இன்னிக்கு நைட்டு நீ தூங்க மாட்டே! |
ஹம்.. ஹ்ஹ்ஹ.. விடு
உடலை சற்றும் அசைக்க முடியவில்லை, உடலெங்கும் அந்த எதிர்சக்தி வியாபித்து என்னை அமுக்கிக் கொண்டிருந்தது!
க்க்ஹு.. க்க்ஹு... க்ஹா
எவ்வளவு முயற்சித்தும் கைகளும், கால்களும் ஒத்துழைக்கவில்லை...
அம்... ம்ம்ம். ... ஹ்ம்ம்ம்...
அம்மா என்று கத்த வேண்டும் என்று நினைக்க மட்டுமே முடிந்தது!
ஹ்.. ஹா...
உதடுகள் பிளவுற மறுத்து, ஒலி வெளியேற முடியாமல் தடுத்தன. ப்ளீஸ், யாராவது நான் கத்துவதை கேளுங்களேன் - உதவி செய்யுங்களேன்...
டப் டப் டப் லப்... டப் டப் டப் லப்...
இதயம் கட்டுப்பாடில்லாமல் துடிக்கத் தொடங்கியது, தாங்க முடியவில்லை - உடலெங்கும் இரத்தம் தாறுமாறாய் பாய்வதை உணர முடிந்தது...
ர்ர் ர்ர்ர் ர்ர்ர்ர்
காதுகளில் பாய்ந்தது அந்த பலமான ஓசை - என்னவாக இருக்கும்? என்னவாக இருக்கும்? சிந்திக்...
க்க்ஹு.. க்க்ஹு... க்ஹா
...க்க முடியாமல் அந்த சக்தி என்னை அலைக்கழித்தது... போராடினேன், நிச்சயம் நான் தூங்கிக் கொண்டிருக்கிறேன், இது அந்த கனவு அரக்கனாகத்தான் இருக்க வேண்டும்!
ம்ம்ஹ... ம்ஹா...
இன்னமும் முழுத்தெளிவு பிறக்கவில்லை! இருந்தாலும் மனதில் புத்துணர்ச்சி பாய்ந்தது - இவனை என்னால் சமாளிக்க முடியும், ஓரிரு நிமிடங்கள் தாக்குப் பிடித்தால் போதுமானது...
ஜ்ஹூஷ்...
அந்த தைரிய உணர்ச்சி உடலில் மெல்ல பரவ ஆரம்பித்தது, கொஞ்சம் சீராக யோசிக்க முடிந்தது... சத்தத்தை நோக்கி புலன்களை குவித்தேன்...
டக் கிடிங் ர்ர்ர்.. ஸ்ஸ்ஸ்...
டொக் கிடிங் ர்ர்ர்ர்.. ஸ்ஸ்ஸ்
சில வினாடிகளில் அது சீராக ஒலிக்கத் தொடங்கியது, வியர்த்து வழியும் உடலை மென்காற்று தடவிச் சென்றதை உணர முடிந்தது! நிச்சயம் மின்விசிறியாகத்தான் இருக்கும்!
அற்ர்... அற்ர்...
ஒவ்வொரு செல்லிலும் பேரழுத்தத்துடன், கனவு அரக்கன் பலம் கொண்ட மட்டும் என்னை மறு ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தான்... என் விழிகளில் புகுந்து இமைகளை சட்டென திறக்க வைத்தான்.
ட்டச்ச்ச்ஸ்...
சட்டென கண்முன் விரிந்தது அந்த கரும்புள்ளி! அதனோடு இணைந்த மின்விசிறியின் ஒலி - அதீத பய உணர்வை தூண்டியது. கூடாது, இவனிடம் தோற்க கூடாது. நான் தூங்கிக்கொண்டிருக்கிறேன்!
டக் கிடிங் ர்ர்ர்.. ஸ்ஸ்ஸ்... டொக் கிடிங் ர்ர்ர்ர்.. ஸ்ஸ்ஸ்
யோசி, யோசி - இது மின்விசிறியின் ஒலி, நான் மின்விசிறிக்கு நேர் கீழே தூங்கினேன். மங்கலான இரவு விளக்கின் வெளிச்சத்தில் இரு கண்களும் ஒரு புள்ளியில் குவிந்ததால் மின்விசிறிதான் அந்த கரும்புள்ளியாக தெரிகிறது...
போ.. போ... உன்னால் ஒன்றும் செய்ய முடியாது...
மனதில் வெறியுடன் கத்தினேன் - மிகவும் பிரயத்தனப்பட்டு கண்களை எனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததில், எனது கண்கள் வெளிச்சத்தை விழுங்க ஆரம்பித்தன - கரும்புள்ளி மெதுவாய் நீர்க்கத் தொடங்கியது! உதடுகள் பிளவுபட சிரித்தேன்...
உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது..!
மறுபடி எனக்குள் சொல்லிக்கொண்டேன். உற்றுப் பார்த்தேன் - அந்த மின்விசிறி நிஜம்... அரக்கன் என்னிடம் தோற்றுக் கொண்டிருந்தான்...
மின்விசிறி... மின்விசிறி... மின்விசிறி...
விரைத்திருந்த உடல் மெதுவாய்த் தளர்ந்து என் கட்டுக்குள் வரத் துவங்கியது. மெல்லத் திரும்பினேன், கடிகாரத்தில் மணி மூன்றைத் தாண்டியிருந்தது! சிரமத்துடன் எழுந்து அமர்ந்தேன், காது சூடாகியிருந்தது! பல வருடங்களாய், இது வாடிக்கையாக நடக்கும் ஒரு சம்பவம்தான் - தூக்கத்திற்கும், கனவிற்கும், விழிப்பிற்கும் இடையில் ஏதோ ஒரு கலவையான நிலை! சற்றும் மாற்றங்கள் இல்லாமல், மேற்சொன்னதேதான் ஒவ்வொரு தடவையும் நடக்கிறது!
தூக்கம் கண்களை சுண்டி இழுத்தது, கூடாது - கண்களை மூடக்கூடாது, உடனே படுக்கக்கூடாது! அப்படி செய்தால், கனவு அரக்கன் என்னை மறு ஆக்கிரமிப்பு செய்வது நிச்சயம்! உடல் வெகுவாய் சோர்ந்திருந்தது. மெதுவாய் எழுந்து, பாத்ரூம் நோக்கி நகர்ந்தேன். சிறுநீர் கழித்துவிட்டு, முகம் கழுவினேன். தண்ணீர் குடித்து விட்டு, சற்று நேரம் படுக்கையில் அமர்ந்திருந்தேன். அரக்கனை மீண்டும் வென்ற திருப்தியுடன் அப்படியே தூங்கிப்போனேன் - எப்போது என்றுதான் தெரியவில்லை!
இது கதை அல்ல!:
சில அனுபவங்களை, உணர்வுகளை, ஒலிகளை எழுத்தில் முழுமையாக கொண்டு வர இயலாது - முயற்சித்திருக்கிறேன். ரொம்பவே மொக்கையாகத் தோன்றினால், இதை ஒரு மூன்றாந்தர சிறுகதையாக மட்டுமே கருதுங்கள்! இதை நீங்களும் அடிக்கடி அனுபவித்திருந்தால் இதை ஒரு உண்மைச் சம்பவமாக கருதுங்கள்! ஆனால், கூகிளில் தேடியவரை இது போல பலருக்கும் நடப்பதாகவே தெரிகிறது.
இன்னொரு மயிர் கூச்செறிய வைக்கும் சங்கதி என்னவென்றால் - இதைப் பற்றிய எண்ணங்களுடன் நான் தூங்கச் செல்லும் போதெல்லாம், அன்றிரவு அரக்கன் என்னை அட்டாக் செய்வது சர்வ நிச்சயம்! இந்த பதிவை வெளியிட்டுவிட்டு நான் தூங்கப் போக வேண்டும் - ரொம்ப பயமாக இருக்கிறது
இது நிஜம் அல்ல!:
Sleep Paralysis - இதுதான் இந்த நிலைக்கு பெயர்! சுட்டியை அமுக்கி மேற்கொண்டு படித்துப் பாருங்கள், இதற்கான அறிவியல் சார்ந்த காரணங்களை அழகாக சொல்லியிருக்கிறார்கள்! விக்கிபீடியாவில் இருப்பதை இங்கே மொழி பெயர்க்க விரும்பவில்லை! ஆனால், சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஆழ்ந்த தூக்க நிலையில் (REM ஸ்லீப் ஸ்டேஜ்) நாம் இருக்கும் போது நமது உடலின் செயல்பாடு முடக்க நிலையில் இருக்கும். இச்சமயத்தில் விழிப்பு தட்டும் போது விளையும் குழப்பமான நிலையே நீங்கள் மேற்கண்ட மொக்கை அனுபவம்! :) ஆனால், இதை தமிழ்நாட்டில் "அமுக்கு பேய்" என்று அழைப்பார்கள் என்பதை விக்கிபீடியா பார்த்துதான் இந்த ப்ளேட்பீடியா தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது, என்ன கொடும கார்த்தி இது!
காலையில் ஒரு அப்டேட்!:
கூகிளில் ஓவராய் ஆராய்ச்சி செய்து விட்டு மிகவும் நேரம் கழித்து தூங்கியதாலோ என்னவோ, நேற்றிரவு அரக்கன் அட்டாக் செய்யவில்லை!
I experience this state often.
பதிலளிநீக்குWell described the state in tamil. It could be a present of the nature to somebody to see the things that others normally will not.
Day will come where one gets a glimpse of the galaxy and nivigating in the middle. out of body experience!
Buddha state is approching ;-)
//Day will come where one gets a glimpse of the galaxy and nivigating in the middle//
நீக்குof the bedroom? :D that must be the those glittering galaxy sticker set I got from the exhibition other day! ;)
Hello Karthik
நீக்குI don't have any sticker neither on the wall nor on the ceiling. There is olny just one spider since two months waiting for food in bedroom. personally I think he is planning deeply on how to capture me!
Floating in the space was my personnel experience. I still try to filter from halucinations, dreams, subjectives things like that. But there are lot of coincidences. Still being on alert. Nothing to fear about it. When the science stops the religion starts!
Kind regards
Y.SURESH
//personally I think he is planning deeply on how to capture me!//
நீக்கு:) :) :)
//When the science stops the religion starts!//
true!
thanks for sharing your experience Suresh!
ரொம்பவே பயமுறுத்தீட்டீங்க நண்பரே... (த.ம. 2)
பதிலளிநீக்கு:)
நீக்குKarthik whether u faced it yesterday night?
பதிலளிநீக்குI have also faced the same in a different way.
இல்லை நண்பரே! :) என்ன காரணமாக இருக்கும் என்பதை பதிவினடியில் போட்டிருக்கிறேன்! :)
நீக்குகேள்விப்படாத மேட்டரா இருக்குதே? நமக்கு இரவில் கை அதிகம் அழுத்தப்படும் போது கை விறைப்பது மட்டும் அடிக்கடி நடக்கும்.
பதிலளிநீக்குஆனா உங்க எக்ஸ்பீரியன்ஸ் ரொம்பவே டெரர் ... :)
இனி தினமும் கூகிள் ரிசர்ச் பண்ணிட்டு தூங்குங்க. சரியாகிடும். ;)
அட நீங்க வேற, கூகுளே இமேஜ் சர்ச் பண்ணா இத விட டெர்ரர் போட்டோ எல்லாம் வந்து பயமுறுத்துது! :)
நீக்குஇதுக்கு தான் காமிக்ஸ் அதிகம் படிக்கக் கூடாதுன்னு பெரியவங்க சொல்லுவாங்க...
பதிலளிநீக்கு:) :) :) அது வேற பேய், இது வேற பேய் ;)
நீக்குஉண்மை நன்பரே! சில வருடங்களுக்கு முன் நான், ஒரு பகல் வேளை தூக்கத்தில், மேற்படியான தாக்குதலுக்கு உள்ளானேன்.அப்போது நான் உணர்ந்ததை ஏறத்தாழ மிகச்சரியாக 100% நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். வெகு நாட்களாக இது குறித்து பயந்ததுண்டு...பின் மறந்து போயிற்று...இப்போது உங்கள அனுபவம் படித்து வியப்பிழாழ்ந்தேன்..! இது பலருக்கும் வாய்க்கபெறும் அனுபவம் என்று! பகிர்தலுக்கு நன்றி!
பதிலளிநீக்கு//இது பலருக்கும் வாய்க்கபெறும் அனுபவம் என்று//
நீக்குஇனி பயம் இல்லை ;) அப்படா நானும் எனக்கு மட்டும்தானோன்னு நெனைச்சு பயந்துட்டேன் என்கிறீர்களா? :)
//ஏறத்தாழ மிகச்சரியாக 100%//
முன்னுக்குப் பின் முரணா இருக்கே! :D
எனக்கும் இது மாதிரி அனுபவம் உள்ளது.
நீக்குwhat you had can be of these two only
பதிலளிநீக்கு1. Sleep Paralysis
or
2. Lucid Dreaming
Mostly you could have experienced the first one. you will be awake but cannot move or control your body. there is nothing to worry, its just brain activity.
no arakkan and arakkis :)
R.Stalin
yes Stalin, I came to know of that when I did some research on the net :) as I mentioned in the last paragraph!
நீக்குbut what I really wanted to say is, when someone goes through this during sleep - they won't really realize that this is Sleep paralysis - there will be severe sense of fear associated with disturbing hallucinations, and that is what I tried to explain :)
குழப்பத்தை தவிர்க்க ஓரிரு வரிகளில் இதை விவரித்துள்ளேன், நன்றி! :)
நீக்குஒரு காலத்தில் எனக்கும் இப்படி அடிக்கடி நிகழ்ந்ததுண்டு. அல்லோபதி டாக்டரிடம் சென்றால், நான் என்ன சொல்கிறேன் என்றே அவருக்குப் புரியவேயில்லை. Sleep disorder ஆக இருக்கலாம் என்று சொல்லி,ஒரு வாரத்திற்கு தூக்க மாத்திரைதான் கொடுத்தார். இருந்தும், குணமாகவில்லை. ஆனால், இப்போதெல்லாம் அடிக்கடி வருவதில்லை. ஏனெனில், நீண்ட அனுபவத்திற்குப் பின், நான் புரிந்துகொண்டது என்னவென்றால், இதற்குக் காரணம் துவரம்பருப்பை உணவில் சேர்த்துக்கொள்வது தான். மற்றவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை, எனது உடலுக்கு இது ஒத்துக்கொள்ளவில்லை. நான் புரிந்துகொண்டது வரை, உடலில் இருக்கும் எதுவோ ஒன்று சிறுநீரில் வெளியேறி உடலில் பற்றாக்குறை ஏற்படுவதால், இது நடக்கிறது. ஏனெனில், இரவில் எழுந்து சிறுநீர் கழித்துவிட்டு வந்து படுத்தபிறகுதான் பெரும்பாலும் நிகழ்ந்தது. இந்த அமுக்குதல் சிறுது நேரம் இருந்து, பிறகு அதுவாகத் தணிந்துவிடும். இது வந்தால், அதனைத் தடுக்காமல், அதுவாகப் போகும்போது போகவிடுவது சிறந்தது. இல்லையென்றால், பகலில் களைப்பாக இருக்கும். போன பிறகு, தண்ணீர் அருந்திவிட்டு படுத்தால் மீண்டும் வராது. அதனால், இது ஏற்பட்டால் கவலைப்படத் தேவையில்லை.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி நண்பரே! உணவும் ஒரு காரணம்தான்! விக்கிபீடியாவும் அதை வழிமொழிகிறது! :)
நீக்குஇத படிச்ச பின்னாடி தூக்கம் வருதே. அவ்வ்வ்வ்.
பதிலளிநீக்குஉங்கள் தூக்கத்தில் அரக்கன் வந்து உங்களை அமுக்கக் கடவது! ;)
நீக்குஎன்னா எழுத்து...ங்கொக்காமக்க...நீ ஜீனயஸ் மா
பதிலளிநீக்குபோட்டு தாக்கேய் :D
ஆமாமா, நாங்க தொவைக்காத ஜீன்ஸ்தான்! ;)
நீக்குஎனக்கும் இந்த அனுபம் நேர்ந்து இருக்கு பகல் தூக்கத்தில் ......பால்ய வயதில் ........அப்போதெல்லாம் பேய் என்று அலறி அம்மாவிடம் சொல்லி அழுத நாட்களும் உண்டு வளர்ந்த பின் அதை பற்றி புரிந்து கொண்டதால் பயம் போனது ............இதற்க்கு முக்கிய காரணம் பயம் என்று கூட சொல்லலாம் .........நன்றி அனுபவ பதிவிற்கு
பதிலளிநீக்குபகிர்விற்கு நன்றி சரளா! ஆம், நிஜமா கற்பனையா என இனம் காணமுடியாததால் ஏற்படும் பயம் ஒரு காரணம்! :)
நீக்குபடிக்க ஆரம்பித்தவுடன் சரி புதுசா எதோ காமிக்ஸ் எழுதுரறார் என நினைச்டேன்...ஆனா உங்க கதையா இருக்கு...எனக்கு இது வரை நடக்கவில்லை இந்த முறை நடக்குதான்னு பாப்போம்...
பதிலளிநீக்குஇந்த அனுபவம் சீக்கிரமே உங்களுக்கும் கிடைக்கட்டும், என்ஜாய்! ;)
நீக்குஎனக்கு இந்த வியாதி எட்டு வருடங்களாக இருந்தது. முதலில் பகலில் துங்கும் போது வந்தது. அதற்கு பிறகு இரவு பகல் என்று பாரபட்சம் இல்லாமல் எப்ப தூங்கினாலும் வர ஆரம்பித்தது. முதலில் கொஞ்சம்தான் இதை பற்றி பயமாக இருந்தது ஆனால் விட்டில் மற்றும் நண்பர்களிடம் இதை பற்றி சொன்னதும் பயம் இன்னும் அதிகம் ஆனது. ஒரு சிலர் இது பேய் என்றும், இன்னும் சிலர் இது அமுக்கன் என்று எதோ கதைய சொன்னார்கள். அதையெல்லாம் கேட்டவுடன் எனக்கு பயம் அதிகம் ஆனது, பயம் அதிகமாக அதிகமாக எனக்கு அடிகடி இது நடக்க ஆரம்பித்தது.
பதிலளிநீக்குஒரு சில சமயம் முச்சு விட முடியாமல் தவித்து எப்போடியோ கஷ்டப்பட்டு அந்த நரகத்தில் இருந்து எழுதிருப்பேன். இது உடல் சமந்தபட விஷயம் என்றுதான் முதலில் நினைத்துக்கொண்டு இருந்தேன். முதல் முறை விட்டில் சொன்னார்கள் என்று முனிஸ்வரன் கோவில்க்கு சென்று மந்தரித்து வந்தேன். அதற்கு பிறகு ஒரு வாரம் நிம்மிதியாக இருந்தேன். ஆனால் அப்போதுதான் பயம் இன்னும் அதிகம் ஆனது காரணம் மந்தரித்து வந்த பிறகு தான் இது வரவில்லை என்றல் இது கண்டிப்பாக எதோ evil சமந்தப்பட்ட விசயமாக இருக்கும் என்று நம்ப ஆரம்பித்தான். (நம்ம கற்பனைத்திறனை சொல்லவா வேண்டும் :-).
பின்னர் வார வாரம் முனிஸ்வரன் கோவில்கு சென்று மந்த்ரிருது வந்தேன். ஒரு முறை மந்த்ரிதால் ஒரு வாரம் தாங்கும் ஆனால் நான்கு, ஐந்து வாரம் தொடர்ந்து சென்ற பிறகு, ஒரு முறை மந்த்ரிதல் இரண்டு நாள்தான் மந்த்ரம் வேலை செய்துது (இப்போது இதை பற்றி நினைத்தால் காமெடியாக இருக்கிறது ). கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு இந்த மந்த்ரிபத்தில் இருந்த நம்பிக்கை குறைந்துது. அதன் பின்னர், போக போக இது பழக்கமாகி எனக்கு இதன் மேல் இருந்த பயம் கொஞ்சம் கம்மி ஆனது. கூகுளில் பல கட்டுரைகளை படித்த பிறகு இது உடல் சமந்தபட விசயம் என்று தெரிந்து கொண்டேன். ( இதை பற்றிய கட்டுரைகளை படிக்கும் போது, அப்படா நமல போல நிறைய வேறு இருக்காங்க என்று ஆறுதலாகவும் இருந்தது :-).இதன்மேல் இருந்த பயம் குறைய குறைய , இந்த அரக்கனின் வரவும் குறைந்தது. இப்போதெலாம் எப்பாவது இது நடக்கும் (பெரும்பாலும் இரவு பேருந்து பயணத்தில் அல்லது பயணத்திற்கு பிறகு துங்கும் போது) ஆன இதன் மீது பயம் இல்லை . அதுமட்டுமில்லாமல் இப்போதெலாம் இது வந்தவ எனக்கு தெரியும், வந்துடன்ய வந்துடன் என்று, அதனால் பயபடாமல் மெதுவாக எழுதிருக்க முயற்சி செய்வேன். I hope you will also get rid of this soon :-)