டெங்கு எக்ஸ்பிரஸ் பிளாட்பாரம் இரண்டில் தற்போது நின்று கொண்டிருக்கிறது!

திருப்பூர் கொசுக்கள் மாநகரமா என்ற சந்தேகமே எனக்கு வந்துவிட்டது. அதுவும் ரயில்வே ஸ்டேஷனில் உட்கார்ந்தாலும் கொசு, நின்றாலும் கொசு, நடந்தாலும் கொசு! கடைசியில் அந்தக் நள்ளிரவுக் குளிரிலும் (ட்ரைன் லேட்!), மின்விசிறி இருக்கும் இடமாய் தேடி நின்று கொண்டேன். வெய்ட்டிங் ஹாலில் உள்ள கட்டணக் கழிப்பறையில் ஒரு ரூபாய் சில்லறை இல்லாததால் இரண்டு ரூபாயாக கொடுத்துவிட்டு மீதியை எதிர் பார்க்காமல் கழிப்பறைக்குள் நுழைந்தேன், நாலைந்து கொசுக்கள் அங்கும் இங்குமாய் பறந்து கொண்டிருந்தன. கதவை தாளிட்டு திரும்பியதும், கிட்டத்தட்ட ஒரு ஐம்பது கொசுக்கள் என்னை சுற்றி 'லாலாலா... லாலா... லாலாலா...' என்று பறக்க ஆரம்பித்து விட்டன. அப்புறம் என்ன, அவை என்னை கடிக்காமல் இருக்க டேன்ஸ் ஆடிக்கொண்டே சிறு நீர் கழித்துவிட்டு வெளியே ஓடி வந்துவிட்டேன். நான் ஆடிய ஆட்டத்தில், குறி பார்த்து அடிப்பது கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது ;) அடுத்த முறை ரயில்வே ஸ்டேஷன் செல்லும் போது ஓடோமாஸ் மறக்காமல் தடவிச் செல்ல வேண்டும். குறிப்பாக அங்கே உள்ள கழிப்பறைக்குச் சென்றால் கையில் ஹிட் ஸ்ப்ரேவோடுதான் செல்ல வேண்டும்!

நேற்று பீட்சா படம் ஆரம்பிக்கும் முன் தமிழ் நாடு அரசு சார்பாக கார்த்தி (நான் இல்லீங்..) டெங்கு பற்றி பயப்பட தேவையில்லை என்ற ரீதியில் மொக்கையாக பேசிக்கொண்டிருந்தார். இதற்கு இவர் ஓடோமாஸ் அல்லது ஹிட் விளம்பரத்தில் நடித்திருந்தாலும் டெங்கு விழிப்புணர்வு நிறைய பேரை சென்றடைந்திருக்கும்! ரயில்வே ஸ்டேஷனில் மட்டுமாவது தண்டவாளங்களுக்கு இடையே வெறும் கற்களை நிரப்பாமல் கழிப்பறை போல சாய்வான ஸ்டீல் பிளேட்கள் வைத்து கழிவுகள் தேங்காமல் செப்டிக் டேன்க் சென்றடையுமாறு வடிவமைக்கலாமே?! சுத்தம் செய்வதற்கும் எளிதாக இருக்கும். உலகிலேயே மிக நீளமான கழிப்பறை இந்திய ரயில்வேஸ் என்ற அடையாளம் நம்மை விட்டு எப்போதுதான் போகுமோ?! இரயிலுக்கு உள்ளேயும் கொசுக்கள் தொல்லைக்கு குறைவில்லை. கொங்கு எக்ஸ்பிரஸ் என்பதற்கு பதிலாக டெங்கு எக்ஸ்பிரஸ் என்று மாற்றி விடலாம் போல (சும்மா ஒரு ரைமிங்குக்காக - நான் வந்தது பெங்களூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்ப்ரஸில்!)

இன்று காலை பெங்களூர் கன்டோன்ட்மென்டில் ப்ரீபெய்ட் ஆட்டோவுக்காக வரிசையில் நின்று, புக்கிங் கட்டணமான ஒரு ரூபாய்க்கு சில்லறை இல்லாததால் பத்து  ரூபாய்த் தாளை நீட்டி திட்டு வாங்கியபோது - நேற்று சில்லறை வாங்காமல் விட்ட ஒரு ரூபாயின் மதிப்பு தெரிந்தது!

முழுதாய் ஒரு மாதம் வலைப்பூ பக்கமே தலை வைத்துப் படுக்கவில்லை! அலுவலகத்தில் வேலை ஒழுங்காக நடக்கிறது, வீட்டில் திட்டு விழுவது குறைந்திருக்கிறது! :) எதையுமே ஒரு அளவுக்கு மீறி செய்யும் போது அது சலித்து விடத்தான் செய்கிறது இல்லையா?! எழுதிய எனக்கே சலிப்பாக இருந்தால், படித்த உங்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது :D அனுபவித்து செய்ய வேண்டிய ஒன்றை வெறும் சடங்காய் அழுத்திச் செய்தால் இதுதான் கதி! கடனே என்று மாதா மாதம் ப்ளேட்பீடியா அப்டேட் ரிப்போர்ட் எழுதுவது எல்லாம் ரொம்பவே போரடித்து விட்டது. இனிமே எப்போதாவது தேவைப்பட்டால் மட்டுமே அப்டேட்டுகள் வழங்கப்படும் ;)

குட்டியாய் ஒரு அப்டேட், குட்டிப்ளேடு வலைப்பூவை இனி தனியே தொடருவதாய் இல்லை (at least இப்போதைக்கு!). எனவே இது போன்ற குட்டி குட்டிப் பதிவுகள் ப்ளேட்பீடியாவில் வந்தால் ஆச்சரியப்பட வேண்டாம்! :)


இன்று மட்டும் மூன்று பதிவுகள் தொடர்ச்சியாக இட்டுவிட்டதால், ஒரு க்விக் ரீகேப் இதோ! ;)

கருத்துகள்

  1. நீங்க பட்ட பாட்டுக்கு நான் கொசு ன்னு ஒரு படமே எடுக்கலாம் போலவே. :-)))

    அடிக்கடி நீங்க எழுத வேண்டும் என்று அகில உலக ப்ளேட்பீடியா ரசிகர் மன்றம் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் ;-))

    பதிலளிநீக்கு
  2. ப்ளேட்பீடியா என்ற பெயரை எங்கேயோ கேள்விபட்ட மாதிரி இருக்கே? நீங்க புதிய பதிவரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுக்கு பேர்தான் ஷார்ட் டெர்ம் மெமரி லாஸா?! ;)

      நீக்கு
    2. இல்லை, அப்படி யாரும் கேட்குறதுக்குள்ள தொடர்ந்து பதிவெழுதுங்கனு சொல்ல வந்தேன்...

      நீக்கு
  3. எனக்கென்னமோ மறுபடியும் பார்முக்கு வந்துட்ட மாதிரி தோணுது. ஒரே நாளில் ரெண்டு பதிவு.

    குட்டி பதிவோ சுட்டி பதிவோ போட்டுகிட்டே இருங்க.

    SMS அளவு இருந்தாக் கூட பரவாயில்லை. :D

    ==============================================
    //ரயில்வே ஸ்டேஷனில் மட்டுமாவது தண்டவாளங்களுக்கு இடையே வெறும் கற்களை நிரப்பாமல் கழிப்பறை போல சாய்வான ஸ்டீல் பிளேட்கள் வைத்து கழிவுகள் தேங்காமல் செப்டிக் டேன்க் சென்றடையுமாறு வடிவமைக்கலாமே//

    நல்ல யோசனை. நடை முறை சிக்கல் இருக்குமா தெரியவில்லை.
    ===============================================
    //அவை என்னை கடிக்காமல் இருக்க டேன்ஸ் ஆடிக்கொண்டே சிறு நீர் கழித்துவிட்டு வெளியே ஓடி வந்துவிட்டேன். நான் ஆடிய ஆட்டத்தில், குறி பார்த்து அடிப்பது கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது//

    :D ஆட்டமா தேரோட்டமா. உங்கள் பிரேக் டான்ஸ் ஸ்டெப்ஸ் கொஞ்சம் இம்ப்ருவ் ஆகி இருக்குமே. :D

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கழிப்பறை டேன்சை எல்லாம் கிளப்பில் ஆட முடியாது! துரத்தி விட்ருவாங்க! :D

      நீக்கு
  4. /// எதையுமே ஒரு அளவுக்கு மீறி செய்யும் போது அது சலித்து விடத்தான் செய்கிறது இல்லையா...?! ///

    இவ்வாறு பல உண்மைகள்...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia