உங்களில் பல பேர் முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் கேள்விப்பட்டிருப்பீர்கள்! எத்தனை பேருக்கு திகில் காமிக்ஸ் பற்றி தெரியும்? இவற்றை வெளியிட்டதும் பிரகாஷ் பப்ளிஷர்ஸின் - விஜயன் அவர்கள்தான்! 1986-இல் மற்ற காமிக்ஸ் இதழ்களில் மாயாவி, ஸ்பைடர், ஜேம்ஸ் பாண்ட் போன்ற அரைத்த மாவுகள் வெளிவந்து கொண்டிருந்தபோது தில்லாக திகிலை வெளியிட்டார் விஜயன்! ஆரம்பத்தில் வந்த சில கதைகள் மரண மொக்கை என்றாலும் பிறகு கருப்பு கிழவி, கேப்டன் பிரின்ஸ், ப்ரூனோ ப்ரேஸில், XIII, பேட்மேன் என திகிலில் வந்த கதைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களின் அணிவகுப்புதான்! அவற்றின் சித்திரத் தரம், கதைக்களன், வசனங்கள், இவை அன்றைய கால கட்டத்தில் என்னை போன்ற சிறுவர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம் வார்த்தையில் அடங்காது!
இது வரை எத்தனை பேட்மேன் இதழ்கள் திகிலில் வெளியாகின என சரியாகத் தெரியவில்லை (தொ. கா. ஆ. தெ. சொ!). மேலோட்டமாக எனது காமிக்ஸ் சேகரிப்பில் தேடியதில் நான்கு பேட்மேன் அட்டைகள் தாங்கிய இதழ்கள் சிக்கின. இவற்றைத் தவிர, வேறு கதைகளோடு இணைந்தும் பேட்மேனின் சாகசங்கள் வெளியாகி உள்ளன (முன் அட்டையில் பேட்மேன் படம் இல்லாமல்). நேரம் கிடைத்தால் இவற்றை ஒவ்வொன்றாய் விமர்சனம் செய்வேன்! எனக்குத் தெரிந்து ஜோக்கரின் கதைகளே அதிகம் வெளியாகி இருக்கின்றன! உதாரணத்திற்கு "சிரிக்கும் மரணம்" இதழில் இருந்து ஜோக்கரும், பேட்மேனும் மோதிக்கொள்ளும் கிளைமாக்ஸ் காட்சி இதோ:
சிரி அல்லது செத்து மடி! |
நடுவில் வெகு நீண்ட காலம் காமிக்ஸ் படிக்கும் பழக்கமே விட்டுப்போனதால் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, சைனீஸ் போன்ற எந்த ஒரு மொழியிலும் காமிக்ஸ் படிக்கவில்லை - இனிமேல் பேட்மேனின் முக்கியமான ஆங்கில காமிக்ஸ் புத்தகங்களை இரவல் வாங்கியாவது படித்திட தீர்மானித்துள்ளேன், விலைக்கு வாங்கவேண்டுமென்றால் கம்பெனிக்கு கட்டுப்படியாகாது!
Dark Knight Rises படத்தின் முக்கிய வில்லன் Bane - துரதிர்ஷ்டவசமாக இக்கதாபாத்திரம் DC காமிக்ஸில் வெளியானபோது திகில் காமிக்ஸ் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டு விட்டது! XIII, பிரின்ஸ் போன்ற திகில் காமிக்ஸின் ஆஸ்தான நாயகர்கள் லயன் காமிக்ஸுக்கு கட்சி மாறினாலும், பேட்மேன் மட்டும் பின்னர் ரைஸ் ஆகவே இல்லை! ஏன் என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை, குழப்பமான கதையம்சம் கொண்ட பேட்மேன் காமிக்ஸ்களை தமிழ் வாசகர்கள் முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளவில்லையோ என விஜயன் நினைத்திருக்கலாம் அல்லது DC காமிக்ஸின் Archives இன்சார்ஜ் Mrs.Phillis Hume ஓய்வு பெற்றிருக்கலாம்! எது எப்படியோ, இது தமிழ் காமிக்ஸுக்கு பெரியதொரு இழப்பு என்பதில் சற்றும் ஐயமில்லை!
90-களில் சில பேட்மேன் திரைப்படங்களை காண நேர்ந்தபோது அது இழப்பு மட்டும் அல்ல பேரிழப்பு என உணர்ந்தேன்! ஏனோ டிம் பர்ட்டனின் பேட்மேன் (Batman & Batman Returns) என்னை சற்றும் கவரவில்லை, ஒருவேளை இப்போது மீண்டும் பார்த்தால் பிடிக்குமோ என்னவோ! ஜோயல் ஷூமேக்கர் இயக்கத்தில் "Batman Forever" திரைப்படம், அப்போது "The Mask" படத்தின் மூலம் புகழின் உச்சத்தில் இருந்த ஜிம் கேரிக்காக பிடித்தது! அதே இயக்குனரின் இயக்கத்தில் வெளிவந்த மொக்கைக் காவியம் "Batman & Robin"-ஐ எப்போது பார்த்தாலும் பிடிக்காது என்பது மட்டும் சர்வ நிச்சயம்! நல்ல வேளையாக திரையுலகில் அதலபாதாளத்தில் விழுந்திருந்த பேட்மேன் இமேஜை கிறிஸ்டோபர் நோலன் இப்போது தூக்கி நிறுத்திவிட்டார்!
// "இந்த இதழின் ஆரம்பப் பக்கமே freehand drawing-ல் மிகத் திறமைசாலியான நமது ஓவியர் ஒருவர் வரைந்திட்ட காமிக்ஸ் விளம்பரம் !! Batman-ஐ கொண்டு நமது லயன் ; திகில் & மினிலயன் காமிக்ஸ்களுக்கு சந்தா விளம்பரம் தயாரித்து இருந்தோம் ! அன்றைக்கு மூன்று இதழ்களின் மொத்த சந்தாத் தொகையே ரூபாய் 75 தான் !! பாருங்களேன் அந்த விளம்பரத்தை"! //. - விளம்பரத்தைக் கண்டவுடன், அப்படிவத்தை பூர்த்தி செய்து லயன் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்திருந்தேன் - அதன் நகலை வலப் பக்கம் காணலாம்! ;-)
காமிக்ஸ் கிசு கிசு: விஜயனின் டாப் 20 காமிக்ஸ் லிஸ்டில் ஜோக்கரின் முதல் சாகசமான "சிரித்துக் கொல்ல வேண்டும்" இடம் பெற்றது பல வாசகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்திருக்கிறது! தமிழில் மீண்டும் பேட்மேன் வெளிவர வாய்ப்பு இருப்பதாக சமீபத்தில் 'வாசக துன்பர்' ஒருவருக்கு பதிலளிக்கும் வகையில் விஜயன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்:
// நிறைய நாயகர்களை ; தொடர்களை ஒட்டு மொத்தமாய் இழுத்துப் போட்டு விட்டு அவஸ்தைப்பட்ட அனுபவம் நிறையவே உள்ளது ! So நிதானமாய் ஆனால் உறுதியாய் இந்த second innings ல் ஆடிட வேண்டுமென்பதில் கொஞ்சம் உஷாராகவே இருக்கிறேன் என்று சொல்லிடலாம் ! பொறுத்திருந்து பாருங்கள்...2013-ன் வாணவேடிக்கைகள் நிறையவே காத்துள்ளன ! BATMAN நமது ராடாரில் தான் இருக்கிறார் ! Stay assured ! //
21 ஜூலை 2012 - அப்டேட்:
The Dark Knight Rises - 2012 - உணர்வுகளோடு விளையாடும் நோலன்! (விமர்சனம்!)
இது என்னுடைய ஐம்பதாவது பதிவு! தொடர்ந்தும்,
தொடராமலும் படித்து ஆதரவு அளித்து வரும் வாசக நண்பர்களுக்கு மிக்க நன்றி!
ஐம்பது உளம் கனிந்த வாழ்த்துக்கள் நண்பா., தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள் :)
பதிலளிநீக்குநன்றி நண்பா! :)
நீக்குCongrats for the 50th Post karthik.
பதிலளிநீக்குபதிவு நன்றாக இருந்தது.
பதிலளிநீக்குஅந்த துன்பர் தாங்கள் தானே.
எனக்கும் நமது திகிலில் வந்த காமிக்ஸ் மட்டுமே பிடிக்கும்.
ஆங்கிலத்தில் படித்து கிடையாது.
சில அனிமேஷன் படங்கள் பார்த்துள்ளேன்.
ஆனால் நண்பர் ராஜேஷ் அவர்களது பதிவில் கூறியிருக்கும் Dark knight சீரீஸ் மட்டும் டவுன்லோட் செய்து படிக்கவேண்டும் என்று உள்ளேன்.
மீண்டும் எனது வாழ்த்துக்கள்.
இனி நிச்சயம் சில விடுபட்ட நல்ல பேட்மேன் காமிக்ஸ்களை தேடிப்பிடித்து படிப்பேன்! :)
நீக்குநாங்க ஸ்பைடர்-மேன் காமிக்ஸ் மட்டும் தான் வாசிச்சிருக்கோம். பேட்மேன் எல்லாம் படங்களில் மட்டும் தான்.
பதிலளிநீக்குடார்க் நைட் படம் பார்க்கும் வரை எந்த விமர்சனமும் படிக்கப்போவதில்லை. படம் பார்த்துட்டு வந்து உங்க விமர்சனத்தை பார்க்கிறேன்.
50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் !!!
நன்றி நண்பரே! :)
நீக்கு50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே.
பதிலளிநீக்குநான் ஒரு பேட்மென் ரசிகன். திகிலில் வந்த பேட்மேன் காமிக்ஸ் படித்திருக்கிறேன்.
பதிவுகளை தொடர்ந்து படித்து, கருத்திட்டு வருவதற்கு நன்றி நண்பரே! :)
நீக்குஅரை சதத்திற்கு வாழ்த்துக்கள் நண்பா
பதிலளிநீக்குஆதரவுக்கு நன்றி நண்பரே! :)
நீக்குஐம்பதை எட்டியதற்கு வாழ்த்துக்கள் நண்பா!
பதிலளிநீக்குபேட்மேன் கதைகளை முதலில் காமிக்ஸில் படித்ததாக நியாபகம், சரியாக தெரியவில்லை. நான் விரும்பும் சூப்பர் ஹீரோக்களில் ஒருவர்.
//ஜோக்கரும், பேட்மேனும் மோதிக்கொள்ளும் கிளைமாக்ஸ் காட்சி://
ஹா..ஹா..ஹா.. பேட்மேனின் பதில் சூப்பர்... :D
ஆம்! வசனங்கள் பிரமாதமாக இருக்கும்! நேரமின்மை காரணமாக சில ஸ்கேன்களையே பதிவேற்ற முடிந்தது!
நீக்குஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி:
பதிலளிநீக்குநல்ல செய்தி: Batman Dark Knight Rises ரிலீஸ் ஆகும் 20-ஆம் தேதி Android, IOS சாதனங்களுக்கான Batman Dark Knight Rises Games ரிலீஸ் ஆகிறது. :D
கெட்ட செய்தி: அநேகமாக அதற்கு பணம் கட்ட நேரிடும். ;)
கள்ள செய்தி: நான் ஓசியில் உங்கள் போன் வாங்கி விளையாடிக் கொள்கிறேன்! ;)
நீக்குஹா..ஹா..ஹா.. பணம் கட்ட வேண்டும் என்பதற்காகத் தான் இன்னும் The Amazing spiderman android game விளையாடாமல் இருக்கேன்.
நீக்குNanbaa.. Un thodar vetrikum ethir kaala vetrikalukum vaalthukkal..
பதிலளிநீக்குநன்றி! நன்றி! :)
நீக்கு50 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்:-))
பதிலளிநீக்குஉங்கள் விமர்சனத்தால் எனக்கு படம் பார்க்கவே ஆர்வம் இல்லை. எங்க ஊர்ல புக் சாரி படம் வரும் முன்பே பதிவர்கள் விமர்சனம் இடுவது சரியா? இந்தக் கேள்விக்கு எனக்கு விடை தெரியல. என்ன பண்றதுன்னும் புரியல !!! :( :( :(
அடடா! மன்னிக்க வேண்டும் நண்பரே! :) இது போல என்னிடமே நேரடியாக கூறினால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்! ;)
நீக்கு50 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்....
பதிலளிநீக்குபேட்மேன் படம் என்பதை விட நோலன் படம் என்பதால் தான் எனக்கு ரொம்பவே எதிர்பார்ப்பு....
ஆம்! ஸ்டில்களே அசத்துகின்றன!
நீக்குஅரைசதம் போட்டதற்கு வாழுத்துக்கள் அரை சதம் போடவே இப்படி முச்சு முட்டுதே...உங்களின் காமிக்ஸ் அண்ட் மொக்கை கலந்து அடிப்பது தான் எனக்கு ரொம்ப பிடித்து உள்ளது....batman உலகமே வெறியோடு காத்துகொண்டுஉள்ளது...
பதிலளிநீக்கு//காமிக்ஸ் அண்ட் மொக்கை கலந்து அடிப்பது தான் எனக்கு ரொம்ப பிடித்து உள்ளது//
நீக்குஓவர் மொக்கையோ! :D
50 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...
த.ம. 3)
மிக்க நன்றி நண்பரே! :)
நீக்கு50வது பதிவிற்கு வாழ்த்துகள், கார்த்தி....
பதிலளிநீக்குகூடவே, எங்களை வெறுப்பேத்துவதற்காகவே, சைஸ் வாரியாக பேட்மேன் தமிழ் காமிக்ஸ் கலெக்ஷனை பதிவேற்றியிருக்கும் உங்கள் பரந்த மனம் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன். இப்படியே தொடர்ந்து பதிவிட்டு எல்லாருடைய வயித்தெரிச்சலையும் கொட்டி கொள்ள ஆசிகள் பல :P
மிக்க நன்றி ரஃபிக்! :)
நீக்குஎன்னிடம் இருக்கும் மொத்த பேட்மேன் இதழ்களையும் என் வலக்கை அல்லது இடக்கை விரல்கள் மூலம் எண்ணி விடலாம்! நீங்கள் பிராந்திய வாரியாக, மொழி வாரியாக அடுக்கி வைத்துக்கொண்டு குறைந்த பட்சம் ஒரு ஸ்கேன் கூட போடாமல், பதிவும் போடாமல் திடீரென பதுங்கியது நியாயமா?! :D
பொன்விழா பதிவிற்கு வாழ்த்துக்கள் கார்த்திக்!பேட்மேன் காமிக்ஸ்களை தமிழில்தான் படித்துள்ளேன். ஆனால் எந்த புத்தகமும் சேமிக்கமுடியவில்லை, கதைகளும் ஞாபகம் இல்லை!
பதிலளிநீக்குநானும் சிலதை இழந்து விட்டேன்! :(
நீக்குஐம்பதிற்கு வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குஎனக்கு பேட்மேனின் அறிமுகம் The batman: Animated Series இல்தான். அற்புதமான கிராபிக்ஸ் உடன் இருந்தாலும், ஜோக்கரை பைத்தியக்காரனாக காட்டியது (மட்டும்) எனக்குப் பிடிக்கவில்லை. படங்களில் The Dark Night மற்றும் Batman Begins இரண்டும் என் ஆல் டைம் பேவரிட்ஸ்...
மிக்க நன்றி! நான் animated தொடரை பார்த்தது இல்லை! ஆளாளுக்கு ஒரு மாதிரி எடுத்து குழப்புகிறார்கள் போல! :D
நீக்குஉங்களின் 50 வது பதிவில் தான் சந்திக்க வேண்டும் என்ற எனது இமாலய சபதத்தின் ( எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியுள்ளது ) பதிவு நன்றாகவே உள்ளது . பழய batman முழுவதும் பார்த்துள்ளேன் . முடிவுகள் அந்தரத்தில் தொங்கும். செம கடுப்பாகும் . வரும் படம் எப்படி வருகிறதோ....
பதிலளிநீக்குபரணில் தூசி தட்டி எடுத்த பழய இதழ்களை பதிவிடுங்கள்.
50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் . தொடரட்டும் உங்கள் பதிவுகள்
நன்றி நண்பரே! :) நைலானுக்கு பிறகு நீங்கள் பல நாளாய் பதிவிடவில்லையே?
நீக்குபணிச்சுமைதான் காரணம். ஈரோடு புத்தக கண்காட்ச்சியை பற்றிய ஒரு பதிவு அடுத்த வாரம் வருகிறது
நீக்குCongrats KArthik! Thanks for sharing these scans! அந்த நாள் ஞாபகம்!! :) Alan Moore's amazing reboot of Batman! Just love this!! Hope there's a reprint! :(
பதிலளிநீக்குThank you SK! Yes, love those days, love those books & love those memories! :)
நீக்குஆஹா.. இந்த இதழ்களை எல்லாம் வைத்திருக்கும் உங்களைப் பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது :)
பதிலளிநீக்குசிரிக்கும் மரணம் இதழில் நீங்கள் வெளியிட்ட ஸ்கேன்களில் உள்ள வசனங்கள் இப்பொழுது படித்தாலும் நன்றாக இருக்கிறது. மறுபதிப்பில் இவைகள் வருமா என்று பார்ப்போம்.
பதிலளிநீக்குஆம் பேட்மேன் காமிக்ஸ்களில் வசனம் மிக அருமையாக இருக்கும்!
நீக்கு//பொறாமையாக இருக்கிறது :)//
ஏதோ ரெண்டு, மூணுதான் சார் இருக்கு! :)
என்கிட்ட எதுவுமே இல்லைங்க. நான் 8வது படிக்கும் போது இந்தக் காமிக்ஸ்கள் படித்திருக்கிறேன். டைம்மிஷின் இருந்தா போய் பாதுகாத்துட்டு வந்துடலாம். காலங்கார்த்தால புலம்ப வெச்சுட்டீங்க :)
நீக்குசரி விடுங்க பாஸூ! என்கிட்டே இல்லாதது உங்ககிட்டையும், உங்ககிட்ட இல்லாதது என்கிட்டேயும் இருக்கறது சகஜம்தானே ;)
நீக்குhttp://www.comixology.com/Batman-Shadow-of-the-Bat/comics-series/6801
பதிலளிநீக்குஇந்த லிங்கில் உள்ள காமிக்ஸ்கள் தான் தமிழில் வந்திருக்கிறதா ?
சரியாக தெரியவில்லை நண்பரே! நான் பொதுவாக ஆங்கில காமிக்ஸ் படித்தோ சேர்த்தோ இல்லை! :)
நீக்குதமிழ்ல தான் இல்ல.. எதோ.. இங்கிலீஷ்ல நெட்டுல எதாவது இருந்தா எடுக்கலாம்னு பார்த்தேன்.. ரஃபீக்குக்கு தெரிஞ்சுருக்கும்.. கேட்டுப்பார்க்கிறேன்.
நீக்குsure, he might be knowing! :)
நீக்குFabulous post Karthik and as usual in your own unique style . Congrats on your 50th post. I am very much sure your post information will soon appear on " Vikatan magazine column about introductions to the best post[Vikatan varaverpu arai] very soon .Advance wishes for that . Waiting for the Batman movie review on your post
பதிலளிநீக்குthanks for the batman cover pages . Took me to the wonderful comics days . I think the book " sirikum maranam " was the last issue in Thigil comics .
பதிலளிநீக்குon your 50th post i am the 50th to comment. Once again congrats for the landmark post
பதிலளிநீக்குThanks a lot Arun for the kind words and thanks for regularly sharing your thoughts here..! I am not very sure which one was the last thigil issue! Vikadan Varaverparai is a looong way to go I guess :) It has been hardly 4 months since I started blogging! thanks for the wishes anyway!
நீக்கு//on your 50th post i am the 50th to comment//
:) :) :) thank you buddy!
அரை சதத்திற்கு வாழ்த்துக்கள் கார்த்தி.. 50 வது பதிவுக்கு நல்ல வொர்த்தான பதிவு இது. காமிக்ஸையும் சினிமாவையும் மிக்ஸ் செய்த விதம் அருமை
பதிலளிநீக்குநன்றி SIV! அப்படியாவது தமிழ் காமிக்ஸ் பற்றி ஒரு விழிப்புணர்வு ஏற்படட்டும் என்றுதான்! :)
நீக்குஐம்பதாவது வயதிற்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமன்னிக்கவும் ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்
சாரி சாரி வாசித்த விதம் தவறு மன்னிக்கவும் கொஞ்சம் டர்போ வேகத்தில் வாசித்துவிட்டேன்
இப்போ தான் நம்ம சௌந்தர் அண்ணாச்சியின் பதிவ படிச்சிட்டு வந்ததால ஒரு சின்ன ;-)
.
:) :) :)
நீக்குசரி, சிப்பி சிப்பி! :D