ஹெராயினும், சென்சாரில் சிக்கிய ஹீரோயின்களும், பின்னே ஞானும்!

தலைப்பைப் பார்த்து இப்படியா ஆசையாக ஓடி வருவது?! சற்று நில்லுங்கள். சிந்தியுங்கள் - இந்தியாவில் சென்சாரின் வீச்சு, நீங்கள் சிறுபிள்ளை சமாச்சாரம் என (தவறாக) நினைத்திடும் காமிக்ஸ் வரை நீளும் என்பதை உங்களால் கனவிலும் நம்பிட இயலுமா? இந்த சிந்தனையுடன் தொடர்ந்து படியுங்கள்! முத்து காமிக்ஸ் மார்ச் வெளியீடாக, 'துரத்தும் தலைவிதி' மற்றும் 'விதியோடு விளையாடுவேன்'  என்ற லார்கோ வின்ச்சின் இருபாக ஆக்ஷன் திரில்லர் வெளிவந்திருக்கிறது! சம்பவம் நடந்த இதழ் இதுதான்!!! :)

ஹெராயின்:
கதைச்சுருக்கம்: கட்டுக்கடங்காத பெரிய நிறுவனமான W குழுமத்தின் டைரக்டர்களில் ஒருவர், நிறுவன அதிபர் லார்கோவுக்கு தெரியாமல் போதை மருந்து கடத்தலில் ஈடுபடுகிறார். ஆனால் அரசாங்கத்தின் சந்தேகப் பார்வை என்னவோ லார்கோ மீதுதான் விழுகிறது. விசாரிக்க வரும் அதிகாரிகளைக் சுட்டுக் கொன்று, அந்த பழியும் லார்கோ மீது விழுமாறு எதிரிகள் ஜோடிக்கிறார்கள். சைமனின் துணையுடன் லார்கோ இந்த சிக்கலில் இருந்து எப்படி விடுபடுகிறார், தனது குழுமத்தின் மீது படிந்த கறையை எப்படி நீக்குகிறார் என்பது மீதக் கதை!

அழுத்தமான கதையம்சம் கொண்ட ஒரு கனத்த புதினத்தை படித்திடும் திருப்தியை தந்திட லார்கோவின் கதைகள் ஒருபோதும் தவறுவதில்லை! எக்கச்சக்கமான பாத்திரங்கள், கிளைக்கதைகள், பக்கம் பக்கமாய் வசனங்கள் & விவரிப்புகள் - போன்ற அம்சங்கள் நிறைந்திருந்தாலும், அயற்சியூட்டாமல் கதை பயணிக்கிறது! இதற்கு ஆசிரியரின் அபாரமான தமிழாக்கமும் பெருமளவு உதவியிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை!

சில ஆயிரம் டாலர்கள் மட்டுமே மதிப்பு கொண்ட மூலப் பொருள்களில் இருந்து, பல மில்லியன் பெறுமானமுள்ள ஹெராயின் எப்படி தயாராகிறது; பிறகு அது எப்படி சந்தைப்படுத்தப்படுகிறது  என்பது குறித்த விரிவான தகவல்கள் வியப்பை அளிக்கின்றன! நக்கல் வசனங்கள் அடிப்பதில் கிட் கார்சன் (டெக்ஸ்) வரிசையில் சைமனும் விரைவில் இணைந்து விடுவார் போல - நகைச்சுவை கலந்த வசனங்கள் ரசிக்க வைக்கின்றன!

முன்னட்டையில் லாரன்ஸ் & டேவிட்டை நினைவுறுத்தும் வகையில் ஷார்ப்பான லுக்குடன் நிற்கிறது லார்கோ & சைமன் ஜோடி! ஆனால், கட்டிடங்கள் சரிவது போன்ற ரியலிஸ்டிக் பின்னணியின் வண்ணக்கலவை இவர்களோடு பொருந்தாமல் தனித்துத் தெரிகிறது! சமீப காலமாக பச்சை நிறக் கதிர்கள் பின்னட்டையில் நிரந்தர இடம் பிடித்திருப்பதை கவனிக்க முடிகிறது.

கருப்பு வெள்ளை மற்றும் வண்ண காமிக்ஸ்களை தனித்தனியே வெளியிடுவதே சிறந்தது என்ற பல வாசகர்களின் கோரிக்கையை நனவாக்கியிருக்கும் முதல் முழுவண்ண இதழ் இது! மியாவி, ஹேகர், மதியில்லா மந்திரி (KBT போட்டிக்கான கதை, ஆசிரியரின் மொழிப்பெயர்ப்புடன்!) போன்ற பக்க நிரப்பி கதைகளுக்கு பஞ்சமில்லை. KBT-யில் வென்ற வாசக நண்பர் பாண்டிச்சேரி D.செந்தில்குமாருக்கு வாழ்த்துக்கள்! :) அவருடைய மொழியாக்கம் தனியே 'பாட்டு புத்தகம்' போல இணைப்பாக வந்துள்ளது!!! KBT பற்றிய மேலதிக விவரங்கள் சற்று கீழே!

சென்சாரில் சிக்கிய ஹீரோயின்கள்:
தமிழ் காமிக்ஸ் வட்டாரத்தில் சமீப காலத்தில் அதிகமாக அடிபடும் வார்த்தை சென்சார்! திறந்த மேனி மேலைநாட்டுப் பெண்டிருக்கு ஆடை போர்த்தி அழகு பார்ப்பது தமிழ் காமிக்ஸ் உலகில் புதிதல்ல என்றாலும்; சமீபத்தில் மாடஸ்டியின் திருமேனியை கோடு போட்டு மறைத்ததாலும், லார்கோவின் நாயகிகளை(!) போர்வை போர்த்தி ஒளித்ததாலும் - எழுச்சி(!) கொண்டு பொங்கி விட்டனர், தமிழ் காமிக்ஸ் மீது காதல் கொண்ட காளையர்கள்! எடி ப்ளாகில் பலத்த அடிதடியே நடந்தது. ஒரு பக்கம் கலாசாரக் காவலர்கள், மறுப்பக்கம் சென்சாரை எதிர்க்கும் கலாச்சார எதிரிகள்(!), இவர்களுக்கு நடுவில் சிக்கித் தவித்த மிதவாதிகள் - இவற்றை எல்லாம் எட்ட நின்று ரசித்த எடிட்டர் என படு குஜாலாக சில நாட்கள் நகர்ந்தன. :)

எடிட்டர் ப்ளாகில் சென்சார் குறித்து நான் இட்ட பின்னூட்டங்களை ஒன்று தொகுத்து, இது பற்றிய எனது இறுதியான பார்வையை ஒரு தனிப் பதிவாக இடலாமா என்று யோசித்து வருகிறேன்! காமிக்ஸ் என்பது குழந்தைகளுக்கானது மட்டும் என்று இன்னமும் குழந்தைத்தனமாக நம்பிக் கொண்டிருக்கும் நம்மாட்கள் அந்தப் பதிவைப் படித்தால், 'அட காமிக்ஸில் கூட சென்சாரா?! என வாயைப் பிளப்பார்கள் அல்லவா?! அப்படியாவது அவர்களுக்கு காமிக்ஸின் பால் சற்றேனும் ஈடுபாடு ஏற்பட்டால் சரிதான்!

பின்னே ஞான்:
Kaun Banega Translator (சுருக்கமாக KBT!) என்ற ஹிந்தி காமிக்ஸ் மொழிபெயர்ப்பு போட்டியில் கலந்துகொண்ட நான் தவறுதலாக தமிழில் மொழியாக்கம் செய்து அனுப்பியிருந்ததால் இரண்டாவது பரிசே கிடைத்தது! அந்த மொழியாக்கத்தை கீழே படிக்கலாம்!

பிரபலமான நகைச்சுவை பன்ச் வசனங்களை இடையில் நுழைக்காமல், வசன உருவாக்கத்தில் அதிகம் சுதந்திரம் எடுத்துக் கொள்ளாமல்; போட்டிக்கு அனுப்பப்பட்டிருந்த பிரெஞ்சுக் கதையின் - ஆங்கில மொழிபெயர்ப்பை அப்படியே அடியொற்றி எடுத்தது,  நண்பர்களிடையே சற்றும் வரவேற்பை பெற்றிடவில்லை என்பதுதான் உண்மை. சொல்லுக்குச் சொல் நேரடியாக மொழிபெயர்க்கும் பாணி சீரியஸ் கதைகளுக்கு வேண்டுமானால் அவசியப்படலாம் ஆனால், நகைச்சுவைக் கதைகளில் நம்மவர்கள் உடனடி சிரிப்பை வரவழைக்கும் மொழி மாற்றத்தையே விரும்புகிறார்கள் என நினைக்கிறேன் (அது மூல வசனங்களை சற்றே மாற்றுவதாய் அமைந்தாலும்!).

என்னுடைய இந்த சோதனை முயற்சி(!) படுதோல்வியை தழுவியிருப்பதால்; அடுத்ததாக KBT2-வில் பங்கு பெற்று, ஓரளவு சீரியஸ் கதையான க்ரீன் மேனரை, செம காமெடியாக மொழிபெயர்க்கலாமா என்று படு சீரியஸாக யோசித்து வருகிறேன்! ;)

தமிழில் தலைப்பு வைத்த துராத்மா!:
வாசக நண்பர் ஸ்டாலின் பகிர்ந்திருக்கும் இந்த இந்திரஜால் காமிக்ஸ்களின் தலைப்புகளைப் பார்த்தாலே பீதியாக இருக்கிறது! லயன் / முத்து வெளியீடுகளுக்கு 'ஸ்பெஷல்' என்று முடியும் பெயர் வைக்கச் சொல்லி விஜயன் அவர்கள் மீண்டும் வற்புறுத்தினால்; அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இது போன்ற டெர்ரர் தலைப்புகளை முன்மொழியலாமே?! ;) எங்கே, உங்கள் திறமையை சாம்பிளுக்கு பின்னூட்டங்களில் காட்டுங்கள் பார்ப்போம்?! :)
ஃபேஸ்புக் பக்கம் ஒதுங்காத நண்பர்களுக்காக, ஃபேஸ்புக் குழுமங்களில் இருந்து ஒரு குட்டி அப்டேட்!

முதல் முகம்:
ஃபேஸ்புக் நண்பர் ரமேஷ் சண்முகசுந்தரம் "தமிழில் படிக்க ஆசை!" என்ற பெயரில் தனியே ஒரு குழுமத்தை தொடங்கி அதில், அவருக்கு பிடித்தமான பிராங்கோ-பெல்ஜியன் காமிக்ஸ்களின் மாதிரிப் பக்கங்களை தமிழில் அறிமுகப் படுத்துகிறார்! 'இது ஸ்கேன்லேசன் தளம் அல்ல, தமிழில் இதுவரை வராத கதைகளைப் அறிமுகம் செய்யும் நோக்கில் துவக்கப்பட்ட தளம்' என்று  தெளிவுறுத்தும் ரமேஷ், பிராங்கோ-பெல்ஜிய வகையில் வெளியாகியுள்ள மொத்த கதைகளின் எண்ணிக்கை 139755 என்ற தலையை சுற்றவைக்கும் புள்ளிவிவரத்தை தருகிறார்! இவற்றில் இருந்து அதிகபட்சம் ஒரு 100 கதைகள் தமிழில் வெளியாகி இருக்குமா?! - சிறுதுளி!!!

இரண்டாம் முகம்:
ஃபேஸ்புக்கில் இன்னுமொரு சண்முகசுந்தரம் இருக்கிறார். சமீப காலமாகத்தான் பதிவிட்டு வருகிறார் (நான் கவனித்த வரையில்!)! லயன் / முத்து காமிக்ஸ் இதழ்களுக்கு மாதிரி அட்டைகளை வடிவமைத்து அசத்துகிறார் மனிதர்! அவர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருக்கும் சில மாதிரி அட்டைகள் இதோ. குறிப்பாக இரத்தத்தடத்தின் அட்டை வடிவமைப்பு தூள் ரகம்! பார்டர் இல்லாத இது போன்ற அட்டைகளே எடுப்பாக இருக்கின்றன என்பது என் கருத்து! :) வாசகர்களின் மொழிப்பெயர்ப்பு திறமையை வெளிக்கொணர KBT போட்டி வைத்தது போல, இதற்கும் ஒரு KBD (Kaun Banega Designer) வைத்தால் வாசகர்கள் ப(அ)ட்டையை கிளப்புவார்கள் என நினைக்கிறேன்! :)

கடைசியாக...
மூன்று முகம்:
இது ரஜினிகாந்த் நடித்த படம், ஆனால் அதில் அவர் பெயர் சண்முகசுந்தரம் அல்ல, அலெக்ஸ் பாண்டியன்! :) குட் நைட் தோழர்களே!

கருத்துகள்

  1. //ஒரு பக்கம் கலாசாரக் காவலர்கள், மறுப்பக்கம் சென்சாரை எதிர்க்கும் கலாச்சார எதிரிகள்(!), இவர்களுக்கு நடுவில் சிக்கித் தவித்த மிதவாதிகள் - இவற்றை எல்லாம் எட்ட நின்று ரசித்த எடிட்டர் என படு குஜாலாக சில நாட்கள் நகர்ந்தன. :)//

    அப்ப எல்லாம் ஒரு டைம் பாசுக்கா ? :D

    குட் நைட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அப்ப எல்லாம் ஒரு டைம் பாசுக்கா?//
      ஹய்யோ ஹய்யோ! :)

      நீக்கு
    2. //அப்ப எல்லாம் ஒரு டைம் பாசுக்கா ? //

      அய்யோ இது தெரியாம நாலஞ்சு ஹடவ காசுகொடுத்து துபாய் போயிடு வந்துடனே...:)
      இது தானே உங்க மைண்ட் வாய்ஸ் ராஜ்

      நீக்கு
  2. //அழுத்தமான கதையம்சம் கொண்ட ஒரு கனத்த புதினத்தை படித்திடும் திருப்தியை தந்திட லார்கோவின் கதைகள் ஒருபோதும் தவறுவதில்லை//

    நானும் ஆர்வம் தாளாமல் 10 கதைகளையும் ஆங்கிலத்தில் தரவிறக்கி படித்துவிட்டேன்.
    ஒன்று கூட எனக்கு சலிப்பு ஏற்படுத்தவில்லை. அனைத்தும் அருமை.
    இதற்கு நமது லயன் குழுமத்தினரின் மொழி பெயர்ப்பும் சேரும் போது மேலும் சிறப்பாக இருக்கும்.

    பதிவு அருமையாக இருக்கிறது. கொஞ்ச நாள் இடைவெளி விட்டதற்கு ஒரே பதிவு மழை யாக இருக்கிறது. எங்களுக்கு சந்தோசம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கிருஷ்ணா!

      //நமது லயன் குழுமத்தினரின் மொழி பெயர்ப்பும் சேரும் போது மேலும் சிறப்பாக இருக்கும்.//
      தமிழில் அனைத்து பாகங்களும் வெளிவர சில வருடங்கள் ஆகலாம்!

      பி.கு: இந்தப் பதிவையும் தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன்! ;)

      நீக்கு
    2. தலைப்பு அருமை கார்த்திக்.
      இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் நம்ம ராஜ் உடைய "
      காதல் தீவிரவாதியின் சிவராத்திரி சேட்டைகள்" கிட்ட வந்திருக்கலாம்.

      //பி.கு: இந்தப் பதிவையும் தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன்! ;)//

      தமிழ்மணம் ஓகே திரைமணம் ?

      நீக்கு
    3. //திரைமணம் ?//
      அதான், அதேதான்!! ஸ்பெல்லிங் மிஸ்டேக்! :)

      நீக்கு
  3. //... ஒரு பக்கம் கலாசாரக் காவலர்கள், மறுப்பக்கம் சென்சாரை எதிர்க்கும் கலாச்சார எதிரிகள்(!), இவர்களுக்கு நடுவில் சிக்கித் தவித்த மிதவாதிகள் - இவற்றை எல்லாம் எட்ட நின்று ரசித்த எடிட்டர் என படு குஜாலாக சில நாட்கள் நகர்ந்தன ... //
    நான் கூட ஏதோ சீரியஸா போய்கிட்டு இருந்ததுன்னு நினைச்சா.. என்ன பாஸ், அது குஜாலா?

    //...சொல்லுக்குச் சொல் நேரடியாக மொழிபெயர்க்கும் பாணி சீரியஸ் கதைகளுக்கு வேண்டுமானால் அவசியப்படலாம் ஆனால், நகைச்சுவைக் கதைகளில் நம்மவர்கள் உடனடி சிரிப்பை வரவழைக்கும் மொழி மாற்றத்தையே விரும்புகிறார்கள் (அது மூல வசனங்களை சற்றே மாற்றுவதாய் அமைந்தாலும்!)...//
    மிகச்சரியாக சொன்னீர்கள்.... I feel the same

    //... ஓரளவு சீரியஸ் கதையான க்ரீன் மேனரை, செம காமெடியாக மொழிபெயர்க்கலாமா என்று படு சீரியஸாக யோசித்து வருகிறேன் ...//
    அப்படியே எடிட்டரிடம், லக்கி லூக்கை சீரியஸாகவும், கேப்டன் டைகரை காமெடி ஆகவும் வைத்து கதையை மொழிபெயர்ப்பு செய்யச் சொல்லி ஒரு விண்ணப்பம் வைத்து விடுவோம் ;)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நான் கூட ஏதோ சீரியஸா போய்கிட்டு இருந்ததுன்னு நினைச்சா.. என்ன பாஸ், அது குஜாலா?//
      ஒரே அஜால் குஜால்தான் போங்க! :)

      //லக்கி லூக்கை சீரியஸாகவும், கேப்டன் டைகரை காமெடி ஆகவும்//
      :) :) :)

      நீக்கு
  4. இன்று காமிக்ஸை ரசிக்கும் குட்டீஸ்களை நான் கண்கூடாக பார்க்கிறேன் . அதனால் சென்சார் தேவைஎன்றே எனக்கு படுகிறது.
    சண்முக சுந்தரத்தின் அட்டைப்படங்கள் படு சூப்பர்.
    //அடியொற்றி எடுத்தது//
    தமிழ் வார்த்தைகள் விளையாடுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்சார் கேட்ட மண்சார் மைந்தர்கள்!

      இந்திரஜால் ஸ்டைல் தலைப்பு சூப்பர்ல? :) :)

      நீக்கு
    2. :) :) :)
      தலப்பு வைப்பதில் இந்திரஜாலையும் மிஞ்சுவிட்டீர்கள் . அல்லது இந்திரஜால் குழுமத்தின் ஆசிரியர்குழுவில் தலைவராக இருந்தது நீங்கள்தானா?

      நீக்கு
  5. Shanmuga sundaram's cover allignment are excellent and very stylish and professional. Editor can consider these covers.

    This largo story is excellent. I like detailed story about a particular theme. Some mentioned that it is not appropriate to give such details and every one in tamil nadu might start as kudusai thozhil :-). But internet peovide all the detail about making nuclear bomb.

    I wish next time you win the translator contest.

    பதிலளிநீக்கு
  6. பேஸ்புக் சண்முகசுந்தரத்தின் அட்டைகள் அட்டகாசம். அவர் பேஸ்புக் முகவரி தந்துவுதவுங்களேன், கார்த்தி :D

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பேஸ்புக் சண்முகசுந்தரத்தின் அட்டைகள் அட்டகாசம்//
      ஆமாம், ரஃபிக்!

      ஒரு சில குழுமங்களில் மட்டுமே உறுப்பினராக இருக்கிறார்! பேஸ்புக் முகவரி இதோ:
      https://www.facebook.com/shanmuga.sundaram.35175

      நீக்கு
  7. கார்த்திக்,

    மீண்டும் ஒரு சூப்பர் பதிவு. கலக்குகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  8. உங்கள் சின்னம் "பிளேடு" இருந்தாலும். உங்க பதிவு அப்படியில்லை. :) வழக்கம் போல அசத்தல் பதிவு.

    பதிலளிநீக்கு
  9. நமது காமிக்ஸ் நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும்

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :))
    .

    பதிலளிநீக்கு
  10. நண்பர் கார்த்திக் எங்கிருந்தாலும் உடனடியாக ஒரு பதிவு போடவும்....

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia