மரணத்தின் நிசப்தம் - பரிதாபத்திற்குரிய 10 ரூபாய் ஸ்பெஷல்!

சற்றே கௌரவமான இறுதி யாத்திரையுடன், நிசப்தமாய் நிகழ்ந்த பத்து ரூபாய் இதழ்களின் மரணம் இது... 
கடந்த வருடம் வெளிவந்த தமிழ் காமிக்ஸ் இதழ்களில் - வாசகர்கள் & பதிவர்கள் பார்வையில் மிகவும் பரிதாபமான முடிவை சந்தித்தது SHSS மட்டும்தான் என்று இதுவரை நினைத்திருந்தேன்! ஆனால், முற்றிலும் மாறுபட்ட காரணங்களுக்காக வந்த சுவடே தெரியாமல் காணாமல் போன இதழ் என்றால் அது வருட இறுதியில் வெளியான மரணத்தின் நிசப்தமாகத்தான் இருக்க முடியும்! NBS சுனாமியில் சுவடின்றி, நிசப்தமாய் நிகழ்ந்த பத்து ரூபாய் இதழ்களின் மரணம் இது! அதன் இறுதி யாத்திரை சற்றே கௌரவமாய், 'ஓரளவு' உயர் ரகத் தாளில் நிகழ்ந்திட்டது மட்டுமே ஆறுதல் அளிக்கும் சங்கதி!

கதை என்று பார்த்தால் அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லை - குரங்கு கையில் சிக்கிய நூல் கண்டாக (இடியாப்ப சிக்கல் என்று சொல்லிச் சொல்லி போர் அடித்து விட்டது!) குழப்பி அடிக்கும் வழக்கமான ஜானி ஸ்டைல் சாகசம்! முழுக்கதையையும் சொன்னால் சுவாரசியம்(?!) இருக்காது, எனவே சுருக்கமாக:

வரிசையாக சில அழகிகள் கொலையாகின்றனர்! அச்சமயத்தில் அலெக்ஸ் உல்லி என்ற பிரபல புலனாய்வு பத்திரிக்கையாளர் தனது அனுபவங்களை புத்தகமாக வெளியிடுவது பற்றி அறிவிக்கிறார். அவரையும் கொலை செய்ய தொடர் முயற்சிகள் நடக்கின்றன! துப்புத் துலக்கப் போகும் ஜானி சந்தர்ப்ப வசத்தால் கொலையாளி என்று குற்றம் சாட்டப்படுகிறார்! புத்தகத்தை பிரபலமாக்க அலெக்ஸ் உல்லிதான் இந்த நாடகங்களை நடத்துகிறாரா? யார் நிஜமான கொலையாளி?! இதற்கான பதிலை கருப்பு வெள்ளை பக்கங்களில் காணுங்கள்!!!

வழக்கம் போல ஓவியங்கள் மிகத் தெளிவு என்றாலும் ஜானியை வண்ணத்தில் ரசித்த பிறகு மறுபடியும் கருப்பு வெள்ளையில் பார்ப்பது சற்று சங்கடமாகத்தான் இருக்கிறது!
மாடஸ்டி ப்ளைசியை, கோடஸ்டி ப்ளைசி ஆக்கி அழகு பார்த்த முத்து காமிக்ஸ் ஓவியரின் கண்களில் (கைகளில்?) இருந்து கீழ்க்கண்ட பக்கம் தப்பித்ததும், இது குறித்து தமிழ் காமிக்ஸ் கலாசாரக் காவலர்கள் எடிட்டர் ப்ளாகில் எதிர்ப்பு தெரிவிக்காததும் பெரும் ஆச்சரியமே! :) :) :)

உறுத்தலான இன்னொரு விஷயம், கதாமாந்தர்களின் முழுப் பெயர்களை, முன் மற்றும் பின் பகுதிகளை மாற்றி மாற்றி உபயோகிப்பது! உதாரணத்திற்கு "அலெக்ஸ் உல்லி"-யை சில சமயம் அலெக்ஸ் என்றும், சில சமயம் உல்லி என்றும் அழைக்கிறார்கள். இது இந்த இதழில் மட்டுமல்ல - சமீபத்திய பல இதழ்களில் கவனித்த ஒன்று! முழுப்பெயரையும் மனதில் பதிய வைத்து கவனமாக படிக்காவிட்டால் 'யார் இந்த புது ஆசாமி?' என்ற குழப்பமே மிஞ்சுகிறது!சாணித்தாளை விட தேவலாம் என்றாலும், காகிதத் தரத்தில் எனக்கு அவ்வளவாக திருப்தி இல்லை. சன்னமான தாள் என்பதால் பின்பக்கத்தில் உள்ள ஓவியங்கள் முன்பக்கமும் தெரிகின்றன! ஸ்கேன் செய்யும்போதுதான் என்றில்லை, வெற்றுக் கண்களிலேயே அப்படிதான் தெரிகிறது. இந்த பேப்பரைப் போய் ஆஹா, ஓஹோ என்று புகழ எப்படித்தான் மனம் வருகிறதோ?! பத்து ரூபாய் விலைக்கு இந்த பேப்பரே போதும் என்றாலும் 50 ரூபாய் இதழான 'சிகப்பாய் ஒரு சொப்பனத்தில்' இது ரொம்பவே சொதப்பலாக படுகிறது! இன்னமும் சற்று தடிமனான தாளை கொடுத்தால் நலம்! டச் அப் செய்த மற்றும் செய்யாத சித்திரங்கள் உங்கள் பார்வைக்கு:இந்த இதழோடு இணைப்பாக வந்திருந்த NBS அழைப்பிதழை பார்த்ததும் ஒரு கணம் இரும்புக்கை மாயாவியின் 60ம் கல்யாண அழைப்பிதழோ என்று தவறுதலாக எண்ணி விட்டேன்! அப்படி ஒரு மங்களகரமான பத்திரிக்கை!!! :)

ஆளாளுக்கு சிகப்பாய் ஒரு சொப்பனம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், நான் இன்னமும் NBS-ஐயே முடித்த பாடில்லை! இந்த லட்சணத்தில் மரணத்தின் நிசப்தம் பற்றிய விமர்சனப் பதிவை வேறு போட்டே ஆக வேண்டுமா என்று நீங்கள் கேட்கலாம்! இந்த தாமதத்திற்கு என்ன காரணம் என்பது எனக்கே விடை கிடைக்காத ஒரு கேள்வி! காமிக்ஸ் மீதான சலிப்பா அல்லது பதிவிடுவதில் வந்த அலுப்பா என சரியாகத் தெரியவில்லை! :)

இந்த சங்கடமான கேள்வி என்னை உறுத்திடும் வேளையில், இன்று என்னை சந்தோஷப்படுத்திய ஒரு சேதி இதோ:

ப்ளேட் அப்டேட்  (ஜனவரி 28, 2013):
11 மாத வலைப்பூ பயணத்தில் ஒரு சிறிய மைல்கல்! 100000 ஹிட்ஸ், வாசகர்கள் எனக்கு கொடுத்த தர்ம அடிகள் அல்ல - என் வலைபூவிற்கு விழுந்த ஹிட்ஸ்களின் எண்ணிக்கை!!! :) அன்பான உங்கள் வரவேற்பிற்கு நன்றிகள் பல கோடி! :)

53 comments:

 1. வந்துட்டோம்பா முதல் ஆளா. :)

  ReplyDelete
 2. தாமதமாக இருந்தாலும் உங்க விமர்சனம் எனக்கு ரொம்ப பிடிக்கும்! நீங்கள் பரவாயில்லை, நான் இன்னும் ஜானி, டெக்ஸ் கதைகள் வாங்கவே இல்லை! ebay வழியாக வாங்கிகொள்ளலாம் என்ற சிந்தனையால் இப்படி!~) என்ன கலாசாரம், விமலாசாரம்ன்னு... அந்த பொண்ணு முதுகுதான் தெரிஞ்சுது! :)
  100000 ஹிட்ஸ் அடித்தற்கு வாழ்த்துக்கள்,(கொசு தொல்ல ஜாஸ்தியோ??) ;)
  NBS, டெக்ஸ் கதைகள் விமர்சனத்திற்கு வெயிட்டிங்!

  ReplyDelete
  Replies
  1. //100000 ஹிட்ஸ் அடித்தற்கு வாழ்த்துக்கள்,(கொசு தொல்ல ஜாஸ்தியோ??) ;) //
   ஹா ஹா ஹா! :)

   //NBS, டெக்ஸ் கதைகள் விமர்சனத்திற்கு வெயிட்டிங்!//
   எப்படியும் இந்த வருடத்திற்குள் வந்துவிடும்! ;)

   Delete
 3. நானும் இன்னும் nbs முடிக்கவில்லை. மாடஸ்தி , மாயாவி தான் படித்திருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. விருந்துக்கு போனா முதல்ல பிடிக்காத ஐட்டமா சாப்பிடுவோமே, அந்த மாதிரியா?! ;)

   Delete
 4. ஒரு லட்சம் [ஹிட்] வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. இடியாப்ப சிக்கல் என கூறுவதை விட இடியாப்ப குழப்பம் என்பதே சரி. குழப்புகிறார்களே தவிர மொக்கை கதையாக தான் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. மரணத்தின் மொக்கை! :)

   Delete
 6. ஒரு லட்சம் [ஹிட்] வாழ்த்துக்கள்!

  //பத்து ரூபாய் விலைக்கு இந்த பேப்பரே போதும் என்றாலும் 50 ரூபாய் இதழான 'சிகப்பாய் ஒரு சொப்பனத்தில்' இது ரொம்பவே சொதப்பலாக படுகிறது! இன்னமும் சற்று தடிமனான தாளை கொடுத்தால் நலம்//

  ReplyDelete
 7. லக்கி அப்டேட்:
  100000 ஹிட்ஸ் பெற்றதுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. அந்த படத்தின் டச் அப் சூப்பர்... ஒரு லட்சம் இடிகளை வாங்கியதற்கு நன்றி... ஒரு கேடியாக சாரி ஒரு கோடியாக மாற வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நாங்க எல்லாம் ஏற்கனவே கேடிதான் - இனிமேயாவது திருந்தணும்! :)

   Delete
 9. நல்ல வேளை ஜானி கதையே பயங்கரமான குழப்பம். இதில் கதை என்ன என்று விவரிக்காமல் நல்ல விமர்சனம்.

  நீங்க. நெ.பி.ஸ் படிக்காமல் இருப்பதற்கு என் கண்டங்கள் :-).
  படிச்சா மட்டும் என்ன கதை நியாபகத்துல இருக்கப் போகுதா என்ன. இந்தப் பதிவ படிக்க ஆரம்பிச்ச உடனே.. இது என்ன கதைன்னு ஒரு 2 நிமிஷம் நியாகப் படுத்திப்பார்த்தேன்..ஹீம்.... சுத்தம்.. கதை நியாபகத்துக்கு வரவேயில்லை.. என்னன்னு தெரியலை.. இப்ப எல்லாம் கதை படிச்ச கொஞ்ச நாள்ல மறந்துடுது.. ஜானி கதை கண்டிப்பா நியாபகம் இருக்காது.

  //மாடஸ்டி ப்ளைசியை, கோடஸ்டி ப்ளைசி
  சூப்பர் :)

  சிகப்பு சொப்பனத்தைப் படிக்கும் போது பல முறை இரண்டு பக்கத்தைத் திருப்பி விட்டேன். அச்சுப்பிழையோ என்று, அப்புறம் பக்கத்தை செக் செய்யும் போது இரண்டு பக்கத்தை சேர்த்து திருப்பியது புரிந்தது. அந்த அளவுக்கு தாள் ரொம்ப மெல்ல்லிசு..

  ReplyDelete
  Replies
  1. //கதை என்ன என்று விவரிக்காமல்//
   நேரத்தை வீணடிக்க :விரும்பவில்லை :)

   //இப்ப எல்லாம் கதை படிச்ச கொஞ்ச நாள்ல மறந்துடுது//
   அதே ரத்தம்! :)

   //அந்த அளவுக்கு தாள் ரொம்ப மெல்ல்லிசு..//
   ஆமாம்! :(

   Delete
 10. காமிக்ஸ் பத்தி எனக்கு எதுவும் தெரியாது

  ReplyDelete
  Replies
  1. தெரிஞ்சுக்கங்க! :)
   http://www.bladepedia.com/2012/12/Muthu-And-Lion-Comics-Introduction-And-Subscription-Information.html

   Delete
 11. வாழ்த்துக்கள் கார்த்திக்.எங்க அதுக்குள்ளே நிசப்தம் வந்துடீங்களே.
  இன்னும் மில்லீனியம் ஸ்பெசல் பாக்கி.
  அது எப்போ?

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா, நாலு மாசம் கழிச்சு! ;)

   Delete
 12. // வாசகர்கள் எனக்கு கொடுத்த தர்ம அடிகள் அல்ல - என் வலைபூவிற்கு விழுந்த ஹிட்ஸ்களின் எண்ணிக்கை!!! // trade mark Karthik :)

  வாழ்த்துக்கள்! ஒரு லட்சத்தை தாண்டிய ஹிட்ஸ்-க்காக ...

  ReplyDelete
 13. //இது இந்த இதழில் மட்டுமல்ல - சமீபத்திய பல இதழ்களில் கவனித்த ஒன்று! முழுப்பெயரையும் மனதில் பதிய வைத்து கவனமாக படிக்காவிட்டால் 'யார் இந்த புது ஆசாமி?' என்ற குழப்பமே மிஞ்சுகிறது!//
  பல வருடங்களாகவே இப்படித்தான் உள்ளது. xiii ல் இது மிக அதிகம் .
  //இன்னமும் சற்று தடிமனான தாளை கொடுத்தால் நலம்! //
  இதனை கண்டிப்பாக ஆசிரியர்மாற்றுவது அவசியம்
  // 100000 ஹிட்ஸ்//
  வாழ்த்துக்கள் நண்பரே! ( இரவு முழுவதும் refresh தான் வேலையா? : -) )

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்டாலின்!!!

   //இரவு முழுவதும் refresh தான் வேலையா?//
   :) :) :)

   Delete
 14. 'அட! காகிதத் தரம் பரவாயில்லையே' ன்னு சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கும்போதே 'அது அப்படியெல்லாம் இல்லீங்கோ'னு சொல்லி குழப்பிவிட்டுட்டீங்களே கார்த்திக்!!

  ஒரு லட்சம் ஹிட்ஸ் நிச்சயம் ஒரு மைல் கல்லே! வாழ்த்துக்கள்! (பெங்களூர் to சென்னை நெடுஞ்சாலையில் நட்டு வச்சிருந்த ஒரு மைல்கல் திடீர்னு காணாமப் போயிருச்சாமே! நல்லா வெள்ளையடிச்சு, அதை மீண்டும் உங்க ப்ளாக்கில் பார்த்தது- சந்தோஷம்!)

  ஒரு லட்சம் ஹிட்ஸில் கிட்டத்தட்ட ஓராயிரம் என்னுடையதா இருக்குமென்ற வகையில் எனக்கு நானே வாழ்த்து தெரிவிச்சுக்கறேன்! :)

  (ஆமா... சமீப காலமா உங்க ப்ளாக்கிலும், லயன் ப்ளாக்கில் உங்க கமெண்ட்டிலும் நெகட்டிவ் வாடை சற்றே தூக்கலாயிருப்பதாய் எனக்குத் தோன்றுவது- ஒருவேளை, பிரம்மையோ?!! ;)

  ReplyDelete
  Replies
  1. //காகிதத் தரம் பரவாயில்லையே//
   நீங்களே இன்னொரு தபா செக் பண்ணிப் பாருங்க! :)

   //பெங்களூர் to சென்னை நெடுஞ்சாலையில் நட்டு வச்சிருந்த ஒரு மைல்கல்//
   அதேதான் இது!!! :D

   //ஒரு லட்சம் ஹிட்ஸில் கிட்டத்தட்ட ஓராயிரம் என்னுடையதா இருக்கு//
   உங்கள் ஹிட்ஸ் மென்மேலும் அதிகரிக்க வாழ்த்துக்கள்!!! ;)

   //நெகட்டிவ் வாடை சற்றே தூக்கலாயிருப்பதாய்//
   அப்படியா?! இல்லியே!!! :)

   Delete
  2. லயன் ப்ளாக்ல என்னோட இந்த கமெண்ட் பார்த்தீங்களா?
   //₹25 விலையிலான தலைவாங்கிக் குரங்கு 104 பக்கங்கள் உயர்தர ஆர்ட் பேப்பரைக் கொண்டிருந்தது என்பதை கணக்கில் கொண்டால், 'சிகப்பாய் ஒரு சொப்பனத்தின்" 121 சாதாரண வெள்ளைப் பக்கங்கள் (121 * 2 = 242 = ₹50) சற்றே ஏமாற்றம் அளிக்கின்றன!//

   ம.நி. பேப்பரே சன்னம்தான்! ஆனா சி.சொ. பேப்பர், ம.நி. இதழோட பேப்பரை விட ரொம்பவே சன்னம்!!! நீங்களே சொல்லுங்க இப்ப!:)

   Delete
  3. உண்மைதான்! அதிலும் சி.ஒ.சொ ரொம்பவே சன்னம்தான். படிக்கும்போது பல சமயங்களில் இரண்டு தாள்களை சேர்த்துத் திருப்பும் அவலம்கூட ஏற்பட்டது.

   நான் சொல்லவருவது என்னவென்றால், கார்த்திக்கின் கருத்துக்கள் எப்போதுமே பலரால்(ஆசிரியர் உட்பட) ஆர்வமுடன் படிக்கப்படுபவை. அப்படியிருக்க உங்கள் கருத்துக்களை நிறைகளில் ஆரம்பித்துக் குறைகளில் முடித்திட்டால் இன்னும் நல்லவிதமாக அமைந்திடுமே! (உங்களது வெகு சமீப கருத்துக்களை மட்டுமே நான் இங்கே குறிப்பிடுகிறேன்) .

   அப்புறம், பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேண்டுமென்றால் உங்களிஷ்டம்! ;)

   Delete
  4. //உங்களது வெகு சமீப கருத்துக்களை மட்டுமே நான் இங்கே குறிப்பிடுகிறேன்//
   ம.நிசப்தம் பற்றி கதை உட்பட பாஸிடிவா சொல்வதற்கு எதுவும் சிக்கவில்லை என்பதுதான் காரணம்! :) பத்து ரூபாய்க்கே நல்ல தாள் என்ற ஒரே ஒரு விசயத்தைத் தவிர! மற்றபடி NBS பற்றி எழுதும்போது, நல்ல விசயங்களையும் எழுதி இருக்கேன்! விரிவா எழுதாததிற்கு ஒரே காரணம் நான் இன்னமும் படித்து முடிக்கவில்லை என்பது மட்டுமே!!! சமீபத்துல கலாசாரம், மண்டைத்தொலி அப்படி இப்படின்னு கொஞ்சம் காரசாரமா பேச வேண்டியதாப் போச்சு!!! ஆனா அதுக்கு நான் மட்டுமே காரணம் இல்ல! ;) ஆரம்பிச்சதும் நான் இல்ல!!! :D

   //உங்கள் கருத்துக்களை நிறைகளில் ஆரம்பித்துக் குறைகளில் முடித்திட்டால்//
   அப்படித்தான் முடிஞ்ச வரைக்கும் செய்யறேன், இன்னும் கொஞ்சம் கவனமா இருந்துட்டா போச்சு!!! :)

   Delete
 15. பூனைகளுக்கெல்லாம் நீங்க நல்ல நல்ல பேரா வைக்கிறீங்களாமே, ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க!

  படத்திலிருக்கும் என்னோட பூனைக்கும் நல்லதா ஒரு பேர் வையுங்களேன்?! ( நீங்க பேர் வைக்காத ஏக்கத்தில் எப்படி மெலிஞ்சுபோச்சு பாருங்க!) :)

  ReplyDelete
  Replies
  1. மணி அப்படின்னு வெச்சுருவோமா?! பூனைக்கு மணி கட்ட முடியாட்டியும் அப்படி பேராவது இருக்கட்டுமே?! ;) அப்படியே கீழே 'நாலு கால் குசும்புகள்' அப்படின்னு ஒரு எக்ஸ்ட்ரா பிட் போட்ருவோம்! :)

   Delete
  2. இது என்ன கொடுமை? 'அங்கே' பேர் வைக்கும்போது மட்டும் fancyயா வைப்பீங்க; என் பூனைக்கு மட்டும் ஏதோ கிராமத்து சொறி நாய்க்கு வைக்கிறமாதிரி 'மணி'யாம்!

   பெங்களூருக்கு என் பூனையை அனுப்பி ரெண்டு பிராண்டு பிராண்டினாத்தான் சரிப்படும் போலிருக்கு! :)

   Delete
  3. //ஏதோ கிராமத்து சொறி நாய்க்கு வைக்கிறமாதிரி 'மணி'யாம்!//
   சிரிச்சு முடியல! :) :) :)

   Delete
 16. வாழ்த்துக்கள் கார்த்திக் லட்சாதிபதி ஆனதுக்கு. :D

  சலிப்பு கொள்ளாதீங்க. கும்மி அடீகிர நேரத்தில் ஒரு பதிவ போடுங்க.

  ReplyDelete
  Replies
  1. //கும்மி அடீகிர நேரத்தில் ஒரு பதிவ போடுங்க//
   அது சும்மா ஜாலிக்கு அப்பப்ப அடிக்கறதுதான்! கும்மி அடிக்கறப்ப பதிவுக்கு ஒரு சில மேட்டர்கள் (காமெடி லைன்ஸ்) அப்பப்போ சிக்கும் என்பதுதான் உண்மை!!!

   Delete
 17. வாழ்த்துக்கள் நண்பரே !!! சில லட்சம் அல்ல சில கோடி ஹிட்ஸ் பெற வேண்டும் தங்களது வலைப்பூ ...

  // காமிக்ஸ் மீதான சலிப்பா அல்லது பதிவிடுவதில் வந்த அலுப்பா என சரியாகத் தெரியவில்லை! :)//

  எதுவாக இருந்தாலும் வருத்தமளிக்க கூடிய விஷயம் இது :(

  ReplyDelete
  Replies
  1. நன்றி நாகராஜன்! இது தற்காலிகமான ஒன்றே! ஏண்டா ஊக்குவித்தோம் என்று நீங்கள் வருத்தப்படும் வகையில் விரைவில் தொடர் பதிவுகள் வரலாம், ஜாக்கிரதை! ;)

   Delete
 18. 100000 ஹிட்ஸ் வாழ்த்துக்கள்!!!

  என்னுடைய உண்மையான "ஹிட்ஸ்க்கும்" சேர்த்துதானே நன்றி?

  கோடி ஹிட்ஸ் கிடைக்க கோடிட்டு காட்டிவிட்டீர்கள்!!!

  விரைவில் எட்ட வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றி ஹஜன்!

   //என்னுடைய உண்மையான "ஹிட்ஸ்க்கும்" சேர்த்துதானே நன்றி?//
   :) :) :) நமக்குள் நடந்த சூடான விவாதங்களை சொல்கிறீர்களா? ;) அவற்றை நான் "ஹிட்ஸாக" நினைக்கவில்லை! :)

   Delete
 19. vaaltha vayathillai vanangugiren! thalaivaa!! soooper!

  ReplyDelete
  Replies
  1. //vaaltha vayathillai vanangugiren//
   உங்க கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சதே இந்த காமெடிதான்! :) :) :)

   Delete
 20. // மாடஸ்டி ப்ளைசியை, கோடஸ்டி ப்ளைசி ஆக்கி அழகு பார்த்த முத்து காமிக்ஸ் ஓவியரின் கண்களில் (கைகளில்?) இருந்து கீழ்க்கண்ட பக்கம் தப்பித்ததும், இது குறித்து தமிழ் காமிக்ஸ் கலாசாரக் காவலர்கள் எடிட்டர் ப்ளாகில் எதிர்ப்பு தெரிவிக்காததும் பெரும் ஆச்சரியமே! :) :) :) //

  கருப்பு வெள்ளையில் இருப்பதனால் அதனுடைய தாக்கம் சரிவர தெரியவில்லை நண்பரே ;-)
  .

  ReplyDelete
  Replies
  1. மாடஸ்டியும் கருப்பு வெள்ளைதானே?! :)

   Delete
 21. // இன்னமும் சற்று தடிமனான தாளை கொடுத்தால் நலம்! டச் அப் செய்த மற்றும் செய்யாத சித்திரங்கள் உங்கள் பார்வைக்கு: //

  நண்பரே பனி விழும் நேரம் எடுக்கப்படும் படங்கள் அப்படித்தான் இருக்கும் ;-)
  Slightly shadow
  .

  ReplyDelete
  Replies
  1. நல்ல நகைசுவை உணர்வு உங்களுக்கு! ;)

   Delete
 22. // 11 மாத வலைப்பூ பயணத்தில் ஒரு சிறிய மைல்கல்! 100000 ஹிட்ஸ், வாசகர்கள் எனக்கு கொடுத்த தர்ம அடிகள் அல்ல - என் வலைபூவிற்கு விழுந்த ஹிட்ஸ்களின் எண்ணிக்கை!!! :) அன்பான உங்கள் வரவேற்பிற்கு நன்றிகள் பல கோடி! :) //

  வாழ்த்துக்கள் நண்பரே தொடருங்கள் உங்கள் தாக்குதல்களை :))
  .

  ReplyDelete
  Replies
  1. அய்யய்யோ, அது நம்மளை தாக்க வருது - எல்லாரும் தப்பிச்சு ஓடுங்க! (இப்படி நீங்க எல்லார்கிட்டேயும் சொல்லற மாதிரி இருக்கே?!) :D

   Delete
 23. வழக்கம் போல் Blade-க்கே உரிய பாணியில் விமர்சனம். :-)

  இப்படியும் compare செய்ய முடியுமா? என்று வியக்க வைக்கிறது உங்கள் விமர்சனம். கலக்குங்க.

  NBS Review eppothu?

  ReplyDelete
 24. ஒரு லட்ச்சம் ஹிட்ஸ் முடிந்தகையுடன் உங்கள் அடுத்த பதிவு இன்னும் ஒருசிறப்பான பதிவாகும்
  நினைவிருக்கிறதா ?
  2/12/2012 08:02:00 AM அன்று ஒரு பிள்ளையார் சுழியுடன் ஆரம்பித்து இன்றுடன் 1 வயது பூர்த்தியாகும் பிளேடுவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ( ஹை நான் தான் முதல் வாழ்த்து )
  91 பதிவு
  112 பின்பற்றுபவர்கள்
  100000 ஹிட்ஸ்

  கலக்குங்க BPK

  ReplyDelete
  Replies
  1. மறக்க முடியுமா?! :) (முதல்) வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஸ்டாலின் ஜி!!! சிறப்பு பதிவை இப்போதுதான் பப்ளிஷ் செய்தேன்!!! :)
   http://www.bladepedia.com/2013/02/Bladepedia-Year-01.html

   Delete

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia