மறக்கப்பட்ட மனிதர்கள் - 4 - தொடரும், முற்றும்!

"மறக்கப்பட்ட மனிதர்கள்" தொடர் பதிவின், நிறைவுப் பகுதி இது! தொடரின் முதல் பாகத்தில், கதை சார்ந்த வரலாற்றுத் தகவல்களையும்; இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களில், முழுக் கதையையும் பார்த்தோம்; இந்தப் பதிவில், கதை பற்றிய எனது விமர்சனத்துடன், இந்தத் தொடருக்கு மங்களம் பாடி விடுவோம்! பதிவில் நிறைய ஸ்பாய்லர்கள் இருப்பதால்... read at your own risk! :-)

கதையின் துவக்கப் பக்கங்கள், இந்த இதழின் முன்னட்டை போலவே தூங்கி வழிந்தாலும்; தொடரும் பக்கங்களில் மெதுவாக வேகமெடுக்கும் இக்கதை, கடைசி வரை அதே மிதமான வேகத்தில் முன்னும் பின்னுமாய் நகர்ந்து, இறுதியில் யதார்த்தமான ஒரு முடிவுடன் சட்டென்று முடிகிறது!

ஒரு தாயின் தவிப்பையும், யுத்தத்தின் வலிகளையும் பதிவு செய்யும் கதை என்ற பதிப்பாசிரியரின் அறிமுகத்தைத் தாண்டி -  மனித உணர்வுகள் / உறவுகள், கண்ணுக்குப் புலனாகாத அரசியல் / யுத்த வன்முறைகள், போராட்டக் குணம், கடமையுணர்வு, கொள்கைப் பிடிப்பு, தலைமுறை இடைவெளி - என பலவிதமான உணர்வுகளும், சூழல்களும் ஒன்று சேர்கையில் நேரும் உளப் போராட்டங்களின் சித்தரிப்பாக இக்கதை அமைந்துள்ளது!

"எதிரி நாட்டு வீர்களின் சடலங்களையும், உடைமைகளையும் முப்பது வருடங்களுக்கு வியட்நாம் அரசு பேணிப் பாதுகாக்குமா?!"; "வலோனை ஏன் ஓட விட்டு வேட்டையாட வேண்டும்?!" - என்று சில கேள்விகள் எழத்தான் செய்கின்றன! ஆனால், கதாசிரியரின் நோக்கம் தன் தாய்நாட்டின் (ஃபிரான்ஸ்) போர்க் குற்றங்களை. ஒரு காமிக்ஸ் வடிவத்தில் வெளிக்கொணர்வது என்பதாக இருப்பதால் இந்த லாஜிக் மீறல்கள் பெரிதாகத் தெரிவதில்லை!

வாழ்வில் சாதித்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் இருக்கும் ரிப்போர்ட்டர் வலோன், அவரின் வயதுக்கு மீறிய பணிகளை மேற்கொள்ளுவதாக காட்டப் பட்டாலும், அவர் ஒரு வழக்கமான நாயகராக சித்தரிக்கப் படவில்லை! தடைகளைக் கண்டு தளர்ந்து போகும் சராசரி மனிதராகவே காட்டப் படுகிறார்! துவண்டு நிற்கும் தருணங்களில், பிறர் கூறும் ஆறுதல் வார்த்தைகளே அவர் நம்பிக்கையை துளிர வைக்க போதுமானதாக இருக்கின்றன! அதே போல, ஒன்றைச் செய்யாதே எனும் போது தான், அதை செய்தே தீர வேண்டும் என அவருக்குத் தோன்றும் உத்வேகம் - மனித இயல்பான, எதிர்ப்புக் குணத்தை பிரதிபலிக்கிறது!

அடிமை நாட்டின் மக்களை, மனிதாபிமானம் இன்றி நடத்துவது; ஆதிக்க நாட்டின் மக்களில் சிலரே, அதற்கு எதிராக போர்க்கொடி உயர்த்துவது; ஒரு சாராரால் நாயகனாகப் பார்க்கப் படும் ஒருவன், மறுமுனையில் துரோகியாகப் பார்க்கப் படுவது; என விதவிதமான முரண்பாடுகளை, வரலாற்றுத் தகவல்களுடன் கோர்த்துத் தருகிறார் கதாசிரியர் ஜிரௌட்! அழுத்தமான இந்தக் கதையின் தன்மைக்கேற்ப, உயிரோட்டமான ஓவியங்களை தீட்டியுள்ளார் ஓவியர் லாக்ஸ்!

காணாமல் போன சிப்பாய் ஹென்றியைச் சுற்றியே இந்தக் கதை பின்னப் பட்டிருந்தாலும், தன்னுடைய கோட்பாட்டிற்காக உயிர் இழந்த அவன் மேல் பெரிதாக ஒரு பிணைப்பு நமக்கு ஏற்படுவதில்லை! மாறாக, கடமைக்காக தனது மனைவியையும், மகளையும், நட்பையும் - இறுதியாக தனது உயிரையே பறிகொடுக்கும் ரிப்போர்டர் வலோன் தான் நம் மனதில் தங்குகிறார்!

நேதாஜியின் சுவடுகளைப் பின்பற்றி, 'அவர் மாயமாக மறைந்தது எப்படி?' என்பதை புலனாய்வு (புனைவாய்வு) செய்யும் ஒரு கிராபிக் நாவல் வெளிவந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் எழுந்ததைத் தவிர்க்க முடியவில்லை! தேடிப் பார்த்ததில், அப்படி ஒரு ஆய்வு நூல் உண்மையாகவே வெளிவந்திருக்கிறது என்பதும் தெரிய வந்தது - India's Biggest Cover Up! இந்திய அரசாங்கத்தால் பல உண்மைகள் மூடி மறைக்கப்பட்டுள்ன என்பதை, ஆதாரங்களுடன் அந்த நூலாசிரியர்  விளக்கியுள்ளாராம்!

ஒ.சி.சு. இதழை பொறுமையாக மறுவாசிப்பு செய்த போது, பல ஓவிய நுணுக்கங்கள் தென்பட்டன! அவற்றில் சிலவற்றை கடந்த இரு பதிவுகளில் பகிர்ந்திருந்தேன். இன்னொரு உதாரணம்: முதல் பக்கத்தில் - 'வியட்நாமில் நடந்தது என்ன?' என்ற கேள்வியுடன் ட்ரக் செல்லும் காட்சி ஒன்று காட்டப் பட்டிருக்கும் அல்லவா? அதே காட்சி கதையின் பிற்பகுதியில் விவரிக்கப்படும் (பக்கம் 105 - முதல் பேனல்)!
ஒரு க்ளைமேக்சின் சுவடுகளில்...!:
இனி பலத்த சர்ச்சைக்குள்ளான, கதையின் க்ளைமேக்ஸ் பகுதிக்குச் செல்லலாம்! எனக்குத் தெரிந்து - ஒரு காமிக்ஸ் கதைக்கு, ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்தவாறு ஒரு முடிவை வைத்துப் படித்தது இதுவே முதல்முறை! :-D

இந்தக் கதையை மொழிபெயர்த்த ஆசிரியர் விஜயன் - கதையின் இறுதியில் வலோனின் கண்டுபிடிப்பை ரேடியோவில் ஒலிபரப்பச் செய்ததாலும்; கொலையாளியைப் பார்க்கும் வலோனை, "மிஸ்டர்?" என்று வினவ வைப்பதற்குப் பதிலாக, "சார்" என்று அழைக்க வைத்ததாலும் - கதையின் முடிவில் நமக்கு குழப்பம் நேர்ந்தது போதாதென்று; கதையைப் படித்த ஒவ்வொரு வாசகரும், தங்களுக்குப் பிடித்தவாறு விதவிதமான முடிவுகளை வைத்து அழகு பார்த்தனர் (நான் உட்பட!) ;-)

கதவைத் தட்டியவர் யார் என்ற அந்த மில்லியன் டாலர் கேள்விக்கு:
 - வலோன் தேடிய சிப்பா...யே அவர் தான் சார்!
 - வலோனின் மகளை, தன் மகனுக்காக பெண் பார்க்க வந்த பக்கத்துக்கு வீட்டு பெரியவர்!

என்ற ரீதியில் வந்த பலதரப்பட்ட பதில்களை கேட்டுக் கேட்டு இறுதியாக, "என்ன, கதவைத் தட்டினியா?" என்று தொடர்ந்து புலம்பும், பரிதாப நிலைக்கு ஆளானேன்! :-D அதற்கு பழி வாங்கும் விதமாகத் தான், இந்த நாலு பார்ட் பதிவைப் போட வேண்டியதாகி விட்டது! ;-)

கட்டுரை எழுதுவது, கதை சொல்லுவது போன்ற எழுத்து சார் திறமைகளை, வளர்த்துக் கொள்ள முயற்சிக்கும் சுயநலமும், இதன் பின்னணியில் இருந்தது! :-D "ஒரு காமிக்ஸை ஸ்க்ரிப்டாக எழுதுவது, போர் அடிக்கும் வேலை!" என்பது எனக்கும்; "அதைப் பொறுமையாக படிப்பது, அதை விட போர் அடிக்கும் வேலை!" என்பது உங்களுக்கும் - இந்தத் தொடரின் மூலம் தெரிய வந்திருக்கிறது என்றால் அது மிகை இல்லை தானே?! :P

ஒ.சி.சு. இறுதிக் காட்சியில், கொலையாளியின் நோக்கம் வலோனைக் கொலை செய்வதே என உறுதியாக நம்புகிறேன்! அதற்கான காரணங்களாக நான் கருதுவது, பின்வருமாறு:

1) பெட்ரோசியன், நியூரித் தப்பிய தகவலை உடனடியாக 'கார்பின்' என்பவருக்கு தெரிவிப்பது, ஆரம்பக் கட்டத்திலேயே வாசகனுக்கு காட்டப் படுகிறது! அதற்கடுத்த காட்சியிலேயே நியூரித் சாலை விபத்தில் இறக்கிறார்!

2) அது விபத்து அல்ல, கொலை என்பதை சித்திரங்கள் மூலம் ஓவியர் உணர்த்துவார்: கொலையாளி தனது காரின் நம்பர் பிளேட்டை மாற்றிக் கொண்டிருப்பான், கார் சீட்டில் நியூரித்தின் புகைப்படம் காணப்படும்!

3) ஹென்றி என்ற பெயரில் வலோனிடம் பேசும் மர்ம நபர், வேறொரு தருணத்தில் அந்தக் கொலையாளியிடமும் பேசிக் கொண்டிருப்பார்! இருவரும் ஒருவரே என்பது அந்தக் காட்சியில் தெளிவாகிறது!

4) அதே மர்ம நபர் தான், வலோன் வீட்டு தொலைபேசியை ஒட்டுக் கேட்கும் ஏற்பாட்டினையும் செய்கிறார்! அதிகாரம் மிக்க பதவியில் இருக்கும் கார்பின் போன்ற ஒருவரால் மட்டுமே, குறைந்த அவகாசத்தில் (6 மணி நேரம்) அதைச் செய்து முடிப்பது சாத்தியமாகும்!

5) ஒட்டுக் கேட்பதோடு நில்லாமல் தனது அடியாட்கள் மூலமாக வலோனைத் தடுக்கும் முயற்சிகளையும் அவர் மேற்கொள்கிறார்; தடயங்களை அழிக்க, தொழில்முறை கொலையாளி மூலமாக கொலைகள் செய்யவும் துணிகிறார்! அவர் உண்மையாகவே ஹென்றியாக இருந்திருந்தால், தனது தாயையோ அல்லது மகள் கிம்-சியையோ முதலிலேயே சந்தித்திருக்க வேண்டும்!

6) கிம்-சியிடம், ஹென்றி என்ற பெயரில் பேசும் கொலையாளி; வலோனிடம் ஹென்றி என்ற பெயரில் பேசிய மர்ம நபரால் ஏவப்பட்டவன்; இவர்கள் செய்யும் இந்த ஆள் மாறாட்டம் - அவர்கள் இருவருமே ஹென்றி அல்ல என்பதை தெளிவாக்குகிறது! தவிர, தனது அன்புக்குப் பாத்திரமான மேலதிகாரி குய்ச்சார்ட்டைக் கொல்ல வேண்டிய அவசியங்கள் ஏதும் ஹென்றிக்கு  கிடையாது!

7) வலோன் கார்பினைச் சந்திக்கும் போது அவரின் முழு உருவமும் வாசகனுக்கு காட்டப் படுகிறது! மர்ம நபரின் உடைகளும், ஹேர் ஸ்டைலும் கார்பினோடு வெகுவாக ஒத்துப் போகின்றன! மர்ம நபரின் மேல்மண்டையில் சிறு வழுக்கை காணப் பட்டாலும், கார்பினைக் காட்டுகையில் அந்த வழுக்கை தெரியாத கோணங்களில் மட்டுமே அவரை ஓவியர் வரைந்திருப்பார்! மர்ம நபருக்கு மீசை இல்லாதது போல் பின்புறம் இருந்து தோன்றுவது, கார்பினின் ஹிட்லர் பாணி சிறிய மீசையோடு ஒத்துப் போகிறது! கதையின் இறுதிவரை சஸ்பென்சை கொண்டு செல்லும் நோக்கில், படைப்பாளிகள் இதை வேண்டுமென்றே செய்திருக்கலாம்!
8) "மோக் டென் ராணுவ முகாமில் ஹென்றி நிகழ்த்திய சாகசம்" பற்றி கிம்-சி வலோனிடம் கூறியிருந்தது - "அந்த முகாமின் கமாண்டிங் ஆஃபிஸராக இருந்தவர் கார்பின்" என்ற புஜாலின் வாக்குமூலத்தோடு ஒத்துப் போகிறது! மேலும், புற்றுநோயின் பாதிப்பால் - வாழ்வின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் புஜாலுக்கு, வலோனிடம் பொய் பேசிட வேண்டிய அவசியங்கள் ஏதும் இல்லை - அதுவும், அவர் மீதே கொலை முயற்சி நடந்த பிறகும்!

9) ஆவணப் படம் வெளியாவதை அரசாங்கம் தடுத்திருந்தாலும்; பதவிக் காலம் முடியும் முன்னரே, பணி நீக்கம் செய்யப் பட்டதால் நேர்ந்த அவமானத்திற்கு பழி தீர்க்கும் விதமாகவும், இவ்வுண்மை வலோன் மூலமாக வேறு வழிகளில் வெளிப்படும் சாத்தியங்களை தவிர்க்கவும் - கொலையாளியை அவர் மீது கார்பின் ஏவி விடுகிறார் என்பது புலனாகிறது!

10) வலோனைக் கொலை செய்ய வேண்டிய கட்டாயம் கார்பினுக்குத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பது தெளிவு! வலோனைக் கொல்வதற்காக, அதே கொலையாளி அனுப்பப் பட்டிருப்பதால் - கொலையாளியை ஏவிய மர்ம நபரும் கார்பினும் ஒருவரே என்பதும் தெளிவாகிறது!
( முடிந்தே விட்டது! )

முற்றும், தொடரும்: இந்தத் தொடர் இத்துடன் முடிவுற்றாலும், இதைச் சார்ந்த இன்னொரு தொடர் விரைவில் துவங்கும்! ;-)

கருத்துகள்

  1. A very detailed analysis indeed. I didn't know what else to say. I read the story once.I didn't go much detail into it.but guys are taking it very seriously..4 posts..and spin off series yet to come...all the best

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //but guys are taking it very seriously..4 posts..and spin off series yet to come//
      It is not that I was very very impressed with this GN! You will understand the reason behind such a exhaustive post when the next series starts! ;)

      நீக்கு
  2. அடுத்த பதிவு நாளையே வரும்போல தெரிகிறதே... புத்தகத்தின் இன்னொரு part-ஆன தமிழ் பெயர்ப்பில் நடந்துள்ள ஊழல்களையும் அக்கிரமங்களையும் தோலுரித்துக்காட்டி...

    ஏற்கெனவே நம்முடைய சின்னஞ்சிறிய காமிக்ஸ் உலகம் நோயிலும் இயலாமையிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போது நமக்குத்தேவை டாக்டர்களே தவிர வக்கீல்களல்ல. புரியும் என்று நினைக்கிறேன்! :D

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அடுத்த பதிவு நாளையே வரும்போல தெரிகிறதே... புத்தகத்தின் இன்னொரு part-ஆன தமிழ் பெயர்ப்பில் நடந்துள்ள ஊழல்களையும் அக்கிரமங்களையும் தோலுரித்துக்காட்டி... //
      இப்படி ஒரு தீர்ப்பை எழுதும் அரிய வாய்ப்பிற்காக, நான்கு பாகங்களாகக் காத்துக் கிடந்தீர்களோ? ;) ஆனால், அடுத்து வரப் போகும் பதிவுக்கான உங்களின் தீர்க்க தரிசனம் தவறு! ஏனென்றால், அது அநேகமாக அடுத்த பதிவின், அடுத்த பதிவாகத் தான் வரவிருக்கிறது! காமிக்ஸ் டாக்டர்களின் தேவையும், காமிக்ஸ் வக்கீல்களின் அநாவசியமும் ஒருபுறம் இருக்கட்டும்! ஆனால், காமிக்ஸ் நீதிபதிகளுக்கு மட்டும் இங்கே பஞ்சமே இல்லை போல! :D

      //ஏற்கெனவே நம்முடைய சின்னஞ்சிறிய காமிக்ஸ் உலகம் நோயிலும் இயலாமையிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போது நமக்குத்தேவை டாக்டர்களே தவிர வக்கீல்களல்ல//

      "நான் தொடர்ந்து எழுதி வரும் தமிழ் காமிக்ஸ் சார்ந்த பதிவுகளால் - தமிழ் காமிக்ஸ்களின் மீது, புதிய வாசகர்களுக்கு சிறிய அளவில் கூட விழிப்புணர்ச்சியும், ஈடுபாடும் ஏற்படாது";

      என்பதும்,

      "சின்னஞ் சிறிய காமிக்ஸ் உலகத்தினுள்ளே இருக்கும், அதை விட அளவில் சிறிய கிராஃபிக் நாவல் ரசனை வட்டத்திற்கு ஆள் சேர்த்திட, என்னுடைய இந்த நான்கு பாக தொடர் சற்றும் உதவி செய்திடாது"

      என்பதுமே அத்தகைய நீதிமான்களின் அவசரத் தீர்ப்பாக இருக்குமானால், அதைப் பற்றி நான் அலட்டிக் கொள்ளப் போவது கிடையாது! ;)

      //புரியும் என்று நினைக்கிறேன்! :D//
      யாருக்கு புரிய வேண்டும் என்பது தான் கேள்வி! :D

      நீக்கு
    2. Continuing..

      கார்த்திக், சென்ற பதிவைப்பார்த்த போது கதையைக் "கண்டுபிடிப்பதில்" இருந்த ஆர்வம் தென்பட்டது - that's appreciable. ஆனால் இந்த ஒட்டுமொத்த 4+ தொடர்பதிவு படலத்தைப் பார்க்கும்போது மொழி பெயர்ப்பு மற்றும் type Setting-ல் உள்ள குறைகளால் எப்படி கதை மாற்றி சொல்லப்பட்டது என்பதை அறிவிக்கும் aim தூக்கலாகத் தெரிகிறது.

      Public-ஆக அதை சொல்வதன் மூலம் வாசகர்கள் பயன்பெறுமளவுக்கு நமது industry முன்னேறிவிடவில்லை. வேண்டுமானால் Private-ஆக ஆசிரியரை கும்முவதே சிறந்தது. Be straight - we are spending a lot of energy on unnecessary stuff here!

      நீக்கு
    3. என் முந்தைய பதிலுக்கு, உங்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை என்றாலும், here goes:

      //ஆனால் இந்த ஒட்டுமொத்த 4+ தொடர்பதிவு படலத்தைப் பார்க்கும்போது மொழி பெயர்ப்பு மற்றும் type Setting-ல் உள்ள குறைகளால் எப்படி கதை மாற்றி சொல்லப்பட்டது என்பதை அறிவிக்கும் aim தூக்கலாகத் தெரிகிறது.//

      As usual... அவசரமான, தவறான ஒரு ஜட்ஜ்மென்ட்! :) நான்கு பதிவுகளையும் மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்; அடுத்து வரவிருக்கும் பதிவுகளையும் பொறுத்திருந்து படியுங்கள் - பிறகு நிதானமாக ஒரு முடிவுக்கு வாருங்கள்!

      //Be straight - we are spending a lot of energy on unnecessary stuff here!//

      ஒருவரின் பார்வையில் வேஸ்ட் ஆஃப் எனர்ஜியாகத் தெரிவது, பிறருக்கு மிகவும் யூஸ்புல் ஆன விஷயமாகத் தெரியலாம் அல்லவா?! :)

      நான், வலைபூக்களில் அளவுக்கதிகமாக பின்னூட்டங்கள் இடுவதைத் தவிர்த்ததும், வாதங்கள் செய்வதைக் குறைத்துக் கொண்டதும் எனக்கு அவை வேஸ்ட் ஆஃப் எனர்ஜியாகத் தெரிந்ததினாலேயே! ஆனால், உங்கள் பார்வையில் அப்படியல்ல இல்லையா?! ;)

      நீக்கு
    4. // ஒருவரின் பார்வையில் வேஸ்ட் ஆஃப் எனர்ஜியாகத் தெரிவது, பிறருக்கு மிகவும் யூஸ்புல் ஆன விஷயமாகத் தெரியலாம் அல்லவா?! :) //

      Off topic:

      Aim இல்லாத hobby எதுவுமே waste of energy கிடையாது (Ex: அரட்டை). அது ஒரு way of living. ஆனால் ஒரு strategy-aim வந்துவிட்ட பிறகு result மிகவும் முக்கியம் - least possible efforts and right way of approach are essential in such case.

      நீக்கு
    5. //Aim இல்லாத hobby எதுவுமே waste of energy கிடையாது (Ex: அரட்டை)//

      Again similar answer to that:
      ஒருவரின் பார்வையில் ஹாபியாகத் தெரிவது, பிறருக்கு வேஸ்ட் ஆஃப் எனர்ஜியாகத் தெரியலாம் அல்லவா?! அளவுக்கு மிஞ்சிய அரட்டை என்னைப் பொறுத்த வரை நிச்சயமாக வேஸ்ட் ஆஃப் எனர்ஜி தான்! நானும் செய்ததுண்டு, கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டே வருகிறேன்! :)

      //ஆனால் ஒரு strategy-aim வந்துவிட்ட பிறகு result மிகவும் முக்கியம் - least possible efforts and right way of approach are essential in such case//

      On topic:
      என்னுடைய இந்தத் தொடர் பதிவுகளுக்கு ஒரு Aim இருக்கிறது!

      நீக்கு
  3. யப்பாடி!!.... பொறுமையின் புகழிடமே! புலனாய்வுப் புலியே! தமிழ்தாயின் உயிரெழுத்தே! உண்மையான கதாசிரியர்கூட இவ்வளவு யோசித்திருப்பாரா தெரியலையே?!....

    ஆச்சர்யப்பட வைக்கிறது உங்கள் உழைப்பும், தேடலும்!
    அடுத்த பதிவு என்னவாக இருக்குமென்று யூகிக்க முடிகிற அதே சமயம் "இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?" என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை! ;)

    பேசாம நீங்க CBI டிபார்ட்மெண்டில் சேர்ந்திருக்கலாம்னு கூட தோனுது கார்த்திக்! ;)

    சரி, சரி! சட்டுபுட்டுனு அடுத்த பதிவையும் போட்டு ஆகவேண்டியதை(!) கவனிங்க பாஸ்! ;)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பொறுமையின் புகழிடமே! புலனாய்வுப் புலியே! தமிழ்தாயின் உயிரெழுத்தே!/
      லயன் ப்ளாக் பூசாரியே, தமிழ் காமிக்ஸ் ஆசாரியே :D

      //இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?//
      நீங்களுமா விஜய்?! ;)

      உங்கள் ஆதங்கம் எனக்குப் புரியாமல் இல்லை! ;)

      நீக்கு
    2. // உங்கள் ஆதங்கம் எனக்குப் புரியாமல் இல்லை! ;) //

      அப்படியே கொஞ்சம் நேரம் கிடைத்தால் என்னுடை ஆதங்கத்தையும் புரிந்துகொள்ளுங்கள்! :D

      நீக்கு
    3. Sure, அப்படியே நீங்களும் என்னுடையதை.... ;)

      நீக்கு
    4. // நீங்களுமா விஜய்?//
      ஹா ஹா! 'கார்த்திக்கின் கலகமும் நன்மையில் தான் முடியும்' என்ற நம்பிக்கை வந்து ரொம்ப நாளாச்சு எனக்கு! :)
      இதுதான் உங்க பாணி; இதுதான் உங்க வழிமுறைன்னு தெரிஞ்சதுக்குப் பிறகு இப்போல்லாம் எதையும் நான் சீரியஸாவே எடுத்துக்கறதில்லை. (ரமேஸும் கொஞ்ச நாளில் மாறிடுவார்னு தோணுது)

      நீங்க கலக்குங்க... ;)

      நீக்கு
    5. // அப்படியே கொஞ்சம் நேரம் கிடைத்தால் என்னுடை ஆதங்கத்தையும் புரிந்துகொள்ளுங்கள்! :D //
      // Sure, அப்படியே நீங்களும் என்னுடையதை.... ;) //

      ஊஹும்.. நீங்க ஒ.சி.சு சம்பந்தமான பதிவுகளை முடித்தபின்தான் ஒரு conclusion சாத்தியப்படும். அதுவரை என் கண்களுக்கு நீங்கள் LIC Building-ஐ நடு ரோட்டில் கட்டிய Engineer-தான்! :D

      நீக்கு
    6. //ஊஹும்.. நீங்க ஒ.சி.சு சம்பந்தமான பதிவுகளை முடித்தபின்தான் ஒரு conclusion சாத்தியப்படும். அதுவரை என் கண்களுக்கு நீங்கள் LIC Building-ஐ நடு ரோட்டில் கட்டிய Engineer-தான்! :D//

      அப்படியானால், நீங்கள் என் பார்வையில் ஒரு அவசரக் குடுக்கை நாட்டாமை! :D

      நீக்கு
    7. //... இப்போல்லாம் எதையும் நான் சீரியஸாவே எடுத்துக்கறதில்லை. (ரமேஸும் கொஞ்ச நாளில் மாறிடுவார்னு தோணுது) //

      Yes! definitely.

      நீக்கு
  4. /* இந்தத் தொடர் இத்துடன் முடிவுற்றாலும், இதைச் சார்ந்த இன்னொரு தொடர் விரைவில் துவங்கும்! ;-) */

    MUDIYALA :'-(

    BTW, while you have enjoyed the GN, good that you came straight out with the observations in public - whatever it may lead to. When it comes to direct translation of French stories in Tamil Comics is absolutely pathetic as evident from this one Gil Joardan :-(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //good that you came straight out with the observations in public//
      Rightly said! This series of posts was all about my observations on this particular GN!

      //whatever it may lead to//
      yes, these observations were shared not without a reason!

      நீக்கு
  5. // அப்படியானால், நீங்கள் என் பார்வையில் ஒரு அவசரக் குடுக்கை நாட்டாமை! :D //

    எனக்கு இருந்த நெருடல் தவறாக இருந்தால் நல்லது. அதை மெனக்கெட்டு தெளிவுபடுத்தும் அவசியம் உங்களுக்கு இல்லைதான், that's ok.

    பதிலளிநீக்கு
  6. ஒரு கிராபிக் நாவலுக்கு கிடைத்த இதுமாதிரியான முழுமையான அலசல், வாசகரிடம் ஒரு முக்கியத்துவம் பெற்று அந்த காமிக்ஸ் மீது ஈர்ப்பு செய்திட உங்களின் இந்த பதிவு கண்டிப்பாக உதவும் என்பது என் நம்பிக்கை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது நிகழுமானால் எனக்கும் மகிழ்ச்சியே, நன்றி கேப்டன்! :)

      நீக்கு
    2. எனக்குத்தெரிந்து இவ்வளவு Deep-ஆன அலசல்களுக்கு மூலக்காரணமே படைப்புகளில் உள்ள குறைகள்தான். எல்லாவிதத்திலும் நல்ல standard-உடன் வரும் கதைகளை இம்மாதிரி detailed review செய்யும் நடைமுறையை கடந்த 6-7 மாதங்களாக நான் பார்த்ததே இல்லை (as I browse our comics blogs only for the past 6-7 months). பிரளயத்தின் பிள்ளைகள் என்னும் கிராபிக் நாவலும் வந்தது - வந்து பலமாதங்களாகியும், அதிலும் வரலாறு மற்றும் கதை சொல்லும் விதங்களில் புதுமையுமிருந்தாலும், "மொழிபெயர்ப்பில் குறை" என்கிற சர்ச்சையில் சிக்காததால் ஓரம் கட்டப்படுகிறது.

      இந்தக்குறிப்பிட்ட கதையைப் பொருத்தவரையில் மொழிபெயர்ப்பு மற்றும் type setting-ல் உள்ள குறைகள் கதையைப்படிக்கும் முன்பே பலருக்குத் தெரிந்துவிட்டதால் இந்த particular கதைமட்டும் அசாத்திய அலசல்களுக்கான தகுதியைப் பெற்றுவிட்டது.

      Above is just my observation - also this is the reason I spent my time in this comment section; although I know this is irritating to the spirit of article readers. so the theory is simple: If a book released with deficiencies caused by local publisher's, then it will be taken a piece of research. I never seen such a trend on any other language/conties blogs where comics industry is going too well. We are sick.

      நீக்கு
    3. //எனக்குத்தெரிந்து இவ்வளவு Deep-ஆன அலசல்களுக்கு மூலக்காரணமே படைப்புகளில் உள்ள குறைகள்தான்//
      அதுவும் ஒரு காரணம்! ஆனால் அது மட்டுமே காரணம் என்று நீங்களாக ஒரு முடிவெடுத்து பேசிக் கொண்டே போவதில் எந்த பயனும் இல்லை!

      // எல்லாவிதத்திலும் நல்ல standard-உடன் வரும் கதைகளை இம்மாதிரி detailed review செய்யும் நடைமுறையை//
      கிரீன் மேனரை மறந்து விட்டீர்களா? லயன் ப்ளாகில் அது பற்றி நிறைய பேசினோமே?! பி.பி. பற்றியும் நிறைய பேசியதாக நினைவு! உண்மையில் அதற்கு தனிப்பதிவு போட நினைத்து பிறகு அப்படியே தள்ளிப் போய் விட்டது! அதைப் பற்றி என்னுடைய லயன் ஆண்டு மலர் பதிவில் இப்படி எழுதி இருந்தேன்:

      //3. பிரளயத்தின் பிள்ளைகள் (Batchalo):
      இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் அமைந்திருக்கும் இந்த உருக்கமான கிராபிக் நாவல் பற்றி எழுத ஒரு தனிப்பதிவே தேவைப்படும்! இதன் தத்ரூபமான சித்திரங்கள் மனதை விட்டு அகல மறுக்கின்றன! மற்ற அனைத்து கதைகளைக் காட்டிலும் இதில் ஆசிரியரின் மொழிபெயர்ப்பு மிக அருமையாக வந்திருக்கிறது! வாசகர்களிடம் பெருகி வரும் மாற்று காமிக்ஸ்க்கான ஆதரவு மகிழ்வு தருகிறது! இது பற்றி விரிவாக அடுத்த பதிவில் பார்ப்போம்!//

      //as I browse our comics blogs only for the past 6-7 months//

      ஆறேழு மாதங்களில் அரைகுறையாக கவனித்த விஷயங்களை மட்டுமே அடிப்படையாக வைத்து, அவசர தீர்ப்புக்கள் எழுதுவது சரிதானா?! குறையுள்ள கதை - குறையில்லாத கதை என்ற எந்த பாகுபாடும் இன்றி, அனைத்து இதழ்களுக்கும், நான் ஒரு காலத்தில் நீண்ட விமர்சனங்கள் எழுதியதுண்டு. உதாரணத்திற்கு:

      எமனின் திசை மேற்கு:
      http://www.bladepedia.com/2012/09/Muthu-Comics-Wild-West-Special-Title-No-317-Review-Tamil-Jean-Van-Hamme-Western-And-Blueberry-Les-demons-du-Missouri.html

      ஜெரோம்:
      http://www.bladepedia.com/2012/07/jerome-k-jerome-bloche-detectiveonmoped.html

      ஒவ்வொரு இதழிற்கும் விமர்சனப் பதிவுகளை போடுவதை, இந்த ஆண்டின் துவக்கம் முதலே நான் தவிர்த்து வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன; எல்லாவற்றிற்கும் அலசல் பதிவு போட வேண்டுமானால், அதை முழுநேரத் தொழிலாகவே செய்ய வேண்டியிருக்கும்! இப்போதெல்லாம், கதை பற்றிய என் கருத்துக்களை, லயன் ப்ளாகில் நேரடியாக பகிர்ந்து வருவது நீங்கள் அறியாதது அல்ல!

      //இந்தக்குறிப்பிட்ட கதையைப் பொருத்தவரையில் மொழிபெயர்ப்பு மற்றும் type setting-ல் உள்ள குறைகள் கதையைப்படிக்கும் முன்பே பலருக்குத் தெரிந்துவிட்டதால் இந்த particular கதைமட்டும் அசாத்திய அலசல்களுக்கான தகுதியைப் பெற்றுவிட்டது. //

      நீங்கள் நடுவில் வந்தவர் என்பதால் உங்களுக்குத் தெரிந்ததை மட்டும் பேசுகிறீர்கள் - அதில் தவறில்லை; But, don't jump into quick conclusions!!!

      மொழிப்பெயர்ப்பு குறித்த பிரச்சினைகள் எழுவது இது ஒன்றும் முதல் முறையல்ல! ஆனால், நான் அதைப் பற்றி பேசுவது இதுதான் முதல் முறை! அதுவும், நேரடியாக லயன் ப்ளாகிலேயே பேசினேன்! வேறெங்கும் Gossip செய்யவில்லை! உண்மையில், மொழிபெயர்ப்பு நன்றாக இருந்ததாக எனக்குத் தோன்றிய போதெல்லாம், பலமுறை இங்கும், அங்கும் மனம் விட்டுப் பாராட்டியும் இருக்கிறேன்!

      //If a book released with deficiencies caused by local publisher's, then it will be taken a piece of research//
      AND
      //I never seen such a trend on any other language/conties blogs where comics industry is going too well//
      உங்களுடைய இந்த கருத்துக்களைப் பார்க்கையில், பூனை பற்றிய ஒரு பழமொழி தான் என் நினைவுக்கு வருகிறது!

      6 - 7 மாதங்களாக வலைப்பூக்களைப் படித்து வரும் உங்கள் கண்களுக்கு, இதுவரை என்னுடைய வலைப்பூவில் - தமிழ் காமிக்ஸ் சார்ந்த எந்த ஒரு நல்ல விஷயமுமே தென்பட்டதில்லையா என்ன?! அப்போதெல்லாம் சும்மா இருந்த நீங்கள், இப்போது திடீர் என தரிசனம் தந்தது ஏன்?!

      லயன் ப்ளாகில் ஒரு கிராஃபிக் நாவல் படைப்பை குறை சொன்ன போது வராத கோபம்; கிராஃபிக் நாவல்கள் வேண்டவே வேண்டாம் என்ற போது வராத கோபம் - நான் மொழிபெயர்ப்பில் உள்ள குறைகளை லயன் ப்ளாகில் பேசிய ஒரே காரணத்திற்காக இப்போது பீறிட்டு வருவது ஏன்? YES, WE DEFINITELY ARE SICK!

      //blah blah ... அசாத்திய அலசல்களுக்கான தகுதியைப் பெற்றுவிட்டது. //

      நீங்கள் மேற்சொன்ன வரிகளை உங்களுக்கு கொஞ்சமாய் மாற்றித் தருகிறேன்!

      இந்த குறிப்பிட்ட கதையைப் பொறுத்தவரையில், மொழிபெயர்ப்பு மற்றும் type setting-ல் உள்ள குறைகளை லயன் ப்ளாகில் நான் சொன்னதால்; என்னுடைய இந்த particular தொடர் பதிவு, உங்களால் அசாத்தியமாக கார்னர் செய்யப் படும் தகுதியைப் பெற்று விட்டது!!!

      நீக்கு
    4. Ramesh Kumar,

      Gentlemen - it is not true that other countries and languages have not taken comics apart.

      Just to mention two of the best classics that got ripped apart by reviewers:

      a) Carto Maltese classic - The Ballad of the Salt Sea - color reprint was torn apart

      b) Buz Sawyer - Collection 1 - which was a classic was again ripped apart for its deficiencies

      Both the above reviews were severely critical of the inherent deficiencies in the reprints of these classics. And this is just to name a couple. You would find them on the internet if you search patiently.

      In tamil comics unfortunately what happens is - there is a boast of a three-people translation team from french to tamil - which unfortunately continuously flips around the storyline almost always.

      The cinebook translates and other direct english translates do fare better mostly.

      On the contrary what I find most sickening about local comics is continued promise of better quality of print, translation and on-time delivery which almost every other month had been missing their mark much to the chagrin of passionate subscribers - and more sickening is the trend that pointing out such trends in public leads to bashing / ridicules by fanatics - both at the blog or otherwise. Am not qualifying you by any of the aforementioned words - just thought that I must share since this discussion had been ongoing.

      நீக்கு
    5. @Ramesh Kumar:
      பொறுமையாக இருக்கச் சொல்லியும், தீர்ப்புக்களை அள்ளி வழங்குவதில் நீங்கள் தொடர்ந்து காட்டும் ஆர்வம் என்னை வியக்க வைக்கிறது! எனவே, இந்தப் பதிவில் நான் மிகவும் ரசித்து எழுதிய வரிகளில் ஒன்றை, உங்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்:

      // ஒன்றைச் செய்யாதே எனும் போது தான், அதை செய்தே தீர வேண்டும் என அவருக்குத் தோன்றும் உத்வேகம் - மனித இயல்பான, எதிர்ப்புக் குணத்தை பிரதிபலிக்கிறது! //

      சூடாக எழுதுவதை எல்லாம் எழுதி விட்டு, அதைத் தொடர்ந்து நீங்கள் போடும் ட்ரேட்மார்க் ஸ்மைலிஸ் - இந்தக் கமெண்டுடன் இலவச இணைப்பாக உங்களுக்கு வழங்கப் படுகிறது!!! ;-) :-) :-D

      நீக்கு
    6. CARTO MALTESE REVIEW:

      http://www.bigplanetcomics.com/how-to-destroy-a-comics-classic

      நீக்கு
    7. On topic:
      @Karthik Somalinga, மேலே உள்ள உங்கள் comment-ன் அனைத்து விளக்கங்களும் நியாயமாகவே உள்ளது. சொதப்பீட்டனோ?! :D

      // ஒன்றைச் செய்யாதே எனும் போது தான், அதை செய்தே தீர வேண்டும் என அவருக்குத் தோன்றும் உத்வேகம் - மனித இயல்பான, எதிர்ப்புக் குணத்தை பிரதிபலிக்கிறது! //

      To be accurate, அது மனித இயல்பல்ல - சந்தேகத்தின் இயல்பு! என்னைப் பொருத்தவரையில் சந்தேகத்தின் பேரில் பின்தொடர்ந்து Personal Blog வரை சென்று வாதிட்டது இருவரிடம் மட்டுமே. ஒன்று மிஸ்டர் மரமண்டை. இரண்டு நீங்கள்தான்! (கவனிக்கவும் - வேறு யாரிடமும் இதை செய்ததில்லை / அவசிமாகக் கருதியதுமில்லை). சந்தேகம் எழாதபடி இயல்பாக ஒரு குறையை சுட்டிக்காட்டுபவர்கள் பொதுவாக முதல் Comment-ல் பெரிய Building கட்டுவதில்லை - என்பது எனது புரிதலாக இருந்தது. இப்போது வேறு மாதிரி புரிந்துகொள்கிறேன் - ஆனால் இதற்கு ஆன செலவுதான் அதிகம்: உங்களுடைய நேரத்தை சாப்பிட்டது.

      நீக்கு
    8. @ Raghavan, Thanks for the example links. I agree that such criticizing practices exist outside too.

      // more sickening is the trend that pointing out such trends in public leads to bashing / ridicules by fanatics - both at the blog or otherwise. //

      I agree, bounty killers with wrong attitude are everywhere! But what I observed frequently is, not everyone is matured enough to see real motivation behind critics. So it becomes our responsibility criticize safely in the public.

      நீக்கு
    9. @Ramesh Kumar:
      //சந்தேகத்தின் பேரில் பின்தொடர்ந்து Personal Blog வரை சென்று வாதிட்டது//
      நீங்கள் சந்தேகப் படும் அளவுக்கு, அப்படி என்ன பெரிய குற்றத்தை நான் இழைத்து விட்டேன் என்பது தான் எனக்குப் புரியவில்லை! உங்களுடைய இந்த விளக்கம் எனக்கு சற்று இன்சல்டிங் ஆகத் தோன்றினாலும்; பொதுவில் சில கருத்துக்களை வைக்கும் போது, இது போன்ற எதிர்க் கருத்துக்களும் வரத்தான் செய்யும் என்பதை நான் அறியாமல் இல்லை!

      On a lighter note...

      //கவனிக்கவும் - வேறு யாரிடமும் இதை செய்ததில்லை / அவசிமாகக் கருதியதுமில்லை//
      And..
      //சந்தேகம் எழாதபடி இயல்பாக ஒரு குறையை சுட்டிக்காட்டுபவர்கள் பொதுவாக முதல் Comment-ல் பெரிய Building கட்டுவதில்லை//

      என்னுடைய வேண்டப்பட்ட விரோதிகளின் :-D கீழ்க்கண்ட வலைப்பூக்களை / பதிவுகளை உங்களின் "சந்தேக கேஸ் புலனாய்வுகளுக்கு" பரிந்துரைக்கிறேன்! ;-) வாதம் செய்வதில் இந்த மூவரும், உங்களையும் - என்னையும் விட பல மடங்கு வல்லவர்கள் என நான் கருதுவதால், அங்கே சற்று சூதானமாக கமெண்டு போடவும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!!! ;-)

      கனவுகளின் காதலர்:
      ஜில் ஜோர்டான் மொழிபெயர்ப்புப் பிழைகள் பற்றிய ஆராய்ச்சித் தொடர் பதிவு:
      பாகம் 1: http://www.kanuvukalinkathalan.blogspot.com/2013/02/1.html
      பாகம் 2: http://www.kanuvukalinkathalan.blogspot.com/2013/02/2.html
      பாகம் 3: http://www.kanuvukalinkathalan.blogspot.com/2013/02/3.html

      இலுமினாட்டி:
      எமனின் திசை மேற்கு!:
      பலூனில் தமிழ் வசனங்களை அடைக்க முடியவில்லை என்று ஆசிரியர் கூறியதிற்கு பதில் சொல்லும் வகையில் வந்த பதிவு:
      http://illuminati8.blogspot.com/2012/11/western.html

      அன்னாரின், மொழிபெயர்ப்பு குறித்த ஒரு கருத்தாய்வு! :-D
      http://illuminati8.blogspot.in/2013/03/blog-post.html

      காமிக் லவர் ராகவன்:
      இவர் தன்னுடைய வலைபூவையே நீக்கி விட்டார் என்பது இப்போது தான் தெரிய வந்தது!!! :-D இருந்தாலும், தனது ஃபேஸ்புக் டைம் லைனில் தொடர்ந்து தனது பார்வைகளை பதித்துக் கொண்டுதான் இருக்கிறார்! :)

      Jokes apart, இவர்களின் சில / பல கருத்துக்களில் எனக்கும் உடன்பாடு உண்டு; அவற்றை அவர்கள் சொல்லும் (லிய) விதத்தில் எனக்கு மாற்றுக் கருத்துக்கள் உண்டு என்பது வேறு விஷயம்! ஆனால், எந்த வழிமுறையைக் கையாண்டாலும் எதிர்வினைகள் என்னவோ ஒரே போலத் தான் இருக்கிறது! :-D உண்மையில், சாத்வீகமாக கருத்து சொல்பவர்கள் தான், பயங்கரமாக அடித்து நொறுக்கப் படுகிறார்கள்! ;-)

      ஹ்ம்ம்...

      நீக்கு
    10. நியாயமாக, சாத்வீகமாக குறைகளை சுட்டிக்காட்டினாலும், ஒரே ஒரு விஷயம் மட்டும் எனக்கு இன்றுவரை உறுத்தலாக இருக்கிறது. அது - சில குறைகளுக்கு தீர்வே budget, finance, man power என்ற ரீதியில் இருக்கும்போது ஏன் ரொம்ப force பண்ணவேண்டும் - public-ஆக? உதாரணத்துக்கு ஆங்கிலம் தவிர்த்த பிறமொழி translation மற்றும் type setting artist-ன் skills (மற்றும் allocated work hours). I guess the editor has too many issues in the background which causes this many errors in the front end.

      புரிந்துகொள்ளுங்கள், சில குறிப்பிட்ட repeated-ஆன குறைகள் ஆசிரியருக்கு தெள்ளத்தெளிவாக தெரிந்தேதான் நடக்கிறது (என்பது உலக கணிப்பு). Public-ஆக கேள்வி கேட்பதன் பலன் - ஒன்று இயலாமையை வெளிப்படுத்த வைப்பது அல்லது சப்பைக்கட்டு செய்ய வைப்பது அல்லது, நேர்மையின்மையை வெளிச்சம்போட்டுக் காட்டுவது. இது எதுவுமே முன்னேற்றத்திற்கு உதவாது.

      Amateur status-ல் தான் நமது காமிக்ஸ்கள் இந்த Budget-ல் வந்துகொண்டிருக்கின்றன. இது கொஞ்ச நாளைக்காவது survive ஆகாத பட்சத்தில் proper budget-உடன் full professional skills உடன் வெளிவருவது சாத்தியமே இல்லை. இந்த Budget tightness மற்றும் local skillset-ல் இருக்கும் பிரச்சனைகளை தீர்ப்பது - இதெல்லாம் நமது குடும்பப்பிரச்சனை போல அலசாதீர்கள். இயலாமையைப் புரிந்துகொள்ளும் உணர்வு இல்லாமல் "நான் நேர்மையாக குறை சொல்பவன்" என்கிற attitude-உடன் இருப்பின் தவறாகவே புரிந்துகொள்ளப்படும்.

      தவறாகப் புரிந்து கொள்ளப்படுவது கிடக்கட்டும், நிஜமாகவே "நாம் இவ்வளவு நெருக்கடிகளுடன் நாம் ஒரு காமிக்ஸை வெளியிட்டுதான் ஆகவேண்டுமா" என்ற சோர்வை எந்த publisher-க்கும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. Personal-ஆக நான் பயப்படுவது இதைப்பார்த்துதான்.

      கார்த்திக், எனக்கும் உங்களுக்கும் உள்ள கருத்து வேறுபாடுகளுக்குக் காரணம், நீங்கள் குறைகள் public-ஆக சுட்டிக்காட்டப்பட்டால் அவை களையப்பட்டுவிடும் என்று நினைக்கிறீர்கள், எனக்கு அப்படி தோன்றவில்லை மாறாக editor தானாகவே இதற்கான தீர்வை செய்துகொள்ளும்போது சாத்தியமாகும். ஒரு consumer-ஆக குறை சொல்வதில் தவறில்லை; ஆனால் அதை செய்வதற்கு நாம் consumer- seller என்கிற distance-ஐ கடைபிடித்தே செய்யவேண்டும். அதற்கான தீர்வுகள் எளிது: Refund! :(

      நீக்கு
    11. எடிட்டரை, நான் எங்கே force செய்தேன் என்று கூற முடியுமா?! ஒரு கருத்தை பப்ளிக்காக இட்டு விட்டதாலேயே அது force செய்ததாக ஆகாது! அவரை பதில் அளிக்கச் சொல்லி நான் ஒன்றும் கட்டாயப் படுத்தவில்லையே?! ஒரே ஒரு முறை தான் கேட்டேன் - அதற்கு நீங்களும் நண்பர்கள் சிலரும் தொடர்ந்து அளித்த பதில்களால் அது பற்றி மேற்கொண்டு பேச வேண்டி இருந்தது - அவ்வளவே!

      ஒரு கட்டத்தில் அங்கே விவாதம் செய்து பயனில்லை என்று, அந்த டாபிக்கை அப்படியே விட்டு விட்டேன்! உண்மையில், விவாதங்களை அங்கேயும், இங்கேயும் விடாமல் தொடர்வதன் மூலம், இந்த பிரச்சினைக்கு லைம் லைட் அடித்துக் கொண்டிருப்பது நீங்கள் தான் என்று எண்ணத் தோன்றுகிறது!

      //சில குறைகளுக்கு தீர்வே budget, finance, man power என்ற ரீதியில் இருக்கும்போது//
      அத்தனை லிமிடேஷன்கள் இருக்கையில், ஒரே மாதத்தில் குண்டு புக், ஒல்லி புக் என்று வகை வகையாகப் பிரசுரித்து, அந்த ப்ரஷரின் காரணமாக பிரிண்டிங் உள்ளிட்ட பல குளறுபடிகள் தொடர்ந்து நிகழ்வதற்கு, தானும் ஒரு காரணமாக இருக்க வேண்டுமா?! Public-ஆக கேள்வி கேட்பதன் காரணங்களில் இதுவும் ஒன்று!

      //இதெல்லாம் நமது குடும்பப்பிரச்சனை போல அலசாதீர்கள்//
      இந்த குடும்பம் என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவது யார் என்பதை நீங்களே அலசிக் கொள்ளுங்கள்!

      //"நாம் இவ்வளவு நெருக்கடிகளுடன் நாம் ஒரு காமிக்ஸை வெளியிட்டுதான் ஆகவேண்டுமா" என்ற சோர்வை எந்த publisher-க்கும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. Personal-ஆக நான் பயப்படுவது இதைப்பார்த்துதான்.//
      புரிகிறது! அது உங்கள் பார்வை - தவறில்லை!

      // ஒரு consumer-ஆக குறை சொல்வதில் தவறில்லை; ஆனால் அதை செய்வதற்கு நாம் consumer- seller என்கிற distance-ஐ கடைபிடித்தே செய்யவேண்டும். அதற்கான தீர்வுகள் எளிது: Refund! :( //
      பிடிக்கவில்லை என்றால் புத்தகத்தை வாங்காதே என்று நீங்கள் மறைமுகமாகச் சொல்வது எனக்குப் புரியாமலில்லை! பிடித்திருப்பதால் தான் இத்தனை அலசல்களும் என்பது உங்களுக்குப் புரியாத வரை, நான் எத்தனை தான் விளக்கங்கள் கொடுத்தாலும் அவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை!

      நீங்கள் சொல்வது உங்களைப் பொறுத்தவரை சரியாகவே இருந்து விட்டுப் போகட்டும்! ஆனால், அவற்றை எல்லாம் ஒத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை... and vice versa!!!

      நீக்கு
    12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    13. // பிடிக்கவில்லை என்றால் புத்தகத்தை வாங்காதே என்று நீங்கள் மறைமுகமாகச் சொல்வது எனக்குப் புரியாமலில்லை! பிடித்திருப்பதால் தான் இத்தனை அலசல்களும் என்பது உங்களுக்குப் புரியாத வரை, நான் எத்தனை தான் விளக்கங்கள் கொடுத்தாலும் அவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை! //

      நான் அதை சொல்லவில்லை. நீங்கள் ஒரு விஷயத்தை விமர்சிக்கும் விதம் அடிக்கடி fluctuate ஆகாமலிருந்தால் நீங்கள் எதிர்பார்த்த விதத்திலேயே புரிந்துகொள்வது சாத்தியம். இல்லையென்றால் எல்லோருக்குமே குழப்பம்தான். Refund என்கிற விஷயத்தை குறிப்பிட்டதன் காரணம் ஒரு consumer-seller point of view-ல் மட்டுமே குறைகளை பார்க்கும்போதுதான். Friendly-ஆக குறைகளை அலசும்பட்சத்தில் நிச்சயம் இயலாமையை guess பண்ணும் தன்மையும் கலந்திருப்பது அவசியம் - அது இல்லாவிட்டால் நாம் அனைவரும் nothing more than a consumer - not a community member.

      // அத்தனை லிமிடேஷன்கள் இருக்கையில், ஒரே மாதத்தில் குண்டு புக், ஒல்லி புக் என்று வகை வகையாகப் பிரசுரித்து, அந்த ப்ரஷரின் காரணமாக பிரிண்டிங் உள்ளிட்ட பல குளறுபடிகள் தொடர்ந்து நிகழ்வதற்கு, தானும் ஒரு காரணமாக இருக்க வேண்டுமா?! Public-ஆக கேள்வி கேட்பதன் காரணங்களில் இதுவும் ஒன்று! //

      அப்பாடா, atleast இப்பவாவது குறைகளின் மூலக்காரணத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறோம். அடுத்த வருடம் சிலவற்றைத் தவிர எல்லா புத்தகங்களும் 50 page range-ல் வருவதாலும், ஆண்டுமலரைத் தவிர வேறு special-கள் அறிவிக்கப் படாததாலும், editor இதை புரிந்துகொண்டுவிட்ட மாதிரி தெரிகிறது. டெக்ஸ் வில்லர் கதைகளின் எண்ணிக்கை குறைப்பிற்கும் number of pages Vs Work load என்கிற புரிதலின் விளைவு மாதிரியும் தெரிகிறது.

      ஒருவேளை ஆசிரியர் இதை அந்த Blog-ல் உங்களுக்கு explain பண்ணும் பட்சத்தில் ஆசிரியரையும் உங்களையும் தீவிர காமிக்ஸ் ரசிகர்கள் போட்டுத்தாக்கிவிடும் சாத்தியம் அதிகம். குறைசொல்லும் வாசகர்களுக்கு மட்டுமல்ல கார்த்திக், ஆசிரியருக்கும் அங்கே safety இல்லை - atleast from my observation.

      நீக்கு
    14. // எடிட்டரை, நான் எங்கே force செய்தேன் என்று கூற முடியுமா?! ஒரு கருத்தை பப்ளிக்காக இட்டு விட்டதாலேயே அது force செய்ததாக ஆகாது! அவரை பதில் அளிக்கச் சொல்லி நான் ஒன்றும் கட்டாயப் படுத்தவில்லையே?! //

      Comment-ன் உயரம் & depth of Detail is directly proportional to the expectation of answer.

      :D

      நீக்கு
    15. /* இயலாமையை புரிந்து கொண்டு */

      புரியாமல் இல்லை ரமேஷ் !

      இவ்வளவு இயலாமைகள் இருக்கும் போது மாதம் இரண்டு புத்தகங்கள், குண்டு ஸ்பெஷல் என்று அடுக்கடுக்காய் வராமல் - மாதம் ஒரு புத்தகம் (50 பக்கம்) என்று துவங்கி ஒரு சீராய் முன்னேறி - இரு வருடங்களின் பின் - மாதம் இரண்டு - இன்னொரு இரு வருடங்களின் பின் அடிக்கடி குண்டு புக்ஸ் என்று வெளியிடலாமே?

      நடுவில் வந்து பார்க்காமல் - சென்ற செப்டம்பர் 2012 முதல் நான் லயன் ப்ளாகில் கொடுத்திருந்த கமெண்ட்ஸ் அனைத்தையும் முடிந்தால் பார்க்கவும் - ஏப்ரல் மாதம் வரை குறைகள் சொல்லி இருக்கிறேனா என்றும் பார்க்கவும் (NBS டைகர் கதை அச்சுத் தரத்தில் சொதப்பிய போதும், ஜில் ஜோர்டான் முழுக்கதையும் மொழி மாற்றத்தில் உருவிழந்த போதும் நான் லயன் ப்ளாகில் வாயே திறக்கவில்லை)

      /* Refund :( */

      இவ்வருடம் அது தான் என் விஷயத்தில் நடந்தது - no subscription !

      /* நாம் ஒரு காமிக்ஸை வெளியிட்டுதான் ஆகவேண்டுமா" என்ற சோர்வை எந்த publisher-க்கும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. Personal-ஆக நான் பயப்படுவது இதைப்பார்த்துதான் */

      my personal opinion is : குறையப் படாத விஷயங்களுடன் சுமாராய் வருவதை விட, வேறு மொழிகளில் படித்து விட்டு போகலாம் - this prompted me to plan to register for french class - beginning jan 2014 !

      முன்னேற்றம் என்பது லயன் மூலம் மட்டுமே அடைய வேண்டும் என்ற கட்டாயம் எவருக்கும் இல்லை !

      அது போல - நேர்மை நாணயம் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் - commitment to improvement is a two horse ride that rides in tandem with loyalty !

      --

      மேற்குறிப்பிட்டவை என் கருத்துக்களே - இந்த விவாதத்திற்கு தொடர்புடையவை என்பதால் இடப் பட்டது ! நீக்கும் உரிமை வலைப்பூ ஆசிரியருக்கே :-p

      நீக்கு
    16. //Friendly-ஆக குறைகளை அலசும்பட்சத்தில் நிச்சயம் இயலாமையை guess பண்ணும் தன்மையும் கலந்திருப்பது அவசியம் - அது இல்லாவிட்டால் நாம் அனைவரும் nothing more than a consumer - not a community member.//

      அந்த இயலாமையை புரிந்து கொண்டதால் தான் - சென்ற ஆண்டின் நடுவில் ஜெரோம்; ஆண்டு இறுதியில் தங்கக் கல்லறை & எமனின் திசை மேற்கு; இந்த ஆண்டின் துவக்கத்தில் ஜில் ஜோர்டான் இதழ்கள் வெளிவந்த போதெல்லாம் - உரக்க எழுந்த மொழிபெயர்ப்பு குறித்த விவாதங்களிலும்...

      மற்றும் இடையிடையே பல இதழ்களுக்கான மொழிபெயர்ப்புகளில் குறைகள் சுட்டிக் காட்டப் போதும்...

      லயன் ப்ளாகிலோ அல்லது ஃபேஸ்புக்கிலோ - அந்த விவாதங்களில் நான் கலந்து கொண்டது கிடையாது! குற்றம் குற்றமே என்று குதித்தது கிடையாது! யாராக இருந்தாலும், Settle ஆக நேரம் எடுக்கும் என்ற புரிதல் தான் அதற்குக் காரணம்!

      தவிர மொழிபெயர்ப்பில் நேரும் சிறு சிறு வாக்கிய அமைப்பு / அர்த்த மாற்றங்களை நான் nitpick செய்வது கிடையாது! அதை லயன் ப்ளாகில் கூட குறிப்பிட்டு இருந்தேன்!

      "வேற்று மொழிகளில் இருந்து மொழிபெயர்க்கும் போது நேரும் பிழைகள்" என்ற கோணத்தில் இல்லாமல், கிரீன் மேனர் வெளிவந்த போது அதில் கையாளப் பட்டிருந்த கடினமாக தமிழ் வார்த்தைகளையும் / ரிபீட் ஆகும் சொற்களையும் தவிர்க்கலாமே என்று கூறி, உதை வாங்கியது வேறு விஷயம்!

      கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இயலாமையை புரிந்து கொண்டாயிற்று! ஆனால், கதையின் முடிவே மாற்றப் பட்ட கடுப்பில், முதன் முறையாக எனது வருத்தத்தை தெரிவித்த உடனேயே - இங்கும் அங்கும் நடந்தது என்ன என்பது உங்களுக்குகே தெரியும்!!!

      //அப்பாடா, atleast இப்பவாவது குறைகளின் மூலக்காரணத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறோம். அடுத்த வருடம் சிலவற்றைத் தவிர எல்லா புத்தகங்களும் 50 page range-ல் வருவதாலும், ஆண்டுமலரைத் தவிர வேறு special-கள் அறிவிக்கப் படாததாலும், editor இதை புரிந்துகொண்டுவிட்ட மாதிரி தெரிகிறது. டெக்ஸ் வில்லர் கதைகளின் எண்ணிக்கை குறைப்பிற்கும் number of pages Vs Work load என்கிற புரிதலின் விளைவு மாதிரியும் தெரிகிறது.//

      நீங்கள் புதியவர் என்பதால் மூல காரணத்திற்கு இப்போது தான் வந்து சேர்ந்திருக்கிறீர்கள்!!! நீங்கள் ரொம்ப லேட்! ;) இவையெல்லாம் சென்ற ஆண்டில் இருந்தே, பலராலும் எடிட்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப் பட்ட விஷயங்கள் (ப்ரைவேட் ஈமெயில்கள் மற்றும் பப்ளிக் பதிவுகள் மூலமாக)!

      //ஒருவேளை ஆசிரியர் இதை அந்த Blog-ல் உங்களுக்கு explain பண்ணும் பட்சத்தில் ஆசிரியரையும் உங்களையும் தீவிர காமிக்ஸ் ரசிகர்கள் போட்டுத்தாக்கிவிடும் சாத்தியம் அதிகம். குறைசொல்லும் வாசகர்களுக்கு மட்டுமல்ல கார்த்திக், ஆசிரியருக்கும் அங்கே safety இல்லை - atleast from my observation. //

      Good observation, but nothing new! அங்கே விமர்சனம் செய்பவர்கள், காலம் காலமாக சந்தித்து வரும் பிரச்சினை தான் இது! ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் பலரும் ஒதுங்கிக் கொண்டதுண்டு! அதன் விளிம்பில் சென்று நான் பலமுறை மீண்டதுண்டு; But there is an end to everything! அது எப்போது என்பது ஒவ்வொருவரின் சகிப்புத் தன்மையைப் பொறுத்த விஷயம்!

      //Comment-ன் உயரம் & depth of Detail is directly proportional to the expectation of answer.//
      தவறு! குறைந்த ஆனால் "காட்டமான" ஒரு சில வார்த்தைகளை உபயோகித்துக் கூட பதில்களை "வரவழைக்க" முடியும்! உதாரணத்திற்கு, இந்த நீண்ட விவாதத்தின் துவக்கப் புள்ளியாக அமைந்த உங்களின் "Provoking வரிகள்":

      //அடுத்த பதிவு நாளையே வரும்போல தெரிகிறதே... புத்தகத்தின் இன்னொரு part-ஆன தமிழ் பெயர்ப்பில் நடந்துள்ள ஊழல்களையும் அக்கிரமங்களையும் தோலுரித்துக்காட்டி... //

      மொழிபெயர்ப்பு தவறாக இருக்கிறது என்று பொத்தாம் பொதுவாக சேற்றை வாரி இறைத்து விட்டுப் போவதிற்கும்; அதில் என்ன தவறு உள்ளது என்பதை விளக்கமாகச் சுட்டிக் காட்டி, அதன் காரணத்தை அறிய ஆர்வம் காட்டுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றது!

      // மழை ஓய்ந்துவிட்டதா நண்பர்களே// ஓய்ந்துவிட்டேன்! :D //
      Going by your track record, நீங்கள் அவ்வளவு சீக்கிரம் ஓய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்குத் துளியும் இல்லை! ;)
      பிரச்சினையின் அடி ஆழத்தை புரிந்து கொள்ளாமல் பொதுவாக பேச வேண்டாம் என்று சுட்டிக் காட்டியும், பக்கம் பக்கமாக விளக்கங்கள் அளித்தும், அடுத்த பதிவுகளுக்காக பொறுத்திருங்கள் என்று சொல்லிப் பார்த்தும், அந்த அடுத்த பதிவை போட்டு கிட்டதட்ட அரை நாள் ஆகியும் - நீங்கள் இன்னும் இந்த "மொழிபெயர்ப்பு ஊழல் / அக்கிரமம்" பிரச்சினையையே சுற்றிச் சுற்றி வருவது உங்களின் நோக்கத்தைக் கேள்விக் குறியாக்குகிறது! உங்களின் சந்தேகப் புத்தி எனக்கும் தொற்றிக் கொண்டு விட்டது போல! ;-)

      நீக்கு
    17. // Going by your track record, நீங்கள் அவ்வளவு சீக்கிரம் ஓய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்குத் துளியும் இல்லை! ;) //

      I guarantee that I wont disturb with comments again :)

      நீக்கு
  7. தலைப்பு:
    கதை பற்றிய பதிவுகளா?
    பதிவு பற்றிய கருத்துரைகளா??
    {அனைத்தையுமே படித்(து முடித்)தேன்}

    பதிலளிநீக்கு
  8. உஸ்ஸ்ஸ்....ஸபா... நேற்று இடி மின்னலுடன் இங்கே பெய்த மழை சற்றே ஓய்ந்துவிட்டதா நண்பர்களே? இடியோசைக்கு பயந்து சோபாவுக்கு அடியில் போய் பதுங்கிக் கண்ணை மூடியவுடன் உலகமே இருண்டுவிட்டதையடுத்து, நான் அப்படியே கொஞ்சம் கண்ணசந்துவிட்டேன்.

    @ கார்த்திக்

    // பூனைகளைப் பற்றிய பழமொழிதான் என் நினைவுக்கு வருகிறது //

    தேவையில்லாமல் நீங்கள் பூனைகளை வம்புக்கு இழுப்பது என்னைக் கடும் சினம் கொள்ளச் செய்கிறது. ஆழமான பிறாண்டல்கள் தரும் அபரிமிதமான வலிகளை நீங்கள் அறியாதவரல்லவே?...

    @ Ramesh kumar
    நீங்கள் காமிக் ப்ளாக்குகளுக்கு ஒரு அப்பரண்டிஸ் என்பது உங்கள் வார்த்தைகளால் தெளிவாகப் புலனாகிறது. சற்றே துருதுருப்பான அப்பரண்டிசுகளுக்கு வழக்கமாக ஏற்படும் நிகழ்வுதான் இவை என்பதால் விசாரப்பட ஏதுமில்லை. போகப் போக எல்லாம் சரியாகிவிடும்/பழகிவிடும். :)

    நான்கூட ஆரம்ப காலங்களில் என் ப்ரொஃபைல் பிக்சரில் புலியைத்தான் போட்டிருந்தேன். ஹூம்ம்...

    பதிலளிநீக்கு
  9. // மழை ஓய்ந்துவிட்டதா நண்பர்களே//

    இல்லை! இது அடைமழை போலிருக்கிறது... இடியும், மின்னலும் வலுத்துக் கொண்டே செல்கிறதே...
    சரி, ஓயும் வரை ஒதுங்கிக் கிடக்க வேண்டியதுதான்... :(

    பதிலளிநீக்கு
  10. அட ஒரே நாள்ல நாப்பத்து நாலு கமெண்ட்ஸ் ஸா ??? என்னமோ சூடா கிண்டராங்கப்பான்னு உள்ள எட்டி பாத்தா, ரமேஷ் சும் கார்த்தியும் லயன் ப்ளோக்ல விட்டதா இங்கே தொடரறாங்க! : )

    @ரமேஷ்,
    உங்கள பின்னூட்டங்கள தொடர்ந்து படிச்சுகிட்டு வர்ற நான் உங்கள பத்தி ஒரு அபிப்பிராயம் வைச்சிருந்தேன்.YOU SLIPPED A BIT HERE. YOUR COMMENTS ARE A BIT OFF COLOR , இது கார்த்திக் லயன் ப்ளோக்ல போட்ட கமெண்ட் மாதிரி.

    ஆச்சர்யமா இருக்கு.

    கார்த்தியோட கமெண்ட்ஸ் சா முதல்ல லயன் ப்ளோக்ல பாத்த நான் முதலில் நம்பள. BLOGGER ID ய் செக் பண்ணேன் . அப்புறம் அவருக்கு PERSONNELல ஒரு E-MAIL அனுப்புனேன். காமிக்ஸ் சம்மந்தமா இது வரைக்கும் யாருக்கும் மெயில் அனுப்பனது இல்ல. REPLY மட்டும் பண்ணுவேன்.

    உங்க கமெண்ட்ஸ் கூட என்ன அது போலவே ஆச்சர்யப்பட வைக்குது. உங்கள போல BALANCED MIND SET இருக்கறவங்க ஒரு சிலர் மட்டுமே.

    நாம எல்லோரும் எவ்வளவு பெரிய அப்படக்கராக நம்மள நினைசுகிட்டாலும் சில வேலைகள்ல SLIP ஆயிடறோம். அது தான் இதுக்கு விளக்கமா இருக்க முடியும்.

    இப்போ இது என்னோட போதாத வேலைன்னு நினைக்கறேன் . : D !

    OK தவறுகளை கடுமைய விமர்சிக்ககூடாது, அப்படி சொல்லணுமுன்ன நயமா,ஸ்வீட்டா தான் சொல்லணும், கடுமைய சொல்றவங்க SICK அப்படிங்கற ரமேஷ் கருத்தை ஏத்துக்க முடியாது. உண்மையா சொல்லணுமுன்ன ஒன்னுமே பேசாம புத்தகத்தை படிச்சுட்டு மூடி வைக்கறது தான் அந்த படைப்பாளருக்கு நாம கொடுக்கற மிகப்பெரிய INSULT. அதை எத்தனை பேர் செய்யறாங்க?? அவங்கள பத்தி இப்படி ஒரு காரமான விமர்சனத்தை வைங்க பாக்கலாம்.

    இன்னொன்னு, ஒருவரை பாராட்டி ஊக்கப்படுத்துவதை காட்டிலும் அவரது குறைகளை சுட்டிக்காட்டி அவரை DEVELOP செய்வது முன்னதை காட்டிலும் ரொம்ப MEANINGFUL ஆனது.

    நமது ஆசிரியர் இது போன்ற CRITICIZING COMMENTS களை கையாள்வதில் கில்லாடி எனபது என் கணிப்பு. இது போன்ற கமெண்ட்ஸ் கள் அவரை காயப்படுத்திவிடுமோ என்று நாம் கவலை பட தேவை இல்லை.

    STILL நமது மனதுக்கு என்ன தோன்றுகிறது என்பதை எந்த நிர்பந்தத்துக்கும் ஆட்படாமல் வெளிப்படுத்தி ,தொடர்ந்து நமது பின்னூட்ட சேவையை! தொடர்வோம். : )

    @ கார்த்திக்
    நான் உங்களுக்கு இந்த TOPIC பத்தி நான் சொல்ல நினைச்சதை லயன் ப்ளோகிலேயே சொல்லிவிட்டேன். நீங்க சுட்டிக்காட்டின ஒரு சில தவறுகள் புத்தகத்தில் இருந்தாலும், உங்களோட SUDDEN பிடிவாதம் /AGGRESSIVENESS பெரிய ஆச்சர்யம். OFF-COURSE கார்த்திக் என்றால் ஆச்சர்யம் தானே : ) : ) !

    HAPPY BLOGGING GUYS !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @விஸ்கி-சுஸ்கி:

      First things first...
      உங்களோட ஈமெயிலுக்கு பதில் பண்ணனும்னு நினைக்கற அவகாசத்துல, அதே மேட்டரை நீங்க லயன் ப்ளாகிலும் போட்டுட்டீங்க! அதான், அங்கேயே கன்டினியூ பண்ணினேன் - தவறாக நினைக்க வேண்டாம்!! :)

      //தவறுகளை கடுமைய விமர்சிக்ககூடாது, அப்படி சொல்லணுமுன்ன நயமா,ஸ்வீட்டா தான் சொல்லணும், கடுமைய சொல்றவங்க SICK அப்படிங்கற ரமேஷ் கருத்தை//

      ஒரு சின்ன கரெக்ஷன்! "நயம் சரி", "கடுமை தவறு"-ன்னு எல்லாம் அவர் சொல்லல! பொதுவாவே, குறை சொல்லி அலசுறது 'sick' அப்படின்னு தான் ஜட்ஜ்மென்ட் பாஸ் பண்ணியிருக்காரு! :)

      //If a book released with deficiencies caused by local publisher's, then it will be taken a piece of research. We are sick.//

      //உங்களோட SUDDEN பிடிவாதம் /AGGRESSIVENESS பெரிய ஆச்சர்யம்//
      க்ளைமேக்ஸ் உறுத்தலாக மனசுக்குப் பட்டதால, "முதன்முறையாக" மொழிபெயர்ப்பு பிழை பற்றி கேள்வி எழுப்பினேன்! இத்தனைக்கும், எடிட்டர் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று பிடிவாதம் எல்லாம் பிடிக்கவில்லை! அதற்குள், நான் செய்தது ஏதோ உலக மகா குற்றம் என்ற ரீதியில், ரமேஷ் Aggressive ஆக என்னை விமர்சனம் செய்தது, சந்தேகத்தின் பேரில்(?!) விசாரணை செய்தது - மிக மிகப் பெரிய ஆச்சரியம் & Insulting! அவர் மேல இருக்குற ஒரு மரியாதையின் பேரில் தான் - இவ்வளவு பொறுமையான, நீளமான பதில்களைத் தந்திருக்கேன்!

      //STILL நமது மனதுக்கு என்ன தோன்றுகிறது என்பதை எந்த நிர்பந்தத்துக்கும் ஆட்படாமல் வெளிப்படுத்தி ,தொடர்ந்து நமது பின்னூட்ட சேவையை! தொடர்வோம். : )//

      மனதுக்கு தோன்றுவதை எல்லாம் சொல்வதில் இருக்கிற மிகப் பெரிய பிரச்சினை பின் வருமாறு:

      அப்பப்போ சில பேரிடம் - பெருசு பெருசாக விளக்கம் கொடுப்பதிலும், வாதங்கள் புரிவதிலும், நான் ரொம்ப நல்லவனாக்கும் என்பதை ப்ரூவ் பண்ணுவதிலும் - எக்கச்சக்கமான எனர்ஜியையும், நேரத்தையும் செலவழிக்க வேண்டி இருக்கும்! :-D அதற்கு சிறந்த ஒரு உதாரணம் இங்கே நடை பெற்ற விவாதங்கள்! ஒரு குறிப்பிட இடைவெளியில், யாராவது ஒருவர் இப்படி provoke பண்ணுற மாதிரி பேசி, பஞ்சாயத்தை ஆரம்பிச்சு வைப்பாங்க - சலிப்பா இருக்கு! ஒரு வகையில் இவங்களுக்கு எல்லாம் பொறுமையா பதில் சொல்லிட்டு இருப்பது தான் நான் செய்யும் மிகப் பெரிய தவறுன்னு தோணுது!

      இனிமே - அட்டை சூப்பர், மீ த பர்ஸ்ட், பிறந்த நாள் வாழ்த்துக்கள், லைட்டான கலாய்த்தல்கள், சந்தா எவ்வளவு, டீ இன்னும் வரல்ல - இந்த மாதிரி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்களை மட்டும் போட்டுட்டு, அக்கடான்னு இருக்கறது தான் safe!!!

      ஆனா அதுக்கு பதிலா - புத்தகத்தை படிச்சுட்டு, ஒண்ணுமே பேசாம பத்திரமா அலமாரியில் அடுக்கி வச்சுடறது எவ்வளவோ மேல்! :)

      நீக்கு
    2. /* இனிமே - அட்டை சூப்பர், மீ த பர்ஸ்ட், பிறந்த நாள் வாழ்த்துக்கள், லைட்டான கலாய்த்தல்கள், சந்தா எவ்வளவு, டீ இன்னும் வரல்ல - இந்த மாதிரி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்களை மட்டும் போட்டுட்டு, அக்கடான்னு இருக்கறது தான் safe!!! */

      அதை விட கமெண்ட் போடாமல் இருப்பதுதான் தமிழ் காமிக்ஸ் உலகில் safe! லேட்டாத்தான் எனக்கு புரிஞ்சிது ! இந்த காமிக்ஸ் உலகையும் அதன் hype, கலெக்ஷன் ஸ்டேடஸ் எல்லாம் நம்பி ஒரு உலகம் இருக்கு - நம்ம facebook பேஜ்ல கமெண்ட் போட்டாலும் வந்து எதிர் வாதம் செய்வார்கள் :-)

      மீ தி 50th :-)

      நீக்கு
    3. //மீ தி 50th :-)//
      ரமேஷ் தன்னுடைய டூப்ளிகேட் கமெண்ட் ஒன்றை நீக்கி விட்டதால், நான் தான் மீ தி 50! :-D

      நீக்கு
  11. கொஞ்ச நாள் டொமைனை இழந்து விட்ட வருத்தத்தில் வருவதற்குள் காணமல் போன சிப்பாயை கண்டு பிடித்து கொண்டு வந்து விட்டீர்கள் போல இருக்கிரது.

    அந்த நிருபரைப் போல நிறைய உழைப்பு போட்டிருக்கிரீகள். இணையத்தை சலித்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு வழியாக எங்களுக்கு புரிய வைத்ததற்கு நன்றி. இடைசெருகலாக வரும் விஷயங்கள் பற்றிய விபரங்களையும் தோண்டி எடுத்து போட்டதற்கு நன்றி.

    நேரம் இருக்கும்போது நிறைய தொடர் எழுதுங்கள். :D

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா, இன்னொரு தொடர் அல்ரெடி ஆரம்பிச்சாச்சு!!! :)

      நீக்கு
  12. மொத்தத்தில் செதுக்கிய சிற்பம் சரியாக வரவில்லை. புரியும் என்று நினைக்கிறேன். :D

    பதிலளிநீக்கு
  13. Amazing Art work. More realistic than Forbidden Manuscript. I dont know not many accolades for thisartist.

    Once again thanks for your very professional review. It is a good trend that comics are taken seriously and quality reviews are coming out.

    - Ramkumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @Ramkumar:
      Wow! It has almost been 10 months since I reviewed this GN! Good to know that you enjoyed the book and also the review. And yes, I agree with your point on the artwork... Certainly OSS' artwork is much more realistic as compared to the later... thanks for your comments.

      நீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia