BoPET = மைலார் / SHSS = ஓ மை லார்ட்!

லயன் காமிக்ஸ் "சூப்பர் ஹீரோ சூப்பர் சொதப்பல்" (SHSS) இதழ் ஐம்பது வருடங்களுக்கு முந்தைய, வழக்கொழிந்த காமிக்ஸ் நாயகர்களைத் தாங்கி, சில பல 'பழைய' வாசகர்களின் கட்டாயத்தின் பேரில், கடனே என்று வெளிவந்துள்ளது! ஸ்பைடர் மற்றும் ஆர்ச்சி கதைகளை மேலோட்டமாக படித்தேன். மாயாவி கதையைப் படிக்க பொறுமை இல்லை, படித்தாலும் விமர்சிக்கப் போவதில்லை. நான் இந்த நாயகர்களை குறை கூறவில்லை அந்த காலகட்டத்தில் இவர்கள் சூப்பர் ஸ்டார்கள்தான் - அதில் சந்தேகமில்லை, நானும் இவர்களை ரசித்தவன்தான் - மறுக்கவில்லை! ஆனால் இவர்களையே பிடித்துக்கொண்டு கடந்த காலத்திலேயே உழன்று கொண்டிருப்பது சரிதானா?!

இனிமேல் மாயாவி, ஜானி நீரோ, லாரன்ஸ் டேவிட், ஸ்பைடர், ஆர்ச்சி போன்ற நிகழ்காலத்திற்கு சற்றும் ஒவ்வாத நாயகர்களை காமிக்ஸ் கிளாசிக்ஸில் மட்டும் வருமாறு ஒதுக்கி வைப்பது நலம் (அவற்றில் வருவதே வீண் வேலைதான்!). அப்படித்தான் ஆசிரியர் விஜயனும் முடிவெடுத்திருக்கிறார் என்றாலும், ஆளாளுக்கு ஆஹா... ஓஹோ... என்று SHSS-ஐ புகழ்ந்து தள்ளி அவர் மனதை மாற்றி விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. ஆசிரியரின் வலைப்பூவில் வரும் சில பின்னூட்டங்களை படித்தால் குழந்தைப் பருவதிலேயே நமது வாசகர்கள் பலர் விருப்ப ஓய்வு எடுத்துவிட்டதாக தெரிகிறது. வயதில் உள்ள முதிர்ச்சி, நண்பர்களின் கருத்துகளில் காணாமல் போனது வியப்பே!

ஒருவேளை இக்கதைகளின் கதாசிரியர்களும், ஓவியர்களும் இன்னமும் உயிரோடு இருக்கும் பட்சத்தில் அவர்கள் கண்களில் SHSS மற்றும் ஏனைய கிளாசிக்ஸ் இதழ்கள் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்! உலக காமிக்ஸுகளில் கடைசி முறையாக அவர்களின் புராதனப் படைப்புகள் இன்னமும் இங்கே வெளியாகிக் கொண்டிருப்பதை அறிந்தால், அந்த ஆனந்த அதிர்ச்சியிலேயே அவர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது! ;) இன்றைய தலைமுறையினருக்கும் இக்கதைகள் பிடிக்கும் என இன்னும் சில 'பழைய' வாசகர்கள் திடமாக நம்புவது நகைப்புக்குரியது! காலம் மாறி சில காலமாகி விட்டது நண்பர்களே...!

காமிக்ஸ் கிளாசிக்ஸ் முதற்கொண்டு பிரகாஷ் பப்ளிஷர்ஸ் வெளியிடும் அனைத்து இதழ்களையும் வாங்குவதற்கு முக்கிய காரணம், நான் ஒரு தமிழ் காமிக்ஸ் சேகரிப்பாளன் என்பதே! ஏதாவது ஒரு அரிய  தருணத்தில் பழைய நினைவுகளை அசை போட உதவும் என்பது நான் காமிக்ஸ் கிளாசிக்ஸ் வாங்குவதற்கான உப காரணம். அனுபவித்து செய்ய வேண்டிய ஒன்றை வெறும் சடங்காய் செய்தால் சலித்து விடும் என்று என் வலைப்பூ அனுபவம் பற்றி சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன் (என் காமிக்ஸ் சேகரிப்பும் கொஞ்சம் அந்த ரகம்தான்!). இது காமிக்ஸ் கிளாசிக்ஸ்க்கும் பொருந்தும். தேர்ந்தெடுத்த தரமான கதைகளை வெளியிடாமல் வெறுமனே மாயாவி, நீராவி என்று வண்டியை ஓட்டினால் ரொம்ப நாள் தாங்காது!

புதிய வாசகர்கள் சேரும் இவ்வேளையில் இப்படியான விஷப் பரிட்சைகள் தேவைதானா? நம்முடைய பழைய காமிக்ஸ் மோகத்துக்கு எஞ்சியிருக்கும் ஒரே தமிழ் காமிக்ஸ் பதிப்பகத்தின், மின்வெட்டு போக மிஞ்சியிருக்கும் விலை மதிப்பற்ற நேரத்தை வீணடிப்பது முறைதானா?! நான் யாருடைய ரசனையையும் குறை கூறவில்லை, ஆனால் புதிய கதைகள் வர தடைக்கற்களாக அல்லது வேகத்தடையாக இருக்கும் காமிக்ஸ் கிளாசிக்ஸ் நமக்கு தேவைதானா?! இந்த விசயத்தில் வாசகர்கள் நிர்பந்தத்திற்கு ஆளாகாமல் ஆசிரியர் சுயமாக முடிவெடுத்தல் நலம்! கதைத்தேர்வு ஒத்து வரவில்லை என்றால் CC-ஐ மூட்டை கட்டுவதே மேல்!

வருடத்திற்கு 7 டைஜெஸ்டுகள் வீதம் இது போன்ற அரதப் பழைய கதைகளை வெளியிடுவதில் பொன்னான நேரத்தை வீணடிக்காமல்,  கொட்டிக்கிடக்கும் புதிய காமிக்ஸ் படைப்புகளை  அறிமுகப்படுத்துவதிலும், மொழிப்பெயர்ப்பு தரத்தை மேம்படுத்துவதிலும் விஜயன் அவர்கள் தமது சக்தியை செலவழிக்கவேண்டும் என்பதே அக்கறையுள்ள ஒவ்வொரு தமிழ் காமிக்ஸ் ரசிகனின் விருப்பமாய் இருக்கக் கூடும். காலத்திற்கேற்ப மாற்றம் பெற்றுள்ள புதிய சூப்பர் ஹீரோ கதைகளை (உதாரணம் பேட்மேன்) வெளியிடுவதற்கு அதீத ராயல்டி ஒரு தடையாக இருக்குமானால், பக்கங்களைக் குறைக்கலாம்! ஐம்பது வண்ணப் பக்கங்களில் புதிய, தரமான ஒரு கதையை தமிழில் படிக்க 75 ரூபாய் கூட கொடுக்கலாம்!

மேலே சொன்ன கருத்துக்கள் காட்டமாக இருந்தால் நண்பர்கள் மன்னிக்கவும். இந்த காரணத்தினாலேயே ரொம்ப நாட்களாக இந்தப் பதிவை வெளியிடாமல் வைத்திருந்தேன் - முடிந்தவரை கண்ணியமாகவே கருத்துக்களை கூறியுள்ளேன்! ;)

அப்புறம் இம்மாத ஆரம்பத்தில் குட்டியாய் ஒரு அமெரிக்க (அலுவல் ரீதியான) ட்ரிப் அடித்தபோது மறவாமல் மைலார்  உறைகளையும், அமிலத்தன்மையற்ற அட்டைகளையும் அமேசான் புண்ணியத்தில் வாங்கி வந்தேன்! மைலார் உறையில் காமிக்ஸ் இதழையும், ஸ்டெடியாக நிற்க வைப்பதற்கான அமிலதன்மையற்ற அட்டையையும் நுழைத்து நிற்பாட்டிய நிலையில் அடுக்கி வைத்தால், நம் சாணித்தாள் காமிக்ஸ்கள் கூட பல்லாண்டு வாழும் என்பது மேலை நாட்டு ஐதீகம். இதைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு இந்தப் பதிவை பார்க்கவும்!


200 அட்டைகள் + மைலார்  உறைகள் அடங்கிய காம்போ பேக்கின் விலை சுமார் முப்பது டாலர்கள். இந்திய மதிப்புப்படி ஒரு அட்டை மற்றும் உறைக்கு சுமார் எட்டு ரூபாய் ஆகிறது! இந்தியாவில் இது கிடைப்பதில்லை, மொத்தமாக இறக்குமதி செய்து, இரண்டு மடங்கு விலையில் விற்றால் நன்றாக கல்லா கட்டலாம்! ;) காமிக்ஸ் சுய / குடிசைத் தொழில் ஆர்வலர்கள், இதற்காக என்னென்ன வஸ்துகளை இறக்குமதி செய்யலாம் என்ற பல்பை எரிய விட இந்த லிங்கை அமுக்கவும்!

அட்டைதானே என்று லேசாக எண்ணி இரண்டு காம்போ செட்கள் வாங்கினேன். ஆனால், சரியான வெயிட் - லக்கேஜில் கணிசமான இடத்தை ஆக்ரமித்துக் கொண்டது! நான் வாங்கிய Current  Size கவர்களில் பழைய ராணி, லயன் / முத்து பழைய பெரிய(!) சைஸ், பார்வதி சித்திரக்கதை போன்ற புத்தகங்களை தாரளாமாக வைக்கலாம். ஆனால், இப்போது புதிதாய் வெளிவரும் லயன் / முத்து இதழ்களை வைக்க முடியாது. அதற்கு Magazine ரக கவர்களை வாங்க வேண்டும். அடுத்த தடவை வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என விட்டு விட்டேன்!

அட்டை என்றதும் இன்னொன்று ஞாபகத்திற்கு வருகிறது - இந்த வருடத்தில் வெளிவந்த மகா கேவலமான முன்னட்டை SHSS உடையதாகத்தான் இருக்க வேண்டும்! மட்டமான கலர் காம்பினேஷன், லிப்ஸ்டிக் பூசிய உதடுகளுடன் ஸ்பைடரின் முகம் கிட்டத்தட்ட கறுப்புக் கிழவியை ஞாபகப்படுத்தியது! ஆனால், பின்னட்டை சூப்பர்! நல்ல வேளையாக டிராப்ட் கவரில் இருந்த "புத்தம் புதிய சாகஸங்கள்" என்ற காமெடியான tagline-ஐ ஆசிரியர் எடுத்து விட்டார்!





கடைசியாக ஒரு அப்டேட், கடந்த மாத ஓட்டெடுப்பில் யாரோ ஒரு அழகிய தமிழ் மகன் கள்ள ஓட்டை குத்து குத்து என்று குத்தியதில் வைல்ட் வெஸ்ட் ஸ்பெஷல் முதலிடம் பெற்றிருக்கிறது! இந்த மாதம் மறு ஓட்டெடுப்பு நடத்தினால் SHSS முதலிடம் பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை! :)


இன்று மட்டும் மூன்று பதிவுகள் தொடர்ச்சியாக இட்டுவிட்டதால், ஒரு க்விக் ரீகேப் இதோ! ;)

கருத்துகள்

  1. நெத்தியடிப் பதிவு!
    SHSS பற்றிய என் எண்ணவோட்டத்தை 5 மடங்கு வீரியப் படுத்தி இங்கே வெளியிட்டிருக்கிறீர் நண்பரே!
    இப்பதிவை நம் எடிட்டர் பார்க்கும்பட்சத்தில் எதிர்கால காமிக்ஸ் உலகத்திற்கு இன்னும் சற்று நன்மைபயக்கும் முடிவுகள் எடுத்திட முயற்சிக்கக்கூடும்.
    சந்தா செலுத்திடும் சிலரை சந்தோஷப்படுத்திட மெனக்கெடாமல், இனிவரும் தலைமுறையினரை மனதில்கொண்டு நம் எடிட்டர் இயங்கிடவேண்டும். பார்க்கலாம்!

    பதிலளிநீக்கு
  2. I 100% accept your points. We expect new heroes & new stories. Clasics can be interesting if it comes once in a while.

    பதிலளிநீக்கு
  3. SHSS - கடுப்பெத்றார் மை லார்ட் என்று போடுவீர்கள் என்று நினைத்தேன் :D

    //வெறுமனே மாயாவி, நீராவி என்று வண்டியை ஓட்டினால் ரொம்ப நாள் தாங்காது! //
    மாயாவி நீராவி சூப்பர் :-D

    //காமிக்ஸ் கிளாசிக்ஸ் முதற்கொண்டு பிரகாஷ் பப்ளிஷர்ஸ் வெளியிடும் அனைத்து இதழ்களையும் வாங்குவதற்கு முக்கிய காரணம், நான் ஒரு தமிழ் காமிக்ஸ் சேகரிப்பாளன் என்பதே!//

    நான் அனைத்து இதழ்களையும் வாங்க மாட்டேன். பிடிக்காத புத்தகத்தை வாங்கி என்ன லாபம். எல்லா புத்தகத்தையும் சேகரித்து என்ன பண்ண போகிறோம். இப்போதே நம்மால் படிக்க முடியவில்லை என்றால் பின் ஒரு காலத்தில் எப்படி படிக்க முடியும். காமிக்ஸ் கிளாசிக்ஸ்சை பொறுத்த வரை, வேண்டும் என்றால், எனக்கு பிடித்த கதைகள் வந்தால் மட்டும் தனியே செலுத்தி வாங்கி கொள்ள எண்ணி இருக்கிறேன்.

    ஆர்சியின் சட்டி தலையை கழட்டி வைத்து, ஸ்பைடரை சிறைக்குள் சட்டையை கழற்றி அடித்து, மாயாவியின் இரும்பு கைக்கு நோ சொல்லி என்று மும்மூர்த்திகளின் படத்துக்கு மிகுந்த மெனக்கெட்டு இருக்கிறீர்கள் :D

    எவ்வளவு கொதித்து போய் இருக்கிறீர்கள் என்று தெரிகிறது.

    CC யினால் புதிதாக வரவேண்டிய புத்தகங்கள் தாமதமாகிறதே என்ற உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் CC யினால் புதிய இதழ்கள் பாதிப்படையாத வகையில் கொண்டு செல்வதை ஆசிரியரின் கையில் விட்டு விடுவோமே. அவருக்கு நிச்சயமாக தெரியும் புதிய இதழ்கள் மூலம் தான் முன்னேற முடியும் என்று அவற்றுக்கு தடையாக பழைய இதழ்கள் இருக்கும் போது நிச்சயம் சிறுக சிறுகவோ / என் வழி தனி வழி என்று அதிரடியாகவோ குறைத்து விடுவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பிடிக்காத புத்தகத்தை வாங்கி என்ன லாபம்//
      தமிழ் காமிக்ஸ் கலெக்ஷன்! ;)

      //மும்மூர்த்திகளின் படத்துக்கு மிகுந்த மெனக்கெட்டு இருக்கிறீர்கள்//
      மெனக்கெடவெல்லாம் இல்லை! இவை Albion சீரிஸின் படங்கள்!

      //இதழ்கள் பாதிப்படையாத வகையில் கொண்டு செல்வதை ஆசிரியரின் கையில் விட்டு விடுவோமே//
      waste of time!

      //அவருக்கு நிச்சயமாக தெரியும்//
      yes, but he is bowing to pressure!

      நீக்கு
  4. உங்களுக்கு ஒரு கேள்வி

    CC பிடிக்கவில்லை என்கிறீர்கள் ஆனால் சந்தா கட்டி வாங்குவேன் பின் ஒரு காலத்தில் படிப்பதற்கு என்கிறீர்கள். இப்போதே பிடிக்காத புத்தகம் பின் ஒரு காலத்தில் எப்படி பிடிக்கும்?.

    CC க்கு சந்தா கட்டுவதால் உங்களை CC ஆதரவாளர் என்றே நான் எடுத்து கொள்கிறேன். :-D

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலெக்ஷனுக்காக வாங்குவதுதான்! அரியதொரு தருணத்தில் இரண்டொரு கதைகள் படிக்கலாம் - எல்லாவற்றையும் படிக்க முடியாது!

      நான் தமிழில் வரும் ஓரளவு தரமான (சித்திரங்கள் / கதை) காமிக்ஸ்களுக்கு ஆதரவாளன் அவ்வளவே!

      நீக்கு
    2. சரியான கேள்வி!

      CC பிடிக்கவில்லை என்கிறீர்கள் ஆனால் சந்தா கட்டி வாங்குவேன் பின் ஒரு காலத்தில் படிப்பதற்கு என்கிறீர்கள். இப்போதே பிடிக்காத புத்தகம் பின் ஒரு காலத்தில் எப்படி பிடிக்கும்?.

      அவர் பதிவிலேயே ஏகப்பட்ட முரண்பாடுகள்.

      என்னை பொருத்தவரை புது காமிக்ஸ் கதைகள் வரவேற்க தக்கதே . பெரும்பாலான வாசகர்கள் புத்தகத்தை படித்துவிட்டு நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ கொடுத்துவிடுவார்கள் பின்னொரு நாளில் அது மறுபதிப்பாக வரும்போது நல்ல கதையாக இருந்தால் மறுபடியும் வாங்கி படிப்பார்கள்.

      ஒருசிலரே செல்பிஷ் ஆக பதுக்குவதும் சேகரிப்பதும் அவர்களே மறுபதிப்பு வேண்டாமென்று கூச்சல் இடுவது வாடிக்கை. காரணம் அவர்கள் பொக்கிஷம் என நினைப்பது மதிப்பிழந்துவிடும்.

      தங்க கல்லறை மறுபடி படிக்க தேடி அலைந்தேன். மறுபதிப்பு என்று அறிவிப்பு வந்தவுடன் பழைய பதிப்புக்கான மவுசு போய்விட்டது.


      நீக்கு
    3. என்னுடைய பழைய காமிக்ஸ் கலெக்ஷன் மிக மிக குறைவே! குறிப்பாக முத்து / லயனின் ஆரம்ப கால இதழ்கள் என்னிடம் இல்லை. CC-யை வாங்குவதற்கான காரணத்தை எளிய தமிழில் விளக்கியுள்ளேன்! ;) பழைய காமிக்ஸ் இதழ்களை ஊர் ஊராய் அலைந்து தேடிப் பிடித்து / அதிக விலை கொடுத்து வாங்கிப் படிக்க வேண்டும் என்ற வெறி எனக்கு இல்லை! எல்லா பழைய இதழ்களையும் படித்தே ஆக வேண்டும் என்ற கொலைவெறியும் எனக்கு இல்லை! :D

      நீக்கு
    4. பி.கு: அதே போல 1997 - 2007 இல் வெளியான பல இதழ்களும் என்னிடம் இல்லை - கிட்டத்தட்ட பத்து வருடங்கள் புதிய காமிக்ஸ் வாங்கவில்லை - பழையதை சேகரிக்கவும் இல்லை! 2007-இல் லயன் அலுவலகம் சென்று கைவசம் இருந்த பிரதிகள் வாங்கினேன் - அவற்றில் பல புத்தகங்கள் மிஸ்ஸிங் - மெகா ட்ரீம், மில்லேனியம் ஸ்பெஷல் மற்றும் பல இதழ்கள்...!

      'எல்லா பழைய காமிக்ஸ்களையும் படித்தே ஆக வேண்டும்' என்ற ஒரு சிலரின் செல்ஃபிஷ் வெறிக்கு தமிழ்நாட்டின் கடைசி காமிக்ஸ் பதிப்பாளர்தான் பலி கடாவாக கிடைத்தாரா?!

      மாயாவி, ஸ்பைடர் கோஷ்டிகளின் காமிக்ஸ் வராவிட்டால் சந்தா கட்ட மாட்டேன் என்று மிரட்டுபவர்கள் போலன்றி தமிழில் வெளிவருகின்ற ஒரே காரணத்திற்காக CC-ஐக் கூட பொறுப்பாக வாங்கி வருகிறேன்! ;)

      நீக்கு
    5. //தங்க கல்லறை மறுபடி படிக்க தேடி அலைந்தேன். மறுபதிப்பு என்று அறிவிப்பு வந்தவுடன் பழைய பதிப்புக்கான மவுசு போய்விட்டது//
      இது போன்ற தரமான கதைகள் வண்ணத்தில் மறுபதிப்பாவதில் எனக்கும் மகிழ்ச்சியே! CC வெளியிட்டே ஆக வேண்டுமானால் சிறந்த கதைத் தேர்வு அவசியம் என மேலே கூறியுள்ளேன் ஹஜன்!

      நீக்கு
  5. படிக்கும் போதே தூங்க வைத்த மாயாவி கதை அருமை.

    மற்றபடி, க்ளாசிக் காமிக்ஸில் மும்மூர்த்திகள் தாண்டி, நான் படிக்க மிஸ் செய்த நாயகர்களின் கதைகள் வரும் என்ற நம்பிக்கையிலிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. WWS க்கு வந்த நல்ல ஓட்டைக் கள்ள ஓட்டு என்று சொல்லியிருப்பது நியாயமா ? தர்மமா ?.. நீதியா ? நேர்மையா ?.. ரத்தம் கொதிக்கிறது. அத்தனையும் நல்ல ஓட்டையா.. நல்ல ஓட்டு :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) :) :) கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்தில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஓட்டுக்கள் விழுந்தால் அவை நல்ல ஓட்டுக்களா?!

      நீக்கு
  7. //கலெக்ஷனுக்காக வாங்குவதுதான்!//

    கலக்சனுக்காக வாங்கினால் CC வருவது உங்களுக்கு லாபம் தானே. நிறைய டைஜெஸ்டுகள் உங்கள் கலச்சனில் இருக்குமே? :D

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருவதால் வாங்குகிறேன்! ஆனால் வரமால் இருந்தாலும் சந்தோசமே - குறிப்பாக மொக்கை சூப்பர் ஹீரோ கதைகள்! ;)

      நீக்கு
  8. கடந்த சில நாட்களாக உங்கள் வெப்சைட் லோடு ஆவதற்கு திணறுகிறது. கருப்பு நிறத்திலேயே இருக்கிறது அப்புறம் தான் வெள்ளை நிறம் வருகிறது. இது எனக்கு மட்டும் தானா?

    பதிலளிநீக்கு
  9. //@RAMG 75 :WWS க்கு வந்த நல்ல ஓட்டைக் கள்ள ஓட்டு என்று சொல்லியிருப்பது நியாயமா ? தர்மமா ?.. நீதியா ? நேர்மையா ?.. ரத்தம் கொதிக்கிறது. அத்தனையும் நல்ல ஓட்டையா.. நல்ல ஓட்டு :)

    //
    நானும் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். எப்படி நீங்க அத கள்ள வோட்டு என்று சொல்லலாம்.

    வேணும்னா ரீ மேட்ச் வச்சுகிரலாமா? SHSS கூட :D

    பதிலளிநீக்கு
  10. பின்னட்டை சூப்பர் என்று சொல்கிறார்!

    நன்றாக உற்று பாருங்கள் அது இரும்புக்கை மாதிரி தெரியவில்லை எரிந்து போன கரிக்கட்டை கையாக தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  11. பார்க்கத்தானே போறோம். கலக்கல் கதைகள் எப்பவும் விற்பனையில் அசத்தும். புதுக் கதைகளுக்காக விஜயன் சார் அடுத்த பதிவில் அமர்க்களமான அறிவிப்புகளை வைத்திருப்பதாக மனப்பட்சி சொல்லுது நண்பா! அதுக்காக ஓவரா ஆர்ச்சி அண்ணனை கழட்டி போட்டுடறதா? பொறுமை தேவை ஜி! பதிவுக்கு நன்றி! சூடாக இருக்கீங்க போல அண்ணன் ஸ்பைடர்ட்ட ஆவி (மாயாவி) பறக்க டீ கொண்டாற சொல்ட்டா?B-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //புதுக் கதைகளுக்காக விஜயன் சார் அடுத்த பதிவில் அமர்க்களமான அறிவிப்புகளை வைத்திருப்பதாக மனப்பட்சி சொல்லுது நண்பா!//
      :)

      தம்பி ஸ்பைடர் டீ இன்னும் வரல! ;)

      நீக்கு
  12. VERY WORST POST :-)

    //ஓட்டை குத்து குத்து என்று குத்தியதில்// யாருங்க அந்த வெட்டி OFFICER :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //VERY WORST POST :-)//
      உங்கள் மனமார்ந்த பாராட்டுகளுக்கு நன்றி! ;)

      //யாருங்க அந்த வெட்டி OFFICER :-)//
      அவர் ஒரு அழகர்! :) :)

      நீக்கு
  13. லிப்ஸ்டிக் பூசிய உதடுகளுடன் ஸ்பைடரின் முகம் கிட்டத்தட்ட கறுப்புக்
    கிழவியை ஞாபகப்படுத்தியது. :-)

    உங்கள் கருத்து நகைச்சுவை இழையோட அருமையாக உள்ளது.

    சிறு வயதில் புட்டியில் பால் குடித்தோம் என்பதற்காக இன்னமும் அதே பால் புட்டியை கையில் வைத்துக்கொண்டு அலைகிறோமா என்ன?!
    உங்கள் கருத்து மிகச்சரியே.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia