காமிக்ஸ் கதைகள், ஹாலிவுட் படங்களாக மாறுவது சர்வசாதாரணம்! அதே போல,
ஹாலிவுட்டில் ஒரு சில மெகா பட்ஜெட் படங்களை வெளியிடும்முன், படத்தை பற்றிய
காமிக்ஸ் அல்லது கிராபிஃக் நாவல் வெளியிடுவது ஒருவகை விளம்பர உத்தி! இப்படி
வெளியாகும் படக்கதைகளை கிராபிஃக் நாவல் என்று அழைப்பதுதான் பொருத்தமாக
இருக்கும் என்றாலும், எளிமையை கருதி காமிக்ஸ் என்ற சொல்லையே இப்பதிவில்
உபயோகப்படுத்துகிறேன்! அவ்வாறாக வெளியாகும் விளம்பர காமிக்ஸ் புத்தகத்தில்
உள்ள கதைக்கும், படத்தில் வரும் கதைக்கும் எந்த தொடர்பும் இருக்காது! மாறாக
அவை கதாபாத்திர அறிமுகங்களாகவும் அல்லது முக்கிய கதாபாத்திரத்தின் ஒரு
சிறிய சாகசமாகவும் மட்டுமே பெரும்பாலும் இருக்கும்! இப்படி 'படக்'கதை மூலம்
பணம் அள்ளும் உத்தியை இப்போது பாலிவுட்காரர்களும் 'படக்'கென்று
பிடித்துக்கொண்டு விட்டார்கள்!
எனக்கு தெரிந்த வரையில் முதலில் காமிக்ஸ் போட்டது ஷாரூக் கானின் 'Ra-One' படத்திற்காக என்று நினைக்கிறேன். படம் வெளியாவதிற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே வாரா வாரம் அப்படத்தின் இணையதளத்தில் ஆன்லைன் காமிக்ஸ் வெளியிட்டார்கள் - அந்த மொக்கை காமிக்ஸை இங்கே படிக்கலாம்! அப்புறம் குழந்தைகளுக்கான கலரிங் புக்கில் தொடங்கி, டாய்லெட் பேப்பர் வரை ஷாரூக்கின் அழகிய(!) முகத்தை அச்சடித்து, அதிக விலைக்கு விற்று கல்லா கட்டினார்கள்! நம்மாட்கள் எந்திரன் ரஜினிக்கு ஒரு காமிக்ஸ் வெளியிட்டிருந்தால் (இன்னும்) பணத்தை அள்ளியிருக்கலாம், மிஸ் செய்துவிட்டார்கள்! ;) இந்த காமிக்ஸ் ஐடியா ஷாரூகிற்கு ரொம்ப பிடித்துப்போனதோ என்னவோ, அடுத்த சில மாதங்களில் வெளியான அவரின் 'டான் 2' படத்திற்கும் ஒரு காமிக்ஸ் புத்தகம் வெளியிடப்பட்டது (Don?) - அதை ஒட்டியதொரு வீடியோ கேமும் உருவாக்கப்பட்டது! வழக்கம் போல நம்மாட்கள் அஜீத்தின் 'பில்லா 2' படத்திற்கு காமிக்ஸ் ஏதும் வெளியிடாமல் மிஸ் செய்து விட்டார்கள்!
அதற்கப்புறம் சைஃப் அலி கான், தனது கனவுப் படமான 'ஏஜன்ட் வினோத்' வெளியாகும் முன் 'The Jungfrau Encounter' என்ற பெயரில் ஒரு காமிக்ஸ் வெளியிட்டார்! இதை நான் இன்னமும் படிக்கவில்லை - ஆனால் கேள்விப்பட்ட வரையில் இது கொஞ்சம் உருப்படியான கதையம்சத்துடன், தரமான சித்திரங்களுடன் அழகிய வண்ணத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது! ஹிந்தி படங்களையே அரிதாகத்தான் பார்க்கிறேன் - இந்த லட்சணத்தில் அந்த நடிகர்களின் திருவுருவம் தாங்கிய காமிக்ஸ்களை வேறு படிக்க வேண்டுமா என்ற எண்ணமே அதை இன்னமும் படிக்காததிற்கு காரணம்! அகமதாபாத்தில் இருந்த சமயம், மொக்கை ஹிந்திப்படங்களை கூட விடாமல் பார்த்திருக்கிறேன் என்பது நீங்கள் கேட்காத தகவல்!
நேற்று Infibeam ஷாப்பிங் தளத்தின் மேஜிக் பாக்ஸில், சல்மான் கானின் 'Ek Tha Tiger' பட கிராபிஃக் நாவலை 50% தள்ளுபடியில், ஐம்பது ரூபாய்க்கு கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்ததால் - சரி வாங்கித்தான் பார்ப்போமே என்று வாங்கினேன் - டிஜிடல் காமிக்ஸ் வடிவத்தில்! மேற்சொன்ன இதர திரைப்பட காமிக்ஸ்களின் உருவாக்கத்தில் பணியாற்றிய கலைஞர்களில் ஒரு சிலர் இந்த இதழின் வடிவமைப்பிலும் பங்கேற்றுள்ளனர்! 'Yomics' என்ற நிறுவனம், BPI பப்ளிஷர்ஸ் மூலம் இந்த காமிக்ஸை வெளியிட்டுள்ளது - யோமிக்ஸின் ஆசிரியர், ஹிந்தி நடிகர் 'உதய் சோப்ரா' என்பது ஆச்சரியத் தகவல்! இன்றுதான் அந்தப் படம் வெளியாகிறது என்பது கூடுதல் தகவல்! இந்த காமிக்ஸின் பெயர் 'Saving The High Seas', 50 முழு வண்ணப் பக்கங்கள், டிஜிடல் எடிஷனைத் தவிர வழக்கமான புத்தக வடிவிலும் கிடைக்கிறது! எதிர்பார்த்தபடியே, கதை என்று ஒன்றும் பெரிதாக இந்த காமிக்ஸில் இல்லை! ஜேம்ஸ்பாண்ட் படங்களின் முதல் பத்து பதினைந்து நிமிடங்களில் ஒரு அறிமுக சாகசம் இருக்கும் அல்லவா - அப்படி ஒரு அத்தியாயம்தான் கதை!
சல்மான்தான் 'டைகர்' - இவர் ஒரு RAW ஏஜென்ட்! கதைநாயகன் மதச்சார்பின்றி இருக்கவேண்டும் என்ற எண்ணத்தினாலோ என்னவோ அப்படி ஒரு மொக்கை பெயரை வைத்துள்ளார்கள்! இதே மொக்கைப் பெயரில், ஒரு சூப்பர் கௌபாய் காமிக்ஸ் ஹீரோ - தமிழ் காமிக்ஸ் இரசிகர்களுக்கு ரொம்ப பரிச்சயமானவர் என்பது இந்தப் பதிவிற்கு தேவையில்லாத விஷயம்! ;) வழக்கம் போல இஸ்லாமிய தீவிரவாதிகள் (ஹாவ்வ்வ்... கொட்டாவி) நம் நாட்டில் நுழைந்து ஒரு கப்பலை கைப்பற்றுகிறார்கள்! அதில் உள்ள பயணிகளை, பணயக் கைதிகளாக மாற்றுகிறார்கள்! கடற்படை தளபதிகள் இக்கப்பலை மீட்க RAW-வின் உதவியை கோருகிறார்கள் - பின்னிரவில் இந்தத் தகவல் டைகரை தட்டி எழுப்புகிறது. காபி கூட குடிக்க முடியாத கடுப்பில் மனிதர் நிமிடத்திற்கொருதரம் காபி காபி என்று புலம்பித்தள்ளுகிறார்! ஓசையின்றி முடிக்க வேண்டிய இரகசிய ஆபரேஷன் என்பதால் ராக்கெட் லாஞ்சரை டைகருக்கு தர மறுக்கிறார்கள்! கடுப்பாகும் டைகர், 'அப்புறம் எப்படி எதிரிகளை தாக்குவது? ராக்கெட்டை கைகளால் வீசியா?!' என்று ஹிந்தியில் ஜோக்கடிக்கிறார்! அப்புறம் துப்பாக்கி மற்றும் ஒரு சில சகாக்கள் சகிதம் மிதவை மூலம் கப்பலை அடைகிறார்! துப்பாக்கி சண்டை நடக்கிறது, தனது சகாக்களை தலைமையகத்திற்கே திரும்பிப் போகச் சொல்லி தான் மட்டும் மாட்டிக்கொள்கிறார்! கடற்படை தளபதிகள் கப்பலை அழிக்க திட்டமிடுகின்றனர் - டைகர் தப்பித்தாரா? இதர பயணிகளை காப்பாற்றினாரா? அந்த கப்பலை தீவரவாதிகள் ஏன் கைப்பற்றினர்? - போன்ற விவரங்களை எந்த ஒரு பரபரப்பும், சுறுசுறுப்பும் இல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்! படித்து முடித்த பிறகு எனக்கே காப்பி குடிக்க வேண்டும் போல் தோன்றியது!
இருந்தாலும் ஆறுதலானதொரு விஷயம், சித்திரத் தரம் மற்றும் வண்ணக் கோர்ப்பு! முழுக்க முழுக்க இந்தியக் கலைஞர்களின் கைவண்ணத்தில்! சித்திரங்களில் அதிக டீடெயில்ஸ் இல்லாவிட்டாலும் நன்றாகவே உள்ளது - இப்படிப்பட்ட சித்திரங்கள் அருமையானதொரு கதையுடன் மட்டும் கைகோர்த்துவிட்டால் அற்புதமான காமிக்ஸ்கள் வெளிவரும் வாய்ப்பு உள்ளது! திரைப்பட விளம்பரம் என்ற ஒரு அம்சத்தை தாண்டி அவை வியாபார ரீதியாகவும் வெற்றியடையும் வாய்ப்பும் உள்ளது! இந்த எண்ணம் தந்திடும் மகிழ்ச்சியில் ஏஜென்ட் வினோத் கிராபிஃக் நாவலையும் தள்ளுபடியில் ;) ஆர்டர் செய்து விட்டேன்! இந்திய காமிக்ஸ் கலைஞர்களுக்கு ஏதோ என்னாலான ஒரு சிறு ஆதரவு! :)
இனி வரும் காலங்களிலாவது, இப்பேர்ப்பட்ட ஒரு அருமையான விளம்பர +
வியாபார ஊடகத்தை, எந்திரன் மற்றும் பில்லா படங்களில் கோட்டை விட்டதைப் போல
தவற விடாமல் நமது தமிழ்த் திரையுலகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!
குறைந்தபட்சம் இரும்புக்கை பிரியர் மிஷ்கினாவது, தன் முகமூடி படத்திற்கு
ஒரு படக்கதை வெளியிட்டு புரட்சி செய்ய வேண்டும் என்பதே தமிழ் காமிக்ஸ்
ரசிகர்களின் அவா! அப்படி ஒரு காமிக்ஸ் வெளியானால் அதிலும் ஒரு மஞ்சள் சேலை அழகி இருப்பார் என்பது மட்டும் சர்வ நிச்சயம்!
எனக்கு தெரிந்த வரையில் முதலில் காமிக்ஸ் போட்டது ஷாரூக் கானின் 'Ra-One' படத்திற்காக என்று நினைக்கிறேன். படம் வெளியாவதிற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே வாரா வாரம் அப்படத்தின் இணையதளத்தில் ஆன்லைன் காமிக்ஸ் வெளியிட்டார்கள் - அந்த மொக்கை காமிக்ஸை இங்கே படிக்கலாம்! அப்புறம் குழந்தைகளுக்கான கலரிங் புக்கில் தொடங்கி, டாய்லெட் பேப்பர் வரை ஷாரூக்கின் அழகிய(!) முகத்தை அச்சடித்து, அதிக விலைக்கு விற்று கல்லா கட்டினார்கள்! நம்மாட்கள் எந்திரன் ரஜினிக்கு ஒரு காமிக்ஸ் வெளியிட்டிருந்தால் (இன்னும்) பணத்தை அள்ளியிருக்கலாம், மிஸ் செய்துவிட்டார்கள்! ;) இந்த காமிக்ஸ் ஐடியா ஷாரூகிற்கு ரொம்ப பிடித்துப்போனதோ என்னவோ, அடுத்த சில மாதங்களில் வெளியான அவரின் 'டான் 2' படத்திற்கும் ஒரு காமிக்ஸ் புத்தகம் வெளியிடப்பட்டது (Don?) - அதை ஒட்டியதொரு வீடியோ கேமும் உருவாக்கப்பட்டது! வழக்கம் போல நம்மாட்கள் அஜீத்தின் 'பில்லா 2' படத்திற்கு காமிக்ஸ் ஏதும் வெளியிடாமல் மிஸ் செய்து விட்டார்கள்!
அதற்கப்புறம் சைஃப் அலி கான், தனது கனவுப் படமான 'ஏஜன்ட் வினோத்' வெளியாகும் முன் 'The Jungfrau Encounter' என்ற பெயரில் ஒரு காமிக்ஸ் வெளியிட்டார்! இதை நான் இன்னமும் படிக்கவில்லை - ஆனால் கேள்விப்பட்ட வரையில் இது கொஞ்சம் உருப்படியான கதையம்சத்துடன், தரமான சித்திரங்களுடன் அழகிய வண்ணத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது! ஹிந்தி படங்களையே அரிதாகத்தான் பார்க்கிறேன் - இந்த லட்சணத்தில் அந்த நடிகர்களின் திருவுருவம் தாங்கிய காமிக்ஸ்களை வேறு படிக்க வேண்டுமா என்ற எண்ணமே அதை இன்னமும் படிக்காததிற்கு காரணம்! அகமதாபாத்தில் இருந்த சமயம், மொக்கை ஹிந்திப்படங்களை கூட விடாமல் பார்த்திருக்கிறேன் என்பது நீங்கள் கேட்காத தகவல்!
நேற்று Infibeam ஷாப்பிங் தளத்தின் மேஜிக் பாக்ஸில், சல்மான் கானின் 'Ek Tha Tiger' பட கிராபிஃக் நாவலை 50% தள்ளுபடியில், ஐம்பது ரூபாய்க்கு கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்ததால் - சரி வாங்கித்தான் பார்ப்போமே என்று வாங்கினேன் - டிஜிடல் காமிக்ஸ் வடிவத்தில்! மேற்சொன்ன இதர திரைப்பட காமிக்ஸ்களின் உருவாக்கத்தில் பணியாற்றிய கலைஞர்களில் ஒரு சிலர் இந்த இதழின் வடிவமைப்பிலும் பங்கேற்றுள்ளனர்! 'Yomics' என்ற நிறுவனம், BPI பப்ளிஷர்ஸ் மூலம் இந்த காமிக்ஸை வெளியிட்டுள்ளது - யோமிக்ஸின் ஆசிரியர், ஹிந்தி நடிகர் 'உதய் சோப்ரா' என்பது ஆச்சரியத் தகவல்! இன்றுதான் அந்தப் படம் வெளியாகிறது என்பது கூடுதல் தகவல்! இந்த காமிக்ஸின் பெயர் 'Saving The High Seas', 50 முழு வண்ணப் பக்கங்கள், டிஜிடல் எடிஷனைத் தவிர வழக்கமான புத்தக வடிவிலும் கிடைக்கிறது! எதிர்பார்த்தபடியே, கதை என்று ஒன்றும் பெரிதாக இந்த காமிக்ஸில் இல்லை! ஜேம்ஸ்பாண்ட் படங்களின் முதல் பத்து பதினைந்து நிமிடங்களில் ஒரு அறிமுக சாகசம் இருக்கும் அல்லவா - அப்படி ஒரு அத்தியாயம்தான் கதை!
சல்மான்தான் 'டைகர்' - இவர் ஒரு RAW ஏஜென்ட்! கதைநாயகன் மதச்சார்பின்றி இருக்கவேண்டும் என்ற எண்ணத்தினாலோ என்னவோ அப்படி ஒரு மொக்கை பெயரை வைத்துள்ளார்கள்! இதே மொக்கைப் பெயரில், ஒரு சூப்பர் கௌபாய் காமிக்ஸ் ஹீரோ - தமிழ் காமிக்ஸ் இரசிகர்களுக்கு ரொம்ப பரிச்சயமானவர் என்பது இந்தப் பதிவிற்கு தேவையில்லாத விஷயம்! ;) வழக்கம் போல இஸ்லாமிய தீவிரவாதிகள் (ஹாவ்வ்வ்... கொட்டாவி) நம் நாட்டில் நுழைந்து ஒரு கப்பலை கைப்பற்றுகிறார்கள்! அதில் உள்ள பயணிகளை, பணயக் கைதிகளாக மாற்றுகிறார்கள்! கடற்படை தளபதிகள் இக்கப்பலை மீட்க RAW-வின் உதவியை கோருகிறார்கள் - பின்னிரவில் இந்தத் தகவல் டைகரை தட்டி எழுப்புகிறது. காபி கூட குடிக்க முடியாத கடுப்பில் மனிதர் நிமிடத்திற்கொருதரம் காபி காபி என்று புலம்பித்தள்ளுகிறார்! ஓசையின்றி முடிக்க வேண்டிய இரகசிய ஆபரேஷன் என்பதால் ராக்கெட் லாஞ்சரை டைகருக்கு தர மறுக்கிறார்கள்! கடுப்பாகும் டைகர், 'அப்புறம் எப்படி எதிரிகளை தாக்குவது? ராக்கெட்டை கைகளால் வீசியா?!' என்று ஹிந்தியில் ஜோக்கடிக்கிறார்! அப்புறம் துப்பாக்கி மற்றும் ஒரு சில சகாக்கள் சகிதம் மிதவை மூலம் கப்பலை அடைகிறார்! துப்பாக்கி சண்டை நடக்கிறது, தனது சகாக்களை தலைமையகத்திற்கே திரும்பிப் போகச் சொல்லி தான் மட்டும் மாட்டிக்கொள்கிறார்! கடற்படை தளபதிகள் கப்பலை அழிக்க திட்டமிடுகின்றனர் - டைகர் தப்பித்தாரா? இதர பயணிகளை காப்பாற்றினாரா? அந்த கப்பலை தீவரவாதிகள் ஏன் கைப்பற்றினர்? - போன்ற விவரங்களை எந்த ஒரு பரபரப்பும், சுறுசுறுப்பும் இல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்! படித்து முடித்த பிறகு எனக்கே காப்பி குடிக்க வேண்டும் போல் தோன்றியது!
இருந்தாலும் ஆறுதலானதொரு விஷயம், சித்திரத் தரம் மற்றும் வண்ணக் கோர்ப்பு! முழுக்க முழுக்க இந்தியக் கலைஞர்களின் கைவண்ணத்தில்! சித்திரங்களில் அதிக டீடெயில்ஸ் இல்லாவிட்டாலும் நன்றாகவே உள்ளது - இப்படிப்பட்ட சித்திரங்கள் அருமையானதொரு கதையுடன் மட்டும் கைகோர்த்துவிட்டால் அற்புதமான காமிக்ஸ்கள் வெளிவரும் வாய்ப்பு உள்ளது! திரைப்பட விளம்பரம் என்ற ஒரு அம்சத்தை தாண்டி அவை வியாபார ரீதியாகவும் வெற்றியடையும் வாய்ப்பும் உள்ளது! இந்த எண்ணம் தந்திடும் மகிழ்ச்சியில் ஏஜென்ட் வினோத் கிராபிஃக் நாவலையும் தள்ளுபடியில் ;) ஆர்டர் செய்து விட்டேன்! இந்திய காமிக்ஸ் கலைஞர்களுக்கு ஏதோ என்னாலான ஒரு சிறு ஆதரவு! :)
Comics and Graphic Novel based on Bollywood Movies / Article by Karthik Somalinga / © www.bladepedia.com
Mishkin
பதிலளிநீக்குmugamoodi comics nalla ideya...!
thanks!
நீக்குஎந்திரன்ல பணத்தை அள்ளியிருக்கலாமா - கொஞ்ச நாள் முன்னாடி தான் சன் டிவி அந்தப் படத்தோட வசூல் உண்மைய சொல்லுச்சு கவனிச்சீங்களா ?.
பதிலளிநீக்குடான் படத்துக்கு ஒரு காமிக்ஸா .. உஸ்.. நல்லவேளை அத படிக்கலை.. :)
முகமூடி வெற்றியடைந்தால் இன்னும் நிறைய படங்களை எதிர்பார்க்கலாம்.
அப்படியா? என்ன சொன்னார்கள்? :) என்ன சொல்லியிருந்தாலும், சன் டிவி சொல்வதை அப்படியே நம்ப முடியுமா என்ன? ;)
நீக்கு//முகமூடி வெற்றியடைந்தால் இன்னும் நிறைய படங்களை எதிர்பார்க்கலாம்//
உண்மை...
இரண்டையும் ஒப்பிட்டு நல்லதொரு அலசல்... நன்றி... வாழ்த்துக்கள்...(TM 2)
பதிலளிநீக்குநன்றி :)
நீக்குComicskku Ippothaikku Lion Groups thaan! AAnaalum ithu miga nalla idea boss!! Parpom cinema ulagam irangi vilaiyaduma enru!
பதிலளிநீக்குKochadaiyaan!
நீக்குhttp://articles.economictimes.indiatimes.com/2012-07-30/news/32942132_1_kochadaiyaan-overseas-market-endhiran
super post thx
பதிலளிநீக்குthanks!!
நீக்குரா ஒன் காமிக்ஸ் நானும் படித்தேன். படம் ரிலீஸ் ஆகிவிட்டதால், பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள். செம மொக்கை!
பதிலளிநீக்குதமிழ் காமிக்ஸ் ஹீரோக்களை எதிர்பார்க்கிறேன். :D :D :D
கோச்சடையான் முந்துவார் எனத் தெரிகிறது!
நீக்குஏக் தா டைகர் காமிக் வீடியோல பார்த்தேன். பார்ப்போம் தமிழில் காமிக் படித்து ரொம்ப நாளாகி விட்டது. மொக்கையாய் இருந்தால் கூட வரவேற்கலாம்.
பதிலளிநீக்கு//தமிழில் காமிக் படித்து ரொம்ப நாளாகி விட்டது//
நீக்குதிரைப்படத்தை ஒட்டிய காமிக்ஸை சொல்கிறீர்களா? இல்லை பொதுவாகவே தமிழ் காமிக்ஸ் பற்றியா? ஏன் என்றால் இப்போது அருமையான தரத்தில் லயன் மற்றும் முத்து காமிக்ஸ்கள் நூறு ரூபாய் விலையில் தொடர்ந்து வெளியாகின்றன!
Online மூலம் வாங்க தளம் ஒன்று சொல்லுங்கள். Discovery Book Palace - இல் pay பண்ணி Confirm ஆகி. ஹும். முடியல. பெங்களூர்ல எங்கயாவது கிடைக்குதா தல?
நீக்குஆஹா ,கார்த்திக் கலக்குறீங்க ,தொடர்ந்து இது போன்ற நண்பர்களை ஈர்த்து வருகிறீர்கள்,உங்களது தளத்தின் வெற்றி ,நமது லயனுக்கு மேலும் புதிய ,பழைய நண்பர்களை ஈர்த்து வருகிறது ,தொடரட்டும் உங்கள் சீரிய பணி.நண்பரே பிரபு கிருஷ்ணா 100 ரூபாய் புத்தகங்கள் எதையும் மிஸ் செய்து விடாதீர்கள்,பழைய புத்தகங்களும் cc ல் கிடைக்கும் .எங்கு வாங்க வேண்டும் என்பதை கார்த்தியே கூறுவார்.
நீக்குஉங்களது எண்ணம் உயர்ந்தது,நமது கமிக்ஸிருக்கு வலு சேர்ப்பது என்பது மேற்கண்ட நண்பரின் வினாவில் தெள்ள தெளிவாகிறது ,வாழ்த்துக்களுடன் நன்றி .மிஸ்கின் நமது ரசிகர்தானே ,அவரிடம் இப்பட வெளியீடு,அல்லது இப்படத்தின் ஏதேனும் சிறப்பு விழாக்களின் போது, நமது புத்தகத்தையும் அறிமுக படுத்த சொனால் மிக பெரிய விளம்பரமாய் அமையும் ................
நீக்கு@Prabu:
நீக்குஅவர்களின் அதிகாரபூர்வ Ebay ஷாப் இதோ:
http://www.ebay.in/sch/thecomicsstores2012/m.html?_nkw=&_armrs=1&_from=&_ipg=25&_trksid=p3686
கீழ்காணும் புத்தகங்களை பரிந்துரைக்கிறேன்!:
http://www.ebay.in/itm/Muthu-Comics-En-Peyar-Largo-Tamil-Comics-/221099486638?pt=IN_Books_Magazines&hash=item337a8e6dae
http://www.ebay.in/itm/Lion-Comics-New-Look-Special-Tamil-Comics-/221099585168?pt=IN_Books_Magazines&hash=item337a8fee90
http://www.ebay.in/itm/Lion-Comics-Double-Thrill-Special-Tamil-Comics-/221102043508?pt=IN_Books_Magazines&hash=item337ab57174
@ஸ்டீல் க்ளா:
நீக்குநன்றி நண்பரே! நமது ப்ளாகை பார்த்து யாராவது காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கினால் மகிழ்ச்சிதான்! :)
@Prabu:
நீக்குalso see this post:
http://www.bladepedia.com/2012/07/lion-and-muthu-comics-subscription-info.html
வாவ் சூப்பர் அப்படியே அவரை சந்தாவில் சேர ஆவன செய்யுங்கள் கார்த்திக் அண்ணே உங்களுக்கு புண்ணியமா போவும் :))
நீக்கு.
எங்கே என்று சொன்னால் இப்போதே சேர்ந்துடுவேன். :-))))
நீக்குupdate: நமது நண்பர் நான்கு ஸ்பெஷல் இதழ்களையும் ஆர்டர் செய்து விட்டார்! :)
நீக்குNice Sharing நண்பரே :))
பதிலளிநீக்கு.
நண்பரே பணி அதிகமோ ஈரோடு புத்தக கண்காட்சிக்கு வரவில்லையே ;-)
பதிலளிநீக்கு.
புத்தக கண்காட்சி என்றாலே வீட்டில் டென்ஷன் ஆனதால் வர இயலவில்லை! :D
நீக்கு?
நீக்குஅதுக்கு இது பதில் இல்லையே ..........................மன்னா ...........
நீக்குவேறென்ன பதிலை எதிர்பார்த்தீர்கள் .......................... அண்ணா ...........?! :)
நீக்குஅதனை நிராகரித்து விடுங்கள் நண்பா நான் வேறு அர்த்தத்தில் யோசித்ததன் விளைவு ..........
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு