நெட்வொர்க் அட்டாச்ட் ஸ்டோரேஜ் - Synology DiskStation DS213 NAS

சமீபத்தில் ஒரு Network Attached Storage Server வாங்கினேன் என்று இந்தப் பதிவில் சொல்லியிருந்தேன் அல்லவா?! அதைப் பற்றிய ஒரு தொழில்நுட்பப் பதிவு இது! தப்பிக்கும் எண்ணமிருந்தால், உடனே லுங்கியை தூக்கிப் பிடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓடி விடுங்கள்! :) மிகவும் நுட்பமான பதிவாக இல்லாமல், NAS பற்றியதொரு அறிமுகப் பதிவாகவே இது அமையும்; எனவே பயம் வேண்டாம்!

ரொம்ப போரடிக்காமல் விவேக் பாணியில் சுருக்கமாக சொல்வதானால் NAS Server உங்கள் வீட்டு மாடியில் இருக்கும் ஒரு தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி!!! :) ஒரே ஒரு தண்ணீர்த் தொட்டியில் சேமித்து வைக்கும் நீரை, வீட்டில் உள்ள பல குழாய்களின் மூலம் பிடித்து உபயோகப்படுத்திடுவதைப் போல - ஒரு NAS சர்வரில் சேமிக்கும் டேட்டாவை, வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள பல கணிணிகளில் இருந்து Network மூலம் ஒரே சமயத்தில் எளிதாக access செய்திடலாம்!!!
 
முதலில் இந்த  Overview & Unboxing விடியோவைப் பார்த்து விடுங்களேன்! என் குரல் மட்டும்தான் ஒலிக்கும், முகத்தை ஒளித்துக்கொண்டேன் என்பதால் பயமின்றி கண்டு மகிழலாம்! ;)
.
 .
NAS சர்வரை பல்வேறு காரணங்களுக்காக, பல்வேறு முறையில் உபயோகித்திட முடியுமென்றாலும், மேலோட்டமாகப் பார்த்தால் இரண்டு விதமான பயன்பாட்டு கோணங்களில் உங்களுக்கு இது மிகவும் அத்தியாவசியமானதாக இருக்கலாம்!

1. உங்கள் வீட்டில் எத்தனை கணிணிகள் உள்ளன?! (சொந்தத் தொழில் செய்பவராய் இருந்தால் அலுவலகத்தில்):
ஒன்று கூட இல்லை என்றால் பிரச்சினையே இல்லை, வேறு ஏதாவது உருப்படியான பதிவை நீங்கள் படிக்கப் போகலாம்! ஒன்று மட்டும்தான் என்றாலும் பெரிதாய் பிரச்சினை இல்லை. ஒன்றுக்கு மேற்பட்ட கணிணிகள் இருந்து அவற்றிற்கிடையே இலகுவாக டேட்டாவை பகிர நினைத்தால் NAS தேவைப்படலாம்! (உதாரணத்திற்கு 2 டெஸ்க்டாப், 2 லாப்டாப், 1 டாப்லெட், 3 மொபைல் - இப்படி!)

2. நீங்கள் வைத்துள்ள டேட்டாவின் அளவு என்ன?!:
உங்களிடம் TB கணக்கில் டேட்டா உள்ளதா? டேட்டாவின் அளவு கணிசமாக அதிகரிக்கும் வாய்ப்புக்கள் உள்ளனவா? டேட்டாவை மிகவும் பாதுகாப்பாக ஒரே இடத்தில சேமிக்க எண்ணுகிறீர்களா? உங்கள் டேட்டா Portable ஆக இருக்க வேண்டுமா? இப்படி டேட்டாவை சார்ந்த பல விதமான கேள்விகளுக்கு உங்கள் பதில் பெரும்பாலும் ஆம் என இருந்தால் உங்களுக்கு ஒரு NAS தேவைப்படலாம்!
 
பொதுவாக டேட்டா ஸ்டோரேஜ், ஹார்ட் டிஸ்க் என்றதும் நினைவில் வரும் நிறுவனங்கள் Seagate, Western Digital இவைதானே?! இந்நிறுவனங்களும் NAS சர்வர்களை வெளியிடுகின்றன. ஆனால் அவை பெரும்பாலும் விலை குறைவான Single Disk NAS Solution ஆகும்! அதாவது, கிட்டத்தட்ட ஒரு External Hard Disk-ஐப் போலத்தான் இவையும், ஆனால் நெட்வொர்கில் இணைத்துக் கொள்ளலாம்! இதில் Falut Tolerance இருக்காது, உள்ளே இருக்கும் ஹார்ட்டிஸ்க் பழுதானால் அதில் இருந்த டேட்டா உங்களுக்கு டாட்டா காட்டிவிடும்! :D

Enterprise Segment-இல் NetApp, EMC போன்ற பெரிய நிறுவனங்கள் விலை உயர்ந்த NAS சர்வர்களை வெளியிடுகின்றன - இவை நமக்கு தேவையில்லை! ஆனால், SOHO (Small Office Home Office) Segment-இல் தற்போது முன்னணியில் திகழும் நிறுவனம் Synology! தைவானை சேர்ந்த இந்நிறுவனம் சிறந்த Features-களுடன் கூடிய NAS Enlcosure-களை (ஹார்ட்டிஸ்க் தனியே வாங்க வேண்டும்) விற்பனை செய்கிறது! பல்வேறு Segment-களுக்காக Synology வெளியிடும் NAS சர்வர்களின் முழுப்பட்டியலை இங்கே காணலாம்
 
Synology DiskStation DS213 NAS Server (Enclosure): இதுதான் Amazon மூலம் நான் இறக்குமதி செய்த மாடல், விலை கிட்டத்தட்ட Rs.18,000/-. இதில் அதிகபட்சமாக இரண்டு 4TB ஹார்ட்டிஸ்குகளை Install செய்யலாம். நான் தற்போதைக்கு, என்னிடம் ஏற்கனவே இருந்த 2 * 1TB டிஸ்குகளை mirror (RAID 1) செய்துள்ளேன்!

இதுவும் கிட்டத்தட்ட ஒரு கணினியைப் போன்றதுதான், DSM (Disk Station Manager) என்ற Linux based Operating System-இல் இது இயங்குகிறது. DSM-இன் User Interface பயன்படுத்த எளிதான வகையில் உள்ளது! Synology பல value-add application-களை தனது DiskStation NAS சர்வர்களுடன் இணைப்பாக வழங்குகிறது! உதாரணத்திற்கு: antivirus, cloud, video surveillance, webmail, VPN, and LDAP directory services!

Synology NAS-இன் ஒரு சில சுவாரசியமான பயன்பாடுகள்:
  • Audio/Photo/Video Station & iTunes Server applications மூலமாக, NAS-இல் ஸ்டோர் செய்துள்ள Media ஃபைல்களை (MP3, MP4, AVI, JPG etc.) Wifi மூலமாக Android / iPhone-களில் நேரடியாக Play செய்யலாம்.
  • Cloud Station அப்ளிகேஷனை உபயோகித்து டேட்டாவை உலகின் எந்த மூலையில் இருந்தும் பல்வேறு device-களில் sync செய்து கொள்ளலாம்.
  • Data Backup Server ஆக இதைப் பயன்படுத்தலாம்
  • மேலும் விவரங்களுக்கு:DSM
இதன் Introduction & Unboxing விடியோவை மேலே பார்த்திருப்பீர்கள்! இதனுடைய விரிவான Specifications-ஐ இங்கே காணலாம்! இதற்கு மேல் போரடிக்க விரும்பவில்லை! எனவே, இந்த டெக்னிகல் பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா, இல்லை பயமுள்ளதாக அமைந்ததா என்பதைப் பற்றி கீழே கருத்து தெரிவியுங்களேன்! :)

கருத்துகள்

  1. பதில்கள்
    1. நாய்கள் ஊளையிடும் வேளையில் பதிவிட்டாலும் (3:38AM), கோழி கூவும் நேரத்தில் (4:39AM) கரெக்டாக வந்து அட்டெண்டன்ஸ் போடும் உங்கள் கடமை உணர்ச்சி என்னை கண்கலங்க வைக்கிறது! :)

      நீக்கு
  2. எனக்கு softwares பத்தி தெரிஞ்சுக்க நிறைய ஆர்வம. ஆனா gadgets பத்தி சரியா தெரியாது.எனக்கு பயனுள்ளதா இருந்துச்சு தல...என்னான்னு தெரிஞ்சுகிட்டேன். நமக்கெல்லாம் இது தேவை படாது. ஒரு external harddrive வாங்கவே ரொம்ப யோசிச்சுகிட்டு இருக்கேன்.

    அப்படியே cheap and bestஆ ஒரு external harddrive சொல்லுங்களேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி லக்கி! 500MB இல் இருந்து 6TB வரை external HDDs கிடைக்கின்றன! என்ன கெப்பாகிட்டி டிஸ்க் வேண்டும்? :) உங்களிடம் எவ்வளவு டேட்டா இருக்கிறது? இதை வைத்துதான் suggest செய்ய முடியும்!

      நீக்கு
    2. வீடியோவை கொஞ்சம் பெரிசா போடுங்க பாஸ்

      நீக்கு
    3. டைரக்டா Youtube-ல பாருங்க பெருசா தெரியும்! :)
      https://www.youtube.com/watch?v=hkf98yFRxJo

      நீக்கு
  3. ஒரு புதிய விஷயம் தெரிந்து கொண்டேன். வீடியோவில் தெளிவாக சொல்லி இருகிறீர்கள். இருந்தாலும் கூடுதலாக சில விவரங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.இதை சிஸ்டத்துடன் இணைக்க வேண்டுமா..இதற்கு இணைய இணைப்பு எப்படி இருக்கவேண்டும்.இது எந்த அடிப்படையில் வேலை செய்கிறது.
    இதை பயன் படுத்தும் வாய்ப்பு எனக்கு இல்லை என்றாலும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முரளி! விரைவில் கூடுதல் விவரங்களை இணைத்துவிட்டு தெரியப்படுத்துகிறேன்!

      நீக்கு
  4. நல்ல வீடியோ..
    நான் ஸ்டோரேஜ் இருக்கும்னு நினைச்சேன்..சாய்ச்சு புட்டீங்களே கார்த்தி...
    அத வேற தனியா வாங்கவேண்டுமா..ம்ம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா, இது வெறும் சர்வர் மட்டும்தான் - டிஸ்க் தனி! :) Yeap, it will turn out a bit expensive but has super cool features and is rock solid! :)

      நீக்கு
  5. இதனை உங்கள் வீட்டு சிஸ்டத்தில் இணைத்த உடன் இன்னொரு வீடியோ போடவும்.. எப்படி அதனை உபயோகிப்பது என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வீடியோ எடுத்தே மூன்று வாரங்கள் ஆகிறது! எடிட் செய்து போட நேரம் கிடைக்கவில்லை. விரைவில் How-To வீடியோ வெளிவரும்! :)

      நீக்கு
  6. Very good and informative... NAS Introduction - in layman terms

    with Karthik's trade-mark humour :)

    பதிலளிநீக்கு
  7. NBSன் அழகில் சொக்கிப்போய்க் கிடந்ததால் கொஞ்சம் லேட்!

    வித்தியாசமான, பயனுள்ள (எனக்கு தற்போதைக்கு இல்லை) டெக்னிக்கல் பதிவு; கார்த்திக்கின் ட்ரேட்மார்க் நகைச்சுவையுடன்!

    NBS release சமயத்தில் பதிவுபோடுவதற்கெல்லாம் ஒரு தில் வேண்டும்! :)

    அப்புறம், வீடியோ க்ளிப்பில் கடைசியாகவாவது உங்க முகத்தைக் காட்டியிருக்கலாம்; எனக்கு திகில் காட்சிகள் ரெம்பப் பிடிக்கும்! :D

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைசி காட்சிகளை கவனமாக பார்த்தீர்களா?! அதில் NBS பற்றி ஒரு தகவல் இருக்கிறது! ;)

      நீக்கு
  8. உங்களுடனும் மற்றும் திருப்பூர் நாகரஜனுடனுமான ஒரு சிறிய சந்திப்பு மறக்கவியலாத ஒன்றாக அமைந்தது
    உங்களுக்கு கிடைத்த மிக சிறிய நேரத்திலும் எனக்காக கொஞ்சம் ஒதுக்கியதற்கு
    மிக்க நன்றி நண்பர்களே :))
    .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞாயிறிலும் வேலை பார்க்கும் உங்கள் வேலை பளுவுக்கிடையில் எங்களை சந்திக்க நேரம் ஒதுக்கியதற்கு மிக்க நன்றி சிபி!!! (நாங்களும் டயலாக் அடிப்போம்ல!) :)

      உண்மையில் உங்கள் இருவரையும் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி!!! இந்த சிறிய சந்திப்பைப் பற்றி விரைவில் விரிவாக(?!) எழுதுகிறேன்! :) :)

      நீக்கு
    2. நண்பர்கள் அனைவருக்கும் இனிய இனிக்கும் NBS பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!!

      உங்கள் இருவரையும் சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சியே !!!

      Thanks for your valuable time karthik & Cibi !!!

      நீக்கு
    3. நன்றி நாகராஜன்! ஆமாம், மறக்கமுடியாத சந்திப்பு! இது பற்றி பதிவு எழுத நேரம் இன்னும் அமையவில்லை! விரைவில்.... :)

      நீக்கு
  9. //இந்த டெக்னிகல் பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா, இல்லை பயமுள்ளதாக அமைந்ததா என்பதைப் பற்றி கீழே கருத்து தெரிவியுங்களேன்! :)//
    கட்டைவிரல் மேலே

    பதிலளிநீக்கு
  10. புதுசா ஒரு விஷயத்தை பற்றி தெரிஞ்சிகிட்டேன். ஆனா புரிஞ்சிக்கமுடியில.

    பதிலளிநீக்கு
  11. Terminal server is free with Windows 2008 or an alternative is to use Citrix, both options will need a web page which is registered on the web so users can pick up the old NAS when they have access to the Internet.click here to find out more

    பதிலளிநீக்கு
  12. Database changes may happen because of an undertaking which conveys new usefulness, or in light of changes in the current information. https://www.dbdesigner.net/

    பதிலளிநீக்கு
  13. VPS hosting is the working point where the bigger sites feel good running without the cost of contracting representatives to deal with your physical server activities for you dedicated server

    பதிலளிநீக்கு
  14. The degree of this precision results in the fact that the head assembly of a hard drive is so finely tuned that any contact or operation on it needs specialized tools. data recovery services london

    பதிலளிநீக்கு
  15. Programming is an extremely helpful and compensating side interest. There are few preferable emotions over when somebody sees you utilizing a program you lashed together to make your life less demanding and says that it looks extremely helpful interactive programming

    பதிலளிநீக்கு
  16. You will sit idle and cash working with these administrations. You could even lose your significant data for good.
    hard drive recovery

    பதிலளிநீக்கு
  17. Truth be told, this is one of the most significant things great RAID recovery administrations ought to do. raid recovery

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia