IRCTC-யில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வித்தை! - Ver 2.0

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் எழுதிய - "IRCTC-யில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வித்தை!" பதிவுக்கு அமோக ஆதரவளித்து, பதிவிட்ட நாள் தொடங்கி இன்றளவும் இதை ப்ளேட்பீடியா பதிவு தரவரிசையில் No.1 இடத்தில் வைத்திருக்கும், IRCTC-யால் பாதிக்கப்பட்ட பாச நெஞ்சங்களுக்கு நன்றி! நன்றி! நன்றி! இந்த இரண்டு மாதங்களில் IRCTC-யில் எக்கசக்க வரவேற்கத்தக்க மாற்றங்கள்! சிலவற்றை மேற்சொன்ன பதிவின் அடிப்பகுதியில் அப்டேட்களாக இணைத்திருந்தேன்! இருப்பினும் இன்னும் சில முக்கிய விபரங்களையும் இணைத்து இப்பதிவை புதுப்பித்தால் என்ன என்ற யோசனை ஓடியதால் இதோ: "The Irritating IRCTC - A Reboot...!"

ஏற்கனவே பழைய IRCTC பதிவை படித்த நண்பர்களும், இந்த புதுப்பிக்கப்பட்ட பதிவை மீண்டும் ஒரு முறை முழுவதுமாக படிப்பது நலம்! இடை இடையே பல முக்கிய புதிய தகவல்கள் மற்றும் மொக்கைகள் இணைக்கப்பட்டுள்ளன!

நீங்கள் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டிருப்பீர்கள் அல்லது குறைந்த பட்சம் பார்த்தாவது இருப்பீர்கள்! ஆனால் நாள் தோறும் லட்சக்கணக்கான பேர் பங்கு பெரும் ஒரு மாபெரும் Virtual ஓட்டப் பந்தயம் தினம் காலை எட்டு மற்றும் பத்து மணிக்கு இந்தியாவில் அரங்கேறுகிறது! அந்த ஓட்டப் பந்தயத்தில், மற்றவர்களின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் - இந்த டிப்ஸ் பதிவையும் படிக்காமல்  மண்ணை கவ்விக்கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான நொந்த நெஞ்சங்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்! IRCTC-யில் டிக்கெட் முன்பதிவு செய்வதென்பது ஒரு அற்புதமான கலை! மிகுந்த செயல் (வி)வேகமும், அளப்பரிய பொறுமையும், எவ்வளவு அடித்தாலும் தாங்க கூடிய தனித்தன்மையும் உடைய நபர்களால் மட்டுமே இதை செய்திட முடியும் . ஒரு டிக்கெட்டை பதிவு செய்ய குறைந்த பட்சம் அரை மணியிலிருந்து ஒரு மணி நேரம் வரை பிடிக்கும் (சில சமயம் பைத்தியமும் பிடிக்கும்). இந்த நற்குணங்கள் உங்களுக்கு இல்லாத பட்சத்தில் தயவு செய்து "Alt+F4" ஒருசேர அமுக்கி விட்டு ஏதாவது ஒரு புக்கிங் ஏஜண்டை அணுகவும்! ;)

நீங்கள் முன்சாக்கிரதை முன்சாமியா?! கவலையை விடுங்கள், நான்கு மாதங்களுக்கு முன்பாகவே (தற்போதைய ரயில்வே விதிகளின் படி) முன்பதிவு செய்து விட்டு பயண தேதி வரை உயிரைக் கையில் பிடித்திருந்தாலே போதுமானது! பண்டிகை / விடுமுறை சமயங்களுக்காக - நான்கு மாதங்கள் முன்பே முன்பதிவு செய்ய முயற்சித்தாலும் டிக்கெட் கிடைக்காது என்பது வேறு விஷயம்! ஆனால், என்னை போல் எதையுமே ஊறப்போட்டு செய்பவர்களுக்கும், அவசர காரியத்துக்காக கிளம்ப நேர்பவர்களுக்கும், மறதி உள்ளவர்களுக்கும்தான் பிரச்சினையே - Tatkal பதிவு வசதி, பயண தேதிக்கு முந்தைய நாள் பத்து மணிக்குதான் தொடங்கும்! இந்த Quota-வில் உள்ள அற்ப சொற்ப டிக்கெட்கள், ஓரிரு மணி நேரங்களில் முழுவதுமாய் தீர்ந்து விடும்! அதுவும் பாவப்பட்ட தென்னிந்தியாவில் ட்ரைன்கள் குறைவு என்பதால், குறைந்த நேரத்திலேயே டிக்கெட்கள் காலியாகி விடும்!

முன்னேற்பாடு முக்கியம்!: டிக்கெட் புக் செய்யும் முன், கீழ்க்கண்ட முன்னேற்பாடுகளை செய்து வையுங்கள்!
 • IRCTC-யில் குறைந்த பட்சம் ஒரு பயனர் கணக்கு ஆரம்பிக்க வேண்டும்! உங்கள் முகவரி, மொபைல் எண் மற்றும் ஏனைய தகவல்களை சரியாக உள்ளீடு செய்து வையுங்கள் ஒரு பயனர் - ஒரே சமயத்தில், ஒன்றுக்கும் மேற்பட்ட பிரௌசர்கள் மூலம் login செய்ய முடியாது!
 • உங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவர் பேரிலும் ஒரு அக்கௌன்ட் ஆரம்பித்து விடுங்கள் - வேறு வேறு மொபைல் எண், ஈமெயில் முகவரி கொடுப்பது அவசியம்! ஒரே நபரின் பெயரில் பல கணக்குகளை துவக்குவது IRCTC விதிமுறைக்கு புறம்பானது. ஆனால் உங்கள் குடும்ப உறுப்பினர் (அ) அவர்கள் சார்பாக நீங்கள் கணக்கைத் துவக்கினால் அது விதிமுறையை மீறிய செயலாகாது! 
 • "User Profile" பகுதியில் "Master List of Passengers" என்றொரு பிரிவு இருக்கும். அதில் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரது பெயர், பிறந்த நாள், மற்றும் விருப்பமான பெர்த் போன்ற தகவல்களை உள்ளீடு செய்திடுங்கள்! வயதானவர்களுக்கோ, அல்லது குழந்தையுடன் பயணிக்கப் போகிறவர்களுக்கோ லோயர் பெர்த்தை தேர்ந்தெடுத்து வைப்பது நலம்!
 • தேவை பட்டால் 'Travel List-களையும்' போட்டு வைத்துக்கொள்ளலாம்! உதாரணத்திற்கு "WeTwo" என்றொரு லிஸ்டை உருவாக்கி அதில் மாஸ்டர் லிஸ்டில் ஏற்கனவே உள்ளீடு செய்த உங்கள் பெயரையும், உங்கள் மனைவியின் பெயரையும் போட்டுக்கொள்ளலாம் - முன்பதிவு செய்யும் போது இது மிகவும் வசதியாக இருக்கும்.
 • உங்கள் கம்பியூட்டரில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பிரௌசர்கள் இருப்பது நலம் (IE, Firefox, Opera, Chrome etc.)! ஒவ்வொரு பிரௌசரில், ஒவ்வொரு அக்கௌன்ட் மூலம் login செய்து பதிவு செய்ய முயற்சிக்க இது வசதியாக இருக்கும் (இது ஒருவகை வழிமுறை மட்டுமே - கட்டாயமில்லை!)
 • உங்கள் பயணத்திற்கான இரயில் புறப்படும் மற்றும் போய் சேரும் இடங்களின் ஸ்டேஷன் code-களை முதலிலேயே தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு MDU - மதுரை ஜங்ஷன், SBC - பெங்களூர் சிட்டி! "Plan My Travel" பகுதியில் madurai என டைப் அடிக்கும் போதே அதற்கான code-ஐ IRCTC தளம் காண்பித்து விடும்!
 • நீங்கள் பயணிக்க இருக்கும் இரயில் Code-ஐயும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள் - இது Quick Booking Option-க்கு உதவியாக இருக்கும் (தட்கலுக்கு  பொருந்தாது!)
 • உங்கள் குடும்ப உறுப்பினர்களுடைய ஏதாவது ஒரு அடையாள அட்டை எண்ணை ஒரு டெக்ஸ்ட் ஃபைலில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள், உதாரணத்திற்கு டிரைவிங் லைசென்ஸ் எண்!
 • இந்த E-Ticket Guide-ஐயும், IRCTC User Guide-ஐயும் ஒரு முறை பார்த்து வைத்துக்கொள்ளுங்கள்!

கவனிக்க: இன்று 10-July-2012 முதல், அவசர பயணத்திற்கான தட்கல் பதிவு துவக்க நேரம் காலை எட்டிலிருந்து பத்தாக மாற்றப்பட்டுள்ளது! நான்கு மாத முன்பதிவு, வழக்கப்படி எட்டு மணிக்கு துவங்கும்! பதிவின் நீளத்தை கருத்தில் கொண்டு நான் தட்கல் பதிவை மட்டுமே விவரிக்கப் போகிறேன்! நீங்கள் நான்கு மாதத்திற்கு பிந்தைய ட்ரைனுக்கான முன்பதிவு செய்ய வேண்டினால் கீழே சொல்லப்படும் நேர உதாரணங்களில் இரண்டு மணி நேரத்தை கழித்துக் கொள்ளுங்கள்!

டிக்கெட் பதிவு செய்ய வேண்டிய நாள் - வேலை நாளாக இருந்தால், ஆபிசுக்கு அரை நாள் லீவ் போட்டு விடுங்கள்! ஆபிசில் இன்டர்நெட் இணைப்பு இருக்கும் பட்சத்தில் குறைந்தது 9:30-க்குள் ஆபிஸ் உள்ளே சென்று விடுங்கள்! ஏதாவது அவசர காரியங்கள் இருந்தால் முதலில் முடித்துக்கொள்ளுங்கள். ஏன் என்றால் டிக்கெட் பதிவு செய்ய அமர்ந்த பின் ஒரு மணிநேரத்திற்கு கொஞ்சமும் அசைய முடியாது! மணி ஒன்பதே முக்கால் ஆவதற்கு முன் டெஸ்க்டாப்பையோ, லாப்டாப்பையோ இயக்கி இணையத்தில் தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள். கொஞ்சம் பழைய மாடல் சிஸ்டம் வைத்திருப்பவர்கள் காலையில் எழுந்தவுடனேயே அதை boot செய்ய ஆரம்பிப்பது நல்லது! ;) அதே போல ஆபிசில் இருந்து டிக்கெட் புக் செய்பவர்கள் வேலை சம்பந்தப்பட்ட பைல்களை திரையின் ஒரு பகுதியில் ஓபன் செய்து வைத்துக்கொண்டால் அவ்வப்போது நோட்டமிடும் மேனேஜர் 'காலையிலேயே பயபுள்ள ஆடாம அசையாம, படு சுறுசுறுப்பா வேலை செய்யறானே' என மகிழ்வார்!

பத்தடிக்கப் பத்து நிமிடம் முன்பாகவே, IRCTC தளத்தை குறைந்த பட்சம் இரண்டு வேறு வேறு ப்ரௌசர்களில் (பாதி பாதி ஸ்க்ரீன்களில் திறந்து வைத்துக் கொள்ளலாம்!) லோட் செய்து கொள்ளுங்கள். பத்தடித்ததிற்குப் பின் முயற்சித்தால் நிச்சயம் IRCTC  தளத்திற்குள் நுழைய முடியாது! ஒரு பிரௌசரில் உங்கள் அக்கௌன்ட் மூலமாகவும், மற்றொன்றில் உங்கள் குடும்ப உறுப்பினர் இன்னொருவர் அக்கௌன்ட் மூலமாகவும் login செய்து கொள்ளுங்கள். கிரெடிட் அல்லது டெபிட் கார்டை பக்கத்தில் வைத்துக்கொள்ளுங்கள். பத்து மணி ஆகும் வரை, இரண்டு நிமிடத்திற்கு ஒருதரம் IRCTC தளத்தின் உள்ளேயே ஏதாவது சில link-களை மாற்றி மாற்றி கிளிக் செய்து, நோண்டிக்கொண்டே இருங்கள். இல்லை என்றால் உங்கள் user session, டைம் அவுட் ஆகி கழுத்தறுத்து விடும்! பத்தடிக்க இரண்டு நிமிடங்கள் இருக்கும் போது "Plan My Travel" பகுதிக்கு வந்து விடுங்கள்

நல்ல நேரம்: IRCTC தளத்தில் மேற்புற பட்டையில் ரயில்வே டைம் காட்டப்படும் - அதையே பின்பற்றுங்கள், உங்கள் வீட்டில் வேகமாக ஓடும் கடிகாரத்தையும், ஆபிசில் மெதுவாக ஓடும் நேரத்தையும் வைத்து இந்த காரியங்களை செய்தால் டிக்கெட் சத்தியமாக கிடைக்காது!

மிக மிக முக்கியம்: கீழே காணும் வழிமுறைகளை பின்பற்றும் போது, "Service Timed Out" என்ற பொன்மொழியை திரையில் காண நேர்ந்தால் கலங்க வேண்டாம்! "F5" அல்லது "Refresh" பட்டனை அமுக்குங்கள்! எத்தனை தடவை டைம் அவுட் ஆனாலும் தயங்காமல் ரெப்ரெஷ் செய்யுங்கள் - ஓரிரு நிமிடங்களில் பேஜ் ரீலோட் ஆகி விடும்! IRCTC தளத்தில் இவ்வாறு செய்யக்கூடாது என குறிப்பிடப்பட்டிருந்தாலும் அனுபவத்தில் இது அற்புதமாக வேலை செய்கிறது! இந்த ரெப்ரெஷ் சமாச்சாரத்தை, பேமென்ட் ஸ்க்ரீன் உள்ளே இருக்கும் போது மட்டும் செய்யாதீர்கள்! அந்த இடத்தில் சர்வீஸ் டைம் அவுட் ஆனால் மற்றொரு பிரௌசரில் தொடருங்கள்!

மணி 9:58 ஆனதும் - இரண்டு பிரௌசர் விண்டோக்களிலும், "Services - Plan My Travel" என்ற பகுதிக்கு வந்து விடுங்கள்.

"Services - Plan My Travel" பகுதியில், "From" & "To" ஸ்டேஷன் code-களை நிரப்பி விட்டு, பயண தேதி, e-டிக்கெட், மற்றும் Tatkal Quota-வை தேர்ந்தெடுத்து விட்டு, சரியாக பத்து மணி ஆனதும் "Find Trains" என்ற பட்டனை - மௌஸ் மூலம் கொலை வெறியோடு எலியை அமுக்குவது போல அமுக்குங்கள்! (பத்துக்கு முன்னால் அமுக்கினால் அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது!).

ஆழமாக ஒரு பெருமூச்சை இழுத்துக்கொண்டு ஒரு சன்னியாசியை போல் விருப்பு வெறுப்பு இல்லாமல் கம்பியூட்டர் திரையை கூர்ந்து நோக்குங்கள்! ஏதாவது ஒரு பிரௌசரில் ட்ரைன் லிஸ்ட் முதலில் காட்டப்படும், எனவே இரண்டையும் கவனிப்பது அவசியம்! லிஸ்ட் வந்தவுடன் தேவையான வண்டியை தேர்ந்தெடுத்து அடுத்த பக்கத்திற்கு செல்லுங்கள்! இங்கே பயணிகளின் விவரங்களை தெரிவிக்க வேண்டும்! நாம் முன்பே தயாரித்து வைத்த "Master List of Passengers"-இல் இருந்தோ அல்லது 'Travel List" மூலமாகவோ தேவையான பயணிகளை தேர்ந்தெடுங்கள்! தட்கல் டிக்கட்டாக இருப்பின் ஏதாவது ஒரு பயணியின் (அல்லது பயணிகளின்) அடையாள அட்டை எண்ணை நாம் ஏற்கனவே சேமித்து வைத்த டெக்ஸ்ட் ஃபைலில் இருந்து copy செய்து உரிய இடத்தில் paste செய்யுங்கள்! இந்த இரண்டு முக்கியமான வழிமுறைகளும் நம்மை மற்றவர்களை விட இரு மடங்கு வேகத்தில் டிக்கட் கிடைக்கும் வாய்ப்பை நோக்கி உந்தித் தள்ளும்!

அப்பக்கத்தின் கீழேயுள்ள எரிச்சலூட்டும் "Word Verification"-ஐ தாண்டி அடுத்த பக்கத்துக்கு சென்று திரையில் தெரியும் பயண தேதி மற்றும் பிற விவரங்களை சரி பார்த்துக்கொள்ளுங்கள். அக்கணத்தில் எத்தனை டிக்கட்டுகள் உள்ளன என்ற விவரத்தையும் அந்த பக்கத்தில் பார்க்கலாம். இதையடுத்து "Make Payement" பட்டனை அமுக்கி "Payment Options" திரைக்கு செல்லுங்கள்! அதில் கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங்கை தெரிவு செய்து, உங்களுடைய பேங்கை தேர்ந்தெடுங்கள். பிறகு "Buy" பட்டனை அமுக்குங்கள்.

மீண்டும் Time Out-ஆ?: இது வரைக்கும் இரண்டு பிரௌசர்களிலும் ஒரே நேரத்தில் சவாரி செய்து மேற்சொன்ன வழிகளை பின்பற்றிய நீங்கள் இதற்கு மேலும் அதை செய்யலாகாது! எந்த பிரௌசரில் பேங்க் விவரங்கள் முதலில் தெரிந்ததோ அதில் மட்டும் மேற்கொண்டு தொடருங்கள், பண பரிமாற்றம் செய்து விட்டு டிக்கெட் confirm ஆகிவிட்டால் பிரச்சினையில்லை! அப்படி ஆகாமல் "Service Timedout" பொன்மொழி மீண்டும் திரையில் தெரிந்தால் மற்றுமொரு பிரௌசரில் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து பேமென்ட்டை உறுதி செய்யுங்கள்! பேமென்ட் தொடர்பான ஸ்க்ரீன்களில் ரெப்ரெஷ் செய்வதை தவிர்ப்பது நலம் என்பதாலேயே இந்த யோசனை! பொதுவாக கிரெடிட் கார்டை விட நெட் பேங்கிங் முறை விரைவாக இருக்கும்! ஏதாவது ஒரு பிரௌசர் மூலமாக டிக்கெட் நிச்சயம் கிடைத்துவிடும்!

என்ன டிக்கெட் கிடைத்து விட்டதா?! இப்போது இரண்டு கைகளையும் உயரத் தூக்கி - வீட்டில் இருந்தால் "செல்லம், நான் டிக்கெட் புக் பண்ணிட்டேன்!" என்றும் ஆபிசில் இருந்தால் "Boss! இந்த Assignment-டை முடிச்சுட்டேன்" என்றும் உரக்கக் கத்தி, இடத்திற்கேற்ப மனைவி அல்லது மேனேஜரின் நன்மதிப்பை பெறலாம்!

Quick Gun முருகன்!: "Services - Quick Book"  என்றொரு வசதி இருக்கிறது! இதற்கும் "Plan My Travel"-க்கும் ஒரே ஒரு வித்தியாசம், "Quick Book" பகுதியில் மேற்சொன்ன அனைத்து விபரங்களையும் ஒரே பக்கத்திலேயே நிரப்பி விடலாம்! மேலும், நாம் விரும்பும் ட்ரைனுக்கு நேரடியாக புக் செய்யலாம் ("Find Trains" என்ற நேரம் எடுக்கும் ஸ்டேப் தேவையில்லை! ஆனால் இது, காலை 8am முதல் 9am வரை மற்றும் 9am முதல் 10am வரை - இந்த நேரங்களில் வேலை செய்யாது! "Quick Book" பற்றி மேலும் அறிய இதைப் படியுங்கள்!

IRCTC / ரயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்கு: ஒன்றுக்கும் மேற்பட்ட பிரௌசர்கள் மூலம் அனைவரும் டிக்கெட் பதிவு செய்ய முயற்சித்தால் அது IRCTC தளத்தின் மேல் அதீத அழுத்தத்தை கொடுத்து அனைவரையும் பாதிக்கும் என்பது உண்மைதான்! ஆனால், இப்படி முயற்சித்தாலும் ஏதாவது ஒன்றில்தான் இறுதி ஸ்டெப் வரை செல்ல முடிகிறது! ஒரே ஒரு பிரௌசரில் மட்டும் முயற்சித்தால், ஒரு போதும் டிக்கெட் கிட்டுவதில்லை! IRCTC-யை ஏமாற்ற இந்த வழியை நான் பரிந்துரைக்கவில்லை! IRCTC நிர்வாகம், Booking Infrastructure-ஐ மேம்படுத்தாத வரை, ஏஜன்ட்களின் அடாவடிகளை 'முற்றிலும்' ஒழிக்காதவரை எங்களைப் போன்ற அப்பாவி பொது ஜனங்களுக்கு வேறு வழி இல்லை! குறைந்த பட்சம், ரயில்வே நிர்வாகம் தெற்கு மண்டலத்தில் அதிக வண்டிகளை அறிமுகப்படுத்த வேண்டும்! அது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயமாக இல்லை!

 இவ்வளவு சிரமப்பட்டு டிக்கெட் பதிவு செய்ததற்கான வரவேற்பு எப்படி இருக்கும் என அறிய இதையும் படியுங்கள்! மழுங்கிய மனிதர்கள் - இரயில் பயணங்களில்

அப்டேட் 1 (18-May-2012):
IRCTC பதிவு நேரங்களை 8 மணி மற்றும் 10 மணி என இரண்டாக  பிரித்த பிறகு - தட்கலிலும், நான்கு மாத முன்பதிவு கோட்டாவிலும் சில டிக்கெட்டுகள் புக் செய்து பார்த்தேன்! நிஜமாகவே நல்ல முன்னேற்றம்! பத்து நிமிடங்களுக்குள் புக் செய்ய முடிந்தது!!! அதுவும் ஒரே ப்ரௌசர் மூலமாகவே!


IRCTC Ticket Booking Tips and Tricks / How to buy Train Tickets through IRCTC / Tamil  / © www.bladepedia.com

28 comments:

 1. ஏற்கனவே ஹிட் ஆனா ஒரு பதிவை ரீமேக் செய்து அதனையும் ஹிட் ஆகிவிட்டீர்கள்.வாழ்த்துக்கள்.
  தகவலுக்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 2. // Quickbook is not allowed between 08:00 AM to 10:00 AM. //

  That's the latest experience.... @ 10:10 AM on 10th July 2012

  for information to all

  ReplyDelete
  Replies
  1. I guess IRCTC is having initial hiccups after the time change!

   Delete
 3. நான் கியூவில் நின்றே டிக்கெட் வாங்கி கொள்கிறேன்..படிக்கவே கண்ணை கட்டுதே..

  ReplyDelete
  Replies
  1. :) :) :) இது போன்ற டிப்ஸ் பதிவுகளை படித்து நெட்டில் புக் செய்தால் முதல் முறைதான் கண்ணைக் கட்டும்! கியூவிலோ ஒவ்வொரு முறையும் கண்ணைக் கட்டும்! :D

   Delete
 4. some more ways to book confirmed tickets http://timesofindia.indiatimes.com/city/delhi/Tatkal-tickets-How-agents-beat-Net-traffic/articleshow/14484011.cms?intenttarget=no

  ReplyDelete
 5. இப்போது புது வில்லன் ஒன்று கிளம்பியுள்ளது, Session Expired. நீங்கள் அந்த பட்டனை அமுத்திட்டீங்க, அப்படி இப்படீன்னு logout ஆகிவிடுது.

  Firefox, Chrome இரண்டும் ஏதோ கூட்டணி போல. நீங்கள் சொன்ன இரண்டு பிரவுசர், இரண்டு login இவைகளுக்கு ஒத்துவரவில்லை.

  மற்றபடி நீங்கள் சொன்ன அனைத்துமே சரிதான்

  ReplyDelete
  Replies
  1. ஓ! தட்கல் நேரம் மாறிய பின் இன்னமும் பதிவு செய்து பார்க்கவில்லை - தகவலுக்கு நன்றி நண்பரே!

   Delete
 6. பயனுள்ள பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா, முதல் வருகைக்கும் - படித்ததிற்கும்! :)

   Delete
 7. இது வரை செய்தது இல்லை...இனி செய்து பார்க்க வேண்டியது தான்...ஹிட் அடித்த பதிவை மீண்டும் சில தகவலோடு ஹிட் அடித்து விட்டீர்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே! :) செய்து விட்டு அனுபவத்தை பகிருங்கள்!

   Delete
 8. ஜூப்பர், இனி இதையே கடைபிடிக்க வேண்டியது தான்.

  ReplyDelete
 9. இத்தனையும் செய்தாலும் உங்கள் வங்கிக்கணக்கில் டிக்கெட்டிற்குத் தேவைப்படுவதைப்போல் மூன்று மடங்காவது தொகை வைத்திருங்கள். சிலசமயம் தொகை பற்று வைக்கப்பட்டு வங்கியில் இருந்து SMS வந்துவிடும். ஆனால் டிக்கெட் புக்கிங் ஆகி இருக்காது. மீண்டும் ஆரம்பத்திலிருந்து அனைத்து நடைமுறைகளையும் செய்ய வேண்டும்.வங்கிக் கணக்கில் குறைந்த தொகை 3 நாட்களுக்குப்பிறகுதான் திரும்ப வரும்.

  ReplyDelete
  Replies
  1. ஆம்! அக்கௌன்ட் இருந்தால் பத்தாது, பேங்க் பேலன்ஸ் அவசியம்! :D

   Delete
 10. அலுவலகங்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு IP அட்ரஸ் இருந்தாலும், கம்பெனியில் இருந்து வெளியே செல்வது 5 முதல் 10 IP வரை மட்டுமே. இதனால் ஒரே அலுவலகத்தில் பலர் டிக்கெட் புக் செய்ய முயற்சி செய்ய முடியாது. இப்போது புதிதாக இந்த கட்டுபாட்டை IRCTC கொண்டு வந்து உள்ளது. ஒரு IP யில் இருந்து 4 டிக்கெட்களுக்கு மேல் தட்கலில் புக் செய்ய முடியாது. வீட்டில் இருந்து புக் செய்தால் மட்டுமே முடியும்.

  ReplyDelete
 11. can i use "quick book" option for tatcal

  ReplyDelete
 12. அருமையான பதிவு நண்பரே. இந்த எல்லா கூத்துகளையும் நானும் செய்திருக்கிறேன். எல்லாம் மலரும் நினைவுகள் போல உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கார்த்திக் மோஹன்ராம்! :)

   Delete
 13. This comment has been removed by the author.

  ReplyDelete

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia