ஒரு காமிக்ஸ் குழாயடிச் சண்டை!

"தமிழ் காமிக்ஸ் அரசியல்(!)" பற்றி அறியாத நண்பர்களுக்கு முதலிலேயே சொல்லி விடுகிறேன், இது ஒரு நீண்ட, போரடிக்கும் பதிவு! :) எப்போது SHSS இதழ் பற்றிய காட்டமான கருத்துகளை என் வலைபூவிலும் அதையே எடிட்+பேஸ்ட் செய்து லயன் காமிக்ஸ் ஆசிரியர் விஜயன் அவர்களின் வலைப்பூவிலும் இட்டேனோ அங்கு தொடங்கியது இந்தப் பிரச்சினை! வாதங்கள் விதண்டாவாதங்களாக மாறியதாலும், பதில்கள் கண்ணியம் இழந்து தாக்குதல்களாக மாறியதாலும் "குழாயடிச் சண்டை" என்பதே பொருத்தமாக இருக்கும்.

சண்டை நடந்த இடம் விஜயன் அவர்களின் வலைப்பூ என்பதால் அங்கே மேலும் எண்ணையை ஊற்றி விஜயன் மற்றும் இதர வாசகர்களின் எரிச்சலை சம்பாதித்துக்கொள்ள விரும்பவில்லை! மேலும் காமிக்ஸ் பற்றிய விமர்சனம், கருத்துக்கள், யோசனைகள், அவ்வப்போது கொஞ்சம் மொக்கை போன்ற சங்கதிகளைத் தாண்டி மற்ற விஷயங்களை அங்கே பேச விரும்பவில்லை! சண்டையை அங்கே மேலும் வளர விடாமல் நிறுத்திக்கொண்டு விலகியது நானாக இருப்பதில் எனக்கு பெருமையே தவிர எந்த ஒரு சங்கடமும் இல்லை! இருந்தாலும் அங்கே ஒரு சிலர் தவறு என் மேல்தான் என்ற ரீதியில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாலேயே தீபாவளி முடிந்தும் வெடிக்க வேண்டியிருக்கிறது!

நல்ல சில கருத்துக்கள் எதிர் தரப்பில் இருந்து வந்தால் அவற்றை ஏற்றுக்கொண்டு, நான் ஏதாவது தவறாக பேசி இருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்பது என் வழக்கம். அது பற்றி நான் ஈகோ பார்ப்பதில்லை. சில வாதங்களுக்கு (விதண்டாவாதங்களுக்கு) தக்க பதிலடி கொடுத்த பின்னர், எதுவும் பேச முடியாமல் பம்மிக்கொண்டு பதுங்கும்  பழக்கம் என்னிடம் இல்லை! சரி என்றால் விடாமல் வாதிடுவேன், தப்பு என்றால் உடனே மன்னிப்பு கேட்பேன்! ஆனால் இறுதியில் ஸ்டீல் க்ளா மற்றும் பரணியிடம் ஒரு சில விஷயங்களை தவறாக புரிந்து கொண்டதிற்கு நான் மன்னிப்பு கேட்டதை திசை திருப்பி என் மேல்தான் தவறு என்பது போல் சித்தரித்துக் கொண்டிருகின்றனர் ஒரு சிலர்!

விஜயனின் வலைப்பூவில் உலாவும் சில தீவிர வாசகர்களுக்கு லயன் / முத்து காமிக்ஸ் பற்றி விமர்சித்தால் கொஞ்சமும் ஆகாது போல! சினிமா நாயகர்களின் தீவிர ரசிகர்கள், அவரவர் அபிமான நடிகரின் ஒரு சில படங்கள் மொக்கையாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளாமல் 'படம் சூப்பர்' என்று சொல்லித் திரிவதில்லையா - அதுபோலத்தான் இதுவும்! தவறில்லை! ஆனால் குறிப்பிட்ட அந்தப் படம் 'படு மொக்கை' என்ற உண்மையைக் கூறுபவர்களை கும்பலாக சேர்ந்து 'மொத்த' நினைப்பதுதான் தவறு! :) அதிலும் அந்த உண்மையைக் கூறுபவர் வலைப்பதிவராக இருந்து விட்டால், மொத்து மொத்து என்ற மொத்திவிடுவார்கள்! பதிவர்கள் என்றால் அவ்வளவு இளக்காரம், இல்லையா?!.

என்னைப் போன்ற காமிக்ஸ் பதிவர்கள் சொல்லும் "குறைகளை" மட்டும் பூதாகரமாக்கி பிரச்சினையை கிளப்பும் இவர்கள், நாங்கள் பாராட்டி பேசும் போதும், நிறைகளை பட்டியலிடும் போதும் கண்களை இறுக்க மூடிக்கொள்கிறார்கள்! SHSS மற்றும் தங்கக் கல்லறை பற்றிய என் கருத்துக்கள் மற்ற பதிவர்களிடம் இருந்து வெகுவாக வேறுபடுகின்றன! பதிவர்களை விடுங்கள், விஜயனின் வலைப்பூவில் பின்னூட்டமிடும் 'பதிவர் அல்லாத' வாசகர்களும் பல்வேறு விதமான கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள். இவர்களில் சிலரும் SHSS மற்றும் தங்கக் கல்லறையை தீவிரமாக விமர்சித்திருக்கிறார்கள். அப்படி இருக்க பதிவர்களை மட்டும் பொதுவாக குறை சொல்வது என்ன நியாயம்?!

அதே போலதான் நான் 'இந்த ஆண்டு' உறுப்பினராக இணைந்த ஃபேஸ்புக் குழுமத்தைப் பற்றிய இவர்களின் கருத்தும்! இங்கே நடக்கும் ஜாலியான கும்மிகளை, கேலிகளை, கிண்டல்களை மட்டும் ஆசிரியர் வலைப்பூவில் வந்து போட்டுக்கொடுக்கும் முகமில்லாத சிலர், அதே ஃபேஸ்புக் பக்கத்தில் நடக்கும் உருப்படியான விவாதங்களைப் பற்றி ஆசிரியர் வலைப்பூவில் எதுவும் சொல்வதில்லை! பின்னே உருப்படியான விசயங்களை பேசுவதால் அவர்களுக்கு என்ன லாபம் கிட்டி விடப்போகிறது?!

யாராவது காமிக்ஸ் பதிவர்கள் அல்லது ஃபேஸ்புக் உறுப்பினர்கள் சில சமயம் எல்லை மீறி எதையாவது சொல்லி வைத்தால் அதற்கு பொத்தாம் பொதுவாக அனைத்து பதிவர்களையும், ஃபேஸ்புக் உறுப்பினர்களையும் குறை கூறுவது எந்த வகையில் நியாயம்?!

தாக்குதல்கள் ரொம்பவே தனிப்பட்ட விதத்தில் போனதால், பொறுமையாக பதில் சொல்ல வேண்டியிருந்தது. சிலர் அனானி போர்வையில் வந்து இஷ்டத்திற்கு உளறினாலும், அவர்களுக்கும் பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டிருந்தேன்! இப்படி பொறுமையாக ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லிக்கொண்டிருந்ததுதான் நான் செய்த மிகப் பெரிய தவறு என்று இப்போதுதான் உறைக்கிறது!

நான் எனக்கு பிடித்த, பிடிக்காத காமிக்ஸ்களை விமர்சனமோ, நக்கலோ, கேலியோ, கிண்டலோ செய்து கொண்டேதான் இருப்பேன்! அந்த விமர்சனங்களை இங்கேயும் இடுவேன், தேவைப்பட்டால் எடிட்+பேஸ்ட் செய்து எடிட்டர் வலைப்பூவிலும் இடுவேன்! இங்கே போடும் விமர்சனங்களை, எடிட்டர் வலைப்பூவில் நான் அப்படியே காப்பி பேஸ்ட் செய்வதில்லை! என் வலைப்பூவுக்கு சுட்டியோ, சுய விவரங்களோ அல்லது இன்ன பிற தேவையற்ற தகவல்களோ இருந்தால் அவற்றை நீக்கி விட்டுதான் போடுகிறேன்! என் வலைப்பூவிற்கு விளம்பரம் அளிக்கும் தவறை வலைப்பூ தொடங்கிய ஆரம்ப காலத்தில், ஆர்வக் கோளாறில் விஜயனின் வலைப்பூவில் செய்து, அவர் சுட்டிக்காட்டியதும் அது தவறு என உணர்ந்து வழக்கம் போல மன்னிப்பு கேட்டு அதற்கப்புறம் ஒரு தடவை கூட அப்படி செய்ததில்லை! எனவே என் வலைப்பூவிற்கு விளம்பரம் தேடுகிறேன் என்று யாரும் வீணாக குதிக்க வேண்டாம்!

அதே போல காமிக்ஸ் பதிவுகள் அத்தனையையும் விஜயனின் வலைப்பூவில் நான் போடுவதில்லை! லயன், முத்து பற்றிய பதிவுகளை அவசியம் இருந்தால் மட்டும் போடுகிறேன்! Wild West ஸ்பெஷலுக்கு நான் எழுதிய விமர்சனத்தில் முழுக்கதையும் சொல்லி இருந்ததால் அந்த விமர்சனத்தை அங்கே போடவே இல்லை! அதே போல சில வாரங்களுக்கு முன் நான் எழுதிய ஜேம்ஸ் பாண்ட் காமிக்ஸ் பதிவையும், அதில் 'முத்து காமிக்ஸ்' பற்றி குறிப்பிட்டிருக்கின்றேன் என்ற ஒரே காரணத்தினாலேயே நான் ஒன்றும் ஓடோடிப் போய் அதை எடிட்டர் ப்ளாகில் காப்பி பேஸ்ட் செய்யவில்லை. நான் அங்கே போடும் பதிவுகள் மிகவும் அவசியமான விமர்சனப் பதிவுகள் மட்டுமே! போகிறபோக்கில் குறை சொல்லிப் போகாமல்
எனக்கு தெரிந்த தீர்வுகளையும் அங்கே சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன்! எனவே எதிக்ஸ் குறித்து யாரும் எனக்கு லெக்சர் கொடுக்கத் தேவையில்லை! முதலில் உங்களிடம் அது இருக்கிறதா என்று சுயபரிசோதனை செய்யுங்கள்!

இதில் வேடிக்கை என்னவென்றால் விஜயன் அவர்கள் விமர்சனங்களை வரவேற்கிறார், தேவைப்பட்டால் பதிலும் சொல்கிறார், ஓவராகப் போனால் கோபப்படுகிறார், அவருக்கு சரியென படுபவற்றை ஏற்றும் கொள்கிறார்!   அவருக்கு எந்த பிரச்சினையும் இதில் இருப்பதாய் தெரியவில்லை. அதை நானே அவரிடம் வலைப்பூவில் நேரடியாக கேட்டும் தெளிவுபடுத்திக் கொண்டுவிட்டேன்.  இதுவும் அந்த 'பஞ்சாயத்து தலைவர்களுக்கு' பொறுக்கவில்லை போலும், என்னை வெறுப்பேற்றும் நோக்கில் எதையாவது பேசிக்கொண்டிருக்கிறார்கள்! இப்படி செய்வதன் மூலம் இவர்கள் சொல்ல வருவது என்ன?! விஜயன் அவர்களின் வலைப்பூவில் நிறைகளை மட்டும்தான் சொல்ல வேண்டும், குறைகள் சொல்ல விஜயன் அவர்களே அனுமதித்தாலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் - கேவலப்படுத்தி அனுப்புவோம் என்கிறார்களா?!

முக்கிய குறிப்பு: @ Comic Lover, Parani & கோ. ஸ்டீல் க்ளா: கீழே நான் எழுதியிருப்பவை உங்களைக் குறித்தது அல்ல - உங்களோடு எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை! ஹஜன் என்னை மறைமுகமாக நக்கலடித்த போது, எனக்கு ஆதரவாக பேசிய கோ.ஸ்டீல் க்ளா, ஈரோடு விஜய், Comic Lover இவர்களுக்கு என் நன்றிகள் (வேறு யாராவது விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்!).

இங்கு முதலில் மன்னிப்பு கேட்பவன் மடையன் ஆகிறான், செய்த தவறை ஒத்துக்கொள்ளாமல் நழுவுபவர்கள் நாணயஸ்தர்கள் ஆகிறார்கள்! அந்த நாணயஸ்தர்கள் வாய்க்கு வந்தபடி எதுவும் பேசுவார்களாம், அதை நான் தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக் கொள்ளக் கூடாதாம்! ஆனால், நான் ஏதாவது பேசினால் மட்டும் (அது கண்ணியமான தொனியில் இருந்தால் கூட) இவர்கள் கும்பலாக வம்புக்கு வருவார்களாம், நல்ல நேர்மை, நல்ல நியாயம்!!!

வம்பிழுத்தது யார், வார்த்தை நெருப்பை கொட்டியது யார், மட்டரகமாக பேசிவிட்டு குறைந்த பட்சம் மன்னிப்பு கூட கேட்காமல் நழுவியது யார், பஞ்சாயத்து செய்வது யார், அணைந்த நெருப்பை கிளறுவது யார், மறைமுகமாக தாக்குவது யார், எதிக்ஸ் இல்லாமல் எழுதுவது யார், நேர்மையின்றி இருப்பவர் யார், ஸ்கூல் பையனாக இருப்பவர் யார், கேலி பேச்சுக்கும் சீரியஸ் தொனிக்கும் வித்தியாசம் தெரியாதவர் யார் என்ற பல கேள்விகளுக்கான விடைகள், கீழே தேதி + நேர வரிசைப்படி உள்ள ஸ்க்ரீன் ஷாட்ஸ்களை கண்டால் உங்களுக்கு தெரிய வரும்!

புத்தக சேகரிப்பாளர்கள் எல்லாம் பதுக்கல்காரர்கள், அதிக விலைக்கு விற்பவர்கள் என்ற ரேஞ்சில் நியாயம் பேசிக்கொண்டிருக்கும் ஹஜன் சுந்தர், சில மாதங்கள் முன் புத்தகப் ப்ரியனை தாக்கிப் பேசியதையும், அவரிடம் இருந்தே புத்தகங்களை 'நல்ல விலைக்கு' வாங்க நினைத்த அதிசயத்தையும் இங்கே காணலாம். நீங்கள் எந்த விலைக்கோ விற்றுக்கொள்ளுங்கள் அல்லது வாங்கிக் கொள்ளுங்கள் - அது உங்கள் தனிப்பட்ட விஷயம்! ஆனால், அனைத்து சேகரிப்பாளர்களையும் ஒரே தட்டில் வைத்து எடை போட உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?! விஜயன் அவர்கள் நூறு ரூபாய்க்கு புதிய புத்தகம் வெளியிட்டால், பத்து ரூபாய் புத்தகம்தான் வேண்டும் என்று ஹஜன் அடம் பிடிப்பார் என்பது தனிக்கதை!. மொத்தத்தில் பழைய காமிக்ஸ் சேகரிக்கும் தீவிர தேடுதலில் இருக்கும் இவர்களைப் போன்றவர்கள், CC-க்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன் என்ற ஒரே காரணத்தால் கிடைத்த கேப்பில் எல்லாம் பொங்குகிறார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது!

முதலில் சர்ச்சையை கிளப்பிய என் SHSS பதிவில் இருந்து துவங்குகிறேன்:
BoPET = மைலார் / SHSS = ஓ மை லார்ட்!

SS-01: சண்டையை ஆரம்பித்து வைத்தவர் ஹஜன்!


SS-02: அவர் சொன்ன  செல்பிஷ் என்ற சொல்லை வைத்தே  சூடாக பதில் சொன்னேன். பிறகு தன்மையாகவும் பதிலளித்தேன்! ஆனால் எதற்கும் பதில் சொல்லாமல் நழுவி விட்டார் மனிதர்!!!கீழே உள்ளவை யாவும் எடிட்டர் ப்ளாகில் எடுக்கப்பட்ட ஸ்க்ரீன் ஷாட்ஸ்!

SS-03: இந்தப் பதிவை எடிட்டர் ப்ளாகில் இட்ட போது அவரின் reaction இதுதான்!


SS-04: மேற்கண்ட பதிவிற்கு பல வாசக நண்பர்கள் (சுரேஷ் நடராஜன், utha man .r, Comic Lover, BN USA, Muthu Priyan மற்றும் பலர்) எதிர் கருத்து வைத்தனர். ஏன், புத்தகப் பிரியன் கூட மிகவும் கண்ணியமாக கருத்திட்டிருந்தார் - அவர்களுக்குகான என் பதில்களையும் மிகவும் கண்ணியமான முறையிலேயே பதிவிட்டிருந்தேன்! அதே போல அரதப் பழைய கதைகள் வேண்டாம் என்றும் பல வாசகர்கள் (பதிவர்கள் மட்டுமல்ல) தங்களது எண்ணங்களை வெளியிட்டிருந்தார்கள். முத்து ப்ரியனுக்கு என் நோக்கம் நோகடிப்பது அல்ல என்றும் விளக்கியிருந்தேன்.

SS-05: ஜேம்ஸ் நிலா என்பவர் எனக்கு கோமாளி என்ற பட்டம் கொடுத்தார்! :) அதற்கு நான் பதில் சொல்லவில்லை. ஆசிரியரிடம்  "நீங்கள் மன்னிப்பு கேட்க அவசியம் இல்லை" என்று கூறினேன்!

SS-06: அப்புறம் Comic Lover பல பின்னூட்டங்களை வைத்து சொன்ன கருத்துக்கு ஒரு பதில்:

SS-07: அப்புறம் அவரிடம் சமாதானம்! :)

SS-08: பரணி அவர்கள் பிறர் மனம் நோகா வண்ணம் கருத்து  வேண்டும் என்று சொல்லி விட்டு பதிவர்கள் மனம் நோகும் வண்ணம் இட்ட கருத்து! அவருக்கு நிதானமாகவே பதில் அளித்தேன்! கடைசியில் என்னை அவர் மீண்டும் கிண்டல் செய்ய நான் அவர் மேல் கோபம் கொண்டதிற்கு இதுவும் ஒரு காரணம்!!!

SS-09: அப்புறம் ஹஜன் அவர்கள் என்னை மறைமுகமாக தாக்கி எழுதியது. என் ப்ளாகில் என் பதில்களுக்கு பதில் அளிக்காமல் நழுவியது நினைவிருக்கலாம்! ;) இருந்தாலும் அவருக்கு நேரடியாக பதில் அளித்தேன் - மிகப் பெரிய தவறு!!!

SS-10: ஆதரவுக் குரல் கொடுத்த நண்பர்கள்!

SS-11

SS-12: எனக்கு பதில் சொல்லாமல், ஏட்டிக்கு போட்டியாக சில கேள்விகள் கேட்டுவிட்டு மீண்டும் நழுவிய ஹஜன்!

SS-13: மீண்டும் அவருக்கு பொறுமையாக பதில்!

அது போன பதிவு! சம்பந்தமே இல்லாமல் "தங்கக் கல்லறை"  பற்றிய எடிட்டரின் பதிவிலும் இந்த நபர்கள் என்னை வம்புக்கு இழுத்ததுதான் வேடிக்கை!

SS-14: சாக்ரடீஸ் கேட்ட கேள்வியில் மனம் நொந்த எடிட்டர்!

SS-15: புனித சாத்தானும் தங்கக் கல்லறை பற்றி பல முறை எதிர் கருத்துக்கள் இட்டார்!

SS-16: மனம் நொந்த ஆசிரியர்!

SS-17: அவருக்கு ஆதராவாய் எழுதப் போய் சொந்தப் பதிவில் சூனியம் வைத்துக்கொண்ட நான்!

SS-18: என் பதிவின் தொடர்ச்சி! புத்தக அளவு குறித்த சில யோசனைகளுடன்!SS-19: என்னுடன் சேர்ந்து ஆசிரியருக்கு தரவுக் குரல் கொடுத்த Comic Lover!

SS-20: Comic Lover என்னை பற்றி எழுதிய ஒரு கருத்து!


இதற்கு ஆசிரியர் அளித்த மூன்று பாக பதில்களை இங்கு காணலாம்! இது எனக்கு மட்டும் அளித்த பதில் அல்ல. தங்கக் கல்லறை பற்றிய குறைகள் கூறியவர்களுக்கான பொதுவான பதில் (தொகுப்பு: நன்றி ரஃபிக்)
https://www.facebook.com/groups/lionmuthucomics/doc/10151253831854776/

SS-21: நம்ம விஜயின் வேடிக்கை பேச்சுக்கு, வேடிக்கையான பதில்! இதற்கு நான் ஒன்று டென்ஷன் ஆகவில்லையே?! ஏன் என்றால் படிக்கும் போதே தெரிகிறது அவர் விளையாட்டுக்கு சொல்கிறார் என்று! ;)

SS-22: கருத்து மழை பொழிந்த லூfoலூபை! நான் புத்தக அளவு குறித்து கொடுத்த யோசனை இவருக்கு பிடிக்கவில்லை போலும் ;)

SS-23: மன்னிப்பு கேட்பதில் எனக்கு சளைத்தவர் அல்ல நமது லூfoலூபை!

SS-24: மீண்டும் என்னை குத்திக் காட்டும் லூfoலூபை!

SS-25: மறுபடியும் மன்னிப்பு! ;)

SS-26: பொங்கி எழுந்த பாண்ட்! நான் தகுதி இல்லாதவனாம் ஆனால் ஹாலிவுட் ரேஞ்சாம்! :-D கூட கூட பேசிய லூfoலூபை! :)

SS-27: நான் அசிங்கமாக பேசினேன் என்ற புகார் வேறு!

SS-28: பாண்டுக்கு நான் அளித்த பொறுமையான பதில் - மீண்டும் நான் செய்த மிகப் பெரிய தவறு!

SS-29: தகுதி இல்லாத அவரிடம் மன்னிப்பு கேட்டது அதை விட பெரும் தவறு!

SS-30: லூfoலூபை-க்கு நான் அளித்த பதில்!

SS-31: இடையில் வந்து மாட்டிக்கொண்ட மாயாவி! இதற்கு முன் என் ப்ளாகில் அறிமுகமான நண்பர் என்ற முறையில் அவரை ஓவராக கலாய்த்தது நான் செய்த அடுத்த தவறு!

SS-32: பரணி கூடத்தான் பல கருத்துக்கள் கூறி இருக்கிறார்! :)

SS-33: ஆனால் தங்கக் கல்லறை பற்றி நான் லைட்டாக பேசியதுமே ஆளாளுக்கு பொத்துக்கொண்டு வருகிறது கோபம்! நான் எந்த குறையும் கூறாமலேயே!

SS-34: ஸ்டீல் க்ளாவுடன் வாக்குவாதம் - என் தவறு!

SS-35: இவர் கமென்ட் டெலிட் செய்து போடுவதை பற்றி ஏற்கனவே ஒரு சிலர் கருத்து கூறி உள்ளனர்! புத்தக ப்ரியனும் முன்பு ஒரு முறை இவரை நக்கல் அடித்துள்ளார்! ஆனால் நான் கேட்டால் தவறாம் (மற்றவர்கள் சொல்கிறார்கள்!)

SS-36: ஸ்டீல் க்ளா படலம்!
SS-37: ...
SS-38: ...

SS-39: ஏற்கனவே சென்ற பதிவில் என்னை நண்பர் பரணி நக்கல் அடித்தது நினைவிருக்கலாம். நான் சூடாக இருந்த சமயம் என் வேலையைப் பற்றி நக்கல் அடித்தால் எனக்கு கோபம் வருமா வராதா?!

SS-40: உடனே வந்து விட்டார் பஞ்சாயத்து தலைவர்! ஆனாலும் அவர் சொன்ன ஒரு கருத்தில் நியாயம் இருப்பதாக பட்டதால் பரணியிடம் உடனடி மன்னிப்பு!

SS-41: கோவை ஸ்டீல் க்ளாவிடம் அதிகம் விதண்டாவாதம் பண்ணியதால் அவரிடம் ஒரு சீரியஸ் மன்னிப்பு! ஈரோடு விஜயிடம் ஒரு காமெடி மன்னிப்பு! ஆனால், இது எனக்கு எதிராகப் போய் விட்டதுதான் பரிதாபம். இத்தனை  பேசிய அந்த ஒரு சிலர், அவர்கள் செய்த தவறுக்கு, அதிகம் வாய் பேசியதற்கு ஒரு மன்னிப்பும் கேட்கவில்லை என்பதை கவனித்தீர்களா?!

SS-42: நான் மன்னிப்பு கேட்டதை எப்படி எல்லாம் வளைக்கிறார் பாருங்கள்! ஆனால் புத்தக ப்ரியனுக்கு நான் எதுவும் பதில் சொல்லவில்லை!

SS-43: ஆசிரியருக்கு ஒரு விளக்கம்! Comic Lover-இன் அறிவுரையை  எனக்கு நினைவூட்டிய புத்தகப் பிரியன் அது அவருக்கும் பொருந்தும் என்பதை மறந்து விட்டார். நான் 'குழாயடி சண்டை' என்றால் அவருக்கு ஏன் கோபம் வருகிறது?! அந்த அறிவுரையின் படி நடக்க வேண்டியதுதானே?! ஒரு வேளை தான் ஒரு பிரபலம் என்று அவரே நினைத்துக் கொள்வதால் ஆசிரியருக்கு பதிலாக தானே பதில் சொல்லலாம் என நினைத்தாரோ?!

SS-44: விஜயன் சாருக்கு என் விமர்சனப் பதிவுகளால் எந்த பிரச்சினை இருப்பதாயும் தெரியவில்லை!

SS-45: பொறுக்குமா ஹஜன் சாருக்கு?!  முதுகுக்கு பின் பேசும் பழக்கமுள்ள இவர் எதிக்ஸ் பற்றி லெக்ச்சர் கொடுத்த காமெடி அரங்கேறியது! அதை விட காமெடி லூfoலூபை-யின் நேர்மை பற்றிய கூக்குரல்!

SS-46: அப்புறம் இஸ்கூல் லீவ் என்பதால் கருத்து சொல்ல ஓடோடி வந்த நண்பர்(!) பாண்ட்! :)

இந்த பிரச்சினை இவ்வளவுதான்! ஆனால், வரலாறு முக்கியம் அல்லவா!

SS-47: புத்தக பிரியன் 'பினாத்துவதாக' கருத்து கூறிய ஹஜன் அவரிடமே புத்தகங்கள் வாங்க நினைத்த முரண் நிலை! இவர் மட்டும் பின்னே காமிக்ஸ் பதுக்கவில்லையா?:

SS-48: உணர்ச்சிகரமாக 'வள வளவென' பேச இவருக்கு நன்றாகவே வரும் போல! அப்போ இவர் புக்கே சேர்ப்பதில்லையாக்கும்?! படித்து விட்டு பழைய பேப்பருக்கு போட்டு விடுவாராக்கும்?! - சரிங்க பாஸ் நாங்க நம்பிட்டோம்! ;)

SS-49: கோவை ஸ்டீல் களா பற்றிய மற்ற நண்பர்களின் கருத்து!

SS-50: அட நம்ம புத்தகப் பிரியன் கூட க்ளாவை கலாய்ச்சிருக்காரே! ;) நான் நட்போட கலாய்ச்சா மட்டும் அது தப்பாக்கும்?!


அவ்வளவுதான்! :)

இந்த போரடிக்கும் பதிவு குறித்த மேற்படித் தகவல்கள் மற்றும் ஆதாரங்களுக்கு - கீழ் கண்ட பதிவுகளையும், அவற்றின் கீழ் இருக்கும் பின்னூட்டங்களையும் (பொறுமையாக Load More செய்து!) படித்துக்கொள்ளுங்கள்!
இந்த பதிவு யாரையாவது (கோ. ஸ்டீல் க்ளா & பரணி நீங்கலாக!) புண் படுத்தியிருந்தால் கீழே இருக்கும் டெம்ப்ளேட் மன்னிப்பை இலவசமாக பெற்றுக்கொள்ளவும்!

" மன்னிச்சுக்கோ நைனா! ;) மன்னிப்பு, எனக்கு தமிழ்ல பிடிச்ச ஒரே வார்த்தை - அவ்வ்வ்வ்! :-) "
.

கருத்துகள்

 1. இதுக்கெல்லாம் மூல காரணம் "இந்த ராஜ் முத்துக்குமார் இட்ட கமென்ட் எனும்போது திகிலடிக்கிறது. ஆட்டோவ வீட்டுக்கு அனுப்பிசிராதீங்க கார்த்திக். :-D

  விஜயன் சார் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ஆனால் அவரும் அவர் போடும் புத்தகமும் ஒன்று என்று நான் கருதுவதில்லை. புத்தகத்தை குறை சொன்னால் அவர் மீதே குறை சொன்னமாதிரி குதிப்பவர்களிடம் என்ன பேசி என்ன பயன் என்றுதான் என் கருத்தை மட்டும் சொல்லி விட்டு நடையை கட்டி விடுகிறேன். மீறி கலந்து கொண்டால் அன்று முழுவதும் பிரஷர் தான் ஏறும். இது என் அனுபவத்தில் (வேறு ஒரு தளத்தில்) கண்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //மீறி கலந்து கொண்டால் அன்று முழுவதும் பிரஷர் தான்//
   உண்மை :(

   நீக்கு
 2. B-) hai karthik! Take it easy ya! Fun with Comix only no mix with lollu! :-D ambuttum namma comix nalla vara uthavugirathuthane? Thats we want ya! Take care nanba!

  பதிலளிநீக்கு
 3. என் அனுபவத்தில்
  விவாதம்
  விதண்டாவாதமாக
  மாறும் போது
  விலகி கொள்வதே
  நல்லது என உணர்ந்துள்ளேன்!

  வீண்வாதங்களால்
  நமது நேரம்தான்
  வீணாகும்...

  பதிலளிநீக்கு
 4. விவாதங்களின் கருத்திற்காகவும் இந்த பதிவிற்காகவும் நீங்கள் எடுத்துகொண்ட நேரத்தையும் efforts களையும் யோசித்து பார்க்கிறேன்.. கண்டிப்பாக நீங்கள் காமிக்ஸ் வாசிக்கும் நேரத்தை விட அதிகமாக இருக்கும் தானே? மேலே Msakrates ன் கருத்துடம் முழுமையாக இசைக்கிறேன். ஒரு ஜாலியான காமிக்ஸ் பதிவரின் நேரம் இது போல் வீணடிக்கப்படலாமா? :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான், ரொம்பவே நேரத்தை வீணடித்து விட்டேன்! ஆனால், எனது தரப்பை விளக்க வேண்டிய கட்டாயத்தால் இதை செய்தேன்!

   //ஒரு ஜாலியான காமிக்ஸ் பதிவரின் நேரம் இது போல் வீணடிக்கப்படலாமா? :-) //
   படாது படாது! :D

   நீக்கு
 5. வாழ்த்துக்கள் கார்த்திக்.

  நானும் 3 வருடமாக ப்ளாக் எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால் என்னை ஒருவரும் திட்டமாட்டேன் என்கிறார்கள் :).

  பிரபல பதிவராக நீங்கள் மாறிவிட்டீர்கள் என்பதனை இந்த குறிவைத்து மற்றவர்கள் அடிப்பதில் இருந்து தெரிகிறது :)

  பழுத்த மரம் தானே கல்லடிப் படும். கலங்காதீர்கள்.

  இதுல காமெடியான மேட்டர் என்னன்னா உங்களை காமிக்ஸ் பதுக்கல்காரன்னு சொல்றது தான். என்கிட்ட இருக்கிற காமிக்ஸ் அளவுக்கு கூட இல்லாதவர் நீங்கள்....

  க்ளாசிக் காமிக்ஸ் வாங்க மாட்டேன் என்று எடிட்டரை மிரட்டியவர் யார் என்பதனை அனைவரும் அறிந்துள்ளோம். உங்களுக்குத் தெரிந்தும், அவரின் பெயரை உங்கள் பதிவில் குறிப்பிடாததே.. உங்களின் பெருந்தன்மை தெரிகிறது. இந்த குண நலனை விட்டுவிடாதீர்கள்.

  சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு.. அதுபோல பிரச்சினை இல்லாத பிரபல பதிவர் யார் இருக்கா சொல்லுங்க.. இது எல்லாம் கலைந்து போகும் மேகம் மாதிரி.. Constructive Criticism தான் காமிக்ஸை வாழவைக்கும். அது எடிட்டரும் நன்கு அறிந்ததே.. அது போதும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுக்கெல்லாமா வாழ்த்துவீங்க?! அய்யோ அய்யோ ;) பிரபல பதிவர், பழுத்த மரம்னு இல்லாததை எல்லாம் சொல்லி உசுப்பேத்தாதீங்க ராம்! :) :) :) ஏற்கனவே என் மேல எறிஞ்ச கற்களை பொறுக்கி, 'எறிகற்கள் கண்காட்சி' ஒண்ணு ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்! ;)

   நீக்கு
 6. இப்பத்தான் கவனிச்சேன்.. இவர்... ஒரு புத்தகம் வாங்கிட்டு ஒரு ஊரே படிக்கவேண்டும் அது தான் புத்தகத்தின் பயணம்னு சொல்லியிருக்காரு.. இத எல்லாரும் follow பண்ணினா.. 30 புத்தகம் கூட விக்காதுங்க.. ஒரு மாவட்டத்துக்கு ஒரு புத்தகம்.. காமிக்ஸ் வளர வேண்டும் என்று ஆசைப்படுகிறாரா இவர் என்று தெரியவில்லை... இத எடிட்டர் படிச்சாரா என்றும் தெரியவில்லை :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதானே, மாவட்ட மைய நூலகத்துக்கு எல்லாம் ஒரு காப்பி அனுப்பி வெச்சா போதுமே?! நமக்கும் செலவும் மிச்சம், வீட்டுல இடமும் மிச்சம்! ;) :D

   ஆனா பாருங்க, புத்தகம் ஒவ்வொருத்தர்கிட்டேயும் பயணிச்சு கடைசியா நம்ம கையில வந்து சேர்றப்போ நடுவுல அடிச்ச பின் மட்டும்தான் மிஞ்சும்! ;)

   சம்பந்தமில்லாமல் ஒரு கேள்வி:
   "நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்" அப்படின்னு ஒரு படம் வரப் போகுதாமே?! :)

   நீக்கு
  2. RAMG75
   ஊரே படிக்க சொல்லவில்லை, சில நண்பர்களுக்கும் சில உறவினர்களுக்கும் தான் கொடுப்பதாக சொன்னேன். நீங்கள் எடுத்ததை போல நானும் லிட்டறல்லாக எடுத்து கொண்டால் கூட தமிழ் நாட்டில் மொத்தம் 17149 ஊர்கள் உள்ளன அது இப்பொழுது விற்கும் முத்து காமிக்ஸ்-இன் அளவை விட பல மடங்கு அதிகம்.

   எந்த ஒரு படைப்பாளியும் அதிக வாசகரை தான் விரும்புவான். Circulation அடுத்த பட்சம் தான். பின் எதற்கு ஒரு கோடி வாசகர்கள் படிக்கும் என்று கூறுகிறார்கள் Circulation படி சில லட்சங்களை கூறவேண்டியதுதானே.

   எடிட்டர் இடம் நீங்களே கேளுங்கள். இப்பொழுது போடும் அளவு காமிக்ஸ்யை ஆறு கோடி தமிழனும் படித்தால் என்னவென்று. என்னை பொருத்தவரை மிகுந்த சந்தோசபடுவார் ஏன் என்றால் அவர் வியாபாரி அல்ல. RAMG75 basic தெரியாமல் என்றும் எதற்கும் கமென்ட் அடிக்காதீர்கள்.

   நீக்கு
 7. Hi Buddy
  It seems you have spent more amount of time for this then on ur kid LKG admission :) .Jokes apart i like to say take it easy and carry on with regular style in our comics blog and that will be the best way to prove that you are here to stay and any comments against you willn't affect in any way .
  When we are true to our self there is no need prove to anyone about it

  adios amigo .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ha ha ha, this street fight already has a "The end" card from my side! but not so with my kid's LKG admission!!! :)

   I will be back with a bang soon! ;)

   thanks for the support!!!

   நீக்கு
 8. சில மாதங்களே உங்கள் எழுத்துக்கள் மூலமாக உங்களைத் தெரியும்; என்றாலும், உங்கள் கருத்துக்களிலோ, உங்கள் விவாதங்களிலோ நான் எந்தத் தவறையும்/குறையையும் கண்டதில்லை; ஒன்றே ஒன்றைத் தவிர!
  சொல்ல நினைக்கும் கருத்தை சற்றே காட்டமாகக் கூறும் விதம்!

  மற்றபடி, குறை சொல்பவர்கள் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள்; அது அவர்களின் சுபாவம்! அதற்காக குறை, நிறைகளை நியாயமான முறையில் சுட்டிக் காட்டும் நம் சுபாவத்தையும் மாற்றிக் கொள்ள முடியாதே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //சொல்ல நினைக்கும் கருத்தை சற்றே காட்டமாகக் கூறும் விதம்!//
   குறைத்துக் கொள்கிறேன் விஜய்! :)

   நீக்கு
 9. Hum...rendu padivugalil rajni pada sandai katchi odi kondu irukiradu.computer pakkam ippodu poga mudiyatha sulnilaiyalum.cell il 150 commentsku mal parka mudiyatha karanithanalum ,mandaiya kulapadu.appo 400 comments vandadu sandaiyanal thana? enna kodumai karthik sir.comics ennum vattamo kurugiyadu.adil kudi irukum nam innum kuraivu.idil inda KULAYADI SANDAI manathi ennavo saigirudu.eni enna solluvadu. Ellam entha "PANCAYATHU PADAIYAPPA" barani varatha karanithanal than.COOL sir..take it easy...

  பதிலளிநீக்கு
 10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கமெண்ட் ஏனோ ஸ்பாமுக்கு போய் விட்டது, சரி செய்து விட்டேன்! :) உங்கள் வருத்தம் நியாயமானதுதான்! என் தரப்பில் முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது பரணி!

   நீக்கு
 11. கொஞ்சம் கொஞ்சமா படிச்சு முடிக்கவே ரொம்ப டைம் ஆயிருச்சுங்க.
  ஆனால் உங்கள் நியாயத்தை கூற மிகுந்த சிரத்தை எடுதுருகீங்க.
  எல்லோருமே காமிக்ஸ் ரசிகர்கள் தாங்க.
  ஹ்ம்ம் தேவை இல்லாத சண்டை.
  நீங்க அத முடிவுக்கு கொண்டுவந்தது மகிழ்ச்சி.

  நம்ம ராஜ் வலைப்பூவில் போட்ட கமென்ட் இங்க மீள் பதிவு செய்யறேன்.
  "இதில் மிகவும் வருத்தப்பட வேண்டிய உண்மை அங்கு உண்மையை கூறும் நண்பர்களுக்கு ஏற்படும் நிலையே.
  உள்ள உண்மையை கூறாவிட்டால் எப்படி தரம் மேலும் உயரும்.
  அதனை புரிந்து கொள்ளாமல் பலர் செயல்படும் விதம் வேதனை அளிக்கிறது."

  நாங்களும் Copy Paste பண்ணுவோம்ல :p

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொறுமையா படிச்சதுக்கு நன்றி கிருஷ்ணா! :)

   //நாங்களும் Copy Paste பண்ணுவோம்ல :p//
   ஹய்... துணைக்கு ஆள் கெடச்சாச்சு! ;) இனிமேல் உங்க காப்பி பேஸ்ட் மற்றும் டூத் பேஸ்ட் பதிவுகளை எடிட்டர் ப்ளாகில் எதிர்பார்ப்பேன்! :D

   நீக்கு
 12. எனக்கு இந்தப் பதிவை முழுதாகப் படிக்கவே (நீங்கள் எடுத்துப் போட்டுள்ள படிமங்கள்) பொழுது காணது போல உள்ளது.

  பொதுவாக வாதங்கள் விதண்டாவாதமாக மாறுவதைக் கண்டால் நான் ஓகே உங்கள் வழியே சரி என்று நினைத்துக் கொள்ளுங்கள் என்று ஒற்றை வரி இட்டு விலகிக்கொள்வேன்.

  ஆமாம் மன்னிப்பு கேட்டால் எங்களைச் சிறுமைப்பட்டவர்களாக அவர்கள் நினைத்தால் அவர்கள்தான் சிறுமைப்பட்டவர்கள்.

  சீர்ஸ் கார்த்திக். தொடர்ந்தும் பல காமிக்ஸ் பதிவுகளால் தாக்குங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இவர்களால் என் நேரமும் வீண், இதை எல்லாம் படிக்கும் நிலைக்கு ஆளாகிய என் நண்பர்களின் நேரமும் வீண்! :(

   //மன்னிப்பு கேட்டால் எங்களைச் சிறுமைப்பட்டவர்களாக அவர்கள் நினைத்தால் அவர்கள்தான் சிறுமைப்பட்டவர்கள்//
   சரியாக சொன்னீர்கள் மயூரேசன், இது குறித்து வெட்கப்படவேண்டியவர்கள் அவர்களே!

   //சீர்ஸ் கார்த்திக். தொடர்ந்தும் பல காமிக்ஸ் பதிவுகளால் தாக்குங்கள்.//
   நன்றி! :)

   நீக்கு
 13. காமிக்ஸ் நண்பர்களை ஏற்படுத்தும் என்று நினைத்தால் அது முழு நேர பகைவர்களை ஏற்படுத்துகிறதே... VERY BAD

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பகைவர்களோ இல்லையோ ஆனால், 'நண்பரே, நண்பரே' என்று வாய் நிறைய அழைப்பதால் மட்டும் நண்பர்கள் ஆகி விட மாட்டார்கள் என்பது மட்டும் தெரிகிறது! :)

   நீக்கு
 14. அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை நண்பா நட்புக்கு உள்ளேதான் இந்த காதல் மோதல் எல்லாம் சாத்தியம். அனைவரும் நம்ம நண்பர்கள் மட்டுமே. விளையாடி பார்க்கிறாங்க. அவ்வளவே!!!

  பதிலளிநீக்கு
 15. Sariyaga sonnir nanbar jon avergalay..ellorum kai kulukinga nanbargalay..

  பதிலளிநீக்கு
 16. டியர் கார்த்திக்,

  உங்களுடைய மற்ற பதிவுகளை படித்து நீங்கள் மிகவும் Humor sense & Take it easy policy character என்று நினத்திருந்தேன் !!!

  உங்களுடைய பதிவுகளை அதில் உள்ள நகைச்சுவைக்காகவே பல முறை படித்திருக்கிறேன்,

  இந்த பதிவு நீங்கள் எவ்வளவு சென்சிடிவ் மற்றும் எவ்வளவு வேதனை அடைந்துல்லிர்கள் என்று காட்டுகிறது,

  Do comeback with your usual writing and all this will be history :)

  Wishing to see more from you and hope this does not discourage you in any way.

  Suresh

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சுரேஷ்! அப்படி எப்போதும் இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் சில சமயம் சில விஷயங்கள் எல்லை மீறும்போது பொறுத்துக்கொள்ள முடிவதில்லை! ;) நான் இந்த பதிவில் கூறியுள்ளபடி தொடர்ந்து எழுதிக்கொண்டும், தேவைப்பட்டால் காப்பி பேஸ்ட் செய்து எடி ப்ளாகில் போட்டுக்கொண்டும்தான் இருக்கப்போகிறேன்! :) :) :) அதில் எந்த மாற்றமும் இல்லை!

   நீக்கு
 17. ஹ்ம்ம் என்ன நடக்குது இங்கே கொஞ்ச நாள் நான் வரலைனா இப்படியா !!

  just kiddin lets keep it going -- Reading n reading comics are for fun entertainment and passtime...

  what i do believe here is people started collecting books rather than reading and the ones who read expresses his critics openly -- thanks to network..

  See I think we two had difference of opinion when it came to SHSS while you didnt like much of it I kinda liked it to the core..

  But that doesnt create any gap between us as we never discussed about it within us.. thats how we have to proceed ok anyhow dont take these things much serious buddy these are here for us and us not for it...

  To all folks as i always said pls do respect everyones view and dont probe much in to it.. afterall we are here to enjoy comics and we are united by a single word -- comics.

  பதிலளிநீக்கு
 18. ##########SS-01: சண்டையை ஆரம்பித்து வைத்தவர் ஹஜன்!#########
  !!!!!!!!!!!!!Raj Muthu Kumar SNovember 14, 2012 10:25 PM
  இதுக்கெல்லாம் மூல காரணம் "இந்த ராஜ் முத்துக்குமார் இட்ட கமென்ட் எனும்போது திகிலடிக்கிறது. ஆட்டோவ வீட்டுக்கு அனுப்பிசிராதீங்க கார்த்திக். :-D !!!!!!!!!!!!!!!!!!!!

  இதோ ஒரு அப்ருவர் நான் தான் முதல் காரணம் என்று உங்கள் ப்ளாக்லேய சொல்லி விட்டார். என் மீது சுமத்தப்பட்ட முதல் குற்ற சாட்டே பனால். Raj Muthu Kumar S க்கு ஆதரவாக சில கருத்துகளை கூடுதலாக சொன்னேன் அவ்வளவுதான்.


  ###########SS-02: அவர் சொன்ன செல்பிஷ் என்ற சொல்லை வைத்தே சூடாக பதில் சொன்னேன். பிறகு தன்மையாகவும் பதிலளித்தேன்! ஆனால் எதற்கும் பதில் சொல்லாமல் நழுவி விட்டார் மனிதர்!!!#############

  திரும்ப ஒரு முறை நான் கூறிய பதிலை படித்து பார்க்கவும்.
  ****ஒருசிலரே செல்பிஷ் ஆக பதுக்குவதும் சேகரிப்பதும் அவர்களே மறுபதிப்பு வேண்டாமென்று கூச்சல் இடுவது வாடிக்கை. காரணம் அவர்கள் பொக்கிஷம் என நினைப்பது மதிப்பிழந்துவிடும்.******

  “ஒரு சிலரே செல்பிஷ்” என்று தான் கூறினேன். காமிக்ஸ் சேகரிப்பாளர்கள் அனைவரும் என்று கூறவில்லை. நீங்கள் என்றோ உங்கள் பெயரை குறிப்பிட்டோ கூறவில்லை. நீங்களாகவே உங்களை கூறுவதாக எடுத்துகொண்டு சூடாகிவிட்டீர்கள். அதற்க்கு நான் பொறுப்பு அல்ல.  ###########SS-09: அப்புறம் ஹஜன் அவர்கள் என்னை மறைமுகமாக தாக்கி எழுதியது. என் ப்ளாகில் என் பதில்களுக்கு பதில் அளிக்காமல் நழுவியது நினைவிருக்கலாம்! ;) இருந்தாலும் அவருக்கு நேரடியாக பதில் அளித்தேன் - மிகப் பெரிய தவறு!!!###########

  “காபி பேஸ்ட்” செய்ததை தான் தவறு என்று கூறினேன். உங்களை தாக்கி எழுதவில்லை. மற்ற படி உங்கள் பெயரை குறிப்பிடாதது தேவையில்லை என்று எண்ணியதால்தான்.

  மறுபடியும் இப்பொழுது நீங்கள் செய்த இன்னொரு தவறை சுட்டி காட்டுகிறேன். இன்னொரு ப்ளாக் -ல் இருந்து எதையும் அவர்கள் அனுமதி இல்லாமல் நமது ப்ளாக் -ல் எடுத்து போடுவதும் தவறுதான். (ஏகப்பட்ட நேரம் எடுத்து பிரிண்ட் ஷார்ட் போட்டுள்ளீர்கள்.)


  ###########SS-12: எனக்கு பதில் சொல்லாமல், ஏட்டிக்கு போட்டியாக சில கேள்விகள் கேட்டுவிட்டு மீண்டும் நழுவிய ஹஜன்!##########

  நழுவவில்லை. உங்களை போல இன்டர்நெட்டில் அதிக நேரம் செலவிட எனக்கு வசதிகளோ, வாய்ப்புகளோ, மற்றும் நேரமோ அதிகம் இல்லை. விஜயன் சார் ப்ளாக்-ல் கூட மொத்தமே நான் பதிவிட்டது ஏறக்குறைய பத்துதான் இருக்கும். John Simon C, Tamil Comics - SoundarSS அவர்கள் ப்ளாக் கூட நான் செல்வதுண்டு ஆனால் இன்று வரை பதிவிட்டதில்லை.


  ########விஜயன் அவர்கள் நூறு ரூபாய்க்கு புதிய புத்தகம் வெளியிட்டால், பத்து ரூபாய் புத்தகம்தான் வேண்டும் என்று ஹஜன் அடம் பிடிப்பார் என்பது தனிக்கதை!##########

  இதை நினைவூட்டியதற்கு நன்றி. இதற்க்கு விஜயன் அவர்களுக்கு நான்
  விரைவில் பதில் கூறுகிறேன். எதிர் பாருங்கள்?

  அப்புறம் எடிட்டருக்கு சொன்ன அதே வார்த்தைகள் உங்களுக்கு

  இன்டர்நெட்டில் பதிவிடுவதர்க்கு சில எதிக்ஸ் (சுய கட்டுப்பாடு) உள்ளது.


  அதை மீறுபவர்களை சுட்டிக்காட்ட உரிமை உள்ளது.


  அந்த உரிமையை பதிவிடுவதர்க்காக உங்களிடம் அனுமதி கோரி மல்கி மன்றாட போவதில்லை.


  அதே சமயம் என்னுடைய கருத்துக்கள் இங்கு எப்படிபட்டவையாக இருந்தாலும் அதை நீக்குவதற்கு உங்களுக்குள்ள அதிகாரத்தை நான் மறுக்கவும் இல்லை.


  அப்படி நீங்கள் நீக்கினால் அதற்காக வருத்தப்பட போவதுமில்லை, உங்களை வஞ்சிக்கபோவதுமில்லை.


  கடைசியாக
  John Simon CNovember 16, 2012 5:04 PM
  அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை நண்பா நட்புக்கு உள்ளேதான் இந்த காதல் மோதல் எல்லாம் சாத்தியம். அனைவரும் நம்ம நண்பர்கள் மட்டுமே. விளையாடி பார்க்கிறாங்க. அவ்வளவே!!!
  ----நூறு சதவிதம் உண்மை.


  -------- Take it easy.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஜன், இந்த விவகாரத்தில் நான் ஏற்கனவே எக்கசக்க நேரம் செலவழித்து விட்டேன்! எனவே இனிமேல் நீண்ட விளக்கமளிக்கும் பதில்கள் இராது! நான் மேலே சொன்னதையே மீண்டும் உங்களுக்கு சொல்கிறேன்:

   //எதிக்ஸ் குறித்து யாரும் எனக்கு லெக்சர் கொடுக்கத் தேவையில்லை! முதலில் உங்களிடம் அது இருக்கிறதா என்று சுயபரிசோதனை செய்யுங்கள்!//

   //John Simon CNovember 16, 2012 5:04 PM
   அனைவரும் நம்ம நண்பர்கள் மட்டுமே. விளையாடி பார்க்கிறாங்க. அவ்வளவே!!!//

   இதற்கு உங்களின் பதில்:
   //----நூறு சதவிதம் உண்மை.//

   இவை உண்மையான வார்த்தைகளாக இருந்தால் எனக்கும் மகிழ்ச்சியே! :)

   take care buddy!

   நீக்கு
  2. நடந்த சம்பவங்களெல்லாம் ஒரு பரபரப்பான டெக்ஸ் வில்லர் கதையை படித்ததைப்போன்ற பிரம்மையை ஏற்படுத்திவிட்டது. முடிவில் இதமான திருப்பம்; சுபம். தமிழ்ப் படங்களில் க்ளைமாக்ஸில் போலீஸ் வருவதைப்போல, நம் போலீஸ் நண்பர் ஜான் சைமனின் தலையீட்டால் இங்கும் எல்லாம் சுகமாக முடிந்திருக்கிறது.

   மகிழ்ச்சி நண்பர்களே!

   நீக்கு
  3. //தமிழ்ப் படங்களில் க்ளைமாக்ஸில் போலீஸ் வருவதைப்போல//
   கையில் Gun-னும், தோளில் Son-னும் தாங்கி ஜான் உங்களை துரத்தப் போகிறார், ஜாக்கிரதை! ;)

   நீக்கு
  4. அன்பே வெல்லும் நண்பர்களே! நமக்குள் வரும் கருத்துகள் வெறுமே விடப்படாது! உங்கள் கருத்துகள் அனைத்தும் உரைகல்லாக விளங்கி உலக தரம் மிக்க அடுத்தடுத்த படைப்புக்களாக அடுத்த வருடம் மலர போவது கண்கூடுதானே!
   நடப்பவை நல்லதாகவே அமையும்! ஹாப்பியா இருப்போம்! ஜாலியா வாழ்வோம்! அமைதி, சமாதானம், அன்பு என்றும் நிலைக்கட்டும்!! ஹி! ஹி! ஹி! ஹி! நானெல்லாம் சும்மா வந்து குட்டையை குழப்பிட்டு போற ஆசாமி திரு விஜய் அவர்களே! லக்கி லூக் மாதிரி ஆளு நண்பா! டெக்ஸ் வில்லர் அளவுக்கு ஏத்தி விட்டுடிங்கன்னா அடுத்த கும்மாங்குத்து கண்டிப்பா எனக்குதான்!! நன்றி ஹஜன் அவர்களே! அந்த பத்து ரூபாய்க்கு பதில் முப்பது ரூபாய்லயாவது காமிக்ஸ் வர மாதிரி சொல்லி வைப்போம்! நம்ம ஆசிரியர் அதையும் யோசித்தே இருக்கிறார்! அடுத்தடுத்த அதிரடிகளுக்கும் வாண வேடிக்கைக்கும் தயாராக இருங்கள்! ரொம்ப பேசறேனோ??? எப்போவாவதுதானே நண்பா வர முடியுது!! காவல் பணி இனிமையாக போய் கொண்டு இருக்கு! அப்புறம் நேரமிருந்தா வந்து கடலை உடைக்குறேன்! ஹஜன் அவர்களே மிக்க நன்றி! உங்க மெயில் ஐடி தேடி விட்டு கிடைக்காததால் இங்கேயே நன்றி சொல்லிடுறேன்! போயிட்டு பிறவு வாறன்! BYE!

   நீக்கு
 19. சரி சரி வாங்க நண்பர்களே! எல்லோரும் ஒரு கப் டீ அருந்தலாம் ;-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு ஒரு டீ; துளியூண்டு பால் சேர்த்து.

   அதுவும் உங்க செலவில்.

   சென்னை புத்தகக் கண்காட்சியில்.

   நீக்கு
 20. கண்டிப்பாக நண்பர் ஹஜன் அவர்களே! நண்பர் ஈரோடு விஜய் அவர்களே! உங்களை இங்கே கண்டிப்பாக எதிர்பார்க்கிறேன்! நண்பர் கார்த்திக் அவர்களே! பெங்களூரு பக்கம்தான்! நீங்களும் வந்தா கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது என் கணிப்பு!வாங்களேன்!

  பதிலளிநீக்கு
 21. அடுத்த பதிவு எப்போ நண்பா?? காத்திருக்கிறோம்! உங்க பாணியில் எதையாவது கொடுங்க! ஆர்வம் தாங்காமல் --உங்கள் இனிய நண்பன் ஜானி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் பாணியில் இன்னொன்னா?! மறுபடியும் மொதல்ல இருந்தா?! :) :) :)

   நீக்கு
 22. அப்பா எதோ ஒரு action இங்கிலீஷ் படம் புல் DTS effectla பாத்த மாதிரி இருக்கு :)

  பதிலளிநீக்கு
 23. அப்பா! இவ்வளவு சண்டை போட்டு இருக்கிறீர்களா?சரிதான்!

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia