கொடூரமான, பீதி கிளப்பும் பேய்ப்படங்களைத் முடிந்தவரை தவிர்த்துவிடுவேன்.
மீறி முழுவதும் பார்த்தால், அடுத்த சில ராவுகளுக்கு ஒரே ராவடிதான்!
படத்தில் வந்த பேய்(கள்) என் கனவுகளை ஆக்கிரமித்து ஒரு வழி பண்ணி
விடும்(கள்)! நடு இரவில் திடுக்கிட்டு எழுந்து, பயந்து பயந்து பாத்ரூமில்
நுழைந்து அங்கு உள்ள கண்ணாடியில் என் முகத்தை பார்க்கும் போது பின்னாடி
யாரோ நிற்பதாக ஒரே பிரம்மையாக இருக்கும்! இந்த காமெடிகளை வைத்து ஒரு
தனிப்பதிவே போடலாம் என்பதால் ஓவர் டு பீட்சா!
பீட்சா எனக்கு பிடித்த ரகமான பேய்ப்படம். அதாவது அதிகம் பயமுறுத்தாத, அருவருப்பான மேக்கப்புகள் இல்லாத ஆனால் மயிர் கூச்செறிய வைக்கும் அமானுஷ்யமானதொரு படம்! :) பெரும்பாலான பேய்ப்படங்கள் பங்களா, வீடு, பிளாட் என்று ரியல் எஸ்டேட்டையே சுற்றி வருவது ஏன் என்று புரியவில்லை. பீட்சாவும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், வழக்கமாக நாம் பார்த்துப் பழக்கப்பட்ட பேய் விரட்டுபவர்கள், மாந்திரீகர்கள் போலில்லாமல் இதில் வரும் அந்த வயதான தாடி நபர் எதுவும் செய்யாமலேயே மிரட்டுகிறார் (அவர் பீட்சா ஆர்டர் செய்யும் இடம் அமர்க்களம்!) அதே போல பங்களாவில் விஜய் சேதுபதி மாட்டிக்கொள்ளும் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் ஓடும் அந்தக் காட்சிகளில் பேய்கள் தலைகாட்டும் இடங்கள் சில நிமிடங்களே. ஆனால், ஒரு வித அமானுஷ்யத்தை பேய்கள் தோன்றாத காட்சிகளிலும் உணரச் செய்ததில் படக்குழு பெரும் வெற்றி பெற்றிருக்கிறது.
விஜய் சேதுபதி நன்றாக பயந்திருக்கிறார்! ரம்யா நம்பீசன் நல்ல "கும்"பீசனாக அழகாக இருக்கிறார். சேதுபதியின் சக பணியாளர்கள், பீட்சா ஷாப் ஓனர் நரேன் என எல்லோரும் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். பீட்சா ஷாப்பில் சாப்பிட்டு விட்டு போகும் வாடிக்கையாளர் - வாசலருக்கே வைத்திருக்கும் ஆட்டோ ஹார்னை அமுக்கி விட்டுப் போக, பணியாளர்கள் போலியாக தாங்க்யூ சொல்லுமிடம் செம் நக்கல்! பிரபல பீட்சா மற்றும் சிக்கன் ஷாப்புகளில் வேலை செய்யும் பணியாளர்களின் செயற்கையான குழைவும், ஆங்கிலத்தில் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் வசனங்களும் எரிச்சலூட்டும் ஒன்று! அதே போல இப்படிதான் மணி ஒன்றை மாட்டி வைத்திருப்பார்கள். அடிக்கடி அங்கு போய் சாப்பிட்டால் நம் பேங்க் பேலன்சுக்கே மணி அடிக்க வேண்டியிருக்கும்!
உண்மையைச் சொல்வதானால் படம் ஆரம்பித்து ஒரு முப்பது, நாற்பது நிமிடங்கள் ரொம்ப மெதுவாகவே பயணிக்கிறது - இரண்டு மணி நேரங்களே ஓடும் படத்தில் இந்த தேக்கம் ஒரு பெரிய குறை. ஆங்காங்கே லாஜிக் இடறல்களும் உறுத்துகின்றன. ஆனாலும், இயக்குனர் கார்த்திக், இசையமைப்பாளார் சந்தோஷ், ஒளிப்பதிவாளர் கோபி ஆகிய மூன்று திறமையான டாப்பிங்குகளோடு, இண்டர்வல்லுக்கு சற்று முன் தொடங்கி கடைசி காட்சி வரை அப்படி ஒரு வேகம் எடுத்து 'பிய்த்து' ஓடுகிறது பீட்சா! தாண்டவம் மாற்றான் போன்ற படங்களை பார்க்கவேண்டும் என்ற எண்ணமே இன்னமும் தோன்றவில்லை! அப்படியிருக்க வெளியான இரண்டே நாட்களில் தியேட்டர் சென்று படம் பார்க்க வைத்ததிலேயே பீட்சாவின் வெற்றி கண்கூடாய் தெரிகிறது - எனவே படத்திற்கான ரேட்டிங் ஸ்டார்கள் இங்கு அனாவசியம்!
திருப்பூர் டைமண்ட் A/C தியேட்டரில் பார்த்தேன் - படம் துவங்கி நிறைய நேரம் கழித்தும் பலர் வந்து கொண்டே இருந்தார்கள். கூட்டம் சேர்ந்த பிறகுதான் A/C ஆன் செய்தார்கள்! படத்தின் திகிலோடு ஒன்றி, தலை மேல் இருந்த வென்ட் புண்ணியத்தில் முதுகுத் தண்டு சில்லிட்டுப் போனது நல்ல அனுபவம். பழைய தியேட்டர்தான், ஆனால் சவுண்ட் எஃபெக்ட் நன்றாகவே இருந்தது - இவ்வகைப் படங்களுக்கு இது ரொம்ப அவசியம்.
அருகில் இருந்த ஒரு கும்பல் பயமூட்டும் காட்சிகளில் கத்திக்கொண்டும், அனாவசியமாக சிரித்துக்கொண்டும் அவர்கள் ரொம்ப தைரியமாக இருப்பதாய் காட்டிக் கொண்டிருந்தது. ஒருவேளை இவர்கள் காமெடி படத்துக்குப் போனால் சிரிப்பு காட்சிகளில் அழுது கொண்டிருப்பார்களோ?! தாங்களும் படத்தை ரசிக்காமல், பிறரையும் ரசிக்க விடாமல் செய்வதில் இவர்களுக்கு என்ன மகிழ்ச்சியோ?! இது தமிழில் முதல் 7.1 surround சவுண்ட் படமாம்! டைமண்ட் தியேட்டரில் இந்த வசதி இல்லை என்றாலும், இந்த கும்பல் கூட்டிய ஏழரையில், 7.5 சவுண்ட் படமாக பார்த்தேன்! :D
பீட்சா 2-வை விரைவில் எதிர்பார்க்கலாம்!
பி.கு.: படம் ஆரம்பிக்கும் முன் தமிழ் நாடு அரசு சார்பாக கார்த்தி (நான் இல்லீங்..) டெங்கு பற்றி பயப்பட தேவையில்லை என்ற ரீதியில் மொக்கையாக பேசிக்கொண்டிருந்தார். இதைப்பற்றிய மேலதிக விவரங்களுக்கு இங்கே செல்லவும்! ;)
இன்று மட்டும் மூன்று பதிவுகள் தொடர்ச்சியாக இட்டுவிட்டதால், ஒரு க்விக் ரீகேப் இதோ! ;)

நேற்று எங்க ஊர் பாலாஜி தியேட்டரில் பார்த்தேன். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல திரில்லர் படம். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆரம்பத்தில் இருந்தே படம் ஸ்பீடுதான். எங்கேயும் மெதுவாகவோ, போர் அடிப்பது போன்றோ எனக்கு தோணவில்லை.
பதிலளிநீக்கு:)
நீக்குவாங்க பாஸ் ரொம்ப நாள் பிறகு ஒரு பதிவு.
பதிலளிநீக்குபடிச்சுட்டு வரேன்.
நானும் trailer பார்த்துவிட்டு பார்க்க வேண்டிய லிஸ்டில் வைத்துள்ளேன்.
நீக்குநீங்களே சொன்ன பிறகு கண்டிப்பாக பார்துவிடவேண்டியது தான்.
ஆனால் உங்க அளவிற்கு 7.5 சௌன்டில் பார்க்க முடியுமானு தெரியல.:P
//7,5//
நீக்கு:)
குழந்தைகளை அழைத்து செல்லலாமா...? சொல்லவேயில்லையே...?
பதிலளிநீக்கு/// அருகில் இருந்த ஒரு கும்பல் பயமூட்டும் காட்சிகளில் கத்திக்கொண்டும், அனாவசியமாக சிரித்துக்கொண்டும் அவர்கள் ரொம்ப தைரியமாக இருப்பதாய் காட்டிக் கொண்டிருந்தது. ///
பக்கத்தில் உள்ள கும்பல் எங்கும் உண்டு... படம் வந்து ஓரிரு வாரம் கழித்து சென்றால் இப்பிரச்சனை இருக்காது...
நன்றி...
நான் சென்ற தியேட்டரில் குழந்தைகள் வந்திருந்தார்கள்! தைரியமான குழந்தைகள் பார்க்கலாம்! :)
நீக்குபெங்களூரில் ரிலீஸ் ஆகல போல. ஊருக்கு போனா பாக்கணும், தியேட்டர்ல தான் பாக்கணும் என்று முடிவெடுத்துள்ளேன்... பார்க்கலாம். :-)
பதிலளிநீக்கு//பெங்களூரில் ரிலீஸ் ஆகல போல//
நீக்குகாவேரி!
பார்க்க வேண்டும் என நினைத்து கொண்டிருக்கும் படம். நிச்சயம் தியேட்டரில் பார்த்தல் தான் நல்லா இருக்கும் என நினைக்கிறேன்.
பதிலளிநீக்கு//ரம்யா நம்பீசன் நல்ல "கும்"பீசனாக அழகாக இருக்கிறார். //
மாயா மாயா, மாயா எல்லாம் மாயா :D
கதையை சொல்லாமல் உங்கள் அனுபத்தை சொல்லி இருக்கிறீர்கள். இதை போன்ற பேய் படங்களுக்கு அது முக்கியம்.
குறைந்த செலவில் வந்து மாற்றான், தாண்டவத்தை தூக்கி சாப்பிட்ட படம்.
//இது தமிழில் முதல் 7.1 surround சவுண்ட் படமாம்! டைமண்ட் தியேட்டரில் இந்த வசதி இல்லை என்றாலும், இந்த கும்பல் கூட்டிய ஏழரையில், 7.5 சவுண்ட் படமாக பார்த்தேன்! :D
//
அதுதான என்னடா 7 .5 surround சவுண்ட் படமா? லேட்டஸ்ட் வெர்சன் என்று நினைத்தேன்.
//மாயா மாயா, மாயா எல்லாம் மாயா :D //
நீக்கு;)
நாங்க சக்தில[ஸ்ரீ சக்தி அல்ல ] பார்த்தோம் .....சவுண்ட் சிஸ்டம் டைமண்ட் தியேட்டர விட சூப்பர் .....தியேட்டரும் புதுப்பிச்சு இருக்காங்க ....படமும் அட்டகாசம்[ லாஜிக் பார்க்காம இருந்தா]
பதிலளிநீக்கு//லாஜிக் பார்க்காம இருந்தா//
நீக்குtrue!
நல்ல குறும்பட இயக்குனர் பெரிய திரையிலும் வெற்றிபெற்றிருப்பது மகிழ்வளிக்கிறது.
பதிலளிநீக்குஎல்லாப் பெரிய ஹீரோக்களும்.. கதை என்ற ஒரு வஸ்து இருக்கும் படங்களில் நடித்தால் நல்லது
//எல்லாப் பெரிய ஹீரோக்களும்//
நீக்குநிச்சயம் செய்ய மாட்டார்கள்! :(
பாஸ் திருப்பூர்ல எந்த எந்த தியேட்டர்ல ஓடுது ராமகிருஷ்ணன்,திருப்பூர்.
பதிலளிநீக்குசக்தி & டைமண்ட் :)
நீக்குNICE REVIEW.
பதிலளிநீக்கு"கும்"பீசனாக, 7.5 சவுண்ட் படமாக பார்த்தேன் :-)
தியேட்டரில கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். இப்போதெல்லாம் பெரிய பேனர் படங்கள் ஒன்றும் சரியாக இருப்பதாய் தெரியவில்லை. பேய் படம் என்பதால் கொஞ்சம் யோசித்துத் தான் போக வேண்டும். அதைப் பற்றி தனி அனுபவங்களே உண்டு - பாருங்கள் இங்கே - http://wp.me/p7VHV-1r
பதிலளிநீக்கு