துப்பாக்கி - தூங்கும் தீவிரவாதிகள்!

விஜய் படத்தை தியேட்டரில் பார்த்து பல வருடங்கள் இருக்கும்! குருவி பார்த்து 'டன் டாணா டர்ணா' ஆகி, சரி பிரபு தேவா இயக்கத்தில் வில்லு நன்றாக இருக்குமோ என எதிர்பார்த்து 'டன் டணக்கா டர்ணா' ஆனதுதான் மிச்சம்! :) அதற்கடுத்து வந்த படங்களை டிவியில் கொஞ்சம் கொஞ்சம் பார்த்ததில் எனக்கு பிடித்த நகைச்சுவைப் படங்களில் 'தனி' இடத்தை விஜயின் படங்கள் பிடித்துக்கொண்டன! :) ஓரளவு நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பதால், துப்பாக்கி அந்த நீண்ட இடைவெளிக்கு இன்றோடு ஒரு முற்றுபுள்ளி வைத்திருக்கிறது!!!

வெளிநாட்டில் இருந்து வந்திறங்கும் வழக்கமான தீவிரவாதிகள் போலன்றி - மக்களோடு மக்களாக கலந்து மேலிடத்திலிருந்து உத்தரவு வரும் வரை வெகு சாதாரண வாழ்க்கை நடத்தும் 'தூங்கும் தீவிரவாதிகள்' நம் நாட்டில் விரவியுள்ளனர், இவர்கள் மிக ஆபத்தானவர்கள்! - இதுதான் துப்பாக்கியின் மையக்கரு!

பனியன் விளம்பரப் படத்தைப் போல ஒரு ஓபனிங் சாங்குடன் விஜய் அறிமுகமானபோது மீண்டும் டன்டணக்காதானா என பயந்து போனேன்! அடுத்த சில காட்சிகளில் அந்த பயம் லேசாக அகன்றது. வழக்கமான அலட்டல் இல்லாமல் கொஞ்சம் சீரியஸ் அவதாரத்தில் விஜய் சரியாக பொருந்தியிருக்கிறார். வெளியுலகப் பார்வையில் விஜய் ஒரு ஆர்மி கேப்டன்(!), ஆனால் அவர் DIA பிரிவின் ரகசிய ஏஜென்ட் என்பது மிகச் சிலரே அறிந்த உண்மை. கல்யாணத்திற்கு பெண் பார்ப்பதற்காக மும்பை வரும் அவர், நகரில் ஊருடுவிக் கிடக்கும் தூங்கும் தீவிரவாதிகளை எப்படி செயலிழக்க வைக்கிறார் என்பது மீதக் கதை.

தீவிரவாதிகள் மற்றும் வடநாட்டவர்கள் தோன்றும் காட்சிகளில் அவர்களை முழுக்க முழுக்க ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் பேச வைப்பதா அல்லது அவர்கள் பேசுவதை தமிழில் வாய்ஸ் ஓவர் செய்வதா என்ற குழப்பத்தில் முருகதாஸ் ரொம்பவே தடுமாறியிருக்கிறார். இருந்தாலும் ஓரளவு நம்பும்படி காட்சிகளை அமைத்ததில் வெற்றி பெறுகிறார். கூகிள் பாட்டில் இருந்தால் மட்டும் போதாது என்று கூகிள் மேப்பை வைத்து துப்பறியும் சீனையும் வைத்திருக்கிறார் முருகதாஸ்! விஜய் பிடித்து வைத்திருக்கும் தீவிரவாதி, ஸ்லீப்பர் செல்லின் ஒரு அங்கமே தவிர அதன் தலைவர் கிடையாது! அப்படியிருக்க அந்த தீவிரவாதி மற்ற பதினோரு பேரையும் தனித்தனியே சந்திப்பது எல்லாம் ஒத்துக்கொள்ளவே முடியாத லாஜிக் மீறல் - இப்படி பல மீறல்கள் படத்தில் இருக்கின்றன! இருந்தாலும் மரண மொக்கை விஜய் படங்களையே பார்த்துப் பழகியதால் இந்தக் குறைகள் பெரிதாக தோன்றவில்லை. 'அட, ஓரளவுக்கு பார்க்கிற மாதிரி இருக்கிறதே?!' என்ற இன்ப அதிர்ச்சியிலேயே குறைகளை பட்டியலிட மனம் வரவில்லை! :D

சீரியஸ் காட்சிகளில் விஜய் கச்சிதமாக நடித்திருக்கிறார். பாடல் காட்சிகளில்   உடலை எக்குதப்பாய் முறுக்கும் ஸ்பெஷல் மூவ் எதுவும் கிடைக்கவில்லை போலும்! அவ்வப்போது ஜீன்ஸ் பேன்ட்டை, பெண்கள் அணியும் த்ரீ-போர்த் போல மடித்துக்கொண்டு ஏன் சுற்றுகிறார் என்பதுதான் புரியவில்லை. காஜல் ஓவர் சுறுசுறுப்புடன் வலம் வருகிறார். மூளையுள்ள வில்லனாக வித்யுத் (பில்லா 2 புகழ்). ஓரிரு பாடல்கள் ஒகே, பின்னணி இசை உறுத்தாமல் படத்துடன் பயணிக்கிறது.

துப்பாக்கியின் மையக் கருத்தும், ஆக்கமும் நன்றாக உள்ளன. ஆனால் ஆடியன்ஸுக்கு போரடிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு தடவை வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் காதல்+நகைச்சுவை காட்சிகள் வரும்போது மட்டும் செமையாக போரடிக்கிறது! காஜலோ, விஜயுடனான அவரின் காதல் எபிசோடோ படத்திற்கு எந்த விதத்திலும் வலு சேர்க்கவில்லை. அதே போலதான் விஜயின் நண்பராக வரும் சத்யனின் போலிஸ் வேடமும்! சப்-இன்ஸ்பெக்டராக இருந்து கொண்டு ஏதோ மும்பை போலிஸே அவர் கண்ட்ரோலில் இருப்பதைப் போல காட்டுகிறார்கள். குறைந்த பட்சம் ஒரு குணசித்திர நடிகரை அந்த ரோலில் போட்டிருந்தாலாவது நம்பும்படி இருந்திருக்கும். சத்யனின் காமெடி இமேஜும், அவரின் குரலும் அந்த வேடத்துடன் ஒத்துழைக்க மறுக்கின்றன.

இன்னும் ஓரிரு வருடங்கள் கழித்து இதே கதையை, குறைகளைத் திருத்தி இன்னும் கொஞ்சம் ஸ்டைலிஷாக, பிரமாண்டமாக ஹிந்தியில் எடுத்துக்கொள்ளலாம் - தமிழுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இதுவே அதிகம் என்று முருகதாஸ் நினைத்து விட்டார் போல! இருந்தாலும் வரிசையாக சுமார் ரக படங்களில் நடித்துக்கொண்டிருந்த விஜய்க்கும், அவர் படங்களை தியேட்டர் போய் பார்க்கவே பயப்படும் தமிழ் சினிமா ரசிகர்களின் பயத்துக்கும் ஒரு பெரிய ப்ரேக்கை கொடுத்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும்! :)

துப்பாக்கி - தேவையற்ற காதல் & நகைச்சுவை காட்சிகளால் வேகம் இழந்து, விட்டு விட்டு வெடிக்கிறது!

31 comments:

 1. எப்படியோ "ஹிட்..."!

  விமர்சனத்திற்கு நன்றி...
  tm2

  ReplyDelete
 2. படத்துல பனிரெண்டு பேரை follow பண்ணி கொல்லுற சேசிங் சீன் ரொம்ப மொக்கை.....

  தீடீரென்று சத்யனை போலீஸ் கண்ட்ரோல் ரூமில் காட்டுவதெல்லாம் ரொம்பவும் ஓவர்.......

  விஜய் தனது வீட்டில் தீவிரவாதியை அடைத்து வைத்து துன்புறுத்துகிறார் அவர் வீட்டில் உள்ள அவர்களது பெற்றோர்களுக்கே தெரியாமல்.......முடியலை

  இது போல மொக்க சீன் படத்தில் ஏராளம்......ஆனால் ஸ்லீப்பர் செல் (Sleeper Cell) விஷயம் மட்டும் ஓகே....இது நிறைய பேருக்கு தெரியாத விஷயம்...இனிமேல் தெரியும்ன்னு நினைக்கிறேன்..தெரிஞ்சு ஒன்னும் ஆகப்போறது இல்லை அது வேற விஷயம்....

  ReplyDelete
  Replies
  1. விஜய் பிடித்து வைத்திருக்கும் தீவிரவாதி, ஸ்லீப்பர் செல்லின் ஒரு அங்கமே தவிர அதன் தலைவர் கிடையாது! அப்படியிருக்க அவர் மற்ற பதினோரு பேரையும் தனித்தனியே சந்திப்பது எல்லாம் ஒத்துக்கொள்ளவே முடியாத லாஜிக் மீறல் - இப்படி பல மீறல்கள் படத்தில் இருக்கின்றன! இருந்தாலும் மரண மொக்கை விஜய் படங்களையே பார்த்து பழகி விட்டதால் இந்தக் குறைகள் பெரிதாக தெரியவில்லை. அட, ஓரளவுக்கு பார்க்கிற மாதிரி இருக்கிறதே என்ற இன்ப(!) அதிர்ச்சியிலேயே குறைகளை பட்டியலிட மனம் வரவில்லை! :D

   Delete
  2. இதை விமர்சனத்துடன் இணைத்து விட்டேன்! :)

   Delete
 3. also code breaking scene which means identifying the secret activity map of terrorist too horror unbelievable......rompa mokkai :)

  ReplyDelete
  Replies
  1. இவ்வளவு ஏன், விஜய்கிட்ட இருக்குற தீவிரவாதியோட சாட்டெலைட் போனை வச்சே, அவர் இருக்குற இடத்த வில்லன் ஈசியா கண்டு பிடிச்சிருக்கலாமே!

   //code breaking scene//
   கூகிள் பாட்டுலே இருந்தா மட்டும் போதாது மேப்பையும் காட்டிருவோம்னு நெனைச்சுட்டார் போல :)

   Delete
  2. for code breaking, there are secret department services in every country and there are trained professionals...they can only decode the secret words and secret maps.

   Delete
  3. நம்ம விஜய்தான் Rubik's Cube trained professional ஆச்சே, கவனிக்கலையா நீங்க?! ;)

   Delete
  4. அவ்வ்வ்வவ்வ்வ்...முடியலை :)

   Delete
 4. >>>கூகிள் பாட்டுலே இருந்தா மட்டும் போதாது மேப்பையும் காட்டிருவோம்னு நெனைச்சுட்டார் போல :)<<<

  ஹா ஹா ஹா...இருக்கலாம் :) :)

  ReplyDelete
 5. ரொம்ப நாளுக்கு பிறகு.....சரியாய் சொல்லனும்னா ஒரு வருசத்துக்கு பிறகு தியேட்டர்ல படம் பார்க்க போனேன். விஜய் படம் என்பதால் அல்ல....a.r. murugadoss படம் என்பதால்....

  a.r-ஆரின் ஏனைய படங்களோடு ஒப்பிடும் பொது 7-ஆம் அறிவு-விலேயே சொதப்பிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும் என்றாலும் இந்த படத்தில் தனது பழைய திறனை காட்டியிருப்பார் என்று நம்பினேன் :(

  ஒரு வேலை a.r. murugadoss-க்கு தற்போது கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ் குமார் நாவல் படிக்க கிடைப்பதில்லையோ என்னவோ?

  a.r-ஆரின் மிகப்பிரம்மாண்ட வெற்றிப்படமான 'ரமணா' ராஜேசின் 'சிகப்பு வட்டத்திற்குள் சிந்துஜா' நாவலை தழுவியது என்று முழுவதும் கூற முடியாவிட்டாலும் கூட அதில் வரும் ஆஸ்பிட்டல் சீன் அப்பிடியே அந்த நாவலில் இருக்கும் என்பதும் இங்கே குறிப்பிடதக்கது.

  ReplyDelete
  Replies
  1. 7-ஆம் அறிவு இன்னும் பார்க்கவில்லை. சமீபத்தில் அதன் முதல் சில காட்சிகளை (டாக்குமென்ட்ரி!) பார்த்தேன். அப்புறம் சீன அதிகாரிகள் டோங் லீயை கூப்பிட்டு இந்தியா இஸ் அவர் எனிமி என்ற ரீதியில் மொக்கை ஆங்கிலத்தில் திட்டம் போடும் இடத்தில் தாங்க முடியாமல் சானல் மாற்றி விட்டேன்! :)

   Delete
  2. போதிதர்மரை பற்றி சில விக்கி கட்டுரைகளில் மட்டுமே படித்து தெரிந்திருந்த எனக்கு அவரை திரையில் பிரன்மாண்டமாக காட்டியிருப்பார்கள் என்று நம்பி சென்ற படம் 7-ஆம் அறிவு. கடைசியில் சீன படங்களில் காட்டிய அளவிற்கு கூட ஏ.ஆர்-காட்டவில்லை என்பதை உணர்ந்த பொது கடுப்பு ஆனது தான் மிச்சமானது. (சீன படங்கள் வெகு சமீபத்தில் தான் காண கிடைத்தது)

   இந்த படத்திலையும் ஒரு நன்மை என்னென்னா மிகச்சிலருக்கே தெரிந்த போதிதர்மரை பற்றி நிறைய பேருக்கு தெரிய வைத்த அருமையான படம்.

   Delete
  3. //சீன படங்கள் வெகு சமீபத்தில் தான் காண கிடைத்தது//
   போதிதர்மர் பற்றிய சீன படங்களா?! அவர் உள்ளூர் சீன ஆள்தான் என்று டிராகன் மேல் அடித்து சத்தியம் செய்திருப்பார்களே?! ;) அவை என்ன படங்கள் வசு?

   வசு - இனிமே உங்க பேர் இதான்! :) :) :)

   Delete
  4. /////போதிதர்மர் பற்றிய சீன படங்களா?! அவர் உள்ளூர் சீன ஆள்தான் என்று டிராகன் மேல் அடித்து சத்தியம் செய்திருப்பார்களே?///

   ஹா ஹா...அவர்கள் ஒன்றும் நம்மவர்களை போல் அல்ல கார்த்திக்.. அவர்கள் நேர்மையானவர்களே....
   அந்த படங்கள் பற்றிய இணைப்பு என் மின்னசலில் இருந்தது....செக் செய்து பார்த்துவிட்டு உங்களுக்கு மின்னஞ்சல் செய்கிறேன்!

   Delete
  5. படத்தின் பெயர், Da mo zu shi,

   என் நண்பன் அனுப்பிய இணைப்புகள் தற்போது செயல்படவில்லை.. youtube-இணைப்புகள் நீக்கப்பட்டிருக்கிறது, CD கிடைத்தால் வாங்கி பாருங்கள்....

   Delete
 6. kindly forward me your email ID to varalatru suvadugal@gmail.com

  Important Note: if you wish.. :) :)

  ReplyDelete
  Replies
  1. //Da mo zu shi//
   நன்றி!

   உங்களுக்கு எனது ஈமெயில் ஐடி கொடுப்பதில் என்ன தயக்கம் இருந்திட முடியும்?! :) அனுப்பியிருக்கிறேன்!!!

   Oops... I sent it to "suvadugal@gmail.com" or is it varalatrusuvadugal@gmail.com?!

   Delete
 7. ஆக மொத்தத்தில் படம் பார்க்கலாம் அப்படித்தானே அண்ணே :))
  .

  ReplyDelete
  Replies
  1. பாக்லாம் பாக்லாம்! :) அப்பத்தான் சுறா மாதிரி படம் இனிமே வராம இருக்கும்! :D

   Delete
 8. Only for "varalatrusuvadugal and Karthik" who commented here. First of all understand REAL LIFE only have LOGIC. REEL LIFE don't have any LOGIC. Before commenting on vijay movies. Answer the below question.

  1.Generally in 100% of movies how a hero or his family life story or number of days or number of instance is completing within 2.30 minutes (movie time) ?

  Answer me with LOGIC, then proceed talking about any movies in your life time.

  ReplyDelete
 9. Dai bladepedia admin, enna daa vijayaa varu varu vararaa pathaaa than puriuthu.... nee oru ajith sombanu.... thu onoda bloga padichen paru...

  ReplyDelete
  Replies
  1. மேலே உள்ள கருத்துரையில் தங்களின் ஆங்கிலத்திறமையைப் பார்த்தால் தாங்கள் படித்தவர் என்றே தெரிகிறது.!

   பொது இடத்தில், முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவருக்கு எதிராக கண்ணியக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவதுதான் தாங்கள் பெற்ற கல்வியால் தாங்கள் கற்ற பண்பா?

   பதிவை விமர்சிக்க தங்களுக்கு முழு உரிமையுண்டு, பதிவிட்டவரை விமர்சிக்க தங்களுக்கு துளியும் உரிமையில்லை என்பதை உணருங்கள்! பொது இடங்களில் வார்த்தை உபயோகத்தை கட்டுப்படுத்தும் பண்பை வழங்காத தங்களின் கல்வியை நினைத்தால் வருத்தம்தான் வருகிறது.!

   இதுபோன்ற சகித்துக்கொள்ள முடியாத கருத்துரைகளை இங்குமட்டுமல்ல, எங்கும் பதிவு செய்வதை முடிந்த மட்டும் தவிருங்கள்! புரிதலுக்கு நன்றி!

   # i don't want to argue more about this issue and moreover i'm not ajith fan.

   Delete
  2. என்னுடைய பில்லா 2 விமர்சனத்தை முழுதாய் படிக்காததன் விளைவுதான் இது என்று நினைக்கிறேன்! "அஜீத் எனக்கு பிடித்தமான நடிகர்களில் ஒருவர்" என்று மட்டுமே சொல்லியிருக்கிறேன், Fan அல்ல!!! அந்த வார்த்தையை பார்த்ததும் திரு.செல்வன் திட்டுவதற்கு ஓடோடி வந்து விட்டார் போல! முழு விமர்சனத்தையும் படித்திருந்தால் பில்லாவையும் வாரிய உண்மை அவருக்கு புரிந்திருக்கும். விடுங்கள் நண்பரே!

   Delete
 10. துப்பாக்கி நேற்று பார்த்து விட்டேன் நண்பா! நல்ல விமர்சனம் கொடுத்திருக்கிங்க!

  ReplyDelete
  Replies
  1. அட நீங்க வேற! நல்ல விமர்சனம் பண்ணாலும் திட்டுறாங்க, கெட்ட விமர்சனம் பண்ணாலும் திட்டுறாங்க! :D

   Delete
 11. வழக்கம்போல அதே விஜய் படம். புதுசாகவும், மலைப்பாகவும் ஏதும் இல்லை. தன் தங்கை அல்லது தன் குடும்பம் பிரச்னை இல்லாமல் வாழவேண்டும் என்பதற்காக 10, 15 ரவுடிகளை தேடிபோய் கொல்வார் (படம் பார்க்கும் நம்மையும்தான்). துப்பாக்கியில் நாட்டுக்காக தீவிரவாதிகளை தேடிப்போய் கொள்கிறார், அவ்வளவுதான்.

  அப்புறம் கார்த்திக், ரூ. 1120/- க்கு வவுச்சர் அனுப்புகிறேன், பேங்க் ல டெபாசிட் பண்ணிடுங்க. போக்கிரிக்கு பிறகு விஜய் படத்துக்கு உங்க விமர்சனத்தை படித்து, நம்ம்பி குடும்பத்துடன் போனேன்.

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப எதிர்பார்த்து போய் ஏமாந்திருக்கீங்க! நீங்க ரொம்ப எதிர்பார்க்கக் கூடாதுங்கறதுக்காக விமர்சனதுலே நெறைய ஹின்ட்ஸ் கொடுத்திருக்கேனே! :) நீங்க என் விமர்சனத்தை சரியாய் புரிஞ்சுக்கலைன்னு நெனைக்கறேன், ஆங்! ;) :) :)

   // ரூ. 1120/- க்கு வவுச்சர் அனுப்புகிறேன்//
   ரொம்ப தாங்க்ஸ்ங்க.. :) கிஃப்ட் வவுச்சர்தானே! அதை வச்சு எனக்கு வேண்டியதை வாங்கிக்கிறேன்! :D

   Delete

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia