லயன் காமிக்ஸ் Double-Thrill ஸ்பெஷல் - ஒரு காவியப் பார்வை!

கிட்டத்தட்ட 5 மாதங்களில், 50000 ஹிட்ஸ்களை அள்ளித் தந்த வாசகர்களுக்கு நன்றி! :) 

லயன் காமிக்ஸ் Double-Thrill ஸ்பெஷல் - பிரகாஷ் பப்ளிஷர்ஸ் தமது புது அவதார பாணியில் இவ்வருடம் வெளியிட்டிருக்கும் நான்காவது இதழ்! வழக்கம் போல உயர்தர ஆர்ட் பேப்பரில் இரண்டு முழு வண்ண சாகசங்கள் - கேப்டன் பிரின்ஸ் குழுவின் "பரலோகப் பாதை பச்சை!" மற்றும் ரிப்போர்ட்டர் ஜானியின் "பனியில் ஒரு பரலோகம்!". கொசுறாய் கருப்பு வெள்ளையில் ஒரு ஆதி கால காமிக்ஸ் கதை - "கொலைகார பொம்மை". அப்புறம் பக்கம் பக்கமாய் ஆசிரியரின் கட்டுரைகள், வாசகர் கடிதங்கள் மற்றும் வெளிவரவிருக்கும் இதழ்களின் விளம்பரங்கள் என ஒரு சுவாரசியமான இதழாக அமைந்திருக்கிறது!

1. பரலோகப் பாதை பச்சை! - கேப்டன் பிரின்ஸ் குழுவின் அதிரடி சாகசம்!:
பிரின்ஸ் குழு பற்றிய ஒரு சிறிய அறிமுகத்திற்கு இந்தப் பதிவை படிக்கவும் - இது பதிவெழுதத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் இட்ட பதிவு - கொஞ்சம் மொட்டையாக, மொக்கையாக இருக்கும் - மன்னிக்கவும்! (இப்படி ஒவ்வொரு கதாநாயகருக்கும் ஒரு அறிமுகப் பதிவு இட ஆசை!). முன்னட்டையை அலங்கரிப்பது இந்த கதைக்கான படம்தான் - அவ்வளாவாக கவரவில்லை என்றாலும் நன்றாகத்தான் இருக்கிறது! பிரேசிலில், ஆற்றோரம் அமைந்ததொரு அழகிய சுற்றுலாப் பகுதியில் நாட்டாமை செய்து வரும் ஒரு கும்பலிடம் பிரின்ஸ் குழு சிக்கிக் கொள்கிறது! பிரின்சின் அட்டகாசமான படகின் மேல் அவர்களுக்கு ஒரு கண் - அதைப் பயன்படுத்தி ஒரு விலை உயர்ந்த 'சரக்கை' சட்ட விரோதமாக கடத்த நினைக்கிறார்கள். பிரின்ஸ் குழு அதில் இருந்து எப்படி தப்பிக்கிறது, எப்படி படகை மீட்கிறது என்பதுதான் கதை! உயிரோட்டமுள்ள ஓவியங்கள் பிரின்ஸ் கதைத் தொடரின் சிறப்பம்சம் - கருப்பு வெள்ளையிலேயே சிறப்பாக இருக்கும்! அப்படி இருக்க இவ்விதழில் முழு வண்ணத்தில் கண்களை கவர்கிறது! படங்களை நின்று, நிதானித்து, இரசித்து கதாபாத்திரங்களின் தன்மையை உள்வாங்கிப் படித்தால் ஒரு ராம்போ படத்தைப் பார்த்த எஃபெக்ட் கிடைப்பது நிச்சயம்! சில சாம்பிள் சித்திரங்கள் இதோ!:2. பனியில் ஒரு பரலோகம்! - ரிப்போர்டர் ஜானியின் குழப்படி சாகசம்! ஜானியை அறியாதவர்களுக்காக ஒரு சிறிய அறிமுகம் (விரைவில் ஒரு தனி அறிமுகப் பதிவை எதிர்பாருங்கள்) - ஜானி ஒரு துப்பறியும் ரிப்போர்ட்டர், இவரிடம் சிக்கும் கேஸ்கள் எல்லாம் குழப்படி ரகம்தான் - இரண்டு மூன்று தடவை படித்தால் மட்டுமே புரியும்! ஆனால் இவர் கதைகளில் ஓவியங்கள் மிகவும் பிரமாதமாக இருக்கும்! டபுள் த்ரில்லில் வெளியாகியுள்ள 'பனியில் ஒரு பரலோகம்' - மேற்சொன்ன ரீதியிலான ஒரு அக்மார்க் ஜானி சாகசம்! வண்ண ஓவியங்கள் அவ்வளவு தெளிவு - பனிப்பிரதேசத்தில் நடக்கும் கதை என்பதால் cool blue வண்ணத்தில் முக்கி எடுத்த சித்திரங்கள் - சொக்க வைக்கிறது! அதுவும் இதற்கான பின்னட்டை டாப் கிளாஸ்! சமீபத்தில் இவ்வளவு வசீகரமான அட்டையை பார்த்தது இல்லை!

நம்மூர் பாணியில், ஒரு மோசடி சாமியாரின் கதை! போலீசிடம் இருந்து தப்பிக்க முயலும் போது சாமியார் ஆக்சிடெண்டில் இறந்து போகிறார் - அல்லது அப்படித்தான் எல்லாரும் நம்புகிறார்கள்! அவருடைய மகனோ, 'என் அப்பா ரஸ்புடீனின் மறுபிறவி - ஒன்பது மாதத்தில் உயிர்தெழுந்து வருவார்' என பீலா விட்டுத் திரிகிறார்! நடுவில் சாமியாரை போலவே முகத்தோற்றம் உடைய அவரின் சகோதரர் வேறு உள்ளே நுழைந்து குழப்புகிறார். இப்படி பலப் பல குழப்பங்களின் முடிச்சுகள் கதையின் இறுதியில் ஒவ்வொன்றாய் அவிழ்கிறது - எடிட்டர் பாணியில் சொல்வதென்றால் இடியாப்ப சிக்கல் க்ரைம் த்ரில்லர்!

3. கொலைகார பொம்மை - ஒரு சாவகாசமான சாகசம்!
புதிய லயனை தொட்டுத் தொடரும் பழைய காமிக்ஸ் (கூடா) சகவாசம்! இந்த கதையைப் படிக்கும் போது வேதாளர் குகை போல எழுந்த கொட்டாவியை தவிர்க்க முடியவில்லை! ஜானியின் கதை குழப்பமாக இருந்தாலும், இரசிக்க முடிந்ததிற்கு காரணம் அதன் உயிரோட்டமுள்ள ஓவியங்கள் - அதுவும் வண்ணத்தில்! ஆனால், இந்தக் கதையின் ஓவியங்கள் ரொம்பவே சுமார் ரகம்! கதையும் அவ்வளவு பரபரப்பாக இல்லை! எடிட்டர் வலைப்பூவில், பல நண்பர்கள் இந்த கதையை பிரமாதம் என்று புகழ்ந்து தள்ளி, இது போன்ற அரதப் பழசான கதைகளுக்கு ஆழமான அஸ்திவாரம் போட்டிருப்பதை நினைத்தாலே பகீர் என்கிறது!

எது எப்படியோ, சமீபத்தில் மிகவும் திருப்திப்படுத்திய இதழ்களில் இதுவும் ஒன்று! ஒரு சில சிறு குறைகள் இருப்பினும் மிகவும் சுவாரசியமான வாசிப்பு அனுபவத்தை தந்திட்டதொரு இதழ்! டபுள் த்ரில் ஸ்பெஷல் - ஏ த்ரில் மாங்கே மோர்! :D

வாசகர்களின் எண்ணங்களை கேட்டு அதை ஓரளவுக்காவது நடைமுறைப்படுத்தும் அரிதான பத்திரிக்கை ஆசிரியர்களில் விஜயனும் ஒருவர்! வாசகர்கள் சுட்டிக்காட்டிய பல குறைகளை அல்லது காண விரும்பிய மாற்றங்களை ஒவ்வொன்றாக அவர் நடைமுறைப்படுத்தி  வருவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது! சமீபத்திய ஒரு சில முக்கிய உதாரணங்களாக பேக்கிங் முறையில் கொண்டு வந்த முன்னேற்றம் மற்றும் கருப்பு வெள்ளை கதைகளுக்கு ஓரளவு தரமான வெள்ளைத்தாளை உபயோகிப்பது இவற்றைச் சொல்லலாம்! அப்புறம் ஓரளவு குறைந்த விலையில் கருப்பு வெள்ளை காமிக்ஸ் புத்தகங்களை வெளியிடுவதற்கும் சம்மதம் தெரிவித்துள்ளார்!

இந்த இதழில் அவர் வாசகர் விருப்பத்திற்கேற்ப செய்துள்ள மாற்றங்கள் சில!
 • வெளியீட்டாளர் விபரம் - எளிய Ebay முகவரியுடன் ;)
 • மொழிப்பெயர்ப்பு நிஜமாகவே சூப்பர்! சமீபத்தில் வந்த இதழ்களில் இதுதான் பெஸ்ட்! குறிப்பாக பார்னேவின் புலம்பல்கள் உதட்டோரம் புன்னைகையை வரவழைத்தன!
 • கதைகளில் எழுத்துப் பிழைகளைப் பார்த்த நினைவில்லை!
 • முன்னட்டையில் சிறிய புள்ளிப் பிழையை சரி செய்ய மெனக்கெட்டு ஸ்டிக்கர் ஒட்டியிருப்பது - என்னே ஒரு கடமை உணர்ச்சி! சட்டென்று பார்க்கும் போது கொஞ்சம் கூட வித்தியாசமாய்த் தெரியவில்லை! (பாட புத்தகத்திலேயே பக்கம் பக்கமாய் ஸ்டிக்கர் ஒட்டியதைப் பார்த்துப் பழகிய தமிழர்கள் அல்லவா?!)
 • அப்புறம் சக வாசகர் உதயகுமாருக்கு வாழ்த்துக்கள் - ரொம்பவே மெச்சூர்டான ஒரு சுய அறிமுகம்! மாதம் ஒரு வாசகர் பகுதியிலும் இந்த முறையை பின்பற்றினால் நன்றாக இருக்கும்!
 
குறை சொல்லவில்லையென்றால் எனக்கு தூக்கம் வராது என்பதால், ஒரு சில குறைகளை பட்டியலிடுகிறேன்! ;) விஜயன் அவர்கள் இவற்றைப் படித்து டென்ஷன் ஆகாமல் இருந்தால் சரிதான்!
 • பரலோகப் பாதை பச்சை - அட்டையில் பச்சையை ஹைலைட் செய்கிறேன் பேர்வழி என்று சிகப்புக் கம்பளம் விரித்தது செம காமெடி! ;)
 • மாதம் ஒரு வாசகர் பகுதியை வண்ணத்தில் வெளியிடுங்களேன் ப்ளீஸ்?!
 • எழுத்துருக்கள் சிறிதும் பெரிதுமாய் இருப்பதை தவிர்க்க, அதிக அளவு மார்ஜின்கள் விடாமல் அச்சிடுவது சாத்தியமா? "Proportionate"ஆக இமேஜை என்லார்ஜ் செய்து, குறைவான மார்ஜின் விட்டு அச்சிட்டால் டயலாக் பாக்ஸ்சுகளுக்கு சற்றே கூடுதல் இடம் கிடைக்குமே?! இப்படிச் செய்தால், பைண்டிங்கில் பிரச்சினை வருமோ?
 • கருப்பு வெள்ளையில் உள்ள வேர்களை அடியோடு துண்டிக்கக் கூடாதுதான் - ஓக்கே! ஆனால் எண்பது, தொண்ணூறுகளில் வந்த கருப்பு வெள்ளைக் கதைகளை வெளியிடலாமே?! அறுபதுகளின் கதைகள் ரொம்பவே பொறுமையை சோதிக்கின்றன!
 • தமிழ் சினிமாவின் மூத்த மும்மூர்த்திகளான MKT, MGR மற்றும் சிவாஜி - இவர்களின் திரைக்கு வெளிவராத படங்களை தூசு தட்டி இப்போது வெளியிட்டு புத்தம் புதிய படம் என சொல்வதை போல் இருக்கிறது மாயாவி, லாரன்ஸ் - டேவிட், ஜானி நீரோ இவர்களின் வெளிவராத சாகசங்களை 'புத்தம் புதிய சாகசம்' என்று அழைப்பது! புதிய கதைகளுக்கு நடுவில் பத்தோடு பதினொன்றாய் அறுபதுகளின் காமிக்ஸ் கதைகளை இணைப்பது முகமூடி படத்தில் மலைக்கள்ளன் பிட்டை ஓட்டுவது போன்ற உணர்வையே தரும்! தயவு செய்து இப்படிப்பட்ட கதைகளை காமிக்ஸ் கிளாசிக்சில் மட்டும் வெளியிடுங்கள்! எவர் கிரீன் கிளாசிக்ஸ் ஆன கௌபாய் கதைகள் இதற்கு விதிவிலக்கு!
 • அப்புறம் என் பெயரில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் உள்ளது - ஸ்டிக்கர் அனுப்பிவைக்க முடியுமா?! :D

குறை சொன்ன திருப்தியில் தூக்கம் கண்களை சுழற்றுவதால், இப்போதைக்கு இத்தோடு முடித்துக் கொள்கிறேன் ;) அடுத்ததாக வைல்ட் வெஸ்ட் ஸ்பெஷலில் சந்திப்போம் நண்பர்களே! :) குட் நைட், வைல்ட் ட்ரீம்ஸ்! ;)

பி.கு.: ப்ளேட்பீடியாவில் 50000-வது ஹிட்டை அடித்த ஸ்பெஷல் வாசகர் நீங்களாகவும் இருக்கலாம்! :) உங்கள் ஆதரவுக்கு நன்றி! :)

39 comments:

 1. சுருக்கமான அலசல் நன்று. நன்றி...

  குறைகளையும் சொன்னது சிறப்பு...

  தொடருங்கள்... வாழ்த்துக்கள் (TM 2)

  ReplyDelete
 2. ரொம்ப அனுபவிச்சு எழுதி இருக்க.. ஆனா மச்சி XIII என்று ஒரு காமிக்ஸ் வாங்கி நான் இன்னும் வாசிக்காமலே இருக்கன்.. ஆனா லக்கி லுக் ரொம்ப பிடிக்கும்..

  ReplyDelete
  Replies
  1. பொறுமையா உட்கார்ந்து XIII-ஐப் படிங்க - நல்லா இருக்கும்!

   Delete
  2. ஒரு வார்னிங் படிக்க ஆரம்பித்தால் கீழே வைக்க முடியாது :-)

   Delete
 3. Saravanan, DindugalAugust 21, 2012 at 8:41 AM

  vazhakkamana ungal paanikku thirumbiyatharku vazhthukkal. vasagargalin karuthukkalaik kettu matram kondu varuvathu vijayan sir mattum alla. neengalum than. enathu vendukolai niraivetriyatharku nandri.

  endrum ungalin azhagana ezhuthukkalai rasikkum - Saravanan, Dindugal

  ReplyDelete
  Replies
  1. என்ன காமெடி சரவணா இது! :D

   Delete
 4. நல்ல விமர்சனம்,
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நல்ல பின்னூட்டம்!
   நன்றிகள்! :D

   Delete
 5. விமர்சன கிங் கார்த்திக்..

  கொலைகார பொம்மை - கதை பற்றிய என் மனநிலையை மிகச்சரியாக பிரதிபலிக்கிறது உங்கள் பதிவு, அதற்க்கு என் ஸ்பெஷல் தேங்க்ஸ்.

  பரலோகப்பாதை பச்சை - கதையில் பிரின்ஸ் கௌரவ தோற்றமோ என்ற என்னத்தை அற்புதமான சித்திரங்கள் சரிகட்டியிருக்கிறது என்பது என் கருத்து.

  பணியில் ஒரு பரலோகம் - கதையில் சில ஓட்டைகள் இருந்தாலும், ரிப்போர்டர் ஜானியை முதல்முறையாக கலரில் பார்ப்பதால் அது பெரிதாக தெரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. //விமர்சன கிங் கார்த்திக்//
   அய்யய்யோ அதுக்கெல்லாம் நான் வொர்த் இல்லீங்! ;)

   //கதை பற்றிய என் மனநிலையை மிகச்சரியாக பிரதிபலிக்கிறது உங்கள் பதிவு//
   ஆம்! அது ஒரு அக்மார்க் மொக்கை கதை என்பதில் சந்தேகம் இல்லை!

   Delete
 6. நல்ல அலசல்! அருமை! நன்றி!

  இன்று என் தளத்தில்
  பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5
  http://thalirssb.blogspot.in/2012/08/5.html

  ReplyDelete
  Replies
  1. //பேய்கள் ஓய்வதில்லை!//
   :) :) :)

   Delete
 7. அருமையான விமர்சனம் கார்த்திக். பொம்மை கதை எனக்கு பிடித்திருந்தது.

  //ரொம்பவே மெச்சூர்டான ஒரு சுய அறிமுகம்! மாதம் ஒரு வாசகர் பகுதியிலும் இந்த முறையை பின்பற்றினால் நன்றாக இருக்கும்!// என் சுய அறிமுகம் வழக்கமான பாணியில் முன்னமே அனுப்பி விட்டேன். அப்போ அடுத்த தடவை வாருவீங்கன்னு நினைக்கிறேன் :)

  ReplyDelete
  Replies
  1. //அடுத்த தடவை வாருவீங்கன்னு நினைக்கிறேன் //
   இருங்க, என் தீவிர(!) வாசக(!) விசிறி(!) திண்டுக்கல் சரவணன்கிட்ட சொல்லி உங்களை கலாய்க்கிறேன்! ;)

   Delete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
 9. வழக்கம் போலவே மிக அருமையான விமர்சனம். உங்களிடமிருந்து பாஸ் மார்க் வாங்கிவிட்டது இந்த புத்தகம். மகிழ்ச்சி. ஜானி கதையில் வந்த டாக்டர் குழப்பம் உங்களுக்கு வரவில்லையா ?.

  ----

  என் கருத்து இதோ.

  டபுள் த்ரில் இதழைப் படித்து முடித்தேன்.

  - அட்டைப்படத்தில் நிகழ்ந்த எழுத்துப் பிழையை அப்படியே விடாமல் ஸ்டிக்கர் ஒட்டி அனுப்பியிருந்தது, பாராட்டுக்குரியது. புத்தகத்தின் தரத்தினை உயர்த்த தொடர்ந்து உழைப்பது கண்கூடு.

  - இரண்டு கதைகளின் ஹீரோக்களையும் முதல் முறையா கலரில் பார்ப்பதற்கு அருமையாக இருந்தது. சித்திரங்களில் கேப்டன் பிரின்ஸ் கதை, ஜானியைவிட நன்றாக இருந்தது. அதுவும் அந்த 20ஆம் பக்கத்தை 5 நிமிடங்கள் ரசித்துப் பார்த்துவிட்டே கதையைப் படிக்க முடிந்தது.

  - இரண்டு கதைகளிலும், ஹீரோக்களுக்கு பெரிதான வேலை ஒன்றும் இல்லை. இது பிரின்ஸின் கடைசி கதை என்பதால் சற்றே அதிக ஆக்‌ஷன் எதிர்பார்த்தேன்.. அதில் ஏமாற்றமே.

  - ஜானி கதையில் அவர் ஒன்றுமே செய்யவில்லை. நடுவில் வந்த அந்த டாக்டர் குழப்பத்திற்கு சரியான பதில் க்ளைமேக்ஸில் சொல்லப்படவில்லை.

  - கருப்பு/வெள்ளைக் கதை வித்தியாசமாக இருந்தது. அதிலும் ஒரு சின்ன நெருடலான விஷயத்தை க்ளைமேக்சிலும் விவரிக்கவில்லை.. ஒரிஜினல் கதையிலேயே அப்படி என்றால் சரியே...

  - முன் அட்டையை (பிரின்ஸ்) விட பின் அட்டை (ஜானி) அருமையாக இருந்தது.

  இனி கே.டைகர், லார்கோவின் காலம் ஆரம்பித்துவிட்டதை இந்த இரண்டு கதைகளும் நமக்கு (எனக்கு) உணர்த்துகிறது.

  ReplyDelete
  Replies
  1. நண்பரே, உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி!

   நீங்கள் சொன்னவாறு முக்கிய நாயகர்களின் ஆக்ஷன் குறைவு என்றாலும் அழகான வண்ணச் சித்திரங்களும், பரபரப்பான திரை(பட)க்கதையும் அதை ஈடு கட்டிவிட்டன! :) பதிவில் சொன்னது போல ஜானி கதை சற்று குழப்பமானதுதான்! நேரம் கிடைக்கும்போது இன்னொரு முறை படிக்க வேண்டும்! :)

   Delete
 10. //அப்புறம் என் பெயரில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் உள்ளது - ஸ்டிக்கர் அனுப்பிவைக்க முடியுமா

  நியூமரலாஜி முறைப்படி பேர் மாற்றியவர்களுக்கு ஸ்டிக்கர் கிடையாது :)

  ReplyDelete
  Replies
  1. ஐயா சாமி, என் பெயர் Karthik

   KarthiCk கிடையாது! ;)

   பொறந்ததுல இருந்தே Karthik-தான்! :D

   Delete
 11. //அப்புறம் என் பெயரில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் உள்ளது - ஸ்டிக்கர் அனுப்பிவைக்க முடியுமா

  அது உங்க பேர்தானா ?. நீங்கள் பணம் அனுப்பி விட்டீர்களா ?. அட்ரஸ் சரியா... இல்ல வேற யாரோ பேர உங்க பேர் நினைச்சு குழம்பிட்டீங்களா ?... :)

  ReplyDelete
  Replies
  1. இப்பதான் ஒரு ஆளு 'நீதானே அந்த கார்த்திக்'னு மிரட்டினார்! இப்போ நீங்க, 'நீ இந்த கார்த்திக் இல்லை'ங்கறீங்க! என்ன நடக்குது இங்க?! :D

   Delete
 12. விறுவிறுப்பான, அழகிய விமர்சனம்.

  ReplyDelete
 13. Sarvanan, DindugalAugust 22, 2012 at 2:34 PM

  Adutha iru mathangalil 1 lakh hits pera vazhthukal.

  ungal adutha pathivai avaludan ethirparkkum ungalin theevira vaasagan - Saravanan, Dindugal

  ReplyDelete
 14. Saravanan, DindugalAugust 22, 2012 at 2:34 PM

  Adutha iru mathangalil 1 lakh hits pera vazhthukal.

  ungal adutha pathivai avaludan ethirparkkum ungalin theevira vaasagan - Saravanan, Dindugal

  ReplyDelete
  Replies
  1. டியர் கும்மிபாய் சரவணன், ஒரு நாளைக்கு 834 தடவை ப்ளேட்பீடியாவை நீங்கள் படித்து ஆதரவு அளித்தால் 1 லட்சம் ஹிட்சை இரண்டு மாதங்களில் தொட்டு விடலாம்! ;)

   Delete
 15. // ஒரு நாளைக்கு 834 தடவை ப்ளேட்பீடியாவை நீங்கள் படித்து ஆதரவு அளித்தால் 1 லட்சம் ஹிட்சை இரண்டு மாதங்களில் தொட்டு விடலாம்! ;) //

  விடுங்க அண்ணாச்சி இதுக்குன்னு ஒரு ஆள செட் பண்ணிட்டாப்போச்சு ( ஆதரவு அளிப்பதற்கு மட்டும் தான் ) ;-)
  .

  ReplyDelete
 16. // எது எப்படியோ, சமீபத்தில் மிகவும் திருப்திப்படுத்திய இதழ்களில் இதுவும் ஒன்று! ஒரு சில சிறு குறைகள் இருப்பினும் மிகவும் சுவாரசியமான வாசிப்பு அனுபவத்தை தந்திட்டதொரு இதழ்! டபுள் த்ரில் ஸ்பெஷல் - ஏ த்ரில் மாங்கே மோர்! :D //

  கரெக்டு கரெக்டு யுவர் ஆணர் ;-)
  .

  ReplyDelete
 17. hi karthik i want to contact u about tab.
  please give me a call

  friend i'm waiting for ur call,

  Nandri.........

  Desingh
  9789042745

  ReplyDelete
  Replies
  1. // about tab.//
   u mean the Karbonn tablet? ok, will call u sometime today!

   Delete
 18. காமிக்கான் பற்றி முன்பதிவு ஒன்று விவரமாக விரைவில்.... எதிர்பார்கிறேன்

  ReplyDelete
 19. எடிட்டர் சொன்னவுடன் மரம் எண்ணுவதை ;D விட்டு விடுவீர்கள் என்று நினைத்தேன். விட வில்லை , நம்ம வேலெய நம்ம செஞ்சு கிட்டே இருக்கணும்.

  //தமிழ் சினிமாவின் மூத்த மும்மூர்த்திகளான MKT, MGR மற்றும் சிவாஜி - இவர்களின் திரைக்கு வெளிவராத படங்களை தூசு தட்டி இப்போது வெளியிட்டு புத்தம் புதிய படம் என சொல்வதை போல் இருக்கிறது மாயாவி, லாரன்ஸ் - டேவிட், ஜானி நீரோ இவர்களின் வெளிவராத சாகசங்களை 'புத்தம் புதிய சாகசம்' என்று அழைப்பது! புதிய கதைகளுக்கு நடுவில் பத்தோடு பதினொன்றாய் அறுபதுகளின் காமிக்ஸ் கதைகளை இணைப்பது முகமூடி படத்தில் மலைக்கள்ளன் பிட்டை ஓட்டுவது போன்ற உணர்வையே தரும்! தயவு செய்து இப்படிப்பட்ட கதைகளை காமிக்ஸ் கிளாசிக்சில் மட்டும் வெளியிடுங்கள்! எவர் கிரீன் கிளாசிக்ஸ் ஆன கௌபாய் கதைகள் இதற்கு விதிவிலக்கு!//

  எனக்கும் அதே பீலிங் தான் . இன்னமும் மாயாவியை கட்டிக்கொண்டு அழுவதில் பிரயோஜனம் இல்லை. ஆனா எடிட்டரோட மாயாவியை பற்றி தனி பதிவ பார்த்தா மாயாவி நம்ம விடமாட்டார் போல இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. //எடிட்டர் சொன்னவுடன் மரம் எண்ணுவதை ;D விட்டு விடுவீர்கள் என்று நினைத்தேன்//
   அப்புறம்தான் அவரே, 'பரவால்ல எழுதுபா'ன்னு சொல்லிட்டாரே! ;)

   //மாயாவி நம்ம விடமாட்டார் போல இருக்கு//
   :) விடாது கருப்பு!

   Delete
 20. நல்ல விமர்சனம்!
  'கொலைகார பொம்மை' படங்கள் கொஞ்சம் அப்படி இப்படி என்றாலும் எனக்கென்னவோ கதை கொஞ்சம் பிடித்தமாதிரிதான் இருந்தது.
  சேவை தொடர வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு நன்றி விஜய்! ஆம், பல நண்பர்களுக்கு கொலைகார பொம்மை பிடித்திருக்கிறது :)

   Delete

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia