இந்த கதை கூட நல்லாத்தான் இருக்கு..கார்த்தியை தேடி ....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரி நானும் ஒரு தலைப்பை தருகிறேன்,இன்சூரன்ஸ் ஏஜென்டின் விளம்பரத்தில் கார்த்திக் ...............

   நீக்கு
 6. Can I have atleast this Karthik phone no.......

  If I am tolally wrong.......I have given my No..

  In 2005 One comic book was released in Chennai"Pani Mandala Kottai"(Prince book)

  Director Myskin, Ponvannan and so many comics friends have come.

  And Karthik also has come...... we have funtion photos.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போதும்பா விட்டுருப்பா ........................தெய்வதிருமகள் பாருங்களேன்

   நீக்கு
  2. விடாக்கண்டன் Vs. கொடாக்கண்டன்!:
   அட! மிஷ்கின், பொன்வண்ணன், கார்த்திக் (நடிகர் கார்த்திக்கா?!) எல்லாம் சேர்ந்து "பனி மண்டல கோட்டை" என்ற காமிக்ஸ் வெளியிட்டார்களா?! சொல்லவே இல்லியே?! எனக்கு தெரிந்து அது திகிலில்தானே வந்தது (1988?)! அநேகமாக அது வெளி வந்த காலத்தில் மிஷ்கின் இஸ்கூல் பையனாக இருந்திருப்பார்! :D

   //And Karthik also has come...... we have funtion photos.//
   Function போட்டோக்களை பகிர முடியுமா.. கோபால்?!

   நீக்கு
  3. அப்படியே, நீங்கள் குறிப்பிடும் 'அந்த' கார்த்திக்கை ஏன் தேடுகிறீர்கள் என்ற கதையையும் எங்களோடு பகிர்ந்து கொண்டால் சுவையாக இருக்கும்! :)

   நீக்கு
 7. பகிர்வுக்கு நன்றி.
  கார்த்திக் உங்களுக்கு தலையில் எது தொட்ட காயம் எதுவ்ய்ம் இல்லையே?
  XIII alias கார்த்திக்.
  நானும் பெரு தலைப்பு அளிக்கிறேன் கார்த்திக் படலம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கழுகு சார் வாங்க! ஆமா, நான்தான் புதிய XIII! கோபால்தான் மங்கூஸ் - என்னை ஆங்கிலத்திலும், தமிழிலும் மாறி மாறி மிரட்டிக் கொண்டே இருக்கிறார்! அடுத்த பாகத்தில் எங்கள் கதைதான் வருகிறது! :D

   நீக்கு
  2. நம்ம எடி கிட்ட சொல்லி திரைகதை பண்ண சொல்லிருவமா?
   கார்த்திக் தோற்கும் _________.
   நம்ம எடி ஸ்டைல்.

   நீக்கு
  3. யார் ஃபர்ஸ்டு தோற்கறாங்கங்கறது முக்கியம் இல்ல! லாஸ்டு யார் ஜெயிக்கராங்கங்கறதுதான் முக்கியம்! :D

   நீக்கு
 8. பதிவை விட பின்னூட்ட ஏரியா களைகட்டுதே...
  கோபால் - நீங்கள் தேடும் நபரை விரைவில் கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 9. பதில்கள்
  1. thanks nanbaa!

   //Enna kodumai karthik ithu//
   சரோஜாதேவி வாய்ஸில் 'கோப்ப்பால், அது நான் இல்லை கோப்ப்பால்!' என்று சொன்னால்தான் விடுவார் போல! நான் இல்லை என்று தெரிந்ததும், அடுத்து எந்த கார்த்திக்கை மிரட்டப் போகிறாரோ?!! :D

   நீக்கு
 10. கார்த்திக், ஒருவரிடம் லயன்,முத்து காமிக்ஸ் தருவதாக பணம் வாங்கி விட்டான். ஒருவரிடம் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி விட்டான். காமிக்ஸ் கலர் புக் போட்டு தருவதாக சிலரிடம் நிறைய புக் ஆட்டையை போட்டு விட்டான்.
  என்கிட்ட கொஞ்சம் கலர் புக் (Imported comics) ஆட்டையை போட்டு விட்டான்.

  ஒரு நாள் அதிகாலை நாலரை மணிக்கு அவன் வீட்டுக்கு போய் (Chennai to Bangalore)அவன் மனைவியை பார்த்து, ஏமார்ந்த நண்பர்கள் எல்லார்க்கும் போன் போட்டு, அவன் மனைவியை பேச வைத்து, எல்லார்க்கும் செட்டில்மென்ட் வாங்கி கொடுத்தேன்.(2 years back)

  அப்புறம் வீட்டு அட்ரஸூம் மத்திட்டான்,போன் நம்பரும் மத்திட்டான் பெங்களுரு கார்த்தி.

  இதுதான் முன்கதை சுருக்கம்.  ஆனா இப்பவும் போட்டோவோ போன் நம்பரோ கொடுக்கலியே நண்பா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா! இதென்ன பெரும் சோகக்கதையாய் இருக்கிறது?! எனக்கு கோபம் வந்ததிற்கு காரணம், என் பெயர் கார்த்திக் என்ற ஒரே ஒரு காரணத்தினாலேயே நீங்கள் எடுத்த எடுப்பில் மரியாதை இல்லாமல் 'அவன்தானே நீ' என்ற தொனியில் பின்னூட்டம் இட்டதுதான்! சற்று நேரத்தில் உங்களை தொடர்பு கொள்கிறேன்! சந்தோசம்தானே?! :)

   நீக்கு
 11. Finally this Karthik spoke today..........

  But My search continues............

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதனால் நான் அனைவருக்கும் அறிவித்துக் கொள்வது என்னவென்றால், நான் அவன் இல்லை!!! :D

   அதை திரு.கோவாலும் வழிமொழிகிறார்! ;)

   நீக்கு
 12. // இதனால் நான் அனைவருக்கும் அறிவித்துக் கொள்வது என்னவென்றால், நான் அவன் இல்லை!!! :த //
  விரைவில் எதிர் பாருங்கள் நான் அவன் இல்லை பாகம் இரண்டு
  நீங்க சொன்னா போதுமா நாங்க விட்டுடுவோமா ;-)
  .

  பதிலளிநீக்கு
 13. இன்னுமா முடியல ..................ஏது கார்த்திக்க இனி அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது போலுள்ளதே .....................

  நான் அந்த கார்திக்க சொன்னேன்..............அந்த கார்திக்க !

  பதிலளிநீக்கு
 14. நான் கோபாலை போனில் தொடர்பு கொண்டபோது, தான் தேடும் நபரின் பெயர் கார்த்திகேயன் என்று சொன்னார் - என் பெயர் கார்த்திக் மட்டுமே!! ;) கோபாலிடம் யாரோ(!), அவர் தேடும் நபர் நான்தான் என்று சொன்னதாக சொன்னார்! வீண் புரளி கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்கும் வேலையற்ற வெட்டி ஜென்மங்கள்!

  இப்படி பொது இடத்தில் வந்து, என்னை ஆதாரமில்லாமல் கலாய்த்த பின்னரும், அந்த கார்த்தி நானில்லை என்று தெரிந்த பின்னரும் - கோபால் ஒரு சம்பிரதாயத்திற்கு கூட என்னிடம் போனிலோ, பின்னூட்டத்திலோ மன்னிப்பு கேட்கவில்லை என்பது கொசுறு தகவல்! :) என்னிடம் போனில் கலகலப்பாக, நட்புடன் பேசினார் (கிட்டத்தட்ட அரை மணி நேரம் பேசினோம்!). அந்த ஒரு காரணத்திற்காகவே, அவர் மன்னிப்பு கேட்காததை எல்லாம் பெரிதாய் மனதில் வைத்துக்கொள்ளாமல் இங்கே சொல்லி விட்டேன் ;)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆபீசுல கொஞ்சம் வேலை இருந்ததால ரெண்டு நாள் இங்கிட்டு நான் வரலை அதுக்குள்ளே என் நண்பனை போட்டு வறுத்தெடுத்திருக்காங்களே?! :)

   நீக்கு
  2. ஒரு வரலாறு திரும்புகிறது!!! ;)

   நீக்கு
 15. விட்டு தள்ளுங்கள் நண்பரே,அவர் நான் கார்த்திகை தேடுகிறேன்,உங்களுடன் பேசியதாக குறிப்பிட்டாரே,நானும் கூட முதலில் உங்களை குற்றம் சாத்திய போது,என்னடாவென்று வருத்தப்பட்டேன்,உண்மையில் பக் என ஆகி விட்டது ,உங்களுடன் பேசியதுடன் அவர் தெளிவானவுடன் இதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை போலும்.......................நாம் நமது வேலையை பார்ப்போம் ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே, எல்லாம் நல்லதிற்கே! இனி யாராவது இந்த சந்தேகத்துடன் வந்தால் - இந்தப் பதிவை கை காட்டி விட்டு நான் என் வேலையைப் பார்க்கலாம்! ;)

   நீக்கு
  2. எப்பா சாமி.... நான் அவன் இல்லைன்னு ஒரு பெரிய கும்புடு போட்டு எஸ் ஆகலாம்னு சொல்லுங்க ஹி ஹி ஹி!

   நீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia